ஒரு நாள் காலைநேரம் ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது.ஒரு இளைஞன் ஒருவன் அலைகளினூடேயும் கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட அவன் அருகில் சென்றார்.அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான்."தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர்.
"ஐயா...வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது அலை உள்வாங்குகிறது.எனவே கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்துகொண்டிருக்கிறேன். இல்லையென்றால் அவைகள் செத்துவிடும்." என்றான் இளைஞன்."தம்பி! இந்தக் கடற்கரையோ பல மைல்கள் நீளமானது.கரை முழுவதும் ஏராளமான மீன்கள்
ஒதுங்கியுள்ளன.உன் முயற்சியால் ஒரு மாற்றமும் விளையப்போவதில்லை." என்றார் முதியவர்.இளைஞன் புன்னகைத்தான்.குனிந்து மற்றொரு மீனை எடுத்துக் கடலில் வீசியவாறே "மாற்றம் இந்த மீனுக்கு விளைந்துள்ளது ஐயா!" என்றான்.
நாம் செய்கின்ற சின்ன விஷயமானாலும் சம்பந்தப்பட்டவருக்கு அது பெரிதாகவும் தேவையானதாகவும் இருக்கும்.சென்ற வாரமொரு நிகழ்ச்சி பார்த்தேன் தொலைக்காட்சியில். திடீரென விபத்தில் இறந்த 15-16 வது மகனின் 11 உறுப்புக்களை அந்த நேரச் சோகத்தையும் தாண்டி தேவையானவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் அவனின் பெற்றோர்கள்.யாருக்கு இப்படி ஒரு மனம் வரும்.அந்தத் தாய் அழுதபடியே தன் மகனை அந்தப் பதினொரு பேரிலும் பார்ப்பதாய்ச் சந்தோஷப் படுகிறார்.
இதற்குள் அப்பா சொன்ன கதையையும் சேர்த்துக்கொள்கிறேன்.
ஒரு கிராமத்திற்குச் ஒரு பெரியவர் சென்றிருந்தார்.சிறுவன் ஒருவன் அவரிடம் ஒரு ரூபாய் பிச்சை போடுமாறு கேட்டான்.அவர் அவனைப்பார்த்து "நான் உனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டதற்கு சிறுவன் ஐம்பது சதத்தை என் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஐம்பது சதத்திற்குப் கொஞ்சப் பழங்கள் வாங்கிவந்து விற்பேன்" என்று சொன்னான்.அவரும் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.
வருடங்கள் கழிந்தன.மீண்டும் அந்தப் பெரியவர் அங்கு வந்திருந்தார்.அப்பொழுது ஒரு பெரியவர் வந்து அவரை வீழ்ந்து வணங்கி "ஐயா...என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார்."மன்னிக்கவும்.எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே! நீங்கள் யார்?" என்றார் பெரியவர்."நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த பொழுது ஒரு சிறுவன் தங்களிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்டான்.நீங்களும் கொடுத்தீர்கள்.அந்த ஒரு ரூபாயை முதலீடாகக் கொண்டு அவன் பழ வியாபாரம் தொடங்கி இப்பொழுது ஒரு பெரிய பணக்காரனாகி விட்டான்.அந்தச் சிறுவன் நான்தான் என்று சொன்னார் அந்தச் சிறுவனான பெரியவர்.
ஒரு ரூபாய் என்ன பெரிய பணமா எம் வாழ்வின் ஓட்டத்தில்.ஒற்றை ரூபாய் ஒருவரின் வாழ்வையே புதுப்பித்திருக்கிறது என்றால் எத்தனை சந்தோஷம்.அவன் வாழ்வையே புரட்டிப் போட்டிருக்கிறது.இதுமாதிரிச் சின்னச் சின்ன உதவிகள் செய்யும் மனநிலைகூட இல்லாமலா நாங்கள் வாழ்கிறோம்.எங்கள் தோளை நாங்களே தட்டிக்கொடுத்து எங்களை நாங்களே உற்சாகப்படுத்தும் நிகழ்வுகள் இவைகள்.
வறுமையும் கையேந்துதலும் அசிங்கம் என்று அடுத்தவர்களைப் பார்த்து பேசிக்கொள்ளும் நாம் அதைக் குறைக்கவோ தடுக்கவோ என்ன செய்கிறோம்.
நம் நாடுகளில் நாளொன்றில் தெருவில் ஒரு விநாடி நின்று பார்த்தாலே ஆயிரம் உதவிகள் செய்ய்லாம்.அதற்காக வேலையற்றவர்களா நாம் என்றில்லை.நடக்கும்போது காலில் தட்டுப்படும் குப்பையை எடுத்து அதன் இடத்தில் போடலாம்.தெருக்கடக்கும் கண் தெரியாதவருக்கு உதவலாம்.பாரம் சுமக்கும் ஒருவருக்குச் சுமையைத் தூக்கித் தலையில் வைக்க உதவி செய்யலாம்.இப்படி எத்தனயோ.அன்று இரவு தூங்கப்போகையில் அன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்தாலே நின்மதியான திருப்தியான தூக்கம் வரும்.
எனவே அடுத்தவர் வாழ்வை மாற்றி எம்மையும் மாற்றிக்கொள்வோம்.
பிறக்கும் புதிய ஆண்டில் இருள் விலகி சந்தோஷ ஒளி பிறக்க நல்லன செய்வோம்.
22 comments:
எத்தனை அருமையாக சொல்லிட்டீங்க ஹேமா..
ம் ...
ஹேமா அருமையான கருத்து
ரொம்ப எளிமையா ஆனால் வலிமையா இருக்கு..
நல்ல சிந்தனை நல்ல முயற்சி ....தொடரவேண்டும். இந்த உயர்ந்த உள்ளத்துக்கு இனிய புத்தாண்டு பிறக்க வேண்டும். நீங்களும் உங்கள் உறவுகளும மகிழ்வோடும் நலமோடும் வாழவேண்டும்
சீரிய சிந்தனை ஹேமா!
புத்தாண்டு வளமானதாய் அமைய வாழ்த்துக்கள். :)
உதவி என்பதன் முழு அர்த்தத்தை, அழகாக பகிர்ந்து கொண்டீர்கள்.
அருமையான கருத்து ஹேமா.
hema,good post
அருமையான கருத்து
புதுவருடம் சிறப்பாய் அமைய இனிய வாழ்த்துக்கள் ஹேமா.
எத்தனை அழகு நீங்கள் சொல்ல வந்ததைச் சொன்ன விதம்!
சின்னச் சின்னக் கதைகளில் பெரிய மாறுதலூட்டும் விஷயங்கள்.
நிச்சயம் இந்தப் பதிவைப் படித்த பின் இன்னொருவருக்குக் கிடைக்கப் போகும் உதவிக்காக நன்றி ஹேமா.
நல்ல கருத்து ஹேமா...
கண்டிப்பாக ...
பல நாட்கள் கழித்து மீண்டும் பதிவுலகம் பக்கம் வந்திருக்கிறேன்...
நல்லா பதிவு ஹேமா... புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
//புதிய ஆண்டில் இருள் விலகி சந்தோஷ ஒளி பிறக்க நல்லன செய்வோம்//
ம்ம்ம்
2011 டிசம்பரில் இது போன்ற அக்கறை உள்ள ஹேமாவின் பதிவை பார்வையிட வேண்டும். அப்போது ஹேமாவின் பார்வை பலதும் மாறி கனடாவாசியாக உருமாறி ரதியின் நெருங்கிய தோழியாக மாறி ..... இது போன்ற நிறைய ஆசைகள்..
உங்களுக்கு ரதிக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நிறையவே செய்வோம் ஹேமா. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பர். எனவே நானும் நான் செய்பவற்றை இங்கே குறிப்பிட வில்லை. அருமையாக இந்தப்பதிவை எங்கள் முன் வைத்திருக்கிறிர்கள். நன்றியும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
செய்யனும்...
செய்வோம் ஹேமா . அருமை
நிச்சயம் செய்வோம்.
சாரல்...நன்றி நன்றி.முதல் பின்னூடத்திற்கு !
நண்டு சார்...ம் ம் ம் !
எல்.கே...நன்றி !
வேலா...நன்றி !
நிலாமதி...அக்கா சந்தோஷம்.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
பாலா...நன்றி நன்றி !
தமிழ்...உதவி செய்வது மிக்க மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் சிலசமயம் அதனால பிரச்சனையும்கூட !
அக்பர்...வாங்க.ரொம்ப நாள் ஆச்சு.சுகம்தானே !
சி.பி...நன்றி நன்றி அன்புக்கு !
காஞ்சனா...நன்றி ஐயாவுக்கும் !
ரதி...பிறக்கும் ஒவ்வொரு வருடத்தையும் ஆவலோடுதான் எதிர்பார்க்கிறோம்.அதுவும் போய்விடுகிறது !
சுந்தர்ஜி...யாரோ ஒருவர் இந்தப் பதிவால் பயனடைந்தாலே சந்தோஷம்தானே !
ஸ்ரீராம்...நன்றி !
செந்தில்...நன்றி நன்றி தோழரே !
நிலா...அன்போடு வரவேற்கிறது உப்புமடச் சந்தி.
அடிக்கடி சந்திக்கலாம் தோழி !
நசர்...புத்தாண்டில் புது ஆளா இருக்கணும்.சொல்லிட்டேன் !
ஜோதிஜி...இப்பிடியெல்லாம் ஆசை இருக்கா உங்க மனசில.சரி சரி.இந்தப் பனிமலை தாண்டி அந்தப் பனிமலையா....ஐயோ....ஊருக்குப் போங்கன்னு சொல்லியிருந்தால் எவ்ளோ சந்தோஷமாயிருக்கும் !
யாழ்...முடிந்த உதவிகளைச் செய்வோம்.பாராட்டுத் தேவையில்லை.மனத்திருப்தி மட்டும் போதும்.எங்களை நாங்களே பாராட்டிக்கொள்வோம் தோழி !
சத்ரியா...செய்வோம் !
அங்கித வர்மா...வாங்க.நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் !
கலாநேசன்...நன்றி நண்பா.நிச்சயம் முடிந்ததைச் செய்வோம்.பிறந்ததின் சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதானே !
Post a Comment