Thursday, October 29, 2009

இப்படியாவது பிறந்திருக்கலாம்.

கொடுத்துவைத்த பிறவிகள்.

போட்டி பொறாமை போன்ற குணங்களால் மனிதனே மனிதன் மீது அன்பு காட்ட சிரமப்படுகிறான்.ஒரு பிராணி மீது அன்பு காட்ட கற்றுக்கொண்டால் மனித நேயம் தானாக வந்துவிடும்.

சிறு வயதில் பிராணிகள் மீது அன்பு கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் பெற்றோர் மீதும் பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பிராணிகள் செய்யும் தவறுகளை சகித்துக் கொள்ள கற்றுக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியும்.

பிராணிகள் செய்யும் குறும்புகளை இரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் மன அழுத்தம் தானாக குறைந்து விடும்.வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு காட்ட தெரியாத சமுதாயம் பண்பட்ட சமுதாயமாக இருக்க முடியாது.அதனால் தான் இன்றய சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து வன்முறை பெருகி வருகிறது. இதை பன்னாட்டு சமுதாயம் உணரவேண்டும்.

இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.


ஹேமா(சுவிஸ்)

30 comments:

S.A. நவாஸுதீன் said...

படங்கள் கொள்ளை அழகு.

//இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்//

நாயே! என்று பாராட்டலாம் போல. அத்தனை அழகு

ஸ்ரீராம். said...

"பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே..."

நாயே என்பது திட்டா என்ன? அது செல்லம்...நன்றியைக் குறிக்கும் சொல்! இதய நோய் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் செல்லப் பிராணிகள் வளர்த்தால் நல்லது என்று எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் கான்க்ரீட் காடுகளுக்கு நடுவில் செல்லப் பிராணி வளர்த்தால் பக்கத்து வீட்டுக் காரர் முறைக்கிராரே...

சந்ரு said...

நல்ல தொகுப்பு... இலங்கையில் பிறந்ததைவிட இப்படி பிறந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது....

Kala said...

நிஐமாக கொடுத்து வைத்திருக்க வேண்டும்
ஹேமா ஒவ்வொரு நாட்டிலும் உண்ண ஒரு
கவளச்சோறு,உறங்க ஒரு இடமில்லாமல்
எவ்வளவு கஷ்ரபடுகிறார்கள் மனிதஇனம்.
எனக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும்
ஆனால்...தூக்கவோ,கொஞ்சவோ
பிடிக்கவே பிடிக்காது தூர நின்று ரசிக்கப்
பிடிக்கும்..{சுத்தம்,சுகாதாரத்துக்காக...}
ரொம்ப,ரொம்ப அழகாய் இருக்கின்றன
ஹேமாவின் தங்கை அல்லவா?!?!.....

சி. கருணாகரசு said...

இதை நான் வரவேற்கிறேன் ஹேமா.

கலை - இராகலை said...

அக்கா நலமா?????? சூப்பர் சூப்பர்!!!! மறுபடியும் வந்துட்டேன்.

- இரவீ - said...

அழகு ....அழகு... நன்றி ஹேமா.

-------------------
ஹேமா :
//இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.//

கலா:
//ரொம்ப அழகாய் இருக்கின்றன
ஹேமாவின் தங்கை அல்லவா?!?!.....//

இரண்டு வாக்கியங்களுக்கும் தொடர்பானு யோசிச்சது கூட அழகா இருக்கு.

க.பாலாசி said...

//போட்டி பொறாமை போன்ற குணங்களால் மனிதனே மனிதன் மீது அன்பு காட்ட சிரமப்படுகிறான்.ஒரு பிராணி மீது அன்பு காட்ட கற்றுக்கொண்டால் மனித நேயம் தானாக வந்துவிடும்.//

ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டீங்க....

//பிராணிகள் செய்யும் குறும்புகளை இரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் மன அழுத்தம் தானாக குறைந்து விடும்.//

குறும்புகளை விடுங்கள், பிராணிகளை வளர்த்தாலே போதும் வெகுவாக மனஅழுத்தங்கள் குறையும் என்று மருத்துவக்குறிப்புகள் உள்ளன.

//இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.//

சரி விடுங்க டைகர்னு சொல்லுவோம். (சும்மாத்தான்)

நைஸ் போஸ்ட்.....

ஜெரி ஈசானந்தா. said...

எனக்கு பிடிச்சவங்களை கூட அப்படி செல்லமாக்கூட கூப்பிடக் கூடாதா.?

ஸ்ரீராம். said...

முகப்புப் பக்கத்தில் விமர்(சன)ங்கள் என்று போட்டுள்ளீர்கள். அதையே (விமர்)சனங்கள் என்று போட்டால் அர்த்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நசரேயன் said...

இது உங்க வீட்டு வெள்ளை நரியா? நான் நாயீ ன்னு சொல்லலை

பித்தனின் வாக்கு said...

என்னங்க ஹேமா உங்களுக்கு என்மீது அளவு கடந்த பாசம் போல இருக்கு, முதலில் என் படத்தை(குரங்கு) உங்க பக்கம் பூராவும் போட்டு சிறப்பித்தீர்கள். இப்போது எனக்காக ஒரு பதிவே போட்டுள்ளீர்கள். ஹா ஹா நன்றி. நல்ல கருத்து. எனக்கும் பிளாட்பார்ம் மனிதர்கள் இருக்க மற்றவைகளுக்கு என்ன சேவை என்பதுதான் கருத்து. நாய் நல்லா அழகா இருக்கு.

பிரியமுடன்...வசந்த் said...

இரண்டாவது நாய் அழகா திமிரா ஸ்டைலா இருக்கு...

ஆ.ஞானசேகரன் said...

//இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.//

படங்கள் அழகு....

ஹேமா said...

//S.A. நவாஸுதீன்...
படங்கள் கொள்ளை அழகு.
//இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்//
நாயே! என்று பாராட்டலாம் போல. அத்தனை அழகு//

நன்றி நவாஸ் நாய்ன்னு சொல்றதிலயும் தப்பில்ல.மனிதனைவிட நன்றியுள்ள பாசமுள்ள ஜென்மம்.

::::::::::::::::::::::::::::

//ஸ்ரீராம்....
"பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே..."

நாயே என்பது திட்டா என்ன? அது செல்லம்...நன்றியைக் குறிக்கும் சொல்! இதய நோய் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் செல்லப் பிராணிகள் வளர்த்தால் நல்லது என்று எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் கான்க்ரீட் காடுகளுக்கு நடுவில் செல்லப் பிராணி வளர்த்தால் பக்கத்து வீட்டுக் காரர் முறைக்கிராரே...//

ஸ்ரீராம் பக்கத்து வீட்டுக்காரரை ஏன் பாக்கணும்.எங்க பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்போம்.நான் அப்பிடித்தான்.எனக்குப் பிடிச்சிருக்கு.
மத்தவங்களுக்கு அதால கஸ்டம் இல்லன்னா சரி.

ஹேமா said...

//சந்ரு...
நல்ல தொகுப்பு... இலங்கையில் பிறந்ததைவிட இப்படி பிறந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது....//

சந்ரு இந்தப் பதிவின் அர்த்தாமே அதுதான்.

::::::::::::::::::::::::::::::::

//கலா...
நிஐமாக கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஹேமா ஒவ்வொரு நாட்டிலும் உண்ண ஒரு
கவளச்சோறு,உறங்க ஒரு இடமில்லாமல் எவ்வளவு கஷ்ரபடுகிறார்கள் மனிதஇனம்.
எனக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும்
ஆனால்...தூக்கவோ,கொஞ்சவோ
பிடிக்கவே பிடிக்காது தூர நின்று ரசிக்கப் பிடிக்கும்..{சுத்தம்,சுகாதாரத்துக்காக...}
ரொம்ப,ரொம்ப அழகாய் இருக்கின்றன
ஹேமாவின் தங்கை அல்லவா?!?!.....//

கலா உங்கட கருத்து வித்தியாசமா இருக்கு.வளர்ப்புப் பிராணிகளை வைத்தியரிடம் காட்டிப் பக்குவமாகக் கவனித்தோமானால் அவைகளோடு நிறையவே பழகலாம் கலா.
பயமில்லை.நான் இன்றுவரை இங்கு அவைகளால் வளர்ப்பவர்க்கு நோய் என்று கேள்விப்படவேயில்லை தோழி.

கலா ம்ம்ம்...ஒரு மாதிரி என்னை அவர்களின் தங்கை என்று சொல்லிட்டீங்க.எப்பவோ இருந்த கோவம் இப்ப போயிருக்கும்.வரட்டும் சத்ரியன் சொல்லித் தரேன்.

ஹேமா said...

நன்றி அரசு.கொஞ்சம் வலி கொஞ்சம் ரசனை அவ்வளவுதான்.

::::::::::::::::::::::::::::::::::

கலை வாங்கோ...வாங்கோ.
காணக்கிடைக்குதே இல்லப்பா.எங்க போய்ட்டீங்க.வேலை கூடவா.எங்கட மலைகளும் ஆறுகளும் தேயிலைத் தோட்டங்களும் எப்பிடி இருக்கு கலை."தூரத்துத் தோழி" என்று ஒரு பதிவு போட்டேன்.உங்களை நினைத்துக்கொண்டேன்.திரும்பவும் கண்டதில சந்தோஷமோ சந்தோஷம்.பதிவு போடுங்க.
சந்திக்கலாம்.

ஹேமா said...

//இரவீ -...
அழகு ....அழகு... நன்றி ஹேமா.

ஹேமா ://இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.//

கலா: //ரொம்ப அழகாய் இருக்கின்றன
ஹேமாவின் தங்கை அல்லவா?!?!.....//

இரண்டு வாக்கியங்களுக்கும் தொடர்பானு யோசிச்சது கூட அழகா இருக்கு.//

ரவி எனக்கு மறக்கவே மறக்காது.
உங்க பதிவில "வாவ்"ன்னு சொல்லி வாங்க்கிக் கட்டி மன்னிப்பும் கேட்டது.உண்மையில் கொடுத்து வைத்த ஜென்மங்கள்.எங்கள் நாட்டில்....யோசிச்சுப் பாருங்க !

என்ன ரவி ,கலா சொன்னதை மெல்லமா ரகசியமா ஆமோதிக்கிறமாதிரி இருக்கு.இருங்க இருங்க இரண்டு பேரும் என் கையில மாட்டாமலா போவீங்க.

:::::::::::::::::::::::::::::::::

//பாலாசி...சரி விடுங்க டைகர்னு சொல்லுவோம். (சும்மாத்தான்)
நைஸ் போஸ்ட்.....
//

பாலாஜி இப்பிடிக் கிண்டல் பண்றீங்களே !ஆனா இவங்க பெண் புலிகள்.

ஹேமா said...

//ஜெரி ஈசானந்தா. ...
எனக்கு பிடிச்சவங்களை கூட அப்படி செல்லமாக்கூட கூப்பிடக் கூடாதா.?//

ஜெரி கூப்பிடுங்க.அவஙக்ளுக்கு உங்களைப் பிடிச்சா சரி.கடிச்சா நான் பொறுப்பில்ல.

:::::::::::::::::::::::::::::::

//ஸ்ரீராம்....
முகப்புப் பக்கத்தில் விமர்(சன)ங்கள் என்று போட்டுள்ளீர்கள். அதையே (விமர்)சனங்கள் என்று போட்டால் அர்த்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.//

பாருங்க ஸ்ரீராம் மாத்தியிருக்கேன்.
இப்பிடித்தான் முந்தி வி(மர்)சனங்கள்
ன்னு இருந்திச்சு.டெம்லேட் மாத்தினப்போ மாறிடிச்சு.இது எப்பிடின்னு சொல்லுங்க.இல்லாட்டி நீங்க சொன்னபடி மாத்திக்கிறேன்.

:::::::::::::::::::::::::::::::::

//நசரேயன் ...
இது உங்க வீட்டு வெள்ளை நரியா? நான் நாயீ ன்னு சொல்லலை//

இருங்க வரேன் நசரேயா.இந்த நரியை வச்சே உங்களுக்கு.....வர வர உங்க கடி தாங்கல.

சீக்கிரம் பதிவு ஒண்ணு போடுங்க.
என்ன வலைச்சரக் களைப்பு இன்னும் போகலியா !

க.பாலாசி said...

//பாலாஜி இப்பிடிக் கிண்டல் பண்றீங்களே !ஆனா இவங்க பெண் புலிகள்.//

ஆகா....தப்பா நினைச்சிட்டீங்களே... இந்த இடுகையோட தலைப்பே கவலைப்படுற மாதிரித்தான் இருந்தது. தலைப்பிலேயே ஒரு ஏக்கத்தை சொல்லிட்டீங்க. நாமளும் அதை கிளரவேண்டாம்னுதான்....

ஸ்ரீராம். said...

"விமர்சனங்கள்", "விசனங்கள்", "சனங்கள்" .......இது சூப்பர் ஹேமா...முன்னால எப்படி இருந்ததுன்னு நான் பார்க்கலை அதனாலதான் அபபடி எழுதினேன். இது அதை விட நல்லா இருக்கு.

சத்ரியன் said...

//இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்...//

ஹேமா,

இது தெரியாமா இதுவரைக்கும் எத்தனைப்பேரையோ இப்படி திட்டிட்டேனே. சரி விடுங்க.

ஹேமாவின் விருப்பத்திற்கிணங்க இனிமேல் "அப்படி" திட்டுவதை நிறுத்த முயற்சிக்கிறேன்.

சத்ரியன் said...

//கலா ம்ம்ம்...ஒரு மாதிரி என்னை அவர்களின் தங்கை என்று சொல்லிட்டீங்க.எப்பவோ இருந்த கோவம் இப்ப போயிருக்கும்.வரட்டும் சத்ரியன் சொல்லித் தரேன்.//

கலா,

ஹேமா மேல அப்படி என்ன கோவம் உங்களுக்கு? எல்லாத்தையும் பேசித் தீத்துக்கலாம்.

ஹேமாவோட தங்கச்சிய எனக்கும் ரொம்பப் பிடிக்கும் (அதுக்காக
ஹேமாவைப் பிடிக்காதென்று பொருளில்லை.)

அவங்க தங்கச்சியவிட ஹேமாவை ரொம்பப்பிடிக்கும்.

பொதுவா எல்லா உயிரினங்களின் மீதும் பிரியம் எனக்கு. சில நேரங்களில் எங்கள் தோட்டத்து பயிர்கள், புல், காய்கறிச் செடிகள்....இதுக கூடவெல்லாம் பேசின அனுபவம் உண்டு.அதுக கேட்டுக்கிறதோட சரி, பாவம்.

எங்க வீட்டுச் செல்லங்களுக்கு பெயர்ச் சொல்லித்தான் கூப்பிடுவோம் (உ-ம்:நாய்:வடிவேலு, பூனை: ஐஸ்வர்யா )

ஹேமா said...

//பித்தனின் வாக்கு ...
என்னங்க ஹேமா உங்களுக்கு என்மீது அளவு கடந்த பாசம் போல இருக்கு, முதலில் என் படத்தை(குரங்கு) உங்க பக்கம் பூராவும் போட்டு சிறப்பித்தீர்கள். இப்போது எனக்காக ஒரு பதிவே போட்டுள்ளீர்கள். ஹா ஹா நன்றி. நல்ல கருத்து. எனக்கும் பிளாட்பார்ம் மனிதர்கள் இருக்க மற்றவைகளுக்கு என்ன சேவை என்பதுதான் கருத்து. நாய் நல்லா அழகா இருக்கு.//

அதெப்பிடி இவங்க எல்லாம் நீங்கன்னு சொல்லுவீங்க.நாங்க எங்க சொந்தக்காரங்கன்னு சொல்லணும்.
எங்க முன்னோர்களை மறக்கக்கூடாது
ன்னுதான் அவங்களை வச்சி டெம்லேட் செய்திருக்கேன்.

எனக்கு ரொம்பப் பிடிச்ச கலரும்
டெம்லேட்டும் இது.செய்து தந்தவருக்கு இந்தத் தருணத்தில்
நன்றி.

::::::::::::::::::::::::::::::::

//பிரியமுடன்...வசந்த் ...
இரண்டாவது நாய் அழகா திமிரா ஸ்டைலா இருக்கு...//

வாங்க வாங்க வசந்து....கேக்காம விட்டீங்களே பொம்பிளைப் பிள்ளைங்களை மட்டும் அழகா வெள்ளையாக் காட்டுறீங்க.
ஆம்பிளைங்களை மட்டும் ஏன் கறுப்பாக் காட்டுறீங்கன்னு.

ஏன் வசந்த் நீங்க கறுப்பா !அதான் வெறுப்பா அதுமேல.அதான் அழகு.
உங்களுக்குத் தெரில.கறுப்பு அழகு உங்களைப்போல.

ஹேமா said...

நன்றி ஞானம்.நாங்கதான் நாயேன்னு திட்டுறோம்.நாய் எங்களைத் திட்டுதா !அப்போ நாய் எவ்ளோ நல்லது எங்களைவிட.

:::::::::::::::::::::::::::::::::

//க.பாலாசி...
//பாலாஜி இப்பிடிக் கிண்டல் பண்றீங்களே !ஆனா இவங்க பெண் புலிகள்.//

ஆகா....தப்பா நினைச்சிட்டீங்களே... இந்த இடுகையோட தலைப்பே கவலைப்படுற மாதிரித்தான் இருந்தது. தலைப்பிலேயே ஒரு ஏக்கத்தை சொல்லிட்டீங்க. நாமளும் அதை கிளரவேண்டாம்னுதான்//

பாலாஜி என்னையும் கொஞ்சம் நகைச்சுவையாப் பேச விடுங்களேன்.எனக்கும் சிரிக்கத்தெரியும்.நான் அழுமூஞ்சி இல்ல.ஒரு தப்பும் இல்ல.நானும் பகிடிக்குத்தான்.

:::::::::::::::::::::::::::::::::

//ஸ்ரீராம்....
"விமர்சனங்கள்", "விசனங்கள்", "சனங்கள்" .......இது சூப்பர் ஹேமா...முன்னால எப்படி இருந்ததுன்னு நான் பார்க்கலை அதனாலதான் அபபடி எழுதினேன். இது அதை விட நல்லா இருக்கு.//

நல்லாருக்குன்னு சொல்லுவீங்கன்னு நம்பிக்கைலதான் போட்டேன்.
நீங்களும் சரின்னு சொன்னது சந்தோஷம் ஸ்ரீராம்.

ஹேமா said...

சத்திரியன் கூப்பிட்டாத்தான் வருவீங்களா.அடிக்கடி வந்து பாத்திட்டுப் போங்க.பாருங்க எல்லாருமா சேர்ந்து என்னைக் கலாய்க்கிறீங்க.இருங்க இருங்க.

வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களின் அன்பை இங்குதான் பார்க்கலாம்.அவ்வளவு அக்கறையாகவும் செல்லமாகவும் வளர்ப்பார்கள்.அவர்களோடு பேசுவது சிரிப்பது மட்டுமல்ல,அவர்களது போட்டோக்களை வைத்துக்கொண்டு இவர் அவரின் தஙகை,இவர் அப்பா ,அம்மா ,பெரியப்பா,மாமான்னு சொல்லி சந்தோஷப்படும்போது பார்க்கவேணுமே !

ஊடகன் said...

எங்கே இருந்துங்க இதெல்லாம் புடிச்சீங்க.........
நல்லாருக்கு.......

அகநாழிகை said...

படங்கள் ரசிக்கும்படியாக இருந்தது ஹேமா.

- பொன்.வாசுதேவன்

மது said...

அன்பு தோழி ஹேமா ...நலமா...இப்புகைப்படங்களில் இருப்பது தங்கள் செல்ல வளர்ப்பா?? படங்களை பார்க்கும் பொது அவற்றின் அழகை விட ஒரு சிறு பெண் குழந்தை போல அலங்காரம் செய்து ஒய்யாரமாக வைத்திருக்கும் உங்கள் அன்பு அதில் தெரிகின்றது ...கூடவே உங்கள் உங்கள் வரிகளில் அன்பான துணைக்கு எங்கும் உங்கள் மனதும் புரிகிறது...

பூங்குன்றன்.வே said...

எல்லோரும் படங்களும்,கருத்தும் கொள்ளை அழகுன்னு சொல்லிட்டாங்க ஹேமா.
நான் என்ன சொல்றதுன்னு தெரியல.
என்ன சொல்ல???

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP