Monday, November 16, 2009

இப்படியும் நடக்கிறது.

நான் இந்த வாரத்தில் அனுபவித்த நிகழ்வொன்று.அது அதிர்வுபோல்.அதற்குள்ளிருந்து இன்னும் மீளவில்லை.அதுதான் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

நான் ஒரு 8 மாத்திற்கு முன் என் தோழி அதாவது வேலை செய்யுமிடத்தில் ஒரு வருடச் சிநேகம் மட்டுமே.அவள் ஏதோ தன் கஸ்டம் சொல்லித் தனக்கு 200 Sfr பணம் தரும்படியும் மாத இறுதியில் தந்துவிடுவதாகவும் சொல்லிக் கேட்டாள்.கொடுத்தும் விட்டேன்.யாருக்கும் சொல்லவும் வேண்டாம்.தனக்கு அதனால் வெட்கம் என்றும் கெஞ்சாத குறையாய் கேட்டும் இருந்தாள்.அதன் பிறகு எங்கள் வேலை நேர மாற்றங்களாலும் என் விடுமுறை அவள் விடுமுறை என்று பிறகு சுகயீன விடுமுறை இப்படி இப்படியே ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் கிட்டத்தட்ட 4-5 மாதங்களாகிவிட்டது.அவள் போன் பண்ணிக்கூட உன் பணம் தரவேண்டும் எங்கு எப்படி என்ற கேள்வியே இல்லை.அதன் பிறகு போன மாதத்தில் ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு.அன்று கண்டபோது ஒரு வார்த்தை மட்டும் பணம் பற்றி வந்தது."ஐயோ உங்களை நான் காணவேயில்லை.காசு வச்சிருந்து வச்சிருந்து பாத்திருந்து செலவாயிட்டுது.இனி இந்த மாசம்தான் தருவேன்"என்றாள்.நான் தலையை மட்டும் ஆட்டினேன்.எனக்கோ கொடுக்கல் வாங்கல் என்பது சரியாய் இருக்கவேணும் என்பதில் உறுதியாய் இருப்பேன்.அவளை நிறையவே ஏதாவது சொல்ல வேணும்போல இருந்தது.
என்றாலும் வேண்டாம்.இனி எப்போதும் கொடுக்காமல்விட்டால் சரிதானே தரட்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.

சரி அந்த மாத இறுதிவரை திரும்பவும் இடைவெளி.காணவில்லை.சரியென்று பார்த்தால் வேலை நேர அட்டவணையில் திரும்பவும் ஒருமாத சுகயீன விடுமுறை போட்டிருந்தது.சரி அப்போ இந்த மாதமும் பணம் வரப்போவதில்லை என்றிருந்தேன்.யாரிடமும் சொல்லவில்லை இதுவரைக்கும்.இப்படியிருக்க என் நெருங்கிய தோழி மனதை அடக்கமுடியாமல் ஒரு நாள் சொன்னாள்.நான் அவவுக்கு 200 Sfr பணம் கொடுத்து 6 மாதமாகிவிட்டது.2-3 தடவைகள் கேட்டும்விட்டேன்.இப்போ இல்லை இல்லை என்கிறாவாம் என்று.எனக்குச் சிரிப்பாய் போய்விட்டது.சிரித்துவிட்டுச் சொன்னேன் நானும் கொடுத்திருக்கிறேன் என்று.என்னிடம்போலவே யாருக்கும் சொலவேண்டாமென்று சொல்லியே வாங்கியிருக்கிறாள்.சரி பார்க்கலாம் எப்போ தருவாள் என்றுவிட்டு இருந்துவிட்டோம்.

சரி சென்ற 5 ம் திகதியிலிருந்துதான் சுகயீன விடுமுறை.அதற்கு இரண்டு நாள் முன்னதாகவே தனக்கு முடியவில்லை என வராமல் நின்றுவிட்டாள்.பணம் தரவில்லையே தவிர எங்களோடு எப்பவும் போலப் பேசிச் சிரித்து சகஜமாகவேதான் இருந்தோம்.சரி 7 ம் திகதி எனக்குப் போன் பண்ணி எப்போ வரைக்கும் தனக்கு விடுமுறை போட்டிருக்கு என்று கேட்டாள்.அதற்கு நான் நாளை பார்த்து வருகிறேன்.நாளை நான் வேலை முடிந்து வர மாலை 3 மணியாகும் என்றும் வேலை இடத்திற்குப் போன் எடுக்கவேண்டாம் என்று சொல்லி வைத்தேன்.ஏனென்றால் காலை நேரங்களில் வேலை கூடவாயும் வெளித்தொலைபேசி அழைப்பு வந்திருக்கு என்று கவனத்திலும் இருக்கும்.

பார்த்தால் அடுத்தநாள் காலை 8.45 க்கு போன் எடுக்கிறாள்.என் நேர அட்டவணை பார்த்தீர்களா என்று.எனக்கோ நல்லாய் ஏறின கோவம் வந்துவிட்டது.நான் முதலில் கேட்டது."ஏன் இப்போ போன் எடுக்கிறீங்கள்.
உங்களுக்கு நேற்று என்ன சொல்லிட்டு வந்தேன்.வையுங்கோ போனை.நான் இன்னும் வேலை அட்டவணை பாக்கேல்ல.பாத்திட்டு வந்து வீட்ல இருந்து சொல்றேன்" என்றுவிட்டுப் போனை அணைத்துவிட்டேன்.

என் பக்கத்தில் இன்னொரு எங்கள் அண்ணா ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.நான் இன்னும் கோபம் முடியாமல் திட்டிக்கொண்டிருந்தேன்.போனவாரம் சுகயீனம் என்று அறிவிக்க இன்னொரு சிநேகிதியின் வீட்டுக்குக் காலை 4.30 Am மணிக்கு போன் பண்ணியிருக்கிறாள். "வேலையிடத்துக்கு போன் பண்ண வேணும் என்னிடம் போன் நம்பர் இல்ல தாங்கோ" என்று கேட்டு.குழந்தைகள் கணவன் எல்லாரும் தூக்கம் கலைந்து எழும்பியிருக்கிறார்கள்.ஒரு வருடமாக வேலை இடத்து போன் நம்பர் இல்லாமல் இருந்திருக்கிறாள்.இதுவும் ஒரு செய்தி.

அப்போ அதையும் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தேன் நான்.பக்கம் இருந்த அண்ணா என்னைப் பேசினார்."ஏன் இப்போ இவ்வளவு கோபம் உங்களுக்கு உங்களுக்குத்தான் உடம்புக்குக் கூடாது.சத்தம் போடாதேங்கோ என்று.அதோட அவர் சொன்னார் அவ ஆள் சரில்ல. கவனமாய் இருங்கோ.சரியான சுயநலக்காரி.பழக்கவழக்கங்களும் சரில்ல.கொடுக்கல் வாங்கல் ஏதும் வச்சுக்கொள்ளவேண்டாம்" கவனம் என்றார்.எனக்கு மூளையில் பொறி தட்டியது.ஏன் அப்பிடி சொல்றீங்கள் என்று அவரை நோண்டத் தொடங்க அவரும் 100 Sfr பணம் கொடுத்துப் பத்து மாதங்களாம்.

அவள் எங்களைவிடக் கொஞ்சம் வித்தியாசமாகவே எல்லோருடனும் பழகியும்வந்தாள். ஆண்கள் பெண்கள் பேதமில்லாமல் எல்லோரிடமும் எந்தக் கதையும் அரட்டை அடிப்பாள். ஆண்களை டேய் அத்தான் என்பாள்.மச்சான் அங்கிள் என்றென்றாள் பகிடியாய் கதைச்சுக் கொள்வாள்.எங்களுக்குத் தேவையில்லாத விஷயம் இல்லாவிட்டாலும் "கவனம் சரில்ல நாங்கள் இருக்கேக்க கதைகளைக் குறைச்சுக்கொள்ளுங்கோ" என்று மட்டும் சொல்லி வச்சிருக்கேன்.

சரி என்று நான் சாப்பிட்டுக்கொண்டிருக்க என்னோடு வேலை பார்க்கும் பிரேசில் பெண் மெலானி என்பவள் "ஏன் கோபமாய் இருக்கிறாய்" என்று கேட்க ஏன் எங்கள் பல்லைப் நோண்டி நாங்களே மணக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் சிநேகிதி போன் பண்ணினதால் கோபமாய் இருக்கிறேன் என்று மட்டும் சொல்லி விட்டுவிட்டேன்.அதற்கு அவள் பிறகு "நீ அவளுக்குப் போன் பண்ணினால் அவள் எனக்கு ஒரு பரிசுப் பொருள் ஒன்று தரவேணும்.
காத்திருக்கிறேனாம் ,என்றும் கோபமாய் இருக்கிறேன் என்றும் சொல்லிவிடு அவளுக்குப் புரியும்" என்றாள்.நானும் சரி என்று வேலையில் மூழ்கிவிட்டேன்.

ஆனால் மண்டையில் ஏதோ ஒன்று குடையத் தொடங்கியது.மத்தியானம் சாப்பாட்டு வேளை மெலானி ஏன் அப்படிச் சொன்னாய்.அவள் ஏதாவது பணம் தரவேணுமா உனக்கு என்று கேட்க அவளும் 200Sfr பணம் கொடுத்து 6 மாதங்களாம்.எனக்கு அதன் பிறகு அடக்க விருப்பம் இல்லை.இப்போ நான்கு பேர் கடன் கொடுத்திருப்பதை உடைத்தேன் கோபத்தோடு.அவளுக்கு அதிர்ச்சி.அவள் உடனேயே போன் பண்ணிக் கேட்க சமாதனமாய் "சரி 22 ம் திகதி வந்துவிடுவேன்.உன் பணம் தந்துவிடுவேன் நீ எங்கிருந்து பேசுகிறாய் ஹேமா இருக்கிறாவா, சத்தம்போடாதே என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்தவும் அவள் சரி தராவிட்டால் மேலிடத்தில் சொல்லுவேன்" என்றபடி முடித்தாள்.

சரியன்று இருக்க எங்கள் பின்னாலிருந்து சாப்பிட்ட ஆபிரிக்கத் தோழர் "ஏன் மெலானி சத்தம் போடுது என்று கேட்க அவளும் சொல்ல நானும்" என்றான் அவன்.இன்னும் வேலை விட்டு விலகிய இருவரது பெயரையும் சொன்னான் இன்னும்.இப்பொழுது பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவர் சொல்லச் சொல்ல 19 - 20 பேராக கடன் கொடுத்தவர்கள் பட்டியல் உயர்ந்திருக்கிறது.கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரைக்கும் கை நீட்டப்பட்டிருக்கிறது.

பிறகு என்னைக் கேட்க வேணுமா.போன் எடுத்துப் பெரிய பிரசங்கமே வைத்துவிட்டேன்.உண்மையில் வெட்கமாயிருக்கிறது.ஒருவன் கேட்டான் உண்மையாய் "அவள் இலங்கைப் பெண்தானா.நான் 12 வருடமாக வேறு இலங்கையர்களோடு பழகுகிறேன். அவர்களுக்கும் இவளுக்கும் நிறைய வித்தியாசம்" என்று.எல்லாம் சொல்லித் "திரும்பி வருவதற்கிடையில் எங்கள் பணங்கள் இல்லாவிட்டாலும் அடுத்த நாட்டுக்காரன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவர்கள் முகத்தில முழியுங்கள்.எங்களைப்போல அவர்கள் அடக்கி வாசிக்க மாட்டார்கள்.இப்போதே கிட்டத்தட்ட 400 பேருக்கும் கதை பரவிட்டிருக்கு.இதனால் உங்கள் வேலைக்கும் ஆபத்து" என்று சொல்லி விட்டிருக்கிறேன்.நானும் 8 வருட காலமாய் வேலை செய்கிறேன்.இப்படி ஒரு தமிழ்ப் பெண்ணை நான் கண்டதில்லை.
வெட்கமாயிருக்கிறது.

கொடுக்கல் வாங்கல் என்பதில் மனிதனுக்கு நேர்மை இல்லாவிட்டால் அவனைப் போல ஒரு போக்கிரி உலகில் வேறு யாருமில்லை.இதைவிடச் சந்தியில் நின்று பிச்சையெடுத்துச் சாப்பிடலாம்.உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வெட்கப்படுகிறேன்.என்றாலும் வாழ்வின் அனுபவம் இது.இன்னும் வாழ்க்கையில் கவனமாயிருக்கலாமே !

ஆனால் சுவிஸ்காரனின் நல்ல குணத்தைப் பாருங்கள்.அவளுக்கு இது ஒரு மனநோய். இல்லையென்றால் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்கிறான்."எங்களுக்கெல்லோ தெரியும் எங்கட சனங்களைப்பற்றி !"

யூத்ஃபுல் விகடனில்...குட் புளொக்கரிலும் !

ஹேமா(சுவிஸ்)

44 comments:

நையாண்டி நைனா said...

இது சில பேருக்கு பொழுது போக்கு...

S.A. நவாஸுதீன் said...

இப்படியுமா நடக்கிறது?

க.பாலாசி said...

//ஒருவர் சொல்லச் சொல்ல 19 - 20 பேராக கடன் கொடுத்தவர்கள் பட்டியல் உயர்ந்திருக்கிறது//

அடக்கொடுமையே....பெண்களிலும் இப்படி இருக்கிறார்கள். நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

நல்ல பாடம் உங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

தேவன் said...

உஷார்ர்ர்ர் .............. படுத்தியமைக்கு நன்றி!

Anonymous said...

இது எல்லா இடத்தில் காணப்படுகின்ற பிரச்சனை. நல்ல நட்பை கூட பணம் பிரித்து விடும்.

தேவன் மாயம் said...

we have to be cautious!

Admin said...

சிலர் இதனை ஒரு பிழைப்பாகவே வைத்திருக்கின்றனர் அவர்களை திருந்தினால்தான்.

மேவி... said...

ரொம்ப கொடுமையல இருக்கு...... என்னை கூட நிறைய பேர் ஏமாற்றி இருக்கிறார்கள்...... .

மேவி... said...

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ; திருட்டை ஓழிக்க முடியாது" அன்றே பட்டு கோட்டை சொல்லிவிட்டார்

ஸ்ரீராம். said...

என்ன கொடுமை..? யாரிடமும் சொல்ல வேண்டாம் கடன் வாங்கியதை என்று அவள் சொல்லும்போதே நீங்கள் சந்தேகப் பட்டு உஷாராகி இருக்க வேண்டும்... இது ஒருபுறம் இருக்க, சம்பவம் சொல்லும் முறையில் உங்கள் வட்டார வழக்கை கவனித்து படித்து புரிந்து கொண்டேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..இப்படியும் சிலர்...

பொழுதுபோக்காய் செய்கிறார்களா?

இல்லை இதுவே தொழிலா?

நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்

சரி எனக்கும் 200sfr கொடுங்க நாளைக்கு கொடுத்துடுறேன்.......

Anonymous said...

ரொம்ப நல்லவங்களா இருப்பிங்க போலயே!

நம்ம அட்ரஸுக்கு ஒரு ஐநூறை அனுப்புங்க!

வால்பையன் said...

ரொம்ப நல்லவங்களா இருப்பிங்க போலயே!

நம்ம அட்ரஸுக்கு ஒரு ஐநூறை அனுப்புங்க!

இது என்னோட கமெண்டு தான்!
பட்டன் அழுத்தும் போது மாறி வந்துருச்சு!

thamizhparavai said...

எத்தனை பேரு இப்படிக் கிளம்பிருக்காங்கன்னு தெரியலையே.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா...?
பிரியமுடன் வசந்த், வால்பையன்...நீங்கள்லாம் லைன்ல இருங்க...
எனக்குத்தான் அண்ணன்ற உரிமை இருக்கு...
எனக்குத்தான் முதல்ல...
எனக்கு sfr வகையறா எல்லாம் வேணாம்... இந்திய ரூபாய்லயே அனுப்பிருங்க....

கவி அழகன் said...

நான் இருவரிடம் ௨ இருவரும் நன்றாக உளைபவர்கள் என்ன பண்ண மறந்திடன்

இராகவன் நைஜிரியா said...

மிக அழகாக உங்களை மட்டுமல்ல, எல்லோரையும் ஏமாற்றி இருக்கின்றார்.

கொடுமை.. கொடுமை..

நசரேயன் said...

எனக்கும் ஒரு 1000 Sfr கொடுத்தா அடுத்த மாசம் திருப்பி தருவேன்

Anonymous said...

நல்லா ஏமாந்திருக்கீங்க. பாருங்க ஒரு கூட்டமே கடன் கேட்டு நிக்குது பின்னூட்டத்தில :).
நம்ம எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சிலர் ஏமாத்திடறாங்க.

Kala said...

ஹேமா இதில்கூட இருவருக்கும்
எவ்வளவு ஒற்றுமை.
நீங்களாவது ஒருவரிடம் நான்
இந்த உலகமெல்லாம்...{அந்த
நாட்டுக்கு,இந்தநாட்டுக்கு போக
வந்தோம் பணம் பத்தாது என்று
கேட்டால்}இந்த கெட்ட மனசு கேட்காது
கொடுத்துக்,கொடுத்து ஏமாந்ததுதான்
மிச்சம்.
இதைப் படிக்கும் போது சிரிப்புத்தான்
என்ன! பண்ணுறது நம்ம மனசுக்கு சவுக்கால
தான் அடிக்கணும் அப்படியாவது திருந்துமா?

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஹேமா.

Kavinaya said...

truth is stranger than fiction - என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் படுகிறது. கவனமாய் இருங்கள்.

Nathanjagk said...

அந்த வாங்கல்-வாங்கல் ஸ்நேகிதியை ​​ரொம்ப ரசிக்கிறேன்! ஒரு துறுதுறு கதாபாத்திரமாக கற்பனைத்துக் கொள்கிறேன். ஜாதி, மதம், மொழி, தேச​வேறுபாடில்லாமல் எல்லோரிடமும் சகஜமாக கடன் வாங்கிக் கொள்ளும் ஒரு நாடோடி காற்றின் சுதந்திரத்தை வியக்கிறேன்.

திரும்ப ஸ்நேகிதிக்கு ஃபோன் பேசும் ​போது என் அன்பைத் தெரிவிக்க ​வேண்டுகிறேன். நன்றி!

Nathanjagk said...

டென்ஷனாக ​வேண்டாம்!19-20 ஏமாளிகளை ஒன்றாக அசெம்பிள் ​செய்து வாங்கல்-ஆபரேஷனை ​வெற்றிகரமா நடத்தியிருக்கிறீர்கள் - உங்க தலைமையில! வாழ்த்துக்கள்!

பயங்கர கோபக்காரரா இருப்பீங்க ​போல!!?
இந்த மாதிரி சமயத்தில் தான் கோபத்தைக் களைவது எப்படி? ​போன்றவற்றை நினைவு படுத்திக்க ​வேண்டும். ஹிஹீ!

அடி தோழி நீ காலிப்படகு என்று நினைத்துக்​கொள்ளவும்.

Anonymous said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு ஹேமா....என‌க்கும் கொடுக்க‌ல் வாங்க‌ல்ல‌ நேர்மையா இருந்தா தான் பிடிக்கும்.நானும் என் க‌ல்லூரி நாட்க‌ளில் சில‌ தோழிக‌ளிட‌ம் ப‌ண‌த்தைக் கொடுத்து ஏமாந்திருக்கேன். என‌க்கு கேட்க‌வே ரொம்ப‌ ச‌ங்க‌ட‌மா இருக்கும். கெஞ்சி ப‌ணிவா என‌க்கு ப‌ண‌ம் தேவைப்ப‌டுது. திருப்பிக் கொடுன்னு கேட்பேன். ஒருநாள் கொடுக்காம‌லே நான் தான் கொடுத்திட்டேனே நீ ம‌ற‌ந்துட்டியான்னு ஏமாத்திட்டா! ச‌ரி நீ அவ்ளோ தான்னு அதுக்க‌ப்ப‌ற‌ம் அந்த‌ பொண்ணுட்ட‌ பேச‌ற‌த‌ நிப்பாட்டிட்டேன். உங்க‌ க‌தைய‌ வாசிக்கும் போது என‌க்கு என் ப‌ழைய‌ நியாப‌க‌ங்க‌ள் தான் வ‌ருது

Anonymous said...

கோப‌ப்ப‌டாதீங்க‌ ஹேமா! நீங்க‌ ம‌ட்டும் ஏமாற‌ல‌ 20 பேற் ஏமாந்து இருக்காங்க‌. எல்லோரும் போய் கேட்டால் அந்த‌ பொண்ணுக்கு உண்மையிலேயே அதை விட‌ அசிங்க‌ம் வேற இல்ல‌. திருப்பி கொடுத்திடுவாள். அதுக்க‌ப்புற‌மாவ‌து திருந்திடுவாள்ன்னு நினைக்க‌றேன்.

மணிஜி said...

/நம்ம அட்ரஸுக்கு ஒரு ஐநூறை அனுப்புங்க!//

எனக்கும்..ஆனா..ஆயிரமா...

பித்தனின் வாக்கு said...

ஹலோ எதுக்குக் கோபம், விடுங்க அவள் காலிப் படகு. சில பேர் இருக்கின்றார்கள். இதோ தருகின்றேன் என்று கடன் வாங்குவார்கள், அப்புறம் ஆள் அகப்படாமல் போய்விடுவார்கள். எனது பஸ் டிரைவர் ஒருவர் சென்னையில் நல்ல பழக்கம் ஒரு நாள் அவர் ஆயிரம் ரூபாய் கேட்டார் நான் அவரின் கஷ்டம் உணர்ந்து 1500 ரூபாய்கக் கொடுத்து அனுப்பினேன். ஆனால் இன்று வரை அவர் தரவில்லை. நான் எப்போதாது பார்த்தாலோ அல்லது பேன் பண்ணினால் உடனே சார் நான் இந்த மாச ஒன்னாம் தேதி தருகின்றேன் என்பார். நான் பணத்துக்காக போன் பண்ணாட்டிக்கூட அவர் தவனை கூறி அவசராமக வைத்து விடுவார். நானும் பணம் போனதற்காக இல்லாமல் நட்பு முறிந்தற்க்காக வருத்தப் பட்டேன். நானும் நண்பன் ஒருவருக்கு ஜம்பது ரூபாய் கடன் கடந்த 9 வருடங்களாக தரனும். ஆனா இப்ப அவர் எங்க இருக்கின்றார் என்று தெரியவில்லை. நன்றி ஹேமா.

ரோஸ்விக் said...

இந்த மாதிரி ஏமாத்துறவங்க நிறைய பேரு இருக்கதுனாலதான், உண்மையில் தேவையானவர்களுக்கு உதவ முடியவில்லை.
வருத்தம் தரக்கூடியது...

Anonymous said...

இன்றுதான் உங்கள் தளம் பார்க்கக்கூடியதாக இருந்தது. பல்வேறு விடங்களை எழுதியிருக்கின்றீர்கள்.

அந்த வகையில் நீங்கள் எழுதிய இப்படியும் நடக்கிறது பகுதி படித்தேன். இப்படி கடன் கொடுத்து ஏமாற்றுகிறவர்கள் எம்மவர்களிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் எழுதிய ஆள் விவரமான ஆள் என்பது தெரிகிறது.

கோண்டாவில் உப்புமடம் என எழுதியிருக்கிறீர்கள். நானும் கோண்டாவிலில் முன்னர் படப்பிடிப்புக்கள் செய்த விஜி அண்ணை வீட்டுக்கு அருகில் இருப்பவன். தாங்கள் யார் என அறியத்தர முடியுமா?

எனது முகவரி: srpkaran@gmail.com

கரன்.

Anonymous said...

மின்னஞ்சலுடன் கருத்து தவறுதலாக பதிவாகிவிட்டது.

தயவுசெய்து மின்னஞ்சலை நீக்கிவிடுங்கள்.

கரன்.

tamiluthayam said...

தமிழில் வீட்டுக்கு வீடு வாசற்ப்படி என்றொரு பழமொழி உண்டு. நீங்கள் உங்கள் கதையை வெட்கத்தை விட்டு சொல்லிவிட்டிர்கள். நாங்கள் சொல்ல வெட்கப்படுகிறோம். அவ்வளவு தான் வித்தியாசம். ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருப்பான் என்று உங்களுக்கு தெரியாதா..

அன்புடன் நான் said...

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். பாவம் உங்களுக்கு தெரியாதுதானே.
உற்று நோக்க அது ஒரு நோய் போலத்தான் இருக்கு!
நானும் உங்களைப் போலத்தான் கொடுக்கல் வாங்களில் ஒரு தெளிவை எதிபார்ப்போன். நானும் அப்படியே நடந்துக் கொள்வேன். அது தான் நல்ல பண்பு.
நம் மானம் அடுத்த நாட்டினரிடமாவது கப்பல் ஏறாமல் இருந்திருக்கலாம்....என்னசெய்ய????

பா.ராஜாராம் said...

கொடுத்தது 200sfr.பிரஷர் செக் பண்ண எவ்வளவு செலவு பண்ண?வா...சித்தப்பாட்ட சொல்லி தாரேன்.

ஜெகா...சூப்பரப்பு.

:-)))))

ஆ.ஞானசேகரன் said...

//ஆனால் சுவிஸ்காரனின் நல்ல குணத்தைப் பாருங்கள்.அவளுக்கு இது ஒரு மனநோய். இல்லையென்றால் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்கிறான்."எங்களுக்கெல்லோ தெரியும் எங்கட சனங்களைப்பற்றி !"//

நீங்கள் சொல்லி விட்டீர்கள் ஹேமா... என்னைபோல நிறையபேர் சொல்லவில்லை....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இதைத்தான் அனுபவம் என்பார்கள்.

thiyaa said...

இப்படியுமா நடக்கிறது?

Anonymous said...

200sfr.கேட்டவுடன் நம்பி கொடுத்துள்ளீர்கள்! அப்படியானால் சுவிசில் மற்றவர்களுக்கெல்லாம் பண கஷ்டமா?

பித்தனின் வாக்கு said...

ஹை ஹேமாக்கா எனக்கு அவசரமா ஒரு 400 உங்க ஊரு காசு கொடுங்க. மெய்யாலுமே நான் வாங்கின உடன திருப்பி பத்து நிமிசத்துல கொடுத்துருவேன். நம்புங்க பிளிஸ்.

thiyaa said...

இப்படியுமா நடக்கிறது?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

உங்களது இந்தப் பதிவையும் வாசித்தேன். இதற்குப்பின் போட்ட பென்குயின் பதிவையும் வாசித்தேன்.

எவ்வளவு வித்தியாசம் உங்களுக்குள். எழுத்துக்களில் உள்ள நேர்மை உண்மையில் இல்லைப் போல... என் அடுத்த பதிவில் உங்களைப் பற்றி எழுதுவதாக இருக்கிறேன் ஹேமா... என்னால் அதைத் தவிர வேறெதும் செய்யத் தெரியவில்லை.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

ஹேமா said...

மது அவர்களுக்கு எனக்கு இதுக்கும் பதில் போட விருப்பமில்லை.நான் உங்கள் பதிவு மட்டுமல்ல.ஏற்கனவே நான் நிறையப் பதிவுகள் இணையத்திலிருந்து,மின்னஞ்சல் பதிவுகள் இணைத்திருக்கிறேன்.
அஞ்சலிக் குழந்தையின் பதிவை இணக்க நிறைய விருப்பமிருந்தது.
அது என்னை நீங்கள் மாறி மாறி வந்து என்னை வற்புறுத்தி மிரட்டுவதுபோல பின்னூட்டங்கள் தருகிறீர்கள்.அதோடு நான் நேற்று வேலையால் வந்து பார்க்கும்போது இரண்டு பின்னூட்டங்கள்.
அதனாலேயே அந்த எண்ணத்தைத் தவிர்த்துவிட்டேன்.நீங்கள் என்னை உங்கள் பதிவில் விமர்சிக்க விரும்பினால் அது உங்கள் விருப்பம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அவ்வாறில்லை ஹேமா.. யாருக்கும் உங்கள் மேல் தனிப்பட்ட கோபமோ, காழ்ப்புணர்வோ இருக்கப்போவதில்லை. யாருடைய கற்பனையை நகலெடுப்பது கூடக் குற்றமில்லை.

கீழே அஞ்சலியின் பதிவை சுட்டுவதில் முழுப்பிரச்சினையும் தீர்ந்ததே.

என்னுடைய பதிவொன்றை வேறொருவர் தனது போல நகலெடுப்பதில் உள்ள வருத்தம், அதற்கு அவர் கேட்டும் பதிலளிக்காத தன்மை ஒருவருக்கு நிச்சயமாகக் கோபத்தை ஏற்படுத்தும்.

ஹேமா.. யாரும் யாரையும் மிரட்டுவதில்லை. இது உங்கள் இடம். நீங்கள் பிழையில்லையெனின் யார் மிரட்டினால் உங்களுக்கென்ன?

உண்மையில் ஹேமா.. இந்தப் பிரச்சினையின் பின் பின்னூட்டங்களை மட்டறுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். பதிவை எடுத்துவிட்டு திரும்பவும் மாற்றங்களுடன் போட்டிருக்கிறீர்கள். நியாயம் கேட்டு வந்த பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க மறுத்திருக்கிறீர்கள்.

நீங்களும் நானும் இலங்கை. ஆரம்பத்தில் ஏனிப்படிச் செய்தீர்கள் என்று கவலையாக இருந்தது. பின்னர் உங்கள் நடவடிக்கை கோபத்தைத் தந்தது. அதுதான் நான் இதை பலருக்குச் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தேன்.

மற்றும்படி நான் ஏன் உங்களை மிரட்டவேண்டும். எனக்கென்ன கோபதாபம் உங்களில்.

இப்படி இனியும் செய்யாதீர்கள் என்று சொல்வதை விட, மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது சரியெனில் அவர்கள் மினக்கட்டு சொல்வது சிறிது மதியுங்கள்.

இதைப் பிரசுரிக்கவேண்டாம் ஹேமா..

ஹேமா said...

நன்றி மது.என் நியாயம் என்னோடு.
உங்கள் நியாயம் உங்களோடு.நான் பொய் சொல்லவில்லை.எனக்கு மெயிலில் வந்த்தே தவிர.எங்கிருந்து எடுத்தது என்று வரவில்லை.நானும் உண்மை சொல்லித்தான் பதிவில் இட்டேன்.இது மட்டுமல்ல.வேறு பதிவுகளும் இதுபோல இட்டிருக்கிறேன்.உங்கள் பக்கமிருந்து கிட்டத்தட்ட 7- 8 பின்னூட்டங்கள் உங்கள் பதிவோடு இணைக்கும்படி.
ஏதோ என்னைக் கட்டாயப்
படுத்துவதுபோல.அதோடு நான் வேலைக்குப் போய் வந்து பார்த்தபோது எல்லாம் சேர்ந்து கிடக்கிறது.அதில் உங்கள் மிரட்டல் கடைசியாக.இதன் பின்னால் இணைத்தால் உங்களுக்கு நான் பயந்துவிட்டேன்.

சரி சரி சகோதரா.உங்கள் புத்திமதிக்கும் மிக்க நன்றி.என்னைக் கேவலப்படுத்தினதுக்கும் மிகவும் நன்றி.அஞ்சலிக்கு என் வாழ்த்தும் நன்றியும்.சந்திப்போம் தோழரே.நான் பின்னூடங்கள் மட்டுப்
படுத்தியமைக்குக் காரணமே வேறு.அதுவும் உங்களால் நன்மையே நடந்திருக்கிறது!நன்றி.

நான் எல்லோருடனு அன்பாகாவே இருக்கிறேன்.இது முதல் இணையத்தில் அடி எனக்கு.நான் தப்பு செய்ததாக இன்னும் இல்லை.
செய்யாத தப்பிற்கு என் ஊரவனாலேயே அடிபட்டிருக்கிறேன்.
நினைத்தாலே சந்தோஷம்.நன்றி மீன்டும் மது.

Nimal said...

வணக்கம் ஹேமா,

உங்களின் கொள்கை உறுதி பிடித்திருக்கிறது. என்னதான் தப்பு செய்தாலும் கடைசிவரை உங்கள் கொள்கைகளில் உறுதியாய் இருக்கும் உங்கள் குணம் என்னை புல்லரிக்க வைக்கிறது.

அப்படியே இதையும் கண்ணாடியை பார்த்து சொல்லவும்.
//கொடுக்கல் வாங்கல் என்பதில் மனிதனுக்கு நேர்மை இல்லாவிட்டால் அவனைப் போல ஒரு போக்கிரி உலகில் வேறு யாருமில்லை.இதைவிடச் சந்தியில் நின்று பிச்சையெடுத்துச் சாப்பிடலாம்.உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வெட்கப்படுகிறேன்.என்றாலும் வாழ்வின் அனுபவம் இது.இன்னும் வாழ்க்கையில் கவனமாயிருக்கலாமே !//

நன்றி,
நிமல்

Nimal said...

//ஏற்கனவே நான் நிறையப் பதிவுகள் இணையத்திலிருந்து,மின்னஞ்சல் பதிவுகள் இணைத்திருக்கிறேன்.//

மற்றவர் பெயர் குறிப்பிடாமல் இணைத்து விட்டு அதில் இப்படியும் பெருமைப்படலாமா. இது நல்ல முறையாக இருக்கிறதே...

//நானும் உண்மை சொல்லித்தான் பதிவில் இட்டேன்.//

அப்படியா... எனக்கு தெரியவில்லையே... //யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது.கற்பனையாகவும் இருக்கலாம்.// இன்னமும் அந்த யாரோ யார் என்று உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

செய்யாத தப்பு, நான் தப்பு செய்ததாக இன்னும் இல்லை, என்று சாதிக்கும் உங்கள் கொள்கையை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

நிமல்
(ஒரு கோண்டாவில் காரன் என்றவகையில் எனக்கு பெருமையாக இருக்கிறது)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP