Friday, February 26, 2010

கடந்து வந்த பதின்மத்தில்.

தோழி கண்ணகி பதின்மத்தை எழுதச் சொன்னதும் மனதில பட்டதுகள் கொஞ்சம் இதுகள் மட்டும்தான்.
கையைப் பிடியுங்கோ கண்ணகி.பதின்மத்தில் சில அலைகளை அலையவிட்டதுக்கு.போதும் அடங்கு(யாரோ திட்டுகினம் என்னை).அழ அழத்தான் என்ர நினைவுகள் எண்டு !

அப்ப முந்தி நடந்ததெல்லாம் நடக்கிறதெல்லாம் நல்லதுக்கு எண்டுதான் சந்தோஷமாய்த் திரிஞ்சம்.எதுக்கும் சும்மா சும்மா அழுதம்.விசருகள் போலச் சிரிப்பம் தேவையில்லாம.அடம் பிடிப்பம்.அதுவும்...குதிச்சு குதிச்செல்லோ அழுவம்.பாவம் நிலத்துக்கு நோகும் எண்டு ஆர் நினைச்சது.

ஜானகி அத்தை வரேக்க ஏதாச்சும் வாங்க்கிக்கொண்டு வராட்டா அண்டைக்குச் சரி.பாவம் 50 சதத்துக்கொண்டாலும் கச்சான் கடலையோடதான் வருவா.பள்ளிப் பாடமெல்லாம் முடிச்சப்பிறகு விளையாட விடாட்டித் துலைஞ்சுது.அப்பா லீவில வீட்ட வந்து நிக்கேக்க படத்துக்குக் கூட்டிக்கொண்டு போகாட்டி,கொத்து ரொட்டி போட்டுத் தராட்டி,மலாயன் கபே ல வடையும் சம்பலும் வாங்கித் தராட்டி கையைக் காலை அடிச்சுக் குழறி.என்னவெல்லாம் செய்திருப்பம்.ஆனாக் கொஞ்ச நேரம்தான்.எதுவும் மனசில நிலையாய் நிண்டதில்ல.அந்த நேரம் மட்டும்தான்.அடுத்த அடம் பிடிக்கத் தொடங்க முதல் அடம் மறந்து போகும்.நித்திரை கொண்டு எழும்பிட்டா எல்லாமே போய்டும்.கவலையெண்டு தெரியாமலே இருந்தது.மாமரக் குரங்குகளாய் பனம்பாத்தி அணில்களாய் அரிசிமூட்டை எலிகளாய்....

எப்பாச்சும் பிச்சைக்காரரைக் கண்டா இல்லாட்டி அம்மா அப்பா இல்லாதவையளைக் கண்டா மட்டும் ஒரு மாதிரி இருக்கும்.அப்பிடி எங்காலும் யாராவது எங்கயாச்சும் ஒருசிலர்தான் இருப்பினம்.எங்கட பக்கத்துவீட்டு தங்கமணி அக்காக்கு கௌரி அக்காக்கு கணேசண்ணைக்கு அப்பா அம்மா இல்ல.அவையளுக்கு அவையளே அப்பா அம்மாவா இருப்பினம்.ஆனாலும் சந்தோஷமா இருப்பினம்.எங்கட அம்மா பின்னேரங்களில போய்க் கொஞ்சநேரம் இருந்து கதைச்சிட்டு வருவா.நானும் கணேசண்ணை இல்லாட்டிப் போவன்.ம்ம்ம் ..இப்பிடித்தான் நாங்கள் எல்லாரும் ஊர்ல சந்தோஷமா இருப்பம்.எங்கட கிணறுகூட பங்குக் கிணறுதான். அங்கால தங்கமணி அக்கா குளிக்க நான் இஞ்சால குளிப்பன்.

எப்பவும் நிரந்தரமான கவலைகள் எங்களைச் சுத்தி இருக்கேல்ல.சமூகச் சகதி சிலசமயம் யோசிக்க வைக்கும்.கோயிலிக்குள் போகவிடாததுக்கு,வெளில நிப்பாட்டி கிளாஸில தேத்தண்ணி குடுத்தா,திருப்பி அடிக்கமாட்டினம் எண்டு தெரிஞ்சுகொண்டு அடிக்கிற ஆக்களைக் கண்டா அதுவும் எனக்கு பெஞ்சாதியை(மனைவி) அடிக்கிற புருஷனைக் கண்டா நல்லாக் கோவம் வரும் என்ன செய்ய.

இப்பிடி இப்பிடி சின்னச் சின்னதாத்தான் கவலை இருக்கும்.எல்லாம் நல்லாத்தான் நடந்துகொண்டிருந்தது.நடக்குது எண்டும் நம்பிக்கொண்டுதான் வாழ்க்கையின்ர பாரம் தெரியாம கிணத்துக் கட்டில இருந்து குயிலுக்கு எதிர்க்குரல் குடுத்துக்கொண்டிருந்தம்.

யாருமே கத்திக் குழறியழமாட்டினம்.அப்பிடி அழுதா ஒண்டு அங்க யாரோ செத்திட்டினம் எண்டுதான் அர்த்தம்.அதுவும் எப்பாலும்தானே எங்காலும் ஒரு செத்தவீடு நடக்கும். இல்லாட்டிக்கு நல்லாக் குடிச்சுப்போடு சித்தப்பா சித்திக்கு அடிப்பார்.அப்ப ஒருக்கா நாங்கள் குழறுவம்.

ஒருநாள் இப்பிடித்தான் என்னையும் தம்பியையும் தங்கச்சியையும் படிக்கச் சொல்லிப்போட்டு அம்மா படுத்திருக்க நாங்கள் பேப்பரில என்னவோ ஒரு விளையாட்டு.பேரும் மறந்திட்டன். மிருகங்களின்ர பேர் எழுதியிருக்கும்.அந்த விளையாட்டுக்கு கதைக்கத் தேவேல்ல. சத்தம்போடாம விளையாடலாம்.எண்டாலும் அம்மாட்ட பிடிபட்டுப்போனம்.

பிறகென்ன அவ்வளவும்தான்.அம்மா எங்கள வெளிவிறாந்தைல விட்டுப்போட்டு அவ உள்ளுக்குள்ள படுத்திட்டா.எனக்கெண்டாப் பேய்ப்பயம்.ஒருத்தரையொருத்தர் நீதான் விளயாடலாம் எண்டு சொன்னனீ சொல்லிச் சொல்லி அழ ,அதுக்கும் பெரிசா
அழக்கூடாதெண்டு பயம்.ஏனெண்டா அம்மா அடிப்பா.நிலவு வெளிச்சத்தில வேலிப் பூவரசு அசைய நான் குழற வெளிக்கிடுவன்.அம்மா "என்ன அங்க" எண்டுவா.அடக்கிப்போடுவன்.

இப்பிடி 2 மணித்தியாலம் ஒருமாதிரி அழுதழுது போயிருக்கும்.நேரம் 10 மணியாகும்போல. சித்தப்பா நல்லா தண்ணியடிச்சிட்டு வந்து சித்தியை அடிக்க ஆனந்தாவும் ஜெயாவும் குழற சித்தி வந்து எங்கட மேல்கட்டுக் கட்டாத கிணத்துக்குள்ள விழ சித்தப்பாவும் சேர்ந்து விழ மாரிமழை பெய்ஞ்சு முக்கால்கிணற்றில முட்டின தண்ணி.ஐயோ....கடவுளே அப்ப குழறி அழுதம்.

ஆனா அந்தக்கையோட நாங்கள் மூன்று பேரும் ஓடிப்போய் படுத்திட்டமெல்லோ.ஆனாலும் அடுத்தநாள் பெரி....ய கடிதம் ஒண்டு அம்மா அப்பாவுக்கு எழுதினவ.பிறகு அப்பா வந்து ஒண்டுமே கதைக்கேல்ல.

நான் ஊர்ல இருக்கிற வரைக்கும் இப்பிடி எங்கயாவது எப்பவாவதுதான் குழறிக் கேக்கும்.இன்னொருநாள் குழறி அழுதவ இந்திரா அக்கா.அங்கதான் ராசன்ர அம்மம்மா இருந்தவ.இந்திரா அக்கான்ர அம்மா.அவவுக்கு வடிவாக் கண்தெரியாது பாவம் அவ.
ஆனா இவன் ராசன் செல்லமா விளையாட்டா அவவோட எப்பவும் சொறிஞ்சபடிதான் இருப்பான்.அவ வெளிலதான் படுப்பா.கண் தெரியாம அவ பட்ட கஸ்டம் நிறைய.அப்ப அது விளங்கேல்ல.இப்ப அவ இருந்தா அவவுக்கு நானே எவ்வளவு உதவி செய்திருப்பன்.

இவன் ராசன் அவவின்ர வெத்திலை பைக்குள்ள பூவரசமிலையை வச்சிடுவான் வெத்திலையை எடுத்துப்போட்டு.அவ ஒரு உரல் வச்சிருக்கிறா.தாளம் பிசகாம இடிப்பா வெத்திலை.அவ வெத்திலையைக் கிழிச்சு எடுத்து சுண்ணாம்பு பூசி எல்லிப்போல(மிக மிகச் சிறிது) போயிலை எடுத்து இடிக்கிறதை நான் ரசிச்சிருக்கிறன்.

அப்பிடி இடிச்சிட்டுப் போடேக்க அவவுக்குத் தெரியும்.இவன் தான் பூவரசமிலையை வச்சிட்டான் எண்டு.ராசன் நிண்டு நக்கலடிக்க அவன்ர பக்கம் உரலைத் தூக்கியெறிஞ்சு "சனியன் பிடிச்சவன்...கோதாரில போறவன்...பாழ்பட்டுப் போவான்.அடியேய் இந்திரா உந்தப் பெடியைப் பார்"எண்டு கத்துவா.அவவிட்டுக் கலைப்பா.அவன் எங்க ஓடுற ஓட்டத்தில நாய்க்கும் உதைஞ்சுபோட்டு ஓடுவான்.அதுவும் சேர்ந்து குழறிக்கொண்டு ஓடும்.

அவ பிறகு சுகமில்லாம படுத்திட்டா.அப்ப அவன் ராசன் தானாவே வெத்திலை இடிச்சுத் தரட்டோ அம்மம்மா எண்டு கேட்டு இடுச்சுக் குடுப்பான்.வெளிக்குப் போக கை பிடிச்சுக் கூட்டிப் போவான்.எச்சில் துப்ப சிரட்டைக்க மண் போட்டு எடுத்துக் குடுப்பான்.அவ அப்ப எல்லாம் "என்ர ராசா நீ நல்லா இருக்கோணும்.குழப்படி செய்யாம அம்மாக்கு உதவியா இருக்கோணும்"எண்டு சொல்லுவா.பிறகு கொஞ்ச நாளேல அவையளின்ர வீட்லயும் குழறிக் கேட்டது ஒருநாள்.அம்மம்மா செத்துப்போனா.

அதுக்குப் பிறகு இரவெண்டாலே பயம்.பேய் எண்டா இரவில மட்டும்தானோ எண்டு எனக்குள்ள இப்பவும் கேள்வி.அதுவும் செத்தவீடு நடந்தபிறகுதானோ!அம்மம்மா செத்தே இருக்க வேண்டாம் போல இருக்கு எண்டான் ராசன்.நானும் அழுதிட்டன்.அம்மம்மாவுக்கு செலவோ அந்தியேட்டியோ எண்டு எல்லாம் படைச்சினம்.ராசன் தான் வெத்திலை இடிச்சு வச்சவன்.நானும் வெத்திலைக்கு சுண்ணாம்பு பூசிக் குடுத்தனான்.எண்டாலும் அந்தச் செத்தவீட்டு மணம் இன்னும் போகாம இருக்கெண்டு பயம் பயமா வரும்.

அதுக்குப் பிறகு நான் இருக்கேக்க யாரும் பெரிசாக் குழறேல்ல.செத்தவீடும் நடக்கேல்ல. அம்மா சொல்றா எல்லா வீடுகளிலயும் இப்போ செத்தவீடாம்.ஆனா ஆரும் குழறி அழமாட்டினமாம்.ஏனெண்டா எப்பவும் எல்லா ஆக்களும் சாகினமாம்.அதனால பேய்ப் பயமும் இல்லையாம்.(தொடர விருப்பமில்லை)

நான் இன்னும் பதின்ம ஞாபகங்களை கிளறக் கேக்கிறது கலா,ஸ்ரீராம்,
தமிழுதயம்,அரங்கப்பெருமாள்.
ஆறுதலா எழுதுங்கோ.நான் ஊருக்குப் போய் வந்து பாக்கிறன்.கலா என்ர மெயிலுக்கு அனுப்புங்கோ.நான் பதிவில போடுறன் விருப்பமெண்டா.சரியோ !

இது என் யாழ்ப்பாண வழக்கு மொழியில எழுதியிருக்கேன்.பின்னூட்டங்கள் வராமலிருக்கிறதைப் பார்த்தா என்ன சொல்லியிருக்கேன்னு புரியலயாக்கும்.
நண்பர்களே...புரியாட்டி சொல்லிடுங்க !

ஹேமா(சுவிஸ்)

43 comments:

தமிழ் அமுதன் said...

ஒரு அழகிய நடை யை
ரசித்து படிக்கும்போதே நினைத்தேன் கடைசியில்
ஒரு சோகத்தை வைக்க போகிறீர்கள் என்று ...!

தமிழ் உதயம் said...

இயற்கை இயற்கை தான். மானுடன் எப்போதும் வீணன் தான்.

தமிழ் உதயம் said...

என்ன வென்று சொல்வது. எங்களுக்கெல்லாம் பதின்ம வயது குறும்புகளால் நிரம்பி வழிகின்ற போது, உங்களால் அதிலும் ஒரு வலியை தான் பகிர்ந்து கொள்ள முடிந்துள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹேமா..என்ன சொல்றதுன்னு தெரியலே..இப்போதைக்கு பிரசண்ட் போட்டுக்கறேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாழ்த்துகள் ஹேமா.

க.பாலாசி said...

உங்கட மொழியிலே எழுதுனதால சிலஇடங்கள்ல சிலவார்த்தைகள் மட்டும் புரியலன்னாலும் அதில் பொதிந்திருக்கும் வலியை உணரமுடிகிறது. எனக்கும் எங்க தெருவில எங்காவது சாவு நடந்திருந்தால் தூக்கமே வராது... அவ்வளவு பயம்...

thamizhparavai said...

வெகு சரளமா இருக்கு ஹேமா.... ரசித்தேன்... நினைவுகளையும்,,, யாழ்(இசை)த் தமிழையும்,,,,

- இரவீ - said...

படத்த பாத்து பதிவு சிரிப்பா இருக்குமென்று தொடர்ந்தேன்,
அழகு தமிழ் என்றாலும் வலி(மை)யான நினைவுகள்.
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

ஹேமா said...

சரி...சரி முடியிற இடத்திலதானே என்னோட மனநிலையைச் சொல்லி எங்க கஸ்டத்தையும் பதிவாக்கியிருக்கேன்.இதைப் 10 வருஷத்துக்கு அப்புறம் படிக்கிறவங்களுக்கும் எங்க வாழ்க்கை புரியணுமில்லையா.அதுக்காக. !

அதுக்கு முன்னுக்கு எவ்ளோ சுவாரஸ்யமாச் சொல்லியிருக்கேன்.
அதை ரசிக்கலாம்.அதுக்கு பின்னூட்டம் தரலாமே !

பா.ராஜாராம் said...

ரொம்ப அருமையாய் எழுதி இருக்க ஹேமா.மனசில் உள்ளதை பகிர நமக்கு வசதியானது பேசும் மொழிதான்.இயற்கையாக,யதார்த்தமாக வந்திருக்கு.

கவிதையை விட,பத்தி எழுத்தில் பரிமளிக்கிறாய் ஹேமா.

சிறுகதை எழுத தொடங்கு.

ரொம்ப பிடிச்சிருக்குடா ஹேமா.இந்த பகிரல்.நேரில் பார்த்த நிறைவு.

- இரவீ - said...

உங்க பதின்ம புகைப்படம் மிக அருமை.

- இரவீ - said...

அச்சோ... சின்ன திருத்தம் ... உங்க பதின்ம பதிவின் புகைப்படம் மிக அருமை.

- இரவீ - said...

//கையைக் காலை அடிச்சுக் குழறி.என்னவெல்லாம் செய்திருப்பம்.ஆனாக் கொஞ்ச நேரம்தான்.எதுவும் மனசில நிலையாய் நிண்டதில்ல.அந்த நேரம் மட்டும்தான்.அடுத்த அடம் பிடிக்கத் தொடங்க முதல் அடம் மறந்து போகும்.நித்திரை கொண்டு எழும்பிட்டா எல்லாமே போய்டும்.கவலையெண்டு தெரியாமலே இருந்தது//

இந்த விடுமுறையிலும், வீடு சென்று, நித்திரை கொண்டு எழும்பி, கவலையெண்டு தெரியாம, அடம் மறந்து, மாமரக் குரங்குகளாய் பனம்பாத்தி அணில்களாய் அரிசிமூட்டை எலிகளாய்... சுத்திவாங்கோ.

- இரவீ - said...

//குயிலுக்கு எதிர்க்குரல் குடுத்துக்கொண்டிருந்தம்.//
இது அந்த குயிலுக்கு தெரியுமா??

- இரவீ - said...

//அப்ப அவன் ராசன் தானாவே வெத்திலை இடிச்சுத் தரட்டோ அம்மம்மா எண்டு கேட்டு இடுச்சுக் குடுப்பான்.வெளிக்குப் போக கை பிடிச்சுக் கூட்டிப் போவான்.எச்சில் துப்ப சிரட்டைக்க மண் போட்டு எடுத்துக் குடுப்பான்.//

ராசன் மாதிரி சமத்தா இருக்கோனும்...

- இரவீ - said...

//இரவெண்டாலே பயம்.பேய் எண்டா இரவில மட்டும்தானோ எண்டு எனக்குள்ள இப்பவும் கேள்வி//

எனக்கும் இரவெண்டாலே பயம்.பேய் எண்டா இரவி மட்டும்தானோ எண்டு எனக்குள்ள இப்பவும் கேள்வி???

- இரவீ - said...

//என்ன சொல்லியிருக்கேன்னு புரியலயாக்கும்.
நண்பர்களே...புரியாட்டி சொல்லிடுங்க !//

1. கச்சான் கடலை
2. சம்பல்
3. பனம்பாத்தி
4. கோதாரில போறவன்.
5. சிரட்டை
6. அந்தியேட்டியோ

இதுக்கு டமில் சப்-டைடில் போடுங்க...

சிநேகிதன் அக்பர் said...

பதின்ம கால நினைவலைகள் சோகமாக இருப்பது வருத்தமாக இருக்கிறது ஹேமா.

வருங்காலம் வசந்தமாக அமையட்டும்.

நசரேயன் said...

உள்ளேன்

Anonymous said...

நேரில் பேசற மாதிரி இருக்கு ஹேமா. அதுதான் நிஜம்னாலும் கடைசில இப்படி சோகமா முடிச்சிட்டீங்களே.

ஸ்ரீராம். said...

அப்பா எண்டு சொன்னதும் அந்த அழகான கையெழுத்து கண்ணில் வருகிறது...பனம்பாத்தி அணில், அரிசிப் பானை எலி... அட...!
//அவையளுக்கு அவையளே அப்பா அம்மாவா இருப்பினம்.ஆனாலும் சந்தோஷமா இருப்பினம்..//
அட..அட..

// தாளம் பிசகாம இடிப்பா வெத்திலை//

அழகான மொழி நடையில் அற்புதமான நினைவலைகள் ஹேமா. நேரில் கேட்டது போல ஒரு உணர்வு.

ஆடுமாடு said...

உங்க ஊரு வழக்கு நல்லாத்தானிருக்கு.
உங்கள் பதின்மம் மாதிரிதான் எனக்கும்.
ஊர் ஞாபகம் வந்திடுச்சு.


வாழ்த்துகள்.

கண்ணகி said...

ஹேமா.... என்ன சொல்வதென்று தெரியவில்லை...மனசுக்குக் கஸ்டமாய் இருக்கு...குயிலுக்கு எதிர்க்குரல்,பசங்களின் குறும்புகள் எல்லாம் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வுகள்...ஆனால் அதற்கப்புறம் ....உங்கள் துயர்கள் உலக்றிந்தது..இதயெல்லாம் தாண்டி வந்திருக்கிறீர்கள்..இதுவும் ஒருநாள் கடந்துபோகும்..துணிவுடன் இருங்கள். காலம் ஒருநாள் மாறும்..
.

Ashok D said...

எனக்கு உங்க லாங்வேஜ் புரிபட மறுக்குது. சில வட்டார மொழிகளுடைய எழுத்துக்களில் உட்புக என்னால் முடிவதில்லை. இதனால் பல எழுத்தாளர்களை ஒதுக்கியிருக்கிறேன்.

இது ஒருவகையான எனது சோம்பலாய் கூட இருக்கலாம் ஹேமா :)

அத்திரி said...

உள்ளேன் HEMA

Jerry Eshananda said...

ஹேமா,இந்த பதிவை அப்படியே ஆடியோவில் பேச்சு நடையாய் பேசி போட்டிருக்கலாமே,[யாழ் தமிழ் கேட்டு வருடங்கள் ஆயிற்று.]

ஹேமா said...

நன்றி ஜீவன்...ரொம்பக் காலத்துக்கு அப்புறம் பாக்கிறேன் உங்களை இந்தப் பக்கம்.சுகம்தானே !எங்கள் வாழ்வில் சோகத்துக்கே நிறைந்த இடம்.
என்றாலும் பாருங்கள் நாங்களும் சந்தோஷமாய் இருந்திருக்கிறோம்.

***********************************

தமிழ் ...வாங்க சில பதிவுகள் எங்கள் எதிர்காலத்திற்கும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.அதற்கு
இதுவும் ஒரு வழி.

***********************************

நன்றியும் சந்தோஷமும் T.V.ராதா ஐயா.எங்க கஸ்டங்கள் பழக்கப்பட்ட ஒண்ணுதானே !

**********************************

பாலாஜி....புரியலயா.
அட ..ச்ச இவ்ளோ நாள் என்னோட பேச்சுக் கேட்டுக்கிடிருக்கீங்க.இன்னுமா புரியல.
யாழ்/தமிழ்ன்னு ஒரு வகுப்பு நடத்தணும்போல இருக்கே !

வலிக்கு முன்னம் நாங்களும் சந்தோஷமா இருந்ததையும் சொல்லியிருக்கேனே.சாவைத் தாண்டிய பிறவிகள் நாங்கள்.
இப்போ சாவெல்லாம் எங்களைக் கண்டு பயப்பிடுது பாலாஜி !

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா...வாங்கோ வாங்கோ.வரணும்.கன காலமா வாறதேயில்லை.அட..போங்கண்ணா.சரியான கோவம் எனக்கு உங்களில.

உங்களுக்கு விளங்கிட்டுதுபோல.ரசிச்சுச் சொல்லியிருக்கீங்க.சந்தோஷம்.

***********************************

ரவி....வாங்கோ வாங்கோ.
உஙக்ளுக்கும் எங்கட தமிழ் பிடிக்கும்.அதான் சரியா எல்லாம் விளங்கியிருக்கு.

கன காலத்துக்குப் பிறகு கொஞ்சம் கும்மியும் அடிபட்டிருக்கு.கொஞ்சம் இடைஞ்சல் இல்லாம உங்களை மட்டும் தனியா அடிங்கன்னு விட்டிருக்காங்கபோல.

என்ன...என்னோட பதின்மத்துப் படமா !உங்க சொந்தகாரங்கதான் பக்கதில இருக்காங்க.பாருங்க !

ம்ம்ம்...என் கூட அந்தக் குயிலும் சண்டை போட்டுகிட்டு கூவுமே.
எவ்ளொ சந்தோஷம்.

இரவி உங்களுக்கு எப்பிடி இரவில !இருள் கலைக்கும் இரவியே நீங்கதானே.!அப்புறம் பேய் என்ன நான் என்ன !ஆனா அந்தக் கேள்வி மட்டும் எப்பவும் இருக்கு.பேய் எண்டா இரவில மட்டும்தானோ ?

1. கச்சான் கடலை - வேர்க்கடலை

2. சம்பல் - தேங்காய் சம்பல் சட்னி போல கொஞ்சம் இறுக்கமா இருக்கும்.
ஊர்ல அம்மில அரச்சு எடுப்போம்.

3. பனம்பாத்தி - பனம் கொட்டைகளை கிழங்குக்காக ஒரு மேடைபோல மண்ணால் அமைத்து அதற்குள் புதைச்சு வைக்கிறது.

4. கோதாரில போறவன் - நாசமாப் போறவன் மாதிரி ஒரு திட்டுற வார்த்தை.கோதாட்டுன்னா வருத்தம் தாறவன்.அதில இருந்து வந்திருக்கலாமோ !

5. சிரட்டை - தேங்காய் துருவின பிறகு ம்ம்ம்...கொட்டாங்குச்சியா !

6. அந்தியேட்டி - ஒருவர் செத்து 30 ம் நாள் சேயும் கிரியை.

நான் கலா வருவாங்கன்னு பாத்தேன்.என்னைவிட அழகா இன்னும் விளக்கம் தந்திருப்பாங்க.
அவங்களுக்கும் புரியாமப் போச்சா யாழ் தமிழ் !என்னாச்சு கலா ?

ஹேமா said...

நன்றி பா.ரா அண்ணா.உப்புமடச் சந்திப் பக்கம் வந்து கதைக்கிறதில நிறையச் சந்தோஷம்.உண்மை அண்ணா பேசும் மொழியில் இயல்பாயும் மனம் விட்டும் கதைக்க முடியுது.ஆனா ஆருக்கும் விளங்குதில்லையே !அதான் கஸ்டம்.
பாருங்க.யாரும் வந்து சரியா ஒண்ணும் சொல்லல.

***********************************

வாங்க அக்பர்...என்னதான் துக்கமான வாழ்க்கைக்குள்ளும் சந்தோஷமாத்தான் இருக்கோம்.
ஏன்னா இதுதான்ன்னு ஆகிப்போச்சே !

***********************************

என்ன நசர்...இப்போ கொஞ்ச நாளா உள்ளேன் மட்டும் வருது.வந்து ஒழுங்கா படிக்கிறீங்களா ?
உங்களுக்கு ஒரு சோதனை வச்சுப் பாக்கணும் நான் !

***********************************

அம்மிணி என்னமோ அப்பிடி வந்திடிச்சு.சோகமா எழுதணும்ன்னு நினைக்கல.சந்தோஷத்தையும் சொல்லியிருக்கேன் தானே !

***********************************

ஸ்ரீராம்....நீங்களும் எழுதிடுங்க.இனி ஊருக்குப் போய் வந்துதான் பதிவுகள் பாக்கலாம்.உங்க எல்லாரையும் தவறவிடுறேன் ஒரு மாசத்துக்கு.

***********************************

வாங்க ஆடுமாடு.உங்கள் ஊர் வழக்கும் ஒரு தனிச்சுவைதான்.
எனக்கு அது பிடிக்கும் அது நிறைய !

***********************************

கண்ணகி...பாத்தீங்களா.இதுதான் அண்ணைக்கே யோசிச்சேன் என்னதான் எழுதன்னு.வந்தது இவ்ளோதான்.எல்லாமே கடந்து போகும்ன்னு விதி.அப்பிடியேதான் நடக்குது.நாங்களும் சந்தோஷமா ஓடிட்டுதான் இருக்கோம்.

***********************************

என்ன அஷோக்..முழுதுமே புரியலயா ?அட போங்க.இப்பத்தான் தமிழ்நாட்டில நம்மவங்க நிறையப் பேர் இருக்காங்களே.இன்னும் கதைச்சுப் பழகலியா ?சரிதான் உங்களுக்கும் பாடம் சொல்லித் தரணும் !

***********************************

அத்திரி....நீங்களுமா !நசர் சொல்லித் தந்தாரா.
இருக்கட்டும் இருக்கட்டும் !

***********************************

ஜெரி...வாங்க சந்தோஷம்.ஆடியோ பதிவெல்லாம் என்னக்கு இன்னும் தெரில.தேவைப்படல தெரிஞ்சுக்கணும்.இப்போ என்ன ஒரு நாளைக்கு நான் உங்கூட பேசிடறேன்.
யாழ்/தமிழ் கேட்டிடலாம்.சரிதானே !

பித்தனின் வாக்கு said...

நல்ல நினைவுகள், குறும்புத்தனங்கள். குதித்துக் குதித்து அழும் உங்களை நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது. இது எல்லாம் மாயமாகிப் போன சோகத்துடன் முடிகின்றது பதிவு.நல்ல நடை. யாழ் தமிழை நாங்களும் அறிந்து கொள்ள சர்ந்தர்ப்பம். நன்றி ஹேமூ.

கலா said...

ஓஓஓ.....ஹேமா நான் உப்புமடச் சந்திக்கு
வரவில்லை நேரமின்மையால்.....
இப்போதுதான் பார்த்தேன்

ஜயோ நானா?என் ஞாபகங்கள்
புதைகுழியில்..... புதைந்து விட்டன
மீண்டும் மீட்க முடியாமல்.....

அழகான,பசுமையான,மறக்கமுடியாத
உங்கள் நினைவுகளின்....நிழல்
அருமை ஹேமா.

உங்கள் பயத்தை நினைத்து,நினைத்துச்
சிரித்தேன். என்னையும்.. ஞாபகங்கள்.
பின்னோக்கிப் போய்வர உங்கள்
இடுகை இட்டது ஆணை.

எவ்வளவோ!எவ்வளவோ!! எங்கு
தேடுவது தொலைந்த நாட்களை!!!
நன்றியடி தோழி

archchana said...

//கிணத்துக் கட்டில இருந்து குயிலுக்கு எதிர்க்குரல் குடுத்துக்கொண்டிருந்தம்.//

என்ன என்னைபோல கிணத்துகட்டில இருந்துதான் எதிர்குரல் கொடுத்தீங்களா?

இறுதியில் வன்னியில் இருந்திருந்தீர்கள் என்றால் உங்கள் பதின்ம வலிகளெல்லாம் பறந்திருக்கும்

ஹேமா said...

வாங்க வாங்க சுதாகர்.நான் அடி வாங்குறது நான் அழுவுறது எல்லாம் ரசிப்பாயிருக்கு உங்களுக்கு.இருங்க இருங்க.எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் உங்களை ரசிக்க !

***********************************

கலா...சுகம்தானே.எனக்கென்றால் என்னமோ மனமோ இல்லை உடலோ தளர்வாயிருப்பதாக உணர்கிறேன்.ஏன் என்ன நடந்தது?

தோழி...எங்களைப் பொறுத்தவரை சந்தோஷம் என்பது எப்போதோ தொலைந்த ஒன்றுதான்.என்றாலும் தேடியெடுக்க முயற்சி செய்யுங்கள்.
தேடிக் கிடைக்கையில் சோகம் இன்னும் கூடுமோ என்னமோ !

எப்பவும் சோகமாயே எழுதுவதாய் குற்றங்கள் நிறையவே எனக்கு.
பாவப்படவும் அனுதாபத்துக்குமா இப்படி எழுதுகிறீர்கள் என்று நேரடியாகவே தாக்கப்பபடுகிறேன்.
நிச்சயமாய் அப்படியல்ல.இருப்பிடம் இல்லையென்றாகி அந்நிய நாட்டில் அகதிகளாய் இருக்கும் நிலை சொல்லித் தெரிவிக்க முடியவில்லை.
உணர்ந்தால் மட்டுமே முடியும்.
என்ன செய்ய.எங்கள் விதி !

***********************************

//இறுதியில் வன்னியில் இருந்திருந்தீர்கள் என்றால் உங்கள் பதின்ம வலிகளெல்லாம் பறந்திருக்கும்//

அர்ச்சனா...இந்தப் பெயர் என் வாழ்வின் ஒரு வலி.அதுவும் எங்கள் தேசம் தந்த வலிதான்.ஞாபகப் படுத்தினீர்கள்.நன்றி.வருகைக்கும்.

புதிதாய் காண்கிறேன் உங்களை.
மேலே நீங்கள் சொன்ன வசனம் உண்மையா கிண்டலா என எனக்கு உணரமுடியவில்லை.நான் இறுதிப்போர் நேரம் வன்னியில் இருக்கவில்லை !

***********************************

ஜெயா....நீங்கள் சுகம்தானே.
உங்களைக் காணவில்லை குழந்தைநிலாவிலும்கூட.
விடுமுறையில்
இருக்கிறீர்களா தோழி ?

பித்தனின் வாக்கு said...

அடிவாங்குவது அழுவது குறித்து சிரிக்க வில்லை. குதித்து குதித்து எப்படி அழுதுருப்பீர்கள் என்றுதான் நினைத்துச் சிரித்தேன். கைகளால் அடிக்கும் குச்சியைக் தடுத்துக் கொண்டு குதிக்கும் காட்சியைச் சொன்னேன். அம்மாதானே அடித்தார்கள். நல்லதுக்குத்தானே இதில் வருத்தப்பட என்ன இருக்கு, குறும்பு பண்ணினால் அடிப்பார்கள். நன்றி ஹேமா

அரங்கப்பெருமாள் said...

உண்மைதான். யாழ்ப்பாண நடை கொஞ்சம் சிரமத்தைத் தருகிறது. ஆனால் விளங்காமல் இல்லை.

தெனாலியில் கமல் சார் பேசின வசனம் மாதிரிப் படித்தேன்.

என் அனுபவம்... விரைவில்.

archchana said...

// மேலே நீங்கள் சொன்ன வசனம் உண்மையா கிண்டலா என எனக்கு உணரமுடியவில்லை.நான் இறுதிப்போர் நேரம் வன்னியில் இருக்கவில்லை !//

எதை எதை எல்லாமே இழந்து இறுதியில் எஞ்சி நிற்பவள். நகராப் பொழுதுகளை நகர்த்துவதற்காக பதிவுகளில் உலவுகிறேன். இதில் உண்மையை தவிர வேறில்லை.

ப்ரியமுடன் வசந்த் said...

//archchana said...
// மேலே நீங்கள் சொன்ன வசனம் உண்மையா கிண்டலா என எனக்கு உணரமுடியவில்லை.நான் இறுதிப்போர் நேரம் வன்னியில் இருக்கவில்லை !//

எதை எதை எல்லாமே இழந்து இறுதியில் எஞ்சி நிற்பவள். நகராப் பொழுதுகளை நகர்த்துவதற்காக பதிவுகளில் உலவுகிறேன். இதில் உண்மையை தவிர வேறில்லை.//

அர்ச்சனா இவளும் அப்படியே இழக்ககூடாத வாழ்க்கை கூட இழந்து ஒரு அநாதை போல் வெளிநாட்டில் வசித்து வருகிறாள் ம்ம் போர் பற்றி இவளுக்கு நாம் கூற வேண்டியதில்லை அத்தனை வலிகளையும் அணு அணுவாய் அனுபவித்தவள் சவத்தொடு சவமாய் உறங்கிப்பழகியவள்...அன்புக்கு மட்டும் கட்டுப்பட்ட ஒரு ஜீவன்...உனக்கு எப்படி தெரியும் என்று கேட்ப்பீர்களானால் புனர்ஜென்ம வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்று கூறிய எனக்கு கிடைத்த பதில்கள் மேற்கண்டவை...

ஜெயா said...

மிக்க நன்றி ஹேமா...தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாகப் படிக்கிறேன்.விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.....

பனித்துளி சங்கர் said...

மிகவும் நேர்த்தியான எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி !

Unknown said...

எங்கோ கிடைத்த கண்ணியில் உங்கள் இடுகையை படிக்க நேர்ந்தது. உண்மையான எழுத்துக்கு என்றும் அழிவில்லை.

//எண்டாலும் அந்தச் செத்தவீட்டு மணம் இன்னும் போகாம இருக்கெண்டு பயம் பயமா வரும்.\\

எல்லோரும் கண்முன்னே சாகும் போது எப்படி பேய் பயம் வரும்?

//ஏனெண்டா எப்பவும் எல்லா ஆக்களும் சாகினமாம்\\

அன்புடன்
சந்துரு

ஸ்ரீராம். said...

வருக ஹேமா,

திரும்ப திரும்ப வந்து பார்த்துப் போவோம்...உங்கள் விடுமுறை அனுபவங்களை கேட்க இஷ்டம். சுகமாய் அனுபவித்தீர்கல்தானே... நீங்கள் சொன்னபடி பதின்மவயது எழுதியதன் சுட்டி தந்துள்ளேன்..படித்துக் கருத்துச் சொல்லவும்..!!

http://engalblog.blogspot.com/2010/03/blog-post_8613.html

கவிதன் said...

வணக்கம் ஹேமா! வெகு அழகாக பதின்ம வயது நிகழ்வுகளை பதிந்திருக்கிறீர்கள்! வீட்டுக்கு வெளியில் பேய் பயத்தில் அழுதது புன்னகையை வரவழைக்கிறது ..... இது போன்ற அனுபவங்கள் இங்கும் நிறைய உண்டு.... இறுதியில் சொன்னது மனதை சற்று கூர் நகங்களால் கிள்ளிப்போகிறது..... வழியற்ற நிலை பழகிப்போய்விட்டதே என்ன செய்ய...
என்றும் நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும் தோழி!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

யாழ்ப்பாணத் தமிழை , பேச்சு மொழியில் படிக்க இனிமையாக இருக்கிறது ஹேமா.
படத்தில் உங்களைக் கண்டு பிடித்து விட்டேனே!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP