ஒரு பார்வையாளன் தன் ரசனையை விரித்துக் கூறுகையில் படைப்பாளி தன்னை தன் எழுத்தை தான் தவறவிட்ட விஷயங்களை உணர்கிறான்.விமர்சகன் என்பவன் பெரிய அறிவாளியாக பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட ஆசைகளைக் காட்டாது பார்க்கும் படைப்புகள் அத்தனைக்கும் படைப்பின் ரசனையோடு விமர்சனம் செய்தல் அவசியமாகும்.படைப்பாளிக்கு விமர்சனமே ஒரு ஆசானாக மாறும் தருணங்களும் இருக்கிறது.
விமர்சனமாவது படைப்பின் சிறப்பை சாதனையை மட்டும் புகழாது அதிலுள்ள குறைகளையும் எடுத்துச் சொல்ல தயங்கக்கூடாது.சில விமர்சனங்கள் நிராகரிப்பின் தொனி இருந்தாலும் கூட படைப்பாளியை அலட்சியப்படுத்துவதாகவோ அவர்களின் மதிப்பைக் குறைகூறுவதாகவோ இருக்காது.விமர்சனமானது ஊக்கம் கொடுப்பதோடு படைப்புகளின் பயனை சமூகம் பெறத்தக்கனவாகவும் உதவும்.
ஒவ்வொரு பதிவும் படைப்பாளியையைப் பொறுத்தமட்டில் முழுமையானதாகவே இருக்கும். பூரண திருப்தியோடுதான் பதிவைப் படைப்பான்.தவறுகளை உணரச் சந்தர்ப்பம் இல்லை. உணரும் தருணங்களில் தவறுகளைத் திருத்தியே பதிவிடுகிறான்.எனவே பதிவு முழுவெற்றியானதே அவனைப் பொறுத்தவரை.
ஆனால் பார்வையாளன் முதலில் ரசிகனாகி நன்மை தீமை பாதிப்பை எண்ணி குறைநிறைகளை சொல்ல நினைத்து விமர்சிக்கிறான்.அது படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் உதவியாகவே அமைகிறது.ஒவ்வொரு கலைக்கும் ஆர்வலர்கள் நிச்சயம் தேவை.அந்த ஆர்வலர்களாக விமர்சகர்கள் இருக்கவேண்டும்.
சும்மா சொல்லும் புகழும் ரசனையும் எந்த விதத்திலும் பயனில்லாதது.
மனதிலும் படைப்புப் பற்றிய சந்தேகமும் நீங்காமல் இருக்கும்.நாம் சில சமயங்களில் சுயசிந்தனையை அடகு வைத்து மற்றவர்களது ரசனைக்கே தலையாட்டுகிறோம்.
"ரசனை என்பது மேதாவித்தனம் சமூக அந்தஸ்தின் அடையாளம் என்றும் கருதப்படும்போது விளைந்த வேடிக்கையில் இதுவும் ஒன்று".
சில ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் ஒரு கண்காட்சியில் ஏராளமான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.ஒரு குறிப்பிட்ட ஓவியத்திற்கு நிறையப்பேர்களின் ரசிப்பில் பாராட்டில் முதற்பரிசும் கிடைத்தது.மேகத்திலிருந்து ஒரு தேவதை வெளிவருவதுபோல இருந்த ஓவியம் அது.அதன்பின் அந்த ஓவியக் கண்காட்சியைப் பார்க்க வந்த ஒருவர் அது தலைகீழாக மாட்டப்பட்டு இருப்பதாக நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தார்.ஓவியத்துடன் வந்த குறிப்புக்களைப் பார்த்த நிர்வாகிகள் உண்மை என ஒப்புக்கொண்டனர்.
எனவே ஒரு விமர்சகன் படைப்பை ரசிக்கிறபோது மற்றவர் கருத்தை விடுத்து தன் கருத்தைச் சுயமாகக் கூர்ந்து கவனித்து உண்மை ரசனையைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் தந்து படைப்பாளிக்கும் முழுமையான தெளிவைக் கொடுக்கலாம்.விமர்சகன் என்பவன் கலை இலக்கியப் படைப்புக்களை அடித்தளமாகக் கொண்டு தனது வாழ்வை விசாரணை செய்துகொள்பவன்.அதன்மூலம் அவனுக்கென்று ஒரு கண்ணோட்டம் உருவாகி வரும். அதையே நாம் விமர்சனக் கோட்பாடு என்கிறோம்.நம் படைப்புக்களை அணுகும் விதத்தை மேலும் கூர்மைப்படுத்த உதவும்.
இந்தக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு படைப்புக்கள் வெளியாவதில்லை.படைப்பாளிக்குப் படைப்பே முக்கியமானதாகும்.பார்வையாளனே படைப்பையும் விமர்சனத்தையும் நோக்கவேண்டும்.விமர்சனத்தை மட்டும் முடிவாக எடுக்காமல் கூறப்பட்டுள்ள காரணங்களையும் நோக்க வேண்டும்.
விமர்சனங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு நிறைந்தவை நிராகரிக்கப்படு அதன் சிறிய சாரமே சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இத்தகைய விவாதத்தால் மதிப்பீடுகள் கண்ணோட்டங்கள் உருவாகி மறுக்கப்பட்டு பலபுதிய நுணுக்கங்கள்கூடப் பிறக்கும். எனவே படைப்புக்களுக்கு நடுநிலையான சிறப்பான விமர்சனங்கள் படைப்பாளி உணரவும் பார்வையாளன் துல்லியமாக ரசிக்கவும் வழிகாட்டும்.
ஆனால் ரசிகர்கள் அதுவே இறுதி முடிவாகவும் எடுக்காமல் படைப்பாளியும் தன் படைப்பைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகக் கவலைப்படாமல் தவறுகளத் திருத்திப் படைப்புக்களை வெளிக் கொணரவேண்டும்.இவ்வாறாக ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள கலைப்படைப்புக்கள் ரசனை விமர்சனம் ஆகியவற்றைப் படைப்பாளி பார்வையாளன் விமர்சகன் என்று எல்லோருமே கை கோர்த்தபடி கைக்கொண்டு சிறந்த படைப்புக்களை உருவாக்க வழி சமைக்க வேண்டும்.
எனக்கும் சேர்த்தேதான் இந்த விமர்சனம்.எனக்கும் சரியாக விமர்சனம் செய்யத் தெரிவதில்லை.அதற்காக ஒருவரிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டதாலேயே இந்தக் கண்திறப்பு !
ஹேமா(சுவிஸ்)
36 comments:
Nice Hema
அலசல் அருமை... எதையோ மறைமுகமாகச் சுட்டுவதாகவும் உள்ளது:))
நான் சும்மா பம்பலுக்குட் சொன்னேன்.
பதிவுகள் படைப்புக்கள் என்பது ஒரு
பிரசவம்.அது முழுமையடைய நிச்சயம்
விமர்சனங்கள் பாராட்டுக்கள் அவசியம்
.இதை யாருமே மறுக்கமாட்டீர்கள்.\\\\\\\
ஹேமா மறுக்கவும் முடியாது இது நூறு
வீதம் உண்மையும் கூட...!!
எந்தவொரு நடைமுறையிலும் தவறு
கட்டாயம் நடக்கும் தவறு செய்யாத மனிதர்கள்
யாருமே இருக்க மாட்டார்களென்பது
என் கணிப்பு.
ஆதலால்....தவறிருந்தால் சுட்டிக்காட்டி
தரமிருந்தால் தட்டிக் கொடுத்து,
சுவையிருந்தால் ..உச்சுக் கொட்டி
மேலே ஏற்றி விடுவதுதான்
விமர்சனம்.
அதிகாரப் பேச்சு,சூடானசொற்கள்,
தரம் குறைக்கும் எண்ணம்.ஏளனப் பேச்சு
நான் என்ற கர்வம்,போட்டி,பொறாமை
இன்னும்....ஒரு படைப்பாளிக்கோ,
விமர்சனருக்கோ இருக்கக் கூடாதவைகள்
இவைகள்!!
படைப்பாளி எழுதுகோலென்றால்...
விமர்சகன் ஊறும்,ஊற்றும் மை
ஒன்றில்லாமல்,,ஒன்றில்லை!
விமர்சனம் :: இது ஒரு படைப்பாளிக்கு
நாம் கொடுக்கும் ஊக்க மருந்து இதை
உண்டால்தான் அவர் வேகம்,விவேகம்
இரண்டும் அதிகரிக்கும்.
மிக முக்கியம் இருபாலாருக்கும்
புரிந்துணர்வு அப்புறமென்ன!!
படைப்பும்,விமர்சனமும் நான்முதலா?
நீமுதலா?என அன்புச் சண்டையிடும்.
ஹேம்ஸ்...நல்ல எடுத்துக் காட்டான..
பதிவு ஆமா??? யாரிடம் கடன்
வாங்கியது?அதுதான்....மூளையை!!
நான் ஓடியே......போகிறேன் நீ அடித்தா
தாங்காது 50kg தஜ்மகால்!!
//அது முழுமையடைய நிச்சயம் விமர்சனங்கள் பாராட்டுக்கள் அவசியம்.இதை யாருமே மறுக்கமாட்டீர்கள்.ஒரு பதிவின் வெற்றியை அதன் விமர்சனங்களே வெளியில் கொண்டுவருகின்றன.//
அப்ப நீங்க விமர்சனங்கள எதிர்பாக்கறீங்க...
வீணாபோனவன்ன்னு ஒரு கவிஞர் இருக்கிறார். அவருக்கு 3 பின்னூட்டங்கள் தான் வருகிறது. அதற்காக அவர் கவிஞர் இல்லை என்றாகிவிடாது.
அது சரி நீங்கள் எத்தனை விமர்சணங்குள்ளாகும் பதிவுகளில் கலந்துக்கொண்டிள்ளீர்கள்.
மொதோ பத்திக்குதான் இந்த பின்னூட்டம் ...
//ஒரு பார்வையாளன் தன் ரசனையை விரித்துக் கூறுகையில் படைப்பாளி தன்னை தன் எழுத்தை தான் தவறவிட்ட விஷயங்களை உணர்கிறான்.//
பார்வையாளன் - படைப்பாளி - உணர்கிறான்
(ஹையோ ஹேமா எங்கயோ போயிட்டிங்க)
நீங்க ஒரு தமிழ் சினிமா டைரக்ட் பண்ணலாம் :)))
ம். விமர்சனம் இல்லாட்டி மெருகேத்த முடியாது. அதே சமயம் விமர்சனமும் தாக்குதலா இல்லாம இருக்கணுமே.
//ஒருவரிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டதாலேயே இந்தக் கண்திறப்பு !//
அந்த நல்லவரு வல்லவரு யாருங்க ஹேமா...
அவசியமான அலசல், அழகா எழுதி இருக்கிங்க ஹேமா!
நல்ல அலசல் .
பகிர்வுக்கு நன்றி
// ஒருவரிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டதாலேயே இந்தக் கண்திறப்பு !//
எங்க ஹேமா பாட்டியை கலாய்ச்சது யாரு?
படைப்பாளியிடம் சிறந்த படைப்பை எதிர்பார்க்கிறோம். விமர்சகனிடம்
நேர்மையான விமர்சனத்தை எதிர்பார்க்கிறோம்.
படைப்பாளி, பார்வையாளன், என்பதெல்லாமில்லை... அனைவரும் அலப்பறைதான்.. சாரி.. படைப்பாளிதான் :)
எந்தவொரு பார்வைக்கும் இங்கே விமர்சனங்கள் தேவை... குட்டுவதாக இருந்தாலும் சரி.. கொஞ்சுவதாக இருந்தாலும் சரி....
விரிவான இடுகை....
எங்கேயோ வாங்கிக் கட்டிக் கொண்டதால்தான் இந்தப் பதிவு என்கிறீர்கள்...
சில சமயம் பதிவை இடுபவர்களுக்கே தெரியும் அது ஒன்றுமில்லாததை ஈடு கட்ட ஒரு பதிவு என்று. பின்னூட்டங்கள் என்பது ஒரு உற்சாக டானிக்காகவே எடுத்துக் கொள்கிறோம். மனம் நோகாமல் பின்னூட்டம் இடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். சில வெளிப்படையான, மாற்ற முடியாத விஷயங்களில், தகவல்களில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். மற்றபடி அவர்கள் எண்ணங்களுடன் நம் எண்ணங்களை திணித்து சண்டையிடுவதில் அர்த்தமிருக்காது. அதே சமயம் ஆரோக்யமான விவாதங்கள் இருக்கலாம். சிறந்த விஷயங்களை தயங்காமல் உடனே பாராட்டி விடுவதில் தவறில்லை. படிக்காமலே டெம்ப்ளேட் பின்னூட்டங்களும் உண்டே...அதில் ஆதரவுக்கு நன்றி மட்டும். எழத்தாளர் சுஜாதா ப்ளாக் உலகம் பற்றி சொல்லும் போது 'இந்த வருடமாவது ப்ளாக்கர்கள் இந்த அதிக ஹிட்டுகள், வோட்டுகள் போன்ற மாயைகளிளுருந்து விடுபட வேண்டும்' என்று சொல்லி இருப்பார்.
நல்ல இடுகை...!
ஆமாம் என்னாச்சு அஷோக் உங்களை டைரக்ட் பண்ண சொல்றாரு படம்லாம் ... ?
ஒரு தம்மாதூன்டு சந்தேகம்,
விமர்சனங்கள் படைக்கப்படும் போது - படைப்பு முழுமை அடயும்னா... படைப்பு விமர்சிக்கபடும்போது - விமர்சனம் முழுமை அடயுமா???
இன்னொரு கொசுரு செய்தி,
உங்க பதிவு மிக அருமை.
ஆமாங்க, நல்லாச் சொல்லிருக்கீங்க.
//அது தலைகீழாக மாட்டப்பட்டு இருப்பதாக நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தார்//
அந்தப் படத்தப் பாக்கணும்னு தோணுது. தலைகீழா மாட்டினா, தேவதை மேகத்திலிருந்து வர்ற மாதிரி இருந்துதுன்னா, நேரா வச்சா எப்படிருந்துருக்கும்?? ஒரு ஆர்வந்தான்!! ;-))
"படைப்புக்களும் விமர்சனங்களும்."பற்றி மிகவும் நேர்த்தியாகவும் பல கருத்துகளை தெளிவு படுத்தியும் எழுதி இருக்கிறீர்கள் . சிறப்பான பதிவுதான் . பகிர்வுக்கு நன்றி !
// நாம் சில சமயங்களில் சுயசிந்தனையை அடகு வைத்து மற்றவர்களது ரசனைக்கே தலையாட்டுகிறோம்.//
சில நேரங்கள்ல இல்லங்க,பல நேரங்கள்ல நாம மற்றவர்களோட ரசனையால தான் செலுத்தப்படுறோம்.
அப்புறம்,உங்க கமெண்ட் பார்தேங்க.
உண்மையான தமிழர்கள்னு சொல்லிக்க ஏதோ கொஞ்ச பேராவது எங்கயாவது இருக்கத்தான் செய்வாங்க.
என்னைப் பொறுத்த வரை,நான் மறுபடி தமிழன்....
இது உங்களுக்காக போட்ட கமெண்ட்.படிச்சுட்டு அழிச்சுடுங்க....
அப்புறம்,இல்லுமினாடி பத்தி தெரிஞ்சுக்க இங்க போங்க....
http://en.wikipedia.org/wiki/Illuminati
____ இல்லு.... :)
சுயவிமர்சனம் ...
ஸ்ரீ ராமின் கருத்துகளை அப்படியே வழிமொழிகிறேன்.
விமர்சனப் படைப்பு போட்டிக்கு அனுப்பிய மாதிரி இருக்குது இடுகை.
எதிர் வினை விமர்சனங்கள் சிலசமயம் ஆரோக்கியமாக காணப்படுவதுண்டு நமது தளங்களிலும்.ஆனால் சிலசமயம் நீங்க சொன்ன மாதிரி வாங்கிகட்டிக்கிற மாதிரியும் இடுகை விடிந்து விடும்:)
அதென்னமோ ஆங்கில எழுத்துக்களின் உள் குத்து புரியாமலோ,அல்லது எழுத்தின் மென்மையோ அல்லது உண்மையிலேயே நன்றாகவே விமர்சனங்களை முன்வைக்கிறார்களா என்று தெரியவில்லை.தரமான ஆங்கில எழுத்துக்களின் சொந்தக்காரர்கள்,கமெண்டுகிறவர்கள் நம்மள விட ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள்.
//போகிறேன் நீ அடித்தா
தாங்காது 50kg தஜ்மகால்!!//
ஸ்பெல் எங்க நசரேயன் குத்தகை எடுத்துகிட்டாராக்கும்:)
//நான் சும்மா பம்பலுக்குட் சொன்னேன்.//
தமிழ் சொல்லிக் கொடுங்களேன் யாராவது!
ஜயா நடராஜன் அவர்களே!
தில்லைக் கூத்தனின் பெயர்,
இயல்,இசை,நாடக வடிவமாய்
இருப்பவனின் பெயர் இது
வைத்துமா!?தமிழ் விளையாடவில்லை
உங்களிடம்!!
பரவாயில்லை..பரவாயில்லை.
இதை விடாமல் தொடர்ந்து
பலமுறை சத்தமாய் சொல்லிப்
பாருங்கள்....
1: கடலோரம் உரல் உருழுது
2: புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு
புட்டைக் கொட்டித்து
தட்டைத் தா
ஒவ்வொன்றையும் சத்தமாய்
துரிதமாய் சொல்ல வேண்டும்
அப்புறம் தமிழ் உங்களை அள்ளி
அணைக்கும் பாருங்களேன்!!
ஹேமா ரொம்ப என் லொள்ளுத் தாங்காம
என்னை .....
என்ன செய்யப் போகிறாய்????
விமர்சகன் என்பவன் பெரிய அறிவாளியாக பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட ஆசைகளைக் காட்டாது பார்க்கும் படைப்புகள் அத்தனைக்கும் படைப்பின் ரசனையோடு விமர்சனம் செய்தல் அவசியமாகும்.....
// நாம் சில சமயங்களில் சுயசிந்தனையை அடகு வைத்து மற்றவர்களது ரசனைக்கே தலையாட்டுகிறோம்.//
ஆனா அதுதானே உண்மையா இருக்கு. ஊரிலிருந்து வந்ததும் ஒரு வித்தியாசமான பதிவா!!!
ஐயா ராதாகிருஷ்ணன் முதல் வருகைக்கு நன்றி.பதிவு போட்டாலும் யாரையாவது தாக்குமோன்னு ஒரு பயம் இருந்திச்சு.உங்க பின்னூட்டம்தான் பயம் போக்கிச்சு.
நன்றி ஐயா திரும்பவும்.
கமல் வாங்கோ...ஒரு உள்ளூடனும் இல்லை.கனநாள் இந்த பின்னூட்டங்கள் விமர்சனங்கள் பற்றி மனசில இருக்கு.முந்தியும் இதுபோல எங்கேயோ வாசிச்சும் இருக்கிறன்.
இந்தப் பதிவு பம்பல் எண்டு எடுக்கேலாது கமல்.
உள்வாங்கிக் கொள்வது நல்லது.
கலா...உங்கட கருத்துரைக்கு நான் பதிலே சொல்லமாட்டேன்.பிறகு என்னோட ஓடிப்பார் எண்டு கூப்பிடுவீங்கள்.எனக்கெதுக்கு சும்மா !நான் எழுதியிருக்கிறதைவிட இன்னும் ஒருபடி ஏறி அலசியிருக்கீங்க கலா.நல்லது.
ஹேம்ஸ் 50 kg யா !பயமும் இருக்கு.அதுவும் நல்லதுதான் !
அஷோக்...நானும் கொஞ்சம் புத்திசாலியா யோசிக்கிறேன்ன்னு ஒத்துக்க மாட்டிங்களே.நான் சொல்லியிருக்கிறதில என்ன தப்பிருக்கு.கிண்டல் கிண்டல்.உங்க கிண்டலாலதான் இப்பிடி யோசனையே வந்திச்சு.
பின்னூட்டம்ன்னு நாங்க சும்மா போட்டிட்டு வாறதெல்லாம் விளையாட்டில்ல.எழுதினவருக்கு அதுதான் அடுத்த பதிவின் ஊட்டச்சத்து.
வாங்க அம்மிணி...உங்க கருத்தோட சார்ந்தும் சொல்லியிருக்கேன்.
கிண்டலோ குறையோ சொல்லாம கருத்துக்கள் அமையவேணும்ன்னு.
ப்ரியா..வாங்க.ஆதரவுக்கு நன்றி தோழி.அடி விழுந்தாலும் !
ஈரோடு நண்டு வாங்க.புதுசா உங்க வரவும் எனக்குச் சந்தோஷம்.
நசர்.....நீங்கதான் எப்பவும் கலாய்க்கிறிங்க இந்தப் பாட்டியை.வேற யாரும்னா... பாட்டிக்குக் கராத்தே தெரியுமாக்கும் !
தமிழ்..எப்பவுமே நடுநிலையான ஒரு நல்ல மனிதன் நீங்கள்.இன்றைய காலத்தில் ரொம்பவும் கஸ்டம்தான் தமிழ் உதயம்.
பாலாஜி..எப்பவும்போல உங்க ஆர்ப்பாட்டமில்லாத விமர்சனம்.
ஆனா புரிஞ்சுக்க முடியாது !
ஸ்ரீராம்...விரிவா விளக்கம் சொல்லியிருக்கீங்க.நானும் அதையேதான் சொல்லியிருக்கேன்.
பின்னூட்டம் ஒரு உற்சாகம்.ஆனா வலிக்காம இருக்கணும்.
மித்ரா...அஷோக் என்னை ரொம்பவே கலாய்க்கிறார்.நல்லது சொன்னாலும் ஒத்திகிறாங்க இல்லையே !
யாருங்க நீங்க யெவனோ ஒருவன் !எங்க தாத்தா மாதிரி இருக்கு.புரிஞ்சும் புரியாதமாதிரி கேள்வி கேக்கிறீங்க.
பதிவிலேயே சொல்லியிருக்கு எல்லாம்.இசக்குப் பிசகா எல்லாம் கேட்டா நானே குழம்பிடுவேன்.
என்னைக் குழப்பன்னே இருக்கீங்கபோல !
ஹூஸைனம்மா...வாங்க.முதல் வருகைக்கு நன்றி.அந்தப் படம் தலைகீழா மாட்டினதை எல்லாரும் ரசிச்சுப் பாராட்டினாங்க.அவர் ஒருத்தர் மட்டும்தான் கவனிச்சிருக்கார்ன்னு
அர்த்தம் அதுக்கு.
பனித்துளி சங்கர்...உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.இனி கருத்தூட்டலில் கவனமாயிருப்போம்.
வாங்க வரணும் இல்லுமினாட்டி.
உங்க பெயருக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லித் தந்தீங்க.
சந்தோஷம்.நன்றியும் கூட.
நாங்க எப்பவுமே ஆட்டு மந்தைகள்தானே !
யார் என்ன செய்தாலும் அதையே பின்பற்றுவோம் !
ராஜ நடராஜன்....
வரணும்.வந்ததுக்கு சந்தோஷம்.
பதிவு சிலர் தந்த சிந்தனைகள்தான்.
ஆங்கில பின்னூட்டங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.உண்மைதான் அது.எங்களவர்கள்போல உட்கருத்தோ உள்குத்தல்களோ இல்லாமல் நேரிடையாகவே அவர்கள் பேசுவதுபோலவே பின்னூட்டமும் தருவார்கள்.அதுதான் அதன் தெளிவு !மீண்டும் நன்றி உங்கள் கருத்துக்கு.
நசரேயன் கும்மிக்குன்னே இங்க குத்தகைக்கு எடுதிருக்கார்.நானும் ரசிப்பேன் அவர் கும்மியை.
பாவம் விடுங்க.
"பம்பல்"க்குக் கேட்டேன்னா எப்பிடிச் சொல்ல...சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன் ங்கிற மாதிரி !அது எங்கட யாழ் வழக்குத் தமிழ் நடா !
ஜமால்....சுயவிமர்சனம் இல்லை இது.சும்மா பொய்யுக்கு விமர்சனம் செய்யாதீங்கன்னு சொல்லியிருக்கு.
கும்மியை இதில சேர்க்கல்ல.அது வேற இது வேற !
ஜெரி...உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.இனி உங்களுக்குன்னு கருத்துச் சொல்லணும் !
ஜெயா...நான் சொன்னதையே திரும்பச் சொல்லியிருகீங்க.
அப்போ என் கணக்கும் உங்க கணக்கும் சரிதானே !
ஜெய்லானி...நான் ஊர்ல இருந்து வந்து இது இரண்டாவது பதிவு.நீங்கதான் வாறதில்ல.
குழந்தைநிலாவில 4-5 பதிவு போட்டிட்டேன்.அடிக்கடி இங்க பதிவு இருக்காது.அந்தப் பக்கம் வந்து பாத்துக்கோங்க.
நான் கூப்பிட்டுத்தான் வாறீங்க !
அடிக்கடி இங்க பதிவு இருக்காது.அந்தப் பக்கம் வந்து பாத்துக்கோங்க.ஏன் இந்த ஓர வஞ்சனை ஹேமா?? நாங்க இந்தப் பக்கம் தான் அடிக்கடி வருவோம்.வஞ்சகம் பண்ணாம இங்கயும் அடிக்கடி பதிவு போடுங்கோ தோழி.......
ippo inthap pathivukku vamarsanam seiyalanaalum ithu nalla pathivuthaan:)
ஹேமா இந்த குரங்கை விரட்டிருங்க.. என்னையே மொறைக்குது ...
ஒரு வேலை இதுதான் படைப்பின் சுதந்திரமோ ....
நல்ல இடுகை...!அழகா எழுதி இருக்கிங்க ஹேமா!
Post a Comment