Monday, March 30, 2009

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்...1

ணையத்தில் இவற்றைச் சேமித்தேன்.எனக்கு இவற்றிற்கான விளக்கம் முழுதாக இல்லை.என் நண்பர்களின் பின்னூட்டங்களில் கண்டு யோசிச்சிருக்கேன்.இன்னும் இருக்கிறது.பதிவு நீளமாக இருப்பதால்,அடுத்த பகுதியாகத் தருகிறேன்.

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?
அல்வா
- To cheat
ஆத்தா - Mother
அபேஸ் - Loot adiththal
அல்பம் - A silly/cheap dude
அண்ணாத்தே - The elder brother
அண்ணி - Anna's figure
அப்பீட்டு - Unsuccessful
அசத்தல் - Kalakkal
பஜாரி - A not-so-friendly figure
பந்தா - Pillim
பேக்கு - Fool
பாடி - Muscular Machi
சித்தீ - Aunty Figure
டப்ஸா/டூப் - Lie
தேசி குஜிலி - An Indian figure in US
தில் - Courage
தூள் - Super
தம் - To smoke
டாவு - Site seeing
டிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)
டமாரம் - Deaf
டோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl
ப்ரீயா வுடு மாமே - Forget it
காலி - Appeettu
குஜிலி - Figure
குரு/தல - Head of the gang
குஜால்ஸ் - Having fun with Gujilis
கானா - Rap song sung by Machis
கலீஜ் - Dirty
கில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude from
ஆந்திரா ஜக்கு - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)
ஜொள்ளு - Bird watching
ஜில்பான்ஸ் - Gujaals
ஜூட்டு - Escape when caught up by girlfriend's father.
ஜுஜிபி - Easy
ஜில் - An exclamation on seeing a Takkar figure
ஜல்சா - Same as Gujaals
காட்டான் - Uncivilized/ Rude Machi
கேணை - Idiot
கிக்கு / மப்பு -Intoxicated/under influence
கலக்கல்ஸ் - To cause a flutter
கேணை பக்கிரி - Friend of ushar pakri
கிண்டல் - To make Fun
காக்கா அடிக்கிறது - Putting soaps to someone
கே.எம்.எல். - Kedacha Mattum Labam
குட்டி - Figure
குடும்ப பிகர் - Homeloving Gujli
குடும்ப பாட்டு - A song with which machis identify themselves
குள்ளுஸ் - A short machi
லட்டு - Allva
லூட்டு -to steal
மாம்ஸ் - One cool dude
மாங்காய் - Fool
மச்சி - Maams
மண்டை - A sharp guy
மேரி - feminine of Peter
மாவு - refer O B.
நச்சுன்னு - Bull's eye
நம்பிட்டேன் - I don't believe you
நாட்டு கட்டை - A well-built village figure
நாட்டான் - Villager
நாமம் - To cheat
நைனா - Father (courtesy Telugu)
கடலை - Machi talking to a Gujili or vice versa
ஓபி - To waste time
ஒண்ணரை அணா - Worthless
பட்டாணி - Machi talking to Machi or Gujli talking to Gujli
பீட்டர் பார்ட்டி - Machi trying to show off by talking in
ஹை-பி - english
பத்தினி - A figure who goes around the block
பக்கிரி - A shrewd dude
பேட்டை - Area
பிசாத்து - Cheap
பிலிம் - Show-off
பீலா - To lie
ராம்போ - A manly figure
சிஸ்டர் - Often used by Machis while Approching Figures for the first time
சொங்கி - Lazy
சாந்து பொட்டு -Possibility of getting beaten by a stick
(courtesy Movie:Thevar Magan)
டக்கர் பிகர்
- Semma figure
தண்ணி - Liquor
தலைவர் - Leader
டின் கட்டறது - Getting into trouble (courtesy Movie: Anjali)
உஷார் பக்கிரி
- Smart pakri
வெண்ணை - Fruit
வெயிட் பிகர் - A very attractive/rich figure
ராங்கு காட்டுறது -Acting indifferently

டகால்டி - திருட்டுத்தனம்

இந்த‌ சொல் தமிழகராதியில் இல்லை. Dacoity என்ற ஆங்கிலச் சொல் மருவி டகால்டி என்று வழங்கப்படுவதாக (அம்பட்டன் வாராவதி போல) கேள்விப்பட்டிருக்கிறேன். Dacoity என்றால் அதாவது கூட்டமாக கொள்ளை அடித்தல் என்று தெரிகிறது.பல்கலை அகராதியில் இதற்கு தீவட்டிக்கொள்ளைக்காரன் என்று பொருள் உள்ளது. எனவே ‘டகால்டி வேலை' என்றால் ‘திருட்டுத்தனம்’என்று கொள்ளலாம்.

டப்பா - இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு தமிழ்ப்பாட்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.

நான் கூட 'டப்பா டான்ஸ் ஆடிரும்' என்றால் சும்மா 'எகனை மொகனை' ஆக சொல்லப்பட்டது என்று நினைத்தேன். டப்பா என்பதற்கு பொருளே ஒரு வகையான 'எசப்பாட்டு' என்று தெரிகிறது.அதனால் 'டப்பா டான்ஸ் ஆடிருச்சு' என்று சொன்னால் தப்பே இல்லை.

குஜிலி - பெண், குஜராத்தி,
குஜிலிக்கடை - அந்திக்கடை

குஜிலி என்னும் சொல் பொதுவாக
அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்க‌ள் அல்ல‌து குஜ‌ராத்திய‌ர் ந‌ட‌த்தும் க‌டையை குஜிலிக்க‌டை குறிப்பிட‌லாம்.

டங்குவார் - குதிரையைப்பிணிக்கும் தோற்பட்டை
ட‌ங்குவார் அந்து போச்சு‘டங்குவாரறுதல்’என்ற‌ சொல் அப்படியே அக‌ராதியில் இருக்கிற‌து. ‘வேலை மிகுதியாற் களைத்துப் போதல்’ என்ற‌ பொருள் ‘டங்குவாரறுதல்’க்கு உள்ள‌து. அதிக‌ வேலை செய்து நொந்து போன‌வ‌னை இங்க‌ன‌ம் நையாண்டி செய்த‌ல் சென்னைய‌ர் வ‌ழ‌க்க‌ம். குதிரையின் தோற்ப‌ட்டை அறுத‌ல் என்று‌ம் இத‌ற்குப் பொருள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.

சோமாறி - சோம்பேறி
‘ஏனாதிப‌ர்வகை’ என்றும் சோமாறி எனும் சொல் குறிக்க‌ப்ப‌டுகிற‌து. இங்கு ‘ஏனாதி’ என்றால் வட ஆர்க்காடு, நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியினரைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.

ஏனாதி என்றால் நாவிதன், புறம்போக்கு, ப‌டைத்த‌லைவ‌ன், ம‌ற‌வ‌ன், என்று ப‌ல‌ வித‌ங்க‌ளில் பொருள் கிடைக்கிற‌து.

பன்னாடை - மூடன்

கீசிடுவேன் - கிழிச்சிடுவேன் என்பதே இங்கனம் மருவியது.

தாராந்துடுவே - தாரா என்ப‌து விண்மீன், வாத்து, ஒருவ‌கை நாரை என்ப‌ன‌வ‌ற்றையெல்லாம் குறிக்கிற‌து என‌த் தெரிகிற‌து. இதற்கும் ‘தாராந்துடுவே’க்கும் சம்பந்தம் இல்லையென்றும் தெரிகிறது.

தாரன் என்பது உடையவனைக் குறிக்குஞ் சொல்; வார்சுதாரன். என‌வே, தாராந்துடுவே என்று திட்டப்படுதல் வாரிச‌ற்றுப் போகும் ஒரு நிலையை நினைவுப‌டுத்தும் என்று ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌லாம்.

இந்தியில் ‘டர்’ என்றால் பயம். ‘டர் ஆயிட்டான்பா’ என்று பயந்து போனவனைச் சொல்வது வழக்கம். தாராந்துடுவே இதிலிருந்து வந்திருக்கலாம்.

வீட்டாண்டை
அண்டை என்பது பக்கத்தில், சமீபத்தில் என்று பொருள் தரும் ஒரு சொல். எனவே கடையாண்டை, வீட்டாண்டை என்று குறிப்பிடப்படுவதை கொச்சை என்று சொல்ல இயலாது. ஆனால் வூட்டாண்ட‌, கோயிலாண்ட‌, க‌டியாண்ட‌ என்று சொல்வ‌தெல்லாம் கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

டபாய்த்தல் (மூலம் : இந்தி)
பொருள் : ஏமாற்றுதல் மற்றும் பரிகசித்தல் (நக்கல்) என்று பொருள் சுட்டப்பட்டுள்ளது.

பேமானி (மூலம் : உருது)
பொருள் : நாணமற்றவன்.

மொள்ளமாறி (முல்லைமாறி)
முடிச்சவிக்கி, (முடிச்சவிழ்க்கி)
முடிச்சுமாறி

இம்மூன்று சொற்களுமே ஒரே பொருள் தருவன என்று அகராதியில் காட்டப்பட்டுள்ளது. மூட்டை போன்றவற்றின் முடிச்சை அவிழ்த்துத் திருடும் திருடனைக் குறிக்கும் சொற்களாகும்.

கேப்மாரி, கேப்பமாறி
பொருள் : திருடன்

‘கேப்பை’ என்பதற்கு ‘ஜில்லாக்களில் திருட்டுத்தொழிலாற் பிழைக்கும் தெலுங்கச்சாதியார்’ என்று பொருள் கிடைக்கிறது. எனவே இச்சொற்கள் திருடுபவனைக் குறிக்கின்றன.

பிகில் - சீட்டியடித்தல்

பீச்சாங்கை இது ‘இடது கை’ என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கசுமாலம்
பொருள் : ஆபாசம், ஒழுக்கக்கேடு
கசுமாலர் :அசுத்தர்
கசுமாலி : அசுத்தமுள்ளவள், சண்டைக்காரி

கசுமாலம் என்பது கஸ்மாலம் என்றும் பிரயோகிக்கப்படுவதால் இதுவும் உருது மொழி மூலம் உடையது என்று பலர் எண்ணலாம். ஆனால் இது ஒரு தமிழ்ச்சொல் (அல்லது வட‌ மருவல்) என்று தெரிகிறது (உபயம் : திருப்புகழ், சொல் : கசுமாலர்)

சாவுகிராக்கி (மூலம் : உருது)
கிராக்கி (உருது) என்பதற்கு அதிகவிலை என்று பொருள். சாவுகிராக்கி என்பது பிணத்தின் முன் நின்று பேரம்பேசும் இழிமையைக் குறிக்கிறது.

பேஜார்
பொருள் : சோர்வு, தொந்தரவு

மாஞ்சா (உருது)
மாஞ்சம் (தமிழ்) : மாமிச‌ம்
பொருள் : காற்றாடிக்கயிற்றில் தடவுதற்குக் கண்ணாடிப் பொடியோடு கலந்த பிசின்வகை

‘நெஞ்சிலேகீற மாஞ்சாசோத்தை தோண்டி எடுத்துருவேன்’

(நெஞ்சைப் பிள‌ந்து இத‌ய‌த்தை தோண்டி எடுக்கும் கொடூர‌த்தை எவ்வ‌ள‌வு அழ‌காக‌ச் சொல்கின்ற‌ன‌ர் சென்னைத் த‌மிழில்)

பாடு, படவா, படுவா
(மூலம் : உருது, சொல் : பர்வா, இந்தி : படவா, Badawa)

பாடு (Baadu) எனும் சொல்லானது சென்னை மக்களுக்கு மிகவும் பழகிப்போன ஒரு சொல். வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் இதன் பொருள் இதன் பெருவாரியான உபயோகிப்பாளர்களுக்குத் தெரியாது.

படவா என்பது நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வசை மொழி. குறிப்பாக குழந்தைகளை செல்லமாகக் கடிந்து கொள்ளும்போது ‘படவா’ அல்லது ‘படுவா ராஸ்கல்’ என்று பூச்சி காட்டுவது ‘தமிழர் வழக்கம்’. இதில் அதிர்ச்சிக்குரியது என்ன என்றால் அச்சொல் காட்டும் கேவலமான பொருளாகும்.

பொருள் : ஆண் எனில் ‘கூட்டிக்கொடுப்ப‌வன்’ எனக்குறிக்கும் இச்சொல் பெண் எனில் விப‌ச்சாரி என்று பொருளிடும். இச்சொல்லே மருவி ‘பாடு’ என்று செந்தமிழில் வழங்கப்படுகிறது

புருடா
பொருள் : ப‌ய‌முறுத்துத‌ல்

ஹேமா(சுவிஸ்)

Friday, March 27, 2009

விஜய் ன் வில்லுக்கு,சுவிஸ் ல் அம்பு கொடுத்த எம்மவர்.

ப்பிடித் தொடங்கி எப்பிடி முடிக்கிறது எண்டு தெரியாமலேயே நான் பார்ர்த்து ரசிச்ச ஒரு "வில்லு" பட நிகழ்வைச் சொல்ல முனகினகினபடி பேசாமல் இருந்தேன்.சரி இண்டைக்கு பதிவில சொல்லியே ஆகவேணும்.அது அகதி வாழ்வின் ஒரு சம்பவம்.எம்மவர் சிலரின் பக்குவப்பட்ட மனநிலை.என்றாலும் ஆதங்கப்பட்டு மனம் அழுது சிரிக்கிறது.

ஒரு பக்கத்தில எங்கட நாடு எங்கட தேசம் எண்டு போர்ச்சூழல் இடப்பெயர்வு இழப்புக்கள்.இப்போது அடிக்கடி தீக்குளிப்பின் உக்கிரம்.இதற்கிடையில் புலம்பெயர்ந்த எம் மக்களில் சிலர் நாம் தப்பிவிட்டோம் என்று வெளிநாடு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டு தங்கள் குடும்ப உறவுகள் அத்தனை பேரையும் கனடா லண்டன் என்று அழைத்து இருத்திவிட்டு ஆடம்பரமான வாழ்வும் அரட்டையான பொழுதுமாக வாழ்கிறார்கள்.

உண்மையில் சிலருக்கு அங்க என்ன நடக்குது என்றே தெரியாத ஒரு சந்தோஷமான வாழ்க்கை.யாரோ அடிபடுறாங்கள்.ஏன் என்கிறதிலயும் பெரிய விளக்கம் இல்லை.ஊர்ல சண்டை முடிஞ்சா ஒருக்கா போய்ட்டு வரலாம் என்கிற மாதிரி.ஏன் இவங்கள் அடிபடுறாங்கள் என்று கேள்விகளும் உதிரும் வாயால்.இப்பிடி நிறைய வித்தியாசமான எங்கட ஈழத்து அகதித் தமிழர்களைக் காணலாம் வெளிநாடுகளில.(சொல்ல வெட்கம்தான்.ஆனலும் என்ன செய்ய !)

இந்த வரிசையில ஒருவர்...

நான் வேலை செய்யும் இடத்தில் எம் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் என்னிடம் கேட்டது எனக்கு தூக்கி வாரிப் போட்டது."என்ன ஹேமா ஊரில இண்டைக்கு சண்டையாம்".எனக்கு பதில சொல்ல வரவே இல்லை.ஐயோ..கடவுளே கிளிநொச்சி வன்னி பரந்தன் என்று மக்கள் படும் துயரமும் கண்ணீரும் இடப் பெயர்வுகளும் தங்கள் மண்ணிலேயே கைதிகளாய் முள் வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறதும் இரத்த ஆறுகளுக்குள் அன்றாட சீவியமும் கடந்தால் பிணக் குவியல்களுக்குள் தங்கள் உறவுகளைத் தேடியபடி எம் சொந்தங்கள் எங்கே !இங்கு காரில் பவனியும் பாரில் பியருமாய் காற்றைக்கூட விலை கொடுத்துச் சுவாசிக்கும் இவர்கள் எங்கே.ஊரில் எத்தனை வருட காலமாக போர் நடக்கிறது.அகதித் தஞ்சம் கேட்டதே 20 வருடங்களுக்கு முன் ஊரில் போர் என்றுதானே.

சரி அதன்பின் எத்தனை எத்தனையோ இழப்புக்கள்.தற்சமயம் ஈழத்தைக் கைப்பற்றியே தீருவோம் என்று இராணுவம் தமிழரை அடியோடு அறுவடை செய்துகொண்டு கோவில்கள், பாடசாலைகளென்று ,குஞ்சுகள் ,இளசுகள் என்று பார்த்துப் பார்த்து அழித்துக்கொண்டே நகர்கிறது.இன்று மட்டுமா செய்தியில் போர்-சண்டை என்றுதானே கேட்கிறோம்.
எப்பவும்தானே.ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அவர் தற்செய்லாக யாரோ சொன்னதை மட்டும் காதில் விழுத்தியிருக்கிறார்.அதுதான் அந்த
"இண்டைக்கு ஊரில சண்டையாம்".ம்ம்ம்ம்....

அடுத்து இன்னொரு குடும்பம்...

வருடப் பிறப்பையொட்டி என் சிநேகிதியோடு எம்மவர் வீடு ஒன்று ஒரு மாலைப் பொழுதில் போயிருந்தேன்.போய் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன்.அவர்கள் பேச்சில் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டவர்கள் எனத் தெரிந்தது.மூன்று குழந்தைகள்.முறையே 15 ,1,0 4 என.அவருக்கும் 8 சகோதர சகோதரிகள்.சுவிஸில் 4 பேரும் கனடாவில் 4 பேருமாய்.அப்பாவும் கூட.பெண்ணின் பக்கத்தில் மூவர்.அவவும் அண்ணாவும் இங்கு. தங்கை லண்டனில்.பிரச்சனையே இல்லை.ஊர்ல எல்லோரும் சுகமோ என்றேன். "எல்லாரும் இங்கதானே.எங்களுக்குப் பிரச்சனை இல்லை.பதில் சலனமில்லாமல்.

இத்தனைக்கு இருவரும் சாதாரணமாக ஒரு உணவு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள்தான்.மொழியிலும் தேர்ச்சி இல்லை.சுவிஸில் 22 வருடங்கள் வாழ்நாள். இதுதான் அவர்கள் இயல் வாழ்வென அறிந்துகொண்டேன்.சரி....இது இருக்க ஒரு சின்னக் கதை சொல்லப் போகிறேன்.

சரி....தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கு.அந்த 4 வயதுக் குழந்தை மாற்றி மாற்றிக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். "கலைஞர்"
தொலைக்காட்சியில் விஜய் ன் வில்லு படத்திற்காக வருடப்பிறப்பின் விஷேட நேரடிப் பேட்டி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.விஜய் பிரபுதேவா பிரகாஷ்ராஜ் இன்னும் சிலர் காட்சியில் தெரிந்தார்கள்.காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்த குழந்தை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு விஜய் விஜய் என்று ஏதோ சொல்லிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.அழவும் தொடங்கினான்.காரணம் புரியவில்லை எனக்கு.

அம்மாவும் "என்னவோ நல்லாச் சிரிக்கினம்.என்னவாயிருக்கும்".என்றபடி "தம்பி அது சத்தம் வராது.நாங்கள் கலைஞர் தொடர்பு மட்டை வாங்கவில்லை.தீபமும் Sun T.V தான் இருக்கு என்று சொல்ல குழந்தை மாற்றியைத் தூக்கி எறிந்துவிட்டு அழுகிறான்.அம்மா சொல்கிறா."ஓம் அக்கா விஜய் வில்லு படம் எங்கட அண்ணா வேலை செய்கிற ஹொட்டலில வந்து சூட்டிங் எடுத்தவங்கள்.நாங்கள் வீட்டில எல்லாரும் போய்ப் பாத்தனாங்கள்.விஜய் தம்பியைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சினவர்.ஹலோ சொல்லி எங்களுக்கும் கை தந்தவர்"என்றபடி "பாருங்கோ விஜயோட பிரபுதேவாவோட ,பிரகாஷ்ராஜோட வேற யாரோட எல்லாம் போட்டோக்களும் எடுத்தனாங்கள்" என்று போட்டோக்கள் காட்டினா.

இந்தச் சமயத்தில மகனிடம் கேக்கிறா"தம்பி விஜய் மாமாவை நாங்கள் பார்த்தனாங்கள் எல்லோ.என்ன கலரில கோட் போட்டிருந்தவர் சொல்லுங்கோ.உடனே "மஞ்சள் கலரில கோட்டும் கறுப்புக் கண்ணாடியும் போட்டிருந்தவர்"என்கிறது குழந்தை.இடையிடை தகப்பன் மற்றைய பிள்ளைகளும் வந்து பார்த்துவிட்டுச் சத்தம் வராததால் அவஸ்தையோடு விலகினார்கள்.சின்னக் குழந்தையோ சத்தம் வரும் என்கிற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.இப்படி ஒரு விஜய் ரசிகர்களா என்றபடி (மனதுக்குள்) பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்படி அங்கு ஒரு படம் நடந்துகொண்டிருக்கையில் தந்தையானவர் தொலைபேசியை எல்லோருக்கும் நடுவில் கொண்டு வந்து வைத்தார்.அதன் ஒலிபெருக்கியையும் அழுத்திவிட்டார்.இப்போ அதனூடாக விஜய் பேசுவது தெளிவாகக் கேட்கத் தொடங்கியது.
வீடு அமைதியானது.

அந்த வீட்டில் ஒரு அதிசயம் நடக்கிறது என்பதுபோல அத்தனை பேரின் முகத்திலும் கொள்ளை மகிழ்ச்சி.பூரிப்பு.விஜய் விஜய் என்று குழந்தை துள்ளத் தொடங்க தகப்பன் "தம்பி சத்தம் போடாதையடா விஜய் மாமா என்ன சொல்றார் எண்டு கேப்பம்" என்று அதட்ட ஒரே ஆரவாரம்தான் போங்களேன்.

என்ன நடந்தது தெரியுமோ....கலைஞர் தொலைக்காட்சிக்குக் கட்டணம் செலுத்தும் நண்பர் வீடு ஒன்றிற்குத் தொலைபேசியில் தொடர்பு எடுத்து தொலைபேசிக்குள்ளால் காட்சிகளுக்குக் குரல் கொடுபட்டிருக்கிறது.எப்படி இருக்கிறது எம் மக்களின் நிலை.தொடர்பு கேட்டவரையும் தொடர்பு கொடுத்தவரையும் நினைத்துப் பார்த்தால்...அகதி வாழ்வின் அவலம்.அங்கு அப்படி...இங்கு இப்படி !

ஹேமா(சுவிஸ்)

Monday, March 23, 2009

நிமிடத்திற்கு எத்தனை கொலை ?100 !

"ஒரு நிமுஷம்தானே.கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களோ.குடியா முழுகப் போகுதுன்னு"அடிக்கடி நாங்கள் பயன்படுத்தும் ஓர் வார்த்தை.ஆனால் உலகில் ஒரு நிமிஷத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன.தமிழ் அகராதியில் இணைக்கப்பட்டு இருந்த ஆனந்த விகடனின் 20.08.1966 ம் ஆண்டின் ஒரு சிறு பதிவு.

நான் படித்துவிட்டு இன்றைய சிந்தனையில் யோசித்துப் பார்த்தேன்.1966 க்குப்
பிறகு உலகம் விஞ்ஞான வளர்ச்சியில்,நாகரீக வளர்ச்சியில் அடிபட்டு இப்போ
உலகம் இன்னும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.எனவே இன்றைய ஒரு நிமிஷம் இன்னும்...இன்னும் வேகத்தோடே இருக்கும் என்பது என் கருத்து.நான் அதில் எழுதிய ஆக்கத்தைத் தருகிறேன்.

நண்பர்கள் நீங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு நிமிஷத்தில் என்ன விஷயங்கள்
நடக்கலாம் என்கிற ஊகங்களை அல்லது உண்மைக் கணிப்பீடுகளைத் தாங்களேன்.
பார்க்கலாம்.

சின்னதாய் ஒரு விளையாட்டுத்தான் !

1)ஒரு நிமிஷத்திற்கு வானத்தில் இருந்து 6,000 விண்கற்கள் விழுகின்றன.

2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற்றுகிறது.

3)ஒரு நிமிஷத்திற்கு 100 பேர் இறக்கின்றனர்.114 பேர் பிறக்கின்றனர்.

4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.

5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன.

6)ஒரு நிமிஷத்திற்கு 60 இலட்சம் சிகரெட்டுக்கள் பிடிக்கப்படுகின்றன.

7)ஒரு நிமிஷத்திற்கு 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.

8)ஒரு நிமிஷத்திற்கு 4,600 செருப்புக்கள் தைக்கப்படுகின்றன.

9)ஒரு நிமிஷத்திற்கு 68 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவைகள் 20.08.1966 ம் ஆண்டின் ஒரு கணிப்பீடு.உங்கள் கணிப்பீடுகளைப் பதிவில் தரப்போகிறேன்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, March 17, 2009

நிலா அம்மாவின் 31+1 கேள்விகள்.

(உண்மை...நான் சொல்வெதெல்லாம் உண்மை.)

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெயர் ஹேமவதி.என் குடும்பம் கொஞ்சம் இசையில் கலந்த குடும்பம்.அதால ஒரு இராகத்தின் பெயரைத் தேடி வச்சாங்களாம் என் பெரிய மாமா.ஆனாலும் அவருக்குத் தேனுகா ன்னு வைக்கத்தானாம் விருப்பம்.என் அப்பா ஒரு ஆசிரியர்.அவர் அகராதி பாத்திட்டு தேனுகா ன்னா எருமைக் கூட்டம் ன்னு வைக்க விடலயாம்.ஆனாலும் வீட்ல வேற வேற செல்லப் பேர்ல எல்லாம் கூப்பிடுவாங்க.(அதெல்லாம் சொல்லக்கூடாது)ஆனா சுவிஸ் வந்து எல்லாருமே-வெள்ளைக்காரர் உட்பட ஹேமா தான்.

என்னோட பெயர் எனக்கு நிறையப் பிடிக்கும்.எப்போவோ வானொலில ஹேமவதி ராகத்தில ஒரு கீர்த்தனையும் கேட்டிருக்கிறேன்.ஆனா சங்கீதம் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ம்ம்ம்....எப்போ அழுதேன்?போன வருஷம் அப்பா அம்மாவை சிஙப்பூர்ல போய்ப் பாத்திட்டு வரும்போது விமான நிலையத்தில் நின்று நிறைய அழுதேன்.ஏன் என் ஊர் பற்றிய பதிவுகள் படிக்கும்போதும்,என் பதிவுகளை நான் எழுதும்போதும் கலங்கிவிடுவேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்காது.அழகா இல்ல.ஆனா படிக்கிற காலத்தில அழகாத்தான் இருந்திச்சு.பிறகு எழுதிற சந்தர்ப்பம் ரொம்ப காலம் விட்டும் போச்சு.அதனாலேயோ என்னமோ...!

4).பிடித்த மதிய உணவு என்ன?

எனக்கு சாப்பாடுன்னு அவாப்பட்டு பிடிக்கும்ன்னு சொல்ல எதுவுமில்ல.எல்லாமே பிடிக்கும்.பசிக்கு வயித்துக்கு ஏதாச்சும்.
சிலசமயங்களில் 2-3 காய்கறிகளை உப்புக் கொஞ்சம் தூவி ஆவில அவிச்சிட்டு நூடுல்ஸ் போட்டும் சாப்பிடுவேன்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நான் யார் கூடவும் உடனேயே ஒட்டிக்க மாட்டேன்.1-2 சிநேகிதிகள்தான் இருக்காங்க.அவங்க கூட அளவோடதான்.நானும் மூக்கு நுழைக்க மாட்டேன்.நுழைக்க விடவும் மாட்டேன்.ஆனா அளவோட ரொம்பகால சிநேகிதமா இருப்பேன்ஆனா நல்லதோ கெட்டதோ மனசில படுற விஷயங்களை மனம் நோகாமல் நாசூக்காகச் சொல்லுவேன்.சொல்லாமல் அரை மனதோடும் பழகப் பிடிக்காது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியிலயும் கடலிலயும் குளிச்சிருக்கேன்.ஆனா அருவியில குளிக்கத்தான் நிறையப் பிடிக்கும்.நான் அப்பாவின் வேலை காரணமாக மலையகப் பகுதியில் வாழ்ந்திருக்கிறேன்.அங்கு அடிக்கடி அருவிக்குளியல்.
அப்பாடி...இப்போ நினைச்சாலும் இப்பவே ஓடிப்போக வேணும் மாதிரி இருக்கு. கடைசியாக 2003 ல் குளிச்சேன்.ஐயோ...அருவிலங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தின் மகிழ்ச்சி-புன்னகையை.அதிலிருந்தே எடை போடலாம் தொடர்ந்து கதைக்கலாமா வேணாமன்னு.(பொய்யாகவும் புன்னகை வரலாம்.பிறகு கவனிச்சுப் பழகிக்கலாம்.)

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?
பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது>>>>துணிவு.தளராத நம்பிக்கை.முயற்சி.இரக்கப்படுவேன்.உடனே உதவி செய்யும் குணம்.(செய்திட்டு மாட்டிக்கிறது அப்புறம்)

பிடிக்காதது>>>>கொஞ்சம் பிடிவாதம்,என்னப்போலவே மத்தவங்களும் இருக்கணும்ன்னு நினைக்கிறது.(நான் சரியா-நேர்மையா இருக்கிறதா நினைக்கிறேன்.மத்தவங்க பார்வைல...தெரில!)

9.உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்சது>>>>நான் திட்டினாலும் அன்பா இருக்கிறது.

பிடிக்காதது>>>>முயற்சி,தேடல் இல்லாத சோம்பேறித்தனம்.(முயன்றால் நிறைய வளர்ச்சி தெரியும்.)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

வேற யாரு?அந்தச் சரி பாதிதான்.அப்புறம் அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

மெல்லிய றோஸ் நிறம்.

12.என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வானொலி.நான் தூங்கும் நேரம் தவிர எந்த நேரமும் அது தூங்காது.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?

மெல்லிய ஊதா நிறம்.

14.பிடித்த மனம் ?

இரவில் பூக்களின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.
அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நான் இவரை ரசித்துப் படித்த கதை"ஒரு சின்னப் பையன் அப்பாவாகிறான்" ல் தான் சந்தித்தேன்.படித்துப் பார்த்தால் எங்கள் ஊர்க் கதை.ஒருவேளை அவரும் எங்கள் ஊர்க்காரராக இருப்பாரோ என்று கேட்டேன்.

//நீங்க கோண்டாவில் - நான் கும்பகோணம்.//
ஓ...அப்படியா!என்ன நடுவில கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கு.அப்படித்தானே?

//ஆனா இருவருமே தமிழர்கள்.
தாய் - தாய்நாடு பிடித்தவர்கள் - என்று நினைக்கின்றேன்.//
அதென்றால் உண்மை.//

இப்படித்தான் எங்கள் நட்பு உருவானது.பிறகு நிறையவே எழுத்துப் பிழைகள் விடுவார்.திருத்திவிடுங்க என்று உரிமையும் தந்தார்.இயல்பாய் சின்னச் சின்ன விஷயங்கள்தான் எழுதுகிறார்.சோம்பேறி அல்லது மனச் சோர்வு போலும்.மனதால் சங்கடங்கள்-வேதனைகள்.உடைத்தெறிய முடியாமல் கஸ்டபடுகிறார்.அவரின் பதிவுகளுக்குள் பெரிய விஷயங்கள் அடங்கியிருக்கவில்லை என்றாலும் ஒரு வேதனை தெரியும்.அவரைச் சந்தோஷமான மனநிலைக்குக் கொண்டு வர வேணும் என்பதில் எனக்கு ஒரு ஆசை.ஆதங்கமும்கூட.பாருங்களேன் அவரை யார்னு...!பின்னூட்டத்தில் "அவருக்கும் பெரிய எண்ணம்."இப்படி செல்லமாகப் பேசியபடி தொடங்கினது எங்கள் நட்பு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்
பிடித்த பதிவு எது?

எனக்கு நிலா ன்னாலே ரொம்பப் பிடிக்கும்.அவங்க பேர்ல நிலா ஒட்டிக்கிட்டு இருக்கு.ஒரு நாள் போய் பார்த்தேன்.நிலாக்குட்டி போட்டோக்கள் அசத்திடுச்சு.அவங்க இயல்பான எழுத்துக்களும் பிடிச்சிருக்கு.கடைசியா மொக்கை கவிதைன்னு கலக்கியிருக்கிறாங்க.யாராச்சும் பாத்தீங்களா...!

கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு

17. பிடித்த விளையாட்டு ?

இப்போதைக்கு ஒண்ணும் இல்ல.ஊர்ல இருக்கிறப்போ கிரிக்கெட் விருப்பமா பாப்பேன்.ஆ...ன்னு கிரிக்கெட் பாத்து மாமா வாங்கித் தந்த பார்க்கர் பேனாவைத்
தொலைத்த ஞாபகம்.

18.கண்ணாடி அணிபவரா?

வெயில் காலங்களில் கார் ஓட்டும்போது மட்டும்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கதை உள்ள படங்கள்.உதாரணம் ஹேராம்,மொழி,ஆட்டோகிராவ்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

நான் கடவுள்.இப்படியும் இருக்குமா என்கிற சந்தேகத்தோடு.
இருக்கிறதாம் என்றும் கேள்விப்படுகிறேன்.

அச்சோ...இன்னும் அநுமார் வாலுமாதிரி நீளுதே....கேள்விகள் ! (இது புலம்பல்)

21.பிடித்த பருவ காலம் எது?

பனி பூவாய்க் கொட்டி உள்ளம் வரை குளிர வைக்கும் காலம்.அழகான நிலாக்காலம்.மழை பெய்து மரங்கள் கழுவப்பட்டு ஈரத்தலை அசைத்தபடி இருக்கும் அந்தச் சமயம் ஒரு அழகு.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?

இப்போதைக்கு இணையங்களில் ஏதாவது படித்தால் மட்டுமே உண்டு.நேரமே இல்லை.
(இப்படியே தொடர் பதிவுகள் என் பதிவுகள் பின்னூட்டங்களுக்குமே நேரம்.)


23.உங்கள் டெச்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றவே மாட்டேன்.நிறையக் காலமாக எனக்குப் பிடித்த படம் மட்டுமே.(சொல்ல மாட்டேன் யார்ன்னு.)

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது>>>>மெல்லிய இசை மட்டும்.

பிடிக்காதது>>>>சத்தமாய்-அதுவும் தூஷன வார்த்தைகள் பேசுவது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?

இப்பவே கண்டம் விட்டுக் கண்டம் மாறித்தானே !ஸ்பெயின்,பாரீஸ்,ஜேர்மனி,லண்டன்,சிங்கப்பூர்,மலேசியா,இந்தியா(கேரளா,இராமேஸ்வரம்) U.A.E போயிருக்கேன்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எல்லோரும் கொஞ்சம் ஒத்துக்கொண்ட விஷயம், சின்னதாய் கவிதைன்னு சொல்லிக் கிறுக்கிறேன்னு.சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் இங்கு லண்டன் தமிழ் வானொலிக்கு.கொஞ்சம் பாத்ரூமில் பாட வரும்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

மனசுக்குள்ள தப்புன்னு தெரிஞ்சும் சரின்னு சொல்ல்லி வாதடுறதை ஏத்துக்கவே முடியாது.நம்ம நாட்டு அரசியல் அப்பிடித்தான் கிட்டத்தட்ட.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வேற என்ன !பிடிவாதம்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுவிஸ்-இதைவிட வேற என்ன சுற்றுலாத்தலம் வேணும்.எங்கள் நாட்டின் மலையகப் பகுதிகள்(நுவரெலியா,கண்டி) மிக மிக அழகு.

March 4, 2009 - 5:13 PM

Switzerland tops tourism competitiveness index
Switzerland has retained its position as the world's best place for the tourism and travel business, the World Economic Forum (WEF) said on Tuesday.
Austria, Germany, France and Canada followed, but the Geneva-based WEF said current economic troubles had not yet made their way into the rankings. Thea Chiesa, a WEF economist, said the situation would be different next year.
"We will see the current stimulus plans, being implemented by different nations, start to bear fruit," Chiesa said.
Infrastructure and environmental sustainability are among the WEF's 14 major factors when measuring competitiveness in the tourism sector.
"To thrive, or even survive, in this period of uncertainty and change, both the travel and tourism industry – and destinations themselves – will need to approach the challenges in a holistic and systemic manner," Chiesa said.
The report also explored the impact of oil prices on the tourism industry and the importance of price competitiveness.
Jennifer Blanke, a senior economist with the organisation's global competitiveness group, said countries must look at long-term issues that will come into play once the economic crisis subsides.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

சுயநலமில்லாம,யாருக்கும் கஷ்டம் கொடுக்காம முடிஞ்சா முடியாதவங்களுக்கு உதவி செய்துகிட்டு வாழனும்ங்கிறதில வைராக்கியமா இருக்கேன்.இருந்திட்டும் இருக்கேன்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !

சமையல்.(தானும் நடுவுல புகுந்து....அட்டகாசம்.தாங்க முடியாது.)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.(இது என் கேள்வி)

வாழ்வு அழகான ஒரு கவிதைபோல.அதன் வரிகளின் வடிவில்தான் அதன் மெருகு.

விதி முறை
.மூணு பேரை மட்டுமே அழைக்கலாம்.
.இந்த அழைப்பு மணி எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்க உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரைப் போட வேண்டும்.

நான் அழைப்பது : இரவீ - கண்டுகொண்டேன்.
http://blogravee.blogspot.com/

நன்றி - நிலாவும் அம்மாவும் -
(எ)பொன்னாத்தா சண்டைக்கோழி.

http://sandaikozhi.blogspot.com/

என்னை அறிவித்துக் கொண்டவள் இவள்.
ஹேமா(சுவிஸ்)

Thursday, March 12, 2009

வாழ்வு இனிக்க...கொஞ்சம் ரிலாக்ஸ்.

(அதிசயம்தான்.... )


ஓடி வாங்கோ...ஓடி வாங்கோ.

மத்தியானச் சாப்பாட்டுக்கு !


(ஆனால் உலகத்தில்.... )


உங்கட இரண்டு பேரின்ர கையிலதானப்பா

எங்கட வாழ்க்கை !


(இப்படியும் இருந்தால்.... )


அங்கிள்,கொஞ்சம் ஆடாமல்

நித்திரை கொள்ளுங்கோ !


(பன்னிரண்டு மாதங்களிலும்.... )


என்ர செல்லம்,அப்புக்குட்டி

எங்கையடா போயிருந்தனீங்கள் !



(வசந்த காலமாக....)


என்ர கை சின்னதாய்க் கிடக்கு.

உங்கட கண்ணைப் பொத்தப் பத்தாதாம் !




(யுத்தமே இல்லாத பூமியாக....இருக்குமே! )


அச்சோ...அச்சோ,வயித்துக்குள்ள நோகுது.

நாளைக்கு விளையாடலாம் OK !


(உயிர்களை மதிக்கலாமே! )


பிறந்த நாளேல எண்டாலும் கீழ இறங்கி வந்து

எங்களோட சாப்பிட ஏலாதோ !


ஹேமா(சுவிஸ்)

Wednesday, March 11, 2009

தமிழ்மணத்தில் சூடான பதிவில் இல்லை.வீட்டில் சூடு.

தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் என் பதிவுகள் வந்ததோ இல்லையோ, என் வீட்டில் அதீத சூடான சண்டை.பற்றி எரியாத ஒரு குறைதான்.வேலைக்குப் போய் வந்த நேரம் போக எந்த நேரமும் கணணியோடு இருக்கிறேன்.வீட்டில் வேலை - வெட்டி செய்வதில்லை.கண்ணும் கெட்டுப் போகப் போகிறது.ஆனால்
"என்ன நீ ஒழுங்காக எழுதிக் கிழிக்கிறாய்?எழுதியிருந்தால்
உன் பதிவுகளில் ஒன்றாவது தமிழ்மணத்தில் வந்திருக்குமே" என்று
என்னைச் சூடேற்றுகிறார்கள்.கிண்டல் பண்ணுகிறார்கள்.அதனால்தான்
நானும் ம்ம்ம் .......சூடாகிவிட்டேனோ!

இப்போது என் வீட்டில் என்னைக் கிண்டல் அடிப்பவர்களுக்கு ஓரளவு புரிஞ்சிருக்கும். (இனி யாராவது சூடாக்கினால் தமிழ்மணத்திற்குத்தான் அறிவிப்பேன்.)நான் எழுதும் பதிவுகள் தரமானதாக இருந்தாலும் தமிழ்மணத்தில் ஏனோ அது தவறவிடப்படுகிறது.

உப்புமடச் சந்திக்கு நான் இன்னும் தரமான பதிவுகள் கொடுப்பதில்லை.
என்றாலும் குழந்தைநிலாவின் பதிவுகள் என் மனதுக்கு நின்மதியையும் நிறைவையும் தருபவை.அங்கு என்னை ஊக்குவிக்க நிறையவே
நண்பர்களும் இருக்கிறார்கள். எனவே என்னை இனி யாராவது சூடாக்கினாலும் நான் குளிர்மையாக எழுதிக் கொண்டே இருக்கலாம்
என்றே நினைக்கிறேன்.எனக்கு ஆறுதல் சொன்ன கமல், கடையம் ஆனந்த்,ஆதவா,தமிழ்மண நிர்வாகம்,எப்பவுமே என் பக்கம் எட்டியே
பார்க்காத வால் பையன்,மோனி,நசரேயன்,கீழை ராஸா, ஜெயா,முனியப்பன்
எல்லோருக்கும் என் நன்றி.

அன்போடு ஹேமா(சுவிஸ்)

Tuesday, March 10, 2009

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

தமிழ்மணம் சம்பந்தமாய் எனக்குள்ளே ஒரு கேள்வி.குழந்தைநிலா தளம் தமிழ்மணத்தோடு இணையத் தொடங்கி ஒரு வருஷமும் முடிஞ்சும் போச்சு.நான் ஒவ்வொரு பதிவையும் தமிழ் மணத்தோடு இணைத்துவிட்டு எதிர்பார்த்திருப்பேன்.

இங்க தாங்க என்னோட கேள்வி-இல்லாட்டி ஆதங்கம்ன்னும் வச்சுக்கலாம்.என்னோட பதிவுகளில் ஒன்று கூட இன்றுவரை சூடான பதிவுகளுக்குள்ளோ அல்லது வாசகர் பரிந்துரைக்கோ போனதில்லை.
காரணம் என்ன?சிலரது சாதாரணப் பதிவுகளை எல்லாம் நான் கண்டிருக்கிறேன்.சூடான பதிவுகளுக்குள்ளும் வாசகர் பரிந்துரைப் பதிவுக்குள்ளும்.

குழந்தைநிலாவில் 170 கவிதைகள்,உப்புமடச் சந்தியில் 28 பதிவுகளும் போட்டிருக்கிறேன்.ஒன்றுகூடவா அதைப் படிப்பவர்கள்
மனதில் பதியாமல் - பாதிக்காமல் இருக்கிறது.

சமீபத்தில் யூத் விகடனில் கூட இரண்டு கவிதைகள் வெளியாயின.
அடிக்கடி தமிழிஸ் தளத்தில் பிரபல படைப்புகளுக்குள் பதிவாகிறது.

தமிழ்மணத்தில் மட்டும் ஏன் இந்த வஞ்சகம்?
சரி....தமிழ்மணத்தில் தப்பு இல்லையென்றால்
என்னில் தப்பா?

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
அல்லது என் பதிவுகள் சரியில்லையா?

எனக்கு தமிழ்மண நிர்வாகத்திடமிருந்தோ அல்லது என் இணைய நண்பர்களிடமிருந்தோ பதில் வேணும்.எதிர் பார்க்கிறேன்.இல்லை என் பதிவுகள் தரமாயில்லை என்று யாராவது சொன்னால் எழுதுவதையாவது நிறுத்திக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

எனவே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சே ஆகணும்.

ஆதங்கத்தோடு-அன்போடு ஹேமா(சுவிஸ்)

Thursday, March 05, 2009

கூதல் மாலை-கவிதை சொல்லும் கதை.

குளிருக்குப் பயந்து
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.

நான் சுவிஸ் ல் இருப்பதால் பனி கொட்டும் அனுபவம் அதன் அழகு,அதன் அவஸ்தையும்தான் இந்தக் கவிதையில்.இங்கு ஐப்பசி மாதம் தொடக்கம் சித்திரை
வரை பனி கொட்டும் காலங்கள்.இந்தக் காலங்களில் வானம் ஓரளவு வெளிப்பாக
இருக்குமே தவிர சூரியனைக் காணக் கிடைக்காது.சிலசமயங்களில் ஒரு சில நிமிடங்கள் அதிசயமாய்.அந்தியில் 4-4.30க்கே இருட்டிவிடும்.வெயிலோ வெப்பமோ இல்லாததால் மலைகளோ,மரங்களோ,பாதைகள் எங்குமே பனியின் ஆட்சிதான்.பனி கால்புதைந்து
நடக்கும் அளவிற்குக் கொட்டும்.அது அப்படியே இறுகினால் வழுக்கோ...வழுக்கென்று வழுக்கும்.(ஐஸ்பெட்டிக்குள் கவனித்திருப்பீர்களே.)பெருந்தெருக்களில் வாகனங்கள் வழுக்காமல் ஓடுவதற்காகவும்,நடைபாதைகளில் நடந்து செல்வதற்கு வசதியாகவும் ஒருவகையான உப்புத் தூவுவார்கள்.வாகனங்கள் ஓடும் வெப்பத்தில் பெருந்தெருக்களில்
பனி படர்ந்திருக்காது.கரைந்திருக்கும்.என்றாலும் நடைபாதைகள் அப்பப்பா...செப்படி வித்தைதான்.இவ்வளவையும்
இந்தப் பந்தி சொல்கிறது.

உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.

எத்தனை உடைகள் போட்டு முகமூடி மனிதர்களாய்,அப்பலோவுக்குப் போகிறவர்கள்
போல எம்மையே ஓர் பொதி போலத்தான் கட்டி உடைகள் போட வேணும்.பனி வழுக்காமலும்இகாலில் குளிர் பிடிக்காமலும் இருக்க பாரமான விஷேசமான சப்பாத்துக்கள்,கையுறைகள் என்று எம் உடம்பைவிட 5-6 கிலோ மேலதிகமான பாரங்கள் சுமக்க வேணும்.அதோடு எங்கள் வேதனைகளின் பாரமும் இருக்கும்.என்றாலும் குளிர் முகத்தில பட ஒரு சுகம்தான்.நடக்கும்போதே மனம் சந்தோஷமாக இருந்தால் கோடுகள் கிழித்துக் கோலம் போட்டுகொண்டே நடக்கலாம்.அப்போது ஒரு ஆசைதான்.சாணகம் தெளித்துக் கோலம் போடலாமோ என்று.

நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.

இந்த இடத்தில் ஆதவாவின் மிகுந்த சந்தேகம்.ஒரு நல்ல தெருப்பாடகன் பாடிக்கொண்டிருப்பான்.அதைக் கவனிக்கக் கூட நேரம் இருக்காது.ஒன்று குளிரில் நின்று ரசிக்க முடியாது.அடுத்து அவ்வளவு அவசர உலகம்.நிமிடங்கள்கூட வீணாகமல் சேமித்தபடி வாழ்க்கை.குழந்தைகள் கம்பளி உடைகளில் அழகாய் இருப்பார்கள்.பெரியவர்கள் அசல் பூச்சாண்டிகள் போலத்தான்.முகத்தில் மூக்குக் வாயும் கண்ணும் மட்டுமே தெரியும்.

பனி ரசித்து
பார்வைகள் கண்ணாடி உடைக்கும்
படியோடு நடை நிறுத்தும்
பூனைக்குட்டிகள்.

இங்கு பூனை,நாய்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிகள்.என்றாலும் தங்கள் தங்கள் வீடுகளோடு மட்டும்.(எல்லாம் வீட்டுக்குள்தான்.)பூனையைக் கொஞ்ச நேரங்கள் வெளியில் விடுவார்கள்.
என்றாலும் குளிர் காலங்களில் பூனைகள் வெளியே போகாமல் வீட்டுப் படிகளோடு கண்ணாடிக்குள்ளால் பார்த்தபடி நிற்கும்.

புகைத்தல் தடை
என்றாலும்,எல்லோருமே புகைத்தபடி.
மதுக்கடை வியாபார அமளி.
குருவிகள் காக்கைகள் எங்கே.
புறாக்கள் தவிர
பறப்பன கண்ணில் இல்லை.
பனிபூண்ட வெள்ளை மரங்கள்.

குளிர் கூடிய காலங்களில் வாயால் மூக்கால் மூச்சின் புகை பறக்கும்.அதுதான் புகைத்தல் தெருவில் தடை...ஆனாலும்.மதுக்கடைகள் வியாபாரம்,அதுவும் வெள்ளி,சனிக்கிழமைகளில் அமளி துமளிதான்.

உண்மையில் குளிரில் ஒரு சிறு பூச்சி,புளுக்களைக் காணக் கிடைக்காது.ஈ,
இலையான் எதுவுமே இருக்காது.காக்கா குருவிகள் தெரியாது.எங்கேயாவது போய்விடுமாக்கும்.எங்கேயாவது ஒன்றிரண்டு பறப்பதைக் காணலாம்.ஒன்று
தெரியுமா உங்களுக்கு.இங்கு காக்கா,குருவிகள்,நாய்,பூனை எல்லாமே
இங்குள்ளவர்கள் போலவே அளவோடுதான் குரல் தரும்.எங்கள் நாடுகள் போலக் கத்திக்கொண்டேயிருக்காது.புறாக்கள் மட்டும் எப்பவும்போல குளிருக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கும்.எங்களைப் போலவோ!

உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.

சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு வாசலில் இரு பக்கத்திலும் பனிமனிதன் செய்து உடை அணிவித்து கண்ணாடி போட்டு அழகு படுத்தியிருப்பார்கள்.(ரசனை உள்ளவர்கள் மட்டும்.)


துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.

எதையும் இலேசாக மனதிற்குள் போட்டு அழுந்தாமல்(பாசம்,பந்தம்,பிரச்சனைகள்,நோய்,வயது,தேவைகள்...)வாழ்வை இரசனயோடு வாழும் வெள்ளை இனத்தவர்கள்.(ஒரு விதத்தில் சரி என்றாலும்,ஒரு விதத்தில் பற்றே இல்லாமல் வாழும் வாழ்க்கை.)

ம்ம்ம்...
எங்கள் இருப்புக்கள்?
யுகங்கள் வேண்டும்
வெளுத்த வாழ்வுக்கு.

நாங்கள்,அதுவும் பொதுவாகத் தமிழர் அவர்கள் மனநிலைமையில் வாழ...பலகாலங்கள் ஆகும்.ஒருவேளை அப்படி ஒரு மனநிலையே வராது.அப்பா,அம்மா,பிள்ளைகுட்டி,
பக்கத்து வீட்டுக்காரன்,உறவுகள்,நாடு,வீடு என்றே பாசங்களைப் பிய்த்துப்போட்டுவிட்டு அவதிப்பட்டுக் கொண்டிருப்போம்.பிறந்த பச்சைக் குழந்தையை பக்கத்து அறையில் தூங்கப் போட்டுவிட்டுத் தூங்கும் அப்பா,அம்மா.அதேபோலவே 14-15 வயதில் தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டு தனியாக வாழப் பழகிக்கொள்ளும் பிள்ளைகள்.அப்பா அம்மாவை தேவை தினங்களோடு,நேரம் கேட்டு,தேநீர்ச் சாலைகளில் சந்திக்கும் பிள்ளைகள்.
பிற்காலத்தில் வயோதிபர் மட வாழ்க்கை.வெளுத்த வாழ்வை ரசித்தாலும் சிலசமயங்களில் சீ....என்று ஆகிவிடும்.

குளிரூட்டி இல்லாமல்
குளிரின் விறைப்பில்
பனியின் முகத்தை
பார்த்து ரசிக்க இலகுவாய்.
பறவை இறக்கையில்
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.



குளிரூட்டி இல்லாமல் வெளியில் நடக்கும் போதுதான் குளிரை முழுமையாக அனுபவிக்க முடியும்.அந்த ரம்யமே ஒரு சுகம்.இங்கு போர்த்துவதற்கென்றெ பறவைகளின் மெல்லிய இறக்கைகளால் போர்வைகள் (மெத்தைபோல ஆனால் கொஞ்சம் மெலிதாக)தைத்திருப்பார்கள்.அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.பறவைகளின் இறக்கைகளால் ஆன போர்வைகள் நிறைந்த வெப்பத்தைத் தரும்.என்றாலும் எல்லோருக்கும் இதன் சுவாத்தியம் ஒத்துக்கொள்வதில்லை.ஒவ்வாமையைக் கொண்டுவரும்.கூடுதலாகத் தும்மலில் தொடங்கி பீனிசம் என்கிற தும்மல் வருத்ததையே உண்டாக்கிவிடும்.இதனால் இலவம் பஞ்சினால் தைக்கப்பட்ட போர்வைகளும் பாவனைக்கு இருக்கிறது.குளிர் காலத்தில் வேலைக்குப் போக அலாரம் எழுப்பினாலே மணிக்கூட்டுக்குத்தான் தலையில் அடி.ஏனென்றால் அப்படித் தூக்கம் தூக்கமாய் வரும்.அவ்வளவு இதமாய் இருக்கும் தூக்கமும்-அதைத் தரும் படுக்கைகளும்.உண்மையில் குளிர் ஒரு குட்டிக் கவிதைதான்.நான் ரசித்து அனுபவிக்கிறேன்.

பல கால ஆசை
பனி திரட்டி உருட்டிய மனிதன்
கை அளைந்த வண்ணமாய்.
வந்த புதிதில்
பனியை...
சுவைத்ததும் ரசித்ததும்
திருட்டுத்தனமாய்,
சிரிப்பாய் எனக்குள் இப்போ !!!


இப்போ நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வரும்.நான் சுவிஸுக்கு வந்த காலத்தில் வந்ததும்,ஒரு கார்த்திகை மாதம்தான்.அப்போ பூப் போல வானில் இருந்து ஏதோ வெள்ளையாய் கொட்டி நிலத்தை மூடும்.எனக்கோ அதிசயம்.யன்னலுக்குள்ளால் வியப்போடு கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.அந்தச் சமயங்களில்தான் மற்றவர்கள் அறியாமல் வாயில் வைத்தும் பார்ப்பேன்.ஆனால் அது இப்போ சர்வ சாதாரணம்.நாங்கள் மழை நீர் எடுப்பது போல கிராமப் புறங்களில் வெளியான இடங்களில் பனியைப் பாத்திரங்களில் சேமித்துப் பாவிப்பார்கள்.

அதேபோல சிறுவர்கள் பனியை உருட்டி எறிந்து விளையாடுவார்கள்.தெருவில் நடப்பவர்கள்,வாகனங்கள் மீதும்.இந்தச் சமயங்களில் இந்த விளையாட்டைக் கோபப்பட்டுப் காவல்துறையினரிடம் புகார் செய்ய முடியாது.ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.வேணுமானால் நாங்களும் திருப்பி எறிந்து விளையாடலாம்.

இன்னும் ஒன்று சொல்ல ஆசை.குளிர் காலங்களில் வாகனங்களின் மேலே எங்கள் ஊரில் சவப்பெட்டிகள் கட்டிக் கொண்டு போவது போல நிறையக் காணலாம்.அதுவும் பெரும் தெருக்களில் நிறையவே காணலாம்.நான் நினைப்பதுண்டு...என்னடா ஒருநாளில் அடிக்கடி இவ்வளவு மனிதர்கள் இறந்திருக்கிறார்களே என்று.பிறகுதான் தெரியும்.அது பனி சறுக்கி விளையாடுபவர்கள் கொண்டு செல்லும் விளையாட்டு உபகரணங்கள் என்று.இதே நேரம் கை கால்களை முறித்துக்கொண்டு கைத்தடியோடு நிறையப் பேர்களைக் காணலாம். இதையும் பாவங்கள் இந்த நாட்டில் இத்தனை ஊனமுற்றவர்களா என்று பரிதாபப் பட்டிருக்கிறேன்.பிறகுதான் தெரியும்.அது தற்கால ஊன்றுகோல் என்று.

ஆதவா,கவிதைக் கருவே புரியவில்லை என்று சொல்லப்போக,நான் குளிர்காலத்தைப்
பற்றி என் அனுபவங்களயே சொல்லிவிட்டேன்.சமயம் வரும்போதுதானே
மனமும் வாய் திறக்கிறது.

அனுபவச் சிலிர்ப்போடு ஹேமா(சுவிஸ்)

Tuesday, March 03, 2009

யாரை நிறையப் பிடிக்கும் எனக்கு?

ஆதவா "எனக்குப் பிடித்த நபர்" ன்னு ஒரு விளையாட்டில் கோர்த்து விட்டாலும் விட்டார்.எனக்கு முழி பிதுங்கி...வெளியில் வராத குறைதான்.உண்மையில் எனக்குச் சங்கடமாகிப் போன விஷயமாகிவிட்டது.எனக்கு யாரை நிறையப் பிடிக்கும்?ம்ம்ம்...யோசிக்க யோசிக்க வரவே இல்லை.எல்லோரும் அவரவர் கொள்கையில் உறுதியில் நிலைப்பாட்டில் - அவர்களைப் பிடித்திருக்கிறது.

இராமரையும் பிடிக்கும்.இராவணனையும் பிடிக்கும்.கண்ணகியையும் பிடிக்கும்.மாதவியையும் பிடிக்கும் என்பதைப்போல.ஏன் சொல்லப்போனால் எங்கள் நாட்டு ஹிட்லர் ராஜபக்சவையும் பிடிக்கும்.தமிழனை அடிவேரோடு அழிக்கும் உறுதியான கொள்கையில்.

உலகப் பெரியவர்களை எனக்குப் பெரிதாகத் தெரியாது.ஆதவா அளவிற்கு நான் படித்து அறியவில்லை.வாய்ப்பும் கிடைக்கவில்லை.பொறுமை-
நேரமும் இல்லை.என்ன சொல்லி நான் எழுத?

முதலில் வீட்டில்,அப்பாவை நிறையப் பிடிக்கும்.என் தாத்தா(அம்மாவின் அப்பா)வைப் பிடிக்கும்.அவர் போல ஒரு மனிதனை நான் இன்றுவரை கண்டதில்லை.அவர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழர்.தவில் கலைஞர்.அவரது இந்திய மனைவி இறந்துவிட, கைக்குழந்தையோடு(மகன்) யாழ்ப்பாணத்துக்கு வந்து மறு திருமணம் செய்து கொண்டவர்.அன்பால்,ஆன்மீகத்தால்,பொறுமையால்,கலையால்
உயர்ந்தவர்.அவரது மூத்த மகன்தான்"வலங்கமான் சண்முகசுந்தரம்".தமிழ்நாட்டிலேயே
புகழ் பெற்ற தவில்வித்வான்.என் தாத்தா ஒருவர் கடவுள் போல.
என் சின்ன மாமா பிடிக்கும்.என் தம்பி பிடிக்கும்.இப்படி...இப்படி.
இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர்,சிவாஜி,கமல் பிடிக்கும்.எஸ்.பி.பி,கே.ஜே,எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பிடிக்கும்.

இனி உலகைச் சுற்றி எனக்குத் தெரிந்த அளவில் சொல்ல முனைகிறேன்.ஆதவா,நான் யாரிடமும் அடி வாங்காமல் இருந்தால் சரி.காப்பாத்த இப்போதைக்கு நீங்கள்தான்.

புத்தன்
புத்தன் அவதாரமானான்.அவன் கொள்கைகள் அவதாரங்களுக்கானது.புத்தன்போல் எவரும் தானம் புரிந்த தில்லை.எங்கோ புத்தன் பற்றி ஒரு கதை படித்த ஞாபகம்.போதிமரப் புத்தன் முற்பிறவியில் அடர்ந்த கானகத்தில் புலிக் குகை கண்டதாயும்,தாய்ப் புலி இரை தேடப் போயிருந்த சமயம் குட்டிகள் பசியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததாயும்.பார்த்த புத்தன் பசிக்குக் கொடுக்கத் தன்னிடம் ஏதுமில்லை என்று வாருங்கள் குட்டிகளே,என் உடலைத் தின்று பசி தீருங்கள் எனக் குட்டிகளுக்கு இடையில் விழுந்துஉயிர் விட்டான் என்று.எனவே புத்தனின் போதனைகள் பிடிக்கும்.அந்த அமைதியான முகமும் மிகவும் பிடிக்கும்.

காந்தி
பகவத் கீதை,சமண சமய கொள்கைகள்,லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி சத்தியம்,அகிம்சை ஆகிய கொள்கைகளைத் தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார்.அசைவ உணவுகளைத் தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி
சிறு வயதில் புலால் உணவைச் சிறிது உண்டாலும் பின்னர் சைவ உணவையே,குறிப்பாகப் பழங்கள்,கடலை,ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு,பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார்.வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன்,மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார்.உள்நாட்டில் தயாரிக்கப்படும்
காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.எனவே காந்தித் தாத்தாவை,அவரது அகிம்சைப் போராட்டங்கள்,சுறுசுறுப்பு,பயப்படாத உறுதி பிடிக்கும்.

பெரியார்
மதுவிலக்குக் கொள்கை முதன் முதலில் உருவாக்கப் பெற்றது பெரியார் அவர்களின் இல்லத்திலேயே.காந்தியார் ஈரோடு வந்து இவரது இல்லத்தில் தங்கயிருந்த வேளை குடிபோதைக் கணவர்களால் மிகக்கொடிய துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனைவியரின் மனவலியைப் பற்றிப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும்,தங்கை கண்ணம்மாளும் அவரிடம் சொன்னார்கள்.மதுப் பொருள்களைத் தடை செய்யும் கொள்கையை வகுத்தே தீர வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினர்.இதற்காக ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர். போற்றத்தக்க இந்தக் கருத்தினை காந்தியார் உடனே ஏற்றுக் கொண்டார்.மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆங்கிலேயர் அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசுக் கட்சியினர் கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.

மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்ட காந்தியார் விடுத்த அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்காகத் தம்முடைய பரந்த தோப்புகளில் கள் உற்பத்திக்காக நின்ற 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பெரியார் வேரோடு வெட்டி வீழ்த்தினார்.

அந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலும் உறுதியான பிடிப்புக் கொண்டிருந்தார் இவர். ஈரோடு நகரில் போராட்ட வீரர்களை வழிநடத்திச் சென்று கள்ளுக்கடை முன்னால் மறியல் புரிந்தார் பெரியார்.இவர் கைது செய்யப்பட்டு,ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
மற்றும் புலவர்,வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக,வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப் பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவும் இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூடநம்பிக்கைக் காரர்களாகவும் பிடிவாதக் காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்!
*************************************************
மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும்.

மனிதன் தனக்குள்ளாகவேதான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும்,சுயமரியாதையும் பெற வேண்டும்.

சீர்திருத்தமும்,சுயமரியாதையும்,சட்டம் கொண்டு வந்து,வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்

மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.
மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

பாரதி
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாரதி தீர்க்க தரிசியாய் 1908 இல் கனவு காணும் போது விடுதலை இயக்கத்தைப் பாரதிதாசன் ஒரு பாட்டில் நக்கல் புரிந்து கேலி செய்வதைப் பலர் அறியமாட்டார்கள்! கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன்,"அக்கா!அக்கா! என்றாய்.அக்கா வந்து கொடுக்க சுக்கா,மிளகா,சுதந்திரம் கிளியே?"என்று எள்ளி நகையாடுகிறார்!இதை நான் இங்கே குறிப்பிடு வதற்குக் காரணம் வரப்போகும் மெய்ப்பாடுகளை முன்கூறும் மகாகவிக்குரிய தீர்க்க தரிசனம்,மெய்ஞானம் பாரதிக்குத் தெளிவாக இருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான்!

பாரதி பாரத விடுதலைப் போரின் ஆரம்ப காலங்களில்,அதைப் பாக்களில் முரசடித்துப் பறைசாற்றிய நாட்டுக் கவி।ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று உறுதியாக நம்பிப் பாடிய விடுதலைக் கவி।ஷேக்ஸ்பியர்,காளிதாசர் போல அநேக நாடகங்கள் எழுதா விட்டாலும்,"பாஞ்சாலி சபதம்"என்னும் ஒரு நாடகக் காவியம் படைத்த ஓர் நாடகக்கவி।"ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி..."என்று ரஷ்யப் புரட்சியைப் பாராட்டிய புரட்சிக் கவி."அச்சமில்லை...அச்சமில்லை அச்சம் என்பதில்லையே..." என்று படை வீரர்களுக்கு உச்ச சக்தி ஊட்டிய போர்க்கவி.கவிதையில் சிலேடை புகுத்திய நக்கல் கவி.கவிதையில் பாடல்களில் புதுமையாக இசையைப் புகுத்திய இசைக்கவி. திரைப்படங்களில் அவரது இனிய பாடல்கள் பல இடம் பெற்றுள்ளதால் அவர் ஒரு திரைக்கவி.வள்ளுவர்,ஒளவையாரைப் போல அறவழி காட்டும்"புதிய ஆத்திச்சூடியை" ஆக்கியதால் அவர் ஓர் அறக்கவி.பைரன்,ஷெல்லி போல காதல்,காமத்தை எழுதாவிட்டாலும்,பாரதியின் பாடல்களில் காதல் காவியச் சுவைகளைக் காண முடிகிறது.வறுமை,ஏழ்மை,தாழ்மை,கீழ்மை,பழமை,மடமை,பெண்மை ஆகியவற்றைப்
பற்றி உணர்ச்சியோடு பல பாக்கள் எழுதிய மானிடக்கவி.வீட்டுக் குள்ளே பூட்டி வைத்து அடிமைப்பட்ட பெண்களுக்கு விடுதலை அளித்துப் புதுமைப் பெண்களை உருவாக்கிய புதுமைக்கவி।ஜாதி,மதங்களைப் பாரோம் என்று மதச்சார்பற்ற பண்பைப் போதித்த மானிடக் கவி.தெய்வ நம்பிக்கை கொண்டு,சக்தியைப் பற்றிப் பல பாடல்கள் பாடிய பக்திக்கவி.

அவரது தோத்திரப் பக்திப் பாடல்கள் பல யாப்பிலக்கணப் பண்புகளைப் பின்பற்றியும் பல இசைக் கீதங்களாகவும் எழுதப் பட்டவை.கண்ணன் பாட்டில் பாரதி,கண்ணன் பிறப்பில் ஆரம்பித்துக் கண்ணனைத் தோழனாக,தாயாக,தந்தையாக,சேவகனாக,அரசனாக,
சீடனாக,குருவாக,குழந்தையாக,விளையாட்டுப் பிள்ளையாக,காதலனாக,காதலியாக, ஆண்டாளாக,குல தெய்வமாகக் காண்பது ஒரு புதுமுறைக் கவிதை ஆக்கம்.

சேகுவரா+காஸ்ரோ
பத்துமாதத்திற்கு ஒரு மாதம் முன்பே இந்த உலகை பார்த்த குழந்தை சேகுவேரா.இறுதிவரை ஆஸ்துமாவுடன் போராடியவன்,மருத்துவன்,தொழு நோயாளிகளுக்குத் தொண்டாற்றியவன்,மாணவனாக இருந்தபோதே பன்னிரெண்டு மாநிலங்களைச் சுற்றி வந்தவன்.கரும்புத் தோட்டப் பணியாளி,தொழில் சங்கத் தலைவராவதற்காக சுரங்கத் தொழிலாளியாக பணியாற்றியவர்,காஸ்ரோவின் பிரதான தளபதி,கியூபப் புரட்சியின் நட்சத்திரம்,குடியுரிமையையும்,அமைச்சர் பதவியையும் உதறிவுட்டு கங்கோலியாவில் புரட்சிக்காகப் புறப்பட்டவன் பதினாறு மாத காலம் பொலிவியாவில் போராட்டம் என
சுருக்கமாகக் கூறினாலும் அந்தப் போரளியின் வரலாறு இதனையும் தாண்டியது.

எண்பத்தியிரண்டு போரளிகளைச் சுமந்துகொண்டு புறப்பட்ட கிராண்மா படகில் தான் சேயின் வரலாறும் வீர வரலாறு ஆகிறது.கேலாரடோஸ் கரையில் படகு தரை தட்டி போராளிகள் கரை சேர்ந்ததுமே சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.அப்போது தான் சேயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னம் பாட்டஸ்ட படை உறுப்பினர் ஒருவரை கொன்றது.இது தான் ஆரம்பம்.சே தலைமையிலான பதினெட்டு பேர் கொண்ட போராளிகள் குழுஆயுத பலம் பொருந்திய ஐம்பத்துமூன்று இராணுவத்தினரை மே மாத்ததில் எதிர்கொண்டு பாரிய வெற்றியை ஈட்டியது.இந்த தாக்குதல் போராட்டத்துக்கு ஆதரவாக நடுத்தர மற்றும் விவசாய மக்களை இணத்தது.போராளிகளில் மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்.

கியூபப் புரட்சிக்குப் பிரதான காரணகர்த்தா சேகுவரா.சேயுடன் காஸ்ரோ இணைந்து செயற்பட்டதனால் கியூபப் புரட்சி சாத்தியமாயிற்று.சே பின்னர் கியூபா பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார்.

சொந்த மகனாக பாவித்து ஏற்றுக்கொண்ட கியூபா நாட்டினையும் உங்களையும் விட்டுப்பிரிகிறேன்!ஏகாதிப்பத்தியத்தை ஒழிக்க எனக்காகக் காத்திருக்கும் கடமைகளை நோக்கிச் செல்கிறேன்.உங்களைப் பிரிகின்றேன்.எனது குடும்பத்தைக் கியூபாவின்
பாதுகாப்பில் விட்டுச்செல்கிறேன்.என் வழியில் மரணம் வந்தால் அந்த
நொடிப்பொழுதும் என் எண்ணங்கள் உங்களையும் என் நண்பன் பிடல் காஸ்டிரோவையும் நினைத்துக் கொண்டிருக்கும்...!

ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும்.அதற்கு ஒவ்வொன்றாக,சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும்.எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும்.அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும்."சே..."

நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடியவர்; இனவெறி அரசால் இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்.நெல்சன் மண்டேலா.தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக் கொள்கைக்கு ஆளான மக்களின் முதுகெலும்பை நிமிர்த்தியவர்.அவர்களின் நுரையீரல்களில் உரிமைக்காற்றை ஊதியவர்.அடிமைத் தளையை அகற்றியவர்.

அன்னை தெரேசா
சிறு வயது முதல் ஏழைகள் மீது அதீத அன்பு கொண்ட அன்னை தனது வாழ்க்கையை துறவறத்தில் செலுத்தினார்.பெற்றோர் இட்ட அக்னஸ் கோஞ்சே பெயாஜியு எனும் பெயரில் முதலில் ஆசிரிய தொழில் புரிந்து துறவர வாழ்க்கையை தொடர்ந்தார். இவரில் காணப்பட்ட ஆழ்ந்த இறை பற்றும்,பணிவும் கடவுளையே பிரம்மிக்க வைத்திருக்கின்றது என்று கூறினாலும் மிகையாகாது.1929 ம் ஆண்டு இந்தியா வந்த இவருக்து 1946ம் ஆண்டு ஒரு ரயில் பயணத்தினால் மனம் திசை திருப்பப்படுகின்றது. அப்போது தான் அவர் அந்த காட்சியை காண்கின்றார்.கால்கள் இரண்டும் ஊனமுற்று நடக்கமுடியாத நிலையில் இருக்கும் ஒரு அநாதை மனிதன்.அவனுக்கு உதவுவார் யாருமில்லை.அவனின் தாகம் தீர்ப்பார் யாருமில்லை.அவனைத் திரும்பி பார்ப்பார் யாருமில்லை.இவற்றைக் கவனித்த அன்னையின் உள்ளம் மிகுந்த வேதனையால் துடித்தது.அன்று முதல் அவரின் வாழ்க்கை பயணத்தில் ஒரு புதியதொரு திருப்பம் ஏற்பட்டது.தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்கு அர்ப்பணிக்கவும் அவர்களுக்காக வாழவும் தயாரானார்.இப்போது முதல் தெரேசா எனும் பெயரில் அடையாளமானார்.

இந்தியாவில் கல்கத்தா எனும் பிரதேசத்திலேயே ஒரு சிறு குடிசையில் இனம் மதம் ஜாதி என்ற பேதங்களை தூக்கியெறிந்துவிட்டு தனது சேவையை ஆரம்பித்த அவர் அங்கு வீதியோரங்களிலும் சேரிகளிலும் வாழ்ந்த ஊனமுற்றவர்கள் நோயாளிகள் அனாதைகள் என்று குழந்தைகள் முதல் முதியோர் வரையிலான அனைவருக்கும் ஒரு புது ஒளி கொடுக்கும் அன்னையானார்.தனக்கென எதனையும் எதிர்பார்க்காத அவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களின் பசியையும் தாகத்தையும் போக்க அந்நகரில் வாழும் செல்வந்த பெரியவர்களிடம் சென்று கையேந்தலானார்.முரட்டுக் கொளரவம் நிறைந்து பணம் எனும் ஆசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களால் வெறுப்பும் முகச்சுழிப்புக்களுமே நன்கொடையானது.இருந்த போதிலும் அன்னை சற்றும் மனந்தளராமல் அன்போடும் பெருமையோடும் அவற்றை ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு ஒரு முறை அன்னை செல்வந்தர் ஒருவரிடம் சென்று தனது இரு கைகளையும் ஏந்தியவாறு ஏழைகளுக்கு ஏதாவது தரும்படி கேட்டார்.அதற்கு அந்த வீட்டு எஜமான் வீட்டின் மேல் மாடியில் நின்று கொண்டு அன்னையின் கைகளில் எச்சி உழிழை துப்பி அது தான் நான் உனக்கு தருவது,இனி கரைச்சல் கொடுக்காமல் போ....என்று மிகுந்த ஆணவத்துடன் கூறினான்.அதற்கு அன்னை எவ்வித கவலையும் கொள்ளாமல் புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு பெரியவரே இது நீங்கள் எனக்கு தந்தது மிகவும் நன்றி.ஆனால் பசியால் தாகத்தால் பாடும் இந்த மக்களுக்கு வேறு ஏதாவது தாருங்கள்.என்று மீண்டும் கேட்டார்.அவரின் இந்த செயலால் அவரில் காணப்பட்ட தாழ்மை,பணிவு பொறுமை,இரக்கம் போன்ற நல்ல குணங்களை அம் மனிதன் அந்த நிமிடமே மனமாறி அன்னையோடு இருந்தவர்கள் அனைவருக்கம் பல வழிகளிலும் உதவி புரியத் தயாரானார்.இவ்வாறு அன்னையின் நற்குணங்களால் பலர் மனம்மாறி அவரோடு இருக்கம் ஏழை மக்களுக்கு உதவிசெய்தார்.

குறிப்பாகச் சொல்லப்போனால் முஸ்லிம் மக்கள் கூட இல்லங்களை அமைக்க உதவி புரிந்தனர்.நாளுக்கு நாள் அவமானங்களையும் சோகங்களையும் சோதனைகளும் ஏறபட்டாலும் தனது சேவையில் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்தார்.இவர் தனக்கென இரண்டு ஆடைகள் மட்டுமே வைத்திருந்தார்.அந்த உடைகள் கூட ஏழைகளின் அடையளமாகத்தான் காணப்பட்டது.இவ்வாறு அன்னையின் சேவை ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே சென்றது.அன்னையின் இந்த அன்புக்காகவே பல ஆயிரம் உள்ளங்கள் ஏங்கின.

ஆறுமுகநாவலர்
"தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்.அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்.அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்" என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள்.

இலங்கை ஈழத்தில் போர்த்துக்கீய,டச்சு,ஆங்கிலேய காலனி ஆதிக்கங்களாலும்,அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்து,சைவ சமய எதிர்ப்பு பிரசாரங்களும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரை சைவ சமய எழு ஞாயிறாகத் தோன்றச் செய்தன.ஈழத்தில் சைவ சமயமே மிகப் பழமையானது.
பெரும்பான்மையானது.

ஆங்கிலக் கல்வியும்,அதன் வழி அரசு ஊழியப் பெரும் வாய்ப்பும், சைவ சமய உண்மை
நெறி அறியா அறியாமையும் மேலோங்கி இருந்த சூழலில் சைவசமயம்,"பிழைக்குமோ"
என்ற பேரச்சம் பரவிய காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆறுமுக நாவலர் 18.12.1822 இல் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.

பதின்மூன்றாம் வயதிலேயே சைவ சமயத்தின் வீழ்ச்சியைத் தடுத்து அருள்புரிய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு வெண்பாவை இயற்றியதாக அவருடைய வரலாற்றை 1916-இல் எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த.கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர் சாத்திரங்கள்,சிவாகமங்கள் கற்றவர். ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்.சிவனடியை மறவாத சிந்தனையாளர். உரைநடை கைவந்த வல்லாளர்,நல்லாசிரியர்,நூலாசிரியர்,உரையாசிரியர்,பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்,தனக்கென வாழாத் தகைமையாளர்,தவக்கோலச்சீலர்,இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23
உரை செய்தவை: 8
பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39
யாத்த பாடல்கள்: 14

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்புச் செய்தது,திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது,பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்று பகர்வன.அவர் இயற்றிய சைவ வினா விடை,பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும்,சிதம்பரத்தில் மேலவீதியில்,சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப் பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர்.சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில்,அவருடைய விருப்பப்படி சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).

"தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அதொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு". - ஆறுமுக நாவலர்.

எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள் எல்லோருமே ...எங்கோ எப்போதோதான் இப்படிப்பட்ட மனிதர்கள் தெய்வங்களை மனிதன் நேரடியாகக் காண்பதற்காகப் பிறந்திருப்பார்கள்.இன்று என் வாழ்நாள் காலங்களில் நான் கண்டதாகவே இல்லை.நிறையப்பேர் இருக்கிறார்கள். பேரும் புகழும் உச்சத்தில் பறக்க,சுய நலத்தோடு வெள்ளை வேட்டியோடு அலையும் மனிதர்களைப் பார்க்கிறேன்.எனவேதான் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த இவர்களைப் போன்றவர்களை நிறையப் பிடிக்கும்.

போதுமா ஆதவா?இந்தப் பதிவைப் பின் தொடர கமல்,கவின்,
கடையம் ஆனந்த்,மேவி வாங்கோ...வாங்கோ.

ஹேமா(சுவிஸ்)

Monday, March 02, 2009

ஹலோ...ஹலோ


ஹலோ...ஹலோ...ஹலோ
இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஹலோ,இந்த உலகம் முழுதும் பாவிக்கப்படும் வார்த்தையின் அர்த்தம் How long என்றும் அதன் திரிபே “ஹலோ” ஆக மாறியிருப்பதாக அறிந்து இருக்கின்றேன்.

ஆரம்ப காலத்தில் சுரங்கத் தொழிலாளிகளிடம் அதிகாரிகள் பேசும் போது
How longஎன்ற வார்த்தையை உரக்க கூறுவார்களாம் அது அவர்களுக்கு “ஹலோ” என்று கேட்கவே இந்தச் சொல் தோன்றியதாக ஒரு சுவையான கதை ஒன்று இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன்.

கேட்கவே ஆச்சரியமா புதுமையா இருந்திச்சு.உங்களுக்கு?வேற என்னாச்சும் இது பத்தி நீங்க தெரிஞ்சிருந்தா சொல்லுங்களேன்.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP