Friday, November 27, 2009

தமிழ் தேசிய தலைவனின் அன்பும் கொக்கரிக்கும் சிங்களமும்.

இந்தியாவுக்கும் எதிரான சிங்களம்.



2008 ம் ஆண்டில் தலைவரின் உரை.



காப்புரிமை கொண்ட www.youtube.com இற்கு நன்றி.


உப்பு கரிக்கும் கண்ணீரில் மினரல் வாட்டர் பொரொஜக்ட்.


இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை
முடியாத வரலாறாக வாழும் என தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். நேற்று எழுதியுள்ள கடிதம் ஒன்றில் முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முரசொலியில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த பாயும்புலி பண்டாரக வன்னியன் என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், நானும் தமிழன் தானே என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, நீ தமிழன் தான் இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான் ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன் பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன் பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன் என்று சினந்து கூறுவதாக அமையும்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான் என கூறுவதாக அமையும்.இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார்.

இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982‐ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பாயும் புலி பண்டாரக வன்னியன் தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது விளக்கமான பதில் வீரம் கொப்பளிக்கும் பதில் அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டார வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டார வன்னியனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள் அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என முடியும்.

காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை பண்டாரக வன்னியன் ஒருவனல்ல் அவனைப் போல பலர் உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் என்பது குறிப்பிடதக்கது.

www.dmktamilnaadu.com

13 comments:

சவுக்கு said...

இன்னுமா இந்த கருணாநிதிய நம்புறீங்க ?

Anonymous said...

கருணாநிதிய பத்தி முழுமையா தெரிஞ்சு கொண்டதால் தான், தனது இறுதி நாளில் உதவின்னு புலிகளின் தலைமை இவர்கிட்ட எதுவும் கேட்கல. தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு, தமிழன் வீழ்ந்தால் முட்டுக்கொடு என்பார்கள். தட்டிக் கொடுக்கவும் இல்லை, முட்டு கொடுக்கவும் இல்லை.

.tamiluthayam said...

இன்னுமா இந்த கருணாநிதிய நம்புறீங்க ? இத விட நல்லா சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கல.

palPalani said...

/*
தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு, தமிழன் வீழ்ந்தால் முட்டுக்கொடு என்பார்கள். தட்டிக் கொடுக்கவும் இல்லை, முட்டு கொடுக்கவும் இல்லை.
*/

உண்மை... உண்மை.. நெஞ்சை சுடும்(இருப்பவர்களுக்கு) வார்த்தைகள்...

க.பாலாசி said...

nalla katturai pakirvu.

thiyaa said...

உண்மை வார்த்தை

லெமூரியன்... said...

துரோகிகளை புகழ்ந்து கட்டுரை இட வேண்டிய அவசியமென்ன தோழர்..???

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி ஹேமா...

விஜய் said...

பேசி பேசியே இலங்கை தமிழர்களுக்கு அல்வா கொடுத்ததை கொடுத்துகொண்டிருப்பதை மறந்து விடீர்களா ஹேமா

தயவு செய்து அந்த புகைப்படத்தை எடுத்துவிடுங்கள்

உங்கள் தளத்தில் இருப்பது நமது போரடாத்திற்க்கே இழிவாகும்

அன்பு சகோதரன்

விஜய்

பித்தனின் வாக்கு said...

// இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ள்ர். //
இதுதாங்க சரியான வாசகம், அவர் எழுதிய வசனம் அவருக்கு திருப்பி விட்டுருக்கார் பார்த்திங்களா?
அதை விடுங்க அரசியல், நம் இனத்தவர் நலமுடன் வாழ்ந்தால் சரி. அதற்கு பிரார்த்திப்போம். நான் அளித்த விருதினைப் பெற்றுக் கொள்ளவும். நன்றி.

வால்பையன் said...

கருணாநிதி கவிதை பாடியே தமிழர்களை கொல்லப்போறாரு!

ராஜபக்‌ஷே இனி ஓய்வு எடுக்கலாம்!

பித்தனின் வாக்கு said...

என்ன ஆச்சு ஹேமா இரண்டு நாளாக சத்தம், பதிவு எதுவும் காணேம். இன்னமும் மாவீரர் தினத்தின் தாக்கத்தில் மீளவில்லையா அல்லது உடல் நலமில்லையா? நான் தங்களுக்கு ஒரு விருதினை அளித்துள்ளேன். அதை பெற்று என்னச் சிறப்பிக்கவும். நன்றி.

Anonymous said...

க‌லைஞ‌ரை ந‌ம்பாதீங்க‌ ஹேமா அவ‌ருக்கு அவ‌ர‌து குடும்ப‌ம் தான் முக்கிய‌மாக‌ இருக்கும். த‌மிழ் ம‌க்க‌ளை ந‌ம்புங்க‌. அவ‌ங்க‌ தான் எப்ப‌வும் தோள் கொடுப்பார்க‌ள். உத‌விக்கு வ‌ருவார்க‌ள். இந்தியா செய்த‌ த‌வ‌ற்றுக்கு த‌ண்ட‌னை நெருங்கிக் கொண்டிருக்கிற‌து. இந்தியாவையும் ந‌ம்ப‌ வேண்டாம். இந்தியாவே த‌னி ஈழ‌ம் அமைத்து த‌ர‌ முன் வ‌ரும் கால‌ம் நெருங்கிக் கொண்டிருக்கிற‌து. அது வ‌ரை பொறுங்க‌ள்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP