
சூடு பிடித்திருக்கும் உலகக் கால் பந்தாட்டச் சமயத்தில் ஒரு தேடல்ப் பதிவு.
ஒலிம்பிக்குடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டதுதான் "சியஸ்" சிற்பச் சிலை.ஏன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதே சியஸ் தேவனின் திருவிழாவுக்காகத்தான் என்கிறார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய ஒலிம்பியா நகரிலேயேதான் இச்சிலையும் இருந்தது.தமிழர்களுக்கென்று தனியான நாட்காட்டி தேவையென்பதற்காகத் திருவள்ளுவர் ஆண்டு உண்டாக்கப்பட்டதுபோல கிரேக்கர்களுக்கும் ஒரு நாட்காட்டி உண்டாம்.இது ஒலிம்பிக் உருவானதாய்க் கருதப்படும் கி.மு 776 ல்தான் தொடங்குகிறதாம்.
அப்போதிருந்தே ஒலிம்பியா நகரில் சியஸ் தேவன் அதாவது தேவர்களுக்கெல்லாம் அரசன்(நம் ஊர் இதிகாசப்படி தேவேந்திரன்போல)வழிபாடு இருந்திருக்கிறது.சியஸ் தேவனின் கதை இந்திய இதிகாசத்தின் கிருஷ்ணன் கதையுடன் ஒத்திருக்கிறது என்பது இன்னொரு ஆச்சர்யம்.
இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் கிருஷ்ண அவதாரம் மனித உருவாக கம்சனை அழித்து அவனது கொடுமையிலிருந்து மக்களைக் காப்பாற்றினான் என்கிறது.இந்தக் கதையும் அப்படித்தான்.ஆனால் சியஸ் ன் வில்லன் அவன் தந்தையேதான்.தனது வழித் தோன்றலே தனக்கு அழிவு என்பதை முன்னமே தெரிந்துகொண்ட சியஸ் ன் தந்தை அடுத்தடுத்த சிசுக்களை விழுங்கி விடுவாராம்.இவரிடமிருந்து தனது குழந்தைகள் எதையும் காக்க இயலாத தாய் கிருஷ்ணனின் தாய் தேவகியைப் போலவே குழந்தை சியஸை இடம் மாற்றிவிடுகிறாள்.
இதனால் தந்தை அறியாமல் வெளியில் வளரும் பின்னால் மாவீரனாகி ஒரு கட்டத்தில் தந்தையுடன் மல்லுக்கு நின்று ஓங்கித் தந்தையின் வயிற்றில் உதைப்பதாகக் கதை சொல்கிறது.அப்போது அதுவரை தந்தை விழுங்கியிருந்த சியஸுக்கு மூத்தவர்கள் அனைவரும் வெளியேறி சியஸை வாழ்த்துகின்றனராம்.தந்தை மரணமடைகிறார்.தங்களுக்குச் சாபவிமோசனம் தந்த சியஸை அனைவரும் தங்கள் அரசனாக ஏற்றுக்கொள்ள சியஸ் தேவர்களுக்கெல்லாம் அரசனாக தேவேந்திரன் உருவாகிறான்.நம் தேவேந்திரன் போலவே சியஸுக்கு நிறைய மனைவிகள் குழந்தைகள் எனப் போகிறது அந்தக் கிரேக்கக் கதை.மொத்தத்தில் கிரேக்க சரித்திரத்தில் ஒரு கிருஷ்ணன் போன்றது சியஸ் வரலாறு.
சியஸ் தேவனின் சிலை இப்படித்தான் என்று சொல்ல அதைக் கண்டவர்கள் யாருமில்லை என்றாலும் அக்காலத்து நாணயங்களில் பொறிக்கப்பட்ட உருவத்தை வைத்தே சியஸ் தேவன் சிலை ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன் தொடர்புள்ளது என்பது பின்நாளில் அதாவது கி.பி 1829 ல் பிரெஞ்சுத் தேசத்தினர் தேவன் வாழ்ந்த இடத்தைத் தோண்டியிருக்கிறார்கள்.அப்போது கிடைத்த பழம்பொருட்களை பாரிஸ் நகரத்து பொருட்காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்.
1950 ல் இன்னொருமுறை அகழ்வாராய்ச்சி செய்தபோது தேவன் சிலையை உருவாக்க கோயிலிக்கு அருகில் ஃபிடியாஸ் உருவாக்கியிருந்த கொல்லர் கூடம் இனம் காணப்பட்டுள்ளது.ஆனால் அதன்மீது கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் இருந்திருக்கிறதாம்.
கிட்டத்தட்ட 22 அடி அகலமும் 40 அடி உயரமும் கொண்டதாம் இந்தச் சியஸ் சிலை.மரத்தாலான அடிப்படை ஃபிரேம்களை உருவாக்கி அதன்மீது உலோகத் தகடுகள் கொண்டு இந்தச் சிலையை அமைத்திருக்கிறார் ஃபிடியாஸ்.உலகப் புகழ் பெற்ற வண்ண ஓவியமான "மைகேல் ஆஞ்சலோ"வின் படங்களை மாதிரியாகக் கொண்டு அதன் உருவால் சிலை வடிக்கவேண்டும் என்பதுதான் ஃபிடியாஸுக்கு இடப்பட்ட கட்டளை எனத் தெரிகிறது.

அந்த வடிவில் அப்போதைய நாகரீகத்தின்படி தாடியையும் சேர்த்துக்கொண்டு சியஸ் தேவனைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார்.ஃபிடியாஸ் உலோகத் தகடுகளால் உருவம் கொடுத்தாலும் தங்கத்தாலும் தந்தத்தாலும் இழைத்து இறுதி வடிவம் உருவாகியுள்ளது.தேவர்களுக்கெல்லாம் அரசன் எனபதால் கம்பீரமான சிம்மாசனம் ஒன்றை உருவாக்கி அதன்மீது அமர்ந்திருப்பதுபோல சிலை உருவானது.சிலையின் வலது கையில் கிரேக்க வெற்றித் தேவதையான "நைக்"கின் வெற்றிச் சின்னம் இருந்துள்ளது.
வழிபாட்டுத் தேவனாக நீண்ட காலம் இருந்தாலும் கிறிஸ்தவ மதம் உருவாகி அது உலகம் முழுதும் பரவியபோது சியஸ் தேவனுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.கி.பி 255 ல் ரோம் நாட்டு கிறிஸ்தவ அரசனான முதலாம் தியோடஸஸ் சியஸ் வழிபாடு தனது மதம் பரவத் தடையாக இருப்பதாக எண்ணி ஒலிப்பிக் விளையாட்டுக்கும் சேர்த்தே தடை விதித்தான்.இதனால் தியோடஸ் அரசனை எதிர்க்க முடியாத சியஸ் வழிபாட்டு மக்கள் தங்கள் தேவனைக் காக்க முயன்றனர்.இதனால் அப்போது கான்ஸ்டான்டி நோபுள் என்ற நகரத்திற்கு தற்போதைய துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சியஸ்தேவன் சிலையை இடம் பெயர்த்தனர்.
20 அடி அகலமும் 3 அடி உயரமும் கொண்ட அடித்தளத்துடன் எல்லை தாண்டிய சியஸ் தேவன் அங்கிருந்து தனது "தேவ ஆட்சி"யைத் தொடர்ந்தாலும் அது நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை.கி.பி 462 ல் இந்தச் சிலை தீக்குள் இரையாகி எரிந்துள்ளது.தந்தத்தால் இழைக்கப்பட்டதாலோ என்னவோ அதிகமாக உருகி தகடாய் ஓடி.....சியஸ் தேவன் உரு மாறிப்போனான்.
பின்நாளில் லிபியாவின் சைரினில் சியஸ்தேவன் சிலை போன்ற மாதிரி உருவகங்கள் சின்ன அளவில் செய்யப்பட்டன.என்றாலும் பிரமாண்டத்திற்காகப் பெயர் பெற்ற பெரும் சிலைதான் உலக அதிசயமாகப் போற்றப்பட்டு வருகிறது.
25 comments:
puthiyath thavagal hema. thanks for sharing
தெரியாத சில தகவல்களை தெரிந்துக்கொண்டேன், நன்றி ஹேமா.
சியஸ் கதை இப்பத்தான் தெரிஞ்சிக்கறேன் ஹேமா
சியஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இப்போது அறிந்து கொண்டேன்.
தெரியாத பல செய்திகள்.
நல்ல பகிர்வு தோழி.
ஹ்ம்ம்...நல்ல தொகுப்பு....இந்த கடவுள் பத்தி தெரிஞ்சிகிட்டோம்.....
அங்க ஏதோ காதலுக்குனு ஒரு கடவுள் உண்டாமே..????
அத பத்தி கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் ஹேமா...!
:-) :-)
உப்புமடச் சந்தியில் உலக விடயங்களின் அலசல் இடம் பெறுவதும் அருமை..
தந்தையைக் கொன்ற தனயனின் வரலாற்று ஆய்வும், மகாபாரத ஒப்பீடும் கலக்கல் சகோதரி!
இப் பதிவினூடாகத் தான் சியஸ் தேவன் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன். நன்றிகள் ஹேமா!
interesting
வரலாற்று தகவல்கள் அடங்கிய பதிவு..!
பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது..!
சூடு பிடித்திருக்கும் உலகக் கால் பந்தாட்டச் சமயத்தில் உலக அதிசயமான சியஸ் தேவனும் கிருஸ்ணனும் பற்றி ஒரு தேடல் பதிவு. தெரியாத நிறைய விடயஙகளைத் தெரிந்து கொண்டோம் நன்றி ஹேமா....
சியஸ் கடவுள் குறித்து அதிகம் தெரியாது. இப்போ ஒரளவுக்கு அறிய முடிந்தது.
அட நல்ல பகிர்வு.. வரலாற்றையும் ஒரு கை பாக்க போறீங்கனு சொல்லுங்க :)
மாவீரனை மறைக்க முடியாதென்பதுக்கு சரியான சான்று.
புதிய தகவல் - பகிர்தலுக்கு நன்றி.
அது சரி :
சியஸ் ஆல தான் சியார்ஸ் வந்ததா ஹேமா ???
இவரு சரக்கு அடிக்கும் போது சொல்லுற சியஸ் கண்டு பிடிச்சவரா ?
பெரிய ஆராய்சியா இல்ல இருக்கு ஹேமா..!! தெரியாத விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி
Puthiya thagavalgal. Nandri Hema.
தலையங்கமும் தொகுப்பும் அருமை ஹேமா.
good comparision
சுவாரஸ்யமான தகவல்கள். இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
இது எனக்கு புதிய தகவல்.
நன்றி ஹேமா.
உலக இலக்கியங்கள் அனைத்துக்கும்
அடிநாதமாய் ஒரு பொதுவான
விஷயம் ஒடிக்கொண்டிருப்பது
இது மாதிரியான விஷயங்களினால்
நிரூபணமாகிறது.
நல்ல பகிர்வு ஹேமா
நன்றி
நன்றி ஹேமா...
தெரியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன்...\
இதிகாசம்,புராணம் என்றாலே புரட்டுகள்தானே..
நம் இஷ்டத்துக்கு அளந்துவிட வேண்டியதுதான்...
எனக்கும் இந்தப் பதிவின் விஷயம் புதிதுதான்.அதிசயித்தேதான் அறிந்துகொண்டேன்.எனவே....
கார்த்திக்
ஆனந்த்
ப்ரியா
கலாநேசன்
சின்ன அம்மிணி
தமிழ்
லெமூரியன்
கமல்
விருட்சம்
ஜீவன் அமுதன்
ஜெயா
பிரசன்னா
இரவீ...நசர்...பாருங்க கும்மியடிக்கிற ரெண்டு பேருக்கும் புத்தி ஒரே மாதிரித்தான் இருக்கு.
ஒரே கேள்வியை ரெண்டு பேரும் கேட்டிருக்கீங்க!
ஜெய்
கார்த்திக் சிதம்பரம்
மாதேவி
சுதா(பித்தன்)
ஸ்ரீராம்
மது
கலா
தமிழ்ப்பறவை
ஊக்கம் தரும் எல்லாருக்கும்
நன்றி நன்றி நன்றி.
நல்ல பகிர்வு நன்றி ஹேமா
Post a Comment