Monday, April 18, 2011

பெண் எழுத்து.

அதென்ன பெண் எழுத்து ஆண் எழுத்து.பிரித்து வைத்துச் சொல்லும்போதே கவனமாய் எழுது என்று கொஞ்சம் அதட்டி மிரட்டிச் சொல்வதாகவே இருக்கிறது.எழுத்து என்பதைப் பொதுவாகப் பார்த்திருந்தால் பெண் எழுத்து ஆண் எழுத்து என்கிற பிரித்துச் சொல்லவே வந்திருக்காதே.இந்தத் தலையங்கங்கத்தை ஆமோதித்து எழுத வந்தபோதே எங்கள் பலஹீனத்தை ஓரளவு ஒப்புக்கொண்டமாதிரித்தான்.

பெண் ஆண் என்று பிரித்துச் சொல்வதே பிடிக்கவில்லை.முட்டாள் தனம்.ஆனால் என்ன செய்ய...எங்காவது ஒரு சில விதிவிலக்குகள் தவிர வேத காலம் முதலாக பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.

நன்றி ஆயிஷா.தொடர் பதிவுகளில் அவ்வளவு நாட்டமில்லை என்றாலும் அன்பான அழைப்புக்கும் சொல்லவேண்டிய சில விஷயங்களுக்காகவுமே எழுத நினைக்கிறேன்.எழுதத் தந்த தலைப்பிற்கும் என் மனஆதங்கமும் ஒத்துப்போகிறதோ தெரியவில்லை.என்றாலும்......நன்றி தோழி.

பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.அதாவது ஆண் பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம்.பெண் எழுத்துக்கு தனிப் பண்பு உண்டு.பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.

ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.இதை எழுத ஆண் பெண் என்கிற பேதம் எதற்கு.நடந்ததை நடந்ததாக எழுத உணர்வே முக்கியம்.எதையாவது ஒரு நிகழ்வை எழுதும்போது அகத்தோற்றம் மட்டுமல்ல.புறத்தோற்றத்தையும் தேடுதல் அவசியம்.அங்கு ஒரே இருளாகத்தான் இருக்கும்.அந்த இருள்தான் ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்தி நிற்கிறது.

வாழ்க்கை கொடுக்கும் புதிர்களுக்குப் பதில் தேட இருக்கும் நிறைய வழிகளில் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது. இருளுக்குள் பயங்கரமும் இருக்கலாம்.பாலுணர்வும் இருக்கலாம். பயமும் சரி பாலுணர்வும்சரி பெண்ணின் எழுத்தைக் கொஞ்சம் பின்னிழுக்க வைக்கிறது.ஒரு ஆண் இரத்தமும் சதையுமாய் பிண்டமாய்க் கிடக்கும் கலந்து கதை பேசி துணிச்சலாய் எழுதக்கூடியவன்.பெண்ணாலும் முடியும் என்றாலும் ஓரளவோடு சோர்ந்துபோகிறாள். பாலுணர்வை சில அசிங்கங்களை எழுத நினைத்தாலும் எழுதிவிட்டு அதைப் பகிர்ந்துகொள்ளாமலே இருக்கிறாள்....இருக்கிறேன்.

ஆயிஷா சொன்னதுபோல ஆண்கள் எதையும் கூச்சமில்லாமல் துணிச்சலோடு எழுதும் உரிமை சுதந்திரம் எனக்கில்லை.இங்குதான் பெண் எழுத்து அடிபட்டுப்போகிறது.சின்னச் சின்னச் சொற்களைச் சேர்த்தாலே விரசமாகக் கவனிக்கப்பட்டு "ஐயோ ஏன் ஹேமா இப்படி எழுதவேணாம்" என்று அன்போடு அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்.ஆனாலும் சொல்லவேண்டியதைச் சொல்லியே ஆகவேண்டும் என்று குட்டி ரேவதி,லீலா மணிமேகலை போன்றவர்கள் சொல்லிகொண்டேதான் வருகிறார்கள்.

முதலில் ஒரு படைப்பை வைத்து எந்தப் பொதுப்படையான தீர்மானத்துக்கும் வரமுடியாது வரவும்கூடாது.கருவும் சிந்தனையும் எண்ணப் போக்குகளும் உலகப்பொதுவானவை.பெண்கள் முழுக்க முழுக்க பலவீனமானவர்கள் மட்டுமே அல்ல.எல்லா மனிதர்களுக்கும் உள்ள பலவீனங்கள்தான் இவர்களுக்கும்.ஆனால் அவற்றிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறோம்.அதற்கான பாதையைத் தேடுகிறோம் முடியும் என்கிற நம்பிக்கையோடு.

மரணம் என்பது கொடுமை.ஒரு இழப்பு.தன் வாழ்வில் ஒரு மரணத்தைத் தொடர்ந்த அடுத்த நாள் வாழ்வுக்கு ஒரு பெண் தயாராகும் போதும் துளியளவான நம்பிக்கை அரும்புவதை பார்க்க முடியும்.பெண்களின் கண்ணீர் வெறும் சோகத்தின் அடையாளமாக மட்டும் இருந்துவிட முடியாது.ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கும்.சுயம் இருக்கும்.வாழ்க்கையும் வாழும் சூழலும் சமூகமும் அந்தச் சுயத்தையும் இயல்பான அடையாளங்களை மெல்லச் சிதைக்கின்றன.அல்லது சிதையச்செய்கின்றன பயத்தால் சிலநேரங்களில் நாமே அழித்துக்கொள்கிறோம்.

வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென ஏதும் இருப்பதில்லை.உணர்ச்சி என்பதே மாறக்கூடியதுதான்.என் சிறுவயதுத் தோழி ஒரு போராளியின் தங்கை.அண்ணா அடிக்கடி காணாமல் போகிறார்.அம்மா அழுகிறா.என்று நிறையச்சொல்லுவாள். விருப்பமில்லாவிட்டாலும் அவளின் சிநேகம் தொடர்ந்தது.ஆனாலும் நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.ஏனென்றால் அந்த வீரம் பயந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

இந்தப் பயத்தில் புதைந்துள்ள சின்ன தைரியம்தான் நான்.என் எழுத்துக்கள்.ஆனாலும் இன்னும் துணிச்சல் போதாது.இதுபோல இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும்,புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும்,அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் தேவை வாழ்வின் வளர்ச்சிக்கு.எங்களுக்கு முன்னால் ஒரு சிறு கோடு போட்டுக்கொண்டு சொல்ல வேண்டியதை எழுத்தில் சொல்வோம்.முரண் இல்லாமல் சொல்வோம்.வக்கிரமில்லாமல் மென்மையாகச் சொல்வோம்.ஆண்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது.இது பாஸ்கலின் தத்துவம்.மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது.அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள்.இங்கு நான்(ம்) எழுத்தில்...!

"ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்."

46 comments:

அமைதிச்சாரல் said...

//"ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்."//

நல்லவரிகள். அருமையான இடுகை ஹேமா..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HEMA..... I AM WORKING NOW.YOU HAVE WRITTEN SO WELL.I'LL WRITE IN THAMIL LATER.....

போளூர் தயாநிதி said...

என்னைப்பொருத்த வரையில் பெண் எழுத்து என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் எனலாம் என்பேன் . இயற்கையின் படைப்பில் ஆண் , பெண் பேதம் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பேன் . இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இதை பெசபோகிறோம் ? பெண் இல்லாமல் இந்த குமுகம் வாழமுடியுமா? இருவரும் சேர்ந்து இருப்பதுதானே அழகு இதைவிடுத்து ஆண்,உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவர் என்பது அடிமத்தனமேயன்றி வேறல்ல. இப்படிப்பட்ட கருத்தாக்கங்கள் உடைத்து எறியப்படவேண்டியவைகள் இயற்கையின் படைப்பில் எல்லோரும் சமமே .

Kanchana Radhakrishnan said...

அருமையான இடுகை

ஜோதிஜி said...

உங்களுக்குள் சுய சிந்தனைகள் கூர் தீட்டப்பட்டு இது போல வைரமாய் அவ்வப்போது வெளிப்படுகின்றது. ஆனால் கவிதை என்ற சிறுவட்டத்திற்குள்ளே இருப்பது ஏனோ என்று தெரியவில்லை. ஏன் அவசரத்தில் பத்தி பிரிக்கவில்லையோ?

நிரூபன் said...

இன்றைய கால கட்டத்தில் பெண் எழுத்து சமூகத்தில் எவ்வாறு அடையாளம் காணப்படுகிறது என்பதையும், பெண் எழுத்தினை ஏன் நாம் பிரித்து நோக்க வேண்டும் என்பதையும் முன் வைத்து உங்கள் கட்டுரையினை நகர்த்தியிருக்கிறீர்கள்.

நசரேயன் said...

உங்க அறிவுரைக்கு நன்றி

நசரேயன் said...

ஜோதி அண்ணே இதயே மடக்கி மடக்கி எழுதினா கவுஜ தானே

தவறு said...

நாசுக்காய் சொல்ல ஆண்களைவிட பெண்களுக்கு திறன் அதிகம். தடைப்படும் இடங்களை தடைப்படாது சொல்ல இன்னும் கூர் தீட்டலாம் அல்லவா ஹேமா..

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆயிஷா சொன்னதுபோல ஆண்கள் எதையும் கூச்சமில்லாமல் துணிச்சலோடு எழுதும் உரிமை சுதந்திரம் எனக்கில்லை.

அப்படி சொல்ல முடியாது.. இன்னைக்கு நான் கூட ஒரு சமையல் பதிவை ரொம்ப கூச்சப்பட்டுக்கிட்டுத்தான் போட்டேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென ஏதும் இருப்பதில்லை.உணர்ச்சி என்பதே மாறக்கூடியதுதான்

குட்

சி.பி.செந்தில்குமார் said...

>தன் வாழ்வில் ஒரு மரணத்தைத் தொடர்ந்த அடுத்த நாள் வாழ்வுக்கு ஒரு பெண் தயாராகும் போதும் துளியளவான நம்பிக்கை அரும்புவதை பார்க்க முடியும்

நுணுக்கமான கவனிப்பு

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.இதை எழுத ஆண் பெண் என்கிற பேதம் எதற்கு.நடந்ததை நடந்ததாக எழுத உணர்வே முக்கியம்////////

உண்மைதாங்க...
உண்மைக்கு ஆன் பெண் என்கிற பேதமில்லை..

தமிழ் உதயம் said...

அருமையாக எழுதி இருக்கிறிர்கள் ஹேமா.

# கவிதை வீதி # சௌந்தர் said...

பெண் எழுத்துக்கள் நியாயமானதாகவும்...
உண்மையானதாகவும் இருந்தால்..

அந்த எழுத்துக்கு கவிதை வீதி என்றும் சாமரம் வீசும்...

சிந்தனை சித்தன் said...

//பாலுணர்வை சில அசிங்கங்களை எழுத நினைத்தாலும் எழுதிவிட்டு அதைப் பகிர்ந்துகொள்ளாமலே இருக்கிறாள்....இருக்கிறேன்//.

பெண்களின் எழுத்து சற்று ஆபாசமாக இருந்தாலோ அல்லது பாலுணர்வு சம்பந்தமாக இருந்தாலோ அது அதிகம் கவனிக்கப்படுகிறது - விமர்சிக்கப்படுகிறது - மேலும் பிரபலமாக்கப்படுகிறது.

லீலா மணிமேகலை, ஆண்களே தயங்கும் விஷயங்களைகூட வெளிப்படையாக எழுதிவிடுகிறார்.

சுந்தர்ஜி said...

நல்ல கட்டுரை ஹேமா.

மதியமே படித்துவிட்டேன். எழுத இப்போதுதான் வாய்க்கிறது.

உங்களோடு உடன்படுகிறேன் ஹேமா.

எழுத்தில் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது. நாம் எழுதும் விதம்தான் நம் மொழியைத் தீர்மானிக்கிறது.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தலான் எழுத்து இந்த பெண் எழுத்து.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்ள முடிகிறது. எழுத்தில் பாலின பேதம் இல்லை என்பதே என் கருத்தும். உணர்வுகள் மனிதருக்கு பொது. கடைசி வரிகள் புகழ் பெற்ற வரிகள்.

ராஜவம்சம் said...

நன்று.

அதே நேரத்தில் பெண் எழுத்திற்க்கு பெரும்பாலும் யாரும் கட்டுப்பாடு விதிப்பதில்லை பெண்கள் தாங்களாகவே கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள் அதைக்கட்டுப்பாடு என்பதை விட நளினம் என்று கொள்ளலாம்.

ராமலக்ஷ்மி said...

ஆரம்பமும் முடிவும் அழுத்தம். கருத்துக்களை அருமையாக முன் வைத்துள்ளீர்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் ஹேமா! சில சொல்லாடல்கள், உங்கள் கூர்மையான அறிவுத்திறனைக் காட்டுகின்றன! வாழ்த்துக்கள்!!

கீதா said...

பெண் எழுத்து என்று பேசப்படுவதே நடைமுறையில் பெண்களின் எழுத்துக்கான அங்கீகாரம் என்னவென்பதை அப்பட்டமாக வெளிப்படுத்திவிடுகிறதே... உணர்வுபூர்வமாகவும், நச்சென்ற கருத்துகளை முன்வைத்தும் நன்றாக எழுதியிருக்கிறீகள் ஹேமா...

Nesan said...

பெண் என்பதால் நிறைய ஜோசிக்கிறேன் என்பதில் இருந்து புரிகிறது எழுதுவதற்கு கட்டுப்பாடுகள் தேவையற்றது தோழி!

RVS said...

எழுத்தில் ஆண் பெண் பேதமில்லை... நானும் ஒப்புக்கொள்கிறேன். நல்ல கட்டுரை ஹேமா! ;-))

asiya omar said...

//இந்தப் பயத்தில் புதைந்துள்ள சின்ன தைரியம்தான் நான்.என் எழுத்துக்கள்.ஆனாலும் இன்னும் துணிச்சல் போதாது.இதுபோல இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும்,புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும்,அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் தேவை வாழ்வின் வளர்ச்சிக்கு.எங்களுக்கு முன்னால் ஒரு சிறு கோடு போட்டுக்கொண்டு சொல்ல வேன்டியதை எழுத்தில் சொல்வோம்.முரண் இல்லாமல் சொல்வோம்.வக்கிரமில்லாமல் மென்மையாகச் சொல்வோம்.ஆண்களும் ஏற்றுக்கொள்வார்கள்//

மிக நல்ல பகிர்வு.ஹேமா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா எழுதி இருக்கீங்க ஹேமா..

நேசமித்ரன் said...

அருமையான இடுகை ஹேமா

யாதவன் said...

எழுத்து என்று வந்துவிட்டால் ஆண் என்ன பெண் என்ன உண்மைகளை இடித்துரைக்க யாருக்கு துணிச்சல் இருக்கோ அவர்கள் எந்த பால் அக இருந்தாலும் எழுதலாம் அதுதான் எழுத்தாளர் என்டு பொது பெயர் வைத்திருக்கிறார்கள்

கலா said...

ஹேமா,

கற்பனைக்கும்,எண்ணங்களுக்கும்,எழுத்துக்கும்
பால்,இனம்,மொழி ஒன்றுதான்! அதை நாம்தான்
வேறுபடுத்திப் பார்க்கின்றோம்
ஒரு எழுத்தாளருக்கு இவைகளும் ஒன்றுதான்,
ஆண்,பெண் என்று பார்த்து வருவதில்லை
கருத்துகள்தான் வேறுபடுகின்றது

ஓரு பெண்தான் பலதரப்பட்ட மனிதர்களுடன்
{அம்மா,அப்பா, தன்குடும்பதார் பிள்ளைகள்,மாமனார்,
மாமியார்குடும்பத்தார்,வீட்டுக்கு வரும்
உறவினர்களிலிருந்து விருந்தினர்வரை
கூர்ந்து கவனித்துப் பணிவிடைகள்
செய்பவள் அதனால்....
படிக்காமலே பல அனுபவப் பாடங்களால்
அறிந்திருப்பார்

படித்தெழுதுவதைவிட..அனுபவப்பட்டு
எழுதும் எழுத்தில் உண்மையுடன்,,
நவரசங்களும் அதில் தெரியும்
அதனால் அதிக உணர்வுச்சுவையுடன்
படைத்திருப்பார். “பட்டு எழுதுவது சிலர்
மனங்களில் பட்டுவிடுகிறது”அப்போது
அங்கே அது கொச்சை,ஆபாசம் என
முத்திரையும் சேர்ந்துகொள்கிறது

ஒரு கணவனும் ,மனைவியும்
உறவுகொண்டால் அது தாம்பத்தியம்
ஏற்கும் சமுதாயம் மகிழ்சியுடன்...புனிதமாய்ப்
பார்க்கும்
அதே கணவனோ,அல்லது மனைவியோ
வேறோருவருடன் உறவுகொண்டால்
அது தகாதஉறவு அருவருக்கதக்க செயல்
சமுதாயம் ஏற்காது ஏளனமாய்ப் பார்க்கும்
செயல் ஒன்றுதான் கிடைக்கும் பெயர்தான்
வித்தியாசம்

ஆதலால் ஆணோ,பெண்ணோகொச்சை,ஆபாசம்
எனப் போட்டு அழகுபார்காமல் களைந்து வீசி..
அப்படித்தான் கட்டாயம் அணியயேற்பட்டாலும்..அதை
இலைமறைகாயாய் தொங்கவிடலாமேஒழிய..
பச்சையாய்த் தெரிவது சுவைப்பதற்கு அழகல்ல..
எழுத்துக்கும்.எழுத்தாளருக்கும் ஆரோக்கியமுமல்ல..
அழகுதமிழுக்கு
உணர்வளித்து புனிதம் கெடாமல்
அழகுடன்,சமுதாய ஏற்புடன் படைத்தால்
தமிழும் தலைவணங்கும்,எழுத்தாளரும்
ஆண்,பெண் என்ற பேதமின்றி
ஆளுவார் ரசிகர் மனங்களில்.....

ஓஓஓஓஓஓ....மிக அதிகமோ???
ஹேம்ஸ்,,....

சிநேகிதன் அக்பர் said...

சொல்ல வந்த கருத்துக்களை நேர்மையாக சொன்னதற்கு பாராட்டுக்கள் ஹேமா.

சொல்ல வந்த கருத்துக்களை நாசுக்காக சொல்வது ஒரு வகை. பச்சையாக சொல்வது ஒரு வகை இதை ஆண் பெண் பேதமின்றி அனைவருமே எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்.

எழுத்தின் வீச்சும் காட்டமும் அவரவர் அனுபவங்களை பொறுத்தே அமையும் போலும். இதை எவ்வாறு வகை படுத்துவது?

பெயர் குறிப்பிடாமல் யார் எழுதினாலும் அதில் ஆண் பெண் என கண்டுபிடிப்பது கடினம்தான்.

ஆனந்தி.. said...

http://blogintamil.blogspot.com/2011/04/wow-interesting-posts.html
தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..

கமலேஷ் said...

நேர் கொண்ட பார்வை சகோதரி.

ஹுஸைனம்மா said...

//பிரித்து வைத்துச் சொல்லும்போதே கவனமாய் எழுது என்று கொஞ்சம் அதட்டி மிரட்டிச் சொல்வதாகவே இருக்கிறது//

அதானே? என்றும்
அதேதான்!! என்றும் சொல்லத்தோன்றுகிறது ஹேமா.

பெண்களுக்கு இருக்கும் பக்குவம் ஆண்களிடம் கிடையாது. வராது. தெளிவாச் சொல்லிருக்கீங்க.

நிலாமகள் said...

//இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும்,புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும்,அழுகையில் விடியும் தெளிவும்//

சரியான கணிப்பு! ஆதிமுதல் ஆண்மையச் சமூகமாய் இருந்தே பழகியதால், பெண் எழுந்தால்... பெண் எழுத்தால் சில பல சலனங்கள்.சுதந்திர இந்தியாவின் எல்லைகள் போலவே அவரவருக்கான எல்லைகளை அவரவரே தீர்மானித்தல், நிலை நிறுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறதோ.... தெறிப்பான சிந்தனைகளைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி தோழி...

இராஜராஜேஸ்வரி said...

மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள்.இங்கு நான்(ம்) எழுத்தில்...!
/
உறுதியான ஆழமான கருத்துக்கள் .பாராட்டுக்கள்.

Lakshmi said...

ஆழமான கருத்துக்களை அழுத்தமாகச்சொல்லி இருக்கீங்க.

நியோ(அ.முத்து பிரகாஷ்) said...

பால் அடிப்படையில் எழுத்தை அணுகுவது தவறாக படவில்லை எனக்கு .அது அந்த குறிப்பிட்ட பாலினரின் சிந்தனா ஓட்டத்தை தெரியப் படுத்துவதாக அமையும் .ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலை லீனா எழுதியிருந்தால்... அம்மா வந்தாள் ஐ குட்டி ரேவதி எழுதியிருந்தால் ... ஆனால் ,பிரித்துப் பார்ப்பது வேறு , இவ்வாறு எழுது என வரைமுறைப்படுத்த முயல்வது என்பது வேறு ... பலதும் தொட்டு செல்கின்ற உங்கள் பார்வை பாஸ்களில் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றது நீங்கள் சொல்ல வந்ததை.

இசக்கிமுத்து said...

சிந்தனைக்குறிய கருத்துகள்!
கொஞசம் சிந்திக்க வைத்து விட்டீர்கள்!!!

அப்பாதுரை said...

சுவாரசியமான பதிவு.
'பெண் எழுத்து' என்று சிந்திக்க வைத்த உங்களுக்கும் ஆயிஷாவுக்கும் நன்றி.

பெரும்பான்மை என்ற கண்ணோட்டத்தில் நீங்கள் சொல்வது சரியென்று தோன்றுகிறது - பெண்கள் தங்கள் கருத்தை எழுத்தில் வெளிப்படுத்தும் பொழுது சற்று வேலி கட்டி எழுதுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை. சமகாலப் பெண் எழுத்து மாறுபட்டு வருகிறது என்றே நினைக்கிறேன். இணையத்திலேயே நிறைய எழுத்தாளர்கள் (உங்களையும் சேர்த்து) துணிச்சலோடு எழுதுகிறார்கள். கூச்சம் என்பது, என் கருத்தில், படிப்பவர்களின் உணர்வே தவிர படைப்பவரின் உணர்வல்ல. எண்ணத்தைச் சொல்ல ஏன் தயங்க வேண்டும்? வக்கிரத்தை வக்கிரமில்லாமல் சொல்வதனால் என்ன பயன்? உரிமையும் சுதந்திரமும் கொடுத்துக் கிடைப்பதில்லை, எடுத்துக் கொள்வது என்று நினைக்கிறேன்.

'வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென..' paragraph அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_11.html

பெண் எழுத்து போஸ்ட்

(ஹேமா.. நாட் ஃபார் பப்ளிஷ் திஸ் கமெண்ட்)

ரிஷபன் said...

ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.இதை எழுத ஆண் பெண் என்கிற பேதம் எதற்கு.நடந்ததை நடந்ததாக எழுத உணர்வே முக்கியம்.

அப்படியே ஏற்கிறேன்..

இராஜராஜேஸ்வரி said...

இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும்,புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும்,அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் தேவை வாழ்வின் வளர்ச்சிக்கு.எங்களுக்கு முன்னால் ஒரு சிறு கோடு போட்டுக்கொண்டு சொல்ல வேண்டியதை எழுத்தில் சொல்வோம்.//
லட்சுமணக் கோடு நமது பாதுகாப்பிற்குத்தானே.!!

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.ஃஃஃஃஃ

நிச்சயமாக அக்கா...

ஹேமா said...

பெண்களின் எழுத்துக்கு ஊக்கம் தந்த எல்லோருக்குமே நன்றி நன்றி நன்றி !

இராஜராஜேஸ்வரி said...

ஆண்கள் எதையும் கூச்சமில்லாமல் துணிச்சலோடு எழுதும் உரிமை சுதந்திரம் எனக்கில்லை.இங்குதான் பெண் எழுத்து அடிபட்டுப்போகிறது.//
நல்லவரிகள்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP