தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நமக்கு புரியாமல் போய்விட்ட ஆனால் அற்புதமாகக் கிடைத்த ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர்.
இந்தத் தேநீர் மகத்துவமானது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நான் நினைப்பதற்குக் காரணம்.
இந்தத் தேநீரை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது எனவும் இந்தப் பச்சைத் தேநீர் உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யு.கே பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கிறது.
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது பச்சைத் தேநீர் வரலாறு.எனினும் சீனா,ஜப்பான்,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது என்கிறார்கள்.எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் உள்ள இரகசியம் இந்த பச்சைத் தேநீர் தான்.
அவர்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது.உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும்,காயத்தை ஆற்றவும்,உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும்,செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும்,மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம்.
பச்சைத் தேநீரின் மகிமையை வியக்க வியக்க முதல் புத்தகத்தை எழுதியவர் ஒரு ஜென் துறவி.இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இப்புத்தகத்தில் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீரை ஒரு சர்வரோக நிவாரணி என்கிறார்.
உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார்.குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம்.இந்த நூல் வெளியான ஆண்டு 1191.
நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர் பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார்.
தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.
ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேநீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார்கள் மருத்துவர்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும் உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள்.எல்லாவற்றுக்கும் மேலாக எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது.
உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேநீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன் உடலின் கொழுப்பைக் கரைத்தும் குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது.
கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது.தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் வெள்ளை,மஞ்சள்,கறுப்பு,பச்சைத் தேநீர் என வகைப்படுத்தப் படுகிறது.
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது.இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.
பச்சைத் தேநீர் தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்புச் சுவை சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.
சரி இந்தப் பச்சைத் தேநீரில் சிக்கல்களே இல்லையா என்றால் இருக்கிறது என்பதே பதில்.பச்சைத் தேனீரிலும் காப்பியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு.ஆனால் காப்பியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதியான செய்தி.
இதயம்,நுரையீரல்,குருதி,பல்,எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவிக்கிறது இந்தப் பச்சைத் தேநீர்.
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது.வரக்காபி என்பதுபோல இது வெறுமையாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது பச்சைத்தேயிலைப் பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்றைய தேநீர் போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை.அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
கொதிக்க வைக்கப்பட்ட நீரில் தேநீர்ப் பையை சுமார் 1-2 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதைச் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கலாம்.
சுவைக்குத் தேவையானால் சீனி அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள் எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம்.
உண்மையில் நான் ஒரு நாளைக்கு 2 தரம் குடிப்பேன்.நீங்களும் குடித்துப் பாருங்களேன்.உடம்பு குறையாவிட்டாலும் (என் உடம்பைக் கிண்டல் செய்ய 2-3 பேர் காத்திருக்கிறார்கள்)உடம்பு நோயில்லாமல் சுகமாக இருக்கிறது எனக்கு !
நன்றி இணையம்.
43 comments:
பரவால்லியே பச்சைத்தேனீரில் இவ்வளவு விஷயம் இருக்கா. நல்லதுதானே.
அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
"பச்சைக் கலர் தேத்தண்ணி."நிறைய தகவல். நிறைவான தகவல். நன்றி.
மிக நல்ல பகிர்வு ஹேமா.
அன்புநிறை சகோதரி,
பொதுவாக பச்சைத் தேநீர், ஜப்பானியர்கள் அதிகமாக
பயன்படுத்துகிறார்கள். காலை எழுந்தவுடன் முதல் வேலை
அதுதான் அவர்களுக்கு. நான் ஜப்பானியர்கள் நிர்வாகத்தில் பணிபுரிவதால்
தெரிந்துகொண்டேன். நானும் குடிக்கப் பழகிக் கொண்டேன்.
தெற்காசிய நாடுகளாகிய, இந்தோனேசியா,தாய்லாந்து....... போன்ற அத்தனை
நாடுகளிலும் இந்த தேநீர் பிரபலம்.
அருமையான அரிய செய்திகளை, அழகாக தொடுத்துக்
கொடுத்திருக்கிறீர்கள். நன்றிகள் பல.
சேட்டா...
காப்பி கேன்சல்...
க்ரீன் டீ ப்ளீஸ்...
பச்சை தேநீர் பற்றிய புதியதொரு தகவலை தந்த ஹேமா அக்காவுக்கு நன்றிகள் ...
பச்சை தேனீரா?? இதை இப்பொழுதுதான் கேள்வி படுகிறேன் அக்காச்சி.... உங்கள் விவரிப்பை படிக்க படிக்க பச்சை தேநீர் குடிக்கணும் போலவே இருக்கு.... அக்காச்சி இனி சுவிஸ் வந்தால் பச்சை தேநீர் தருவீங்களா?
நானும் நாளைக்கே வீட்ட ஒரு பச்சைக்கலர் தேனீக்கு சொல்லப்போறேன்.... ஹா ஹா...
வீட்ட யார் சொன்னார்கள் என்று கேட்ட சுவிசில் இருக்கும் என் அக்காச்சிதான் சொன்னா என்று சொல்லுவனே!!! ஹீ ஹீ
பச்சைத் தேனீர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். குடித்ததில்லை. அதிலும் அதன் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருப்பது சுத்தமாகத் தெரியாதுங்க ஹேமா. அரிய தகவல்களை பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி!
மிகவும் தேவையான பிரயோசனம்மிக்க விடயத்தை பதிவிட்டமைக்கு நன்றிகள்.
உடம்புக்கு நல்லதுன்னு மனசு சொன்னாலும் நாக்கு கேக்க மாட்டேங்குதுப்பா.. கட்டஞ்சாயாவா குடிச்சா கொஞ்சம் டேஸ்ட்டியா இருக்கு. பழக்க தோஷத்துல பால் சேர்த்துப் போட்டா நல்லாவே இல்லை.
நல்ல தகவலுடன் கூடிய பகிர்வு.மிக்க நன்றி.
அருமையான தகவல்
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் ஹேமா. அருமையான தகவல்கள். நன்றி.
தமிழ்மணம் வாக்கு 9.
அருமையான தகவல்கள் ஹேமா.
தமிழ்மணம் 9.
i take green tea for the past 5 years. real fat burner. useful information for many.
"பச்சைக் கலர் தேத்தண்ணி."இது
பற்றி எதுவுமே எனக்குத் தெரியாதே!
தேவையான பதிவு!
அருமை!
புலவர் சா இராமாநுசம்
"பச்சைக் கலர் தேத்தண்ணி."இது
பற்றி எதுவுமே எனக்குத் தெரியாதே!
தேவையான பதிவு!
அருமை!
புலவர் சா இராமாநுசம்
க்ரீன் டீ.... TGL 530 -ல் இருந்தது! கொஞ்ச காலம் குடித்தேன். அப்புறம் குடிப்பதை நிறுத்தி விட்டேன். என்ன ஆனாலும் காபி குடிக்காமல் இருக்க முடியவில்லை! இப்போதெல்லாம் எப்போதாவது குடிக்கிறேன். எல்லா வியாதிக்கும் கேட்கிறது என்பது புதிய தகவல்.
தகவலுக்கு நன்றி.
தினமும் 2 கோப்பை ’பச்சை தேநீர்’ குடிக்கிறீங்களா?
உடல் எடையில் மாற்றம் எதுவும் கண்டீங்களா?
( யாரோ 2-3 பேர் உங்களைக் கிண்டல் செய்யவிருப்பதாய் சொல்லியிருக்கீங்க. இன்னும் யாரும் வரக்காணோம்.)
நான் சில வாரங்கள் குடித்து பார்த்தேன், காஸ்ட்ரிக் ப்ராப்ளம் வந்தது, அதால விட்டுட்டேன்
தற்சமயம் சைனாவில் இருந்து நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வந்து தங்கியிருக்கும் இருவர் தண்ணீருக்குப் பதில் க்ரீன் டீதான் சாப்பிடுகின்றனர்..
எனக்கும் சிங்கப்பூரில் இது பழக்கம் என்பதால் பெரும்பாலும் தண்ணீர் அருந்தாமல் இதனை குடிப்பதால் உடல் எடை சீராகியிருக்கிறது..
மிகச் சிறந்த கட்டுரை...
மிக அருமையான பகிர்வு ஹேமா. நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி.
கிரீன் டீ.மிகவும் உடலுக்கு நல்லது .நான் தினமும் ஐந்து கப் ஹெர்பல் டீ குடிப்பது வழக்கம் .அதில் ரெண்டு கப் கிரீன் டீ ,ரெண்டு கப் டிடோக்ஸ் டீ மற்றும் ஒரு கப் கமொமில் டீ .கிரீன் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் .
நல்ல பகிர்வு ஹேமா
பச்சைத் தேத்தண்ணி பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் அதனுடைய மருத்துவக்குணங்கள் பற்றி இந்தப் பதிவின் மூலம்தான் அறிந்துகொள்கிறேன் ஹேமா. காப்பியிலிருந்து மாறுவது கஷ்டமா இருந்தாலும் கொஞ்சநாள் முயற்சி செய்து பார்க்கலாம்னு இருக்கேன். நன்றி ஹேமா.
அருமையான பதிவு.
எனது முகநூல பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
என்ன பிராண்ட் என்றும் சொல்லலாமே .ஏகப்பட்ட கம்பேனிகள் புழக்கத்தில் உள்ளன:)
அருமையான தகவல்
க்ரீன் டீ நானும் குடிக்கிறேன். ஆனால், இது டீ-பேக் ஆகத்தான் கிடைக்கிறது; டீத்தூளாகக் கிடைப்பதில்லை. ஏனென்று தெரியுமா? எங்கேனும் கிடைக்கீறதா?
@ஜமால், //காஸ்ட்ரிக் ப்ராப்ளம் வந்தது// அப்படியா? புதுசா இருக்கு.
அருமையான தகவல் சகோதரி.
பல தகவல்களை தேடி இணைத்து நல்ல கட்டுரையாகக் கொடுத்திருக்கிறீர்கள்.
இருந்தபோதும் பலர் இதனை மருந்தென நினைத்து அருந்தி தமது நோய் தீரவில்லை எனச் சொல்வதுமுண்டு.
மருந்தென எண்ணாது ஆரோக்கியமான பானம் உடலுக்கு நல்லது என எண்ணி, நீங்கள் குடிப்பதுபோல அளவோடு குடித்து வந்தால் பயன் கிடைக்கும் என நம்புகிறேன்.
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்!///பச்சைத் தேநீர்?/தேனீர்? உடம்புக்கு நல்லது தான்!பல வைத்தியர்களே சிபாரிசு செய்கிறார்கள்!///அப்புறம் உங்களைக் கிண்டல் செய்யவும் 2,3 பேரை எதிர்பார்ப்பதாக தெரிகிறது! நான் தான் பார்த்ததேயில்லையே,ஹி!ஹி!ஹி!
மிகவும் அருமை!
பகிர்விற்கு நன்றி!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
ஜப்பானிய, சைனீஸ் உணவகத்திற்கு சாப்பிடப்போனால் இந்த Gree Tea தான் முதலில் கொண்டு வந்து குடுக்கிறார்கள்.
நான் தான் தமிழச்சி ஆச்சே! அதனால தண்ணீர் தான் கேட்டு வாங்கி குடிப்பன் :))))
அக்கா அதற்குள் இத்தனை விடயம் ஒளிந்திருக்கிறதா..
நன்றி நன்றி...
நம்மளால இது மட்டும் தான் முடியும்...
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்...
http://www.mathisutha.com/2011/04/blog-post_28.html
தமிழ் ஆதி -ஆண்களிடம் ஆபாசம் இல்லையா? - ஒரு ஆய்வு!
ஹேமா said... இயல்பாகவே இயற்கையின் படைப்பில் பெண்கள் பலஹீனமானவர்கள்.அதோடு மனதாலும் இளகியவர்கள்.இங்கு மதம் பெரிய பிரச்சனை இல்லை !
அம்மணி நீங்க இங்க என்னசொல்லவாறிங்க பெண்கள் பலஹீனமானவர்கள் மனதாலும் இளகியவர்கள் ஆகவே அவர்களை துணியால் மூடீவைக்க வேண்டும் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வது சரி இஸ்லாம் மதம் சொன்னது சரி அப்படி தானே நீங்க சொன்னவற்றை இஸ்லாம் மதத்தை சேராத பெண்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் நாகரிகம் அடைந்து வரும் இஸ்லாம் பெண்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
பெண்ணுரிமை என்கிற பெயரில் என் தளத்தில் வந்து உங்கள் கருத்தைக் கேள்வியாகக் கேட்டமைக்கு நன்றி.
நான் சொல்ல வந்தது...மதத்தைத் தாண்டி எல்லா வீடுகள் என் வீடு உட்பட ஏன் நாடுகளிலும்கூட பெண்களின் மென்மையை பலஹீனத்தை ஒரு சில ஆண்களைத் தவிர கூதலான ஆண்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.நாங்களும் அன்பு என்கிற பெயருக்குள் எங்களைக் கட்டிக்கொள்கிறோம்.
ஏன் இதற்கு மதம் !
உண்மையிலேயே பச்சைத் தேநீரில் ஏதோ நன்மை இருக்கிறது.அது மட்டும் உண்மை.பகிர்ந்து கசப்போடு ருசித்து அருந்திக்கொண்ட எல்லோருக்கும் நன்றி நன்றி !
கிண்டலிடிக்க இடமில்லாமல் முதலேயே நான் முந்திக்கொண்டதால் கிண்டலுக்கு இடமில்லாமப் போச்சு.நன்றி நன்றி !
நேசன்..எனக்குத் தெரிந்த கம்பெனி இங்கு...MILFORD,Ronnefeldt !
யோகா அப்பா...தேனீர்...தேநீர் மாற்றிக்கொள்கிறேன் நன்றி உங்களுக்கும் !
(என் உடம்பைக் கிண்டல் செய்ய 2-3 பேர் காத்திருக்கிறார்கள்)
mee too hemu.
எனக்கும் சிங்கப்பூரில் இது பழக்கம் என்பதால்
mee too....
kundu pusukku appadinu yarum kindal seiyavillai enru ninaikka vendam.... nan solli vidukinren.
neenga illaithal imaya malai konjam kuraitha mathi irukkum.
சுதாச்சாமியாரே...வந்தீங்களா.
காணேலன்னு தேடிட்டு இருந்தேன்.நான் குண்டா இருந்தாத்தானாம் வடிவு.தெரியுமோ !
ஹுஸைனம்மா...இங்கு சைனீஸ் கடைகளில் கிறீன் டீ தூளாகக் கிடைகிறது.அங்கும் சைனீஸ் கடைகளில் விசாரித்துப் பாருங்களேன்.ஜமால் சொல்வது எனக்கும் புதுசா இருக்கு.எனக்கும் வயிற்றுக்கு ஏதும் ஆவதில்லை இது குடிப்பதால் !
ஹேமா said...நேற்றுக் கேட்ட பெண்ணுரிமைக்கும் ஒன்று சொல்கிறேன்.பெண்ணுரிமை பெண்களிடம்தான் இருக்கிறது.எந்த ஆண்களும் பறிக்கவில்லை.
அப்போ பெண்களை கல்லால் அடித்து கொல்வது பல பெண்களை திருமணம் செய்வது துணியால் முகத்தை மூடாவிட்டால் அடிப்பது சித்திரவதை செய்வது ஆண்கள் செய்கிறார்களே! சுவிஸ்சில் Lied einer traurigen Nacht Frauen zwischen Religion und Emanzipation ஒரு புத்தகம் உள்ளது முஸ்லிம் மத அடக்குமுறைக்குள் பிறந்து அதை எதிர்த்து போராடிய வீர பெண்மணி எழுதிய புத்தகம் சுவிஸ் பொரிய நூல் நிலையங்களில் இரவலாக கிடைக்கும் இன்னொரு புத்தகம் Warum ich kein Muslim bin உங்களுக்கு மனபலத்தையும் தெளிவையும் கொண்டுவர இந்த புத்தகம் உதவி செய்யும்.
அட...பெண்ணுரிமையெண்டு பேர் சொல்லிக்கொண்டு யாரப்பா நீங்க.கொஞ்சம் ஊகிக்க முடியுது.பரவால்ல !
எனக்கு மனபலம் தரவும் என்னைத் தெளிவாக்கவும் ஒரு ஆள்.சந்தோஷம் !
சில நாடுகளில் சில மதங்களுக்கென்றே அதுவும் சட்டப்படியான சில சங்கடங்கள் அவைகள் விதிவிலக்குகள்.
முரண்பாடுகள்.அவைகளைப் பொதுவான பெண்ணுரிமைக்குள் அடக்கமுடியாது.
நீங்கள் சொல்லும் கல்லெறிவது,பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வது என்பது முரண்பாடான கொடுமையான விஷயங்கள்.நம் வீடுகளில் சில ஆண் அதிகாரங்கள் கொடுமை செய்வதுபோல சில நாடுகளிலும் சில மதங்களிலும்.ஆனால் அதைக் கொடுமை என்று எவரும் ஒத்துக்கொள்வதில்லையே.வாய்காட்டுகிறள் அடிக்கிறேன் என்பார்கள் நம்மவர்கள்.அவர்கள் மத்ததை மீறுகிறாள் என்பார்கள்.இதற்குப் புத்தங்கள் வேண்டாம்.அதுவும் இரவல் புத்தகங்கள் !
இதையெல்லாம் இல்லாமல் போக்க மனிதத்தை மதிக்கும்,நேசிக்கும் இரங்கும் மனம் இருந்தாலே போதுமே.எங்கள் நாடுகளில் சட்டப்படி இல்லாமல் நடப்பது சில நாடுகளில் மதம்.பாரம்பரியம் என்கிற போர்வைக்குள் நடக்கிறது.
அவ்வளவுதான்.இதைச் சரிசெய்ய சம்பந்தப்பட்டவர்கள் எதிர்க்கவேணும்.சட்டத்திலிருந்து இந்தக் கொடுமைகளை விலக்கவேணும்.இல்லையேல் இது தொடர் போராட்டம்தான்.
கொடுமைகளுக்கும் பெண்ணுரிமைக்கும் வித்தியாசம் இருக்கப்பா.எங்கள் பெண்கள் (நானும்தான்)இருக்கிற உரிமையைச் சரிவரப் பாவிக்கிறார்களா என்பதைச் சிந்திப்போம்.சுதந்திரம்,பொருளாதாரம் இருக்கிறதே என்று எத்தனைபேர் தான்தோன்றித்தன்மாக நடந்துகொள்கிறார்கள்.இதற்கு அதட்டினால் பெண்ணுரிமையில் கை வைக்கிறார்கள் என்று புலம்பல் வேறு.சரி என்னை இந்த நேரத்தில் புலம்பவிட்ட உங்களுக்கு நன்றி. சந்தோஷம் !
Post a Comment