Friday, June 08, 2012

இசைத் தந்தையின் பிரசவம் !


இசை எளிமையான விஷயம்தான்.ஆனால் அதைச் சிக்கலாக்கியது நாமே என்றார் இசைஞானி இளையராஜா.

ஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சண்டை பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த அரக்கனை எப்படி வீழ்த்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.அதனால் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று வழி கேட்கின்றனர்.'அவனைப் புகழத் தொடங்குங்கள்.ஏனென்றால் ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும்.அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்' என்றார் கிருஷ்ண பரமாத்மா.

இதை ஏன் சொல்கிறேனென்றால்...புகழ் என்பதைத் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டம்.இந்தப் புகழ் என்பது ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

மொழியை விட இசை உயர்ந்தது என்று சொல்லலாம்.உதாரணத்திற்கு ஒரு பெயரை நீங்கள் தலைகீழாகப் படிக்க முடியுமா?அல்லது அப்படித் தலைகீழாகத்தான் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? ஆனால் ‘ச.. ரி.. க.. ம' என்ற ஸ்வரத்தை ‘ம.. க.. ரி.. ச..' என்று பாடலாம். இசையால் கடந்த காலத்துக்கும் போகலாம்.எதிர்காலத்துக்கும் போகலாம்.மேலேயும் போகலாம்.கீழேயும் போகலாம்.இந்தப் பக்கமும் போகலாம்.அந்தப் பக்கமும் போகலாம்.

எந்தப் பக்கமும் போகலாம்....என்று ஆகிவிட்டது இசை.எதுவுமே செய்ய வேண்டாம்.எல்லாம் ரெடியாக இருக்கிறது.சமைத்துவைத்து ரெடியாக இருக்கிறது.அதை எடுத்து மேடையில் வைத்து சாப்பிடவேண்டியதுதான் என்று ஆகிவிட்டது இசை.தாய் நமக்கு எப்படி உணவு கொடுத்தாளோ...அப்படிக் கொடுத்த காலங்கள் முடிந்துவிட்டது.ஒரு தாய் தரும் வெறும் தயிர் சாதத்தில் இல்லாத அன்பா அடைபட்ட உணவில் இருக்கிறது? எவனுக்கோ செய்ததை நீ போய் சாப்பிடுகிறாய்.அது உனக்காகப் பண்ணப்பட்டதில்லை.

நாம் எவ்வளவோ படிக்கிறோம்.ஆனால் எது நம் மனதில் நிற்கிறது?அதுதான் உண்மையான விஷயம்.'இவர் பாமரனுக்கும் புரியும்வகையில் இசையமைத்தார்' என்று ஏதோ பெரிய மலையை நான் முறித்துவிட்டது போலப் பேசுகின்றனர்.

ஆனால் இசை என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல.இசை எளிமையானது... அதை நாம்தான் சிக்கலாக்கிவிட்டோம்!

போன மாதம் எனக்கு லண்டனில் ரெக்கார்டிங் இருந்தது.ஒரு நாலுபேர் பாடுவதற்கு வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே வந்துவிட்டனர்.அவர்கள் மொத்தம் பாடவேண்டியிருந்த பகுதி ஒரு எட்டு 'பார்' மட்டுமே.அதைப் பாடுவதற்கு அவர்கள் காலையில் இருந்து பயிற்சி எடுத்து எடுத்துக் கடைசியில் மைக் முன்னால் வந்து நின்றதும் நான் எழுதியிருந்ததைப் போல அவர்களால் பாட முடியாமல் போயிற்று.

அதன்பின்பு நான் அவர்களை அனுப்பச் சொல்லிவிட்டு அந்த நாலு குரல்களையும் நானே நான்கு ட்ராக்குகளில் பாடிமுடித்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டேன். அங்கே எனக்கு 3 உதவியாளர்கள் இருந்தனர்.அவர்கள் மூவரும் கம்போஸர்கள். அவர்களுள் ஒரு பெண்மணி பிராட்வே மியூசிக்கில் கம்போஸ் செய்பவர்.நான் பாடி முடித்து வெளியே வந்து பார்த்தால் அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது."."You made it very simple.Music is that much simple.They made it complicated.They wasted the whole day just for 8 Bars" என்றாள் அழுதுகொண்டே!

ஆக...இசை என்பது எளிமையாகத்தான் இருக்கிறது.எளிமையான விஷயத்தைப் புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம்?'என் பாடல்களைக் கேளுங்கள்' என்று நான் யாரிடமாவது போய்ச் சொல்ல முடியுமா?அல்லது யாருமேதான் அப்படிச் சொல்லிவிடமுடியுமா?'என் பாடல்களைக் கேளுங்கள்'என்று நான் எப்போதாவது உங்களிடம் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேனா?வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

இசை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்த காலத்தில் எங்கே சென்று யாரிடம் கற்றுக்கொள்வது என்று தெரியாது.நான் பிறந்த கிராமத்தில் இசையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கூட அதைச் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை.அதனால்தான் 'தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே' என்று நான் சொல்வதுண்டு.

ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம்.இது நன்றாய் இருக்கிறதே...அது நன்றாய் இருக்கிறதே...என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

'அம்மா.. நாங்கள் சென்னைக்குப் போகவேண்டும்.எங்களுக்குப் பணம் கொடுங்கள்' என்று அம்மாவிடம் கேட்டபோது,வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார்கள்.அந்த 400 ரூபாயில் ஒரு 50 ரூபாயை தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை எங்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா அந்தத் தாய்?

ஆனால் அப்படிக் கொடுக்கவில்லை.இதுதானே கல்வி.இதை யார் கற்றுக் கொடுத்துவிட முடியும்? எந்த யுனிவர்சிட்டியால் கற்றுத் தந்துவிடமுடியும்?அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த எங்களுக்கும், அந்த 400 ரூபாயில் ஒரு 200 ரூபாயை எடுத்து அம்மாவிடம் செலவுக்குக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தோன்றவில்லை.அந்தப் பண்பு வரவில்லை.அம்மா.. என்பது அம்மாதான்.ஒரு வருடம் கோமாவில் இருந்து என் தாய் மரித்துப் போனார்கள்.அத்துடன் என் கண்ணீர் எல்லாம் போய்விட்டது!

இந்த உலகம் கருத்துக்கள் சொல்பவர்களால் நிரம்பி வழிகிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள். எதை எடுத்துக்கொள்வது... எதைத் தள்ளுவது என்று தெரியவில்லை. இதெல்லாம் இல்லாமல் இறைவன் இசையைக் கொடுத்து 'இங்கேயே கிட' என்று என்னைப் பணித்துவிட்டான்.அதற்கு நான் இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இங்கே இறைவணக்கம் பாடிய குழந்தை மிகவும் அழகாகப் பாடினாள்.இப்படிப்பட்ட இசை இருந்தால் இறைவன் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

இசையைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. நாம் பாடவேண்டாம்.ஒரு இசையை மனதில் நினைத்தாலே எவ்வளவு இன்பம் பிறக்கிறது?'தாலாட்ட வருவாளா.....'வாக இருக்கட்டும், 'தென்றல் வந்து தீண்டும்போது....'வாக இருக்கட்டும்,'அம்மா என்றழைக்காத....'வாக இருக்கட்டும், 'ஜனனி ஜனனி....'யாக இருக்கட்டும்... பாடல்களை நினைத்தவுடனேயே உங்களுக்கு இன்பம் பிறக்கிறதா இல்லையா?அந்தப் பாடல் உங்களுக்கு உள்ளே ஓடுகிறதா இல்லையா?அதுதான் தியானம்.

நீங்கள் கோவிலுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டாலும்,ஒரு நிமிஷம் உங்கள் மனது உங்களிடத்தில் நிற்கிறதா?நம் மனது நிற்பதில்லை.ஆனால் நான்கு நிமிடம் ஒரு பாடலைக் கேட்டு உங்கள் மனது அப்படியே நிற்கிறது என்றால்,அதை என்னவென்று சொல்வது?இது எப்படி நடக்கிறது நான் நடத்துகிறேனா?'நான்கு நிமிடங்கள் நீங்கள் வேறெதுவும் நினைக்காமல் பாடலைக் கவனியுங்கள்' என்று நான் உங்களிடம் சொல்கிறேனா? அந்தப் பாடல் உங்களைப் பிடித்து இழுக்கிறது.

இசை என்பது அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தது.அது சுத்தமாக இருந்தால் அந்த சக்தி இருக்கும்.சுத்தமாக இல்லையென்றால் அந்த சக்தி இருக்காது.எது சுத்தம்,எது அசுத்தம் என்பது இசையில் கிடையாது.அபஸ்வரம் இல்லையென்றால் இசையே இல்லை.ஆனால் அபஸ்வரம் எந்த இடத்தில் இருக்கவேண்டுமோ அந்த இடத்தில் இருக்கவேண்டும். தூரத்தில் இருக்கவேண்டும்.

ஒரு கோபக்காரர் நம் எதிரில் வந்தால்,'இந்த ஆள் எதற்கு வந்தான்?'என்று நமக்குக் கோபம் வருகிறது.அந்தக் கோபம் அவனிடமிருந்தா நமக்கு வருகிறது?அந்தக் கோபம் அவன் நமக்குக் கொடுப்பதில்லை.தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இசை என்பது உலகில் உள்ள சகல ஜீவராசிகளின் இதயத் துடிப்பு.இதயம் என்பது ஒரு சீரான கதியில் துடிக்க வேண்டும்.ஒருவருக்கு வேகமாக,ஒருவருக்கு மெதுவாக என ஏதாவது ஒரு தாளத்தில்தான் இதயம் துடிக்கிறது.

என்கிறார் இசையின் தந்தை இளையராஜா.

67 comments:

Kumaran said...

உண்மை. அருமை.

sury siva said...

இந்த ஏழு ஸ்வரங்களுக்குள் இப்புவயின் காற்றலைகள் எல்லாமே சங்கமம்.
அந்த காற்றலைகளின் துடிப்பை உணர்ந்தவன் ஈசனையும் உணர்கிறான்.
அதனாலே தான் நாதோபாஸனா என்று இறைவனை நாத வழியாக வழிபடும் முறை நம்மிடத்தே உளது.

சுப்பு ரத்தினம்.

Unknown said...

நீங்களுமா? :-)
ம்ம்...நிறைய விஷயங்கள் உண்மைதான் ஆனாலும் இசை அறிந்தவர்களுக்கு மட்டுமே எளிமையாக இருக்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் ரசிப்பதற்கு எதுவும் தடையில்லை!

//ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம்//
நாங்களும் நல்ல கலைஞனை இழந்திருப்போம்!

MARI The Great said...

புகழ்ச்சி தரும் போதை யாரையும் வீழ்த்திவிடும் ..!

Anonymous said...

படைப்பாளிக்கே உள்ள கர்வமும் செருக்கும் அவருக்கு கொஞ்சம் ஜாஸ்தி...

இருந்தும் அவரது இசைக்கு மட்டும் நான் அடிமை...

பால கணேஷ் said...

புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாரும் உண்டா? அதைப் பற்றிய கருத்தையும், இளையராஜாவின் அனுபவங்களையும் மிக ரசித்தேன். அருமையான பகிர்வு!

Yoga.S. said...

இத்தனை உச்சம் சென்றும் ,இன்னும் இசையைத் தேடிக் கொண்டே தான் இருக்கிறோம் என்று ஒரு இசை நிகழ்ச்சியின் போது அவர் சொன்னார்!இந்தத் தன்னடக்கமே அவரை இன்றும் உச்சாணிக் கொம்பில் வைத்திருக்கிறது!

ராமலக்ஷ்மி said...

இசைஞானியைப் பற்றி அருமையான பகிர்வு.

வேர்கள் said...

ஹேமா ..
இளையராஜாவின் இந்த கருத்தை படிக்க தந்தமைக்கு நன்றி ... :)

Prem S said...

இசைஞானியின் இசைக்குமுன் இப்போது உள்ளவர்கள் நிற்க முடியாது

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆ..... வந்திட்டேன் ஆனா இல்லை...:)) நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்ன்:).

முற்றும் அறிந்த அதிரா said...

அந்தப் பக்கமும் போகலாம்.

எந்தப் பக்கமும் போகலாம்....என்று ஆகிவிட்டது இசை////

ஹா....ஹா... எங்கட புளொக்குகளைப்போல:))

முற்றும் அறிந்த அதிரா said...

தொகுப்பு மிக அருமை.

எனக்கு இளையராஜாவின் குரல் பாடல்கள் எனில் சூப்பராகப் பிடிக்கும்.

நான் தேடும் செவ்வந்திப்பூவிது..... நாள் பார்த்து அந்தியில் பூத்ததூஊஊஊஊஊ

மகேந்திரன் said...

வேற்றுமொழிப் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த
தமிழனை விருப்போடு தமிழ்ப் பாடல்களை கேட்டுப்பார்
என அள்ளி இறைத்துத் தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்...
இசையின் தந்தை என்று சொல்வது தகும் சகோதரி...

SELECTED ME said...

ஏரிக்கரை மேலிருந்து - எனக்கு மிகவும் பிடித்தது அவர் குரலுடன் முழுவதும் கலந்த இசை -

தனிமரம் said...

இந்தி இசையில் மயங்கிக்கிடந்த தமிழ்கத்தை சத்தம் இல்லாமல் புறக்கனிக்க வழி செய்தவர் ராஜா என்றார் மு.மேத்தா அது நிஜம் அவர் இசை பல மொழி பேசியது! உண்மை!

தனிமரம் said...

ராஜா போல் ஒரு வெண்பா புணைய யாரும் இல்லை சினிமாவில் வாலி சொன்னது!

தனிமரம் said...

அவரின் பாடல் இசை தாண்டி அவரின் கவிதைக்கு நான் அடிமை கருத்தாழம் மிக்கது இதயம் ஒரு கோவில் முதல் ஒருக்கனம் ஒரு யுகம் பிடிக்கும்! அடுக்கலாம் அதிகம்!

தனிமரம் said...

PREM.S said...
இசைஞானியின் இசைக்குமுன் இப்போது உள்ளவர்கள் நிற்க முடியாது

08 June, 2012 17:58// 100 வீகிதம் உண்மைதான் சகோ!

உலக சினிமா ரசிகன் said...

தன்னை சுற்றி ஒரு சிறு கூட்டம் வைத்துக்கொண்டு அவர்களுக்கு மட்டும் தொடர்ந்து இசையமைப்பது என்று சுருங்கிப்போனார்.
பாரதிராஜா,மணிரத்னம்,பாலச்சந்தர் என தொடர்ந்து ஜாம்பவன்களை புறக்கணித்தார்.
எஞ்சியிருந்தது ராமராஜனும்...ராஜ்கிரணும்தான்.

அவரது திறமைக்கு தமிழ் சினிமா சோளப்பொறிதான்.
ஆனால் அது மட்டும் போதும் என அந்த யானை பசியாறிவிட்டது.

Seeni said...

thaay thakaval!

arputham!

ஸ்ரீராம். said...

அழகாகப் பேசி இருக்கிறார் இளையராஜா.
உலக சினிமா ரசிகன் சொல்வது சரி. அவரின் கோபங்கள் ரசிகர்களுக்கு நஷ்டங்களாக முடிந்தன.
வாலி சொல்லியிருக்கிறார். வெண்பா எழுத அவருக்குக் கற்றுக் கொடுத்ததே, அதுவும் மிக எளிமையாக, இளையராஜாதான் என்று.
இந்த நிகழ்ச்சியில் அவர் எழுதிய இரு புத்தகங்கள் வெளியிட்டார். அவை என்னவென்று பார்க்க வேண்டும்.

கீதமஞ்சரி said...

இளையராஜாவின் பல பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும், மனதை உருக்கி கண்ணீர் வரவழைப்பவை. இசைக்கு அவராற்றும் தொண்டு வியக்கத்தக்கது. இந்நிலையிலும் தலையில் கனமில்லாமல் இருப்பது அவரது பெரும்பலம். அவரது கருத்துகளை அனைவருடனும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஹேமா.

Unknown said...

ராஜா இவர் தமிழ் சினிமாவின் இணையற்ற இசைக் கழஞ்சியம்...

அருமையான பதிவு அக்கா...

விச்சு said...

இளையராஜா என்றும் ராஜாதான். அவருடைய கருத்துக்கள் அனைத்தும் யதார்த்தம்.

செய்தாலி said...

ஒரு
விஷயம் சொல்லனும்மா

இன்றும்
உள்ளச் சலனத்தில்
உறங்காத இரவுகளில்
என்னை தாலாட்டுவது ராஜா சாரின்
பழைய பாடல்கள்தான்

ஆழ்ந்து
உறங்குபவனையும்
சற்றென தட்டு எழுப்பும் சத்தங்களாக
இன்றைய இசை

எனக்கு தெரிந்த ராஜா சார் பற்றி சொல்லனும்மா
எழுத எழுத நீளும் வார்த்தைகள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்ன ஹேமா நலம்தானே?

நெடுநாட்களாகி விட்டது எல்லோரையும் தொடர்ச்சியாக வாசித்து.

இப்போதுதான் எனக்குப் பிடித்த உப்புமடச் சந்திக்கும் வர இயலுகிறது.

இளையராஜாவின் இந்தக் கட்டுரை இசையை மட்டும் குறிக்கவில்லை. ஒரு கலைஞன் தன் வாழ்நாளில் தனக்குள் செய்யும் பயணம் அவன் வார்த்தைகளில் தெரியும்.

ஒரு ஞானியின் ஆன்மா முழுமையாய் வடிவுற்றிருக்கிறது அற்புதமான மொழியில்.

பகிர்வுக்கு நன்றி ஹேமா.

சசிகலா said...

இசை என்பது உலகில் உள்ள சகல ஜீவராசிகளின் இதயத் துடிப்பு. சிறப்பான ஒரு இசை அலசல் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ .

ராஜ நடராஜன் said...

மொத்த பின்னூட்டங்களும் உங்களுக்கும்,இளையராஜாவுக்கும் பக்கவாத்தியங்களே வாசிக்கின்றன.திருஷ்டிப் பொட்டாக என்னோட பின்னூட்டம்...

இப்பொழுதுதான் மதுர...அவர்கள் உண்மைகள் தளத்தில் இளையராஜா,பாரதிராஜா,வைரமுத்து மூவரும் ஈகோவால் இணையாமலே போனதுக்கு மூன்று மாசம் இவர்கள் மூவரையும் ஜெயிலில் வைக்க வேண்டுமென்று சொல்லி விட்டு வந்தேன்.

இளையராஜாவின் மொத்த தத்துவார்த்தமும் இந்த ஒற்றைப்பின்னூட்டத்தில் அடிபட்டு போக கடவது.

ஆத்மா said...

நான் AR 1 ரசிகனாக இருப்பது உண்மைதான் ஆனால் இசைஞானியோடு யாராவது AR ஐ ஒப்பிட்டு பேசினால் என் வாக்கு இசைஞானிக்குத்தான்.

ஆத்மா said...

'தாலாட்ட வருவாளா.....'வாக இருக்கட்டும், 'தென்றல் வந்து தீண்டும்போது....'வாக இருக்கட்டும்,'அம்மா என்றழைக்காத....'வாக இருக்கட்டும், 'ஜனனி ஜனனி....'யாக இருக்கட்டும்...//

எல்லாமே ஹிட்டுகள் தான்..:)

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஅ

Anonymous said...

என்னை ரேயினில் ஏற்றி விட்டுட்டு இங்க பதிவா ....டூ ஓஓஓஓஓ மச்

Anonymous said...

இளைய ராஜா அய்யா பாட்டு எப்போதுமே ஜூப்பர் ...


அழகா சொல்லி இருக்கீங்க அக்கா ...

Anonymous said...

ரெவெரி said...
படைப்பாளிக்கே உள்ள கர்வமும் செருக்கும் அவருக்கு கொஞ்சம் ஜாஸ்தி...

இருந்தும் அவரது இசைக்கு மட்டும் நான் அடிமை...///


அவ்வவ் அக்கா என்ன இது ...

ரே ரீ அண்ணா இப்புடி சொல்லிப் போட்டவை ....

Anonymous said...

Yoga.S. said...
இத்தனை உச்சம் சென்றும் ,இன்னும் இசையைத் தேடிக் கொண்டே தான் இருக்கிறோம் என்று ஒரு இசை நிகழ்ச்சியின் போது அவர் சொன்னார்!இந்தத் தன்னடக்கமே அவரை இன்றும் உச்சாணிக் கொம்பில் வைத்திருக்கிறது!///


மாமா ரே ரீ அண்ணா சொன்னதிளிருது எனக்கு ஒரேக் குயப்பமா ஈக்குதே ...

Yoga.S. said...

குழப்பமே வேண்டாம்,மருமகளே!ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுவை.இப்போ பாருங்க,அக்காவுக்கு பாகற்காய் புடிக்குதில்ல?சில பேருக்கு புடிக்காது!அது மாதிரி தான் இதுவும்.

Yoga.S. said...

கலை said...

என்னை ரேயினில் ஏற்றி விட்டுட்டு இங்க பதிவா ....டூ ஓஓஓஓஓ மச்!////ஒங்களை ரயில் ஏத்தி விட்டுட்டு,அக்கா தவிச்சது உங்களுக்குத் தெரியாதே?

முற்றும் அறிந்த அதிரா said...

ஹேஏஏஏஏஏஏஏஏமாஆஆஆஆஆஆஆஆஆ.. எங்க ஆரையுமே காணல்ல எல்லாமே வெளிச்சமாதிரி ஒரு உணர்வூஊஊஊஊஊ:)))

நிலாமகள் said...

ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும்.அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்'!!

மோகன்ஜி said...

மனம் தொட்ட பதிவு ஹேமா!

தனிமரம் said...

காலை வணக்கம் கவிதாயினி நலமா??? வானம் வெளித்த பின்னில் ஏன் அமைதியோ !

Angel said...

இசையரசருக்கு பாராட்டு .நான் காலம் தாழ்ந்து வந்து விட்டேனோ ?
ராஜா ராஜா தான் இசையில் .
இளைய நிலா பொழிகிறது பாடல் கேட்டால் நான் அப்படியே அமர்ந்துவிடுவேன் இது ஒரு எக்சாம்பிள் மட்டுமே .
எங்கே ஹேமா மிக பிசியா ??

Angel said...

நலமா இருக்கீங்களா யோகா அண்ணா /நேசன் /கலை /கலா மற்றும் அனைவரும் .
கலா அன்புடன் விசாரித்ததற்கு நன்றி .பூக்கள் மகரந்த பரவுவதால் இங்கே நிறையபேருக்கு அலர்ஜிஅதே தான் எனக்கும் .இப்ப எனக்கு பரவாயில்லை

Yoga.S. said...

இன்று பிறந்த நாள் காணும் கறுப்புப் பட்டி வீராங்கனை "கலா" வுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!

ஸ்ரீராம். said...

ஹேமா.... எங்கே ஆளையே காணோம்..... முன்பதிவு இல்லாமல் லீவு போடுதல் தவறு!!!! நலம்தானே....

//வீராங்கனை "கலா" வுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!//

'எங்கள்' வாழ்த்துகளும் இணைகின்றன சகோதரி!

Yoga.S. said...

கலர்,கலர் கலா கலர்!!!!!!ஸ்வீட் எடுங்கோ,கொண்டாடுங்கோ!!!!எனக்கும் அனுப்புங்கோ!!!!!!!உங்கள் நண்பி ஒண்டுமே சொல்லையில்ல ,நாங்க சொல்லித்தான் அவவுக்கே தெரியும்,ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!!!

ஜெய்லானி said...

http://www.youtube.com/watch?v=3i7MriPqt5k

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாட்டைப் போலவே ராசாவின் பேச்சும்
இனிமையும் எளிமையும் கலந்து காணப்படுகிறது.நல்ல பகிர்வு.

Angel said...

ஹேமா ,நலமா இருக்கீங்களா .

அம்பாளடியாள் said...

ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம்.இது நன்றாய் இருக்கிறதே...அது நன்றாய் இருக்கிறதே...என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
ஒரு அருமையான தலைப்பு இசைத் தந்தையின் இந்த இனிய பிரசவத்தை மெய் சிலிர்க்க பார்த்தும் கேட்டும் ரசிக்க வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி .

ஆட்டோமொபைல் said...

தொகுப்பு மிக மிக அருமை.

Unknown said...

நல்ல கருத்து.. இதற்க்காக உங்களை இப்போது பாராட்டுவதா திட்டுவதா என்று தெரியவில்லையே..

Unknown said...

அருமையான விளக்கமான தொகுப்பு... நன்றி...
நேரம் இருக்கும் போது வாருங்கள் தோழி... எனது தளம்..
வரிக்குதிரை

Angel said...

ஹேமா விரைவில் ஒரு பார்ட்டி :))நடக்க இருக்கு என் பக்கத்தில கலா அவர்களுக்கு தெரியப்படுத்துங்க .
info viraivil varum

Unknown said...

அருமையான நிகய்ச்சி படம் பிடித்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

தானே பெரியோன் என்றெண்ணித்
தாவிக் குதித்தே ஆடுபவன்,
தேனே நிறைந்த சொல்லிருக்க
தேள்போல் கொட்டிப் பேசுபவன்,
மானே! மயிலே! என்றுநமை
மயக்கும் அழகைச் துாற்றுபவன்,
ஏனோ பிறந்தான்? மண்சுமையாய்
இருந்தான் என்றே உலகேசும்!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

Angel said...
This comment has been removed by the author.
Dino LA said...

அருமையான பகிர்வு

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்... மீண்டும் ஒருமுறை உங்களின் தளம் வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்... நன்றி...

கும்மாச்சி said...

ஹேமா நல்ல பகிர்வு. இசையை நினைத்தாலே மகிழ்ச்சிதான்.

இராஜராஜேஸ்வரி said...

.தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இசைய வைத்த அருமையான இசைப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

கவியாழி said...

இப்படியும் வழி இருக்கிறதா?

Dino LA said...

அருமையான பகிர்வு

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கும்மாச்சி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கும்மாச்சி

வலைச்சர தள இணைப்பு : கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP