Friday, September 10, 2010

கனவும் நாங்களும்.

கனவு காணாத மனிதனே இருக்க முடியாது. அது ஒரு தன்னியல்பான நிகழ்வு. மிக அவசியமான நிகழ்வும் கூட.சொல்லப் போனால்,கனவுகள் பல பிரச்னைகளுக்கான தீர்வு, சங்கடங்களை நீக்கும் ஒரு திறவுகோல்.ஆனால் நம்மில் பலர் கனவுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை.சிலரோ கனவுகளுக்கான அர்த்தங்களைத் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்தக் கனவு என்பதுதான் என்ன? அது எப்படி உருவாகிறது? அதன் பொருளை எப்படி உணர்வது?அது தேவைதானா என்பது குறித்ததே இக்கட்டுரை.

நம் மனமானது இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று நனவு மனம் என்று அழைக்கப்படும் வெளிமனம்(Conscious Mind).இன்னொன்று நனவிலி மனம் என்று அழைக்கப்படும் ஆழ்மனம்(Sub-Conscious mind or Un-conscious Mind).நாம் உறங்கும் பொழுது நனவு மனம் ஓய்வெடுக்கிறது.ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது.நனவு மனத்தின் நடவடிக்கைகள் பொதுவாக சொற்களாக,வாக்கியங்களாக வெளிப்படுத்தப் படுகிறது.அதையே சிந்தனை அல்லது எண்ணங்கள் என்கிறோம்.ஆழ்மனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறியீடுகளாகவே வெளிப்படுத்தப் படுகின்றன.இவையே கனவுகள் எனப்படுகின்றன.நனவிலி மனத்தில் தோன்றும் இத்தகைய கனவுகளை நனவு மனத்தின்மூலம் ஆராய நினைப்பது கொஞ்சம் கடினம்.ஏனெனில் இரண்டும் வெவ்வேறு வகையானவை. இது தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ச் செய்யுளை வேறொருமொழியில் மொழிபெயர்க்க முயல்வது போன்றது.

நனவிலி மனமானது ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்பை (Pattern) எதிர்பார்க்கிறது. ஒரு பொருளை தொடர்புடைய மற்றொரு பொருள் மூலம் உணர்த்த முற்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதானால் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது.முடியவும் முடியாது.எடுத்துக்காட்டாக நெருப்பு ஒருவரது கோபத்தையும், சிறை போன்ற இடத்தில் மாட்டிக்கொள்வது,மீளமுடியாத ஏதோ ஒரு சிக்கலில் நம் மனம் மாட்டிக்கொண்டு தவிப்பதையும் உணர்த்தலாம்.

ஏதோ ஒரு மனக்குழப்பத்துடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள்.பல சமயம் நீங்கள் விழித்தெழுகையில் அக்குழப்பம் தீர்ந்துபோய் விட்டது போல் உணரக்கூடும்.ஆழ்மனம் உங்கள் உறக்கத்தின் பொழுது கனவுகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டி விட்டது.சொல்லப் போனால் ஆழ்மனம் மிகுந்த சக்தியை உடையது.இது குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.நீங்கள் பார்த்தவை,படித்தவை,கேட்டவை,உங்கள் மேல்மனத்தில் நினைத்தவை இவை அனைத்தும் ஆழ்மனத்தில் சேமிக்கப் படுகின்றன.உங்கள் நனவு மனம் சோர்ந்து உறங்குகையில் ஆழ்மனம் இந்தச் செய்திகளைத் தொகுத்துப் பார்த்து நமது சிக்கலுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறது.

முதலிலேயே சொன்னபடி ஆழ்மனம் இவற்றைப் பல குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்துகிறது.ஆழ்மனத்தின் இந்நிகழ்வினையே நாம் கனவு என்கிறோம்.இது குறித்து சுவையான கதை ஒன்றுண்டு.இன்றைய தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவரான விஞ்ஞானி "சிங்கர் மெரிட்" தம் தையல் இயந்திரத்தில் நூலை ஊசியில் எப்படிக் கோர்த்தால் சரியாக இருக்கும்,இயந்திரம் தடையின்றி இயங்க இயலும் என்பது குறித்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டவாறே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாராம்.தூக்கத்தில் அவரை செவ்விந்தியர்கள் சூழ்ந்துகொண்டு நுனியில் துளையுள்ள ஈட்டி கொண்டு குத்த வருவதைப் போல் அவருக்குக் கனவு வந்ததாம்.அவருடைய குழப்பத்திற்கு விடை கிடைத்துவிட்டது.இன்று நாம் பயன்படுத்தும் தையல் இயந்திரங்களில் ஊசியின் முனையில் உள்ள துளையில் நூல் கோர்க்கப் படுவது நாம் அறிந்ததே அல்லவா !

நனவிலி மனமே கனவின் தாய்வீடு ஆகும்.இங்குதான் நமது அடிப்படையான எண்ணங்கள் வலுவடைகின்றன.இங்குதான் நமது உணர்ச்சிகள்,கருத்துகள்,அறிவு அனைத்தும் உருப்பெறுகின்றன.மேல் மனத்தில் தோன்றும் எண்ணம் எதுவாக இருப்பினும் அது முதலில் நனவிலி மனத்தின் வாயிலாக கனவு மூலம் அறிவுறுத்தப் பட்டதாகவே இருக்கும்.ஆனால் நாம் ஒவ்வொன்றையும் பிரித்தறிய இயலாததால் அனைத்தையும் மேல்மனத்தின் சிந்தனைகள்,செயல்பாடுகள் என்றே கருதுகிறோம்.

சிலர் தங்களுக்குக் கனவுகளே வருவதில்லை என்று கூறுவர்.இது உண்மையில்லை.அனைவரும் கனவு காண்பதுண்டு.சிலர் அதை விழித்தபின்னும் நினைவு வைத்திருப்பர்.சிலருக்கு விழிப்பு வருகையில் கனவு கண்டதே மறந்துவிடும்.இதற்கு போதைப்பொருட்கள் உட்கொள்தல்,மது அருந்துதல்,அளவுக்கு அதிக வேலைப்பளு,மன உளைச்சல் இவை காரணமாக இருக்கக் கூடும்.சிலருக்கோ, பிறப்பிலேயே ஏற்படும் ஜீன் கோளாறு காரணமாக தம் கனவுகள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.அவ்வளவுதானே தவிர கனவே வராமல் இருக்கும் சாத்தியமே கிடையாது.ஏனெனில் இது மூளையின் ஒரு செயல்பாடு.

தூக்கத்தில் நான்கு நிலைகள் உண்டு.ஒவ்வொரு நிலையும் சுழற்சி முறையில் வரும். இந்த ஒவ்வொரு நிலையும் ஒன்று முதல் ஒன்றரை நேரம் இருக்கும்.அதில் REM (Rapid Eye Movement) என்ற நிலையில் கனவுகள் தோன்றுகின்றன.தூக்கத்தின் பொழுது ஒரு சராசரி மனிதனுக்கு மூன்று முதல் ஐந்து கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.முழுமையான எட்டு மணி நேரத்தூக்கம் ஒருவருக்கு இருக்குமானால் அதில் சராசரியாக இரண்டு மணி நேரம் கனவுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் எல்லாக் கனவுகளும் விழித்த பின் நினைவுக்கு வரவேண்டும் என்று அவசியமில்லை.

கனவுகள் ஏன் தோன்றுகின்றன என்பதற்குத் திட்டவட்டமான விடை எதுவும் இதுவரை இல்லை.ஆனால் கனவுகள் மூளை புத்துணர்வு அடைய அவசியமான ஒரு நிகழ்வு என அறிஞர்கள் கருதுகின்றனர். நாம் கணிணியில் Defragmentation என்று ஒரு நிரலைப் பயன்படுத்துகிறோமல்லவா? இது சிதறிக்கிடக்கும் கோப்புகளை நமது Hard Disk Drive இல் ஒழுங்கு படுத்தி வைக்க உதவும் நிரல்.இதனால் நமது தேடும் நேரம் குறைகிறது.அதே போல் வேண்டாத கோப்புகளையும்,நிரல்களையும் நீக்கும் சில மென்பொருட்களும் உள்ளன.இச்செயலினையே நமது மூளை தூக்கத்தின் பொழுது மேற்கொள்கிறது.நனவிலி மனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்துவும்,தேவையற்றவற்றை நீக்கவும் உதவுகிறது.வெளியில் சொல்ல இயலாமல் நாம் மறைத்து மற்றும் புதைத்து வைத்திருக்கும் கோபம்,துயரம் ஆகியவற்றினை மூளை கனவுகள் மூலமாக விடுவிக்கிறது அல்லது வெளியிடுகிறது. இதனால் மனம் லேசாகின்றது.எவ்வளவு பெரிய துயரமானாலும், அதிர்ச்சியானாலும், நாம் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பிவிட உதவும் செயல்பாடு இதுவே.

நம் மனத்தில் தீராத குழப்பங்கள் விடை தெரியாத வினாக்கள் நிரம்பியிருப்பின் ஒரே கனவானது திரும்பத்திரும்ப வரக்கூடும்.உங்கள் கனவின் பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால் உங்கள் கனவில் வந்த நிகழ்வை அலசாமல் உங்கள் எண்ணங்கள்,நீங்கள் பார்த்த ஏதேனும் நிகழ்வுகள்,நீங்கள் யாருடனாவது போட்ட சண்டை முதலானவற்றை அலசிப்பாருங்கள்.உங்கள் கனவுகளுக்கான பொருள் உங்களுக்குக் கண்டிப்பாக விளங்கிவிடும்.

என்றாலும்....நல்லது நடக்கவும் நல்லவராய் வாழவும் கனவுகள் காண்போம் !

----------------------------------------------------------------
நட்புடன்...முரளி.

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

33 comments:

எல் கே said...

athigaalai kanavu palikum engiraargale ???

மேவி... said...

:)

பாதி தான் படிச்சேன் ..டைம் இல்லை ..பிறகு வருகிறேன்

இப்பொழுதெல்லாம் உங்களை பார்க்க முடிவதில்லையே ?? ஏன் ?? வேலை ஜாஸ்தியோ ???

ராஜவம்சம் said...

ம்ம் கணவுக்குள் இவ்வளவு இருக்கா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் தூங்கப்போறப்ப அய்யோ காலையில் என்ன செய்யறதோன்னு
குழம்பிட்டே படுத்திருப்பேன்.ஆனா காலை
எழூந்து பார்த்தா கனவில் ப்ளான்
போட்ட மாதிரி க்ளியரா எழுந்துப்பேன் :)

சத்ரியன் said...

ஹேமா,

பிறவியிலேயே கண் பார்வை அற்றவர்களுக்கு கனவுகள் வருமா?

Ashok D said...

//பிறவியிலேயே கண் பார்வை அற்றவர்களுக்கு கனவுகள் வருமா? //

வரும்... காட்சிகளாய் அல்ல... குரல்களாய்

ஹேமா கட்டுரை நல்லாயிருக்கு.. நீங்க எழுதியிருக்கீங்களோன்னு ஆச்சரியப்பட்டேன்... முடிக்கும்போதுதான் தெரிந்தது... முரளி என்பவர் எழுதியிருக்கிறார்.. என்று.. (சரிதானே)

எனக்கு பறக்கறா மாதிரி தான் கனவுவரும்.... அப்புறம் மிகவும் ஆபத்தான விஷயங்களில் நானே நல்லதொரு twist வச்சி தப்பிக்கறா மாதிரி கனவு வரும்... அந்த twist அந்த செகண்ட் வரை.. எனக்கு தெரியாத விஷயமாதான் இருக்கும்...

தியானம் செய்யும் வேளைகளில்... அப்புறம் காலையில் 6 மணிக்குள் விழித்துக்கொண்டால் கனவுகள் வருவதில்லை...

ஆனாலும் 8 மணிவரை கணவில் இருப்பது... மிகவும் சுகமான விஷயமும்... மத்த விஷயங்களில் காலதாமதமும் சந்திக்கிறேன்...

தமிழ் உதயம் said...

கனவு குறித்து சில நேரங்களில் நாம் நினைத்த விஷயங்கள், பதிவில் இருந்தது. தூக்கம் மனிதனின் துக்கத்தை மறக்க செய்கிறது. கொஞ்ச நேரம். கனவும் கூட

ஸ்ரீராம். said...

கண் பார்வை இல்லாதவர்கள் பற்றி சத்ரியன் கேட்டது போல...

ஊமை கனவு கண்டால்...! அபபடி ஒரு படம் பெயர் கூட உண்டு இல்லை...!

Defragmentqtion உதாரணம் நல்ல உதாரணம்.

முரளி என்பதே ஒரு ஆழ்மன பிம்பம்தானோ?!!

கவனத்தைக் கவர்ந்த கடைசி வரிகள்...

அம்பிகா said...

மனம் குழம்பியிருக்கும் போது கனவுகளும் அதே நிலையில் .
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நல்ல கனவுகள் சந்தோஷத்தை தருகின்றன. நம் மனதை கனவுகள் பிரதிபலிக்கின்றன என்பது உண்மைதான். நல்ல பகிர்வு.

vinthaimanithan said...

ஆழ்மனதில் ஒரு எண்ணத்தை ஊறப்போட்டுக்கொண்டே வந்தால் அது மெய்க்கும் என்கிறார்களே? எந்த அளவு சாத்தியம்?

அவசியமான கட்டுரை. வாழ்த்துக்கள்!

Jerry Eshananda said...

"எங்களுக்கும் ஒரு கனவு இருக்கிறது ஹேமா."

ஜெய்லானி said...

கனவு என்பதே நினைவுகளின் வடிவம்தானே...!!

(( என்ன் ஆச்சி கனவு கான ஒரு மாசம் ஆயிடுச்சி உங்களுக்கு(நடுவில ஒரு பதிவும் போடலையே))

சாந்தி மாரியப்பன் said...

//நல்லது நடக்கவும் நல்லவராய் வாழவும் கனவுகள் காண்போம் !//

ஆமாங்க... அப்துல் கலாம் ஐயாவே சொல்லியிருக்கார்.

பவள சங்கரி said...

கனவுகள் பற்றிய ஆய்வு அருமைங்க......வாழ்த்துக்கள்.

Dhana Lakshmi said...

கனவுக்கு நல்ல வெல்கம் சூப்பர்

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல ஆய்வு. பகிர்ந்ததற்கு நன்றி ஹேமா.

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்கங்க

கனவை பத்தி இவ்வளவு விஷயங்களா!

மிகவும் ரசித்து படித்தேன்

அ.முத்து பிரகாஷ் said...

தோழர் ஹேமா!
முரளி சார் யார்ன்னு ஒரு இன்ட்ரோ கொடுத்திருக்கலாம்லா ...
அவரை தனியா ஒரு வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லி ஊக்குவிங்க ...
கோர்வையா அனைத்து விடயங்களும் உள்ளடக்கி எளிமையாய் ... கலக்கல் முரளி சார் ...

Riyas said...

கனவைப்பற்றி நல்ல கட்டுரை...

இரவில் கானும் கனவு விடிந்தால் மறந்துபோய்விடுகிறதே எந்த தடயங்களும் இல்லாமல்...

'பரிவை' சே.குமார் said...

ஹேமா கட்டுரை நல்லாயிருக்கு..
நீங்க எழுதவில்லையோ?
முரளி என்று போட்டிருக்கு.

Priya said...

ஹேமா, மிக நல்ல தகவல்கள்! நானும் கூட இதை பற்றி நிறைய தேடி பிடித்து படித்து தெரிந்துக்கொண்டேன். இதை பற்றி பதிவெழுதலாம் என நினைத்திருந்தேன். காரணம் எனக்கு தினமும் ஏதாவது ஒரு கனவு வருவதும் போவதுமாக இருக்கிற‌து. இதில் நிறைய மறக்காமல் நினைவிலேயே இருக்கிறது.
ம்ம்.. அப்புறம் நான் தெரிந்துக்கொண்ட தகவல் ஒன்று; குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே கனவு காண ஆரம்பித்து விடுகிறதாம்!!!

ஆ.ஞானசேகரன் said...

ஆகா,... நல்ல ஆய்வு கட்டுரை பாராட்டுகள்..


அன்புடன்
ஆ.ஞானசேகரன்

நிலாமகள் said...

அறிவார்ந்த பதிவு... எழுந்ததும் பெரும்பாலும் மறந்துவிடும் கனவு பற்றி இத்தனை தகவல்களா...! நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் பக்கம்
வந்து போக வாய்ப்பாகியமை குறித்து மிக்க மகிழ்வு தோழி! தகவல் தந்தவர் பெயர் அறிவித்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

சிங்கக்குட்டி said...

என்ன ஹேமா திடீன்னு கனவுகள் பக்கம்?

வாழ்கையில் ஏதாவது புது வரவு இருக்கா :-)

ரிஷபன் said...

என்ன முயன்றாலும் தவிர்க்க முடியாத விஷயங்களில் கனவும் உண்டு. அருமையான கட்டுரை. என்ன ஒரு சரளமான எழுத்து.

நிலாமதி said...

எல்லோருக்கும் கனவுவரும் சிலர் மறந்து விடுவர் சிலர் அதனையே நினைத்து குழம்புவர்.எல்லாம் அவன் செயல் என்று எண்ணி இனிதே வாழ்வோம்.

பித்தனின் வாக்கு said...

hai hemu how are you?.
namma ellam kanavu kanama irukka mudiyathu. kanavukal than valkkai.

அண்ணாமலை..!! said...

நல்ல தமிழில் பதிவு!
மிக நன்றிகள்!

ஜெயந்தி said...

சில கனவுகள் இன்னும் தொடரனும்னு தோணும். சில கனவுகள் பயங்கரமா இருக்கும்.

நல்ல பதிவு.

சி.பி.செந்தில்குமார் said...

தெ இன்செப்ஷன் படம் மாதிரி கனவு பற்றிய பதிவு நல்லாருக்கு.

லெமூரியன்... said...

கனவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்..! :)
ஆழ்மனக் கனவுகள் அவ்வளவா நியபகத்திர்க்குள் வந்ததில்லை....
ஆனா நான் விழித்திருந்தாலும் மனதின் ஒரு பகுதியில் கனவினூடே இருக்கும்
பகல் கனவுன்னு சொல்லலாம்....!
:) :)
இதை பற்றி இன்னும் கூட சுவாரசியமா எழுதலாம்...
ஆனா மருத்துவ கட்டுரை போலாகிவிடும் இல்ல ஹேமா ???

ஹேமா said...

கார்த்திக்(LK)...எங்கே குழந்தைநிலாப்பக்கம் காணல.ரொம்ப பிஸியா ?கனவே அடிமன ஆழத்தின் நினைவுகள் என்றால் எப்படி அதிகாலைக் கனவு பலிக்கும் !


மேவீ...நீங்க அரைப்பதிவு வாசிச்சதே சந்தோஷம்.உங்களைத்தான் காணமுடிவதில்லை.நான் கொஞ்சம் பிஸிதான்.ஆனாலும் ஒருமாத ஒய்வு முடிந்தாகி எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறேன்.


ராஜவம்சம்...நன்றி.சில கனவுகள் காணும்போது மனசுக்குச் சந்தோஷமாய்த்தானே இருக்கு.எனக்கும் கனவு பற்றின தகவலகள் புதிதுதான்.


//முத்துலெட்சுமி... நான் தூங்கப்போறப்ப அய்யோ காலையில் என்ன செய்யறதோன்னுகுழம்பிட்டே படுத்திருப்பேன்.ஆனா காலைஎழூந்து பார்த்தா கனவில் ப்ளான் போட்ட மாதிரி க்ளியரா எழுந்துப்பேன்//

முத்துலெட்சுமி அக்கா...உங்களை அடிக்கடி என் பக்கம் காண்கிறேன்.
சந்தோஷம்.நீங்கள் சொன்னதும் பதிவில் சொல்லப்படதும் ஒன்றாகவேயிருக்கிறது.ஒருவேளை உண்மையோ !


//சத்ரியன்... பிறவியிலேயே கண் பார்வை அற்றவர்களுக்கு கனவுகள் வருமா?//

சத்ரியா...படுமொக்கையான கேள்விமாதிரி இருக்கு எனக்கு.
கண்ணுக்கும் மனசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?அதுபோல கனவுக்கும் கண் தெரியாததுக்கும் சம்பந்தமில்லன்னு நினைக்கிறேன் !


அஷோக்...அப்போ எனக்கு இப்பிடி எழுத வராதுன்னு சொல்றீங்க.சரி சரி நீங்க புத்திசாலி சொன்னா சரியாத்தான் இருக்கும்.காலேல 6 மணிக்குப் பிறகு கனவில பறக்கவும் அப்புறம் தப்பவும் நினைக்கிறீங்க.
காலேல 6 மணிக்கு அப்புறம் கனவில மிதந்தா வாழ்க்கை என்ன ஆவுறது !


ஸ்ரீராம்...கனவுக்கும் மூளைக்கும் அல்லது மனசுக்கும்தான் சம்பந்தமிருக்குமே தவிர வாய்பேசாமல்,பார்வை இல்லாமல் இருப்பதற்கும் கனவு காண்பதற்கும் சம்பந்தமில்லையென்றே நினைக்கிறேன்.


அம்பிகா...நீங்கள் சொன்னது உண்மை.சில சமயங்களில் நினைவுகளில் கிடைக்காத சந்தோஷம் கனவில் கிடைக்கிறது !


விந்தையாரே....நன்றி.கனவுக்கும் ஆழ்மன எங்கள் நினைவுகள் வாழ்வில் சிலசமயங்களில் நிறைவேறுவதற்கும் என்ன இருக்கிறது.இரண்டும் வேறில்லையா !


ஜெரி...எங்கள் கனவுகளும் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் நிறைவேறும்.
நம்பிக்கையோடு இருப்போம்.


ஜெய்....ஒருமாசம் ஆச்சி விடுமுறை எடுத்திட்டா.அதான் பதிவு போடல்.இனி வருவா உங்க சந்தேகமெல்லாம் தீர்க்க !ஏன் குழந்தைநிலாப் பக்கம் காணல ?


சாரல்...அப்துல் கலாம் ஐயா சொன்னதை நாங்களும் சொல்லிகொண்டே வாழ்வோம்.கனவு காண்போம்.நிறைவேற்றுவோம்.


நித்திலம்...கனவுக்குள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
தொடர்வோம்.


ஆர்.டி..நன்றி நண்பரே.


ராமலஷ்மி அக்கா..நன்றி
கனவின் வருகைக்கு.


வேலு...கனவு கனவுதான்.கனவா மறந்திடணும்.அவ்ளோதான்.

ஹேமா said...

நியோ..நன்றி உங்கள் அன்புக்கு.எனக்கு முரளி யார் எங்கிருக்கிறார் என்றே தெரியாது.அடிக்கடி மெயிலில் வரும் இப்படியான சங்கதிகள்.இன்னும் இருக்கிறது நல்ல நல்ல பதிவுகள்.தருவேன் அவர் பெயரில்.


ரியாஸ்...கனவுகளை மறப்பது நல்லது என்றும் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஒருவேளை நல்லதுதான்.விடுங்கள் நினைவில் வராத கனவுகளை மட்டும்.


குமார்....நன்றி வருகைக்கு.இது முரளி என்பவர் மின்னஞ்சலில் தந்ததுதான்.


ப்ரியா...நீங்கள் தந்தது புதுச்செய்தி.குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே கனவு காணத் தொடங்கிவிடுகிறதா!அப்போ இது எங்கள் இயல்புகளில் ஒன்றாகிறதோ என்னமோ !


ஞானம்...உங்கள் வருகையும் கனவு போலத்தான்.அடிக்கடி வாருங்கள்.
கனவு கலையும் !


நிலாமகள்...அன்பான வருகைக்கு நன்றி.முரளியின் இந்தப் பதிவு எனக்கும் பிடிச்சிருக்கு.ஏற்கனவே அவர் பதிவுகள் இணைத்திருக்கிறேன்.


சிங்கா....ரொம்ப குறும்பு பண்ணாதீங்க.என்ன புது வரவு?
அப்படி ஏதும் இப்போதைக்கு கனவிலயும் இல்ல.சரியா !


ரிஷபன்...உங்கள் வாழ்த்து முழுக்க முழுக்க முரளிக்குத்தான்.பார்ப்பாரா தெரியவில்லை.


நிலாமதி...கனவுகள் கண்டாலும் இறைவனின் செயலும் வேணும் என்கிறீர்கள்.சரிதான் !


பித்தா..சுதா ஒரு கனவும் வேணாம்.முதல்ல பதிவு எங்க இருந்தாலும் போடுங்க.உங்களுக்கு என்ன ஆச்சுன்னு பயமா வேற இருக்கு.கனவில கதைக்கவேணாம் !


அண்ணாமலை..நன்றி நன்றி.
தமிழின் நன்றி.


ஜெயந்தி...கனவுகள் சிலசமயங்களில் உண்மைகளையெல்லாம் உளற வைத்துவிடுகிறதே.அதுதான் ஆபத்து !


சி.பி.செந்தில்குமார்...நன்றி.நீங்கள் சொன்னது கனவுகள் பற்றிய படமா ?


லெமூரியன்...எனக்கும் கனவு வரும்.நான் அது பற்றி நினைப்பதேயில்லை.உண்மையில் சொல்லப்போனால் போனவாரம் காலை 8.30 மணியளவில் எழுப்பி ஒரு குடும்பம் பற்றி ஒருவர் தொலைபேசியில் சொன்னார்.நானும் கேட்டுவிட்டுத் திரும்பவும் தூங்கிவிட்டேன்.பிறகு 10 மணிவரை அந்தக் குடும்பம்பற்றிய அவர்களது ஓட்டம்தான் கனவில்.இது என்ன !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP