கொண்டுதான் இருக்கின்றன.தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அல்லல் படுகின்றனர். தினமும் மக்களின் இறப்பு அதிகரித்துக் கொண்டிருகிறது.
விலங்கினங்கள் அழிக்கபடுவதைத் தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவைத் தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
இலங்கையில் என்றும் இல்லாதவாறு பட்டாசுகளும் இலங்கை தேசியக் கொடியும் விற்பனை ஆகி உள்ளது, இவை எல்லாம் தமிழினம் அழிக்கபடுவதை கொண்டாடுவதற்காகச் சிங்கள மக்களால் உபயோகிக்கப்படுகிறது.
பிணம் தின்னும் கழுகைப் போல சிங்களத் தேசம் உருவெடுத்துள்ளது கவலைக்கு இடமானது.
தமிழன் யாருக்கும் எதிரி அல்ல.தமிழன் கேட்பது எல்லாமே நிம்மதியான வாழ்வு, சிங்களவர்களைப் போல தமிழர்களும் சம உரிமையுடன் வாழ ஒரு தேசம்.
சிங்களத்தின் இனத் துவேசமும் இன ஒடுக்குமுறையும் இன அழிப்பும், இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ஆரம்பமனவை. சிங்கள குழந்தைகள் கூட தமிழனைக் கண்டால் கல்லால் அடிக்கும் காலம் இப்போது.அந்த அளவிற்க்குத் தமிழனை பற்றிய இன துவேசத்தை பிஞ்சு குழந்தைகளுக்கும் ஊட்டி விட்டுள்ளனர் சிங்கள அரச நிர்வாகம்.
தமிழனைக் காப்பாற்ற ஒரே ஒருவர் தான் கடைசிவரைக்கும் போராடுகிறார். அவருக்கும் தீவிரவாதிப் பட்டம்.ஏன்..பொதுத் தமிழ் மகனுக்கும் கூட.
அமெரிக்கா என்ற உலக வல்லரசு ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்து ஒசாமாவைப் பிடிக்க,ஒசாமா என்ன செய்தார்? அவருடைய மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவரைப் பிடிக்கச் சென்ற அமெரிக்கா இராணுவம் அங்குள்ள மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு நியாயபடுதியதோ அதைவிட இன்னும் அழகாக இலங்கை அரசு தமிழ் இன ஒழிப்பை நியாயபடுதுகிறது.
தமிழனுக்கு உதவ தமிழனைத் தவிர வேறு எவரும் இல்லை.
கடைசித் தமிழன் இருக்கும் வரைக்கும் தமிழின் விடுதலைப் போராட்டம் தொடரும் !!!
ஹேமா(சுவிஸ்)
16 comments:
அவங்களுக்கு அறிவே இல்லையா ?????
தமிழர்கள் அவங்க சொத்துலைய பங்கு கேட்டாங்க ....
அவங்க உரிமையை அவங்க கேட்குறாங்க ...
இப்படி செய்வதால் என்ன லாபம் சிங்கள அரசுக்கு ......
அமெரிக்காவுக்கு இலங்கையில் இருந்து எண்ணெய் கிடைக்காது ;
அவங்களுக்கு லாபம் இல்லை .....அதான் அங்கே நாட் கமிங்
இந்தியாவில் அமெரிக்காவுக்கு நல்ல லாபம் அதான் பஞ்சாயத் பண்ண வராங்க ...
மேவி அவங்க அறிவைப் பத்திக் கதைக்காதீங்க.அதனாலதான் தரப்படுத்தலையே கொண்டு வந்தாங்க.அறிவு அவங்க கக்கூஸ் குழியில.நாத்தம்.
மெளணமே என்னால் பகிர முடிகின்றது... விடிவு வரும் என்ற நம்பிக்கையில் ஆ.ஞானசேகரன்
//விலங்கினங்கள் அழிக்கபடுவதைத் தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவைத் தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.//
உண்மையான கேள்வி.
தயவுசெய்து இந்த இடுக்கைக்கு கொடுத்திருக்கும் படத்தை நீக்கி விடுங்கள் நெஞ்சை உடைக்கின்றது.
எம்புட்டு கத்தினாலும் கதறினாலும்
செவிடர்கள் ...
The fight will continue Hema till a positive outcome.
வாழும் வரை இறுதி வரை போராடுவோம் நம் தமிழீழம் மலரும் வரை எம்
தமிழ் ஈழம் சுதந்திரமடையும் வரை எமது போராட்டம் தொடரும்
....................................................................................
(மெளனம்)
//"அமெரிக்காவுக்கு இலங்கையில் இருந்து எண்ணெய் கிடைக்காது ;
அவங்களுக்கு லாபம் இல்லை .....அதான் அங்கே நாட் கமிங்
இந்தியாவில் அமெரிக்காவுக்கு நல்ல லாபம் அதான் பஞ்சாயத் பண்ண வராங்க ..."//
மிகச் சரியாச் சொன்னீங்க..
உண்மை இது தான்.
ரொம்ப வருத்தமாக உள்ளது. இந்தப் பதிவை படிக்கையில். உலக நாடுகள் தலையிட்டால் தான் இந்தப் பிரச்சனை முற்றுப் பெறும்.
அப்பாவி மக்கள் படும் பாட்டைக் கண்டால் அந்த புத்தன் கூட பொங்கி எழுவார். ஆனால் உலக நாடுகள் ஏனோ உறங்குகின்றது. மனித நேயம் மாண்டுவிட்டதுக்கு இதுவே சாட்சி.
முடிவின் தூரம் அதிகமில்லை!
//சிங்கள குழந்தைகள் கூட தமிழனைக் கண்டால் கல்லால் அடிக்கும் காலம் இப்போது.அந்த அளவிற்க்குத் தமிழனை பற்றிய இன துவேசத்தை பிஞ்சு குழந்தைகளுக்கும் ஊட்டி விட்டுள்ளனர் சிங்கள அரச நிர்வாகம்.//
உண்மைதான் அதுமட்டுமல்ல தமிழ் குழந்தைகளும் தீவிரவாதிகளாய் நினைக்கப்பட்டு கொன்று குவிக்கப்படுகிறார்கள். வேதனை. அமெரிக்கா உலக அளவில் அரசியல் நாடகமாடுகிறது. எல்லாம் முடிந்த இந்திய அரசு உள்நாட்டில் நாடகமாடுகிறது. தமிழக அரசு உணர்வோடிருக்கிறதா? செத்துவிட்டதா? தெரியவில்லை.வேதனை, வெட்கம். மும்பையில் பணக்காரன் அடிபட்டால் வரும் வேகம் இங்கு ஏழைகள் பாதிக்கப்பட்டால் வராதது கொடுமை.
புரட்சிகள் ஒடுக்கப்படலாம் ஆனால் ஒழிக்கப் பட முடியாது.
நிச்சயம் ஒர்நாள் தீர்வு உண்டு.
ஞானசேகரன்,முத்துராமலிங்கம்,ஜமால்,முனியப்பன்,பெயரி சொலாதவர்,
ஆதவா,மகா,கவின்,உமா எல்லோருக்கும் என் நன்றி.ஏதோ மன ஆறுதலுக்கு எழுதிக்
கொண்டிருக்கிறேன்.நடப்பது ஒன்றுமே இல்லை.உலக நாடுகள் கூட எங்கள் போராட்டாங்கள் இவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தும் செவி சாய்க்காமல் உதாசீனம்தான் செய்கிறது.மனம் அழுது களைக்கிறது.உயிரை மட்டும் பாதுகாத்துக்கொண்டு உயிர் இல்லா மனிதர்களாக வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.பொறுப்போம் தீர்வு வரும் என்கிறதெல்லாம் பொய்.எப்போ...?எல்லோரும் எல்லாமும் முழுதும் முற்றாக அழிந்த பின்னா...!
அகதியாய் அலைந்து உயிர் பிழைக்கவும்
பதுங்கு குழியில் பதுங்கிடவும்
நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்
மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்
கற்பு நெறிகள் கயவர்களால்
காற்றில் கரைவதைகண்டும்
செம்புனல் கண்டு சிதறாமலும்
வன்கொடுமை கண்டு வளையாமலும்
இருக்க வல்லமை தாராயோ!!!!!!!
Post a Comment