Monday, February 07, 2011

நீங்கள் எந்த வழி ?

ல்லவனுக்கும் ல்லவனுக்கும் மூன்று வழி.

ல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இரண்டு வழி.

கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி.

இது ஒரு விடுகதைபோல இருந்தாலும் இதற்கு அர்த்தமுள்ள நாடோடிக் கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு ஒற்றையடிப்பாதையில் நல்லவனும் நல்லவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.அவன் செல்லட்டும் என்று ஒருவன் பாதையை விட்டு இடப்புறம் இறங்குகிறான்.அதே எண்ணத்துடன் மற்றவனும் பாதையை விட்டு வலப்புறம் இறங்கி விட்டுக்கொடுக்கிறான்.இங்கே மூன்று வழி தெரிகிறது.இதைத்தான் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் மூன்று வழி என்றார்கள்.

அதே ஒற்றையடிப் பாதையில் ஒரு நல்லவனும் கெட்டவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.கெட்டவனோ நான் ஏன் வழி விட்டுக் கொடுக்கவேண்டும் என்று பாதையை விட்டு இறங்காமல் நடக்கத் தொடங்க நல்லவனோ பாதையை விட்டு இறங்கி வழிவிட்டு இறங்கிப் போகிறான்.எனவே இதைத்தான் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இரண்டு வழி என்றார்கள்.

அதே ஒற்றையடிப் பாதையில் கெட்டவனும் கெட்டவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.இருவருமே விட்டுக்கொடுக்காமல் நீயா நானா என்று மோதிக்கொள்கிறார்கள்.இதைத்தான் கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி என்றார்கள்.

எனவே விட்டுக்கொடுத்தால் எல்லோருக்குமே வழி உண்டு!!!

ஹேமா(சுவிஸ்)

32 comments:

ஹாய் அரும்பாவூர் said...

என் வழி தனி வழி
இது எப்படி இருக்கு நல்ல கட்டுரை

எல் கே said...

உங்க வழி சூப்பரா இருக்கு .. நல்ல கதை ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆகா...அருமை ஹேமா..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு ஓட்டு போட்டுட்டேன்

Balaji saravana said...

:)

அமைதிச்சாரல் said...

ஆஹா.. ஜூப்பருங்க.

ஆனா, என் வழி தனீ வழின்னு போறவங்களை எந்த லிஸ்டில் சேக்கிறது :-)))))

யாதவன் said...

முழுதும் வாசித்தேன் அருமையிலும் அருமை யாதவன்

Sriakila said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..

ஸ்ரீராம். said...

நான் எப்பவுமே விட்டுக் கொடுக்கற டைப்புங்க...அப்போ நான் நல்லவன்தானே...ஏமாளின்னு சொல்ல மாட்டீங்களே...!

சுந்தர்ஜி said...

விட்டுத் தருபவர்களுக்குத்தான் வாழ்வின் புதையல் காத்திருக்கிறது.

அர்த்தமுள்ள பதிவு ஹேமா.

பிரபு எம் said...

நல்லா இருக்கே! :)
அருமையான கான்செப்ட்... எளிமையாக உணர்த்தும் எழுத்து :)

Lakshmi said...

விட்டுக்கொடுப்பவங்களுக்குக்கிடைப்பது ஏமாளிபட்டம் தாங்க.

மோகன்ஜி said...

இத்தனை எளிய கதையில் எவ்வளவு அர்த்தம்?

வழிவிட்டு வாழ்பவருக்கு வழியெங்கும் மலர்த் தூவி காத்திருப்பான் ஆண்டவன்!

பா.ராஜாராம் said...

சரிங்க நல்ல பாட்டி. :-)

மதுரை சரவணன் said...

புதுமையான விளக்கம். உங்க வழித் தனி வழித்தான் போங்க.பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

எல் கே said...

திண்ணையில் உங்கள் கவிதை வந்ததற்கும் வாழ்த்துக்கள்

சங்கவி said...

உங்க வழி சூப்பரா வழி....

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா திண்ணைக்கவிதைக்கு வாழ்த்து..

விட்டுக்கொடுத்து வாழ்வோம்.. அப்பப்ப WIT அடித்தும் வாழ்வோம்

கமெண்ட்ஸ் ல ஓவர் லேப் ஆகுது பாருங்க

சிநேகிதன் அக்பர் said...

ஒரு நல்லவனும் கேட்டவனும் சந்தித்தால் ஒதுங்கி நின்னா மட்டும் போதாது உசாராவும் இருக்கணும் இல்லைன்னா தண்ணியில புடிச்சி தள்ளி விட்டுருவான் :)

நல்ல பகிர்வு ஹேமா.

சே.குமார் said...

விட்டுக் கொடுக்க சொல்லியிருக்கீங்க... சரி ...
நல்ல கதைங்க...

அப்பாதுரை said...

சிந்திக்க வைத்த நெறி.

சத்ரியன் said...

விட்டுக் கொடுத்தா என்ன வள்ளல் பட்டமா கொடுக்க போறாங்க. அட போங்கம்மா....

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

கதை அருமை...! My wishes..

Matangi Mawley said...

அருமையான கதை. நிறைய ஜீவன்கள் படித்துப் புரிந்துக் கொள்ளவேண்டிய கதை. பொருமையின்மையினாலும், அகங்காரத்தினாலும் குலைந்து போகும் உறவுகளுக்கு இந்தக் கதை மிகவும் அவசியமானதொன்று.

நல்ல பதிவு.

ஜெயா said...

விட்டுக்கொடுப்பவர்களுக்கு கிடைப்பது ஏமாளிப் பட்டமே தான் ஹேமா----

ராஜவம்சம் said...

என் வழியில் யாராவது குறுக்கவந்தா தொலைச்சிப்புடுவேன்.

Prasanna said...

நலமா.. நல்ல குட்டிகதை :)

ஹேமா said...

ஹாய் அரும்பாவூர்...வாங்க.முதல் வருகைக்கு நன்றியும்,உங்கள் தனி வழிக்கும் வாழ்த்தும் !

எல்கே...என் வழி என்னவா இருக்கும்ன்னு நினைச்சீங்க.
திண்ணையில் உங்க கவிதைகளும் அடிக்கடி வருதே.வாழ்த்துகள் கார்த்திக் !

ராதாகிருஷ்ணன் ஐயா...நன்றி
உங்கள் தொடர் ஊக்குவிப்பு
அன்பிற்கு !

சதீஷ்குமார்...நன்றி நன்றி.
முதல் வருகைக்கும்கூட !

பாலா....என்னாச்சு.
வழியே தெரிலயா !

சாரல்...சரியா கேட்டீங்க.என்வழ்
தனி வழின்னு போறவங்க எங்காச்சும் முட்டிக்குவாங்களோ.அப்போ ரஜனி !

யாதவா...நன்றி நன்றி.
அவுஸ்திரேலிய வாழ்க்கை எப்பிடிப்போகுது.எந்த வழி !

ஸ்ரீஅகிலா...நன்றி தோழி !

ஸ்ரீராம்...விட்டுக்கொடுத்தா இளிச்சவாய்ன்னுதான் சொல்றாங்க.இதுதான் உலகம் !

சுந்தர்ஜி...ம்க்கும்....
விட்டுக்கொடுத்தா புதையலா
அட போங்க சுந்தர்ஜி !

பிரபு...வாங்க பிடிச்சிருக்கா.சந்தோஷம் !

லஷ்மிம்மா...விட்டுக்குடுத்தா ஏமாளிதானா.அனுபவத்தோட சொல்றீங்கன்னு நினைக்கிறேன் !

ஹேமா said...

மோகண்ணா...அப்போ விட்டுக்கொடுத்துத்தான்
வாழணும்ன்னு சொல்றீங்க.
கூடியளவு நான் அப்படித்தான் அண்ணா !

பாரா அண்ணா...நான் உங்களுக்குப் பாட்டியாயிட்டேனா...எப்போ !

சரவணன்...சத்தியமா
என் வழி தனி வழி இல்ல !

சங்கவி...நன்றி ரசிச்சு சூப்பர் சொன்னதுக்கு !

சிபி...உங்களை மாதிரி இருக்கணும்ன்னுதான் நினைக்கிறேன் நகைச்சுவையோட.முடில !

அக்பர்...சரியா சொன்னீங்க.
கெட்டவன் பக்கத்தில நிக்கிறப்போ உஷாராவும் நிக்கணும் !

குமார்...விட்டுக்குடுக்க நான் சொல்லல.கதையில.முயற்சி பண்ணிப் பாக்கலாம் !

அப்பாஜி...நீதிக்கதையெல்லாம்
இந்தக் காலத்துக்கு ஒத்து வரமாட்டேங்குதே !

சத்ரியா...அம்மா சொன்னா கேட்டுக்கணும் !

மாதங்கி...உண்மைதான் சில குடும்பங்களில் சச்சரவும் பிரச்சனையும் இந்த விட்டுக்கொடுப்பு இல்லாததால்தான் !

ஜெயா...நல்லா அனுபவப்பட்டு இருக்கிறீங்கபோல.அடிச்சுச் சொல்றீங்க விட்டுக்குடுத்தா ஏமாளிதான் என்று !

ராஜவம்சம்...அச்சோ...தொலைச்சுப்புடுவீங்களா.நான் உங்க வழிப்பக்கமே வரலைங்கோ !

பிரசன்னா...நான் நல்ல சுகம் நீங்களும் சுகம்தானே.எங்க பதிவுகள் போடுறிங்களா....காணோமே !

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பாதைகள் ஊடாக
வாழும் பாதைக்கான
வழி சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி

ஜோதிஜி said...

இது கூட தளத்தைப் போல எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா.. பதிவு போடலையா?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP