Monday, December 21, 2009

ஓகே...ரெடி...யூட்...!

ந்தப் படம் உங்கள் மனதில் என்ன தோற்றுவிக்கிறது.சொல்லுங்கள்.கவிதை வரிகளாக.அல்லது கதையாக.நிறைய நாளாச்சு.படத்துக்குக் கவிதை எழுதி.முன்பெல்லாம் கடையம் ஆனந்த அடிக்கடி படம் தந்து கவிதை கேட்பார்.இப்போ அவர் ரொம்ப பிஸியாம்.அதுதான் எனக்கு அந்த நினைவு வந்தாச்சு.பார்க்கலாம்.நானும் எழுதறேன்.ஓகே...ரெடி...யூட்...!

[நேரக் குறைச்சலால் திடீர்ப் பதிவு.]

ஹேமா(சுவிஸ்)

ஸ்ரீராம்
********

விளையாடுன்னு சொல்லி
பொம்மையைக் கொடுத்தாங்க.
ஆமாம், விளையாட்டுன்னா என்ன?"

"மனிதர்களை
பொம்மையாக மதிக்கும் உலகில்
பொம்மையை வைத்துக் கொண்டு
நான் என்ன செய்வது?"

தமிழுதயம்
**************

தூக்கப்படுவது
குழந்தை பொம்மையாக இருந்தாலும்,
அதை தூக்கும் முறை சரியில்ல.
குழந்தைய இப்படி தூக்குவோம்மா.
பொம்மையாக இருந்தாலும்-
நான் குழந்தையாகவே பார்க்கிறேன் !

ஸ்டார்ஜன்
**************
அன்பே உன்னாலே

நானும் மறந்தேன்

நினைப்பதற்காக

உன்

மறு வருகை எப்போ !!


துபாய் ராஜா
*****************

1)
குழந்தை கை
பொம்மை போல்
குலுக்குகிறாய்
என் மனதை...

அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய் உயிரெ(ல்)லாம்,
என் உணர்வெ(ல்)லாம்...

2)
காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு

கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.

3)
காதல் விளையாட்டில்
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை

கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.

4)
ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...

ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....

- இரவீ -
************
ருத்ர காளி:
**************

வரண்ட வாடை காற்றின் வேகம் அதிகரித்த அந்தி நேரம்.அலையின் சல சலப்பு அந்தகார இருளை வரவேற்றபடி இருக்க ஒற்றையடி பயணமானாள் வேம்பு.காலத்தின் கோலமா - அவசரத்தின் அல்லோகலமா தெரியாது.அவளது முடிவை நோக்கிய முடிவான பயணம் அது.

அவளின் ஆழ்ந்த பெருமூச்சு.நடையின் வேகமா இல்லை அலையின் ஓலமோ என இனம்கானமுடியா வெப்பமாய்.கோபத்தின் உச்சத்தில் அவள் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருக்க இலக்கை அடையும் வேகம் நடையின் ஒவ்வோரு வினாடியும் கூடிக்கொண்டே இருந்தது.இன்னும் சில வினாடிதான்.அவள் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஒற்றைப் பனை மரம்.அதை ஒட்டிப் பாழடைந்தது தெரியாமல் இருக்க அவசரமாய் கூரை வேயப்பட்ட மண்டபம் - நெஞ்சு படபடக்க மண்டபம் நெருங்கலானாள்.பதைபதைப்பு தொத்திக்கொன்டது - அவளின் இதயத் துடிப்புக் குறைவதை அவளே கேட்க முடிந்தது.மெல்ல அடிமீது அடிவைத்து நெருங்கலானாள்.

காலில் சில்லென ஏதோ தட்டுப்படக் கீழே கூர்ந்து கவனித்தாள்.பூக்கள் மற்றும் தென்னங்குருத்தோலை அந்த மண்டபம் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.மனதை ஆசுவாசப்படுத்த முயன்று கவலை தொத்திக் கொண்டதை உணர்ந்தாள்.வந்த நோக்கம் நிறைவேறாதோ என்ற கவலையும் கூடிக்கொண்டது.

மண்டபத்தின் மதிலை நெருங்கிய நேரம்.காலில் கடினமாய் ஏதோ தட்டுப்பட்டது.இதயத் துடிப்பை நிறுத்திக் கூர்ந்து கவனித்தாள்.பளிச்சிட்ட ஒளியாய் அவள் கண்ணின் முன் பொம்மி வந்து போனாள்.ருத்ர காளி வேஷம் போட வேல்கம்பு கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருட்டறையில் கோவித்து நின்றது நியாபகம் வர சிரித்துக் கொண்டே முன்னே இருந்த உடைந்த காவடியில் சொருகி இருந்த வேல்க்கம்பை கையில் எடுத்து முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு வீடு திரும்பினாள்.


ஜெயா
********
கண்மணியே கோவம் ஏன்?
கையில் உள்ள பொம்மை மீதா,
இல்லை....
அதை தந்து விளையாடச்சொன்ன
அன்னை மீதா
உங்க கோவம்?
ஏக்கம் வேண்டாம் செல்லமே,
கோபத்திலும் நீங்க அழகுதான்,
சிரியுங்க....சிரியுங்க
அட சிரியுங்க ****


ஹேமா
**********

உடையில்லா பொம்மை.
அழகிய உடையில்
கோபக் குழந்தை.

குனிந்த முகத்தில்
அழுகையா வெறுப்பா ?

முடியில்...
முத்தால் சோடனை.
பொம்மைக்கும் உடை.
பஞ்சுப் பாதம்
மண்ணில் படாமல்
பவளத்தால் ரதமும் இங்கே.

இல்லாத அம்(ப்)மா(பா)வை
கூட்டி வா என்றால்
எங்கே போவேன் நான் !


Thamizhan
************

அன்னை பூடேயின்
அற்புத வண்ணம் !
களங்கமான உலகில்
கலங்கிய தனிமை!
கையிலே பொம்மை
நெஞ்சிலோ வெறுமை!


பித்தனின் வாக்கு
********************

கோபம் என்பது பாவம் குழந்தாய்
அது வாளில்லா கத்தி போல
சிரித்து மகிழும் உன் முகம்
கறுத்துத் தொங்கியது ஏன்,

ஆத்திரம் என்பது வாழ்வை அழிக்கும்
உன் கையில் உள்ள பொம்மையப் போல
துக்கம் என்பது மகிழ்வைக் கொடுக்கும்
உன் குனிந்த தலை போல.

அக்பர்
*******


பொம்மையை

கையில் திணித்து

என் சந்தோசத்தை

திருடிக்கொண்டு

போனது யார்?


கடையம் ஆனந்த்
********************

1)
யுத்த பூமியில்
விளையாட தலைகள் உண்டு
குனிந்து பார் கண்ணே!


உன்னை இங்கே விட்டு செல்ல
மனமில்லை எனக்கு!

அழைத்து போகவும் வழியில்லை
திக்கற்றவளா நான்...

கண்கள் முடி அழுகிறேன்
கண்ணே போதும் வந்து விடு!

2)
அடங்கவில்லை
பழி தீர்த்த பிறகும்!

8-வது பிறப்பு நீ
கம்ஷன் துரத்துகிறhன்
ஓடிடுவோம்...வா!

ரத்தம் வாடை அடிக்கிறது
இந்த பூமியில்...!

இங்கே நீ பிஞ்சு
எனக்கு நீ நச்சு-என்று
கொக்கரிக்கின்ற கூட்டத்தில்
உன்னை விட்டு செல்ல மனமில்லை

வா...
வந்து விடு....

கலா
******

என் நாட்டு ஒளிவழியில்
இப்படிப் பார்த்தாய்!
பக்கவாட்டில்...
ஒத்தைக் கையால் தூக்கி
உயிர் உள்ள குழந்தைகளைக்
தூரமாய் எறியும் காட்சியை

ஓ..ஓ.. புரிகிறது

இதைத் தான் கண் பார்த்தால்
கை செய்யும் என்பார்களோ!

பார்த்தவுடன்....
பரீட்சித்துப் பார்க்க
இவள் பொம்மையைத்
தூக்கினாள் .....

தூக்கிப் போடும் முன்னே
பார்த்து நினைவுக்கு வர...
பேதலித்துப் போனாளிவள் !


S.A. நவாஸுதீன்
*******************

பெற்றவர்கள் கல்யாணம்
பொம்மை கல்யாணமாய்
பிள்ளை இவளுக்கோ
உண்ணவும்
உறங்க மடியும்
உதவிக்கு சில கதையுமின்றி
வெறும் பொம்மை மட்டுமே
துணையாய் !


கவிதை(கள்)
***************

ராவில் கைப்பிடித்து
காதருகில் கதைபேசி
புகலிடம் தேடா
புதுயுக பொம்மை
தலைகீழாய்
என் வாழ்வைப்போல ...........


ராஜவம்சம்
*************

பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா

ஏதாயினும் வீறுகொள்
நீ வாழப்பிறந்தவள் அல்ல
நம் மண்ணை ஆளப்பிறந்தவள்

உன் கையின் இறுக்கம்
மனத்திடத்தை பறைசாற்றுகிறது
குனிந்து நிற்பது
கோழைத்தனம் மட்டும் அல்ல
பெண் அடிமைத்தனமும் கூட

நிமிர்ந்து நில்
தெளிவாயிரு
நாளைய உலகம் உன் கையில் !


நட்புடன் ஜமால்
*******************

சிரித்த முகத்துடன்
செயலிழந்து கிடக்கின்றாயே
என் ஈழத்து உறவுகள் போல் !

(குழந்தை பொம்மையை பார்த்து சொல்வது)

தியாவின் பேனா
********************

(விழி ... நிமிர்...நட...)

விளையாட்டுப் பொம்மையை
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???

உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???

ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???

அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.பலா பட்டறை
*****************

கையில் இரை இருந்தும்
இருபக்கமும் பல் காட்டும்
மந்தி கூட்டம்
கண்டு

உயிர்குழந்தையுனை
தவிக்கவிட்ட
பெரிய குழந்தைகள் அறியுமோ??
பொம்மை எனினும் பத்திரமாய்
நீ காத்த
உன் கை குழந்தை..

ருத்ர வீணை
****************
ஒதுக்கபட்டவள்

சீவி முடி முடிந்து
சிங்கார சிலை போல
காணும் எவர் மனதும்
கவி பாடு - என தோன்றும்

பாவி எவன் மனதும்
பாசம் வைக்கும் போது - வந்து
வேண்டி தொடர்பறுக்கும்
நேசமறு யோசனையில்

பூசி மொழுகி தினம்
புன்னகையில் நிறுத்திவிட
மூடிக் கிடக்குதொரு
முக்காடு மாயன் - மனத்தில்

தேடி கிடைக்குமொரு
திருநாளில் எனப்பார்த்தால்
மேவி மனமுழுதும்
மெத்தனமே - நிறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும்
காலமது வந்துவிடும்
வாடி விழுந்ததலை
விண்நோக்கி நிமிர்ந்துவிட்டால்

தேடி வசைமொழிவேன்
வாயடிக்கும் கூட்டத்தினை
கூடி ஒழிதிடுவேன்
கூறு அற்ற வார்த்தைகளை

நாடி நீ வந்து
பூவுலகில் விழுந்த நொடி
மாறிவிட்டதென்று உன்னை
பெற்ற கை உதறியதால்
காரிருள் கண்மறைத்த
காயமது பேயுனக்கு

நேசி நின் திருவுளத்தை
நின்பால் நானிருப்பேன்
பாடம் இதுவென்று
பொம்மையிடம் சொல்லிவிடு...


அரங்கப்பெருமாள்
*********************

”இயலாமை"

நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.
வெறுக்கும் போது என்னை
அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன.

நான் விரும்பும் அந்தச் சித்திரப் பாவை போல.
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.
எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது
எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என அறிந்ததாலோ என்னவோ?

இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
எண்ணங்கள் கவிழ்ந்து நிற்கின்றன.
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.

வாசகனாய் ஒரு கவிஞன்
பனித்துளி சங்கர்
*******************************
எப்பொழுதோ உன்னை பிரிந்துவிட்டேன்.
இருந்தும் உன் நினைவாக
நீ வாங்கித் தந்த இந்த பொம்மையின்
கரம் பிடிக்கும் பொழுதெல்லாம்
ஏனோ தெரியவில்லை.
எனது விழிகள்
என் அனுமதி இன்றி வெக்கதில்
தானாக தலை குனிந்துகொள்கிறது.


SUFFIX
********
உடைந்த பொம்மை
கிடைத்த்தது வழியில்
பத்திரமாய் என்னிடம்

உடைந்த மனது
குனிந்த தலை
தேற்றிடுவார் யாரோ!!

52 comments:

அண்ணாமலையான் said...

ஓக்கே நான் வழி மொழிகிறேன்...

இராகவன் நைஜிரியா said...

நானும் இதை வழி மொழிகிறேன்.

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம் நல்ல ஐடியாதான். முயற்சி பண்ணி பார்ப்போம்

வால்பையன் said...

நமக்கு அம்புட்டு அறிவு இல்லைங்கோ!

க.பாலாசி said...

கவிதையா....அதற்கும் நமக்கும் தூரமாச்சே...

படம் அழகாக உள்ளது ஒருவித ஏக்கத்துடனும்....(பேய் படம் மாதிரியும் தெரியுது...)

Anonymous said...

என‌க்கு ப‌ட‌த்தை பார்த்தா ப‌ய‌மா இருக்கு

ஸ்ரீராம். said...

மன்னிச்சுக்குங்க ஹேமா,
எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்!

"விளையாடுன்னு சொல்லி பொம்மையைக் கொடுத்தாங்க...ஆமாம், விளையாட்டுன்னா என்ன?"

"மனிதர்களை பொம்மையாக மதிக்கும் உலகில் பொம்மையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?"

மேவி... said...

ethachu idea thanga hema...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹேமா , நான் இந்த படத்துக்கு கவிதை எழுதியிருக்கிறேன் .

அதை உங்க பதிவில் பின்னூட்டமா அல்லது , நான் தனி பதிவு இடலாமா ...

தமிழ் உதயம் said...

தூக்கப்படுவது குழந்தை பொம்மையாக இருந்தாலும், அதை தூக்கும் முறை சரியில்ல. குழந்தைய இப்படி தூக்குவோம்மா. பொம்மையாக இருந்தாலும்- நான் குழந்தையாகவே பார்க்கிறேன்

ஹேமா said...

//அண்ணாமலையான்...
ஓக்கே நான் வழி மொழிகிறேன்...//

அண்ணாமலையாரே என்ன வழி மொழியிறீங்க.உடனே ஒரு நாலு வரிக்கவிதை ரெடி பண்ணூங்க.

::::::::::::::::::::::::::::::::
//இராகவன் நைஜிரியா ...
நானும் இதை வழி மொழிகிறேன்.//

இராகவன் என்ன நீங்களும்.எங்கே கவிதை ?

குழந்தைநிலாவில பாட்டுப்பெட்டி தூக்கியாச்சு.தெரியுமோ...உங்களுக்காகத்தான்.ஆனால் பாவம் துபாய் ராஜா எங்கே பெட்டின்னு கேக்கிறார் !

:::::::::::::::::::::::::::::::::

//S.A. நவாஸுதீன் ...
ஹ்ம்ம் நல்ல ஐடியாதான். முயற்சி பண்ணி பார்ப்போம்.//

நவாஸ் முயற்சி பண்ணி எனக்குத் தந்தபிறகு விரும்பினா உங்க பதிவில போட்டுக்கோங்க.

:::::::::::::::::::::::::::::::::::

//வால்பையன்...
நமக்கு அம்புட்டு அறிவு இல்லைங்கோ!//

வாலு பொய சொல்லாம ஒழுங்கா கவிதை எழுதி தாறீங்க !உங்களுக்கு எழுத வரும்.

::::::::::::::::::::::::::::::::

//க.பாலாசி ...
கவிதையா....அதற்கும் நமக்கும் தூரமாச்சே...//

பாலாஜி என்ன நீங்களும் சறுக்குறீங்க.
எழுதுங்க.ஏன் யார்கிட்டயாச்சும் அனுமதி கேக்கணுமா !

ஹேமா said...

மகா எனக்கும் இந்தப் படம் பயமா ஒரு வித்தியாசமாத்தான் இருக்கு.அதனால்தான் இப்படி ஒரு பதிவாய்ப் போட்டேன்.

:::::::::::::::::::::::::::::::::

ஸ்ரீராம் பாருங்க உங்க கவிதைதான் முதலா வந்திருக்கு.பதிவில போட்டாச்சு.

இதைப்போலவே எல்லாரும் முயற்சி பண்ணலாமே !

::::::::::::::::::::::::::::::::

மேவீ....எங்கே கவிதை ?வாலுகிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டீங்களா ?

::::::::::::::::::::::::::::::::

ஸ்டார்ஜன் என் பதிவிலயும் தந்திட்டு உங்க பதிவிலயும் போடுங்களேன்.

:::::::::::::::::::::::::::::::::::

நன்றி தமிழுதயம்.பதிவில் உங்கள் கவிதை இரண்டாவதாக.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்பே உன்னாலே

நானும் மறந்தேன்

நினைப்பதற்காக

உன் மறுவருகை எப்போ !!

லெமூரியன்... said...

கவிதையா???

ஐ நானும் முயற்சி பண்ணுவேனே???
:-) :-)

துபாய் ராஜா said...

ஹேமா, முன்னதை விட இதுதான் சரியாக இருக்கும்.


குழந்தை கை
பொம்மை போல்
குலுக்குகிறாய்
என் மனதை...

அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய் உயிரெ(ல்)லாம்,
என் உணர்வெ(ல்)லாம்...

இந்த கவிதையையும் சேர்த்திடுங்கோ ஹேமா....

(பணிப்பளுவால் எழுத முடியாமல் நீண்ட நாள்களாக தவித்த என் கவிமனதை கவிதை எழுத தூண்டிய தோழி ஹேமாவிற்கு நன்றி...)

- இரவீ - said...

ஹேமா இந்தாருங்கோ என்னுடய
ருத்ர காளி:

வரண்ட வாடை காற்றின் வேகம் அதிகரித்த அந்தி நேரம்.அலையின் சல சலப்பு அந்தகார இருளை வரவேற்றபடி இருக்க ஒற்றையடி பயணமானாள் வேம்பு.காலத்தின் கோலமா - அவசரத்தின் அல்லோகலமா தெரியாது.அவளது முடிவை நோக்கிய முடிவான பயணம் அது.

அவளின் ஆழ்ந்த பெருமூச்சுஇ நடையின் வேகமா இல்லை அலையின் ஓலமோ என இனம்கானமுடியா வெப்பமாய்.கோபத்தின் உச்சத்தில் அவள் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருக்க இலக்கை அடையும் வேகம் நடையின் ஒவ்வோரு வினாடியும் கூடிக்கொண்டே இருந்தது.இன்னும் சில வினாடிதான்.அவள் இலக்கை நெருங்கிகொண்டிருந்தாள்.

ஒற்றைப் பனை மரம்.அதை ஒட்டிப் பாழடைந்தது தெரியாமல் இருக்க அவசரமாய் கூரை வேயப்பட்ட மண்டபம் - நெஞ்சு படபடக்க மண்டபம் நெருங்கலானாள்.பதைபதைப்பு தொத்திக்கொன்டது - அவளின் இதயத் துடிப்புக் குறைவதை அவளே கேட்க முடிந்தது.மெல்ல அடிமீது அடிவைத்து நெருங்கலானாள்.

காலில் சில்லென ஏதோ தட்டுபடக் கீழே கூர்ந்து கவனித்தாள் - பூக்கள் மற்றும் தென்னங்குருத்தோலை அந்த மண்டபம் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.மனதை ஆசுவாசப்படுத்த முயன்று கவலை தொத்திக் கொண்டதை உணர்ந்தாள்.வந்த நோக்கம் நிறைவேறாதோ என்ற கவலையும் கூடிக்கொண்டது.

மண்டபத்தின் மதிலை நெருங்கிய நேரம் இகாலில் கடினமாய் ஏதோ தட்டுப்பட்டது.இதயத் துடிப்பை நிறுத்திக் கூர்ந்து கவனித்தாள்.பளிச்சிட்ட ஒளியாய் அவள் கண்ணின் முன் பொம்மி வந்து போனாள்.ருத்ர காளி வேஷம் போட வேல்கம்பு கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருட்டறையில் கோவித்து நின்றது நியாபகம் வர சிரித்துக் கொண்டே முன்னே இருந்த உடைந்த காவடியில் சொருகி இருந்த வேல்க்கம்பை கையில் எடுத்து முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு வீடு திரும்பினாள்.
-இரவீ-

ஜெயா said...

கண்மணியே கோவம் ஏன்? கையில் உள்ள பொம்மை மீதா,இல்லை அதை தந்து விளையாடச்சொன்ன அன்னை மீதா உங்க கோவம்? ஏக்கம் வேண்டாம் செல்லமே, கோபத்திலும் நீங்க அழகுதான், சிரியுங்க சிரியுங்க அட சிரியுங்க ****

ஹேமா said...

உடையில்லா பொம்மை.
அழகிய உடையில்
கோபக் குழந்தை.

குனிந்த முகத்தில்
அழுகையா வெறுப்பா ?

முடியில்...
முத்தால் சோடனை.
பொம்மைக்கும் உடை.
பஞ்சுப் பாதம்
மண்ணில் படாமல்
பவளத்தால் ரதமும் இங்கே.

இல்லாத அம்(ப்)மா(பா)வை
கூட்டி வா என்றால்
எங்கே போவேன் நான் !

Thamizhan said...

அன்னை பூடேயின்
அற்புத வண்ணம் !
களங்கமான உலகில்
கலங்கிய தனிமை!
கையிலே பொம்மை
நெஞ்சிலோ வெறுமை!

இராகவன் நைஜிரியா said...

//ஹேமா said...
//இராகவன் நைஜிரியா ...
நானும் இதை வழி மொழிகிறேன்.//

இராகவன் என்ன நீங்களும்.எங்கே கவிதை ? //

என்னங்க இது... எங்கிட்ட போய் கவிதை கேட்டு கிட்டு... நான் எல்லாம் கவிதை எழுதினா... கம்பூயட்டேரே அழுதுடும்... வேண்டாம்... அவ்...அவ்....


//குழந்தைநிலாவில பாட்டுப்பெட்டி தூக்கியாச்சு.தெரியுமோ...உங்களுக்காகத்தான்.ஆனால் பாவம் துபாய் ராஜா எங்கே பெட்டின்னு கேக்கிறார் !//

கவனிச்சேன்... ரொம்ப நன்றிங்க... நாணயத்தின் இருபக்கம் மாதிரித்தான் இதுவும்.. ஒருத்தருக்கு தேவையானது மற்றவற்கு தேவையில்லாததாகி விடுகின்றது.

பித்தனின் வாக்கு said...

கோபம் என்பது பாவம் குழந்தாய்
அது வாளில்லா கத்தி போல
சிரித்து மகிழும் உன் முகம்
கறுத்துத் தொங்கியது ஏன்,

ஆத்திரம் என்பது வாழ்வை அழிக்கும்
உன் கையில் உள்ள பொம்மையப் போல
துக்கம் என்பது மகிழ்வைக் கொடுக்கும்
உன் குனிந்த தலை போல.

சரியா ஹேமு, எதோ இந்த கத்துக் குட்டிக்கு இவ்வளவுதான் தெரியும். நன்றி.

துபாய் ராஜா said...

ஹேமா, மேலும் சில கவிதைகள்....

http://rajasabai.blogspot.com/2009/12/blog-post_22.html

வாருங்கோ... பாருங்கோ....

சிநேகிதன் அக்பர் said...

பொம்மையை

கையில் திணித்து

என் சந்தோசத்தை

திருடிக்கொண்டு

போனது யார்?என்னையும் ஆட்டத்துல சேர்த்துகிடுங்க.

ஸ்ரீராம். said...

//"ஸ்ரீராம் பாருங்க உங்க கவிதைதான் முதலா வந்திருக்கு.பதிவில போட்டாச்சு"//

நன்றி...முகப்புப் பக்கத்தில் நான் கிறுக்கியதைப் போட்டதற்காக...

நன்றி...அதைக் 'கவிதை' என்று சொன்னதற்காக..!

உங்கள் கவிதை அருமை...

Anonymous said...

யுத்த பூமியில்
விளையாட தலைகள் உண்டு
குனிந்து பார் கண்ணே!


உன்னை இங்கே விட்டு செல்ல
மனமில்லை எனக்கு!

அழைத்து போகவும் வழியில்லை
திக்கற்றவளா நான்...

கண்கள் முடி அழுகிறேன்
கண்ணே போதும் வந்து விடு!

Anonymous said...

நான் பிசியா? என்ன கொடும இது?

Kala said...

என் நாட்டு ஒளிவழியில்
இப்படிப் பார்த்தாய்!
பக்கவாட்டில்...
ஒத்தைக் கையால் தூக்கி
உயிர் உள்ள குழந்தைகளைக்
தூரமாய் எறியும் காட்சியை

ஓ..ஓ.. புரிகிறது

இதைத் தான் கண் பார்த்தால்
கை செய்யும் என்பார்களோ!


பார்த்தவுடன்....
பரிட்சித்துப் பார்க்க
உன் பொம்மையைத்
தூக்கினாள்.....
தூக்கிப் போடும் முன்னே
பார்த்து நினைவுக்கு வர...
பேதலித்துப் போனாளிவள

Anonymous said...

அடங்கவில்லை
பழி தீர்த்த பிறகும்!

8-வது பிறப்பு நீ
கம்ஷன் துரத்துகிறhன்
ஓடிடுவோம்...வா!

ரத்தம் வாடை அடிக்கிறது
இந்த பூமியில்...!

இங்கே நீ பிஞ்சு
எனக்கு நீ நச்சு-என்று
கொக்கரிக்கின்ற கூட்டத்தில்
உன்னை விட்டு செல்ல மனமில்லை

வா...
வந்து விடு....

S.A. நவாஸுதீன் said...

பெற்றவர்கள் கல்யாணம்
பொம்மை கல்யாணமாய்
பிள்ளை இவளுக்கோ
உண்ணவும்
உறங்க மடியும்
உதவிக்கு சில கதையுமின்றி
வெறும் பொம்மை மட்டுமே
துணையாய்

ஹேமா said...

லெமூரியன் எங்கே கவிதையைக் காணோம்.சீக்கிரம் சீக்கிரம்.ஆகட்டும்.

::::::::::::::::::::::::::::::::::

ராஜா உங்கள் பதிவில் அத்தனை கவிதைகளுமே அருமை.
எனக்கென்றால் இந்தப் படத்திற்கு காதல் கவிதை வந்திருக்காது.
வாழ்த்துக்கள்.

::::::::::::::::::::::::::::::::

ம்...ரவி அசத்தல் கதை.முதல்ல வேம்பு...ஒரே குழப்பம்.அப்புறம்தான் புரிஞ்சுகிட்டேன் அது அவங்க பேர்ன்னு.கதை தொடங்கிறப்போ என்னமோ விபரீதமா நடக்கிற மாதிர்த் தொடங்கி சந்தோஷமா முடிச்சிருக்கீங்க.நல்லாருக்கு.
வாழ்த்துக்கள் ரவி.

பாருங்க நீங்க ஒருத்தர் மட்டும்தான் கதை.மதவங்க எல்லாம் கவிதைல பட்டையைக் கிளப்பிட்டு இருக்காங்க.

:::::::::::::::::::::::::::::::::::

ஜெயா வாங்க உங்களை வரவேத்துக்கிறேன்.நீங்க புது ஜெயா.
உங்க வருகை சந்தோஷமாயிருக்கு ஜெயா.அடிக்கடி வாங்க.பாத்துக்கலாம்.
நல்லதொரு கவிதை.குழந்தையோடு ஒன்றியே விட்டீர்கள்.

:::::::::::::::::::::::::::::::::

ஹேமாவுக்கும் நன்றி.இன்னும் நல்லா எழுதலாம் நீங்க.முயற்சி பண்ணுங்க.வர வர சோம்பேறியாயிட்டீங்க.
நேரமில்லன்னா தூங்காம இருங்க.

:::::::::::::::::::::::::::::::::::

தமிழன் அருமையா இருக்கு ஆறு வரில.அசத்திடீங்க.இதுதான் முயற்சியும் ஊக்கமும்.

ஹேமா said...

அட பித்தப்பா என் பேரை எல்லாரும் செல்லமா மாத்திட்டே வாறீங்க.
அப்பாகிட்டக்கூடச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக்கிட்டேன்.ஹேம்ஸ்...ஹேமு...!

கவிதை பாருங்க நல்லாத்தானே இருக்கு.எல்லார் கூடவும் போட்டி போடுது.

::::::::::::::::::::::::::::::::::

அக்பர் ஆட்டத்துக்கு வாங்கன்னுதானே கூப்பிடேன்.சந்தோஷம் வந்ததுக்கு.இன்னும் வரணும்.

::::::::::::::::::::::::::::::::::

ஸ்ரீராம் அந்த வரிகளை இன்னும் அழகுபடுத்தினா அதுவும் கவிதைதான்.அதுக்கென்ன குறை.நல்லாருக்கு.

::::::::::::::::::::::::::::::::::

வாங்கோ மாப்பிள்ளை வாங்கோ...
பின்ன என்னவாம்.எவ்ளோ நாளாச்சி படம் போட்டு கவிதை கேட்டு.அதான் பிஸின்னு சொன்னேன்.

ஆனந்த்,அதுசரி கவிதை இரண்டுமே நல்லாருக்கு.சூப்பராயிருக்கு.உண்மை சொல்லுங்க.யார் எழுதினா?வீட்லதானே !

:::::::::::::::::::::::::::::::::

கலா கவிதை வலியோடு.என்ன சொல்ல.எங்கள் வலிகளோடுதான் பசப்பிச் சிரித்துக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சொன்னபடி வரிகள் திருத்திவிட்டிருக்கிறேன்.சரியா ?கலா உங்கள் பெயரைத் தமிழ் எழுத்தில் மாற்றிவிடுங்களேன் !

::::::::::::::::::::::::::::::::::

நவாஸ் பாருங்க நல்ல கருக் கருத்தோட கவிதை வந்திருக்கு.
அருமை.

விஜய் said...

ராவில் கைப்பிடித்து
காதருகில் கதைபேசி
புகலிடம் தேடா
புதுயுக பொம்மை
தலைகீழாய்
என் வாழ்வைப்போல ...........

அண்ணாமலையான் said...

அட .... இன்னும் யாரும் அடங்களயா..?

துபாய் ராஜா said...

ஹேமா, மற்ற கவிதைகளையும் இங்கே சேர்க்கத்தானே வாருங்கோ, பாருங்கோ ன்னேன். சேர்த்திடுங்கோன்னு வேற தனியா சொல்லணுமா... :))

(ரொம்ப தொல்லை பண்றமோ... :))

- இரவீ - said...

அட அட அட...
எவ்வலோ எவ்வலோ கவிதை கொட்டுது இங்க ,
இது நல்ல யுத்தியா இருக்கே...

ஆனந்த் - நீங்கலும் திரும்ப ஆரம்பிங்க...

எனது சார்பா அக்பர் மற்றும் கவிதை(கள்) க்கு ஒரு சபாஷ் சொல்லுங்க ஹேமா.

புழுதிப்புயல் said...

வணக்கம் ஹேமா அக்கா, கனகாலத்துக்கு பிறகு உங்கட பதிவுகளை வாசிக்கிறன். இந்த படத்துக்கு கன விளக்கம் குடுக்கலாம். இந்த குழந்தை மாதிரி எத்தினை குழந்தைகள் வெறும் நடமாடும் பிணங்கள் போல இருக்கின்றன. என்னத்த எண்டு சொல்ல..

பூங்குன்றன்.வே said...

கவிதை எழுத சொன்னீங்க..ஆனா அப்படினா என்னன்னு சொல்லவே இல்ல நீங்க :)

விஜய் said...

நன்றி ரவி

விஜய்

ஸ்ரீராம். said...

விஜய்,
கவிதை நன்றாக இருக்கிறது...
காமத்துக்கு அலையும் காதலனாக முதல் இரண்டு வரிகளை எடுத்துக் கொண்டால் கடைசி இரண்டு வரிகளுக்குமுன் இன்னும் சில வரிகள் குறையவில்லை? (பொம்மையைச் சொல்வதாக எடுத்துக் கொள்ளாமல் பொம்மையைக் கொடுத்தவனாக எண்ணினால்...) குழ(ம்)ப்புகிறேனோ?

ராஜவம்சம் said...

பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா

ஏதாயினும் வீர்கொள் நி வாழப்பிறந்தவள் அல்ல
நம் மன்னை ஆளப்பிறந்தவள்

உன் கையின் இருக்கம் மனதிடத்தை
பரைசாற்றுகிற்து குணிந்து நிற்ப்பது
கோழைத்தனம் மற்றும் அல்ல பெண்
அடிமைத்தனமும் கூட

நிமிர்ந்து நில் தெளிவாயிரு நாளைய உலகம் உன் கையில்
(ஏதோ ஹேமா சொன்னாங்களேன்னு கிறிக்கிப்பார்த்தேனுங்க)

நட்புடன் ஜமால் said...

சிரித்த முகத்துடன்
செயலிழந்து கிடக்கின்றாயே
என் ஈழத்து உறவுகள் போல்

நட்புடன் ஜமால் said...

அந்த வரிகள்

குழந்தை பொம்மையை பார்த்து சொல்வது

நினைவுகளுடன் -நிகே- said...

நானும் இதை வழி மொழிகிறேன்.

thiyaa said...

நல்ல வித்தியாசமான தெரிவு ஹேமா, ஆக்கங்கள் அனைத்தும் அருமை, என் சிறு முயற்சியில் விளைந்த வரிகள் இவை.

ஹேமா இந்த வரிகள் பொருத்தமாக இருந்தால் இணைத்துக்கொள்ளுங்கள்
(விழி ... நிமிர்...நட...)


விளையாட்டுப் பொம்மையை
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???


உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???


ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???


அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.

ருத்ர வீணை® said...

ஒதுக்கபட்டவள்

சீவி முடி முடிந்து
சிங்கார சிலை போல
காணும் எவர் மனதும்
கவி பாடு - என தோன்றும்

பாவி எவன் மனதும்
பாசம் வைக்கும் போது - வந்து
வேண்டி தொடர்பறுக்கும்
நேசமறு யோசனையில்

பூசி மொழுகி தினம்
புன்னகையில் நிறுத்திவிட
மூடிக் கிடக்குதொரு
முக்காடு மாயன் - மனத்தில்

தேடி கிடைக்குமொரு
திருநாளில் எனப்பார்த்தால்
மேவி மனமுழுதும்
மெத்தனமே - நிறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும்
காலமது வந்துவிடும்
வாடி விழுந்ததலை
விண்நோக்கி நிமிர்ந்துவிட்டால்

தேடி வசைமொழிவேன்
வாயடிக்கும் கூட்டத்தினை
கூடி ஒழிதிடுவேன்
கூறு அற்ற வார்த்தைகளை

நாடி நீ வந்து
பூவுலகில் விழுந்த நொடி
மாறிவிட்டதென்று உன்னை
பெற்ற கை உதறியதால்
காரிருள் கண்மறைத்த
காயமது பேயுனக்கு

நேசி நின் திருவுளத்தை
நின்பால் நானிருப்பேன்
பாடம் இதுவென்று
பொம்மையிடம் சொல்லிவிடு...

Paleo God said...

கையில் இரை இருந்தும்
இருபக்கமும் பல் காட்டும்
மந்தி கூட்டம்
கண்டு

உயிர்குழந்தையுனை
தவிக்கவிட்ட
பெரிய குழந்தைகள் அறியுமோ??
பொம்மை எனினும் பத்திரமாய்
நீ காத்த
உன் கை குழந்தை..

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அரங்கப்பெருமாள் said...

எண்ணங்களும் ஏக்கங்களும்
=========================

நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.அமைதியாக இருக்க நினைக்கையில்தான் பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன, என் அனுமதியின்றி படுக்கை அறையில் நுழையும் கொசுக்களைப் போல. வெறுக்கும் போது என்னை அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன,நான் விரும்பும் அந்தச் சித்திரப் பாவை போல. தேடும்போது கிடைப்பதில்லை என்ற ஒற்றைக் காரணத்தால் தான், கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன எழுதுவதற்கு வாய்ப்பில்லை என அறிந்ததாலோ என்னவோ?.இப்போதும் கூட இப்படத்திற்கு எழத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல எண்ணங்கள் கவிழ்ந்து நிற்கின்றன. என்னைப் போல பேசாமல் என்ன எண்ணும் அக்குழந்தை என சிந்திக்கும் வேளையில்,அக் குழந்தை போல குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது, நான் விரும்பாத அதே எண்ணம்.

அரங்கப்பெருமாள் said...

”இயலாமை” எனத் தலைப்பிட்டு இருக்கலாமோ என எண்ணுகிறேன்.அக் குழந்தையின் வாயிலாக எனது இயலாமைப் பற்றி சொல்ல நினைத்ததால்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{{{{எப்பொழுதோ உன்னை பிரிந்துவிட்டேன் .
இருந்தும் உன் நினைவாக
நீ வாங்கித் தந்த இந்த பொம்மையின்
கரம் பிடிக்கும் பொழுதெல்லாம்
ஏனோ தெரியவில்லை .
எனது விழிகள்
என் அனுமதி இன்றி வெக்கதில்
தானாக தலை குனிந்துகொள்கிறது . }}}}}}}}}}}}}}}}}}}வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

வாசகனாய் ஒரு கவிஞன் ... said...

நல்ல முயற்சி நண்பரே ,
பகிர்வுக்கு நன்றி .

என்ன நண்பரே நம்ம கவிதை பிடித்து இருக்கிறதா ????


{{{{{{{{{{{எப்பொழுதோ உன்னை பிரிந்துவிட்டேன் .
இருந்தும் உன் நினைவாக
நீ வாங்கித் தந்த இந்த பொம்மையின்
கரம் பிடிக்கும் பொழுதெல்லாம் ஏனோ தெரியவில்லை .
எனது விழிகள்
என் அனுமதி இன்றி வெக்கதில்
தானாக தலை குனிந்துகொள்கிறது .
}}}}}}}}}}}}}


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

SUFFIX said...

உடைந்த பொம்மை
கிடைத்த்தது வழியில்
பத்திரமாய் என்னிடம்

உடைந்த மனது
குனிந்த தலை
தேற்றிடுவார் யாரோ!!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP