Thursday, April 22, 2010

2010ன் விடுமுறையில் ஊரில் நான்.

மோனை பிள்ளையள் எப்பிடியப்பு இருக்கிறியள்.எல்லாரும் சுகம்தானே !ஊருக்குப்போய்ட்டு வந்திருக்கிறன்.ஆனா மனசில எப்பவுமே எங்கட கலட்டியடிக் கிழவின்ர கிணறுபோல ஏதாச்சும் குப்பையும் குச்சியுமாத்தானேடி குழம்பிக் கிடக்கடி பிள்ளை.என்னத்தை எழுத நான் !

இந்த ஜெயாக்குட்டியும்,உந்த ரவிப் பொடியும் எப்பவும் ஆக்கினைக்கு மேல ஆக்கினையாக் கிடக்கு.ஊருக்குப் போய்ட்டு வந்திருக்கிறயணை.ஏதாச்சும் கிறுக்கு கிறுக்கெண்டு.என்னத்தை சொல்லி என்னத்தைக் கேட்டு என்னெண்டு நான் எழுத.துபாய் ராஜா எழுதிற மாதிரி பிரயாணக் கட்டுரையெண்டு வடிவா எனக்கு எழுத வராது.சும்மா புலம்புவன்.அதோட என்ர கமெரா நடுவில குழப்படியும் பண்ணிட்டுது.வீடியோவும் டிஜிடெல் இல்லை.அதால இருக்கிற ரெண்டொரு போட்டோக்கள் மட்டும்தான்.வீடீயோ சரியாக்கின பிறகு ஒரு நாளைக்கு பதிவில போடுறன்.சரியோ !

6 வருஷத்துக்குப் பிறகுதான் வீட்ட போனனான்.போன ரெண்டு வருஷத்துக்கு முன்னம் அம்மாவும் அப்பாவும் சிஙப்பூருக்கு வந்திச்சினம்.அங்க போய்ப் பாத்தபடியால ஊருக்கு கனகாலத்துக்குப் பிறகு போய்ட்டு வந்திருக்கிறன்.

எங்கட ஊரப்பு யாழ்ப்பாணம்/கோண்டாவில்தான்.ஊர்ல நடந்த கலவரத்தால எங்கட பெரியப்பா திருகோணமலையில இருந்ததால இங்க வந்து இருக்கிறம் இப்ப.எனக்கு அங்க பிடிக்கேல்லத்தான்.எண்டாலும் என்ன செய்றது.அப்பாக்கு தான் வளர்ந்த இடமானதால பிடிக்குது.சரி அவையள்தானே இருக்கினம்.இருந்திட்டுப் போகட்டும்.

ஆனாலும் ஒரே நுளம்படா பெடியா.உந்த ரவிப்பொடியன்ர கும்மிக்கு அங்க ஒருக்கா கொண்டு போய் விட்டிட்டு வரோணும்.ஐயா கையையும் காலையும் தூக்கி வச்சுக்கொண்டு வயலின் வாசிப்பார்.எங்கட நிலாக்குட்டி போல.அதோட வெயில் எண்டா அளவெடுக்க முடியாத அளவுக்கப்பனே.அப்பிடி எரிக்குது கல்லுபூமி திருகோணமலை.கால் நிலத்தில வைக்கமுடியேல்லையப்பு.துடிச்சுப் போகுதுகலெல்லோ அந்தச் சனங்கள்.

இனி ஊர்ச் சனங்களைப் பற்றிச் சொல்லவெண்டா....பாவங்கள் எண்டுதான் ஒற்றை வரில சொல்லி முடிப்பன்.சாமான் சக்கட்டு எல்லாம் சரியான கொள்ளை விலையடா. எங்களைப்போல வெளிநாட்டுக்காசை மாத்திச் சீவிக்கிற சனங்கள்தான் நல்லமாதிரி உடுத்திப் படுத்து நின்மதியாச் சாப்பிட்டுச் சீவிச் சிங்காரிச்சு சீவிக்கலாம்.இல்லாட்டி அதோகதிதான். எல்லாம் விலை.சாதாரண கூலி வேலைகள் எல்லாம் இப்ப இல்லை.நாகரீகம் கூடி விறகு கொத்த,மா இடிக்க,வீட்டு வேலை செய்ய எண்டு எதுவும் இப்ப ஆருக்கும் அலுவல் இல்ல. பாவங்கள்தான்.எங்களால முடிஞ்ச உதவி மட்டும் செய்யலாம்.வேற என்னதான் செய்யேலும்.

இதைவிட நாட்டுப்பிரச்சனை இப்ப இல்லையெண்டு கொஞ்சம் அமைதியா தங்கட தங்கடபாட்டுக்குத் திரிஞ்சாலும் மனசுக்குள்ள புழுங்கிக்கொண்டுதான் திரியுதுகள்.யாரிட்ட போய் என்ன சொல்ல ஏலும்.நான் நிக்கேக்க எலக்க்ஷன் வேற.ஒரே சிங்கள ஆக்களின்ர சந்தோஷ அட்டகாசங்கள்தான்.வீட்டுச் சுவர்களில இருந்து ஆட்டோ பஸ் எண்டு எல்லா இடங்களிலயும் ஒரே நோட்டீஸ்கள்.அதான் யாரோ ஒரு தேரர் சொல்லிட்டாரெல்லோ."தமிழன் எதுவும் தன்ர மன விருப்பத்துக்கு எதுவும் கேக்ககூடாது.தாற பிச்சையை வாங்கிகொண்டு சூத்தையும் வாயையும் பொத்திக்கொண்டு பேசாம இருக்கோணும்"எண்டு.
ஓம்......இப்பிடித்தான் அங்க இப்போதைக்குத் தமிழன்ர சீவியம்.

நம்புவதற்காகவோ
ரசிப்பதற்காகவோ
எழுதப்படவில்லை இது.
எம் தலைவிதியை
நானே பார்த்த ஆதங்கம்.

தேர்தல் குறித்த பிச்சையெடுப்போடு
அனுமார்களின் அட்டகாசம்.
கதவுகள் திறந்தே கிடக்கிறதாம்
அதுவும் தமிழர்களுக்காகவாம்
தந்திரம் மந்திரமற்ற
தேவதூதர்கள்போலவே
இக்கணங்களில் அவர்கள்.

தமிழுக்கு
மாலையாம் மரியாதையாம்
நச்சுப்பாம்புகள் ஒளிந்திருப்பது
பாவப்பட்டவர்களுக்கு
தெரியாமலும் இருக்கலாம்.

தமிழன் வீட்டு
நாய் இறந்தால்கூட
தலைவர் வருகிறார்
துக்கம் விசாரிக்க.
தமிழனின் காதில் பூ வைக்க
கையில் பூக்கூடையோடு
பச்சோத்திக் கூட்டம்.

என் தேசத்தில்
எதுவும் நிரந்தரமற்று
தற்காலிகமாய்
தருவதுபோல் தந்து
பறிக்கப்படும் விந்தை.

உஷாராய் இல்லையென்றால்
உடையுருவும்
நிர்வாணம் ரசிக்க.
சிங்களத்தின் கையில்
போதிமரக் கிளையால்
கடையப்பட்ட
புது ஆயுதம் இப்போ!!!


இந்த முறை ஊருக்கு நான் போய் நிக்கேக்குள்ள எங்கட நிலாவும் வந்திட்டாள்.அவதான் இந்தமுறை மகாராணி.என்னை யாரும் கவனிக்கேல்ல.அவளோடயே நாள் எப்பிடிப் போச்சு எண்டே தெரியாமல் போய்ட்டுது.அழுதழுதுதான் அவளை விட்டிட்டு வந்தன்.அவளும் ஹேமா ஹேமா எண்டுதான் கூப்பிட்டுக்கொண்டு நிறைய ஆசையா அன்பா நல்ல வாரப்பாடா இருப்பாள்.அவளை இப்பதானே முதன் முதலாப் பார்த்தனான்.அவளின்ர சேட்டை செல்லமெண்டா அதிகம்.வால் முளைக்காத ஒரு ஆள்தான் அவள்.இதில வேற அவவைக் குரங்கு எண்டா கோவம் வராது வைட் மங்கியெண்டா(white monkey)பாக்கோணுமே அவவின்ர கோவத்தை.வலு கெட்டிக்காரி.நிறையக் கதைப்பாள்.ஒரு நாள் எங்கட அப்பாட்ட கேட்டாள்"தாத்தா இந்த டோக்கியையெல்லாம் கட்டி வைக்கிறீங்கள்.ஏன் உந்த நுளம்பையெல்லாம் பிடிச்சுக் கட்டி வைக்க மாட்டீங்கள்" எண்டு."ஏன் நாய் எல்லாம் வெளில படுக்குது.ஏன் ஸ்கூலுக்குப் போறதில்ல.ஏன் வெளில படுக்குது?"இப்பிடி அவவுக்கு பெரிய சந்தேகங்கள்.வானத்தில நட்சத்திரம் பாத்த உடனே கனடாவில தான் இப்ப விட்டிட்டு வந்திருக்கிற சொந்தம் சிநேகிதர் பெயரெல்லாம் சொல்லிச் சொல்லி எண்ணிப் பாப்பா.எண்ணிக்கைக்கு நட்சத்திரம் போதாவிட்டால் அவையள் நித்திரையாப் போச்சினம் எண்டு கதை முடிச்சிடுவாள். யாராச்சும் நுள்ளிப்போட்டா(கிள்ளினா)"ஐயோ...என்னைப் பிச்சுப்போட்டாங்கள்"எண்டுதான் சொல்லிச் சொல்லி அழுவா.அவளின்ர கதை சொன்னா நிறையச் சொல்லலாம்.இவ்வளவும் போதும் நிலாக்கதை.

இந்தமுறை நிறைய வீட்டிலேயேதான் பொழுது போச்சு.சரியான வெயில்.அதால அங்கால இங்கால எண்டு எங்கயும் போகப்பிடிக்கேல்ல.கோணேசர் கோயிலுக்கும் காளிகோயிலுக்கும் போனன்.இந்த முறை உடுப்புகள் கூட வாங்கேல்ல.ஏனோ எதிலயும் ஒரு பிடிப்பு இல்ல.

அம்மாவும் தங்கச்சியும் ஒவ்வொருநாளும் விதம் விதமாச் சமைச்சு தந்தினம்.நான் பொதுவாக் காலமையில சாப்பிடமாட்டன்.அங்க அவையளின்ர வில்லங்கத்தில 4-5 நாள் சாப்பிட்டன்.அம்மான்ர ஸ்பெஷல் பால் அப்பம்.ஒரு நாள் 4-5 அப்பம் சாப்பிட்டன்.அதுவும் எத்தனயோ வருஷத்துக்குப் பிறகு.அதைப்போல ஒரு நாள் கூழ் காய்ச்சிக் குடிச்சம்.புட்டு, இடியப்பம்,தோசை,இட்லி எண்டு எப்பவும் ஏதோ எல்லாம்.

எனக்கெண்டா சாப்பாடு அலர்ஜி.பசிக்கு அந்த நேரம் என்ன இருக்கோ அது போதும்.எனக்காகச் செய்துபோட்டு அவையளே சாப்பிடுவினம்.எனக்கு நிறையத் திட்டு விழும்.அதோட இந்த முறையும் அம்மாவோட சண்டைதான்.இனி வரமாட்டன் இப்பிடியான கதைகள் கதைச்சா எண்டு சண்டை போட்டுக்கொண்டு வந்திட்டன் நான்.செல்லச் சண்டைதான்.

நான் வீட்டுக்குப் போனா செய்ற வேலை என்ன தெரியுமோ முற்றம் கூட்டுறதும்.பூக்கண்டுகளுக்குத் தண்ணி விடுறதும்தான்.வேற ஒண்டும் செய்யத் தெரியாது.அதால பேசாம இந்த வேலைக்குச் சாப்பாடு தந்தால் போதும் எண்டு இருந்திடுவன்.
வீட்ல நிறைய மரம்மட்டைகள் இருக்கு.

பிறகு...5 நாள் சின்னதா ஒரு உலாப் போனோம்.நான் பிறந்து வளர்ந்த இடம் மலையகப் பகுதிக்கு போய் கனநாளாயிட்டுது.இரத்தினபுரி என்கிற அழகான மலையகம்.ஆத்தில குளிச்சோம்.படிச்ச பள்ளிக்கூடம் போனோம்.
பூட்டிக்கிடந்தது.பொன்னையா மாஸ்டர் ஞாபகம் வந்து அப்பாவோட நிறையக் கதைச்சன்.மூத்திரக்காய் மரத்தைக் காணேல்ல.வெட்டிப்போட்டினம்.
இதுதான் மலையகத்தில் நாங்கள் வளர்ந்த வீடு.
எங்கட வீடும் பூட்டிக் கிடந்தது.இப்பவும் பாதியாய் வெட்டினபடி கதவு கிடக்கு.அது என்னெண்டா முந்தி சின்னப்பிள்ளைல மத்தியானம் சாப்பிட்ட உடனே அப்பா பள்ளிக்கூடம் போய்டுவார்.அம்மா குட்டி நித்திரை அடிப்பா.அப்ப எங்களை வெளி விறாந்தைல விளையாட வச்சிட்டு படுத்திருப்பா.என்ர தங்கச்சி ஒரு வால்.அது தூண்டிவிட நாங்கள் மெல்லமா வெளில போய்டுவம்.அந்தத் தேயிலை றப்பர் காடுகள் முழுக்க எங்கட கையிலதான் அட்டை கடிக்க கடிக்கச் சுத்திட்டு வருவம்.என் மலையகத்து முதல் எதிரியே இந்த அட்டையார்தான்.அதாலதான் அந்தக் கதவை அப்பா குறுக்க வெட்டிப் பாதியாக்கிப் பூட்டுப் போட்டவர்.அந்தக் கதவோட கதைச்சன்.அழுகையே வந்திட்டுது.இனி எப்ப பாப்பேனோ !என் தோழி சின்னப்பாப்பவைத் தேடிப்போனம்.இருந்தாள் என் தோழி.என்னைச் சரியா அடையாளம் தெரிஞ்சும் தெரியாமலும்.மனநிலை குழம்பியிருந்தாள்.காதல் தோல்வியாம் அவளுக்கு.பாப்பம்மா பாப்பையா செத்திட்டினமாம்.அவள் அவளின்ர ஒண்டுவிட்ட அண்ணாவோட இருக்கிறாள்.எங்களை அடையாளம் கண்டு கொண்டதா முகபாவம் அந்தச் சிரிப்புச் சொன்னது.

அங்க எல்லாம் தமிழகத்துச் சகோதரர்கள்தான்.அவர்களைக் காண்றதும் கதைக்கிறதும் பழகுறதும் அதொரு சந்தோஷம்.கள்ளமில்லாச் சொந்தங்கள்.அந்த மண்ணின் காலநிலையும் அவர்களைப்போலவே குளிர்மையா இருக்கும்.ஆனால் எங்கள் அரசாங்கம் அவர்களைக் குளிர்மைப் படுத்துவதில்லை.எங்கட நாட்டின்ர ஊன்றுகோலே முதுகெலும்பே அவர்கள்தான்.ஆனால் அவர்கள் நிலை அன்றிலிருந்து இன்றுவரை நிமிராமல் குனிஞ்சபடிதான் !பாவங்கள் அந்த மக்கள்.தேயிலையோட தேயிலையா சக்கையா பிழிபடுதுகள்.கல்வி,வீடு, போக்குவரத்து வசதி என்று எதையும் சரியாச் செய்து குடுக்க மாட்டாங்கள்.
அப்பாட்ட படிச்ச மாணவர் தியாகராஜா இப்போ அதே பள்ளிக்கூடத்தில அதிபரா இருக்கிறார்.அவர் வீட்டிலதான் தங்கினம்.அவர்தான் இந்தப் போட்டோவில போஸ் குடுக்கிறது.
இன்றைய இளைய சமுதாயம் முயற்சி எடுக்கிறார்கள் படித்து நாகரீக வளர்ச்சியோடு முன்னேற.என்றாலும் அவர்களுக்கு உண்டான தரம் குடுக்க அங்க ஆர் இருக்கினம் !அதுதான் நான் அடிக்கடி சொல்றனான் தமிழனாக அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எங்களுக்கே நீங்கள் எங்கிருந்து வந்தனீங்கள் என்ற கேள்வி இந்தக் கதி.அப்போ இவையளின்ர நிலை என்ன !இதை வச்சுத்தான் வெளிநாட்டில எங்களை மதிக்கினம் மரியாதை தருகினம் எண்டு நான் எப்பவும் சொல்றது.உண்மைதான் சுவிஸ்ல எங்களை மதிக்கினம்.எங்கட உணர்வுகளை மதிக்கினம்.எங்கட தேவைகளை நாங்கள் உரிமையோட கேட்டு வாங்கிக்கொள்றம்.எங்கட நாட்டில எங்களுக்கு என்ன மரியாதை ?

"தம்புள்ள"வில் புத்தவிகாரை.


கண்டி,காலி,ஹற்றன்,நுவரெலியா எண்டு வாற வழிகளில இருக்கிற இடமெல்லாம் பாத்துக்கொண்டு வந்தம்.என்னட்ட போட்டோக்கள் இல்லாமப் போச்சு.வீடியோ கசெற்ல எடுத்திருக்கிறன்.அதை CD ல எடுத்து இதுக்குள்ள செருகத் தெரியேல்ல பாருங்கோ.

அப்பா அம்மாக்கு 50 ஆவது கல்யாணநாளும் ,நிலாக்குட்டியின்ர பிறந்தநாளும் ஒரே நாளில பக்கங்களில இருக்கிற சொந்தக்காரர் அயல்வீட்டு ஆக்களோட சின்னதா ஒரு கொண்டாட்டமும் செய்தம்.வேற என்னத்தைச் சொல்ல.இப்பிடியே ஒரு மாசம் போய்ட்டுது வந்திட்டன்.நிலாக்குட்டி இன்னும் அங்கதான் நிக்கிறாள்.அதுவும் பிளேன் எல்லாம் தற்சமயம் ஓடாம இருக்கெல்லோ.எப்ப கனடா போறாய் எண்டால் தான் தாத்தா பாட்டியோட இருக்கப் போறாளாம்.

ஆனா அந்த மண் வாசம் மட்டும் மனசோட.இன்னும் மனசு அங்கதான் நிக்குது.அடுத்த தரம் போகிற வரைக்கும் அந்த வாசத்தை என்ர மூச்சுக் காத்தில அடக்கி வச்சிருப்பன் !

ம்ம்ம்....போட்டோவில நானும் இருக்கிறன்.
நீங்களே கண்டுபிடிச்சுக்கொள்ளுங்கோ !


ஹேமா(சுவிஸ்)

93 comments:

தமிழ் அமுதன் said...

அருமையான ஒரு பகிர்வு..! உங்கள் இந்த நடைக்குதான் என்ன ஒரு சுவை...!

மிக்க நன்றி..!

தமிழ் அமுதன் said...

உறவுகளின் புகை படங்கள் மனதிற்க்கு நிறைவை தருகின்றது ..!

நசரேயன் said...

நிறைய பாட்டிகள் இருப்பதாலே, நீங்க எந்த பாட்டி ன்னு கண்டு பிடிக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு.

சத்ரியன் said...

படிச்சேன் உங்கள் வழிகளையும், வலிகளையும்.!

படித்துக்கொண்டு வரும்போதே
ஹேமாவையும் (கண்டுப்பிடித்து)பார்த்தேன்.

Anonymous said...

arumai ! neengal yarendru kandupidiththuvitten. sollamaten... suspense!

Anbudan...
osai chella

நிலாமதி said...

சில வாரங்க்களாக ஒரு பதிவையும் காணோம் என்று பார்த்தேன் ஊருக்கு போனீங்களா? ..........கண்டு பிடிச்சன். நிலாகுட்டியுடன் உள்ளவர்...... நீலச்சட்டை அவரேதான் நீங்கள்

Admin said...

நீங்கள் திருகோணமலையில் இருக்கும்போது அறிந்தேன் இலங்கைக்கு வந்திருப்பதாக. விடுமுறையினை நல்லபடியாக களித்திருந்தாலும் உங்கள் மனதின் வேதனை புரிகிறது எல்லோர் வேதனையும் அதுதானே.


பகிர்ந்து கொண்ட விதம் அருமை.

ஜெயா said...

ஹேமா மிக்க மிக்க நன்றி.பதிவை படித்து முடித்ததும் ஊருக்கு போய் வந்தது போல இருக்கிறது.அதுவும் நீங்கள் அதை எழுதிய நடை அருமை. படங்கள் எல்லாம் அழகு. நிலாக்குட்டி கொள்ளை அழகு. அந்தப் படத்துக்கு கீளே உள்ள படத்தில் உள்ளவரின் பார்வையும் super.நீங்கள் அழகாக போஸ் குடுக்கிறிங்க ஹேமா..உங்கள் சிரிப்பை வைத்தே தெரிகின்றது...உங்களினதும் நிலாவினதும் வருகையால் உங்கள் குடும்பத்தவரின் முகம் எல்லாம் ஒரே சந்தோசம் தான்.. படம் பார்க்கும் போது தெரிகிறது.
நாட்டு நிலைமைகள் சில மனசை உறுத்தினாலும் உறவுகளோடு மகிழ்ந்து இருந்த இந்த ஒரு மாத நினைவுகள் மீண்டும் அவர்களைச் சந்திக்கும் வரை தொடரட்டும்.... வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

ஊரிலிருந்து வந்து இத்தனை நாளாகியும் இன்னும் பயணப் பகிர்வைக் காணோமே என்று பார்த்தேன். அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். சந்தோஷங்களை விட வேதனைகள் அதிகம் தெரிகின்றன. உங்களோடு நாங்களும் ஊர் சுற்றிப் பார்த்த உணர்வு..

Ashok D said...

நிறைய விஷயங்களை உள்ளே வைத்துயிருக்கிறீர்கள்... தனி தனியே பாராட்டவேண்டுமென்றால் ஒரு பதிவு வேண்டுமே ஹேமா....

மிரட்ட வேண்டாம்... புன்னகை நிறைய அர்த்தங்கள் கொடுக்கும்...சரி இனி பின்னூட்டங்கள் தொடரும்....

உங்கள் மொழி எனக்குள்ளே புக உப்புமடச்சந்தி நிறைய உதவியது....

(ரொம்ப கஷடமட சாமி உங்க மொழி...இப்ப ஓக்கே ;))

ஜெயா said...

வீட்டில இருக்கிற மரம் மட்டைகள் எல்லாம் வடிவாக இருக்கு.
பலாப்பிஞ்சு
மாம்பிஞ்சு
பப்பாளிப்பிஞ்சு
மாதுளம்பிஞ்சு எல்லாமே பச்சைப் பசேல் என்று அழகு.அழகான படப்பிடிப்பு ஹேமா...

Ashok D said...

//வெயில் எண்டா அளவெடுக்க முடியாத அளவுக்கப்பனே//
வெய்யில் அதிகமா இருக்கறதுக்கு சுவிஸ் காரணம்... எங்களுக்கு ஏஸி ஒரு காரணம்

//எங்களைப்போல வெளிநாட்டுக்காசை மாத்திச் சீவிக்கிற சனங்கள்தான் நல்லமாதிரி உடுத்திப் படுத்து நின்மதியாச் சாப்பிட்டுச் சீவிச் சிங்காரிச்சு சீவிக்கலாம்//
எலலா lower & middle classக்கும் இது பொருந்தும்

//தாற பிச்சையை வாங்கிகொண்டு சூத்தையும் வாயையும் பொத்திக்கொண்டு பேசாம இருக்கோணும்"//
இங்கதான் ஆணிய அடிச்சிங்க ஹேமா..

//தேர்தல் குறித்த பிச்சையெடுப்போடு
அனுமார்களின் அட்டகாசம்.//
இது நம்ம இந்திய நாட்டு அரசியலோடும் பொருந்தும்

//உஷாராய் இல்லையென்றால்
உடையுருவும்
நிர்வாணம் ரசிக்க//
ராணுவம் என்றாலே இது உண்மையாகிவிடும்... இந்திய ராணுவம் உட்பட ... காரணம் காய்ந்து கிடத்தல்

...தொடரும்

தமிழ் உதயம் said...

மிக்க மகிழ்ச்சி... உங்கள் பயணங்களை பகிர்ந்து கொண்டது. எத்தனை சந்தோஷமென்றால், பின்னாலேயே ஒளிந்திருக்கும், அந்த வலி தான் ஒரு வழி பண்ணுகிறது. எல்லோரையும்.

ராஜவம்சம் said...

வலிமட்டும் வாழ்க்கையல்ல நமது வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவோம்

Ashok D said...

நிலா அழகு with pop cuttiங்
குழந்தையில் யார் அழகில்லை?

//5 நாள் சாப்பிட்டன்.அம்மான்ர ஸ்பெஷல் பால் அப்பம். அப்பம் சாப்பிட்டன்.அதுவும் எத்தனயோ வருஷத்துக்குப் பிறகு.அதைப்போல ஒரு நாள் கூழ் காய்ச்சிக் குடிச்சம்.புட்டு இடியப்பம் தோசை இட்லி //
நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு தெரியுது.. நீங்க தமிழ்நாட்டுக்கு வந்துடுங்க.. :)

//வீட்டுக்குப் போனா செய்ற வேலை என்ன தெரியுமோ முற்றம் கூட்டுறதும்.பூக்கண்டுகளுக்குத் தண்ணி விடுறதும்தான்.வேற ஒண்டும் செய்யத் தெரியாது//
நீங்க இவ்வளவு மக்குன்னு எனக்கு தெரியாமா போயிடுச்சே..

பலா, மா, பப்ளி, மாதுளை இதுல நீங்க யாரு... (அதாவது புடிச்சது யெதுன்னு கேட்டேன்...)

//மலையகப் பகுதிக்கு போய் கனநாளாயிட்டுது.இரத்தினபுரி என்கிற அழகான மலையகம்//

எதோ அம்புலிமாமா கதை படிக்கற மாதிரி இருந்தது.

//ஆத்தில குளிச்சோம்//
அடககடவுளே அன்னிக்கி ஒருநாள் தானா????

//றப்பர் காடுகள் முழுக்க எங்கட கையிலதான் அட்டை கடிக்க கடிக்கச் சுத்திட்டு வருவம்//
அப்பவே நீங்க ரௌடிதானா???

//தெரிஞ்சும் தெரியாமலும்.மனநிலை குழம்பியிருந்தாள்.காதல் தோல்வியாம் அவளுக்கு//

அது காதல் தோல்வி இல்ல. சரியான தேர்வு இல்லாம தோத்துயிருக்காங்க... தொடர்ந்து பேசி சரிபடுத்திடலாம்

//அன்றிலிருந்து இன்றுவரை நிமிராமல் குனிஞ்சபடிதான் !பாவங்கள் அந்த மக்கள்//
சமூக பிரச்சனையும் தொட்டுயிருக்கீங்க.

//வெளிநாட்டில எங்களை மதிக்கினம் மரியாதை தருகினம் எண்டு நான் எப்பவும் சொல்றது.உண்மைதான் சுவிஸ்ல எங்களை மதிக்கினம்.எங்கட உணர்வுகளை மதிக்கினம்.எங்கட தேவைகளை நாங்கள் உரிமையோட கேட்டு வாங்கிக்கொள்றம்.எங்கட நாட்டில எங்களுக்கு என்ன மரியாதை ?//

Human values என்பது பல நாடுகள்ல இருக்கு ஹேமா..

கடைசியாக அப்பா அம்மா ம்ட்டும் இருக்கும் போட்டோவில் அவர்களுக்கு இருக்கும் சந்தோஷம், மனநிறைவு.. அதற்கு நீங்கள்/நாம் எவ்வள்வு வேண்டுமானாலும் உழைக்கலாம் மகிழ்ச்சியாக உணரலாம்.

பகிர்வுக்கு நன்றி அன்பு ஹேமா..... :)

என் முதல் பின்னூட்டத்திற்கு இவ்வளவு அர்த்தங்கள். போதுமா...

ஜெயா said...

ஹேமாப் பாட்டி மனசில கலட்டியடிக் கிழவியின் கிணறு போல குப்பையும் குச்சியுமா குழம்பிக் கிடக்கு எண்டு பொய் தானே சொன்னிங்க.. போட்டோ பாத்தா அப்பிடி தெரியலையே.... கலக்குறிங்க பாட்டி..
அம்மா அப்பாட ஐம்பதாவது கல்யாண நாளையும் நிலாக்குட்டியின் ஐந்தாவது பிறந்த நாளையும் ஒரே நாளில் கொண்டாடி அசத்திட்டிங்க..எலாவற்றையும் அழகாக படங்களுடன் பதிவு இட்டதுக்கு மீண்டும் நன்றி ஹேமா....

- இரவீ - said...

//மோனை பிள்ளையள் எப்பிடியப்பு இருக்கிறியள்.//
மோனை பிள்ளையள் எப்படி என்டு எங்ககிட்ட கேட்டா??? கேக்கவ தப்பா நினைக்க மாட்டாக???

- இரவீ - said...

//எல்லாரும் சுகம்தானே !//
சுகம்...! சுகம்...!!! அங்க எப்டி?

- இரவீ - said...

//இந்த ஜெயாக்குட்டியும்//
நோ கமென்ட் ... :)

//உந்த ரவிப் பொடியும் எப்பவும் ஆக்கினைக்கு மேல ஆக்கினையாக் கிடக்கு//
நாங்க என்னத்த ஆக்கினம்?

- இரவீ - said...

//.ஊருக்குப் போய்ட்டு வந்திருக்கிறயணை.ஏதாச்சும் கிறுக்கு கிறுக்கெண்டு//
உங்க கிறுக்கே இவ்ளோ அழகா?

- இரவீ - said...

//.அதால இருக்கிற ரெண்டொரு போட்டோக்கள் மட்டும்தான்.வீடீயோ சரியாக்கின பிறகு ஒரு நாளைக்கு பதிவில போடுறன்.சரியோ !//
பொய் தான?

- இரவீ - said...

//6 வருஷத்துக்குப் பிறகுதான் வீட்ட போனனான்//
6 வருசமா???? எல்லாம் மாமாங்க கணக்கில தான் ...

- இரவீ - said...

//ஆனாலும் ஒரே நுளம்படா பெடியா.//
சுவிஸ் ல இருந்து வந்தவகல பாக்க வந்த நுளம்ப இப்படி தப்பா பேசப்பிடாது...

- இரவீ - said...

//உந்த ரவிப்பொடியன்ர கும்மிக்கு அங்க ஒருக்கா கொண்டு போய் விட்டிட்டு வரோணும்.//
நான் வந்தா நுளம்ப ஓடிபோகுமென்டு உங்ககு எப்படி தெரியும் ?

- இரவீ - said...

//ஐயா கையையும் காலையும் தூக்கி வச்சுக்கொண்டு வயலின் வாசிப்பார்//
யானை மிதிச்சா கூட முழிச்சு பாக்க மாட்டோம்... அய்யோ... அய்யோ ...

- இரவீ - said...

//அதோட வெயில் எண்டா அளவெடுக்க முடியாத அளவுக்கப்பனே.//
எதுக்கு வெயில அளவெடுக்கனும்???
வேலை இல்லை என்டா இப்படி தானோ...

- இரவீ - said...

//கால் நிலத்தில வைக்கமுடியேல்லையப்பு.//
அப்பறம் எப்புடி ....??? சரி விடுங்கோ...

- இரவீ - said...

//நான் நிக்கேக்க எலக்க்ஷன் வேற//
கொஞ்சம் உட்காந்திருக்களாம்... ஒரு நாள் முழுக்கவா நின்னியள்?

- இரவீ - said...

//வால் முளைக்காத ஒரு ஆள்தான் அவள்//
அவளும் உங்களை போளவா???

- இரவீ - said...

//இதில வேற அவவைக் குரங்கு எண்டா கோவம் வராது வைட் மங்கியெண்டா(ந்கிடெ மொன்கெய்)பாக்கோணுமே அவவின்ர கோவத்தை//
அவளுக்கு கோவம் வரும் போது உங்களுக்கு வராது... உங்களுக்கு வரும் போது அவளுக்கு கோவம் வராது. Good.

- இரவீ - said...

//தாத்தா இந்த டோக்கியையெல்லாம் கட்டி வைக்கிறீங்கள்.ஏன் உந்த நுளம்பையெல்லாம் பிடிச்சுக் கட்டி வைக்க மாட்டீங்கள்" எண்டு."ஏன் நாய் எல்லாம் வெளில படுக்குது.ஏன் ஸ்கூலுக்குப் போறதில்ல.ஏன் வெளில படுக்குது?"இப்பிடி அவவுக்கு பெரிய சந்தேகங்கள்.//
உங்கல எதுக்கு கட்டி வைக்க சொன்னா? நீக்க ஏன் வெளில படுத்தீங்க??? ஆமா ஏன் ஸ்கூலுக்குப் ... சரி விடுங்க வாத்தியார் பிள்ளை என்டா அப்டி தான்.

- இரவீ - said...

//சரியான வெயில்.அதால அங்கால இங்கால எண்டு எங்கயும் போகப்பிடிக்கேல்ல//
எங்கட ஊரில தப்பான வெயில்... அதால இங்கால அங்கால எண்டு பொய்வரோம்...

- இரவீ - said...

//கோணேசர் கோயிலுக்கும் காளிகோயிலுக்கும் போனன்.இந்த முறை உடுப்புகள் கூட வாங்கேல்ல//
உடுப்பு உங்களுக்கா இல்ல உங்க சிலைக்கா... ச்ச காளிக்கா?

//ஏனோ எதிலயும் ஒரு பிடிப்பு இல்ல.//
வெயில்ல மெலின்சு போய்டீங்களோ???

- இரவீ - said...

//நான் பொதுவாக் காலமையில சாப்பிடமாட்டன்.//
தேர்ந்தெடுத்து சாப்டுவீங்கலோ???

- இரவீ - said...

//எனக்கெண்டா சாப்பாடு அல்ர்ஜி//
நீங்க 4-5 போதும்னு சொன்னதுமே புறிது... உங்களுக்கு சாப்பாடு அல்ர்ஜி என்டு.

- இரவீ - said...

//எனக்காகச் செய்துபோட்டு அவையளே சாப்பிடுவினம்.//
மீதம் வேற வச்சியளா? பெரிய மனசுதான்.

- இரவீ - said...

//இனி வரமாட்டன் இப்பிடியான கதைகள் கதைச்சா எண்டு சண்டை போட்டுக்கொண்டு வந்திட்டன் நான்//
காக்கா கதை பிடிக்கலை என்டா நரிக்கதை கேக்கலாம் தானே...???

- இரவீ - said...

//நான் வீட்டுக்குப் போனா செய்ற வேலை என்ன தெரியுமோ முற்றம் கூட்டுறதும்.பூக்கண்டுகளுக்குத் தண்ணி விடுறதும்தான்.//
வீட்டுல முற்றம் , பூக்கண்டு இல்லை - அதனால இப்படி ஒரு பேச்சு...

- இரவீ - said...

//வேற ஒண்டும் செய்யத் தெரியாது//
ஒண்டும் செய்யத் தெரியாது... இதுல வேற எதுக்கு?

- இரவீ - said...

//படிச்ச பள்ளிக்கூடம் போனோம்.பூட்டிகிடந்தது.//
சின்ன பிள்ளயளா இருந்தப்ப சொன்ன அதே பொய் தான இது...

- இரவீ - said...

//என்ர தங்கச்சி ஒரு வால்.அது தூண்டிவிட நாங்கள் மெல்லமா வெளில போய்டுவம்//
யாரு நம்பறாக்களோ இல்லயோ நான் நம்பிட்டேன்.நம்பிட்டேன்.நம்பிட்டேன்.

- இரவீ - said...

//அந்தக் கதவோட கதைச்சன்.அழுகையே வந்திட்டுது.//
கதவுக்கா???.

- இரவீ - said...

மிக்க நன்றி.

- இரவீ - said...

அருமயான பதிவு ...

- இரவீ - said...

கோவிக்காதீங்க ... இன்னும் ஒருவருசம் கமென்ட் போட தேவை இல்லைனு நினைக்கிறேன்.

- இரவீ - said...

மிக்க நன்றி..!

- இரவீ - said...

அருமை அருமை!

- இரவீ - said...

//நம்புவதற்காகவோ
ரசிப்பதற்காகவோ
எழுதப்படவில்லை இது.
//
வம்புக்காக???

- இரவீ - said...

மிக்க நன்றி..!

பித்தனின் வாக்கு said...

/// நிறைய பாட்டிகள் இருப்பதாலே, நீங்க எந்த பாட்டி ன்னு கண்டு பிடிக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு. ///

கரெட்க் ஹேமு, எனக்கும் அதே பிராபளம்தான், இத்தனை பாட்டிகளுக்கு நடுவில் எப்படி உன்னை அடையாளம் காண்பது?
ஆனா நான் கண்டுபிடித்து விட்டேன். அப்பா அம்மா கல்யாண நாள் விழாவில் அப்பாகூட இருக்கீங்களே.
நிறைய சோகங்களுக்கிடையில் நிறைய சந்தோசங்களுடன் இருந்து வந்துருக்கின்றீர்கள். இந்த இடங்கள் பார்ப்பதுக்கு கேரளா போன்றுதான் இருக்கின்றது. சுற்றிலும் மலைகள், டீ எஸ்டேட்ட்கள். குளிர் கலந்த காற்று, மனம் நிறையும் பசுமை என அற்புதமாக உள்ளது. ஆமா அந்த மாங்காயில் எனக்கு ரெண்டு பொறித்து வந்தீர்களா? நல்ல பகிர்வு நன்றி. இன்னமும் தொடரும் என்று எதிர்பார்க்கின்றேன்.

குழந்தை கொள்ளை அழகு, திருஷ்டி சுத்திப் போடவும். நிலா நிலா ஓடி வா. நான் நுளம்பி எல்லாம் புடிச்சு தருவேன்.

ஆப்பம் பதிவு போட்ட போது கூட சொன்னீர்கள், ஆப்பமும் பால் பாசயம் பற்றி, இப்ப திருப்தியா சாப்பிட்டீர்களா?

//எனக்கெண்டா சாப்பாடு அல்ர்ஜி//

சாப்பிட்ட அப்புறமா? யார்தான் மறுபடியும் சாப்பிட முடியும்.

//நான் பொதுவாக் காலமையில சாப்பிடமாட்டன்.//

பரவாயில்லை, எனக்கும் காலையில் சாப்பிடும் பழக்கம் இல்லை.

//கால் நிலத்தில வைக்கமுடியேல்லையப்பு.//

நீங்க எதுக்கு வைக்கீறீங்க?. நிங்க எப்பவும் கால் தரையில் படாமல் அந்திரத்தில் , இராத்தியில தான் நடஃப்பீங்கன்னு எங்க அம்மா சொன்னா? வெள்ளை வெள்ளைரென்று காத்து மாதிரி மிதந்து வருவீங்கன்னு அம்மா பேய்க் கதை சொல்லும் போது சொல்ல்யிருக்கா. இப்பதான் உன்மைன்னு தெரிஞ்சது.

கலா said...

ஹேமா இப்பதான் நேரம் கிடைத்துப்
பார்த்தேன் முதலில் என்னிடம் சொன்ன
சொல்லைக் காப்பாற்றி விட்டீர்கள்
மிக்க நன்றி {ஞாபகமிருக்கா?}

மன வேதனைகள் கூடிய பயணம்தான்!
உங்களுக்கு மட்டுமல்ல,,,அங்கு போகும்
{தாய் நாட்டுக்கு} அனைவருக்கும்
நாம் வாங்கி வந்த வரம் அப்படி!!

நான் உங்களைக் கண்டு பிடித்து
விட்டேன்.....
அதிக வித்தியாசம் புரியுமென
நினைக்கிறேன்.நன்றி ஹேஸ்

மேவி... said...

வலிகளை மறந்துவிட்டு ஹேமா(சுவிஸ்) யாக இல்லாமல் வெறும் ஹேமாவாக சந்தோஷமாய் சில நாட்கள் வாழ்ந்து விட்டு வந்து இருக்கீங்கன்னு நம்புறேன்.

சாட் ல நீங்க சொன்னதை வைத்தும் பதிவில் எழுதிருப்பதை வைத்தும் உங்களை அடையாளம் கண்டேன் :)

இன்னும் பல விஷயம் தோன்றுகிறது....... பிறகு சொல்கிறேன்

ஜெய்லானி said...

படிக்கும் போது உங்க கூடவே இருந்து பாத்த உணர்வு வருது. கொஞ்சம் சந்தோஷம் கொஞ்சம் சோகம்.

சிநேகிதன் அக்பர் said...

படங்களும் பகிர்வும் அருமை ஹேமா

Priya said...

ரொமப ஜாலியா இருந்திருக்கிங்கன்னு படிக்கும்போதே புரியுது. படங்களும் அழகா இருக்கு!

Anonymous said...

உருக்கமான கவிதை சகோதிரி.

லெமூரியன்... said...

ஹேய் ஹேமா......ஊருக்கு போயிட்டு வந்தீங்கன்னு சொன்னதும் சந்தோசமா இருந்தது.......
பொழுதுகள் ரொம்ப இனிமையா கடந்து போயிருக்கும்னு புகைப்படம் பார்த்து தெரிந்து கொண்டேன்

ஹேமா said...

//ஜீவன்(தமிழ் அமுதன் ) அருமையான ஒரு பகிர்வு..! உங்கள் இந்த நடைக்குதான் என்ன ஒரு சுவை...!//

வாங்க ஜீவன்.என் வழக்கு மொழியை ரசிச்சிருக்கிறீங்க.நன்றி.என்றாலும் எல்லாருக்கும் விளங்குறதில்லையோ ன்னு ஒரு சந்தேகம்.ஏன்ன ஓட்டுக் குத்திட்டு ஒண்ணும் சொல்லாமப் போயிருக்காங்க ரொம்பப் பேர். இல்லாட்டி ரசிக்கிற மாதிரி சிரிக்க சிரிக்க எனக்கு எழுத வரலையோ !

//உறவுகளின் புகை படங்கள் மனதிற்க்கு நிறைவை தருகின்றது..//

உறவுகள் உங்க ஊர்க்காரராகவும் உறவுகளாகவும்கூட இருக்கலாம் ஜீவன் !

ஹேமா said...

//நசரேயன்...
நிறைய பாட்டிகள் இருப்பதாலே, நீங்க எந்த பாட்டி ன்னு கண்டு பிடிக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு.//

நசர்...உங்களுக்கும் கண் தெரியாமப் போயிடிச்சா !அப்போ என்னைக் கண்டுபிடிக்கக் கஸ்டம்தான் !

ஹேமா said...

//சத்ரியன் ...
படிச்சேன் உங்கள் வழிகளையும், வலிகளையும்.!//

சத்ரியா...எங்கள் இயல் வாழ்வைத்தான் சொல்லியிருக்கிறேன்.
இதுவே வலியென்றால் !

ஹேமா said...

ஓசை செல்லா...எங்கேயோ கேட்ட ஞாபகம் இந்தப் பெயர்.உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.என்னைக் கண்டு பிடிச்சீங்களா !

ஹேமா said...

//அஷோக்...ரொம்ப கஷடமட சாமி உங்க மொழி...இப்ப ஓக்கே ;))//

அஷோக் ஒரு கஸ்டமும் இல்ல.எப்பவும் என் பதிவுகளுக்கு ஆச்சரியக்குறி மட்டும் போடாம நல்லாப் படிச்சு பின்னூட்டம் போடுங்க.அப்போ சுலபமாப் படிச்சிடலாம்.

ரொம்பத்தான் லொள்ளு வில்லனுக்கு.
ஆத்தில குளிச்சம்ன்னா அர்த்தம் நீங்க சொன்னதில்ல.எனக்குப் பலாப்பழம் பிடிக்கும் அஷோக்.

நிறைய ரசிச்சுப் படிச்சிருக்கீங்க.
அத்தனைக்கும் கருத்துத் தெளிவாய் தந்திருக்கீங்க.அப்போ என்னோட யாழ்/தமிழ் புரிஞ்சிருக்குன்னு அர்த்தம்!

ஹேமா said...

நிலா வாங்கோ..வாங்கோ.என்னப்பா நீங்க ரகசியம் எல்லாம் எல்லாம் சொல்லக்கூடாதெல்லோ !

***********************************

சந்ரு...கலா சொல்லியிருந்தா.அங்கு கணணி வசதி வீட்டில் இல்லை.
இங்கு வந்துதான் கலாவின் மெயில் பார்த்தேன்.பரவாயில்லை.அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்.
அன்புக்கு நன்றி சந்ரு.

ஹேமா said...

ஜெயா வாங்கோ.சந்தோஷமா இப்போ ?உங்களுக்காகவும் இரவீ க்காகவும்தான் பதிவு எழுதலாம் என்று யோசித்தேன்.ஏனென்றால் விஷேசமாக எதுவும் எழுத இல்லையென்று நினைத்திருந்தேன்.

உண்மைதான் ஜெயா.என்னதான் ஆயிரம் மனக்கஸ்டங்கள் இருந்தாலும் உறவுகளைக் கண்டவுடன் எல்லாமே போய்விடுகிறது.அடிக்கடி செல்லச் சண்டைகள் வந்தாலும் நிறைவான சந்தோஷம்தான்.வீட்டை விட்டு வெளியில் வரும்போதுதான் சமூகக் கவலைகள் ஒட்டிக்கொள்ளும்.

இன்னும் நிறைய யாழ்/ மொழி வழக்குத் தமிழ் மறந்து போயிருக்கிறேன்.

இரவீ கேட்டிருந்தார்.கோபம் வந்தால் திட்டுவது எப்படி என்று.எனக்கு வருதில்லை ஜெயா.
"கோதாரில போவான்,
கட்டையில போவான்.
நாசமாய்ப்போக.ஆட்டக்காரி.திமிர் பிடிச்ச குமரி என்பார்கள்.
இன்னும் தெரிஞ்சால் சொல்லுங்கோ.

அதுசரி பல்லாங்குழி விளையாட்டுக்கு எங்கள் ஊரில் வேற ஏதோ சொல்வார்களே.
ஞாபகமிருக்கா ஜெயா.

கலா நீங்களும் தெரிஞ்சாக் கொஞ்சம் சொல்லுங்கோ.

ஹேமா said...

நன்றி ஸ்ரீராம்.உண்மை எழுதுவது என்றால் இப்படிச் சின்னச் சோகம் கலந்துதான் எழுத வருது.பொய்யாய் நாங்கள் சந்தோஷமாயிருகிறோம்ன்னு எழுத முடியாது என்னால்.நாட்டின் உணர்வு.ஏன் நாங்கள் இப்படி,அந்நிய தேசத்தில் அகதிகளாய் என்று எங்கள் எதிர்காலம் சிந்திக்காமல் இருந்தால் எல்லோரையும் விட சந்தோஷமாய் இருப்பவர்கள் நாங்கள்தான்.அப்படி என்னால் உணர முடியவில்லை ஸ்ரீராம் !நன்றி உங்கள் தொடர்ந்த அன்புக்கு.

***********************************

தமிழ்...ஸ்ரீராமுக்குச் சொன்ன விஷயம்தான் உங்களுக்கும் சொல்ல முடிகிறது என்னால்.என்றாலும் எழுதுவதாலும் அவற்றை உங்களோடு பகிர்வதாலும் நானும் சந்தோஷமாய்த்தான் இருக்கிறேன்.
நன்றி தமிழ்.

ஹேமா said...

வாங்க ராஜவம்சம்.ரொம்பக் காலமாச்சு உங்களைக் கண்டும்.சுகம்தானே.நீங்களும் பதிவுகள் போட்டு நாளாச்சு.போடுங்க வரேன்.

//ராஜவம்சம் ...
வலிமட்டும் வாழ்க்கையல்ல நமது வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவோம்//

நிச்சயம் எங்கள் வாழ்வு பயனுள்ளதாகவே போகிறது.
அடிபட்ட வடுக்கள்கூட இன்னும் வலிமையைத்தான் தரும்.

ஹேமா said...

ரவி.....அப்பாடி போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமான்னு கேட்டுக் கேட்டு இப்பிடியொரு பின்னூட்டம்.நானும் அண்ணைக்குப் பாத்திட்டே இருக்கேன்.வருது வருது,வந்திட்டேயிருக்கு.நிறைய நேரமும் குஷியும் கிடைச்சிருக்கு உங்களுக்கு.நன்றி நன்றி குசும்பு ரவி.

ம்ம்ம்...நானும் சுகம்தான்.
ஆக்கினைன்னா கரைச்சல்ன்னு அர்த்தம்.ஆக்குறது இல்ல.

நான் பொய் சொல்றதெல்லாம் கண்டு பிடிக்கிறீங்க.பொய் இல்ல.வீடியோ சரியா நல்லா வந்தா பதிவில போடுவேன் உண்மையா.நுளம்பு கடிக்கிறதுகூட சொரணை இல்லாம தூங்குறா ஆளா நீங்க.அதானே உங்க புளொக்கரும் தூங்குது.உங்களுக்கும் வால் முளைச்சிருக்காமே.உங்க பக்கத்து கட்டில்காரர் சொன்னார்.உண்மையா ?

பாருங்க பாருங்க என்னமோ எல்லாம் சொல்லிச் சொல்லி கடைசில என்னை எங்க நாய்த்தம்பியோட சேர்த்திட்டீங்க.
அது பரவாயில்ல.நன்றியுள்ள ஜென்மம்தானே !

வீட்ல பூக்கண்டு இல்லையோ.
அதுசரி.இவர்தானே வந்து பாத்தவர்.

கொய்யால....உங்கட பின்னூட்டத்துக்கு நான் பதில் தரோணும் எண்டா எனக்கு விசர் பிடிச்சிடும் அப்பனே.ஆளை விடுங்கோ.பெடியா நிறைய நன்றியடா.அடுத்த பதிவில பாத்துக்கொள்றன்.

ஹேமா said...

வாங்க வாங்க சுதாகர்.நிலா வளர்ந்து உங்க பின்னூட்டமெல்லாம் படிப்பாள்.அதனால கவனமா எழுதுங்க.அப்புறம் அவள் உங்களைத் திட்டினா நான் பொறுப்பு இல்ல.
சொல்லிட்டேன்,

//பித்தனின் வாக்கு...நீங்க எதுக்கு வைக்கீறீங்க?. நிங்க எப்பவும் கால் தரையில் படாமல் அந்திரத்தில் , இராத்தியில தான் நடஃப்பீங்கன்னு எங்க அம்மா சொன்னா? வெள்ளை வெள்ளைரென்று காத்து மாதிரி மிதந்து வருவீங்கன்னு அம்மா பேய்க் கதை சொல்லும் போது சொல்ல்யிருக்கா. இப்பதான் உன்மைன்னு தெரிஞ்சது.//

என்ன ஆளாளுக்கு என்னை மாத்தி மாத்திச் சொல்றீங்க.நசர் பாட்டியாம்.
ரவி நாயாம்.நீங்க பேய் பிசாசுன்னு ஆவி சொல்ற மாதிரி இருக்கு.
இருந்துகோங்க எல்லாரையும் கவனிச்சுக்கிறேன் !

ஹேமா said...

கலா..நீங்க வசந்த் போல ஹேம்ஸ் சொல்ல வந்தீங்களா.வசந்தின் ஞாபகம் கொண்டு வந்திட்டீங்க.

எங்கள் வரங்களை நாங்களே அனுபவிக்கிறோம்.என்ன செய்யலாம்.
விதி !

ஏன் கலா ஏதாவது மனசு சரில்லையா.இல்லை நேரமில்லையா.
முன்பை விட உங்கள் பின்னூட்டங்களில் உஷார் குறைந்திருக்கிறதே !

***********************************

வாங்க டம்பீ...நாங்களெல்லாம் வெள்ளை மனசோட இருக்கோம்.
உங்களைப்போல சாப்பிடாம ஒல்லியா பல்லி மாதிரியா இருக்கோம்.உடம்பு வைக்கிறதுக்கும் ஒரு தெளிவான மனசு வேணும்ல்ல !

***********************************

ஜெய்லானி வாங்க.நான் தனித்தவள் இல்லையே இப்போவெல்லாம்.ஒரு பெரிய கூட்டமே என்னோடு பயணித்தபடிதானே !நன்றி ஜெய்.

ஹேமா said...

நன்றி அக்பர் வருகைக்கும் ரசிப்புக்கும்.கவிதைப் பக்கமும் வரலாமே !

***********************************

ப்ரியா..உறவுகளைத் தேடி தாய்மண்ணுக்குப் போவது என்பதே சொல்லில் முடியாத சந்தோஷம்தானே.
அனுபவித்தேன்.நன்றி தோழி.

***********************************

வணக்கம் ஆன்ந்த்.எப்பிடி இருக்கீங்க.சுகம்தானே நீங்களும் வீட்ல எல்லாரும்.ரொம்பக் காலமா வாறதில்ல என் பக்கம்.ஏன் ?

அத்திரியையும் சுகம் கேட்டேன் சொல்லுங்க.

கவிதையை ரசித்துச் சொல்லியிருக்கீங்க.நன்றி ஆனந்த்.
அது தேர்தல் நேரம் அங்கிருக்கும்போது எழுதினது.தேர்தல் முடிந்துவிட்டதால் கவிதைப் பகுதியில் போடவில்லை.இங்கு பொருத்தமாக இருந்ததால் பதிவிலிட்டேன்.

***********************************

ஹாய்...ஹாய் லெமூரியன் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.உங்க பதிவுகள் பார்க்க அடிக்கடி வருவேன்.
இப்போதைக்கு ஒண்ணும் காணல.சீக்கிராம போடுங்க.வருவேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான நினைவுகளோடு உங்களுடன் நாங்களும் பயணித்தது சந்தோசமாக உள்ளது. ஊரிலிருந்து திரும்பிவந்ததும் ஊர்ஞாபகமா இருக்கும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகும். நல்ல பகிர்வு ஹேமா.

விஜய் said...

ஹேமாவை நானும் கண்டுபிடிச்சுட்டேன்

நாமெல்லாம் குண்டா இருந்தாலும் வெள்ளை மனசு காரங்க தானே

விஜய்

சத்ரியன் said...

ஹேமா,

‘கொள்ளு’ ஒரு மூட்டை அனுப்பி வைக்கட்டா?

(தினமும் ஒரு கப் கொள்ளு சாப்பிட்டா ஸ்லிம்மா இருக்கலாம்னு எங்கேயோ படிச்ச ஞாபகம்.....) உனக்கு ஞாபகமிருக்கா?

மின்மினி RS said...

அருமையான நினைவுகளை பகிர்தல் மனதுக்கு இதமாக இருக்கும்.

ஜெயா said...

யாழ் தமிழ் கேட்டு ரொம்ப நாளாகி விட்டது ஹேமா. யாழ் பேச்சுத்திட்டுக்களும் தான்..நீங்கள் சொன்னதை விட...
குறுக்காலை போவான்..இவன் கை கால் இழுத்துச்சாவான்..வேற இப்போதைக்கு நினைவில் வரவில்லை.. பெண்களை மிகவும் ஓவரா திட்டுவாங்கள்..அதெல்லாம் நினச்சாலே இப்ப சிரிப்பா வரும்.எழுதவும் முடியாது.
பல்லாங்குழி விளையாட்டுக்கு எங்கள் ஊரில் ”பாண்டி” என்று தான் சொல்லுவார்கள்... சரியோ தெரியவில்லை...
ஆண்களை சாதாரணமாக அது ஒரு பரதேசி பன்னாடை, மடச்சாம்பிறாணி
என்று திட்டுவார்கள்...

Nathanjagk said...

ஐ! தேவிகா-ன்னா எனக்கு ​ரொம்பப் பிடிக்கும்!

கலா said...

நாமெல்லாம் குண்டா இருந்தாலும்
வெள்ளை மனசு காரங்க தானே\\\\
விஜய்! எங்கெழுக்கெப்படித் தெரியும்
வெள்ளையா?கறுப்பா? என்று!
நீங்களே ஒரு மருத்துவர் அவருக்கு
உடல் குறைப்புப் பற்றிப் பேசாமல்...
உங்களிருவருக்கும் ஒரு சமாதானமா???

{இருவரையும் நான் துரத்தித்,துரத்தி
ஓடுவேன் என்னிடம் மாட்டாமல்
ஒரு அரைமணி நேரம் ஓடுங்கள்
பார்கலாம்....} பரிசில்லை சம்மதமா?



கொள்ளு’ ஒரு மூட்டை
அனுப்பி வைக்கட்டா\\\\\
கண்ணழகர்,கறுப்புத் தங்கம்
என்றெல்லாம் நீங்கள்{இல்லாத ஒன்றுக்கு}
பட்டம் கொடுக்க...அது எப்படி ஆப்பு
வைக்குது உங்களுக்கு!இப்பவாவது தங்கத்தை
உரசிப்பார் ஹேம்ஸ்

ஐ! தேவிகா-ன்னா
எனக்கு ரொம்பப் பிடிக்கும்\\\\
இது ரசனையுள்ள இதயம்
உன்னை ஒரு உச்சாணிக்கே
கொண்டு போய்விட்டார் பார்!
நன்றி இதயமே!!

விஜய் said...

@ கலா

டாக்டர் ஆகவேண்டி ஆசைப்பட்டேன், ஆனால் ஆகமுடியவில்லை, என்னை டாக்டராக ஆக்கியதற்கு நன்றி

கண்டிப்பா வெள்ளை மனசுகாரர்களால் ஓட முடியாது. நீங்க தான் ஜெயிப்பீங்க

ஹா ஹா ஹா

விஜய்

தமிழ் மதுரம் said...

அக்கா... காதோடை சேர்ந்து தோடும் வரப் போகுது? உதென்ன கிணத்துக் கப்பிக்குப் போடுற வளையத்தையே காதிலை மாட்டியிருக்கிறியள்!

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT! GREETINGS FROM NORWAY!
MALAYAGA TAMILER OUR RELATIVES ALWAYS!

ஹேமா said...

வாங்க ஸ்டார்ஜன்.
அன்புக்கு மிகவும் நன்றி.

விஜய் ...நீங்க எங்க கண்டு பிடிச்சீங்க !டாக்டர் விஜய் வாழ்க.வளர்க.


சத்ரியா....கண்ணு வைக்காதீங்க.கொள்ளு குதிரைக்குத்தானே குடுக்கிறதாம் !


நன்றி மின்மினி வரவுக்கும் அன்பான வார்த்தைக்கும்.


ஜெயா...நன்றி தோழி.ஒரு பதிவர் கேட்டிருந்தார் பல்லாங்குழியை எங்கள் ஊரில் எப்படிச் சொல்வார்கள் என்று.எனக்குத் தொண்டைக் குழிவரைக்குமே இந்தப் பெயர் நிக்குது.
வரவே மாட்டேங்குது.வெளில கொண்டு வந்ததுக்கு நன்றி.

அழகா திட்டியிருக்கீங்க ரவியை.
நன்றி நன்றி ஜெயா.

ஹேமா said...

ஹாய்....ஜே எங்க இங்க வந்தாங்க தேவிகா.அதோட செத்திட்டாங்களாமே அவங்க.அந்தக் கண்ணாடி கழட்டி வச்சிட்டுச் சொல்லுங்க !"கண்ணைத் திறக்கணும் கருப்புசாமி".



கலா...வுக்கு உடம்பு முழுக்க கொழுப்பு.ஆளைப் பாருங்க !எங்காச்சும் மாட்டிவிடணும்ன்னே இருக்கீங்க.எனக்கிருக்கிருக்கிற வேலை போதாதா.ஓடணுமா வேற !

பாவம் கலா எங்க கண்ணழகன்.
கண்ணு வைக்காதீங்க !ஜெகாக்கு கண்ணு சரியாத் தெரில.ஏன்னா கருப்புக் கண்ணாடி போட்டா அப்பிடித்தான் !


கமல்......ஓமப்பு.எங்கட கோண்டாவில் கிணத்தில கப்பிதான் போட்டிருந்தனாங்கள்.வளவை விக்கலாமெண்டு அம்மா சொல்றா.
அதுதான்ரா அப்பு கிணத்தின்ர ஞாபகமா வளையத்தைக் கொண்டு வந்திட்டனடா பெடியா !

ஹேமா said...

மிக்க மிக்க நன்றி சண்.நல்லையா அவர்களுக்கு.உங்கள் வரவும் கருத்தும் மனதுக்குச் சந்தோஷமாயிருக்கு.

NILAMUKILAN said...

உங்கள் கவிதைகள் போல நிலாவும் அழகு. நிலாவுடன் தனியே மலையகத்து பச்சையில் இருப்பவர் நீங்கதானே?

Jerry Eshananda said...

சிறு வயதில் சிலோன் ரேடியோவில் நிகழ்சிகளை ரசித்து இருக்கிறேன்,சமீப காலங்களில் கனடிய தமிழ் வானொலி இணையத்தில் கேட்பேன்,அந்த உயிர்ப்புள்ள மொழியில் பேச்சு நடையில் இந்த பதிவை எழுதியது கண்களில் ஈரத்தையும் ,நெஞ்சில் கணத்தையும் ஒரு சேர தந்தது,அம்மா,அப்பாவுக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை,வணங்குகிறேன்,நிலாக்குட்டிக்கு என் கட்டி முத்தங்களை தருகிறேன்

அன்புடன் நான் said...

நெகிழ்வான பதிவு.... ஏக்கங்களும் இன்றைய யதார்த்த்மும் நிறைந்த பதிவு.

என்னசெய்ய காலங்கள் மனிதர்களை நொறுக்கி விடுகிறது.

உங்க மூச்சிக்குள்ளே வைத்திருங்கள்.... அந்த மண்ணின் வாசத்தை... அது உங்கள நல்லா வைத்திருக்கும்.....

அப்பா அம்மா வுக்கு 50 தாவது மணநாள் வாழ்த்துக்கள்..... நிலாவுக்கும் வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி said...

உப்புமடச்சந்தி-என்ன ஒரு அழகான பெயர்!வேரின் வாசம் மணக்கும் பெயர்.பின்னோக்கி உங்களுடன் உங்கள் மண்ணில் புரண்டு உங்கள் தவிப்பைப் பருகினேன்.தீரவில்லை என் தாகம்.உங்கள்ட அம்மைக்கும் அப்பாக்கும் எண்ட பிரியங்கள்.நீண்ட காலம் ஒங்களோடு இருக்கணும். உங்கட பதிவை முதன் முறை படிக்கிறேன்.மறுபடியும் வருவேன் சாவதானமாய்.
ஒங்கட செல்ல மகளோட இருக்கியள்.கண்டு கொண்டனம் எளிசாய் ஹேமு.

ஹேமா said...

நன்றி முகிலன்.நிறைய நாளுக்கு அப்புறமா.சுகம்தானே !அன்புக்கு நன்றி.நிலா சுகம் சொல்றா உங்களுக்கு !

***********************************

ஜெரி வாங்கோ வாங்கோ எங்க கனநாளாக் காணேல்ல.அப்பா அம்மாக்கும் நிலாக்குட்டிக்கும் உங்க அன்பைச் சொல்லிட்டேன்.

***********************************

அரசு...வாங்கோ.மண் மணம் அம்மா வாசம்போல.செத்தாக்கூட என்ன்னோட இருக்குமோ என்னவோ.
என் மண்ணைன் இழப்பு சொல்லில் வார்த்தைகளில் எழுத்துக்களில் சொல்ல முடியாத அளவு எனக்குள்ள.இயலாமை.

அன்புக்கு நன்றி அரசு.உங்கள் துணையும் சுகம்தானே.உங்கள் அன்பை வீட்டில் பார்த்திருப்பார்கள்.

***********************************

வாங்கோ வாங்கோ வரணும் சுந்தர்ஜி.உப்புமடச் சந்தி எங்க ஊர் கோண்டாவில்.எங்க வீடு இருக்கிற இடத்துச் சந்தியின் பெயர்.
என்னோடேயே வைத்திருக்க ஆசையில பெயரையாவது வச்சிருக்கிறன்.சந்தியில கதைச்சுப் பேச வந்திடுங்கோ.
குழந்தைநிலாலதான் பதிவுகள் அடிக்கடி வரும்.அங்கயும் வாங்கோ.

நீங்க வந்ததிலயும் உங்களைச் சந்திச்சதிலயும் சந்தோஷம் சுந்தர்ஜி.
அதுக்கு மதுமிதாவுக்கும் நன்றி.

ஐயோ..நீங்களும் என்னைக் கண்டு பிடிச்சிட்டியளோ !

கானா பிரபா said...

ஆகா

இப்பதானே கண்டேஏஏஎன் ;)

சொல்லாமக் கொள்ளாம ஊருக்கெல்லாம் போட்டு வந்திருக்கிறியளா, குடுத்து வச்ச ஆளப்பா நீங்கள்

ஹேமா said...

வாங்கோ வாங்கோ பிரபா.எப்பிடி இந்தப்பக்கம்.சுகம்தானே. காத்தடிச்சிடுதோ.ஆளைப் பாருங்கோ.
இங்கயெல்லாம் வர உங்களுக்கு எங்கயப்பு நேரம்.இப்பவெண்டாலும்
வந்தீங்களே.சந்தோசம்.

அடிக்கடி வந்து கிந்து போனாலெல்லோ சொல்லிப்போட்டு ஊருக்குப் போவன்.சரி சரி இனிச் சொல்லிப்போட்டுப் போவன்.

ஈழத்து முற்றத்தில ஒண்டுமே பதிவு போடேல்ல.அதுவுமொரு பயமெனக்கு.

சின்னபாரதி said...

ஹேமா , பயண்க்கட்டுரை உங்களுக்கு வராது என்று இனி சொல்ல வேண்டாம் . உங்களோடு 91+1 நபர்கள் பயணித்திருக்கிறோம் ., இன்னும் காத்திருக்கிறார்கள் ..... நெகிழ்சியான விசயங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி . அம்மா , அப்பா , நிலா , தோழி ,அதிபர் (தலைமை ஆசிரியர் )அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . நீங்கள் சொல்லாவிட்டாலும் எமக்கு பரிச்சயமே உங்கள் முகம் .


நான் ஒருமுறை கொழும்பு வழியாக ஊருக்கு சென்றிருந்தேன் அப்பொழுது அங்கு 4 மணி நேரம் தங்கவேண்டிய கட்டாயம் . இருந்தாலும் நான் அதிக ஆவலோடு எதிர்பார்த்த விசயம் .

30 நிமிட பிரயாணத்திற்குப் பின் உயர்வகுப்பு விடுதியில் தங்கவைக்கப்பட்டேன் . அடுத்த சில நிமிடங்களில் வெளியில் வங்து துலாவினேன் . மிக குறைந்த நேரத்திற்குள் விடுதி காவலாளி வந்து அழைத்து போனான் .

என் ஆசை கொஞ்சம் மண் எடுத்துப்போக ம்ம்ம் முடியவில்லை.

yarl said...

இண்டைக்குதான் உங்கள் இலங்கை பயணம் பற்றி வாசித்தேன். எல்லாமே பச்சைப்பசேல் என்று அழகாக இருக்கு உங்கள் மகள் உட்பட. சுத்திப்போடுங்கோ . மலையகம் கண்ணுக்கு எப்பவும் குளிர்ச்சி. ஆனால் அந்த மக்களுக்கு எப்ப விடிவுகாலம் வரப்போகுது? காலம் தான் பதில் சொல்லவேணும். அழகான பதிவு.

Lisa White said...

மிக்க நன்றி..!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP