Monday, November 23, 2009

நான் ஒரு படம் பாத்தன்.

நானும் அப்பாவும் அம்மாவும் ஒரு பென்குயின் படம் பார்த்தம்.அது ஒரு நல்ல படம்.பென்குயின்ஸ் எல்லாம் தஙக்ளுக்குக் குஞ்சு வேணுமெண்டு கன தூரம் நடந்து நடந்து போகினம்.நிறையத் தூரம் நடக்கினம்.அங்க போய் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துணையைத் தேடி விரும்பிக் கல்யாணம் செய்திச்சினம்.

பிறகு அம்மாப் பென்குயினுக்கு முட்டை வந்தது.அவையள் நிறைய நாள் சாப்பிடாமல் இருந்தவை.அங்க நல்ல குளிரும் இருந்தது.பிறகு முட்டையை அப்பாட்ட குடுத்துட்டு அம்மா எல்லாம் சாப்பிட போயிட்டினம்.சாப்பிடுறதுக்கு திருப்பியும் நிறைய தூரம் நடந்து நடந்து போனவை.அப்பா எல்லாரும் முட்டையையும் வைச்சுக் கொண்டு நல்ல குளிருக்குள்ள நிக்கினம்.பாவமாயிருந்தது.அப்பாட்டை இருகேக்கையே முட்டையும் பொரிஞ்சுட்டுது.
அந்த குஞ்சுக்கு அப்பா வாயில இருந்து ஏதோ சாப்பாடு கொடுத்தார்.

பிறகு கொஞ்ச நாளில அம்மா எல்லோரும் திரும்பி வந்தவை.குஞ்சு அம்மாட்டை போய் வாயில இருந்து பால் வாங்கி குடிச்சுது. பிறகு குஞ்சை அம்மாக்களோட விட்டுட்டு அப்பா எல்லாரும் சாப்பிட நடந்து போயிட்டினம்.அவையளும் திருப்பி நிறைய தூரம் நடந்து நடந்து போகினம்.

சில குஞ்சு குளிரில செத்துப் போச்சுது.செத்துப்போன குஞ்சோட அம்மா பாவம்.வேற அம்மாட்டை இருந்து மற்ற குஞ்சை பறிக்க பார்த்தது.ஆனால் அந்த அம்மா குடுக்கேல்லை. சில குஞ்சை பருந்தும் வந்து கொத்திச்சுது.பாவம் குஞ்சுகள்.பிறகு அப்பாவும் அம்மாவும் மாத்தி மாத்தி குஞ்சை பார்த்துக் கொண்டினம்.மாத்தி மாத்தி சாப்பிடப் போச்சினம். ஒவ்வொரு முறையும் நிறைய தூரமாக நடந்து நடந்து போகினம்.

கடைசியில அந்த குஞ்சு எல்லாத்தையும் தனியா விட்டுட்டு அப்பா அம்மா எல்லாருமே போயிட்டினம்.எனக்கு அழுகை அழுகையா வந்தது.அந்த குஞ்சுகள் எல்லாம் பாவம்தானே? அவையளுக்கு தனியா இருக்க பயமா இருக்கும்தானே? அவையள் தனிய போனால் பருந்து எல்லாம் பிடிச்சு சாப்பிட்டுடும்தானே? அவையளுக்கு பருந்திட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதெண்டு தெரியாதுதானே? நான் அழத் தொடங்கிடன்.

பிறகு அம்மாவும் அப்பாவும் சொல்லிச்சினம் அவையளாவே எப்படி தப்பிக்கிறதெண்டு பழகிடுவினம் எண்டு.பிறகு பார்த்தால் ஒருத்தரும் சொல்லிக் குடுக்காமலே அந்தக் குஞ்சுகள் எல்லாம் தாங்களாவே தண்ணியில போய் கைகளை விரிச்சு விரிச்சு அடிச்சுக் கொண்டு நீந்தி நீந்தி போச்சினம்.அது பார்க்க நல்ல வடிவாயிருந்தது.ஆனா நான் அவையள்போல என்ர அப்பா அம்மாவை விட்டிட்டு போகமாட்டன்.எனக்குப் பயம்.அதோட நான் பெரிசா வளந்தப்பிறகுகூட நான் தான் தான் உழைச்சு அப்பாவையும் அம்மாவையும் பாத்துக்கொள்ளுவன்.எனக்கு நீந்தத் தெரிஞ்சாலும் போகமாட்டன்.

ஆனால் இப்ப எத்தனயோ மைல்கள் தாண்டித்தான் என்ர அப்பா அம்மாவை விட்டிட்டு வந்திருக்கிறன்.

யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது.கற்பனையாகவும் இருக்கலாம்.எனக்கு மெயிலில் வந்தது.நான் என்னை அக்குழந்தையாக்கி அதை மெருகேற்றிக்கொண்டது இப்பதிவு.

ஹேமா(சுவிஸ்)

23 comments:

இராகவன் நைஜிரியா said...

சொல்ல வந்த விஷயத்தை விவரித்த விதம் அழகு..

அப்பா, அம்மாவை விட்டு விட்டு நெடுந்தொலைவு வந்ததை, உள்ள கிடக்கையை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்..

இராகவன் நைஜிரியா said...

ஹை... மீ த ஃபர்ஸ்டோய்..

மணிஜி said...

நெகிழ்ச்சி ஹேமா

மது said...

அன்பு தோழி ஹேமா...தாய் தந்தையை பிரிந்து நீங்கள் ஏங்குவது மிக அழகாக இக்கதையில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்...விவரித்த விதம் மிக நெகிழ்ச்சி .... பென்குயின் குஞ்சுகள் மூலம் நமக்கு விளங்குவது இன்னொன்றும் கூட..எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அவற்றை வெற்றி கொள்பவர்கே வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்...

S.A. நவாஸுதீன் said...

அழகா சொல்லி இருக்கீங்க.

வால்பையன் said...

நானும் அந்த படம் பார்த்திருக்கிறேன்!

ஹேமா said...

இப்பதிவுக்கு அஞ்சலி என்கிற குழந்தையின் பதிவு என்று ஒருவர் அறியத் தந்திருக்கிறார்.நன்றியும் வாழ்த்தும்.முடிந்தால் அஞ்சலியின் லிங்க் தர முயற்சிக்கிறேன்.

க.பாலாசி said...

தங்களை அக்குழந்தையாக மெருகேற்றியது போல படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அப்படியே உணர்வு ஏற்படும்.

பூங்குன்றன்.வே said...

அப்பாவின் அன்பு/பிரிவு குறித்த நல்ல பதிவு.

Kala said...

நானும் பென்குயின் பற்றிய {வாழ்க்கை}தொகுப்பு
ஒரு வலைத் தளத்தில் படித்தேன்,மிக சுவாரசியமாய்
இருந்தது ஹேமா.
மனிதர்கள் நாம் அதனிடம் இருந்து கற்க வேண்டிய
விடயங்கள் எத்தனை எத்தனையோ!
இலங்கைத் தமிழ் அதிலும் யாழ்ப்பாணத் தமிழில்
குடும்பப் பிணைப்பின்{உறவு,பாசம்,உணர்வு}
இன்னும் பலவற்றுடன் அழகான சித்தரிப்பு.
பகிர்வுக்கு நன்றி தோழி.

ஸ்ரீராம். said...

நான் அந்தப் படம் பார்க்கவில்லை. நடை வித்யாசமாய் உள்ளது.

- இரவீ - said...

நானும் அந்த படம் பார்த்திருக்கிறேன்!!!

சுவாரசிய பதிவு - நன்றி ஹேமா.

லெமூரியன்... said...

யாழ் தமிழ் மேல் உள்ள எனக்குண்டான காதலை இன்னும் அதிகப் படுத்தி விட்டது உங்களின் பதிவு...
பெற்றவர்களை பிரிந்து நெடுந்தொலைவு சென்ற ஒருவருடைய உணர்வின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்று அழகாக வெளிபடுத்தியுள்ளீர்கள்.

பித்தனின் வாக்கு said...

நான் டிஸ்கவரி சோனலில் பார்த்தபோது கூட எனக்கு இது போல தோனவில்லை. நல்ல கட்டுரை. நம்ம அப்பா அம்மாவை விட்டு வந்தால் என்ன அவர்களை பேண பணமும், பாசமும், பார்த்துக் கொள்ள ஒரு நல்ல துணையும் வைக்க வேண்டியது நம் கடமை அல்லவா. திரைகடல் ஓடியும் திரவியம் தோடுவது நம் பிழைப்பு. நன்றி ஹேமா.

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்

tamiluthayam said...

மிக சிறந்த பதிவு. மனதை நெகிழ்ச்சி யடைய செய்த பதிவு.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பதிவு நல்ல பதிவு. ஆனால் நீங்கள் அஞ்சலியின் பதிவை மதிக்கவில்லை என்பது மனதுக்கு வேதனை தரும் விடயம்.

நீங்கள் இந்தப் பின்னூட்டத்தையும் பிரசுரிக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு இரண்டு நாள் புகழுக்காக இவ்வாறு செய்யவது நல்லதல்ல.. கவலையாக இருக்கிறது.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

ஹேமா said...

நன்றி மது.என் நியாயம் என்னோடு.
உங்கள் நியாயம் உங்களோடு.நான் பொய் சொல்லவில்லை.எனக்கு மெயிலில் வந்த்தே தவிர.எங்கிருந்து எடுத்தது என்று வரவில்லை.நானும் உண்மை சொல்லித்தான் பதிவில் இட்டேன்.இது மட்டுமல்ல.வேறு பதிவுகளும் இதுபோல இட்டிருக்கிறேன்.உங்கள் பக்கமிருந்து கிட்டத்தட்ட 7- 8 பின்னூட்டங்கள் உங்கள் பதிவோடு இணைக்கும்படி.
ஏதோ என்னைக் கட்டாயப்
படுத்துவதுபோல.அதோடு நான் வேலைக்குப் போய் வந்து பார்த்தபோது எல்லாம் சேர்ந்து கிடக்கிறது.அதில் உங்கள் மிரட்டல் கடைசியாக.இதன் பின்னால் இணைத்தால் உங்களுக்கு நான் பயந்துவிட்டேன்.

சரி சரி சகோதரா.உங்கள் புத்திமதிக்கும் மிக்க நன்றி.என்னைக் கேவலப்படுத்தினதுக்கும் மிகவும் நன்றி.அஞ்சலிக்கு என் வாழ்த்தும் நன்றியும்.சந்திப்போம் தோழரே.நான் பின்னூடங்கள் மட்டுப்
படுத்தியமைக்குக் காரணமே வேறு.அதுவும் உங்களால் நன்மையே நடந்திருக்கிறது!நன்றி.

நான் எல்லோருடனு அன்பாகாவே இருக்கிறேன்.இது முதல் இணையத்தில் அடி எனக்கு.நான் தப்பு செய்ததாக இன்னும் இல்லை.
செய்யாத தப்பிற்கு என் ஊரவனாலேயே அடிபட்டிருக்கிறேன்.
நினைத்தாலே சந்தோஷம்.நன்றி மீன்டும் மது.

பித்தனின் வாக்கு said...

தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.
தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

அட விடுங்க அந்த படம், இடுகை எல்லாம் டிஸ்கவரி சானலில் இருந்து சுட்டது. இது தி ஓசன்ஸ் மைஸ் ரீஸ் புரோக்கிராம்தான். நன்றி ஹேமா.

V.N.Thangamani said...

அன்பு ஹேமா
உப்பு மட சந்திக்கு இன்றுதான் வந்தேன்.
என்ன அற்புதமான பதிவு ! இப்பவும் ஒரு பதிவு தான் பார்த்தேன். இன்னொருநாள் நேரம் இருக்கும் போது முழுவதும் வசிக்கிறேன் ஹேமா.
வாழ்க வளமுடன்

Anonymous said...

அழகா சொல்லி இருக்கீங்க.

thiru said...

ஹேமா,

இந்த பதிவு அஞ்சலி எழுதியது என்பது பல முறை உங்களுக்கு சொல்லியாயிற்று. குறைந்தபட்ச நேர்மையாவது உங்களிடம் இருக்குமானால் அஞ்சலியின் பதிவின் சுட்டியை இந்த இடுகையின் கீழ் (பின்னூட்டத்தில் அல்ல) குறிப்பிடுவீர்கள். 'யாரோ ஒரு குழந்தை' என்றும் எழுதமாட்டீர்கள். ஒரு குழந்தையின் சிந்தனை மற்றும் உழைப்பை அல்லது அவருக்கு போக வேண்டிய பாராட்டை திருடுவது வெட்கமில்லையா?

ஹேமா said...

திரு அவர்களே நீங்கள் எப்படி திரும்பவும் திரும்பவும் என்னை வற்புறுத்தமுடியும்?என்னை மிரட்டி என்னைக் கேவலப்படுத்தியெல்லாம் என்னென்னவோ செய்து பார்க்கிறீர்கள்.இவ்வளவுக்குப் பிறகு நீங்களென்றால் போடுவீர்களா?நிச்சயமாய் நான் நீங்கள் சொன்ன பிறகு உறுதிப்படுத்திக்கொண்டு இணைக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.உங்களது 8 பின்னூட்டங்கள்தான் என்னைப் பின்னடைய வைத்தது.இன்றைய உங்கள் இந்த மிரட்டல் ஏன்?நான் எத்தனை வேறு பதிவுகளை இதேபோலக் கொன்டு வந்து போடுகிறேனே.யாரும் இப்படி மிரட்டவில்லை.பதிவுக் கேவலமும் பண்ணவில்லை.ஏன் என் கவிதைகளையே எத்தனையோ பதிவுகளில் சொல்லியும் சொல்லாமலும் கண்டிருக்கிறேன்.
நானும் இப்படி அடம் பிடித்துப் போய்க் கேட்கவில்லை.என்ன இது நீங்கள்.சீ...!

தயவு செய்து இனிமேலும் இதுபற்றிக் கதைக்க வேண்டாம்.நான் உறுதியாக இணைக்கப்போவதில்லை.எங்கள் இனத்துக்கே உண்டான குணத்தோடு இருக்கிறது எங்கள் கதை.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP