உலக சனத்தொகை இப்போ ஏழு பில்லியனானது.உலகிலேயே ஏழு பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது.மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம்.இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.
கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளைக் கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும்.இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும்.ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது.
இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும்.தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடுங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரக் காத்திருக்கும்.அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும்.புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடுங்கிப்போட்டுவிடும்.ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்குத் திரும்பி வரும்.
சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது.பழைய நினைவுகள்,பழைய பழக்கவழக்கங்கள்,பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது.பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.
பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான ஆயுள் உண்டு.புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது.குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தைப் பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன.கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராணக் கதைகளில் இருக்கிறது.
ஆனாலும் ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதைப் பார்த்தால் ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்கிறது.இந்த 120 ஆண்டுகள் ஒரு மனிதன் உயிர் வாழ முடியும்.அதுவரையில் அவனுடைய ஜாதகப்படி வருகிற தசை – புத்திகள் கணிக்கப்படுகிறது.இப்படி 120 ஆண்டுகள் ஒரு நபர் உயிருடன் இருப்பது என்பது இன்றைய காலத்தில் அதிசயமான விஷயமாக இருக்கிறது.
விஞ்ஞான வளர்ச்சி பல முன்னேற்றங்களை தந்திருந்தாலும் எண்ணற்ற பாதக நிலைகளையும் தந்திருக்கின்றது – தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் – கனிகளில் கூட மருந்துகள் கலங்கப்பட்டு அது மனித உடலுக்குள் சென்றவுடன் விஷத் தன்மையாக மாறி மனிதர்களின் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது.இன்று 30 – 40 வயதுக்குள்ளாகவே பல உடல் கோளாறுகளை மனிதன் தன் உடலில் வரவேற்கிறான்.காரணம் ஆரோக்கியமான உணவு இங்கே யாருக்கும் இல்லை.ஒரு இளநீரை எடுத்துக் கொண்டாலும் அது இயற்கையாக இளநீர் காயாக இருந்து குடிப்பதுதான் ஆரோக்கியம்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது?
அந்த இளநீர் கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதுவும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுச் சந்தைக்கு வருகிறது.அந்த இளநீர் கெடாமல் இருப்பதற்காக அதில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது ஒரு விஷயத்தை நாம் என்றுமே நினைவில் நிறுத்த வேண்டும்.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் பழங்கள் இப்படி எந்த உணவாக இருந்தாலும் அதனை இயற்கை விதித்த குறிப்பிட்ட காலத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.அந்தக் குறிப்பிட்ட காலம் சென்ற உடன் இயற்கையே அந்த பொருட்களை மனிதனுக்கு ஏற்றவை அல்ல என்பதை தீர்மானித்து அழித்துவிடுகிறது.அதாவது கெட்டுப்போகிறது.
நமக்குத் தாயாக இருக்கக் கூடிய இயற்கை நமது உடலுக்கு எது ஏற்றது என்பதை தீர்மானித்துப் படைக்கிறது.பிறகு அந்தப் படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த இயற்கையே அழித்தும் விடுகிறது.காரணம் அந்தப் பொருள் இனி மனிதர்களுக்கு உதவாது என இயற்கை அன்னைக்குத் தெரிகிறது.
நீண்ட வருடங்கள் உங்களுக்கு வாழ விருப்பமா ?
ஏன் ?
சொல்லுங்களேன்.....!
என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.நான் வாழ்ந்து எதுக்கு ......!
உதவி இணையம்.








