Sunday, May 20, 2012

காலம் கடந்தபின் !

வெந்து வெடித்துக்கொண்டிருந்தான் அகிலன்.

ச்ச....எவ்வளவு பெரிய அவமானம்.அசிங்கம்.நினைக்க நினைக்க அழுகை ஆத்திரம் .... தன்னில் ஒரு அருவருப்பும் கூட அவனுக்கு.

அப்படி...என்னதான் கேட்டுவிட்டேன்.மனதில் உள்ளதை அப்படியே கேட்டேன்.உலகத்தில் யாரும் கேட்கக்கூடாத ஏதாவதா கேட்டேன்.



இதுக்கெல்லாம் காரணம் ஜெயந்தி.அழகின் கர்வத்தோடு அறிவும் கூடியவள்.இத்தனையும் ஒருமித்த உருவத்துள் கண்டது பிடித்துப்போனது அகிலனுக்கு.கலைக்கல்லூரியில் படிக்கும்போதே தன் மனதை அறிவிக்க விரும்பாத அகிலன்,அவளோடு கற்பனைக் காதலில் தவித்துக்கொண்டிருந்தாலும் தனக்கான ஒரு தொழில் கிடைக்கும்வரை காத்திருந்தான்.

எப்போதாவது இருவரும் சந்திக்கும் நேரங்களில்மட்டும் நட்போடு பேசிக்கொள்வார்கள்.அது சினிமா தொடங்கி சின்னத்திரை தொட்டு புதுதாய் வந்த தொலைபேசிவரை வந்து போகும்.

மேற்படிப்பைத் தொடர்ந்தபடியே ஒரு அரசாங்க உத்தியோகமும் தேடிக்கொண்டிருந்தான்.அதன் பிறகுதான் தன் எண்ணத்தைச் சொல்லும் துணிவும் வந்தது அவனுக்கு.இன்னும் தாமதிக்க விரும்பாதவன் ஜெயந்தியைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பொன்றை எதிர்பார்த்திருந்தவன்.....அன்று ஜெயந்தி தனிமையாக கோவிலுக்குப் போவதை அறிந்திருந்தான்.

கோவிலில் சந்தித்த அகிலன் தயங்கித் தயங்கி "ஜெயந்தி...கனநாளா உங்களிட்ட ஒன்று சொல்ல ஆசை."...என்று சொல்லத் தொடங்க..

"சொல்லுங்கோ அகிலன்..."என்றபடி நட்போடு மெல்லிய சிரிப்போடு கண்கள் விரித்து ஆவலைத் தெரிவித்தபடி காத்திருந்தாள் ஜெயந்தி.

மெல்லியதாய் மௌனித்து குரலை இழுத்தவன்..."ஜெயந்தி எனக்குப் படிக்கிற காலத்திலயிருந்தே உங்களை எனக்கு நிறையப் பிடிக்கும்.காலம் வரட்டும்.என்ர காலிலேயே நிக்கிற தகுதிவரைக்கும் காத்திருந்தன்.இப்ப எல்லாம் சரி.அதுதான் இண்டைக்கு உங்களிட்ட நேரவே கேக்கிற ஆசை வந்திருக்கு.நான் உங்களைக் கல்யாணம் செய்ய விரும்புறன் ஜெயந்தி.உங்களுக்கு விருப்பம் என்றால் நான் வீட்டில அம்மாவோட கதைப்பன் இதுபற்றி"...என்றான் தயக்கம் நிறைந்த குரலுடன்.

ஒரே ஒரு கணம்தான்.முகத்தில் அத்தனை கோபம்.அந்த அழகான முகமே மாறிப்போனது ஜெயந்திக்கு.

"என்ன...உமக்கு எவ்வளவு தைரியம் வேணும் இந்தமாதிரி என்னோட கதைக்க.உன்ர மனசில என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாய் அகிலன்.பேரைப்போலவே உலகத்தை ஆள்கிற எண்ணமோ உனக்கு?"

"என்ர சாதியென்ன....உன்ர சாதியென்ன யோசிச்சுப் பாத்தியோ.எங்கட பணம் என்ன பெருமை என்ன.நீ..எனக்கு மாப்பிள்ளையோ.நீயும் நானும் பிள்ளை பெறுகிறதோ.நல்லவேளை என்ர வீட்டாக்களோட நீ இதைக் கதைக்கேல்ல.செருப்புப் பிய்ஞ்சிருக்கும்.இருட்டடி வாங்கியிருப்பாய்.பிச்சையெடுக்கிற உனக்கு பணக்கார நல்ல சாதிக்காரப் பொம்பிளை தேவைப்படுதோ..."என்றாள் நக்கலாக.நெருப்பாய் வார்த்தைகளைக் கக்கியவள் விறுவிறுவென நடந்து மறைந்துவிட்டாள்.

அவளின் சத்தம் கேட்ட கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப் பார்க்க அவமானத்தால் குறுகிப்போனான் அகிலன்.

வீடு வந்து எப்படித்தான் மறக்க முயற்சித்தும் அந்தச் சம்பவம் திரும்பத் திரும்ப மனக்கண்ணில் வந்து அகிலனை கஸ்டப்படுத்திக்கொண்டே இருந்தது.

நாளடைவில் யோசித்த அவனுக்குள் ஒரு தெளிவு."ம்ம்....ஜெயந்தி சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.என்னிடம் என்னதான் தகுதியிருக்கிறது.அவள் கேட்ட எதுவுமே என்னிடமில்லை.எனக்கேற்றபடிதானே என் வாழ்வுக்கு நான் ஆசைப்படவேண்டும்" என்று தன்னைத் தானே சமாதனப்படுத்திக்கொண்டான்.

என்றாலும் ஊர் உறவு எல்லாருக்குமே இந்தச் செய்தி பரவ அகிலன் இன்னும் உடைந்துபோனான்.எனவே ஊரிலிருக்கப் பிடிக்காதவனாய் அரபு நாடொன்றுக்குப் பயணமானான் அகிலன்.

`````

வருடங்கள் கடந்தோடி 15 ஆகிவிட்டிருந்தது.ஜெயந்தி இப்போதும் அதே அழகின் கர்வத்தோடு ஆனால் கல்யாணம் ஆகாமல்.....

பெரிய பெரிய பதவிகள்,பணம்,புகழ் என்று மாப்பிள்ளை தேடித் தேடியே ஏதாவது ஒன்று பொருந்தி ஒன்று பொருந்தாமல் எல்லாமே தள்ளிப்போய் காலமும் முதிர்கன்னியாய் ஜெயந்தியைத் தள்ளி வந்துவிட்டது.

இன்னும் தோஷமும் சாதகமும் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் அம்மா.அம்மாவின் ஆறுதலுக்காக கோவில் வந்திருந்தாள் ஜெயந்தி.

கண்மூடிக் கும்பிட்டு நிமிர்ந்தவள் முன்னால் அகிலன்.

"ஜெயந்தி...."என்று நட்பின் அதே புன்னகையோடு அழைத்தவன் "எப்பிடியிருக்கிறீங்கள்" என்றான்.

"நான் நல்ல சுகமாயிருக்கிறன் அகிலன்.நீங்கள் எப்பிடி..."என்றாள் பதிலுக்கு.

அகிலன் இன்னும் புன்னகைத்தவாறே...."இவர்கள்தான் என்ர மனைவியும் மகளும்..." என்றான்.தோள் உயரத்தில் உரஞ்சியபடி நின்ற மகளை அணைத்தபடி அறிமுகப்படுத்தினான் அகிலன்.

ஆச்சரியப்பட்டபடியே "ஓஓ...இவ்வளவு பெரிய மகளா உங்களுக்கு..."என்றாள் ஜெய்ந்தி கணகளை அகலமாக்கியபடி.

"இவள் என்ர அப்பாபோல ஆள்தான் உயரம்.ஆனால் 13 வயசுதான்.நான் வெளிநாடுபோய் 15 வருஷமாகுதெல்லோ.நான் போய் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப்பிறகு என்ர சொந்தத்திலேயே அம்மா பார்த்துத் தந்த பெண்ணைத்தான் அங்க கூப்பிட்டுக் கல்யாணம் செய்துகொண்டன்...."என்று சொல்லி முடித்தான் ஒரே மூச்சில்.

"ஜெயந்தி ...நாங்கள் இன்னும் ஒரு மாதம் இங்கதான் இருப்பம்.நேரம் கிடைக்கேக்க வீட்டுப்பக்கம் வாங்கோவன்..."என்று அழைப்பொன்றை விட்டபடி மனைவியையும் மகளையும் தோளில் கைபோட்டு அணைத்தபடி நடந்துகொண்டிருந்தான் அகிலன்.விழியசைக்காமல் சிலையாய் நின்றிருந்தாள் ஜெயந்தி.

15 வருடங்களாகத் தனக்காக தன் தகுதிக்கேற்ற துணையைத் தேடிக் காத்திருந்த அவளுக்குத் தன் இழப்பு என்னவென்பது இப்போது புரிந்தது.தன் தந்தையின் கைபிடித்து நடந்துகொண்டிருந்த அகிலனின் மகள் மீண்டும் திரும்பிப் பார்த்துக் கையசைத்துவிட்டு நடந்துகொண்டிருந்தாள்.ஜெயந்தி அந்த இடத்திலேயே உறைந்து நின்றிருந்தாள்

இப்போதும் கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப்பார்த்து எதையோ சொல்லிக்கொண்டுதானிருந்தார்கள்......!

108 comments:

செய்தாலி said...

சிலதை
நாம் புறக்கணிக்கும்போது
அதன் மதிப்பு தெரிவதில்லை

இழப்பில் தான் உணரமுடியும்
மதிப்பின் உன்னதத்தை

அழகுக் கர்வம்
அவள் மன விழிக்கு திரைசீலை இட்டதால்
வாழ்கையை தொலைத்த அடிமையாய்
அவள்

நல்ல கதை நல்ல கருத்து தோழி

rajamelaiyur said...

அழகான சிறுகதை ... அருமையான எழுத்து நடை

யாஸிர் அசனப்பா. said...

அற்புதம், அழகான ஒரு குறும்படத்தினை கண்ட (கேட்ட) திருப்தி.

K said...

வணக்கம் ஹேமா! ஞாயிறு பகல் வணக்கம்! கும்புடுறேனுங்கோ :-))

என்ன சிறுகதையோ எழுதியிருக்கிறியள்? தலைப்பு இருக்க வேண்டிய இடத்தில வெறும் காத்துதான் வருது....! என்ன பிரச்சனை தலைப்பைக் காணேலை??? :-))

K said...

அகிலன் அண்ணையைப் பற்றியும் ஜெயந்தி அக்கா பற்றியும் என்னமோ எழுதியிருக்கிறியள்! பொறுங்கோ படிச்சிட்டு வாறன்!

இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை எனக்குப் பொழுது போகேலை! பொறுங்கோ அவையள் ரெண்டு பேரையும் சேர்த்து வைப்போம் :-))))

K said...

அப்பாடா படிச்சிட்டன் ஹேமா! இதில ஜெயந்தி அக்கா வடிவு எண்டு சொல்லியிருக்கிறியள்! எந்தளவுக்கு வடிவு? எப்படி வடிவு எண்டு ஒரு நாலு வசனம் சேர்த்திருக்கலாமே? :-)))

நாங்களும் ஜெயந்தி அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பம்! அட்லீஸ் நானாவது........... கலியாணச் செலவுக்கு காசு குடுத்திருப்பன் எண்டு சொல்ல வந்தன் :-)))

K said...

ஹேமா, எனக்கெண்டா ஜெயந்தி அக்கா மேல எந்த பிழையும் இருக்கிற மாதிரி தெரியேலை! அவா என்ன செய்யிறது?

அகிலன் அண்ணைக்குத்தான் ஒரு பணியாரமும் தெரியேலைப் போல :-))

பின்ன என்ன, ஜெயந்தி அக்காவின்ர இயல்பை அறிஞ்சு அவாவை இம்பிரஸ் பண்ணுறமாதிரி நடந்திருந்தா அவா ஓம் எண்டு சொல்லியிருப்பா தானே! உண்மையான காதலைக் காட்டியிருந்தா, ஜெயந்தி அக்காவுக்கும் பிடிச்சிருக்கும்!

ஆனா அகிலன் அண்ணை பெக்கோ மாதிரி பேசாம இருந்து போட்டு, திடீரெண்டு போய் ஐ லவ் யூ சொன்னா, அவா எப்படி ஓம் எண்டு சொல்லுறது? சொல்லுங்கோ பார்ப்பம்?

நான் ஜெயந்தி அக்காவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவன்! ஏனெண்டா அகிலன் அண்ணை அவாவை இம்பிரஸ் பண்ணேலை :-)))

விச்சு said...

இதுதானே இன்றைய வாழ்வியல் நடைமுறை. சில காரணங்களால் நாம் ஒதுக்கும் பல விசயங்கள் பின்பு நம்மையே சிந்திக்க வைக்கும். சில விசயங்கள் நல்லவேளை வேண்டாம் எனச்சொன்னோம் எனவும், சில ஐயோ! விட்டுவிட்டோமே எனவும் இருக்கும்.விதி என நம்மை நொந்துகொள்வதைத்தவிர வேறொன்றும் செய்ய இயலாது.

K said...

ஹேமா, இதில நாங்கள் போடுற எல்லாக் கொமெண்ட்ஸ்க்கும் பதில் சொல்லோணும் சொல்லிப் போட்டன்! இல்லாட்டி இந்தப் பக்கம் வரவே மாட்டன் பிறகு!

சரி ஒரு கதை சொல்லுறன் கேளுங்கோ!

கிட்டடியில பேப்பரில ஒரு நியூஸ் வந்திச்சுது - ஒரு 32 வயசு டீச்சர் 16 வயசு ஸ்டூடெண்டோட லவ் வாம் எண்டு!

இதைப் படிச்சிட்டு அந்த டீச்சரை எல்லாரும் திட்டினவை! ஆனா நான் மாத்தியோசதால திட்டேலை! :-))

ஏன் சொல்லுங்கோ பார்ப்பம்! அந்த 16 வயசு பொடியன்ல ஏதோ ஒண்டு இருக்கப் போய்த்தானே டீச்சருக்கு லவ் வந்திருக்கோணும்! அதான் இம்பிரஸ் எண்டுறது!

பாருங்கோ ஒரு 16 வயசுப் பொடியனால ஒரு டீச்சரையே இம்பிரஸ் பண்ண முடியும் எண்டா, ஏன் அகிலன் அண்ணையால ஜெயந்தி அக்காவை இம்பிரஸ் பண்ண முடியாமல் போய்ச்சு???

நான் நினைக்கிறன் உந்தாள் பொண்ட்ஸ் டைப்பில, கவர்ச்சியாக் கதைக்கத்தெரியாமல் நோஞ்சானா இருந்திருப்பார்! அதான் ஜெயந்தி அக்காவுக்குப் பிடிக்கேலை :-))))

ஹி ஹி ஹி ஹி அவர் பேசாமல் என்னட்ட டியூஷன் வந்திருக்கலாம்! நல்லா புரிய வைச்சு அனுப்பியிருப்பன் ! :-)))))

K said...

ஹா ஹா ஹா எனக்கு இண்டைக்குப் பொழுது போகவே இல்லை! பொறுங்கோ ஜெயந்தி அக்கா பற்றி இன்னும் 4 வசனம் சொல்லுறன் :-))

ஜெயந்தி அக்கா நல்ல வடிவு எண்டதால திமிர் எண்டும் சொல்லியிருக்கிறியள்! இஞ்ச பாருங்கோ ஹேமா வடிவான ஆக்களுக்கு பேசிக்கா கொஞ்சம் திமிர் இருக்குமாம் எண்டு வவுனியாவில ஒரு ஃபாதர் ஆருக்கோ சொல்லேக்க நான் மறைஞ்சிருந்து கேட்டுக்கொண்டு இருந்தனான்!

திமிர் எண்டுறது ஒரு வகையில் பெண்களுக்குப் பாதுக்காப்புத்தானே! அதாலா பெண்கள் கொஞ்சம் திமிராவும் இருக்கோணூம்! இல்லாட்டி பிறகு “ அவதி”ப்பட வேண்டி வரும்!

இது வேற அவதி ஹேமா :-))))

'பரிவை' சே.குமார் said...

அழகிய நடையில் அருமையான கதை.
வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

ஆண், பெண் பாகுபாடின்றி, காலம் கடந்த பின் இப்படி வருந்திக் கொண்டிருப்பவர் எண்ணிக்கை இப்போதெல்லாம் சற்று அதிகமாகவே. சிந்திக்க வைக்கிற நல்ல கதை ஹேமா.

MARI The Great said...

மறுப்பதை நாசூக்காக மறுக்க வேண்டும்,பிறர் மனதை புண்படுத்தும் வகையில் மறுப்பது தவறு,

நன்றாக இருந்தது கதை ..!

ஹேமா said...

வாங்கோ...செய்தாலி.நன்றி உங்கள் அன்பான அழுத்தமான கருத்துக்கு !

ராஜ்பாட்டை...என் பக்கத்துக்கும் வந்து உங்களின் கருத்தைச் சொன்னதுக்கு மிக்க நன்றி நண்பரே !

முஹம்மது யாஸிர் அரபாத்....நன்றி உங்களுக்கு.அபாரமான கைதட்டல் எனக்கு உங்களிடமிருந்து.நன்றி மீண்டும் !

மணி...கும்புடுறேனுங்கோ...வணக்குமுங்கோ.ஏன்....கதையின்ர தலைப்பு சரியாத்தானே இருக்கு என்ன பிரச்சனை.காத்தில போயிட்டுதோ.பாக்கிறன் என்னெண்டு ?

ஹேமா said...

மணியத்தார்....கதையை ஆழமாகச் சொல்ல நினைக்கேல்ல.அதனாலதான் அழகைப் பற்றி வர்ணிக்கேல்ல.கதையின்ர கரு விளங்கினாப் போதுமெண்டு நினைச்சிட்டன்.பிறகு நீங்களே அவவைக் கட்டப்போறன் எண்டு சொன்னா நான் சுவீட்டிக்கு என்ன பதில் சொல்றது டிங் டிங் !

ஹேமா said...

உண்மைதான் மணி.காதலின் ஆழம் சொல்லாமல் விட்டிருக்கிறேன்.ஏனென்றால் சாதியால் ஒதுக்கப்படுவதை மட்டுமே சாடையாக சொல்ல வந்திருக்கிறேன்.எங்கள் ஊர்களில் சாதிப்பிரச்ச்னை அதிகம்தானே.பெண்களுக்குத் ‘திமிர்’பாதுக்காப்பெண்டு சொல்றீங்கள்.சரி நானும் இனித் திமிராய் இருக்கப்போறன் !

ராஜி said...

இழப்பில்தான் அதன் மகத்துவம் புரியும் என்பதை உணர வைத்த சிறுகதை அருமை

SELECTED ME said...

இப்போதும் கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப்பார்த்து எதையோ சொல்லிக்கொண்டுதானிருந்தார்கள்......////
கடைசியா இந்த பஞ்ச் டயலாக் அருமை!

Angel said...

//இப்போதும் கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப்பார்த்து எதையோ சொல்லிக்கொண்டுதானிருந்தார்கள்......!//
ஒரு விஷயம் தெளிவா புரியுது பதினைந்து வருடம் பின்பும் அம்மக்கள் அதே மன நிலையில்

வாழ்ந்தாலும் ஏசும் வீழ்ந்தாலும் ஏசும் மக்கள் கூட்டம் .
கதை நல்லா இருக்கு ஹேமா

SELECTED ME said...

முதற்பக்கத்தில் Readmore லிங்க் வைக்கவும் - நான் கதையே அவ்வளவுதானோ என்று நினைத்துவிட்டேன்

K said...

பிறகு நீங்களே அவவைக் கட்டப்போறன் எண்டு சொன்னா நான் சுவீட்டிக்கு என்ன பதில் சொல்றது டிங் டிங் ! :///////

சுவீட்டியோ????? சே கீ ??

குறிப்பு - சே கீ எண்டால் யார் அது? என்று அர்த்தம் - ஃபிரெஞ்சில்!

K said...

பெண்களுக்குத் ‘திமிர்’பாதுக்காப்பெண்டு சொல்றீங்கள்.சரி நானும் இனித் திமிராய் இருக்கப்போறன் ! ///////

ஏன் உங்களையும் சாமி கும்பிட விடாமல் ஆராவது துரத்துகினமோ?? சே கீ ?

விச்சு said...

கதையின் நடை எளிமையாக இருந்தது. சிம்ப்ளி சூப்பர்ப். அழகாயிருந்தாலே கர்வம் வந்திருமோ? ஆனா! உங்களுக்கு வரலியே?

Anonymous said...

அக்க்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Anonymous said...

அக்காஆஆஆ எப்புடி சுகம்

Anonymous said...

அக்கா ,நாளை பதிவு படிக்கிறேன் அக்கா ...
மாமா வும் நாளை வந்துடுவாங்கள் மனத் தெம்புடன் வாரம் அக்கா ....

Anonymous said...

அக்கா இப்போதான் பார்த்தினான் ஏன் அக்கா இப்புடி ,,,......என்னமோ ஆச்சு எனக்கு.மன்னிப்போடு உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழரே.தொடர்ந்தும் எழுதுங்கள் உங்கள் உணர்ச்சிக் கவிதைகளை ! .........

எனக்கு ஒரு மாறி இருக்கு நீங்க இப்புடி சொன்னது .....அக்கா நான் உங்களோடு தானே செல்லச் சண்டைப் போடுவேன் உரிமையா ....

அக்கா என்னை மன்னியுங்கோ நான் ஏதும் உங்கள் மனசை காயப்படுத்தி இருந்தால் ...

Anonymous said...

வாத்துக்காரி ன்னு நீங்க சொல்லுங்கோ அக்கா ரே ரீ அண்ணா ப்லோக்கிலும் சொல்லுங்கோ ஊருக்கேச் சொல்லுங்கோ அக்கா...நான் கொவசிக்க மாட்டினேன்...நீங்க கருவாச்சி ,வாத்துக்கரி அப்புடின்னு சொல்லுறது நான் ரொம்ப ரசிப்பேன் அக்கா ....


அக்கா நீங்கள் மாமா இல்லாமல் ப்ளாக் வரவே என்னோமோ மாறி இருக்குது தெரியுமா ....

சுதா SJ said...

ஹாய் அக்காச்சி...

கதை ரெம்ப டச் பண்ணீட்டுது :( இது கதையல்லவே நம்ம சுற்றி நடக்கும் ஒன்றுதானே.....பொண்ணுங்க முக்காவாசிப்பேர் இப்படித்தான் இருக்காங்க :(

அகிலன் ரெம்ப சாப்ட்டான பையன் போல இருக்கு, ஆனாலும் தன காதலுக்காய் இன்னும் கொஞ்சம் காத்திருந்து ட்ரை பண்ணி இருக்கலாம்... தான் காதலை சொன்னவுடனேயே ஜெயந்தி ஏக்கனும் என்று அகிலன் எப்படி எதிர்பார்க்கலாம்?? ஜெயந்தி பேசியே பேச்சுக்கள் கொஞ்சம் அதிகம்தான் ஆனாலும் பொறுமையாய் இன்னொரு தரம் அகிலன் பேசி இருக்கலாம்... இந்த அவசரம் காதலுக்கு ஆகாதுப்பா, அவரின் அவசரத்தால் தான் நேசித்த பொண்னை இழந்துவிட்டார், அகிலனுக்கு இப்போ என்னதான் நல்ல பொண்ணு கிடைத்து இருந்தாலும் காதலித்த பொண்னை கட்டும் போது கிடைக்கும் சுகம் ஒரு தனி தானே.... அதை இழந்த வகையில் அகிலனுக்கும் இழப்புத்தான் :(

அடுத்து ஜெயந்தி....!!
அழகு இருக்கும் இடத்தில் திமிரும் இருக்கும்தானே... சோ ஜெயந்தி திமிரும் அழகுதான். சாப்ட்டான பொண்ணுங்களை விட திமிரானா போன்னுங்களைத்தான் அதிகம் ஆண்களுக்கு பிடிக்கும். (ஹீ ஹீ... அனுபவம் அக்காச்சி)

நீங்கள் எல்லா தப்பையும் ஜெயந்தி மேல் போட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இவ்ளோ நாளா பழகிய அகிலனுக்கு ஜெயந்தி குணம் தெரியாதா என்ன??? அவர்தான் அவள் குணம் அறிந்து பொறுமையாய் பேசி இருக்கணும், இப்போ முடிவில் ஜெயந்தி கலங்குவதை பார்க்கும் போது அப்போதே அகிலன் மேல் ஜெயந்திக்கும் காதல் இருந்து இருக்கு, அவளின் திமிரோ எதுவோ ஒன்று அவளை அதை வெளிக்காட்டாமல் மறைத்து உள்ளது அதோ ஒரு ஆண்மகனாக அகிலன்தான் வெளிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்... மிஸ் பண்ணிவிட்டார்.. :(

இப்போ பாருங்கோ தனக்கு ஏதோ வலிக்கவில்லை என்பதைப்போல் குடும்பம் குட்டி என்று போய், வந்து எங்க ஹீரோயினி ஜெயந்தியை தவிக்க விட்டுட்டார்... இந்த ஆண்களும் இப்படித்தான் போல்... கிர்ர்ர்..

அழகான சிறுகதை அக்காச்சி....

ஹேமா said...

கலைம்மா....நான் இவ்வளவு நேரமும் உங்கட குருன்ர பக்கத்தில.ரெண்டு நாளா மனம் சரில்ல.பதிவுக்குப் போகேல்ல.மணியும் பதிவு போட்டார் கவனிக்கேல்ல.இப்பத்தான் போய்ட்டு வாறன்.அப்பா காலேல வந்திருந்தார்.சந்தோஷம்.

என்னடா கருவாச்சி.....இப்பிடியெல்லாம்.செய்தாலி தன்னோட வலையுலக வருஷம் கொண்டாட நான் கலையைப் பற்றிச் சொல்லிப்போட்டு வந்திட்டன்.அதுதான் மன்னிப்புக் கேட்டன்.என்ர அன்பு எப்பவும் இருக்கும் காக்காவோட !

Anonymous said...

அக்காஆஅ செல்லமே நீங்களும் மாமாவும் இல்லாம எனக்கு ப்ளாக் வரவே என்னோமோ மாறிக் கிடக்கு .....



குருவின் பக்கத்தில் சரியாக் கூட கான்சென்ட்ரேட் பண்ண முடியல அக்கா ....உங்கட கமெண்ட் அங்க பார்த்தும் ரொம்ப சந்தோசம் ...மாமா வும் பழையபடி கொஞ்சம் மனம் சமாதானம் ஆகிட்டு சீக்கிரம் வரணுமக்கா ....

தனிமரம் said...

என்ன சொல்ல சில நேரங்களில் எல்லாத்தையும் துறந்து வரமுடியும் என்று எப்படி அகிலன் நினைக்க முடியும்? அந்த சமுகத்தின் பினைச்சல்கள் பல இருக்கு இவர் வேலை தேடியவர் தன் நிலையை எண்ணாமல் ஜெயந்திடம் இப்படி நடப்பது உடனே எப்படி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்??? 

தனிமரம் said...

ஜெயந்தியை படிக்கும் காலத்தில் இருந்து அறிந்தவர் எப்படி வேலை தேடியவுடன் போய் பூக் கொடுப்பாராம் இது என்ன பாரதிராஜா படமா??வாழ்க்கை சமுகம் இப்படி பல சூழலில் இருக்கும் ஜெயந்தியின் நிலை புரிந்துகொள்ளாத ஆண்சமுகம் வேறும் எதிர்பார்ப்பு என்ற நிலையில் போய் அந்த ஜெயந்தியிடம் தோற்றுவிட்டேன் என்று ஊரைவிட்டு ஒடுவதும் இன்னொரு மனைவியை இவள் என் மணைவி என்று பெருமையுடன் அவளிடம் காட்டுவதும்  சிறுகதைக்கு பொருந்தும் ஹேமா வாழ்க்கைக்கு இன்னும் பல வருடம் வரணும் இது என் கருத்து ஹேமா!

தனிமரம் said...

ஜெயந்தி அழுவது என்பது குறீயீடு என்றாலும் கால மாற்றம் எல்லாவற்றையும் எற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை தருவது நிஜம் ஆனால் காலம் கடந்த வலி வலியைத் தான் தரும் சிறுகதையில் சில பாத்திரத்தை கொஞ்சம் வர்ணனை சேர்த்து இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து கவிதாயினி!

தனிமரம் said...

ஜெயந்தியை ஒரு அனுதாபத்தின் பாத்திரம் என்றாலும் அவள்  படிப்பும் திமிரும் தான் அவள் வாழ்க்கையை சீரழிக்குது என்றாள் அப்படி ஒரு படிப்பும் திமிரும் ஒரு பெண்ணுக்கு தேவையா என்று ஏன் அகிலன் சிந்திக்காமல் போனான் அதற்கு எதிராக ஒரு எதிர்வினை ஏன் செய்ய வில்லை??? தனக்கு எல்லாம் தேவை ஆனால் ஜெயந்தியின் பின் நிலை தேவையில்லை இதுதான் அந்த காதல் என்றால் ஜெயந்தி நிராகரித்ததில் தப்பே இல்லை ஹேமா இதுவும் என் கருத்து !

தனிமரம் said...

கதை சிறப்பாக இருக்கு ஹேமா வழ்த்துக்கள் ஆனால் அதே சமுக சூழல் 1952 இல் இருந்து இன்றுவரை அதாவது எஸ்.பொ வின் வாழ்க்கையில் இருந்து இன்று என் நண்பன் வாழ்க்கை வரை தொடரும் ஒரு ரயில் பயணம் !

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஆஆஆ.... கதை..கதை.. இது எப்போ? ஹேமாவைக் காணேல்லை எனப் பார்த்தேன் கதை எழுதப் போயிருக்கிறா..:)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

சோட் அண்ட் சுவீட்டான அழகிய கதை. பல இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவம்தான்.

அகிலன் கேட்டதில எந்தத் தப்புமில்லை...

“கதவைத் தட்டாத காரணத்தால், எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன”...

அதுதான் அகிலன் தட்டிப் பார்த்திருக்கிறார்...

கேட்காது விட்டால் பின்னாளில் ஜெயந்தியே ஏசக் கூடும், என்னை ஒரு வார்த்தை கேட்டாயா? கேட்பாய் எனக் காத்திருந்தேனே என.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

எப்போதாவது இருவரும் சந்திக்கும் நேரங்களில்மட்டும் நட்போடு பேசிக்கொள்வார்கள்.அது சினிமா தொடங்கி சின்னத்திரை தொட்டு புதுதாய் வந்த தொலைபேசிவரை வந்து போகும்.////

பாவம் இதையெல்லாம் உண்மை என நம்பிக் கேட்கப் போயிருக்கிறார் அகிலன்:)).

சிலர் இருக்கிறார்கள், சுயரூபத்தைக் கண்டு பிடிக்கவே முடியாது, பழகிய பாசத்தைக் கூட மறந்துபோய் விட்டாவே ஜெயந்தி.. அன்பாகச் சொல்லியிருக்கலாமே...

அதெதுக்கு சத்தம்போட்டுக் கத்த வேண்டும்.. கோபிக்க வேண்டும்...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//15 வருடங்களாகத் தனக்காக தன் தகுதிக்கேற்ற துணையைத் தேடிக் காத்திருந்த அவளுக்குத் தன் இழப்பு என்னவென்பது இப்போது புரிந்தது///

யாரிலும் குற்றமில்லை.. அதுதான் விதி...:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//என்ன சிறுகதையோ எழுதியிருக்கிறியள்? தலைப்பு இருக்க வேண்டிய இடத்தில வெறும் காத்துதான் வருது....! என்ன பிரச்சனை தலைப்பைக் காணேலை??? :-))///

முதல்ல உந்தக் கண்ணாடியைக் கழட்டித் தேம்ஸ்ல எறியச் சொல்லுங்கோ ஹேமா:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

May, 2012 14:17
மாத்தியோசி - மணி said...
ஹேமா, எனக்கெண்டா ஜெயந்தி அக்கா மேல எந்த பிழையும் இருக்கிற மாதிரி தெரியேலை! அவா என்ன செய்யிறது? ///

பிழை இல்லை, விரும்பாவிட்டால் விருப்பமில்லை எனச் சொல்ல வேண்டியதுதானே? அதெதுக்கு கோபம் அகங்காரம் எல்லாம்? அகிலன் என்ன கொலையா செய்திட்டார்? விருப்பம் கேட்டார்.. அதுவும் பலநாள் நட்போடு பழகிய ஒருவரிடம், அதிலென்ன தப்பிருக்கு?

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

20 May, 2012 14:17
மாத்தியோசி - மணி said...

பின்ன என்ன, ஜெயந்தி அக்காவின்ர இயல்பை அறிஞ்சு அவாவை இம்பிரஸ் பண்ணுறமாதிரி நடந்திருந்தா அவா ஓம் எண்டு சொல்லியிருப்பா தானே! உண்மையான காதலைக் காட்டியிருந்தா, ஜெயந்தி அக்காவுக்கும் பிடிச்சிருக்கும்!

நான் ஜெயந்தி அக்காவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவன்! ஏனெண்டா அகிலன் அண்ணை அவாவை இம்பிரஸ் பண்ணேலை :-)))///
////////////////

கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஐ அப்ஜக்ஸன் யுவர் ஆனர்:)) உண்மை பொய் என்றெல்லாம் இல்லை, காதல் என்பதும், அன்பு, பாசம் என்பதும் தானாக வரவேண்டும்...

“கனி தானாகக் கனிய வேண்டுமே தவிர, தடியால் அடித்துக் கனிய வைக்கக்கூடாது”.. எங்கட கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

20 May, 2012 14:24
மாத்தியோசி - மணி said...
ஹேமா, இதில நாங்கள் போடுற எல்லாக் கொமெண்ட்ஸ்க்கும் பதில் சொல்லோணும் சொல்லிப் போட்டன்! இல்லாட்டி இந்தப் பக்கம் வரவே மாட்டன் பிறகு!////

மீயும்...மீயும் இதை ஆமோதிக்கிறேன்ன்.. சொல்லிட்டேன் ஆமா:)) பிறகு உப்புமடச் சந்திக்கு, தேம்ஸ் தண்ணியில அள்ளிக்கொண்டு வந்து ஊத்திப்போடுவன் தெரியுமோ?:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

பாருங்கோ ஒரு 16 வயசுப் பொடியனால ஒரு டீச்சரையே இம்பிரஸ் பண்ண முடியும் எண்டா, ஏன் அகிலன் அண்ணையால ஜெயந்தி அக்காவை இம்பிரஸ் பண்ண முடியாமல் போய்ச்சு??? /////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கினதான் உவர் பிழை விடுறார்:)))... ரீச்சருக்கு லவ் வந்துது எண்டதுக்காக எல்லோருக்கும் அப்பையனில லவ் வரும் என்றில்லை..

கனக்க வேண்டாம், வலையுலகில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு சிலரோடு மட்டும் தானே அதிகம் ஒட்டிப் பழகுகிறோம்.... அது போலத்தான்...

ஒருவரை எமக்குப் பிடிச்சிருக்கு என்றதுக்காக, அவரை எல்லோருக்குமே பிடிக்கும் என எதிர்பார்ப்பது தவறு. அதுபோல, ஒருவரை எமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அவரை எல்லோருக்கும் பிடிக்காது என முடிவெடுக்கலாமோ? இல்லைத்தானே?..

இதுபோலவேதான் அனைத்தும்.

எனக்குத் தெரிந்து, பக்கத்து ஊரில் ஒரு அழகான பெண்... குடும்பத்தில் ஒரே ஒரு பிள்ளை... அவவைத் திருமணம் முடிக்க, எஞ்சினியர், நல்ல அழகு.. அவவுக்கு ஜோடியான 2 மச்சான்மார்.... தாம் முடிக்கப் போறோம் எனச் சொல்லியும், அவ மறுத்துப்போட்டு...

இன்னொரு மாமியின் மகன், படிப்பில்லை... வெளிநாட்டுக்கு வந்தவர், கறுப்பு, இவவை விடக் குட்டி... அவரைத்தான் முடிப்ப்பேன் என ஒற்றைக்கால்ல:)) நின்று மணம் முடித்தா..

இதிலிருந்து என்ன தெரியுது.... எல்லாம் மனப்பொருத்தம் தான்... மனதால அன்பு பாசம் வரவேண்டும், இன்னொருவர் ஊக்குவித்து வரமுடியாது.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

///ஜெயந்தி அக்கா நல்ல வடிவு எண்டதால திமிர் எண்டும் சொல்லியிருக்கிறியள்! இஞ்ச பாருங்கோ ஹேமா வடிவான ஆக்களுக்கு பேசிக்கா கொஞ்சம் திமிர் இருக்குமாம் எண்டு வவுனியாவில ஒரு ஃபாதர் ஆருக்கோ சொல்லேக்க நான் மறைஞ்சிருந்து கேட்டுக்கொண்டு இருந்தனான்!////

திமிர் இருக்கலாம், அது அனைவரும் ரசிக்கக்கூடிய, பெண்மையோடு கூடிய திமிராக இருப்பின் பொருந்தும்.

திமிர் எனும் பெயரில், கூச்சல் போடுவது, கத்திப் பேசுவது, சண்டைப்பிடிப்பது... இதெல்லாம் அழகல்ல.

K said...

வந்திட்டன் வந்திட்டன்! பொறுங்கோ வடிவா படிச்சிட்டு வாறன்! என்ர கொமெண்ட்ஸ்க்கு ஆரோ கோபமா பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறதா பி பி ஸி யில பிரேக்கிங் நியூஸ்ல போகுது! :-)))))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//வரலாற்று சுவடுகள் said...
மறுப்பதை நாசூக்காக மறுக்க வேண்டும்,பிறர் மனதை புண்படுத்தும் வகையில் மறுப்பது தவறு,////

இது..இது... இதுதான் தேவை:)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹேமா said...
மணியத்தார்....கதையை ஆழமாகச் சொல்ல நினைக்கேல்ல.அதனாலதான் அழகைப் பற்றி வர்ணிக்கேல்ல.கதையின்ர கரு விளங்கினாப் போதுமெண்டு நினைச்சிட்டன்.பிறகு நீங்களே அவவைக் கட்டப்போறன் எண்டு சொன்னா நான் சுவீட்டிக்கு என்ன பதில் சொல்றது டிங் டிங் !///


என்னாது? சுவீட்டியோ? என்ன ஹேமா சொல்லுறீங்கள்? எனக்கு இந்தக் குளிருக்கையும் வேர்த்து வடியுதே?:))..

பொம்பிளை பகுதிக்குப் படமும் குடுத்திட்டன், இப்ப போய் வயிற்றில புளியைக் கரைக்கிறீங்கள்:))

K said...

//என்ன சிறுகதையோ எழுதியிருக்கிறியள்? தலைப்பு இருக்க வேண்டிய இடத்தில வெறும் காத்துதான் வருது....! என்ன பிரச்சனை தலைப்பைக் காணேலை??? :-))///

முதல்ல உந்தக் கண்ணாடியைக் கழட்டித் தேம்ஸ்ல எறியச் சொல்லுங்கோ ஹேமா:)) ////////


அச்சோ,, நான் உண்மையைத்தானே சொன்னான்! ஹேமா பதிவை பப்ளிஸ் பண்ணேக்குள்ள தலைப்பைக் காணேல! வெறும் கோடுதான் தெரிஞ்சது! அதான் டப்பெண்டு எழுதிவிட்டன்! பிறகுதான் ஹேமா ஏதோ மாயம் செய்து தலைப்பைக் கொண்டு வந்திருக்கிறா :-))))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

20 May, 2012 22:56
மாத்தியோசி - மணி said...
வந்திட்டன் வந்திட்டன்! பொறுங்கோ வடிவா படிச்சிட்டு வாறன்! என்ர கொமெண்ட்ஸ்க்கு ஆரோ கோபமா பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறதா பி பி ஸி யில பிரேக்கிங் நியூஸ்ல போகுது! :-))))///

அவ்வ்வ்வ்வ்:)) கடவுளே அது கோபமில்லை:)))) ச்ச்ச்ச்சும்மா.. கொஞ்சம் சவுண்டு விட்டுப் பார்த்தனான் அப்பத்தானே லாச்சப்பல் வரை கேக்கும்:)).

K said...

பிழை இல்லை, விரும்பாவிட்டால் விருப்பமில்லை எனச் சொல்ல வேண்டியதுதானே? அதெதுக்கு கோபம் அகங்காரம் எல்லாம்? அகிலன் என்ன கொலையா செய்திட்டார்? விருப்பம் கேட்டார்.. அதுவும் பலநாள் நட்போடு பழகிய ஒருவரிடம், அதிலென்ன தப்பிருக்கு? /////////

அப்பிடியில்லை! உப்பிடியான விஷயங்களுக்கு மறுப்புச் சொல்லேக்க கொஞ்சம் ஆணித்தரமா, உறுதியா, அடிச்சுச் சொல்லோணும்!

நாம் மறுக்கும் போது அவரின் மனம் புண்படும் என்று நினைத்து கொஞ்சம் வளவளப்பாகச் சொல்வோமானால், அவையளால எமது மறுப்பை ஏற்றுக் கொள்ளேலாம இருக்கும்!

ஒருவேளை அடிமனசில விருப்பத்தை வைச்சுக்கொண்டுதான் மேலுக்கு விருப்பமில்லாதது போல நடிக்கிறா எண்டு நினைக்கவும் வாய்ப்பிருக்கு!

மற்றது நைஸாக, அன்பான முறையில் எடுத்துச் சொல்லி, விளங்கப்படுத்தி மறுப்புச் சொல்லேக்குள்ள அதைப் புரிஞ்சு கொண்டு, அந்த மறுப்பை ஏற்றுக் கொள்ளுற ஆக்கள் எண்டால் பரவாயில்லை! சொஃப்டாவே சொல்லலாம்!

ஆனா சில பேர் அடம் பிடிப்பினம்! இண்டைக்கில்லாவிட்டாலும் எண்டைக்காவது நீ என்னை லவ் பண்ணுவாய் எண்டு வசனம் விடுவினம்! அதான் இப்படியான “ வன்மையான” மறுப்பு சமயத்தில் அவசியமாகிறது!

இது என்ர தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே! இதில் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கோ! பிறகு மாத்தியோசிக்கிறேன் :-)))

K said...

அவ்வ்வ்வ்வ்:)) கடவுளே அது கோபமில்லை:)))) ச்ச்ச்ச்சும்மா.. கொஞ்சம் சவுண்டு விட்டுப் பார்த்தனான் அப்பத்தானே லாச்சப்பல் வரை கேக்கும்:)).///////

ஹா ஹா ஹா எனக்கும் தெரியும்! நானும் சும்மா தான் கோபம் எண்டு சொன்னான்! அப்பத்தானே விம்பிள்டன் வரைக்கும் கேட்கும் :-)))

K said...

என்னாது? சுவீட்டியோ? என்ன ஹேமா சொல்லுறீங்கள்? எனக்கு இந்தக் குளிருக்கையும் வேர்த்து வடியுதே?:))..

பொம்பிளை பகுதிக்குப் படமும் குடுத்திட்டன், இப்ப போய் வயிற்றில புளியைக் கரைக்கிறீங்கள்:)) /////////

ம்..... நான் அப்பவும் சொன்னான் ஹேமாவுக்கு! அதாக்கப்பட்டது, நீங்கள் எப்படியோ நல்லதொரு சுவீட்டியைத் தானே எனக்குப் பார்த்துக் கட்டி வைப்பியள் எண்டு ஃபேஸ்புக்கில பம்பல் அடிக்கேக்குள்ள ஹேமாவுக்குச் சொன்னான்! அவா அதைத்தான் பொறுக்கி வைச்சுக் கொண்டு இப்ப சொல்லுறா! :-))))

உண்மையா சுவீட்டியைத்தான் பார்ப்பியளோ? இல்லாட்டி அந்த அம்மம்மா படம் போட்டியள்.... அவாவை மாதிரி பார்ப்பீங்களோ???? :-)))

K said...

திமிர் இருக்கலாம், அது அனைவரும் ரசிக்கக்கூடிய, பெண்மையோடு கூடிய திமிராக இருப்பின் பொருந்தும்.://////

இதை நான் வழி மொழியிறன்!


திமிர் எனும் பெயரில், கூச்சல் போடுவது, கத்திப் பேசுவது, சண்டைப்பிடிப்பது... இதெல்லாம் அழகல்ல./////////

இதுவும் சரிதான்! எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குத்தானே! கத்திச் சண்டை போடுபவர்களை ரசிக்கவோ, விரும்பவோ தோணாது - எவ்வளவு அழகாக இருப்பினும்!

விவேக் ஒரு படத்தில சொல்லுவார்.... மார்டன் ட்ரெஸ் மங்காத்தாக்கள் எண்டு......!!!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

மாத்தியோசி - மணி said...

இது என்ர தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே! இதில் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கோ! பிறகு மாத்தியோசிக்கிறேன் :-)))//////
//////////

நீங்க சொல்வதும் நியாயம் தான், அது உண்மையே, நானும் ஒரு சம்பவம் முன்பு எழுதியிருக்கிறேன்,.. ஒரு லிங்கில் இருக்கு, பின்பு லிங் தருகிறேன் படிச்சுப் பாருங்கோ.

ஒரு நட்பை முடியடிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கு, கோபித்து, கத்திக் கதைத்துத்தான் முறியடிக்க வேண்டுமென்பதில்லை.

ஆனா ஒரு புதியவர், பெரிதாகப் பழக்கமில்லாதவர் எனில்... உப்படிக் கோபித்து முறித்தாலும் பரவாயில்லை.

ஆனா நட்பாக இருந்து, இத்தனை காலமும் அன்பாகப் பழகிய ஒருவரைப் பார்த்து, உப்பூடிக் கத்த, சத்தியமாக என்னால் முடியாது...

பிடிக்கவில்லையாயின்.. எதையாவது சொல்லி, இனிமேல் சந்திப்பதைத் தவிர்த்து... வேறு வழிகளை மேற்கொள்ளலாம்...

அதைவிடுத்து முகத்துக்கு நேரே.. அதுவும், சாதி, அஸ்தத்து எல்லாம் சொல்லித் திட்ட முடியுமோ?

அப்பூடியெண்டால், நட்பாக இருக்கும்போது எங்கே போயிற்று அந்த சாதி சமயம் எல்லாம்?.. அப்போ இத்தனை நாளும் ஒன்றாகக் கூடி, அன்பாக கதைத்து மகிழ்ந்திருந்ததெல்லாம் நடிப்போ?. இல்லையெனில்.. ஒரு செக்கனில் எப்படி இப்படியான வார்த்தைகளை உபயோகித்துப் பேசுமளவுக்கு மனம் வரும்? உங்களால் முடியுமா?

இப்படித்தான் நான் யோசிப்பேன்..

K said...

இந்த வலைப்பதிவின் ஓனர் ஹேமா எங்கே?? “ கதை பேச வாங்கோ” எண்டு டைட்டில் வைச்சதாலதானே, மத்தியானம் மணியம் கஃபேக்குள்ள இருந்து இட்லிக்கு மாவாட்டி ஆட்டி கொமெண்டும் போட்டனான்!

எல்லாத்துக்கும் ஒழுங்கா பதில் சொல்லாம எங்கேயோ ஓடிட்டா!

பாருங்கோ பதில் சொல்லுறதுக்கு லண்டனில இருந்து ஆக்கள் வரவேண்டி இருக்கு :-))))))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹா ஹா ஹா எனக்கும் தெரியும்! நானும் சும்மா தான் கோபம் எண்டு சொன்னான்! அப்பத்தானே விம்பிள்டன் வரைக்கும் கேட்கும் :-)))///

விம்பிள்டனோ? ....ஙே..ஙே..ஙே.... :)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

மாத்தியோசி - மணி said...

உண்மையா சுவீட்டியைத்தான் பார்ப்பியளோ? இல்லாட்டி அந்த அம்மம்மா படம் போட்டியள்.... அவாவை மாதிரி பார்ப்பீங்களோ???? :-)))
////

ஓ.. நான் பயந்தே போனன்:)))).. சே..சே... உங்கட அழகென்ன? உயரமென்ன:) கண்ணின் வடிவென்ன?... உங்களுக்குப் போய் சாதாரண பொம்பிளை பார்ப்பனோ?:)).. சுவீட்டி என்ன சுவீட்டி?:)) அதுக்கும் மேலாலதான் பார்க்கிறனாம் எண்டு:), நாளைக்கு மறக்காமல் வதனப்புத்தகத்தில சொல்லிடுங்கோ:)))))))

K said...

இல்லையெனில்.. ஒரு செக்கனில் எப்படி இப்படியான வார்த்தைகளை உபயோகித்துப் பேசுமளவுக்கு மனம் வரும்? உங்களால் முடியுமா?

இப்படித்தான் நான் யோசிப்பேன்..////////

இல்லை! நல்லா பாசமா பழகின ஒருத்தரோட இப்படிப் பேச மனம் வராது!

நீங்கள் சொல்லுறது முழுக்க முழுக்கச் சரிதான்! பாசமா பழகிய எவரையும் நோகடிக்க மனம் வராது!

ஓகே இப்ப மாத்தியோசிக்கிறேன் :-)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹேமா கெதியா வாங்கோ.. மணியம் கஃபே ஓனர் சூப்பர் மாட்டி:))) ஒரு அப்பாவிப் பூஸிடம் அகப்பட்:))டு, பதில் சொல்லவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் வியர்த்துக் கொட்டுது அவருக்கு:))...

ஹேமாஆஆஆஆஅ.. கலை.. உங்கட அண்ணாக்கு ஒரு டவல் கொண்டு வந்து கொடுங்கோ.. வேஏஏஏஏர்க்குதாம்ம்..

ஹையோ.. சாமி தைரியமா சவுண்டு விட்டிட்டேன், இப்போ ரைப் பண்ண முடியாமல் கை எல்லாம் நடுங்குதே:)))

K said...

ஹா ஹா ஹா எனக்கும் தெரியும்! நானும் சும்மா தான் கோபம் எண்டு சொன்னான்! அப்பத்தானே விம்பிள்டன் வரைக்கும் கேட்கும் :-)))///

விம்பிள்டனோ? ....ஙே..ஙே..ஙே.... :))) :////////

ஹா ஹா ஹா உண்மையா நீங்கள் இருக்கிற இடம் தெரியாது! ஆனா லண்டன் சிட்டி இல்லை என்று மட்டும் ஊகிக்க முடியுது!

அதால விம்பிள்டன் எண்டு சும்மா நினைச்சு வைச்சிருக்கிறன்! அதே மாதிரி உங்கட முகமும் தெரியாது! அதால ஞானம் அக்காவை நினைச்சு வைச்சிருக்கிறன்!

இப்ப என்ன காசா பணமா? சும்மா நினைக்கிறதுதானே! :-)))

அதான் விம்பிள்டன் எண்டு சொன்னான்!!

ஆமா ஙே..... ஙே..... என்றால் என்ன?

எப்புடீ எப்புடீ ஹவ் இஸ் மை கிட்னி??

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹா..ஹா.ஹா.. கை நடுக்கத்தில மேலுள்ள பின்னூட்டத்தைக் கொண்டு போய் என்பக்கத்தில போட்டுவிட்டென், நல்ல வேளை நானே கண்டு பிடிச்சிட்டேன்ன் எங்கிடயேவா? நான் எப்பவும் ஸ்ரெடிதான்:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

இப்ப என்ன காசா பணமா? சும்மா நினைக்கிறதுதானே! :-)))
///

ஹா..ஹா..ஹா... அதுதானே காசோ பணமோ?:))

ஞானம் அக்கா மாதிரியோ?:)) ஹா..ஹா..ஹா... கடவுளே ஒரு நாளைக்கு லாச்சப்பலுக்கு அவவையும் கூப்பிடுங்கோ... ஒரு குட்டி கெட்டுக்கெதர் வச்சிடலாம்:)))

K said...

ஹேமா கெதியா வாங்கோ.. மணியம் கஃபே ஓனர் சூப்பர் மாட்டி:))) ஒரு அப்பாவிப் பூஸிடம் அகப்பட்:))டு, பதில் சொல்லவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் வியர்த்துக் கொட்டுது அவருக்கு:))...//////

ஹா ஹா ஹா இதில கூட ஒரு தத்துவம் இருக்கு பாருங்கோ! அது என்னெண்டா இந்த விவாதத்தில கூட உங்களுக்கு எதிரா / அல்லது எதிர்த்து ஆணித்தரமா கதைக்க மனம் ஏகுதில்லை! ( தேங்க்ஸ் டூ அம்மம்மா! அவாதான் ஏகுதில்லை எண்ட வசனத்தை எனக்குப் படிப்பிசவா! ) அதாலதான் விவாதத்தை உடனே முடிக்க வேண்டி, இப்படிச் சொன்னேன்! அதாவது உங்கள் கருத்தை சட்டென்று ஏற்றுக்கொண்டு விட்டேன்!

இதுவே பழக்கமில்லாத ஒருவரோடு விவாதம் வைக்க நேர்ந்திருந்தால் இன்னும் நீட்டி முழக்கியிருப்பேன்!

ஸோ, இது கூட நீங்கள் சொன்ன ‘ தன்மையான மறுப்புத்தான்”

கிட்டடியில ஃபேஸ்புக்கில கடுமையான மதச் சண்டை வந்திச்சு! ஆனா நான் அதில முழுமையாக ஈடுபடாமல், பட்டும் படாமலும் தான் பங்கேற்றேன்! காரணம் எமது எதிர்த்தரப்பில் எம்மோடு அன்பாகப் பழகிய ஒரு சகோதரி இருந்ததால்......!!!

அன்பால் உலகை வெல்லலாம் எண்டு ஒரு படத்தில நமீதா சொல்லுறா!:-))) அது இதுதான் போல கிடக்கு :-)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

///ஆமா ஙே..... ஙே..... என்றால் என்ன?

எப்புடீ எப்புடீ ஹவ் இஸ் மை கிட்னி??///

..ஙே...ஙே... என்றால்ல்.. வெகுளியாக கண்ணை விரித்துப் பார்க்கிறது.. ஏங்கிப்போய் அல்லது பேயறைந்ததுபோல என்பினமெல்லோ?:)) அதுதான் உது:))..

கிட்னி நல்லாத்தான் வேர்க் பண்ணுது, ஆனா நான், மாத்தி யோசிக்க வச்சிடுறன் எல்லோ.. ஹா..ஹா..ஹா..

K said...

ஹா..ஹா.ஹா.. கை நடுக்கத்தில மேலுள்ள பின்னூட்டத்தைக் கொண்டு போய் என்பக்கத்தில போட்டுவிட்டென், நல்ல வேளை நானே கண்டு பிடிச்சிட்டேன்ன் எங்கிடயேவா? நான் எப்பவும் ஸ்ரெடிதான்:)):////////

ஹா ஹா ஹா ஷண்முகா ....... உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணையா.......

- நான் அவ்வை சண்முகியைச் சொன்னேன் :-)))


குறிப்பு - அந்தப் பாட்டுத் தெரியும் தானே! - பாட்டுத் தெரியாட்டி பகிடி விளங்காது :-)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹா ஹா ஹா இதில கூட ஒரு தத்துவம் இருக்கு பாருங்கோ! அது என்னெண்டா இந்த விவாதத்தில கூட உங்களுக்கு எதிரா / அல்லது எதிர்த்து ஆணித்தரமா கதைக்க மனம் ஏகுதில்லை! ( தேங்க்ஸ் டூ அம்மம்மா! அவாதான் ஏகுதில்லை எண்ட வசனத்தை எனக்குப் படிப்பிசவா! ) அதாலதான் விவாதத்தை உடனே முடிக்க வேண்டி, இப்படிச் சொன்னேன்! அதாவது உங்கள் கருத்தை சட்டென்று ஏற்றுக்கொண்டு விட்டேன்! ///

பார்த்திங்களோ.. இப்போ ஹேமாவின் கதைக்கு வந்து யோசித்தால், நான் முன்பு சொன்னதில் தப்பிருக்கோ?..

முகம் தெரியாத நட்புக்கே நாம் இந்தளவு மரியாதை, பாசம் காட்டும்போது... பலநாள் நேரடியாக, ஒன்றாகப் பழகிய ஒருவரை திடீரென எப்படி இப்படி எதிர்க்க முடியும்?

ஊ.கு:)

இப்பத்தான் எனக்குத் தெரியும் அது ”ஏகுதில்லை” என்று.. நான் ”ஏவுதில்லை” என்றுதான் நினைத்திருந்தேன் அச்சொல்லை.

K said...

கிட்னி நல்லாத்தான் வேர்க் பண்ணுது, ஆனா நான், மாத்தி யோசிக்க வச்சிடுறன் எல்லோ.. ஹா..ஹா..ஹா..////////

அதில தான் த்ரில்லிங்கே இருக்கு! நான் ஒண்டு சொல்ல நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு பதிலைச் சொல்ல..... அதுதான் நல்லா இருக்கு! கிட்னி 24 மணிநேரமும் சுறுசுறுப்பா இருக்கும்!

ஓகே! நான் ஐ பொட்டுக்கு பாட்டு அப்லோட் பண்ணோணும்! நித்திரை கொள்ளுறது 2 மணிக்குத்தான்! எண்ட்டலும் கொஞ்சம் வேலை கிடக்கு!

அதால இண்டைக்கு மாத்தியோசிச்சு ஹேமா வீட்டில வைச்சு பொன் நுய்ய்ய்ய்ய்ய் சொல்லுறன்!

உங்களுக்கும் ஹேமாவுக்கும் பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :-)))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... சாமக் கோழி கூவப்போகுதே...
நாளைக்குச் சந்திக்கலாம்.... ஹேமாவுக்குக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

பொன் நுய்ய்ய்ய்ய் ஒருதரம்...
பொன் நுய்ய்ய்ய்ய் 2 தரம்...
பொன் நுய்ய்ய்ய்ய் 3 தரம்...

டிங்...டிங்..டிங்...:)))

ஹேமா said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ நான் மயங்கி விழுந்துபோனன்.ஒரு கிறீன் டீ தாங்கோப்பா.ஆருக்காச்சும் என்ர சத்தம் கேக்குதோ.

நல்லா களைச்சுப்போய் நித்திரையாயிட்டன்.வந்து பாத்தால் உப்புமடச்சந்தியில நிரையக் கதை பேசியிருக்கினம் மணியும் அதிராவும்.’நான் பேச நினைப்பதேல்லாம் நீ பேச வேண்டும் அதிர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆ.’

அப்பிடியே மணியத்தாருக்கு உடைச்சு அடிச்சு பதில் சொல்லியிருக்கிறா.அந்தக் கிட்னி இருக்கே அதுக்குத்தான் வாழ்த்துச் சொல்லவேணும்.கவனம் அதிரா களவு போகாமப் பாத்துக்கொள்ளுங்கோ கிட்னியை.மணியத்தாருக்குப் பக்கத்தில மறந்துபோயும் நிக்காதேங்கோ.கொஞ்சம் தூரமா .....தள்ளி நிண்டே கதையுங்கோ.எங்களுக்காக அந்தக் கிட்னிக்காக !

ஹேமா said...

விச்சு...வாங்கோ.....உங்கட வாழ்த்து சந்தோஷமாயிருக்கு.அதானே சிம்ப்ளி சூப்பர் கதை.எனக்கு இன்னும் கர்வம் வரலியே....எப்பூடி.....அது நீங்க எல்லாரும் என்னில வச்சிருக்கிற அன்பும் ஆசியும்தான் விச்சு !

குமார்....நீங்க எழுதிற கதையைவிடவா.உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.உண்மையில் இந்தக் கதையின் கரு மட்டும்தான் கதையில் தெரிகிறது.அதை அழகுபடுத்தாமல் விட்டது எனக்கே தெரிகிறது.அடுத்த கதைகளில் சரிப்படுத்திக்கொள்வேன் !

வாங்க ராமலஷ்மி அக்கா.இது எப்போதோ காதில் கேட்ட ஒரு சம்பவம் கதை.அதை எழுதிப் பார்த்தேன் அவ்வளவும்தான்.நன்றி அக்கா !

வரலாற்றுச் சுவடுகள்.....வாங்கோ தம்பி.நல்லதொரு கருத்து நீங்க சொன்னது.அடுத்தவர் மனதை நோகாமல் ஆனால் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடவேணும்.உண்மையிலும் உண்மை !

ராஜி....இழப்பின் பின்தான் இழந்ததை மனம் மீண்டும் தேடும்.ஆனால் அது காலம் தவறிய ஞானம்.நன்றி வந்ததுக்கு !

நிலவன்பன்....இந்தப் பக்கம் வந்து போறீங்க.நான் நினைச்சன் வாறதேயில்லையாக்குமெண்டு.கடைசி பஞ்ச் எனக்கும் பிடிச்சு எழுதினது.சரி....நீங்க சொன்ன “தொடர்ந்து வாசிக்க” ம்ம்ம்.....கவனிக்கணும்.மணிதான் சொல்லித் தந்தார்.சரியா சொல்லித் தரேல்ல...இப்ப சொல்லித் தந்த உங்களுக்கு நன்றி !

ஏஞ்சல்.....கதையின் கருவை ரசித்திருக்கிறீர்கள்.என்றாலும் இந்தக் கதை முழுமையான திருப்தியில்லை எனக்கு !

ஹேமா said...

கருவாச்சி......வாடி செல்லம்.மே 18.அது எமக்கான மறக்கமுடியாத வலியைத் திரும்பவும் அழுத்தி வலிக்கவைக்கும் ஒரு நாள்.வலிகளை மறக்கக்கூடாது.அதுதான் 2 நாள் மனசு கலங்கியிருந்திச்சு.இப்பவும் மேல்பூச்சுத்தான் இனித் தொடரும் எங்கட நாடக வாழ்வு.ஆழத்தில அந்த வலி இருக்கவேணும்.அப்பத்தான் நாங்கள் தமிழரா இருப்பம்.உண்மையான உணர்வு அதுதான் கலை.

அப்பா இன்னும் அதை ஆழமா அனுபவிக்கிறார்.நாளைக்கு வந்திடுவார்.என்ன செய்ய ஈழத்தில் தமிழராய்ப் பிறந்ததுக்கு நிறையவே அனுபவிக்கிறம்.ஆனாலும் அங்கயே அந்த மண்ணிலேயே இன்னொருக்கா பிறக்கவேணும்.அப்ப எங்கட பூமி எங்களுக்கானதா சுதந்திரமா இருக்கும்.நம்புறன் !

ஹேமா said...

துஷிக்குட்டி.....வாங்கோ வாங்கோ.இன்னும் சுவிஸ்க்கு வரேல்லையோ.வெளிக்கிடேலையோ.சுவிஸ் உங்களை அன்போடு வரவேற்கிறது.உங்கட அண்ணாவுக்கு என் அன்பு வாழ்த்துகள் சொல்லிவிடுங்கோ.

உண்மையாவோ...திமிரா இருந்தா திமிர்பிடிச்ச கழுதை எண்டெல்லோ பேசுறவங்கள் பெடியள்.திமிரான பெண்களைப் பிடிக்கும்.சரி ஒரு குறிப்பு !

ம்ம் .... ஆர் ஜெயந்தியில பழி போட்டது இப்ப.அகிலனுக்கும் தன்ர காதலை அழகா வெளிப்படுத்தத் தெரியேல்ல.சாதி,அவவின்ர குணத்தால பயந்துபோய் படார் திடீரெண்டு எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டார்....ஆனால் அவருக்கென்ன.பாவம் ஜெயந்திதானே.இதே கதையை இன்னும் அழகாக்கியிருக்கலாம்.விட்டிட்டன்.இப்ப கவலையாயிருக்கு

நன்றி துஷிக்குட்டி.நிறைய கல்யாண வேலைகளுக்கு நடுவிலயும் வந்து அக்காச்சியைச் சந்தோஷப்படுத்தினதுக்கு !

ஹேமா said...

ஆகா.....பாவம் இந்த பெல்.ஏன்தான் இந்த பூஸார் துரத்திக் துரத்திக் குதறுவாரோ.எத்தினை கடிதான் வாங்குறார் பாவம்.

//விவேக் ஒரு படத்தில சொல்லுவார்.... மார்டன் ட்ரெஸ் மங்காத்தாக்கள் எண்டு......!!! //

அதிரா.....கவனிச்சீங்களே......உங்களை மங்காத்தா எண்டு சொல்லிப்போட்டார்.இதுக்கொரு செய்வினை இல்லாட்டி நேத்திக்கடன்..........என்ன இருந்தாலும் மணியத்தாருக்கு அதிராவிலயும் என்னிலயும் நல்ல விருப்பம்.அதாலதான் மணியம் கஃபேல மிஞ்சுறதெல்லாம் அள்ளிக்கட்டிக்கொண்டு வந்து தாறவர்.அதுக்குப்பிறகு பேதி போறது அது வேற விஷயம்...!

அதிரா....முந்தி ஒரு நேரத்தில நினைச்சிருக்கிறன்.மணியத்தார் நல்ல ஒரு ரசிகன்.அதேபோல எங்கட அரசியலும் நிறையத் தெரியும்.உளவியல் படிச்சிருக்கிறார்.அப்ப என்ர கவிதைகளுக்கெல்லாம் அவரின்ர தெளிவான ஆழமான கருத்துக்கள் கிடைக்குமோ எண்டு நினைப்பன்.இப்ப அந்தக் குறையைத் தீர்த்திட்டார் மணியத்தார்.அவருக்கு நான் இந்த இடத்தில நிறைய நிறைய நன்றி சொல்லிக்கொள்றன்.

இப்ப என்ர பதிவுகளெண்டா மணியம் கஃபேல மாவாட்டிக்கொண்டேகூட பதில் சொல்றார்.சரியான சந்தோஷமும் கூட.அதிரா.....அந்த ரோஸ் கலர் டிஷ்யூ தாங்கோ.கண் கலங்குதப்பா.....நான் இப்பிடிக் கதைச்சால் பெல்லும் அழுதிடுவார்......சரி சரி ஒரேஃபீலிங் எண்டா அதிராவுக்கும் பிடிக்காது.சரி வாறன் நாளைக்கு !

Unknown said...

hi akka எப்படி சுகம்? ஆண் பெண் பாகு பாடு கடந்து இப்போ உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது..... அழகான கருத்து சொல்லியிருக்கின்றீர்கள் அக்கா. இலகுவான எழுத்து நடை உங்களுடையது..

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே !சுகமாக இருக்கிறீர்களா?

Yoga.S. said...

இது கதையல்ல,நிஜம்.இன்றும்,எங்கள் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆறாத,மாறாத வடு.இந்தக் கதைக்கு/நிஜத்துக்கு பூசி மெழுகுதல் எல்லாம் அவசியமே இல்லை என்பது என் கருத்து! நிகழ்ந்த/நிகழும் ஓர் உண்மைக்கு ஜெயந்தியின் அழகை வர்ணிப்பதும்,அகிலனின் உயரத்தை அளவிடுவதும் தேவையற்றது.கருத்தைப் பற்றிப் பிடித்தோமா,என்ன செய்ய வேண்டும்/செய்யலாம் என்று சிந்திப்பது,அல்ல நடாத்துவது ஒன்றே கவனிக்கப்பட வேண்டியது.எத்தனை பேர்(வருங்கால சந்ததி பெருக்குவோர்)இத்தடையை உடைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதே!(கருத்தெழுதும் நான் எண்பதுகளிலேயே உடைத்து விட்டேன்)இந்தக் கதை/நிஜம் பகிர்ந்து கொண்ட மகளுக்குப் பாராட்டுகள்!வருவோர் கருத்தை உள்ளிடுங்கள்!நன்றி!!!!

Yoga.S. said...

நிலவன்பன் said...

முதற்பக்கத்தில் Readmore லிங்க் வைக்கவும் - நான் கதையே அவ்வளவுதானோ என்று நினைத்துவிட்டேன்./////தலைப்பை மறுபடி கிளிக் கினால் முழுப் பதிவும் வரும்,நிலவன்பரே!

K said...

அதிரா....முந்தி ஒரு நேரத்தில நினைச்சிருக்கிறன்.மணியத்தார் நல்ல ஒரு ரசிகன்.அதேபோல எங்கட அரசியலும் நிறையத் தெரியும்.உளவியல் படிச்சிருக்கிறார்.அப்ப என்ர கவிதைகளுக்கெல்லாம் அவரின்ர தெளிவான ஆழமான கருத்துக்கள் கிடைக்குமோ எண்டு நினைப்பன்.இப்ப அந்தக் குறையைத் தீர்த்திட்டார் மணியத்தார்.அவருக்கு நான் இந்த இடத்தில நிறைய நிறைய நன்றி சொல்லிக்கொள்றன்./////////

அய்யோ, அய்யோ ப்ளீஸ் ப்ளீஸ் ஹேமா இந்த்க் கொமெண்டை நீக்கிடுங்கோ! இப்ப என்னத்துக்கு இந்தப் புகழாரம்? எனக்கு ஒரே கூச்சமாவும் சங்கடமாவும் இருக்கு! உளவியல் எண்டது உலகத்தில இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியுமப்பா! அதென்னா பெரிய அணுகுண்டு ரகசியமோ?

இனிமேல் இப்படி நன்றி பாராட்டெல்லாம் சொன்னால், நான் வெக்கத்தில, கொமெண்டே போடமாட்டன் :-))

ஆ.... ஹேமா சொல்ல மறந்துட்டேன்! திங்கட்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-))

சத்ரியன் said...

காலத்தின் முன் கர்வம் மண்டியிட்டே ஆகவேண்டும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

யோகா அண்ணன் நலம்தானே?.. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.. அதுக்காக நினைக்காமல் இருக்கவும் முடியாது... இதுவும் கடந்து போகும்..

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அதிரா....முந்தி ஒரு நேரத்தில நினைச்சிருக்கிறன்.மணியத்தார் நல்ல ஒரு ரசிகன்.அதேபோல எங்கட அரசியலும் நிறையத் தெரியும்.உளவியல் படிச்சிருக்கிறார்.அப்ப என்ர கவிதைகளுக்கெல்லாம் அவரின்ர தெளிவான ஆழமான கருத்துக்கள் கிடைக்குமோ எண்டு நினைப்பன்//////


ஆஆஆஆ... ஹேமா... முந்தி நிரூபனின் புளொக்கில.. உந்தக் கண்ணாடி போட்டவரின் பின்னூட்டம் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பன்... அப்படி இருக்கும் நகைச்சுவை.. ஆனால் கதைக்கப் பயம்.. கதைக்கப் போக எனக்கும் ஏதும் ஏடாகூடமான பதிலைச் சொல்லிட்டால்ல்.. என:)).

ஆனா ஒருநாள்கூட அவரின் புளொக் சென்று படித்ததில்லை அப்போ..

இப்போ மணியம் கஃபே ஓபின் பண்ணிய பின்புதானே.. அங்கதானே பிரேக் ஃபெஸ்ட்ல இருந்து டின்னர் வரைக்கும் நடக்குது.. பார்த்தீங்களோ காலமாற்றத்தை:)).. இதுவும் கடந்து போகுமோ?:))

Anonymous said...

அக்கா கதை படிச்சி பொத்தினான் ...என்ன அக்கா கடைசில் பிரிச்சி வைக்குரிங்கள் ......சேர்ந்த நல்லா இருக்ந்து இருக்கும் ..


மாமா கொஞ்சம் டீப் ஆ யோசிக்கிரான்கள் ...

Anonymous said...

கவிதாயினி கதை கவிதை போல...போன்ல தான் படிக்க முடிந்தது ஹேமா...

ஜெயா said...

கதை அழகு. கதையின் கருவும் அழகு.. பாராட்டுக்கள் ஹேமா..

கீதமஞ்சரி said...

நிதர்சனமான கதை ஹேமா. காலம் கடந்து யோசிக்கும்போதுதான் தவறு தெரியவருகிறது. அகிலனை ஜெயந்தி மறுத்தக் காரணம், அவளொரு சூழ்நிலைக் கைதி என்பதையே காட்டுகிறது. அவளுக்குப் பிடித்திருந்தாலும் வீட்டினரின் விருப்பம்போலவே நடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். இல்லையென்றால் இந்தப் பதினைந்து வருட காலத்தில் தன் மனத்துக்குப் பிடித்தமான ஒருவரையுமேவா அவள் மனம் தேர்ந்தெடுத்திருக்காமல் இருந்திருக்கும்?

அகிலனைப் பொறுத்தவரை மயிரைக் கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை, போனால் மயிர் என்னும் எண்ணம் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் ஜெயந்தியின் காட்டமான பதிலடியால் மனம் கலங்கிப் போயிருக்கும் என்பது உண்மை. ஆனாலும் மறுத்தவள் முன் வாழ்ந்துகாட்டவேண்டிய வைராக்கியமும் மனத்துள் குடிகொண்டிருக்கவேண்டும். அதனாலேயே ஜெயந்தியின் கண்பார்வையில் மகளையும் மனைவியையும் தொட்டணைத்துப் போகும் நிலை.

எப்படியிருந்தாலும் ஜெயந்தியின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. மனம் தொட்டக் கதைக்குப் பாராட்டுகள் ஹேமா.

குறையொன்றுமில்லை. said...

ஹேமா கதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!நலமா???

K said...

ஆஆஆஆ... ஹேமா... முந்தி நிரூபனின் புளொக்கில.. உந்தக் கண்ணாடி போட்டவரின் பின்னூட்டம் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பன்... அப்படி இருக்கும் நகைச்சுவை.. ஆனால் கதைக்கப் பயம்.. கதைக்கப் போக எனக்கும் ஏதும் ஏடாகூடமான பதிலைச் சொல்லிட்டால்ல்.. என:))./////////

அட, இப்பதானே கவனிக்கிறன்! அப்பிடியோ நினைச்சனியள்? அது சரிதான் முந்தி ஒரே ஏடாகூடமாத்தான் பதிவுகளும் கொமெண்டுகளும் இருந்திச்சு! ஆனா பழக வருபவர்களோடு இண்டீசெண்டா பழகுவதில்லை!

மற்றது உங்களோடு பழக நேர்ந்தது ஒரு சுவாரசியமான விஷயம்!:-)) அதைப் பற்றி பிறகு எப்பயாவது எழுதுறன்! - எல்லா நன்றியும் நிரூபனுக்குத்தான் சொல்லோணும் :-)))

ஆனா ஒருநாள்கூட அவரின் புளொக் சென்று படித்ததில்லை அப்போ..

ம்...... தெரியும்! ஏனோ ஓ.வ.நாராயணனைப் பிடிக்கேலை எண்டு முன்னம் நீங்கள் எங்கேயோ எழுதியிருந்ததைப் பார்த்தேன் :-(


///இப்போ மணியம் கஃபே ஓபின் பண்ணிய பின்புதானே.. அங்கதானே பிரேக் ஃபெஸ்ட்ல இருந்து டின்னர் வரைக்கும் நடக்குது.. பார்த்தீங்களோ காலமாற்றத்தை:))

ஹா ஹா ஹா ம்.... உண்மைதான்! அதே மாதிரி தானே என் பக்கத்திலும்! அங்கே வந்து கொமெண்டு போடுவது, பதில்களைப் படிப்பது எல்லாமே மிகப் பெரிய ரிலாக்ஸ்!:-))

////// இதுவும் கடந்து போகுமோ?:))//////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! பொஸிட்டிவ்வா நினையுங்கோ? ஏன் கடந்து போகும்? ஏன் கடந்து போகோணும்??

சரி சரி ஹேமா வீட்டில வந்திருந்து கொண்டு நாங்கள் எங்கட கதையள் கதைச்சுக்கொண்டு இருக்கிறம்! :-))இனியும் கதைச்சுக்கொண்டு நிண்டா ஏப்பைக் காம்பால தான் அடிவிழும்! அதால மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! :-)))

K said...

அட சொல்ல மறந்துட்டேன்! ஹேமாவுக்கு காலை வணக்கம்! செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-)))

அடுத்த சிறுகதை எப்ப போடுவியள்? :-))))

கலா said...

காலம் கடந்தபின் ! \\\\\\\\
ஆமா ஹேமா, அனைவர் வாயிலும் இருந்து வெளிப்படும் இச்சொல்
தாமதமாகவே,,,,,,,,....
நல்ல வெளிக்காட்டல்,ஹேமா!

விச்சு said...

வணக்கம் மேடம்...

விச்சு said...

ஹேமா எங்க போயிட்டீங்க?

பால கணேஷ் said...

முதல் தடவையா 95 கமெண்ட்டுக்கப்புறம் வரேன். பதிவை கவனிக்காம விட்டதுக்கு வெக்கமா இருக்கு ஃப்ரெண்ட்! ஸாரி! அழகான மனதைத் தொடுற சிறுகதை தந்திருக்கீங்க. கர்வம் என்றாவது ஒரு நாள் வேதனையைத் தான் தரும்கறது நிதர்சன உண்மை. அழகாவே அது கதையாகியிருக்குது.

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!நலமா???

Yoga.S. said...

மாலை வணக்கம்,மகளே!

Yoga.S. said...

இன்றைக்கும் பிற்பகல் வேலையாக இருக்கும்,ஹும்!

Yoga.S. said...

100. ஹலோ,ஹலோ !ஒருத்தரையும் காணேல்ல!

ஹேமா said...

வாங்கோ நேசன்....வாழ்வியலை வடிவாச் சொல்லியிருக்கிறீங்கள்.வாழ்க்கை அவசரமில்லாமல் நகரவேணும்.அதுதான் நல்லாயிருக்கும்.அகிலன் அவசர அவசரமா கேட்டார்.முடிவெடுத்திட்டார்.இதில கவிதை எழுதிற என்னை கதை எழுதவிட்டதால வந்த அவசர புத்தியுமா இருக்கலாம்.இதுக்கெல்லாம் மணிதான் காரணம்.ஒரு சிறுகதை எழுதுங்கோ கனநாளாச்சு எண்டார்.மனசில சொல்லவெண்டு இருந்ததை நானும் அவசர அவசரமாச் சொலிப்போட்டன்.இதுதான் நடந்தது.அடுத்த கதை யோசிச்சு நிதானமா வரும்.பாருங்களேன்.அதுசரி...2 கொமண்டை ஏன் அழிச்சனீங்கள்.அதில மனைவியைக் கூப்பிட்டுத் திருமணம் செய்யும் சிக்கல் இருந்தது.நானும் யோசிக்காமல்தான் எழுதியிருந்தேன்.நன்றி தெளிவாக்கியதுக்கு !

ஹேமா said...

//athira said...

20 May, 2012 14:24
மாத்தியோசி - மணி said...
ஹேமா, இதில நாங்கள் போடுற எல்லாக் கொமெண்ட்ஸ்க்கும் பதில் சொல்லோணும் சொல்லிப் போட்டன்! இல்லாட்டி இந்தப் பக்கம் வரவே மாட்டன் பிறகு!////

மீயும்...மீயும் இதை ஆமோதிக்கிறேன்ன்.. சொல்லிட்டேன் ஆமா:)) பிறகு உப்புமடச் சந்திக்கு, தேம்ஸ் தண்ணியில அள்ளிக்கொண்டு வந்து ஊத்திப்போடுவன் தெரியுமோ?:))//
என்னை ரெண்டு பேருமாச் சேர்ந்து வெருட்டாதேங்கோ.நானே போய் எங்கட சுவிஸ்ல ஓடுற ஆத்தில விழுந்திடுறன்.ஒண்டு சென்னிக்க இல்லாட்டி தேம்ஸ்க்க வந்து தலை காட்டுவன்.தூக்கிப்போடுங்கோ.இன்னும் கொஞ்சக் காலம் நிறைய எழுதக் கிடக்கு !

மணியத்தார்....வராம விட்டிட்டுப் போய்டுவீங்களோ.லாச்சப்பல் வந்து மணியம் கஃபேக்கு முன்னால உண்ணாவிரதம் இருப்பன்.வந்தாத்தான் உங்கட கடை வடை சாப்பிடுவன் எண்டு.அட...கடை...வடை...அடுத்த கவிதைக்குத் தலைப்பு....ஹாஹாஹாஹஹா !

மனம் பொருந்துறது கட்டாயம் அதிரா.மணியத்தாருக்கும் கருப்புக் கண்ணாடிப்பொருத்தம் பாக்காம மனக்கண்ணாடி பொருந்துதோ எண்டுதான் பாத்துப் பொம்பிளை பாருங்கோ.இல்லாட்டி பாவம் அவர்.அந்தச் சுவீட்டி ஆர் தெரியுமோ.........அவர் தனக்கு ஆர் மனைவியா வருகினமோ அவையளைச் சுவீட்டி எண்டுதானாம் செல்லமாக் கூப்பிடுவார்.முகப்புத்தகத்தில சொன்னவர்.அதுக்காக கொப்பி-பேஸ்ட் எல்லாம் கேக்கப்படாது !

அதிராவுக்கும் மணிக்கும் நிறைய நன்றியும் சந்தோஷமும் சொல்றன்.உப்புமடச்சந்தி கலகலப்பா இருக்கு.நீங்கள் ரெண்டு பேரும் கதைக்கிறதைப் பார்க்க எனக்குப் பொறாமையாய்க்கூட இருக்கு.எனக்கு இப்பிடிக் கதைக்க வருதில்லை.இதுதான் அன்பு,விட்டுக்குடுப்பு.ம்ம்...இதுவும் கடந்துபோகும் எண்டு அதிரா சொன்னது பெரிய தத்துவம்.எத்தனையோ கடந்திருக்கிறம்.இன்னும் இன்னும் !

மணி....அடுத்த கதை கேட்டிருக்கிறீங்கள்.இருக்கு கதை எடுத்து விடுவமில்ல.உங்களைப்போல ரேடியோவுக்கெல்லாம் கதை எழுதிட்டு அமுக்கி வாசிக்கேல்ல நான்.என்னமோ எனக்குத் தெரிஞ்சதை இன்னும் எழுத முயற்சிக்கிறன் உங்கட ஊக்கத்தோட.நன்றி உங்களுக்கும் !

ஹேமா said...

கலை.....அடுத்த கதை சந்தோஷமான கதைதான் சரியோ.என்ர செல்லம் கலைக்குட்டிக்காக.பிரிச்சு வைக்காம கவலையில்லாத கதை.இதுகூட காக்கான்ர சந்தோஷத்துக்காக நான் செய்யமாட்டேனோ !

அப்பா...உங்கட ஊக்கம் தரும் வார்த்தைகள் உச்சிவரைக்கும் குளிர்ந்து சந்தோஷம் தருது.உண்மையாய் என் அப்பா தரும் வார்த்தைகளை உங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறன்.ஆனால் இந்தக் கதைக்கு இன்னும் மெருகு பூசியிருக்கலாமோ எண்டிருக்கு.அதைதான் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.அவசர அவசரமா மனசில நினைச்சதை எழுதிட்டன்.ஆனாலும் இத்தனை ஊக்கங்கள் போதும்.இன்னும் எழுதுவேனே.அப்பாவின் ஆசீர்வாதங்கள் எப்போதும் வேணும் !

ஹேமா said...

சத்ரியா....காலம் கர்வம்....மண்டியிடும் நேரம் காலம் கடந்து நரை விழுந்திடும்.அதுதான் பிரச்சனை.வாழுகிற நேரம் தள்ளிப்போய் தள்ளாத வயதில்தால் உணர முடியுது.நன்றி உங்களுக்கும் !

ரெவரி....எல்லாரும் கதை இன்னும் அழுத்தமா அழகா வந்திருக்கலாம் எண்டு சொல்லுகினம்.நீங்கள் கவிதைபோல எண்டு புகழாரம் சூட்டுறீங்கள்.எனக்கு வெக்கமாக்கிடக்கு !

ஜெயா....உண்மையா மனம் திறந்து சொல்றன்.என்னைத் தொடரும் அன்பான தோழி நீங்கள்.இன்றுவரை நீங்கள் என்னிடம் வெளிப்பட்டதில்லை.ஜேர்மனியில் இருக்கிறீங்கள் எண்டு மட்டும் என் ஊகம்.சுகம்தானே ஜெயா.என்னைப்போலவே கூலி கேட்காமல் சுமைகளைத் தூக்குவதும் புரியும்.இப்படி இடைக்கிடை தலைகாட்டுறது மட்டற்ற மகிழ்ச்சி ஜெயா.சுகமா சந்தோஷமா இருந்துகொள்ளுங்கோ.வேற என்ன சொல்ல இருக்கு எனக்கு !

கீதா...முழுதுமாய்ப் புரிந்த பின்னூட்டம்.கதையை நான் எப்படி மனதில் நினைத்தேனோ அப்படியே.....உண்மைதான் கீதா காதல்,சாதி,காத்திருப்பு,சவால் எல்லாமே கல்ந்திருப்பதாய்த்தான் நான் நினைத்து எழுதினேன்.அதைச் சரிவர வெளிக்கொணரத் தவறிவிட்டேன்.அழகாக பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி நன்றி !

லஷ்மி அம்மா...நீங்கள் எழுதும் கதைகளை நேரம் கிடைக்கிற நேரங்களில் வந்து வாசித்து சந்தோஷப்படுவேன்.உங்களிடமிருந்து படிக்க நிறையவே இருக்கிறது எனக்கு.ஊக்கம் தரும் வார்த்தைக்கு நன்றியம்மா !


விச்சு...வாத்தியாரே வாங்கோ.உங்களுக்கு நான் ஆள் ரெடி பண்றன்.எதுக்கெண்டு கேக்கப்படாது.வெய்ட் அண் சீ ....!

கணேஸ்...என் ஃப்ரெண்ட்.என்னோட ஃப்ரெண்ட் மட்டும்.என்ன இது கடைசி முதல் எண்டு சொல்லிக்கொண்டு.எப்பவும் உங்கட வருகை இருந்தாலே போதும்.நீங்கள் 2-3 நாளா ஊர்ல இல்லப்போல.இதுக்கெல்லாம் வருத்தப்படலாமோ.எனக்கும் கஸ்டம் இது.பிடியுங்கோ இந்தாங்கோ.விச்சுவுக்கும் கலைக்கும் சொல்லதேங்கோ.கை நிறையச் சொக்லேட்.நிரஞ்சனாக்குட்டிக்கு மட்டும் ஒண்டு குடுங்கோ.இனி இப்பிடியெல்லாம் சொல்லி என்னையும் கஸ்டப்பட வைக்காதேங்கோ ஃப்ரெண்ட்.என் அன்பு எப்பவும் இருக்கும்!

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா !இன்றைய பொழுது நல்லபடியாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!

Yoga.S. said...

ஒரே மூச்சில் எல்லோருக்கும் பதிலும்,கூடவே நன்றியும் சொல்லியிருக்கிறீர்கள்,மகளே!அப்பாவுக்கு எதற்கு நன்றி எல்லாம்?நான் யதார்த்தத்தை குறிப்பிட்டேன்!மெருகூட்டுவதற்கெல்லாம் பொழுது வேண்டுமே?சாதாரணமாக சொல்ல வந்த கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.அது போதும் என்று நான் நினைத்தேன்,அவ்வளவுதான்!

விச்சு said...

என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சாக்லெட்டெல்லாம் குடுக்கறீங்க. கலைக்கும் கிடையாதா? ஓகே!எங்களுக்கு ஸ்பெசலா நீங்களே சமையல் செய்து கொடுத்தால் வேண்டாம்னா சொல்லப்போறோம்....

கவியாழி said...

அகிலனின் விருப்பத்தை ஜெயந்தி ஏற்று கொண்டிருந்தாள் அவளுக்கும் அதுபோல ஆணோ பெண்ணோ பிறந்திருக்கலாம்? ஆனால் அவளின் தலைக்கணம் இன்னும் ஏக்கத்தை மட்டுமே விதியாய் காக்கவைத்துள்ளது,பாவம் ஜெயந்தி

Paul Jeyaseelan said...

Why don't you write now?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP