Thursday, November 12, 2009

கோபத்தைக் களைவது எப்படி?

சின்னதாய் கதை ஒன்று கேட்போமா !

ஒரு துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது.அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார்.பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார்.பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது."என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன்.அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.பிறர் மீது போபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை.குற்ற உணர்வு பச்சாதாபம் தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம்.இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும்.அது இயற்கை.அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம்.அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம்.விழுங்கியது வெளிப்படவே செய்யும்.நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன.பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம். கோபமே அவசியமில்லை கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும்.மனம் வீணாகப் புண்படும்.கடுகடுப்புக்கு முகமும் கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம்.அடுத்தவரது சொற்களோ செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம்.ஆனால் உண்மையில் கோபமும் கோபமின்மையும் நம் மனப்பான்மையையும் மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும்.நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும்.உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும்.வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள்.அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான்.அது கோபமாகட்டும் வெறுப்பாகட்டும் அன்பாகட்டும் நல்லதாகட்டும் தீயதாகட்டும்.அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே.

இப்பொழுதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்ந்து விடுகிறேன்.இப்படியான கதைகள் எனகு அடிக்கடி மெயிலில் வருகிறது.என் மனநிலைக்கேற்ப நானும் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

"கோபம் என்பது பலவீனம் அல்ல அது பாவம்"

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.நன்றி...

ஹேமா(சுவிஸ்)

28 comments:

க.பாலாசி said...

//ஒன்று காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்//

இதில் வெளிக்கொணரும் கோபத்தைவிட உள்விழுங்கும் கோபத்திற்கு இன்னும் வலிமை அதிகம். ஆயினும் விபரீதங்கள் அடுத்தவருக்கில்லை.

//வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும்.நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும்.உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும்.வாளியால் நீரை உருவாக்க முடியாது.//

வெளிக்கொணரும் கோபத்தின் அளவும் உட்செல்லும் வாளியின் வேகத்தினை பொருத்தே அமைகிறது. அடக்கிகொண்டவன் ஆள்பவனாகிறான். முடியாதவன் அழிதலைக்கொள்கிறான்.


நல்ல சிந்தனை இடுகை....வாழ்த்துக்கள் தோழியே....

Unknown said...

நல்ல பதிவு.............வாழ்த்துக்கள்.

மணிஜி said...

நான் கூட கோபப்படுவதில்லை என்று கூசாமல் பொய் சொல்லி கொள்கிறென்

வால்பையன் said...

கோபம் வரும் போது என்னை நினைத்து கொள்ளுங்கள்
(எதிரில் இருப்பவர் காலி)

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல இடுகை....அவசியமானதும் கூட

கடைசி வரிகளில் ஏனோ மனம் செல்ல மறுக்கிறது........

யாரோ ஒருவர் said...

நல்ல பதிவு

Anonymous said...

கோபம் வரும் போது "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" இந்தக் கதைகளெல்லாம் ஞாபகத்தில் வருகிதில்லையே என்று கோபம் வருகிறது,
நம்ம தலவிதி அப்படி!

தேவன் said...

/// இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது ///

நல்லப்பதிவுங்க நன்றி !

தமிழ் said...

நல்ல இடுகை

ஸ்ரீராம். said...

சிந்திக்க வைத்துள்ளீர்கள். நம் இயலாமைதான் கோபம். கிணற்று நீர், வாளி நல்ல உவமை. நடிகர் நாகேஷ் முன்பு ஒரு பேட்டியில் சொன்னது ஞாபகம் வருகிறது. "உன்னை ஒருவன் கோபப் படுத்தினால் உன்னை அவன் ஜெயித்து விட்டதாகப் பொருள்" என்று சொல்லி இருந்தார்.

வேந்தன் said...

எனக்கும் கோபம் வராது வந்தாலும் அதற்கு காரணமானவர் மன்னிப்பு கேட்டால் உடனே மன்னித்து விடுவேன். படகு கதை நல்லாயிருக்கு.

ரோஸ்விக் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

//பிறர் மீது போபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை.குற்ற உணர்வு பச்சாதாபம் தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம்.//

இது உண்மை.

கோபம் எல்லா இடங்களிலும் பலவீனம் அல்ல. அது சில இடங்களில் பலம். :-) ரெளத்திரம் பழகித்தான் ஆகவேண்டும்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//"இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது //

நல்ல பதிவு! அப்படி என்ன கோபம் உங்களுக்கு!!! (உங்களுக்கே நீங்க போட்ட மாதிரி இருக்கு! ) "?" :):)

thamizhparavai said...

நானும் காலிப் படகுதான்.... :-)

Nathanjagk said...

சமீபத்தில் காலியான பட​கைப் பார்த்த அனுபவம் உண்டா?

​கோபத்​தை நான் ஆராதிக்கி​றேன். ​கோபம் ​கொண்டாடப் பட​வேண்டியது. அது இயற்​கை; ​மூடிகள் ​போட்டு மறைக்க முடியாது. ​ரெளத்ரம் பழகு!

அப்ப ​சகட்டு​மேனிக்குக் கோபப்படலாமா என்கிறீர்களா?

அதுவும் இல்​லை! ஏன்னா சாந்தமும் ஒரு உணர்ச்சி!! அ​தையும் ​கொண்டாட ​வேண்டும்தா​னே? சாந்தமு ​லேகா ​செளக்யமு ​லேது!

எந்த உணர்ச்சி நமக்கு உதவும் என்று ​​சமயத்திற்கு தகுந்தாற் ​போல் தெரிவு ​செய்கிற பக்குவம்தான் ​நம்மை உயர்த்தும்.

​கோபமும் ​​வேண்டும் சாந்தமும் ​​வேண்டும். இரவும் பகலும் ​போல!

ஒரு மணமகன் படத்தில் என்று நினைக்கி​றேன் சிவாஜி ஒரு பாட​லை பாடி​யே பானுமதி​யை ​கோபப்படுத்துவார் - அது என்ன பாட்டு ​​தெரியுமா? சாந்தமு ​லேகா ​செளக்யமு ​லேது!!

​ஸோ, சாந்தம் மட்டும் ​போதாது, அன்பான குரலும் தண்​மையான அணுகுமு​றையும் ​வேண்டும்.

ம்ருதுவாக்ய ப்ரதாநேந ஸர்வே துஷ்யந்தி ஜந்தவா: தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசநே கா தரித்ரதா

இந்த ஸ்​லோகம் ​மென்​மையாக ​பேசுவதன் பயன்க​ளை ​சொல்கிறது. தண்​மையாக ஒருவரிடம் ​பேசி அணுகுவது ஒரு ​பெரிய உதவி ​போல என்கிறது.

(இதுநான் டிக்னரியில் முன்பு படித்தது. ​ஜெஸிலா இது பற்றி ஒரு இடு​கையில் குறிப்பிட்டிருக்கிறார் http://jazeela.blogspot.com/2006/07/blog-post_22.html)

சரிதா​னே?

- இரவீ - said...

நல்ல பதிவு, நன்றி ஹேமா.

நசரேயன் said...

நீங்க யாருமேல கோபமா இருக்கீங்க

பித்தனின் வாக்கு said...

நல்லா கதை வுடறிங்க. நல்ல கருத்து ஹேமா. உங்களை திட்டி அவமானப் படுத்துகின்றார்களா?

யார் அவன். ஒரு கை பார்ப்போம். ஒஹ் கோவப் படக்கூடது என்பதுதான் கட்டுரை. சரி விடுங்க காலிப் படகு. என் மூளை மாதிரி தான் அதுவும்.
நன்றி ஹேமா.

ப்ரியமுடன் வசந்த் said...

யாருமேல கோபமோ?

தங்கள்
கோபம் சொற்களாய் அதுவும் அறிவுரையாய் மாறி விழுந்திருக்கிறது...

படகு கதை புத்தி சொல்கிறது...

வாளிக்கதை உண்மை உணர்த்துகிறது...

பாராட்டுக்கள் ஹேமா...

லெமூரியன்... said...

ரொம்ப நல்ல இருந்தது ஹேமா....காலத்திற்கு தேவையான பதிவும் கூட...! வாழ்த்துக்கள்.

Tamilparks said...

மிகவும் அருமையான கதை, தஙகளின் படைப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது, தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோட்டத்தில் தங்களது படைப்புகளை வெளியிட ஆவலாக உள்ளோம்....
http://tamilparks.50webs.com

malar said...

கோபத்தைக் களைவது எப்படி? ...........என்னை ரோபா கவர்ந்தது .நீங்கள் சொல்லி இருக்கும் விசயங்கள் உண்மை என்றாலும் நடைமுறை படுத்துவது ரொம்ப சிரமம் .நம்மால் வுதவி பட்டவேர்களே நம் முதிகில் குத்தும் போது அதை தாங்கி கொள்ள முடியவில்லை கோபத்தை அடக்கவும் முடியவில்லை அந்த நேரத்தில்'' இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது''' என்ற எண்ணம் வருவது இல்லை . கோபத்தின் எல்லைக்கே போய் நாம் பழைய நிலைமைக்கு வந்து நம்மை ஆசுவாச படித்திய பிறகு தான் நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் வரும் .அதன் பிறகு வேண்டும் ஆனால் நீங்க சொன்ன படகு மேஅடேர் நினைவுக்கு வரும் .

என்னுடைய கேள்வி கோபம் வந்தவுடன் அதன் உச்சிக்கீ போகாமல் தடுப்பது எப்படி ?

S.A. நவாஸுதீன் said...

நல்ல இடுகை என்றாலும் திரு. ஜெகநாதன் அவர்களின் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட விஷயங்களும் மிக முக்கியமானவை ஹேமா

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

என‌க்கு கோப‌மே அவ்வ‌ள‌வா வ‌ராது.

Kala said...

சில பேர் எதற்கெடுத்தாலும் கோபம்,
சூடாக வரும் வார்தைகள்,,முகம் எப்போதும்
ஒரு கடுகடுப்பு எனக்கு இவர்களை நினைத்தால்
சிரிப்புதான் வருகிறது
நாம் கோபப்பட்டால்....அத்தனை விளைவுகளும்
நமக்குத்தான்.
உ+ம் முகத்தில் சுருக்கங்கள்,நரை,நிலைகொள்ளாத்
தடுமாற்றம் இவையெல்லாம் சேர்ந்து முதுமைத்
தோற்றத்தைக் கொடுக்கும்.
நம்ம,...அண்ணன் பிரியமுடன்....வசந்த்
அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார்
ஹேமா
ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளக் கூடிய
உதாரணங்களுடன் எழுதிருப்பது நன்று.
இதைப் படித்தாவது திருந்தட்டும்.

இராகவன் நைஜிரியா said...

என்னோட பிரச்சனையே வேறங்க..

ரொம்ப கோபம் வருது.. காரணம் என்ன என்றால்... ரொம்ப கோபப் படுவதால், ரொம்ப கோபம் வருதுங்க..

இதுக்கு என்ன பண்ணுவதுன்னே புரியலை..

ஆ.ஞானசேகரன் said...

//"கோபம் என்பது பலவீனம் அல்ல அது பாவம்"//

நல்ல அலசல் ஹேமா,... வாழ்த்துகள் தொடர்ந்து இதுபோல எழுதலாமே

ப்ரியமுடன் வசந்த் said...

//நம்ம,...அண்ணன் பிரியமுடன்....வசந்த்//

அவ்வ்வ்....



அவ்வ்வ்வ்....

அ அங்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,,,,

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP