Saturday, July 25, 2009

மோட்டுச் சிங்களவனும்...மாட்டிக்கொண்ட பன்றியும்.

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.
அங்கே ஒரு பிரச்சினை.என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்...உயிர்களைக் கொல்லும்.
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது.
காட்டுக்குள் ஓடி விடும்.இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்தது.
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை.

அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை.

வேறு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ் இன்னும் பல..... ஒண்ணும் செய்ய முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை.

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூடி மகாநாடு
ஒன்றும் நடத்தின அந்தப் புலியைப் பிடிப்பதற்காக.

அதிலே அவமானம்... எந்த‌ நாட்டாலும் முடியவில்லை எனப் பேசப்பட்ட போது,

எங்களைக் கேட்கலயே.......என்றது ஒரு குரல் ஒன்று.
பார்த்தால் மதிப்பிற்குரிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள்.
நாங்கள் ஒவ்வொருநாளும் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட.
இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி... அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்,
நாட்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை.

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து
இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன.
அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு

படைகள் அத் திசை நோக்கி விரைந்தன...
அங்கே அவர்கள் கண்ட காட்சி............
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது.
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை தடிகளால் தாக்கியவாறு
கூறிக்கொண்டிருந்தனர்.

"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்தனர்...
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டுக்
கொடுமைப் படுத்தினார்கள் இவர்கள் என்று கேட்டனர்?

அதற்குப் பன்றி

"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசம்தான் ஆச்சு... ஆனா இலங்கைத் தமிழர்களை 25-30வருடமா இப்படித்தான் படுத்துறானுகள்" என்றது சிரித்தவாறு...!

(இணையத்தளத்தில் தான் எப்போதோ வாசித்ததாகச் சொல்லி நண்பர் ஒருவர் போனவாரம் என்னோடு பகிர்ந்துகொண்ட நகைச்சுவையும் வலியும்.)

ஹேமா(சுவிஸ்)

27 comments:

Anonymous said...

மோட்டுச் சிங்களவனுக்கு நம்மவர்கள் பாடம் படிப்பிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. நாங்களும் மோட்டுதனமாக enjoy பண்ணினோம். மே மாதம் தான் உண்மை என்ன என்பது தெரியவந்தது.

மேவி... said...

ithai naan oru 6 varrudam munpe kettu irukkiren

கும்மாச்சி said...

நல்லத்தான் இருக்குது, மோட்டு சிங்களவன், கதை.

நட்புடன் ஜமால் said...

நானும் படிச்சி இருக்கேன்

ஆ.சுதா said...

வணக்கம் ஹேமா! உங்கள் மறுவரவை தாமதமாக தெறிந்து வரவேற்கின்றேன்.
இப்பதிவு நகைச்சுவையானாலும் சிறு வலியை ஏற்படுத்துகின்றது.

- இரவீ - said...

அது யார் புடிச்சு கொடுத்த பன்னின்னு கேட்டாங்களா ?
இல்ல அந்த அளவுக்கு உயர்ந்துட்டங்களா ?

Anonymous said...

இப்படி மோட்டு சிங்களவன் தமிழன் அதி புத்திசாலின்னு ஏத்தி விட்டே தமிழ் சமுதாயத்தை அழித்து விட்டார்கள்

ஹேமா said...

//Anonymous said...
மோட்டுச் சிங்களவனுக்கு நம்மவர்கள் பாடம் படிப்பிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. நாங்களும் மோட்டுதனமாக enjoy பண்ணினோம். மே மாதம் தான் உண்மை என்ன என்பது தெரியவந்தது.//

அனானி அவர்களுக்கு,சிங்களவன் போல புத்தி சொல்லிக்கொடுக்கப் பலபேர் இருந்தார்கள்.அந்தப் பலபேரின் புத்திமதியைக் கேட்கக்கூடியவனாயும் இருந்தான்.எங்களிடம்தான் அந்தப்பழக்கம் இல்லையே.அதன் பலன்தான் அனுபவிக்கிறோம்.

ஹேமா said...

மேவி,
கும்மாச்சி,
ஜமால்
வருகைக்கு நன்றி.

சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லையா !

ஹேமா said...

//ஆ.முத்துராமலிங்கம்...
வணக்கம் ஹேமா! உங்கள் மறுவரவை தாமதமாக தெறிந்து வரவேற்கின்றேன்.
இப்பதிவு நகைச்சுவையானாலும் சிறு வலியை ஏற்படுத்துகின்றது.//

வாங்க முத்துராமலிங்கம்.ரொம்ப நாளாக் காணோமே என்று நானும் நினைத்திருந்தேன்.வந்தமைக்கு நன்றி.குழந்தைநிலாப் பக்கமும் வாங்க.

உண்மையில் இப்பதிவு நகைச்சுவை என்பதைவிட வேதனைதான் அதிகம்.

ஹேமா said...

//இரவீ ...
அது யார் புடிச்சு கொடுத்த பன்னின்னு கேட்டாங்களா ?//

ரவி,கொஞ்சம் பொறுங்க.அந்தப் பன்றியைத் தேடிப்பிடிக்க யரையாவது விடணும்.அப்புறம் கண்டிப்பா கேட்டுக்கலாம்.யார் பிடிச்சுக் கொடுத்தாங்கண்ணு.
பாருங்க....ஆளை.

ஹேமா said...

//Anonymous said...
இப்படி மோட்டு சிங்களவன் தமிழன் அதி புத்திசாலின்னு ஏத்தி விட்டே தமிழ் சமுதாயத்தை அழித்து விட்டார்கள்//

முழுமையாக எங்கள் உணர்வுகளை அழித்துவிட்டார்கள் என்று நினைக்கிறீங்களா நீங்கள் ?

ஆ.ஞானசேகரன் said...

நகைச்சுவையும் வலியும்

சத்ரியன் said...

//அனானி அவர்களுக்கு,சிங்களவன் போல புத்தி சொல்லிக்கொடுக்கப் பலபேர் இருந்தார்கள்.அந்தப் பலபேரின் புத்திமதியைக் கேட்கக்கூடியவனாயும் இருந்தான்.எங்களிடம்தான் அந்தப்பழக்கம் இல்லையே.அதன் பலன்தான் அனுபவிக்கிறோம்.//

ஹேமா, கதையை விடவும் அனானிக்கான பதிலை நான் வெகுவாக ரசித்தேன்.அனானி மாதிரி ஆட்கள் "எதையோ" கொடுத்து "எதையோ" புண்ணாக்கிக் கொள்ளாமல் இருந்தால் சரி.

ஹேமா said...

நன்றி ஞானசேகரன்.

நன்றி சத்ரியன்.

உண்மையின் தமிழனுக்கே உண்டான சில இயல்புகளால்தான் எங்களுக்குத் தலைவலி.முக்கியமாக யாரையும் அனுசரித்துச் சிநேகம்
கொள்வதில்லை.

Anonymous said...

//முழுமையாக எங்கள் உணர்வுகளை அழித்துவிட்டார்கள் என்று நினைக்கிறீங்களா நீங்கள் ?//

உணர்வுகளை வைத்து கடையில் வெங்காயம் கூட வாங்க முடியாது. உணர்வுகளை வைத்து உங்களால் என்ன செய்ய முடிகிறது. இப்படி இணைய தளத்தில் ஒப்பாரி வைப்பதை தவிர.

Anonymous said...

//உண்மையின் தமிழனுக்கே உண்டான சில இயல்புகளால்தான் எங்களுக்குத் தலைவலி.முக்கியமாக யாரையும் அனுசரித்துச் சிநேகம்
கொள்வதில்லை.//

இப்பாவாவது புரிந்தால் சரி அட இந்த மனுசி இன்னமும் மோட்டு சிங்களவன்னு யாழ்பாண மேட்டுகுடி கலாசாரத்தில் எழுதும் போது இன்னும் பல பெரியார்கள் வேண்டும் என்றே தோன்றுகிறது

சாந்தி நேசக்கரம் said...

பன்றிகள் போல் தமிழினம் இப்போது வதைமுகாம்களில் நாசமாவதை இக்கதை மறைமுகமாகச் சொல்லுகிறது தோழி.

சாந்தி

ஹேமா said...

சாந்தி வலியோடுதான் இந்தப் பதிவை இட்டேன்.ஆனால் சிலர் இங்கயும் வதைக்கினம்.கண்டீங்களோ?

இவன் தான் தமிழன்.

இதென்ன பழக்கம்.கூப்பிட்டாதான் வாறது!நன்றி வந்ததுக்கு.

தமிழிச்சி said...

இந்தச் சிந்தனைக் கதையை நான் முன்னரே படித்தேன். போன வருடம் என்று நினைக்கிறேன். பிரசுரித்தமைக்கு நன்றி தோழி.

Kala said...

இத்தனை வருடங்ஙளாக {கி+வ}இதுதானே நடக்கிறது ஹேமா
உண்மை,சத்தியம்,அன்பு,பாசம்,புரிந்துணர்வு.ஒற்றுமை அனைத்தும்
தொலைந்து.புதைந்து ரொம்ப நாளாச்சி

கலா

ஹேமா said...

நன்றி தமிழிச்சி.
அடிக்கடிவந்து எனக்கு ஊக்கம் தருகிறீர்கள் தோழி.சந்தோஷம்.

ஹேமா said...

//Kala said...
இத்தனை வருடங்ஙளாக {கி+வ}இதுதானே நடக்கிறது ஹேமா
உண்மை,சத்தியம்,அன்பு,பாசம்,புரிந்துணர்வு.ஒற்றுமை அனைத்தும்
தொலைந்து.புதைந்து ரொம்ப நாளாச்சி//

நன்றி கலா.உங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
எங்களவரை எங்களவரே உதாசீனப்படுத்தும்போது அடுத்தவரை எப்படிக் குறை சொல்ல முடியும்?

அதென்ன தோழி {கி+வ}?

Kala said...

என்ன?ஹேமா நான் கற்பூரம்......என நினைத்தேன்
இன்னுமா?இதுவுமா?புரியவில்லை பரவாயில்லை
நானே சொல்கிறேன்....கிழக்கு,வடக்கு

ஹேமா said...

//Kala said...
என்ன?ஹேமா நான் கற்பூரம்......என நினைத்தேன்
இன்னுமா?இதுவுமா?புரியவில்லை பரவாயில்லை.நானே சொல்கிறேன்....கிழக்கு,வடக்கு//


ஓ...{கி+வ}கிழக்கு-வடக்கு. ம்..சரி.நன்றி.
சரி சரி...கண்டுக்கவேணாம்.

சத்ரியன் said...

ஹேமா, இனிமேல் உங்கள் இடுகைக்கு வரும் கருத்துக்களை நீங்கள் மதிப்பீடு செய்த பின்னர் வெளியிடும் முறையைக் கடைப்பிடியுங்கள்.திறந்த வீட்டில் "ஏதோ" நுழையும் என்பார்களே.சில நேரங்களில் அதுகளும் வந்து போகிறதுகள்.எனக்கு முந்தைய கருத்துரையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.சரியா?

ஹேமா said...

சத்ரியன் நன்றி.நான் சிலசமயங்களில் நாள் முழுக்க கணணி திறக்க நேரம் கிடைப்பதில்லை.அதனாலே பின்னூட்டங்களைத் திறந்தபடி வைத்துள்ளேன்.என்றாலும் சில சங்கடங்கள்.

உண்மையோ பொய்யோ இனத்தை இனமே விற்பது எங்கள் இனத்தில் மட்டும்தான்.விரும்பாவிட்டால்
ஒதுங்கிக் கொள்ளலாம்.ஏன் தான் இப்படியோ தெரியவில்லை.

உங்கள் கருத்தைக் கவனத்தில் எடுக்கிறேன்.நன்றி.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP