Saturday, May 22, 2010

சுவாசிப்பதற்கான சுதந்திரம்.

இரவு மெல்லிய மழை.இப்பொழுது விண்ணில் கரிய மேகங்களின் அசைவு.மழை பற்றிய அழகிய திரைப்படம்போல இடையிடையே துளித்துளியாய்....

பூத்திருந்த அப்பிள் மரத்தின் கீழ் நின்று சுவாசித்தேன்.அப்பிள் மரத்தை மட்டுமல்ல. சூழவுள்ள புற்களையும் ஈரம் வழியும் அதன் மினுமினுப்பையும் தான்.காற்றில் பரவியுள்ள இனிய சுகந்தத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.முடிந்தவரை ஆழமாய் உள்ளிழுத்தேன்.என்னுள் முழுவதும் அதன் நறுமணம்.கண்களைத் திறந்தும் மூடியும் சுவாசித்தேன்.என்னுள் மிகுந்த பரவசம் அளித்தவை எதுவெனக் கூறமுடியவில்லை.

இதுதான் நான் நம்புகிறேன்.இந்தத் தனித்த மிகவும் பெறுமதியான சுதந்திரத்தைத்தான். அச்சிறை எம்மிடமிருந்து எடுத்து விடுகிறது இப்பொழுது என்னால் முடிவதைப் போன்ற இயல்பான சுவாசிப்பதற்கான சுதந்திரத்தை.

இப்பூமியின் மீதான உணவு,மது,ஒரு பெண்ணின் முத்தம் இவைகளைவிட இக்காற்றில் எழுந்துள்ள ஈரமான செழுமையான மலர்களின் மணம் இனிமையானது.

மிருகக்காட்சிச் சாலையின் கூடுகள் போன்ற ஐந்து மாடிக் கட்டிடத்தின் ஓரத்திலுள்ள ஒரு சிறிய பூந்தோட்டம்தான் இது என்பது பொருட்டல்ல.

மோட்டோர் சைக்கிளின் படபடப்பு,வானொலியின் இரைச்சல்,ஒலிபெருக்கியின் தொணதொணப்பு எதுவும் கேட்கவில்லை.அதே வேளை ஒரு மெல்லிய மழைக்குப் பின் அப்பிள் மரத்தின் கீழ் புதிய காற்றைச் சுவாசித்தல்.......
இன்னும் சில காலம் நாங்கள் உயிர் வாழலாம் !

மூலம் - அலெக்சாண்டர் சொல்செனிஸ்ரன் (ரஷ்யா)
ஹேமா (சுவிஸ்)

30 comments:

Priya said...

//காற்றில் பரவியுள்ள இனிய சுகந்தத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.முடிந்தவரை ஆழமாய் உள்ளிழுத்தேன்.என்னுள் முழுவதும் அதன் நறுமணம்.கண்களைத் திறந்தும் மூடியும் சுவாசித்தேன்.என்னுள் மிகுந்த பரவசம் அளித்தவை எதுவெனக் கூறமுடியவில்லை.//....

அழகா ரசித்து சுவாசித்து இருக்கிங்க ஹேமா. உண்மையிலேயே அது பரவசம்தான்.

- இரவீ - said...

//மெல்லிய மழை// இது ஒன்னு போதும் - அத்தனையும் மறக்க...
நல்லா இருக்கு ஹேமா.

- இரவீ - said...

//இப்பூமியின் மீதான உணவு,மது,ஒரு பெண்ணின் முத்தம் இவைகளைவிட இக்காற்றில் எழுந்துள்ள ஈரமான செழுமையான மலர்களின் மணம் இனிமையானது//

லெக்சாண்டர் சொல்செனிஸ்ரன் அறுபது வயசுக்கு மேல இத எழுதி இருப்பாரு... விடுங்க...எல்லா பய புள்ளயும் இப்படி தான்...

ஸ்ரீராம். said...

நல்ல உணர்வுள்ள வரிகள்...சு(வாசித்தேன்). ரசித்தேன்.

Subankan said...

நல்லா இருக்குக்கா :)

Paleo God said...

மொத்தமே இவ்வளவுதானா?

அருமை!

க.பாலாசி said...

ரசித்தல் ஒரு கலை... சுவாசத்தைப்பொருத்து மாறிக்கொள்ளும் மணம்கூட...வாழ்வும்...

நல்ல இடுகை..

ஜெய்லானி said...

சீக்கிரமாவே முடிச்சிட்டீங்க !!
இருந்தாலும் சுதந்திர சுவாசம் :-))

அன்புடன் அருணா said...

ரசித்ததை எழுத முடிவதும் கூட ஒரு கலைதான் ஹேமா!

ராமலக்ஷ்மி said...

அருமையான வாசிப்பின்பம். நன்றி ஹேமா.

ராமலக்ஷ்மி said...

//மோட்டோர் சைக்கிளின் படபடப்பு,வானொலியின் இரைச்சல்,ஒலிபெருக்கியின் தொணதொணப்பு எதுவும் கேட்கவில்லை.//

அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.ஆம், ஒன்றில் மனம் முழுமையாக லயிக்கையில் இவை கேட்காது.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

///இப்பூமியின் மீதான உணவு,மது,ஒரு பெண்ணின் முத்தம் இவைகளைவிட இக்காற்றில் எழுந்துள்ள ஈரமான செழுமையான மலர்களின் மணம் இனிமையானது.////
நல்லா இருக்கு

Jerry Eshananda said...

சுவாசிப்பதற்கு மட்டுமான சுதந்திரம் வாய்த்திருக்கிறது என் ஈழ சொந்தங்களுக்கு.

தமிழ் அமுதன் said...

//இப்பூமியின் மீதான உணவு,மது,ஒரு பெண்ணின் முத்தம் இவைகளைவிட இக்காற்றில் எழுந்துள்ள ஈரமான செழுமையான மலர்களின் மணம் இனிமையானது.//


அருமை ...!

இந்த பதிவை உங்கள் நடை தங்க தமிழில் வழங்கி இருந்தால்
மிகுந்த சுவையாய் இருந்திருக்கும் ..!

ஜோதிஜி said...

ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் தற்போது உள்ள யாழ்பாணம் ஈழம் குறித்து " பார்வையில் " எழுதுகிறார்கள். நீங்கள் கேட்டது புரிந்தது வைத்தாவது எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

Unknown said...

ஒருமுறை மலேசியாவில் செம்பனைக் காட்டில் தனியாக இருந்தபோது, நீங்கள் எழுதிய இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது..
நல்ல பகிர்வு .. பாராட்டுகளும்.., நன்றியும் ....

ஜெயா said...

மிருகக்காட்சிச் சாலையின் கூடுகள் போன்ற ஐந்து மாடிக் கட்டிடத்தின் ஓரத்திலுள்ள ஒரு சிறிய பூந்தோட்டம்தான் இது என்பது பொருட்டல்ல.ம்ம் .. கண்டிப்பாக.. காற்றில் பரவியுள்ள இனிய சுகந்தத்தை சுவாசிக்க சுதந்திரம் கொடுத்த தோட்டம் அல்லவா.....

மோட்டோர் சைக்கிளின் படபடப்பு,வானொலியின் இரைச்சல் ஒலிபெருக்கியின் தொணதொணப்பு எதுவும் கேட்கவில்லை. அதேவேளை ஒரு மெல்லிய மழைக்குப் பின் அப்பிள் மரத்தின் கீழ் புதிய காற்றைச் சுவாசித்தல்.....
இன்னும் சில காலம் நாங்கள் உயிர் வாழலாம்!

அழகான சுதந்திர சுவாசம்.அனுபவித்து ரசித்து எழுதி இருக்கிறிங்க.அருமை ஹேமா.

ஜெயா said...

சுதந்திரமாக இறக்கைகளை விரித்து பறக்கும் பருந்து..அழகான படம்.

தமிழ் உதயம் said...

எல்லோரும் விரும்புவது சுதந்திரத்தை தான். அது ஏனோ , சிலருக்கு கிடைத்து, பலருக்கு கிடைக்காமல்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லதொரு உணர்வின் படைப்பு.. மெல்லிய உணர்வுகள் தாலாட்டுது ஹேமா., நல்லாருக்கு.

ராஜ நடராஜன் said...

கவிதைக்கு சற்றும் குறைவில்லாத உரைநடை!

சத்ரியன் said...

//இப்பூமியின் மீதான உணவு,மது,ஒரு பெண்ணின் முத்தம் இவைகளைவிட இக்காற்றில் எழுந்துள்ள ஈரமான செழுமையான மலர்களின் மணம் இனிமையானது..//

இந்த வரிகளை வாசிக்கும்போதே...எழுத்தில் ஆணின் வாசனை உணர்ந்தேன்.

அழகான அவசியமானச் சிறுகதை.

Ashok D said...

//கவிதைக்கு சற்றும் குறைவில்லாத உரைநடை! //

ரிப்பிட்டுங்க :)

கலா said...

இதுதான் நான் நம்புகிறேன்.இந்தத்
தனித்த மிகவும் பெறுமதியான
சுதந்திரத்தைத்தான். \\\\\\\

பலபல கட்டுப்பாட்டுக்குள் இருந்து
வெளிப்பட்ட ஒரு உணர்வு பேசுகிறது
சுதந்திர வெளிச்சத்தை.

இயந்திரமயமான வாழ்கையில் கொஞ்சம்
இருந்து விலகி...
இயற்கையுடன்,இயற்கையாய் வாழப்
பழகிக்கொள் என்கிறது உங்கள் எழுத்து

Nathanjagk said...

பிரமாதமாயிருக்கு! கவித்துவமான வரிகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!

இதுபோன்ற வாசிப்புதான் நம்மை மேன்மையாக்கும்.
தொடர்ந்து வாசிக்க மேன்மையுற வாழ்த்துக்கள்!

சுந்தர்ஜி said...

நல்ல மொழிபெயர்ப்பு.சுதந்திரத்தின் அருமை அது பறிக்கப்பட்டவர்களால்தான் பரிபூரணமாய் உணரப்படுகிறது என்பதற்கு சொல்செனிட்சின் நல்ல உதாரணம். உழைப்புக்கு ஒரு வாழ்த்து ஹேமா.

ஹேமா said...

நன்றி ப்ரியா உங்கள் வாசிப்பிற்கும்.


இரவீ...ரசிகன்.இயற்கையின் ரசிகன்.இங்கே சொல்லியிருக்கிறது இயற்கையின் சுவாசத்தை பயமில்லாம நிம்மதியா சுவாசிக்கிறதைப் பற்றித்தான்.


ஸ்ரீராம்...உங்கள் அன்புக்கு
என்றும் என் நன்றி.


டேய்....சுபாங்கன் பெடியா இப்ப அக்கான்ர பக்கம் அடிக்கடி தலை தெரியுதே எப்பிடி !
சுகம்தானே தம்பி.


ஷங்கர்....என்னால் முடிந்ததும் தேவையானதும் இவ்வளவும்தான்.


நன்றி பாலாஜி தொடர்ந்த அன்புக்கு.


ஜெய்...நன்றி உங்கள் வருகைக்கும்.


அருணா...எங்கே பூங்கொத்து !


லஷ்மி அக்கா உங்கள் வருகையும் கருத்தும் உற்சாகம் தருகிறது.
இன்னும் சுதந்திரம்கொள்கிறேன்.


நண்டு....நிறைந்த நன்றி உங்களுக்கும்.


ஜெரி...நல்ல பகிடிதான் சொல்றியள்.
சுவாசிக்கவும் சுதந்திரமில்லை ஈழத்தில்.சொன்னா மட்டும்தன் சுவாசிக்கலாம்.விடு எண்டா விட்டிடவேணும் சுவாசத்தை !


ஜீவன்....உங்கள் ஆர்வம்,என் வழக்குத் தமிழில் உள்ள விருப்பம் தெரிகிறது.என்றாலும் சிலருக்குப் புரிவதில்லை.அதோடு அலுத்துக் கொள்வார்கள்.அடுத்த பதிவு பார்க்கலாம் யாழ் தமிழில் !

ஹேமா said...

ஜோதிஜி....நீங்கள் சொலவது புரிகிறது.சரியான பதிவோடு தருகிறேன்.


செந்தில்...தனிமையாக இருந்து இயற்கையைச் சுவாசிப்பது ஒரு இன்பம்தான்.அந்த சுதந்திரத்தைத் தேடியே இந்தச் சுவாசம்.


ஜெயா...அன்புத் தோழி இரவல் சுவாசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு ?


தமிழ்.....கிடைக்காத ஒன்றைப்பறித்தான் ஆவல் அதிகம்.அதனால்தான் நான் அதைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கிறேன்.


ஸ்டார்ஜன்....பாரதி சொன்ன சுதந்திரம் தேடுகிறோம்.கண்டீர்களா எங்காச்சும் !


நடா...உங்கள் வருகை சந்தோஷம்.
அதைவிட ரசனைக்கு நன்றி.


பா.ரா.அண்ணா நன்றி.


நன்றி சத்ரியன்.அன்புக்கும் அதற்குள் அடங்கும் சுதந்திரமும் அற்புதம்தான்.


நன்றி அஷோக்.ளொள்ளு பண்ணாம இருந்தாலே ஒரு சுதந்திரம்தான் !


கலா...இதை வாசிப்பவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்களோ அப்படித்தான் அதன் அர்த்தம்.
என்னைப் பொறுத்தவரை இந்த பனிப்பிரதேசத்தில் இந்த அப்பிள் மரத்திற்குக் கீழ் கிடைக்கும் சுதந்திரம் ஏன் நாம் பிறந்த எங்கள் நாட்டில் இல்லை என்பதே !அதைச் சுவாசிக்கக் காத்துக் கிடக்கிறோம் எனபதுபோல !


நன்றி ஜே...உங்கள் உற்சாகம்
தரும் அன்பு வார்த்தைக்கு !

சுந்தர்ஜி...இல்லை என்பதாலோ என்னவோ மனம் அதையே தேடிக்கொண்டிருக்கிறது.
நன்றி சுந்தர்ஜி.

Madumitha said...

உள்ளங்கையளவு தோட்டமெனினும்
இதயத்திற்கு இதமளிப்பது
உண்மைதான் ஹேமா.
நல்ல இடுகை.

Muruganandan M.K. said...

பெறுமதியான சுதந்திரத்தின் சுவாசம் அற்புதமான அனுபவம். அருமையான பகிர்வு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP