பாரிசில் வாழும் மாத்தியோசி புளொக்கின் தலைவர் முன்னாடி ஓட்டை வடை நாரயணன்,நிரூபனின் அல்லக்கை,ரஜீவன் என்கிற பெயரில் பின்னாடி இப்போ ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW (பாருங்கோ மக்களே எங்கயெல்லாம் படிச்சு எத்தனை டிப்ளோமா எண்டு) என்கிற பெயரில் கறுப்புக் கண்ணாடியோடு லாச்சப்பலில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க யோசிச்சிருக்கிறோம்.ஏனென்றால் மிகவும் பயனுள்ள பெண்களுக்கான வீட்டுக்குரிப்புகளை அல்லி வழங்கிருயிருக்கிறார்.அந்தப் பதிவைப் படிச்ச சந்தோஷத்தில உடம்பு முழுக்க மூளையென்று நினைச்சு தெரியாமல் சொல்லிட்டேன் பொன்னாடை போத்துறன் எண்டு.அதுக்குப்பிறகுதான் தெரியுது அதிராவின் பூனைக்குட்டியாரின்ர 5 பவுண் தங்கச்சங்கிலிக்கு அவர்மேல வழக்கு நடக்குது என்று.ஆனால் அவர்தான் எடுத்தாரென்று ஓரளவு பிடிபட்டும் கிட்டக் கிட்ட வந்தும்.... பிறகு பிடிபடாமல் போறார்.இதில அப்பா யோகா,அம்பலத்தார் ஐயா,காட்டான் மாமா,நிரூ,கந்து,தனிமரம் நேசன் எல்லாரும் சம்பந்தப்பட்டிருபார்கள் என்றே சந்தேகிக்கப்படுகிறார்கள்.அதால அவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் இணையப் பதிவர் நீதிமன்றம் தடுமாறுகிறது.
இவர் சங்கிலி எடுத்தவர் என்று நிரூபிச்சிட்டால் நிரூ முள்ளுக்காவடி எடுக்கிறதாய் அதிரா சொல்ல,முள்ளுக் காவடி எடுக்கும் சம நேரத்தில அக்காச்சி அதிராவும் அக்காச்சி ஹேமாவும் அலகு குத்தி பாற் செம்பு எடுப்பீனம் என்று வள்ளி தெய்வானை மேல சத்தியம் செய்து சொல்றேன் என்று நிரூவும் (என்னைக் கேட்காமலேயே ) நேர்திக்கடனை முருகனுக்கு அள்ளிக் குடுக்கிறார்கள்.இப்பிடியெல்லாம் நேர்த்திக்கடன் கடனாக் கிடக்கு.எப்பிடியும் முருகனுக்கு ஆப்புத்தான்.ஏமாந்துதான் போகப்போறார்.அதோட வள்ளிக்கும் தெய்வானைக்கும் சங்கிலி,சேலை என்று பொய்யான லஞ்சம் எல்லாம் ஒருபக்கமும் கிடக்கு.
கருப்புக் கண்ணாடி(கறுப்பு கண்ணாடி சமாதான காலத்தில புதூர் நாகதம்பிரான் கோயில் திருவிழாவில வாங்கின எட்டு வருசம் பழைய கண்ணாடி என்றும்...நப்பி! நீயி...உந்த இடப் பெயர்வுக்கையும் கண்ணாடியை கைவிட மனமில்லாம பொக்கற்றுக்குள் கொண்டு வந்தது எனக்கெல்லோ தெரியும்!என்றும் நிரூ சொல்கிறார்.) இரகசியம் என்னடாவெண்டா காதலிச்சுக் காதலியின் கரைச்சல் தாங்காம ஓடி ஒளிஞ்சு பரிஸ் - லாச்சப்பல் பக்கம் ஒளிஞ்சு இருக்கிறாராம்.இது நான் கேள்விப்பட்டது.ஐடியா http://www.tamilaathi.com/2012/03/blog-post_03.html மணியத்தாரின் இந்தப் பதிவும் சொல்லுது பாருங்கோ.இனிமே யாருமே காதலிக்காதேங்கோ.காதலிச்சா இதையெல்லாம் மெயிண்டேன் பண்ணவேணும்.இல்லாட்டி காதலி உங்களை மதிக்கமாட்டாளென்று.ஆனா இவரை காதல் செக்சனில இண்டர்போல் போலீஸ் தேடுதாம்.அதுக்குத்தான் கருப்புக்கண்ணாடி.இதெல்லாம் பழைய சிவாஜி,எம்.ஜி.ஆர் படங்களில ஆள் அடையாளம் தெரியாம இருக்க கன்னத்தில ஒரு மச்சம் ஒட்டிவிட்டா ஆள் அடையாளம் மாறும் என்கிறமாதிரித்தான் இந்தக் கருப்புக் கண்ணாடி.
1) ஒட்டுசுட்டாணில ஒண்டிப்புலி சின்ராசு மகள் மேல கை வைச்சு வாங்கி கட்டினது...
2) வட்டக்கச்சி விதானையாரின் பொட்டையை ஏமாத்தினது...
3) கனககுஜலாம்பாள் அப்டீங்கற பொண்ணை லவ் பண்ணும் போது அந்தப் பொண்ணை நிரூ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆயிரம் தேங்காய் உடைக்குறதாகூட வேண்டிக்கிட்டது....

4) ஒருவாட்டி குஞ்சுப் பரந்தனுக்கு போயி தேங்காய் கட்டிக் கொண்டு வாடா என்று ரெண்டு சாக்கு கொடுத்து இவனோட அம்மா அனுப்பி வைச்சா.இந்த நரி...தொதல் கிண்ட தேங்காய் வாங்கி வர கொடுத்தனுப்பிய காசில திருவருட் பிள்ளையார் படமாடத்தில போயி கோணாவில் கவிதாவின் போட்டோவை பிரேம் பண்ணிக் கொண்டு வந்ததோட தேங்காய் வாங்க கொடுத்து அனுப்பிய காசையும் செலவளிச்சுப் போட்டு வந்திட்டுது! இந்த லட்சணத்தில நேர்த்தி வைச்சு இவன் தேங்காய் உடைக்கிறதாவது!
இப்பிடி இப்பிடியே இவரது பிரதாபங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.பிரான்ஸ் பிகருகள் பற்றி துஷி சொல்றதாச் சொல்லிட்டு நட்புப் பாலத்தை இறுக்கிப் பிடிச்சு வைச்சிருக்கிறதுக்காக்கப் பிறகு சொல்லாம விட்டிட்டார் !
இவற்றோடு....இன்னும் இந்தப் பன்னாடையை பர்சனலா அறிந்தவன் என்ற ரீதியில் சொல்றேன்....என்று நிரூ இவரைப் பற்றிச் சொல்வதாவது.....
இவன் ஒரு வசதியான திருடன்! இவன் லோக்கல் திருடன் இல்லை!
கோப்பை கழுவுறான் என்று நீதிபதிகிட்டயே பொய் சொல்லிட்டானே இந்த நாதாரி !
மக்களே இவன் பிரான்ஸில ஒரு மொழி பெயர்ப்பாளரா ஒரு கூலான அறைக்குள் இருந்து ஒர்க் பண்றான்! இவனுக்கு இங்கிபீசு பிரெஞ்சு அத்துப்படி! அதோட இந்த நாயி ஒரு பகுதி நேர ஆங்கில நா(வா)த்தி & எக்கவுண்டன்!
பிரான்ஸில வசதியா இருந்திட்டு,தன் திருட்டை நியாயப்படுத்தக் கோப்பை கழுவுறதா பொய் சொல்றான்!
இதெல்லாம் இவரது காதல் சாகசங்களும் இன்னும் பிறவும்...(இதெல்லாம் சொன்னவர் நாற்றுப் பதிவளர் நிரூ.ஆட்டோ அனுப்பிறதென்றால் அவர் பக்கம் அனுப்பவும்.)
இவ்வளவு பிராதுகள் இவர் பக்கம் இருந்தாலும்....எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளைய அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளாரென்றும் அறியக் கிடைத்துள்ளது.
எனவே இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் இணைய உறுப்பினருமான முன்னாடி ஓட்டைவடை நாரயணன் பின்னாடி ஐடியா மணி அவர்களுக்குச் சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே அவருக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்.இந்த இடத்தில் மன்னிப்போடு ஒன்றும் சொல்லிக்கொள்கிறோம்.
அவர் இலண்டனிலதான் வச்சுத்தான் பொன்னாடை போர்த்தச் சொல்லிக் கேட்டவர்.(இதிலயும் நிரூ சொன்னதாவது பன்னாடைக்குப் பொன்னாடையோ என்று.)ஆனா அதிரா தேம்ஸ் நதிக்கரையில டெண்ட் அடிச்சுப் பூனையாரோடு காத்திருப்பதாகப் பிந்திய செய்திகள் கிடைச்சிருக்கு.அது அவ தீக்குளிக்கிறதுக்கோ (தீ அணைக்கிற லாரிக்கும் அறிவிச்சிருக்கிறாவம்)இல்லாட்டி மணியத்தாரைப் பிடிச்சுத் தண்ணிக்குள்ள தள்ளவோ எண்டு இன்னும் சரியாக அறியப்படவில்லை.எது எப்பிடியானாலும் இவரது எல்லாச் சேவைகளையும் பாராட்டி இன்று அண்ணன் சிந்தனை பொறித்த பொன்னாடையை தமிழீழ தமிழகத்து உணர்வாளர்கள் நாங்கள் போர்த்திக் கௌரவிக்கிறோம்.(மணியத்தாருக்கே இப்ப இனித்தான் அறிவிக்கப்போறோம்.)அத்தனை இணையத் தமிழ் உறவுகளின் வாழ்த்தை அவருக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
நிரூ,ஹேமாவின் ஒருங்கிசைவில் பொ(ப)ன்னாடையோடு காத்திருக்கும் உலக இணையத் தமிழர் ஒருங்கிணைப்புச் சங்கம் !






