நான் உனக்குக் கூறும் அறிவுரை."எப்போதும் உனக்கு நீயே எஜமானனாக இரு" என்பதுதான் என்கிறார் நெப்போலியன்.நம்மையே நாம் உயர்த்திக்கொள்ளும்போது உயர்வான வார்த்தைகளும் வெளிவரும்.
பயப்படும் சொற்களோ பதைபதைக்கும் வார்த்தைகளோ வராது.உறுதியான நம்பிக்கையான் வளமான சொற்கள் வெளிப்படும்.நமுடைய எண்ணம் திடமாக இருந்தால் பேச்சும் திடமாக இருக்கும்.
ஒருதடவை ஜூலியஸ்சீசர் படகில் சென்றுகொண்டிருந்தார்.படகு புயலில் சிக்கியபோது படகோட்டி நிலை குலைந்து தடுமாறிய நேரத்தில் "பயப்படாதே நீ சீசரையும் அவருடைய நம்பிக்கையையும் சேர்த்தே கொண்டு செல்கிறாய்"என்றார்.படகோட்டிடியிடம் சீசர்.தன்னைப்பற்றி உயர்வாக எண்ணியபடியால்தான் இந்த வார்த்தையைச் சொல்ல சொல்ல முடிந்தது அந்தச் சமயத்தில் அவரால்.
அதேபோல அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ருஜாக்சன் படகில் போய்க்கொண்டிருந்தபோது படகில் விபத்துக்குண்டான் அறிகுறி ஏற்பட்டது.எல்லோரும் பயந்து அஞ்சி அரற்றினர்."ஏன் இப்படி அமைதியில்லாமல் அலை மோதுகிறீர்கள்.என்னோடு இதற்கு முன்பு நீங்கள் பிரயாணம் செய்ததில்லை போலிருக்கிறதே"என்று தன்னுடைய உறுதியை வெளிக்காட்டினார். எனவே தைரியத்திற்கு நாமே நமக்கு எஜமானர்களாக இருக்கவேண்டும்...என்னைப்போல !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளர் ஒருவரிடமிருந்து ஒரு தீப்பெட்டிக் கம்பனிக்கு கடிதம் ஒன்று வந்தது.அதில் தன்க்கு ஒருதொகையான சன்மானம் தந்தால் நெருப்புப் பெட்டியில் தடவப்பட்டிருக்கும் மருந்தின் அளவைப் பாதியாகக் குறைக்க வழி சொல்லுவதாகக் குறி்ப்பிடப்பட்டிருந்தது.லாபமடையலாம் என்கிற நோக்கில் தீப்பெட்டிக் கெம்பனி ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு அனுப்பி வைத்து மருந்தைக் குறைக்கும் முறையை எழுது அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.
1)தீ்ப்பெட்டியில் மருந்தை ஒரு பக்கத்தில் மாத்திரம் தடவுங்கள்
2)அல்லது இரண்டு பக்கத்திலும் தற்போது தடவப்படுவதில் பாதிப் பாகத்தில் மாத்திரம் தடவுங்கள்.
என்று பதில் வந்தது.கம்பெனி வழக்கும் போட்டதாம்.விஞ்ஞானிக்கேதானாம் வெற்றி.
ஒருவர் இதேபோலவே மூட்டைப்பூச்சி மருந்து பற்றிப் படித்துவிட்டு அதற்குரிய செலவை அனுப்பிவிட்டுக் காத்திருந்தபோது ஒரு பெரிய பார்சல் வந்ததாம்.அதில் இரண்டு தட்டைக்கற்கள் இருந்ததாம்.அதில் மூட்டைப்பூசியை எப்படிக் கொல்வது என்றும் சொல்லப்பட்டிருந்ததாம்."மூட்டைப்பூச்சியைப் பிடித்து அந்த இரண்டு கற்களுக்கும் நடுவில் வைத்து நசுக்க வேண்டியதுதான்.அது செத்துவிடும் நீங்களும் மூட்டைப்பூச்சித் தொல்லையில் இருந்து தப்பிக்கொள்ளலாம்"என்றும் எழுதியிருந்ததாம்...இது எப்பிடியிருக்கு !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முல்லா ஒருநாள் குதிரையில் வெளியூர் போய்க்கொண்டிருந்தார்.திடீரென்று பெருமழை.மரத்தடியில் ஒதுங்கி சட்டையை மடித்துக் கீழே வைத்து அதன் மீது உட்கார்ந்துகொண்டார்.மழை விட்டதும் சட்டையைப் போட்டுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.சற்றுத் தொலைவில் எதிரில் வந்த அவர் நண்பன் ஆச்சரியப்பட்டுப்போனான்.
என்ன முல்லா இவ்வளவு மழையில் எப்படி சட்டை நனையாமல் தப்பியது ?
எல்லாம் என் குதிரைதான்...அது வேகமாக ஓடியதே என்றார் முல்லா !
அப்படிப்பட்ட குதிரையை விலைபேசி எப்படியாவது வாங்கிவிடுவது என்று தீர்மானித்து வாங்கியும்கொண்டார் அந்த நண்பர்.
மறுநாளும் மழை வந்தது.முல்லாவின் நண்பன் குதிரையை விரட்டினான்.குதிரை என்னதான் வேகமாக ஓடினாலும் சட்டை முதல் முழுவதுமாக நனைந்தார் அவர்.
நேராக முல்லாவிடம் வந்தார் அவர்.என்ன முல்ல குதிரை என்ன வேகமாக ஓடியும் சட்டை எல்லாம் நனைந்துவிட்டதே என்றான்
அதற்கு முல்லா."உன் மண்டையில் மூளையா இல்லை களிமண்ணா என்று கேட்டு...மழை வந்தால் ஒதுங்கவேண்டும் என்கிற அறிவுகூட உனக்கில்லையா"என்று கேட்டார்....நீங்க எல்லாரும் என்னைப் பார்த்து இப்ப கேக்கிறமாதிரி !
24 comments:
முல்லா கதை சூப்பர்
நெப்போலியன் முதற்கொண்டு எல்லா நகைசுவையும் மெய்மங்களும் (தத்துவங்களும் ) எல்லாமே பரட்டுகளுக்குரியான . தொடருங்கள் . வெறுமனே படத்தை பார்த்து நம்மால் கருத்து சொல்ல இயலாது இல்லையா (உங்களின் முந்தய ஆங்கில இடுகைதான் அப்படா நமக்கு ஆங்கிலம் வராதுன்னு யாருக்கும் தெரியாது இல்ல ) என்ன தத்துவங்களின் பக்கம் காற்று வீசுகிறது .
நல்ல தகவல்கள்...
ஐயோ இந்தப் பெண்பதிவர்களுக்கு என்னாச்சு? இப்பவெல்லாம் காமெடியில வெளுத்து தள்ளுகினம்!
நான் உனக்குக் கூறும் அறிவுரை."எப்போதும் உனக்கு நீயே எஜமானனாக இரு" என்பதுதான் என்கிறார் நெப்போலியன்.நம்மையே நாம் உயர்த்திக்கொள்ளும்போது உயர்வான வார்த்தைகளும் வெளிவரும்.
இது நூறுவீதம் உண்மை! நாம் எண்ணங்களில் உயர்வாக இருக்கணும், எமக்கு தாழ்வு மனப்பான்மையே இருக்க கூடாது! ஆனால் மற்றவர்களுடன் பேசும் பொது எமது பெருமைகளை நாமே தம்பட்டம் அடிக்க கூடாதுன்னு நெனைக்கிறேன் ஹேமா!
அதற்கு முல்லா."உன் மண்டையில் மூளையா இல்லை களிமண்ணா என்று கேட்டு...மழை வந்தால் ஒதுங்கவேண்டும் என்கிற அறிவுகூட உனக்கில்லையா"என்று கேட்டார்....நீங்க எல்லாரும் என்னைப் பார்த்து இப்ப கேக்கிறமாதிரி !
ஹி ஹி ஹி புதிய காமெடி பதிவர் ஹேமா வாழ்க!!
சிரித்தோம்... சிந்தித்தோம்...
நசர்ஜி!இதுக்குத்தான் அப்பப்ப ரெண்டு பதிவு போடனுமிங்கிறது!
நகைச்சுவை காலியிடம் தெரிஞ்சு ஹேமா கூட உரைநடையும்,காமெடியும் செய்றாங்க:)
இந்த முல்லாவை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!
:))))
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
எல்லாம் அருமை
சிந்திக்கக்கூடிய விசயங்களை மிகலாவகமாக எழுதியுள்ளீர்கள்.
எப்போதும் உனக்கு நீயே எஜமானனாக இரு" //
"சிரிக்கவும் சிந்திக்கவும்."
நல்ல பகிர்வு:)!
அந்த utube attachment super HEMA... I LOVE THAT LIKE U :)
ஹேமாவின் ஜாலியான எழுத்து எனக்கு அளவிலா சந்தோஷம் தருகிறது.
//.நீங்க எல்லாரும் என்னைப் பார்த்து இப்ப கேக்கிறமாதிரி !//
கதையில புடிச்சதே இந்த வரிதாங்க.
நல்ல பதிவு ஹேமா. சிரித்தேன், சிந்தித்தேன், கொஞ்சம் கண்ணீரும் சிந்தினேன்(அட, அதிகமாச் சிரித்ததால் வந்ததுப்பா...) அந்தப் பாப்பாக்கள்தான் எத்தனை க்யூட்! எத்தனைக் கவலை இருந்தாலும் அவங்களோட கள்ளமில்லாச் சிரிப்பைப் பார்த்தாலே போதும், மனம் லேசாயிடும். பகிர்வுக்கு நன்றி, ஹேமா.
நான்கு குழந்தைகளும் அம்மா மாதியே
சிரிக்குது.ஒரே ஒருகுறை குழந்தைகளுக்கு அம்மா மாதிரி பல்லு இல்லை
//அதற்கு முல்லா."உன் மண்டையில் மூளையா இல்லை களிமண்ணா என்று கேட்டு...மழை வந்தால் ஒதுங்கவேண்டும் என்கிற அறிவுகூட உனக்கில்லையா"என்று கேட்டார்....நீங்க எல்லாரும் என்னைப் பார்த்து இப்ப கேக்கிறமாதிரி !//
நல்லாயிருக்கு ஹேமா
பகிர்வுக்கு நன்றிமா
மே மாதத்து வலியையும் வேதனையையும் இப்படியாக ரிலாக்ஸ் செய்தும், இலேசாக்கியும் இயல்பு நிலைக்குத் திரும்பிட பிரார்த்திக்கிறேன் தோழி.பதிவின் எல்லாச் சிரிப்பிலும் ஒளிந்திருக்கு ஒரு சிந்தனை.
சீரியஸ் ஹேமாவை சிரிச்ச முகமா பார்க்க சந்தோஷம்.. அப்பப்ப இப்படி ஸ்மைலவும் ஹேமா
சிந்தனையும் நகைச்சுவையும் அருமை!!
உங்களுக்கான பேட்டிக்கேள்விகளை எதில் கேட்க? மெயில் முகவரி தர்றீங்களா? இங்கேயே கமெண்ட் பாக்ஸ்லயே கேட்கவா? #டவுட்டு
என் மெயில் ஐ டி cpsenthilkumar20@gmail.com
அந்தக் குழந்தைகளின் சிரிப்பூ.. பார்த்துப் பார்த்து ரசித்தேன் ஹேமா. நன்றி.
Post a Comment