Saturday, November 26, 2011

கற்களை இடிக்கலாம் மனங்களை...!

கல்லறைகளை மட்டுமே சிங்களம் உடைத்தெறிந்தது.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.நம் தங்கத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினமான இன்று இதைத் திறந்து வழிபடத் தொடங்கியது இன்னும் சிறப்பான நாளாக ஆனது !

சுவிஸ்சில் தாயகக்கனவுடன் சாவினை தழுவியவர்களின் நினைவாலயம் திறப்பு.சூரீச்சில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயக விடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது.தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா இனிதே நடாத்தப்பட்டது.

சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தாய் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி,அகவணக்கம்,மலர்வணக்கம்,மலர்வணக்கம்,
தீபவழிபாடு,கவிதாஞ்சலி,எழிச்சிஉரை,வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிற்பாக நடைபெற்றது.
[சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 04:57.57 PM GMT]

நன்றி லங்காஸ்ரீ.

20 comments:

தனிமரம் said...

 இனவாதக ஆட்சியால் கல்லறைகளை மட்டும் சிதைக்க முடியும்இதயத்தில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு எப்போதும் சிதைவு இல்லை! சுவிஸ் தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்!

விச்சு said...

நம் நினைவுகளை விட்டு அகலாமல் இருக்க ஒரு நினைவாலயம்.

காட்டான் said...

வணக்கம் சகோதரி..

மாவீரர் கல்லறைகளை “அவர்கள்” சிதைத்தாலும் எங்கள் மனங்களில் இருந்து அந்த தெய்வங்களை அகற்ற முடியாது..!!

Yaathoramani.blogspot.com said...

அந்த தீபக் கனல் என்பது
நமது உள்ளக் கனல்
தொடர்ந்து எரியட்டும்
த.ம 5

நிலாமகள் said...

உடைக்க‌ உடைக்க‌ உறுதியாக‌ட்டும் ம‌ன‌சு!க‌வாத்து செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌மாய்!!

கீதமஞ்சரி said...

தாயகக்கனவுகள் பலிக்கும்! நம் நெஞ்சமெனும் ஆலயத்தில் என்றுமே அணையாத தீபமாய் எரியட்டும் உயிர்நீத்த நம் உடன்பிறப்புகளின் நினைவுகள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

paavam swiss thamil sanam


thalaivaruku emathu veera vanakam.
emmuduan ninru kalamadiya kulatheepan,kutikannan,velmaran,mozhiventhan,vellaiyan,nambiveel,senchudar,martum pulanaivivu thuraiudan velai seitha sasai master, nisaam anna {akkarai pathu},aravainthan,disco master,selvakumar,kapilaaman base niranjan,aathissodiyan,new chemmani road srium
,seramaan (chankanai base),irrumporai, matrum
silarin peyar solla mudiyathu veera vannakam.

ராமலக்ஷ்மி said...

இந்த நினைவாலயத்தில் நிதம் ஏற்றப்படும் தீபம் தங்கள் தாயகத்து மக்களின் நல்வாழ்வுக்கானதாக நம்பிக்கையுடன் ஒளிரும்.

துபாய் ராஜா said...

சிங்களத்தீவில் சிதைக்கப்பட்டது கல்லறைகள் மட்டுமே. மறைந்த மாவீரர்தம் வீரம் விதைக்கப்பட்டு விருட்சமாய் விழுது விட்டு நிற்கிறதே தரணியெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர் மனமெலாம்...

Unknown said...

நன்றி சக்கோதரி!

காணொளி கண்டு மனம் மகிழ்ந்தாலும் மாவீரர் நினைவு
மனதை வாட்டவே செய்கிறது
அவர் மீண்டும் வருவார்
ஐயமில்லை!

புலவர் சா இராமாநுசம்

சத்ரியன் said...

மனங்களில் கல்வெட்டாக பதிந்து விட்டதை யாராலும்.....

Anonymous said...

உள்ள தீபம்
தொடர்ந்து எரியட்டும்..விடுதலைக்கு உயிர் தந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம்...

அம்பாளடியாள் said...

எம் மாவீரர்களுக்கு தினமும் மனதாலே அஞ்சலி செய்வோம்!..
பகிர்வுக்கு நன்றி சகோ .அடுத்த முக்கிய கவிதை காத்திருக்கு
உங்கள் வரவுக்காக.

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
நல்லதோர் செய்திப் பகிர்வு.
ஈழத்தில் கல்லறைகளை இடித்தாலும் புலம் பெயர் மக்கள் வாழும் இடங்களில் ஈகத்தில் சிறந்த எம் மான மாவீரர்களிற்கு கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதனைப் படிக்கையில் பெருமையாக இருக்கிறது!

rishvan said...

சுவிஸ் தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்!.... www.rishvan.com

இராஜராஜேஸ்வரி said...

.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.

கற்களை இடிக்கலாம் மனங்களை...!"!!!!!!!!!!!!!

இராஜராஜேஸ்வரி said...

.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.

கற்களை இடிக்கலாம் மனங்களை...!"!!!!!!!!!!!!!

Rathnavel Natarajan said...

செய்திகளை கேள்விப்படும் போது மனம் மிகவும் வேதனைப் படுகிறது.

sweet said...

ஏண்டி உனக்கு சிம்பு பிடிக்காது என்றால் உலகத்துல எல்லோருக்கும் பிடிக்காது என்று ஆகி விடுமா?

நீ உன் முகரைகட்டையை கண்ணாடி-ல பார்த்து இருக்கேய? இல்லையா? கொடுமை.

இலங்கை-ல நல்ல தமிழ் பெண்மணிகள் உண்டு என்று கேள்விப்பட்டு இருக்கேன். இந்த மாதிரி நாதேரிகளும் இருக்கீங்களா

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP