[செவ்வாய்க்கிழமை,27 டிசெம்பர் 2011,08:23.11 PM GMT]
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் பிரான்ஸ் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி,தேசியப்பூ,தேசிய மிருகம்,தேசியப் பறவை,தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.
நன்றி லங்காஸ்ரீ.
16 comments:
பிரான்ஸ் அஞ்சல் துறையினர் பலவருடங்களுக்கு முன், ஒருவர் தான் விரும்பும் (அங்கீகரிக்கப்பட்ட, சமுதாயத்துக்குத் தீங்குவிளைவிக்காத) படத்துடன் தபாற்தலைகளை உருவாக்கும் வசதியைச் செய்து தந்துள்ளனர்.
இதை நாம் எமது வீட்டுக் கணனியிலிருந்தே உருவாக்கலாம்.
அதைச் சிலர் தாங்கள் விரும்பிய படத்தைப் போட்டுத் தாயாரித்துத் அஞ்சலனுப்புகிறார்கள். இதற்கான அஞ்சலகம் மேலதிகமாக சில யூரோக்களை அறவிடுகிறது.
யாரோ ஒரு அன்பர் அஞ்சல் துறையின் இச்சேவையை பயன்படுத்தி இந்தத் தபாற்தலைகளைத் தயாரித்துள்ளார்.
இது பிரஞ்சு அரசின் வெளியீடாக இருக்கச் சாத்தியமில்லை.
படத்தை பெரிதாக்கி அதில் உள்ள எழுத்துக்களை பார்க்க முடியவில்லை.
அஞ்சலகம் சென்று கேட்க வேண்டும்.
இணையத்தில் பிரான்சின் அஞ்சல் துறையின் புதிய தபாற்தலைகளுக்கான பகுதியில் இது பற்றி எதுவுமில்லை.
பிரான்சில் வெளியாகும் ஈழமுரசு,ஈழநாடு போன்ற செய்தித்தாள்
எதிலும் இச்செய்தி வந்ததாகவில்லை.
இனி வருகிறதோ தெரியாது.
நன்றி யோகன் அவர்களுக்கு.நான் ஐ.பி.சி வானொலிச் செய்தியிலும் இந்தச் செய்தியைக் கேட்டிருந்தேன்.அதன் பிறகே லங்காஸ்ரீயில் பார்த்தேன்.பிரான்ஸின் உள்ள உங்களைப்போல யாராவது உறுதிப்படுத்தினீர்களானால் நல்லது !
இப்பணியை முன்னெடுத்துச்சென்ற நல்ல உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆகா, ஆச்சரியமான செய்தியாக இருக்கிறதே அக்கா!
இப்போது தென் பகுதியில் உள்ளோருக்கு வயிறு புகையும் என நினைக்கிறேன்,
வாசித்தேன். பரவசமடைந்தேன்.
வாழ்த்துகள்.
Tamilar Perumai Ongattum. Em Inam Nalamudan vaalattum.
TM Vote 2.
செய்தி படித்ததும் சந்தோஷ உணர்வு எழுகிறது ஹேமா.
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம் தோழி.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
விஷய்ம் அறிந்து மகிழ்ந்தேன். நன்றிங்க...
வாழ்த்துகள் ஹேமா.
எமது நாட்டை தவிர மற்ற நாடுகளுக்கு இம்முதிரையில் தபால் அனுப்பலாம்
இது கவலை
மனம் மகிழ்ந்தது சகோதரி.
சரி...இந்த முத்திரைகள் வெளியிடுவது என்பது சாதாரண விஷயமாம்.எல்லோருமே விரும்பினால் வெளியிடலாமாம்.எனக்கு உண்மையில் இதுநாள்வரை தெரியாது.பணத்தை வெளியிடுவதுபோல சட்டப்படி ஒரு அரசாங்கம் மட்டுமே செய்யும் அலுவலாக நினைத்திருந்தேன்.சரி பரவால்ல.ஒரு சந்தோஷப் பதிவு ஞாபகத்தோடு.இதை எடுத்துவிட விருப்பமில்லை.இருக்கட்டும்.அப்போ முத்திரை என்றால் சும்மாதானா !
என்னைப்போலவே சந்தோஷப்பட்ட உங்களுக்கும் என் நன்றி !
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன. எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்”
மேற்கண்ட செய்தி தமிழ் தேசிய ஊடகங்கள் என கூறி மக்களை ஏமாற்றும் எச்ச சொச்ச புலிபினாமிகளின் இணையங்களில் சில நாட்களுக்கு முன் வெளிவந்துள்ளது . இதில் மிகவும் கோமாளித்தனமான , அதேவேளை மக்களை ஏமாற்ற கூறப்படும் விடயம் இது தான் “பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.” என்பதாகும். இன்று உலகம் முழுவதும், குறிப்பாக பணக்கார நாடுகளில் ஒரு சாதரண தபால் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுதினீர்களானால், அத்தொகைக்கான பெறுமதியில், உங்களுக்கு விரும்பிய சின்னத்தை அல்லது படத்தை பதிப்பித்த முத்திரையை அவர்கள் தமது பிரிண்டர் / பிரதி எடுக்கும் இயந்திரத்தில் சில நிமிடங்களில் பதிப்பித்து தருவார்கள். 1991 இல் உலக தபால் சம்மேளனம், அரசினால் அங்கிகரித்த முத்திரைகளுக்கு பதிலாக, உள்ளூர் தபாலகங்களும், தனியார் தபால் சேவைகளும் முத்திரைகளை பதிப்பிகலாம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தது. உலகமயமாதல், புதிய இலத்திரனியல் தொடர்புவளிகளின் உருவாக்கம் (fax , இ-மெயில், இன்டர்நெட்), தனியார்மயமாதல் போன்றன, இதற்கான காரணமாக கூறப்படாது .
இன்று நத்தார் திருநாள், பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து அனுப்புவது, பரிசு அனுப்புவது போன்றவரிற்கு இப்போ சாதரணமாகவே, உள்ளூர் தபால் அலுவலகத்தில் வசதிபடைத்த நாடுகளில் தமது விருப்பதிற்கேர்ற்ப தபால் தலைகளை மக்கள் உருவாகிறார்கள். இன்று இந்தியாவில் கூட பெரு நகரங்களில் இவ்வாறான சேவை உள்ளது . இன்று தனக்கு விருப்பிய நாய் குட்டிக்கும், திரைப்படத்தில் பார்த்த அவசீனியா குரங்குக்கும் இப்போ எவரும் தபால் தலை வெளியிட முடியும்.
இதற்கு எந்த நாட்டு அமைச்சரின் அனுமதியும் தேவையில்லை. ஆனால் யேர்மனியில் கிட்லருக்கும், இத்தாலியில் முசோலினிக்கும், இலங்கையில் பிரபாகரனுக்கும், அமெரிக்காவில் பின் -லாடனுக்கும் முத்திரை வெளியிட்டால் அந்த நாடுகளில் உள்ள போலீஸ் அல்லது உளவுத்துறை விசாரிக்கும் . இலங்கையில் கொலையே செய்யப்படுவார்கள்.
இது இவ்வாறிருக்க, புலிகளின் தேசிய சின்னங்களை தபால் தலைகளில் அச்சிட பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரம் வழங்கியுள்ளதென பீலா விடுவதும், ஏதோ இவர்களின் தமிழ் ஈழத்தை பிரான்ஸ் அரசு அங்கீகரிதுள்ளதென்பது போலவும் மக்களுக்கு படம் காட்டுவதும், நாற்றம் பிடித்த புலிபினாமிகளின் மூன்றாம் தர ஏமாற்று வித்தை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ndpfront.com
பிரான்ஸில் யார் விரும்பினாலும் தபால் முத்திரைகளை வெளியிடும் உரிமை
விடுதலைப் புலிகளின் இணையத்தளங்களில் பிரான்ஸ் அரசின் அங்கீகாரத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர், கார்த்திகைப்பூ, தமிழீழம் , விடுதலைப் புலிச் சின்னம் ஆகியவற்றை தபால்தலைகளாக பதித்து முத்திரை வெளியீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பிரான்சின் நடைமுறைகளின் பிரகாரம் தனிப்பட்ட நபர்கள் விரும்பும் தபால்தலைகளை தபால் அலுவலகத்தின் இணையத்தளத்தினூடாக கொள்வனவு செய்யக்ககூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய பிரான்ஸ் புலிச்செயற்பாட்டாளர்கள் பிரான்ஸ் அரசின் தபால் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்றே இந்த தபால்தலைகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை புலிகளின் இணையங்கள் பிரபாகரன் படம் பொறித்த தபால் தலைகளை வெளியிட்டு புலம்பெயர்வாழ் தமிழ்மக்களிடையே பரபரப்பு செய்திகளை வெளியிட்டிருந்தன.
யார் விரும்பினாலும் தமக்கான தபால் தலைகளை பிரான்சின் தபால் அலுவலகம் ஊடாக கொள்வனவுக் கட்டளைகளை அனுப்பி வீட்டிலிருந்தவாறே இந்த முத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
http://montimbramoi.laposte.fr/
Post a Comment