Tuesday, February 16, 2010

ஆண்களும் உதவலாம் அடுப்படியில்.

நான் சென்ற ஒரு பதிவில் கிண்டலாக ஆனால் உண்மையாகக் கேட்டிருந்தேன்.யாரச்சும் வீட்டில் மனைவிக்கு உதவியாய் சமைச்சுக் கொடுப்பீங்களா.அப்படியாயின் சொல்லுங்கள் என்று கருணாகரசு சமையல் அனுபவத்தையே தந்திருந்தார்.

//சி. கருணாகரசு
நான் சிங்கபூரிலிருந்து எழுதுகிறேனுங்க என்னோட பேரு...... கருணாகரசுங்க.
நான் என்னோட மனைவிக்கு சமைத்து போட்டிருக்கேன்..... என்ன சமையல்ன்னா... மீன் வறுவல்.அப்புறம்.... அப்பப்ப...முருங்கக்காய் சாம்பார்....... அடுத்து எனக்கு தெரிந்த எதாவது.... இதெல்லாம் ஒரு விடயமே இல்லைங்க..... பதிவை முழுமையா படிச்சுட்டு அப்புறம் வரேனுங்க.

சாட்சிக்கு வேனா கலாவை... என்னோட இல்லத்தரசியிடம் கேட்டு பார்க்க சொல்லுங்க.//

கலாவும் உறுதிப்படுத்தியிருந்தாங்க.

//கலா... ஹேமா கருணாகரசின் பின்னோட்டத்தில்....சொல்லியிருக்கிறார் சமைத்துக் கொடுப்பதாக,ஆம் அது நிஐந்தான்,சிவரஞ்சனிக்கு ஏற்ற அருமையான கணவர்.நானே நேரில் பார்த்திருக்கின்றேன்,அத்தனை கவனிப்பு.//

இதைவிட ஸ்ரீராம்,அரங்கப்பெருமாள்,மற்றும் பித்தனின் வாக்கு(சுதாகர்) இவர்களும் வீட்டில் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.சந்தோஷமாக இருந்தது.

இதைவிட ஜெரி ஈசானந்தா தான் நான் ஒருமுறை இன்று நீங்களா வீட்டில் சமையல் என்று கேட்டபோது ,ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டதுபோல இல்லையே... சமையலா...நானா...ஏன் என்றெல்லாம் அடுக்கியவர் ,அதன் பிறகு என் தொல்லை தாங்கமலே தான் இப்போவெல்லாம் வீட்டில் உதவுவதாகவும் முடிந்த நேரங்களில் சமைத்துக் கொடுப்பதாகவும் சொல்கிறார்.எவ்வளவு சந்தோஷம்.

எங்கள் வீட்டில் அப்பாவும் எப்போவாவது ஒருநாள் இன்று நான்தான் சமையல் என்று அட்டகாசம் செய்வார்.வித்தியாசமான சுவையோடு அம்மாவின் புன்னகையோடு அன்றைய பொழுது மிக மிக அருமையாய் சந்தோஷமாய் இருக்கும்.அப்பா அம்மாவின் அந்நியோன்யமும் அன்று புரியாவிட்டாலும் இன்று உணரக்கூடியாதாக இருக்கிறது.(அடுப்படி அன்று துப்பரவு செய்வதென்பது பெரிய வேலைதான்.எந்தச் சாமான்களும் இருக்கும் இடத்தில் இருக்காது)

ன்னும் இதுபற்றிக் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.அடுப்படி என்னவோ பெண்களுக்கே சொந்தமான இடம் என்பதாகவே சில ஆண்களின் நினைப்பு.ஒரு அவசரம் ஆபத்திற்குக்கூட ஒரு தேநீர் வைத்துக் கொடுக்கத் தெரிவதில்லை.ஏன் சில சமையல் விஷயங்களை ஆண்கள் அறிந்து வைத்துகொள்வதில் என்ன தப்பு.வீட்டில் உதவியாய் இருந்தால் என்ன.அம்மா அக்கா அம்மம்மா அத்தை மனைவி மகள் என்று பெணக்ளின் கைப்பிடித்துக்கொண்டே ஆண்களின் அன்றாட அலுவல்கள் அசராமல் நடந்துகொண்டிருக்கிறது.ஒரு நேரம் இல்லாவிட்டாலும் தவிப்பது தெரியும்.ஆனால் ஒரு விஷயம்.பிறக்கும் குழந்தை மட்டும் ஆணாகப் பிறக்கவேண்டும்.

பெண்களில் பலர் நாங்கள் ஆண்களுக்கு உதவியாக எத்தனையோ வெளி வேலைகளைச் செய்தபோதும் வீட்டில் ஆண்கள் எதுவும் செய்வதில்லை.செய்ய முயற்சி செய்வதுமில்லை.
ஏன் வீட்டில் இப்படியான சில வேலைகள் இருக்கிறது என்றுகூடத் தெரியாமலே சில ஆண்கள் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.மகனோ மகளோ எத்தனையாம் வகுப்பில் படிக்கிறார்கள் இன்று என்னென்ன முக்கியமான் அலுவல்கள் என்றுகூடத் தெரியாதவர்களும் இருகிறார்கள்.உழைத்துக் கொடுத்தால் மட்டுமே போதுமானதாய் நினைப்தே பெரிதாய் எண்ணி உலவுகிறார்கள்.வேலைக்குப் போகும் மனைவி அத்தனை வீட்டு வேலைகளையும் செய்து வைத்துவிட்டே வேலைக்குப் போகிறாள்.அதுவும் நம்நாடுகளில்தான் இந்த ஆக்கிரமிப்புக்கள் கூடுதலாகக் காண்கிறோம்.

நிச்சயமாக நான் காணக்கூடியதாக இந்த நாட்டில் அப்படி ஒரு பிரிவினை இருப்பதாகக் காணவில்லை.நான் பழகும் ஒரு சுவிஸ் குடும்பத்தில் மாலைச் சமையல் அவர்தான் செய்வார்.எத்தனை பேர் சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடிய அத்தனை பாத்திரங்களும் ஒதுக்கி மெஷினில் கழுவ வைத்துவிட்டு சாப்பிட்டபின் அருந்தும் காப்பியும் ஏதோ ஒரு இனிப்பும் மேசைக்குக் கொண்டு வருவது அவரேதான்.பின் கழுவப்பட்ட பாத்திரங்களை எடுத்து அடுக்கிவிட்டுத்தான் மதியத்தில் வேலைக்குப் போவார்.இதில் ஆங்கிலப் பேராசிரியர் அவர்.இந்த நிகழ்வு நான் காண்பது அடிக்கடி மதியச் சாப்பாட்டு இடைவேளையின்போது.

பெண்கள் தான் சமைக்க வேண்டும் என்ற நிலை ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.இல்லையென்றில்லை.காரணம் பொறுமையாக எதற்குள் எதைக் கலந்தால் உணவின் ருசி அதிகமென்று அவளால் தீர்மானிக்கப்படுவதாலும் வீட்டில் உள்ளவர்களின் சுவை உணர்வை அறிந்து வைத்திருப்பதாலோ என்னவோ.இதில் சிக்கனமும் அடக்கம்.என்றாலும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை.உலகெங்கும் சமையலைத் தொழிலாகவே வைத்துள்ளவர்களில் 75% ஆண்கள் தான்.(Professional Cooks)

சமையல் செய்ய வேண்டாம்.அது பெண்களின் சமாச்சாரம் என்றே
வைத்துக்கொள்வோம்.மனைவிக்கு வீட்டில் இன்னும் எத்தனையோ வழிகளில் உதவலாமே.வீட்டு வேலைகள் எதிலும் ஆண்கள் பங்கெடுத்துக்கொள்வது என்பது இன்னும் நம் சமூகத்தில் விரும்பத்தகாத செயல்.தகுதிக்குக் குறைவான வேலை என்றே கருதப்படுகிறது.ஆண்கள்தான் உயர்வு என்று சொல்லிக்கொண்டு வரும் திரைப்படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.ரசிக்கவும் படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக கணவன் தன்னைவிடப் பெரியவன் தான் செய்யும் வேலையை அவனைச் செய்யச் சொல்லக் கூடாது என்று எண்ணும் மனைவிமார்களே நம் சமூகத்தில் இன்னும் அதிகமாக இருக்கிறார்கள்.உதவி செய்ய முன்வரும் ஆண்களைக்கூட இவர்கள் விடுவதில்லை.இந்தப் பெண்களை என்ன செய்யலாம் !

ஆனல் வெளிநாட்டில் வாழும் எங்கள் ஆண்கள் ஓரளவு இப்போதெல்லம் உதவி செய்யக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.நம் நாடுகளில் வெகுசிலர் மட்டுமே சமையல் செய்கையில் தனது மனைவிக்கோ தாய்க்கோ சகோதரிக்கோ உதவி செய்ய முன்வருகிறார்கள்.அவர்கள் என் அப்பா,கருணாகரசு,ஸ்ரீராம்,அரங்கப்பெருமாள் சுதானந்த சுவாமிகள் போல விதிவிலக்கானவர்கள்தான்.பாராட்டுவோம்.

ஹேமா(சுவிஸ்)

35 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

//"ஆண்களும் உதவலாம் அடுப்படியில்."//

உதவலாம்

தமிழ் உதயம் said...

சமையலறையிலும் காதல் நிலவட்டுமே.

ஜெய்லானி said...

இதில் வெக்கபட வேண்டியது ஒன்னுமில்ல. நா மீன் கூட வெட்டி, கிளீன் பண்ணி தருவேன். மனைவியுடன் அன்பு என்பது உடலால் மட்டுமில்லை. அவர்களுக்கு உதவுவதும் (எல்லாவற்றிலும்)கூட என்பது என் கருத்து.

settaikkaran said...

உதவுறதென்ன, நானே சமையல் பண்ணி, உட்கார வைச்சு சாப்பாடு பரிமாறவும் தயாருங்க! ஆனா, யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறாங்களே? (மல்லிகா பத்ரிநாத் புஸ்தகம் ஏழு வாங்கி மனப்பாடம் பண்ணி வச்சிருக்கேனில்லா?)

Hakuna matata said...

ச.தமிழ்ச்செல்வன் அவர்களை அறிந்திருப்பீர்கள். அவர் எழுதியது.....


http://thatstamil.oneindia.in/art-culture/visai/jan05/tamilselvan.html

க.பாலாசி said...

//எல்லாவற்றிற்கும் மேலாக கணவன் தன்னைவிடப் பெரியவன் தான் செய்யும் வேலையை அவனைச் செய்யச் சொல்லக் கூடாது என்று எண்ணும் மனைவிமார்களே நம் சமூகத்தில் இன்னும் அதிகமாக இருக்கிறார்கள்.உதவி செய்ய முன்வரும் ஆண்களைக்கூட இவர்கள் விடுவதில்லை.இந்தப் பெண்களை என்ன செய்யலாம் !//

உண்மைதானுங்க... ஒருசிலர் இந்தமாதிரியும் இருக்காங்க...

நான் இப்ப ஒண்டிக்கட்டையாத்தாங்க சமைச்சு சாப்புடுறேன்....(பேச்சலர் வாழ்க்கை)

அண்ணாமலையான் said...

நல்ல விஷயம்தான் ... தாராளமா செய்யலாம்...

வால்பையன் said...

நான் சூப்பரா சமைப்பேனாக்கும்!

pudugaithendral said...

ஆஹா இதைப்பத்திதான் என் பிளாக்குல காரசார விவாதம் நடந்துச்சு. இன்னைய போஸ்டும் கிட்டத்தட்ட இதைப்பத்திதான்.

முடிஞ்சப்ப வந்துபடிங்க.

Anonymous said...

ஆஹா, சூப்பர் பதிவு ஹேமா.

நீ போடற காபி, டீ மாதிரி வருமான்னு வேலைய நம்ம தலைல ரங்ஸ் நல்லாவே கட்டுவாரு.

ஜெயா said...

” ஆண்களும் உதவலாம்
அடுப்படியில்”
ஆகா அசத்தலான பதிவு ஹேமா.கண்டிப்பாக எல்லா ஆண்களும் படிக்கவேண்டிய பதிவு.ஊரில் கிச்சின் பக்கம் போன ஆண்கள் யாரையுமே நான் பாக்கவில்லை சமைக்க....சாப்பிட மட்டும் போவார்கள்.எங்கள் வீட்டிலும் சரி எங்கள் உறவினர் வீட்டிலும் சரி சமையலறை என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரிய இடமாகத் தான் இருக்கும்.
அங்கே தான் அப்பிடி என்றால் இங்கே மட்டும் என்னவாம், இங்கே சாப்பிட்ட பிளேட்ட கூட கழு வுவதையே கவுரவக் குறைவாக நினைக்கும் ஆண்களைப் பார்க்கிறேன்.
திருமணத்திற்க்கு முன்பு அனேகமான இளைஞர்கள் இங்கே நன்றாக சமையல் செய்வார்கள்.ஆனால் திருமணம் முடிந்து மனைவியைக் கண்டதும் சின்ன அம்மிணி சொன்னது போல எல்லாத்தையும் மனைவி தலையில கட்டிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
ஏதோ உழைத்து கொடுப்பதோடு கடமை முடிந்தது என்று போகாமல் சமையலறை வேலை மற்றும் எல்லா வேலையிலும் மனைவிக்கு உதவி செய்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்... இந்த பதிவை படிக்கும் எல்லா ஆண்களும் உடனடியாக அடுப்படிக்கு போய் அங்கே சமைக்கும் அம்மா, அக்கா மனைவிக்கு உதவுங்க.... வாழ்த்துக்கள் ஹேமா*******

தமிழ் அமுதன் said...

/// சில ஆண்கள் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.///


ஆமாங்க நான்கூட அப்படித்தான்...! என்ன செய்ய...? எனக்கு சமைக்க தெரியாது சாப்பிடத் தான் தெரியும்...! ;;)

ஹேமா said...

ஐயா ...ராதாகிருஷ்ணன்.உங்கள் புகைப்படம் பார்த்தேன் ஷங்கர் பதிவில.அதனால அதிகம் பேச மனசில்ல.நீங்க உதவலாம்ன்னு சொல்லியிருக்கீங்க.
செய்திருக்கீங்களா ?

***********************************

தமிழ்...இதென்னா நழுவலான பின்னூட்டம்.காதல் மட்டும் போதாது சமையலறையில.சாப்பாடும் வேணும்.அப்புறம் எங்க உயிரையே எடுக்கிற முதல் ஜென்மங்கள் இந்த ஆண்கள்தான் !

***********************************

வாங்க வாங்க ...ஜெய்லானி.உங்க கருத்துக்குச் சந்தோஷம்.எப்பவும் அடிமைத்தனம் இல்லாத உதவியா இருக்கணும்.
உங்க குழந்தைங்களுக்கும் அதையே பழக்கிவிடுங்க.நன்றி.

***********************************

வாங்க வாங்க சேட்டைக்காரா. ஐயா,சும்மா வாய் மட்டும் வேணாம் இங்க.வீட்ல இப்பவும் அம்மா இருப்பாங்க.தினமும் என்ன பண்ணிக் கொடுக்கிறீங்க.புத்தகம் படிச்சா மட்டும் பத்தாது !

***********************************

நன்றி வெட்டி...அருமையாச் சொல்லியிருக்காங்க தமிழ்ச்செல்வன்.

***********************************

நன்றி தமிழினி.வருகைக்கும்கூட.

***********************************

பாலாஜி...ரொம்பக் கவலைதான்.
இப்போ சமைப்பீங்க.அப்புறம் வால் காட்டுவீங்க.
அதுக்காகத்தானே இந்தப் பதிவு !

***********************************

வாலு...உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு ஒத்துக்கிறேன்.வீட்ல உங்க வாழ்நாளில எத்தனை தடவை சமையல் ஆகியிருக்கு.சொல்லுங்க.
ஏன் எப்பவும் வீட்ல நீங்களும் ஒருத்தரா இருக்கக்கூடாது.நிறைய பெண்களின் ஆதவாளராக இருக்கீங்க !

குடுகுடுப்பை said...

அப்ப நானெல்லாம் உதவிக்காக இன்னோரு ஆம்பிளைய கல்யாணம் பண்ணிக்கட்டுமா?

Ashok D said...

வீடுல உதவி செய்றதில்ல அதான் தம்பி எஸ்கேப்பு...நாங்கல்லாம் யாரு...

Anonymous said...

உதவி செய்யாட்டியும் பரவாயில்லை.. உபத்திரவம் இல்லாட்டி போதும். உதாரணம், வெளி நாட்டில் எப்படியோ தெரியது ஊரில் சொல்லாமல் கொள்ளாமல் ஆட்களை சாப்பிட கூட்டி வருவது. ஏதோ ஜூபூம்பா என்றவுடன் 6 வகையான சாப்பாடு மேசையில் வருவது போல் அவர்களின் நினைப்பு. படிக்கிற பேப்பரை எடுக்கிற பொருள்களை அந்த அந்த இடத்தில் வைத்தாலே பாதி வேலை பெண்களுக்கு குறைந்துவிடும்.

என்ன சொன்னாலும், சமையல் தெரியாது கிச்சன் பக்கம் போனதே இல்லை என்று புளுகும் புளுகுனிகளை நம்பாதீர்கள். இரகசியா வீட்டில எல்லா வேலையுக் செய்பவர்கள் இவர்கள் தான்.. வெளியே மட்டு நானா சமைபலா ச்சா என்று பந்தா காட்டுவார்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

நன்றி ஹேமா....
நீண்ட இடைவெளிக்குப்பின் இங்கு அடுத்த பதிவு...
என் மனைவியிடம் உங்கள் பாராட்டைக் காட்டியதும்..."ஆமா...எப்போ பார்த்தாலும் உதவறா மாதிரி...எப்பவாவதுதானே..."என்று நொடிக்கிறார்...
எனவே இனி அடிக்கடி உதவி செய்வதாய் சொல்லி உள்ளேன்..

சங்கவி... said...

ஹேமா சில நாட்களாக அலுவலக வேலை காரணமாக நான் வலைப்பக்கமே வரலை இன்று தான் வந்தேன் உங்கள் பதிவைப்பார்த்தேன்...

ஆண்களும் உதவலாம் அடுப்படியில்...

எங்க வீட்ல சமையல் வேலை அனைத்தும் நானே தான் செய்வேன். விரைவில் எனது சமையல் டிப்ஸ் பதிவே போடலாம் என இருக்கிறேன்...

பெண்கள் அடுப்படியில் ஆண்களுக்கு உதவலாமே என பதிவு போடலாம் என நினைத்தேன் அதற்குள் நீங்க....

சங்கவி said...

ஏனுங்க ஹேமா.,

அடுப்படியில் ஆண்களுக்கு பெண்கள் உதவலாமேன்னு பதிவு போட்டு இருந்தால் சரி....

இங்க சமையல் முழுவதும் நான் தான்...

உயிரோடை said...

ஹேமா பெண்க‌ளே ஆண்க‌ளுக்கு கொஞ்ச‌ம் உத‌வுங்க‌ள் என்று தான் இந்த‌ கால‌ பொண்ணுக‌ளுக்கு சொல்ல‌னும்...

சுடுதண்ணி... said...

நிச்சயம் உதவப்படும் :).

ஹேமா said...

நன்றி புதுகைத் தென்றல்...உங்கள் முதல்வருகைக்கும்கூட.படித்தேன்.காரசாரமாத்தான் நடந்திருக்கு.ஆண்கள் சொல்கிறார்கள்தான் செய்கிறோம் உதவிசெய்கிறோம்ன்னு.
அப்பிடியேதான்னு வச்சுகிட்டாலும் எப்பாச்சும்தானே.அதுவும் பெரிய கஸ்டப்பட்டு"என்னடா இதுன்னு "தலைல அடிச்சுக்கிட்டு !

***********************************

சின்ன அம்மிணி....சுருக்கமா அழகா சரியாச் சொன்னீங்க இந்த ஆண் செல்வங்களைப்பத்தி !

***********************************

ஜெயா....சரியான கோவம் இல்லாட்டி மனசில ஆதங்கம் இருந்திருக்குப் போல.கொட்டித் தீர்த்திருக்கீங்க.

சிலநேரங்களில் ஜெயா எங்களிலயும் பிழை இருக்கு.வீட்டிலிருக்கும்போது
அம்மா முதலில் பழக்கவேணும்.
ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்கிற பேதம் காட்டாமல் வீட்டில் நீயும் ஒரு ஆள் பெண்களுக்கும் அசதி களைப்பு இருக்கு என்பதைச் சொல்லி வளர்க்க வேணும்.அடுத்து திருமணமானால் பெண்களும் தங்கள் கஸ்டங்களச் சொல்லி உதவி செய்விக்கவேணும்.

நான் பார்க்க ஒரு இளம் குடும்பம் திருமணமாகி உணவு ஊட்டிவிடுவதிலிருந்து குளித்தால் உடை எடுத்துக் கொடுப்பதிலிருந்து கணவணுக்கு உதவி செய்த மனைவி இப்போ குழந்தை பிறந்தபின் அவவும் சரி கணவரும்சரி கஸ்டப்படுகின்றனர்.இது தேவையா ?

***********************************

ஜீவன்...பாருங்க நீங்க ஒரு உதாரணம்போல சரியா உண்மையை ஒத்துக்கிட்டீங்க.ஒரு வேளை நீங்கள் ஊரிலேயே இருப்பதும் ஒரு வசதி காரணமும் இருக்கலாம்.ஏனென்றால் அம்மா சாகோதரர்கள் அயலவர்கள் என்று மாற்று உதவு உங்கள் மனைவிக்குக் கிடைக்கிறதோ!அல்லது பாவம் அவவே வீட்டில் எல்லா வேலையும் என்றால் எவ்வளவு பாவம்.அதைவிட ஒரு ஆபீசுக்கு வேலைக்குப் போகலாம் !

ஹேமா said...

//குடுகுடுப்பை ...அப்ப நானெல்லாம் உதவிக்காக இன்னோரு ஆம்பிளைய கல்யாணம் பண்ணிக்கட்டுமா?///

வாங்க குடுகுடுப்பை...நீங்க சொல்லியிருக்கிறது உங்க மனசுக்கே சரியா இருக்கா ?அப்போ பொண்ணுன்னா வீட்ல வேலை செய்யன்னே இருக்கிற ஒரு மெஷினா ?சின்னச் சின்ன் வேலைகளை நீங்களே செய்துகொள்வதும் சில வீட்டு வேலைகளை நீங்களே பொறுப்பெடுத்துச் செய்தால் என்ன?வீட்டில் உங்கள் மனைவிக்கு ஒரு ஆறுதலும் சந்தோஷமும்தானே !

உழைப்புக்கும் அதிகாரத்துக்கும் மட்டும்தான் ஆண்களா ?இன்றைய இளைஞர்கள் மனதிலும் இப்படியான எண்ணங்கள் இருக்கிறதா !தெரியாது, கஸ்டமாயிருக்கு, பிடிக்கலன்னு இப்படியான காரணங்களைக் கூட மன்னிக்கலாம்.

***********************************

வாங்க தம்பி அஷோக்....பாருங்க எவ்வளவு தெனாவட்டு உங்களுக்கு. உங்க வெளி வேலைக்ளில அவங்க பங்கெடுத்துக்கிறதுமாதிரி நீங்களும் வீட்ல பங்கெடுத்துக்கிட்டா என்ன? வீடுதானே.ஹோட்டல் இல்லையே !

**********************************

முகிலினி...அவர்கள் அப்படியே பழக்கப்படுகிறார்கள்.அதையே தங்கள் வாழ்க்கை முறையாவே பயன்படுத்துகிறார்கள்.அதுதான் காரணம்.சொல்லிப் பழக்குங்கள்.சில ஆணகள் புரிந்துகொள்கிறார்கள்.
உண்மைதான் பந்தாக்காட்டுவதில் மட்டும் ஒருகுறைச்சலுமில்ல.
நானும் கண்டிருக்கேன்.

**********************************

வசந்து....ஒரு பெரிய பிரசங்கமே செய்திட்டார்.இப்படி உங்களைப்போல இருக்கிறவங்களைக் குறை சொல்லல வசந்து.ஆனா எல்லாரும் நீங்க மாதிரி இல்லையே.மேல பாருங்க வீட்ல பொண்ணுங்கதான் கண்டிப்பா வேலை செய்யணும்ன்னு சொல்றமாதிரியே சொல்லியிருக்காங்க.உங்களுக்கும் பாராட்டுக்கள்.

கலா said...

ஹேமா நாம.....கிணற்றுத் தவளை மாதிரிக்
கத்துவதுதான் மிச்சம்!! {இன்னும் சில}
ஆண்கள் சமையலறைச் சேவகியுமாய்...
பள்ளியறைப் பாவையுமாய் ...ஆட்டிவித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள்.

புரிந்துணர்வு கொண்ட கணவர்மார்களும்
இருக்கிறார்கள்தான்!! ஆனால்...மிகக் குறைவு.

இன்னொன்று ஹேமா...சில..இராட்சசிகளிடம்
மாட்டுப் பட்டு திண்டாடும் கணவர்மார்களும்
உண்டு{ எள்ளென்றால் எண்ணையாய்...}
பாவம்...பெரும்பாடு!!

வசந்த் ஜயா தளத்திலேயே...விண்ணப்பமா??
நான் நம்பிக் கழுத்தை ஆ{நீ} ட்டவே மாட்டேன்...

சத்ரியன் said...

உதவி தானே! செய்யலாம்...செய்யலாம்..!

சிநேகிதன் அக்பர் said...

ஊருக்கு போனா நானும் உதவுவேன் ஹேமா. ஆனா அவங்க விட மாட்டாங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நானும் உதவிகள் செய்வேன் . அவங்க வேணான்னு சொன்னாலும் ...

பித்தனின் வாக்கு said...

இது அந்த ஆண்களை அவர்கள் அம்மா வளர்க்கும் விதத்தில் உள்ளது. என் நண்பன் வீட்டில் அவன் சாப்பிட்ட தட்டை அவன் தங்கைகள் தான் எடுப்பார்கள். ஏன்னா அவன் ஆம்பிளைப் புள்ளையாம். நான் இதை தட்டிக் கேக்க, அவன் இரு தங்கைகளும் என் பக்கம். அவன் அம்மாவிற்க்கு என் மீது கோபம். நண்பனே டேய் குடும்பத்துக்குள் குழப்பம் பண்ணி விடாதே எனக் கேட்டதால் நான் விட்டு விட்டேன். இப்படி வளர்ப்பது அம்மாக்கள்தான். அம்மாவைப் பார்த்து பையனும்,அப்பாவைப் பார்த்து பெண்களும் வளருகின்றார்கள். இப்ப புரியுதா பெண்ணுக ஏன் சமர்த்துன்னு. அப்பா செல்லமாக்கும். நன்றி ஹேமூ.

பித்தனின் வாக்கு said...

சேட்டைக்காரன் said...
உதவுறதென்ன, நானே சமையல் பண்ணி, உட்கார வைச்சு சாப்பாடு பரிமாறவும் தயாருங்க! ஆனா, யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறாங்களே?


என்னையும் சேர்த்துக்குங்க. மீ டூ ஃபிரண்ட்.

ஹேமா said...

ஸ்ரீராம் ....அவங்க சொல்றதும் சரிதானே.எப்பாச்சும்தான் நீங்க சில பொறுப்புக்களை எடுத்துக்கிறிங்க.
எப்பவும் சமாளிச்சுப் பாக்கணும்.
அப்பத்தான் தெரியும்.

***********************************

அட...சங்கவி ஒரு நாளுக்கே இப்பிடின்னா !

சங்கவி நான் சுருக்கமாத்தானே போட்டிருக்கேன்.நீங்க உங்க எண்ணத்தில போடுங்க.இன்னும் நல்லாவே இருக்கும்.

***********************************

வாங்க உயிரோடை.உங்களை கவிதைப் பதிவில் எதிர்பார்ப்பேன்.
வருவதேயில்லை.இன்று இங்கு முதல் தடவையாக.சந்தோஷம்.

ஓ...உங்க வீட்ல மத்தப்பக்கமா ?என்ன செய்யலாம்.இப்பிடியும் விதிவிலக்கு இருக்கத்தான் இருக்கு.

***********************************

சுடுதண்ணி...உதவப்படும்ன்னு சொல்லியிருக்கிறதைப் பாத்தா...இது உதவுறமாதிரி இல்லையே !

ஹேமா said...

கலா ...என்னப்பா நீங்க.இன்னும் நிறையச் சொல்லி கோவம் வரப்பண்ணையாச்சும் சமைக்கப் பண்ணுவீங்கன்னு பாத்திட்டு இருந்தேன்.

உண்மைதான் சில பெண்களுக்கு இடம் கிடைத்தால் மடமே கட்டிக்கொள்கிறார்கள்.அதுவும் ஆண்கள்பாடு திண்டாட்டம்தான்.

கலா...தெரியுமா ஒரு சங்கதி.வச்ந்துக்கு....வெறும் பருப்புக்கறியும் ரசமும்தான் வைக்கத் தெரியும்.இதில வேற சமையலுக்குப் பட்டமாம்.பருப்புக் கறி ஊசிப்போய் அதில நூல் வரும் அதில பட்டம் கட்டுவாரோ !

***********************************

சத்ரியா....சொல்றதைப் பாத்தாலே பயமாயிருக்கு.அப்பா..வெளிலயே இருங்க.சாப்பாடு அங்கேயே வரும்ன்னு சொல்லிடலாம்.

***********************************

அக்பர் ...நல்லதொரு சாட்டு.
இப்பிடியே தப்பிச்சுடுவிங்கப்பா நீங்க எல்லாரும்.

***********************************

ஸ்டார்ஜன்...நீங ரொம்ப நல்லவர்.
அவங்க வேணம்ன்னாலும் செய்து குடுக்கிறிங்க.இதுதான் பகிர்ந்து குடும்பம் நடத்துறது.

அக்பர் உங்க சிநேகிதர்தானே.
சொல்லிக் குடுங்க ஸ்டார்ஜன்.

**********************************

சரியாச் சொல்லியிருக்கீங்க சுதாகர்.அம்மாவின் முந்தானைக்குள்ளயே படுத்து தூங்கி அதிகாரப்படுத்தி அதுக்கு அம்மாவும் சரின்னு சொல்லி ....
டொய்லட்டுக்குக்கூட தண்ணி கொண்டு போய் வைக்கிறதை நான் பாத்திருக்கேன்.
பெரி....ய ஆம்பிளைப் பிள்ளை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சமையலறையில் உதவியா? சமையலே செய்து கொடுக்க தயாருங்க. நம்ம வீட்டுக்காரி தான் என்ன? ஒங்க சமையலா? என ஓடுராவுங்க...

நட்புடன் ஜமால் said...

என் கமெண்ட் எங்கே கானோம்

நாங்களும் சமையல் செய்வோமுங்கோ ஹேமா.

அது உதவியா கடமையா - நீங்க முடிவு செஞ்சிக்கோங்கோ ..

நட்புடன் ஜமால் said...

கடந்து வந்த பதின்மம் எங்கே

எங்கே எங்கே

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP