Friday, July 31, 2009

மொழியும் நிர்வாகமும்.

ப்போதெல்லாம் தமிழின் முழக்கங்கள் இணையத்தளங்களில் கேட்டபடியே இருக்கிறது.மகிழ்ச்சியான விடயமும் கூட.மார்க்சிய-லெனினியக் கூட்டமைப்பின் உறுப்பு அமைப்புகள் மற்றும் சேகுவாராக் கருஞ்சட்டை வீரர்கள் என்று ஒரு மிகப்பெரும் படை தமிழ்த் தேசியம் பற்றிய கனவுலகில் மிதந்த வண்ணமும் இருக்கிறார்கள்.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு மொழியே பெரும் துணையாக விளங்குகிறது. மனிதனின் பண்பாட்டுச் சிறப்பிற்கும் மொழி வழி வகுக்கிறது.மொழி இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்த்தால் ஒரு வெறுமையான நிலையே உள்ளதைக் காணலாம்.

உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் மனிதர்களால் பேசப்படுகின்றன.
அவைகளில் எழுதும் மொழியாக இல்லாமல் பேசும் மொழியாக மட்டுமே பல மொழிகள் இருக்கின்றன.பழமையினாலும்,இலக்கிய வளத்தாலும் புகழ்பெற்று விளங்கும் மொழிகளில் தமிழ் மொழி தலையாயது.'என்றிவள் பிறந்தாள் என்று உலகறியா' ஏற்றம் கொண்டவள் தமிழ்த்தாய்!இலக்கணம் கண்டபின் இலக்கியம் கண்டனரா அல்லது இலக்கியம் கண்டபின் இலக்கணம் கண்டனரா என்று ஆராய்ந்து அறிய முடியாத சிறப்பினை உடையது தமிழ்!

இந்த வகையில் நான் ஒரு பழைய ஆனந்தவிகடனில் (12.02.1967)வாசித்ததை இங்கு இணைக்க விரும்பினேன்.

சீன தத்துவ ஞானி கன்ஃபூஸியஸ் என்பவரிடம்,அவருடைய சீடர் ஒருவர் "தேச நிர்வாகத்தை ஒப்படைத்தால் நீங்கள் செய்யும் முதல் வேலை என்ன?"என்றார்.

"நிச்சயமாக மொழியைச் சீர்திருத்துவதுதான்"என்றார் அவர்.அங்கு கூடி இருந்தவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்து"மொழிக்கும் நிர்வாகத்திற்கும் என்ன சம்பந்தம்?"என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் "மொழி செம்மை செழிப்புப் பெறாவிடில் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ தெளிவுற-ஐயம் திரிபுற அறிந்துகொள்ளும் முறையில் சொல்ல முடியாது.நினைக்கப்பட்டது சொல்லப்படவில்லையானால் எது செய்யப்பட வேண்டுமோ அது நிறைவேறாது.நிறைவேறாத சமயத்தில் ஒழுக்கமும் பண்பும் குறையும்.நீதியும் நியாயங்களும் கலைந்து போகும்.மயக்கமும் குழப்பமுமே கூடி நிற்கும்.எனவே சொல்லப்படும்
விடயம் தெளிவாக இருக்கவேண்டும்.ஆகவே மொழி செம்மையுற வேண்டியது எல்லாச் செயலுக்கும் முன் நிற்கிறது"என்றார் கன்ஃபூஸியஸ்.

உண்மையில் சிந்தித்தால் இதுவும் ஒருவையில் நியாயமாகப் படுகிறதுதானே !

ஹேமா(சுவிஸ்)

Saturday, July 25, 2009

மோட்டுச் சிங்களவனும்...மாட்டிக்கொண்ட பன்றியும்.

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.
அங்கே ஒரு பிரச்சினை.என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்...உயிர்களைக் கொல்லும்.
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது.
காட்டுக்குள் ஓடி விடும்.இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்தது.
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை.

அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை.

வேறு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ் இன்னும் பல..... ஒண்ணும் செய்ய முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை.

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூடி மகாநாடு
ஒன்றும் நடத்தின அந்தப் புலியைப் பிடிப்பதற்காக.

அதிலே அவமானம்... எந்த‌ நாட்டாலும் முடியவில்லை எனப் பேசப்பட்ட போது,

எங்களைக் கேட்கலயே.......என்றது ஒரு குரல் ஒன்று.
பார்த்தால் மதிப்பிற்குரிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள்.
நாங்கள் ஒவ்வொருநாளும் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட.
இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி... அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்,
நாட்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை.

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து
இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன.
அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு

படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...
அங்கே அவர்கள் கண்ட காட்சி............
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது.
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை தடிகளால் தாக்கியவாறு
கூறிக்கொண்டிருந்தனர்.

"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்தனர்...
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டுக்
கொடுமைப் படுத்தினார்கள் இவர்கள் என்று கேட்டனர்?

அதற்குப் பன்றி

"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசம்தான் ஆச்சு... ஆனா இலங்கைத் தமிழர்களை 25-30வருடமா இப்படித்தான் படுத்துறானுகள்" என்றது சிரித்தவாறு...!

(இணையத்தளத்தில் தான் எப்போதோ வாசித்ததாகச் சொல்லி நண்பர் ஒருவர் போனவாரம் என்னோடு பகிர்ந்துகொண்ட நகைச்சுவையும் வலியும்.)

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 19, 2009

சுட்ட பழம்.......



கூகிள் தேடல் பொறியில் ஏதோ ஒன்றை தேடப் போய் கிடைத்த இணையதளங்கள் இவை .இசையை கேட்டு மகிழ்ந்து பின்னூட்டம் இடுங்கள்....


A R Rahman
Deva
Ilayaraja
Yuvan Shankar Raja
Karthikraja
Other Composers

Sunday, July 12, 2009

கதையல்ல நிஜம்...தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம் உதயம்?????











  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP