Friday, December 30, 2011

இதுவும் காதல் !

தாமரை நடப்பதை யாராவது பார்த்திருப்பீர்களா.நான் காண்கிறேன்.படிக்கிற காலம் தொட்டு இப்போ வேலைக்குப் போகும் காலம்வரை.தாமரை இரட்டைப் பின்னல் அசைய கையில் இறுக்கிய புத்தகங்களோடு வந்துகொண்டிருந்தாள்.அவளைப் பார்க்கவென்றே காத்திருந்த சரண் பார்க்காதவன்போல சைக்கிளின் அருகில் நிலத்தில் எதையோ தேடுபவன்போலப் பாசாங்கு செய்தபடி குனிந்தபடி தன்னைக் கடக்கும் தாமரையின் அழகை ரசித்தபடி தன் ஆன்மாவை அவள்பின் தொடரவிட்டு ஒரு பாடலை முணுமுணுத்தபடி மனச்சாட்சியிடம் தான் தாமரையைக் காதலிப்பதாகப் பொய் சொல்லிக்கொண்டிருந்தான்.இரண்டு வருடங்களுக்கு மேலாகவே இந்த விளையாட்டுத் தொடருவதை மனச்சாட்சியும் ரசித்தபடிதான் இருக்கிறது.




சரணைக் கடந்து போன தாமரை தன் நெருங்கிய தோழி வீணாவுடன் மிக சுவாரஸ்யமாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.சற்று நேரத்தில் வீணா அந்த இடம்விட்டுப் போன பிறகு நேரே சரணை நோக்கி வந்தவள் திடீர் என்று கையில் இருந்த புத்தகமொன்றை வேண்டுமென்றே அவன் காலடியில் நழுவவிட்டு இதழோரம் புன்னகை குவித்தவளாய் அவனைத் தாண்டிச் சென்றாள்.இன்னொரு பாடல் தந்து கடந்தது வாசனைத் தாமரை.....!



சரண் மெதுவாகப் புத்தகத்தை கையில் எடுத்தான்.இளம் தாய் ஒரு சிசுவை தழுவும் மென்மை அவன் கைகளில் குடியிருந்தது.அது யாரோ எழுதிய கவிதை தொகுப்பொன்று.புத்தகத்தின் இதழ்கள் வழியே ஒரு கடிதவுறை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.அவசரமாக கடிதவுறையைக் கிழித்து கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் தாமரை தந்த தாபால் உறைக்கு வலிக்குமோ...என்று காதலுக்கு மட்டுமே இருக்கும் ஒரு நேசம் சரணின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குரல் கொடுத்ததில் கடிதத்தை பிரிப்பதற்குள் அவன் கைகளில் தஞ்சமிருந்த கைக்கடிகாரத்தின் சிறிய முள் முப்பது முறை ஓடி மூச்சு வாங்கியது.காற்றில் தவழ்ந்து வந்த பாடலொன்று அந்த முப்பது நொடிகளைத் தாலாட்டியது.



வலிக்காத போராட்டத்தின் இறுதியில் வெற்றியோடு கடிதத்தை பிரித்தான் சரண்."மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உங்கள் மடியில் புரளும் கற்பனை நினைவுகளை அசைபோட்டபடி....என் இதயம் எழுதுகோலுக்குள் இறங்கி வடிக்கும் என் முதல் மடல் இது....!

தாமரையின் முதல் வரிகள் அவள் கவித்துவத்தோடு சேர்த்து அவள் கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்தையும் சரணின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த அவனுக்கும் கவி நிறைந்த பாடலொன்று நினவிற்கு வந்தது.



"என் அன்புக்கு... நீங்கள் என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதனையும்,அதை எத்தனையோ தடவை சொல்ல வந்தும் உங்களால் சொல்ல முடியாமல் போனதனையும் நானறிவேன்"

அதே போல் தான் நானும்... உங்களை என் உயிருக்குள் வைத்து இரண்டு வருடமாக காதலித்தும் உங்களிடம் நேரடியாக சொல்ல முடியாமல் நான் வடித்த கண்ணீர் என் தலையணைக்கு மட்டுமே தெரியும்.என் இதயத்தின் சாவி உங்களிடம் இருக்கும்போது இனியும் அதை பூட்டி வைக்கும் சக்தி எனக்கு இல்லை.மேலும் .....

காதலித்த செய்தியைக் காதலர்க்கு சொல்லாமல் கணவருக்குச் சொன்னவர்கள் வரிசையில் என்னையும் வரித்து இறுக்க எனக்கு விருப்பமில்லை.அதனால் தான் என் இதயத்தை இந்த மடலில் இறக்கி வைக்கிறேன்.

எத்தனையோ பேர் எனக்காகக் காத்திருந்தாலும் என் மனது ஏற்றுக்கொண்டது உன்னை மட்டும் தானடா! இனி நீயே மறுத்தாலும் உன்னை என்னால் மறக்க முடியாது.நீ வேணும்டா செல்லம்...!"

இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
உங்கள் உயிர் தாமரை....!

அன்பைக் குழைத்து ஒருமையில் மயக்கியிருந்தாள் தாமரை.பூபாளம் பாடியது சரணின் மனது அவளோடு ....!



வாசித்து முடித்த சரணால் சந்தோஷத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவன் கண்கள் ஆனந்த கண்ணீராய் பூக்களை உதிர்த்தது.கண்களை நீர் மறைக்க கடிதத்தை முத்தமிட்டபடியே கடித உறையைத் திருப்பினான்.

கடிதவுறையின் முன்புறமாக சிவப்பு நிற மையினால் எழுதப்பட்டிருந்த வாசகம் அவன் கண்களில் அப்பொழுதுதான் பட்டது.

"நான் எவ்வளவு முயற்சித்தும் உங்கள் நண்பன் ஆதியைச் சந்திக்க முடியவில்லை.தயவு செய்து உங்களுக்கு முடியுமானால் இந்த கடிதத்தை அவரிடம் சேர்க்கவும்!

அவன் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர்ப் பூக்களில் இப்போ உப்புக் கரிப்பதை உணர்ந்தான் சரண்.

முதல் காதலின் நினைவுகளை அழிக்கும் சக்தி எந்த நிமிஷக் கறையான்களுக்கும் இல்லை என்பதைச் சரண் யாரிடமும் சொல்லவில்லை இதுவரை.

வீட்டிற்குள் பந்து அடித்து விளையாடிக்கொண்டிருந்த மகனிடம்...

மது...வீட்டிற்குள் பந்து அடிக்காதே.ஏதாவது உடைத்தால் உதை வாங்குவாய்.

அவன் மனைவியோ....ம் என்ன இருக்கிறது இங்கு உடைக்க.10 ரூபாயும் பெறாத யாரோ கொடுத்ததாய் திருமணமாகி வந்தபோதே அவன் அறையில் இருந்த அந்தத் தாமரைவடிவ மெழுகுதிரியைத் தவிர.



அந்த மெழுகுத்தாமரை பாடசாலை விழா ஒன்றில் தாமரைக்குக் கொடுக்கவென்றே வாங்கிக் கொடுக்காமல் விட்டது।அதைக் காணும்போதெல்லாம் அந்த விழாவில் தாமரை பாடிய பாடலொன்றும் அது யாருக்கோ பாடியிருப்பாள் என்று நினைத்தாலும், தனக்குத்தானென்று கற்பனையில் மிதந்த நினைவும் எப்போதும் வராமல் போனதில்லை சரணுக்கு!




பாடல்களுக்காகவே இந்தத் தொடரை எழுத விரும்பினேன்.அன்பின் சகோதரி ஆமினாவுக்கு மிக்க நன்றி.எப்போதும் தொடர்களைத் தொடர யாரிடமும் சொல்வதில்லை.

என்றாலும்....பாடல் ரசனையுள்ள.....


சுவாரஸ்யமாக எழுதுவார்கள் இவர்கள்.ரசிக்க விருப்பத்தோடு இவர்களைத் தொடரச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறேன் !

38 comments:

பால கணேஷ் said...

ரசனையான காதல்கதையை நாராக வைத்து அழகழகான பாடல் மலர்களைத் தொடுத்து அழகிய மாலை கட்டியிருக்கீங்க ஹேமா. கடைசியில நீங்க செலக்ட் பண்ணினவங்க எல்லாருமே நல்ல தேர்வு. காத்திருப்போம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Kousalya Raj said...

மிக சுவாரசியமான காதல் என ரசித்து படித்து கொண்டே வந்தேன், டக்குனு வேற மாதிரி மாறி போச்சே ஹேமா...

கதையும் அதனுடன் இணைந்த பாடல்களும் மிக அருமை.

மகேந்திரன் said...

மெல்லிய காதல் இழையோடும் கதைக்கு
நீங்கள் பதிவிட்ட பாடல்கள் உயிரோட்டமாக உள்ளது.
வித்தியாசமான சிந்தனை சகோதரி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

Prem S said...

ஒரே குரங்கா இருக்கு உங்க ப்ளாக் ஏன் மேடம்

குறையொன்றுமில்லை. said...

மிக சுவாரசியமான காதல் என ரசித்து படித்து கொண்டே வந்தேன், டக்குனு வேற மாதிரி மாறி போச்சே ஹேமா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

சத்ரியன் said...

கதையோட்டத்துடன் இணைத்திருக்கும் பாடல்கள் மிகப்பொருத்தமான தேர்வு.

ம்ம்ம்ம்! ‘காதல்’-ன்னாலே திருப்பங்கள் இருக்கும் போல!

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
வேலைக்கு கிளம்பி விட்டேன்,.
இன்று மாலை வந்து விரிவான கருத்துரை தருகிறேன்,.

தமிழ் உதயம் said...

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சிறந்த பாடல்களுடன் அழகான கதை. அழைத்தமைக்கு நன்றி ஹேமா.

ஸ்ரீராம். said...

அழகான கதையுடன் பாடல் காட்சிகள். அருமைதான். ஆனால் ஒரு இடம் புரியவில்லை...// என் அன்பு சரணுக்கு... நீங்கள் என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு //தொடங்கும் வரிகளில் என்று தொடங்கி // அதே போல் தான் நானும்... உங்களை என் உயிருக்குள் வைத்து இரண்டு வருடமாக காதலித்தும்// என்று சொல்லும் தாமரை பிறகு எதற்கு அதை நண்பா ஆதியிடம் கொடுக்கச் சொல்ல வேண்டும்? ஆனாலும் தாமரை என்ற பெயருக்கேற்ப // "மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உங்கள் மடியில் புரளும் கற்பனை நினைவுகளை அசைபோட்டபடி...// என்ற வரிகளின் கவித்துவம் அழகு.

என்னையும் அழைத்ததற்கு நன்றி. முயற்சிக்கிறேன்!

உலக சினிமா ரசிகன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ananthu said...

ஹேமா , காதல் பாடல்களுடன் நீங்கள் குழைத்து கொடுத்த காதல் கதை அருமை ...!

சுதா SJ said...

அக்காச்சி.... எப்படி இருக்கீங்க??? உங்க கதை சூப்பர்..... பாடல் தெரிவு உங்கள் ரசனையை காட்டிக்கொடுக்குது ( ரசனை சூப்பர் இல்ல)

அக்காச்சி.... ரெம்ப பிஸி..... :(((((((

இன்னொரு பதிவில் சிந்திப்போம் அக்காச்சி.

ராஜி said...

அருமையான பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. சந்தனக் காற்றே, அழகு அழகு பாடல்கள் என் ஃபேவரிட்.

துரைடேனியல் said...

Ithu Kathaiya Kavithaiya enru viyanthen. Arumai Sago. Methaavin 'Kanneer Pookkal' en gnabagathukku varukirathu.

Tamilmanam 8.

Riyas said...

Story and Song Selection Superb.

அப்பாதுரை said...

புதுமையாக இருக்கிறதே?
இதே கதையைத் தொடர வேண்டுமா, இல்லை பாடல்களை வைத்து வேறே ஏதேனும் புனையலாமா?
இதே கதையைத் தொடர்வது சரியா தெரியவில்லையே - Kousalya சொன்னது தான் எனக்கும் தோன்றியது. அருமையாகத் தொடங்கி அருமையாக முடித்துவிட்டீர்களே கதையை - தொடர் கொக்கிகள் இடரலாமே? இன்னொன்று: காதல் (ஏக்க) கதையை இத்தனை ரசமாகச் சொல்ல உங்களால் மட்டுமே முடியும். நிறைய வரிகளில் அசல் காதலின் சாறு. அருமை.


(முதல் பாடல் அட்டகாசமாக இருக்கிறது, இப்பொழுது தான் கேட்கிறேன்)

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

பித்தனின் வாக்கு said...

wish you happy new year to you and your family hemu

ஜோதிஜி said...

தேவியர் இல்லத்தின் புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா. நீண்ட நாட்கள் வலையில் அதிகம் வரமுடியவில்லை. மன்னிக்கவும்.

விச்சு said...

அருமையான பாடல் தெரிவு.

கீதமஞ்சரி said...

அருமையான காதல் கீதங்களுடன் மனம் தொட்ட கதை. பாடல் ரசனைக்கு என் பலத்தப் பாராட்டுகள். தொடர்பதிவை தொகுத்தளித்த விதம் வெகு பிரமாதம் ஹேமா.

Admin said...

சுவாரசியமாய் இருந்தது..ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள்..பாடல்களை கதையோடு இணைத்த விதம் அருமை..
காதல் காதல் தான்.. வாழ்த்துகள்..


அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் அக்கா,
வித்தியாசமான வகையில் இசையும் கதையும் வடிவில் காதல் ரசம் ததும்பும் தந்திருக்கிறீங்க அக்கா.
உங்கள் அழைப்பினை ஏற்று நானும் எழுதுகின்றேன்.
புத்தகத்தால் மனசை மறைப்பது..சே....அதை மறைப்பது..ஊர் நினைவுகளை அப்படியே கண் முன்னே நிறுத்தி எழுதியிருக்கிறீங்க.

நிரூபன் said...

தாமரையின் நினைவினில் சரண்...முடிவு சோகம்.
வைரமுத்துவின் காதலித்த சேதியை கணவர்க்குச் சொல்லியவர்கள் வரிகளைச் சேர்த்து முடிவு மாறும் என நாம் நினைக்கையில் எம் எதிர்பார்ப்பிற்கு மாறாக திருப்பத்துடன் கதையினை முடித்திருக்கிறீங்க.

ஆமினா அக்காவிற்கும், உங்களுக்கும் நன்றிகள்!
நல்ல முயற்சி அக்கா.

ஆமினா said...

"மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உங்கள் மடியில் புரளும் கற்பனை நினைவுகளை அசைபோட்டபடி....என் இதயம் எழுதுகோலுக்குள் இறங்கி வடிக்கும் என் முதல் மடல் இது//

உங்களுக்கே உரிய அருமையான நடை ஹேமா

இது கதையில்ல கவிதை :-)

மிக மிக மிக ரசிச்சு படிச்சேன்.

தொடரை தொடர்ந்ததுக்கு மிக்க நன்றி ஹேமா

(விடுமுறை கழிக்க சென்னை சென்றதால் நெட் பக்கம் வர முடியவில்லை. இன்று தான் வருகிறேன். தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். )

@நிரூ
//ஆமினா அக்காவிற்கும், உங்களுக்கும் நன்றிகள்!//
நன்றி தம்பி

ஆமினா said...

தொடர இருப்பவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஆமினா said...

//இல்லை பாடல்களை வைத்து வேறே ஏதேனும் புனையலாமா?//

நீங்களே ஒரு கதை எழுதி அதற்கு பொருத்தமான பாடலை இடையில் சேர்க்க வேண்டும் சகோ. ஹேமாக்கு பதிலா நா சொல்லிட்டேன். ஹேமா மன்னிக்க.... :-))

அப்பாதுரை said...

நன்றி ஆமினா.

ஹேமா said...

கணேஸ்...வாங்க வாங்க.முதல் ரசனைக்கு மிக்க நன்றி !

கௌசி...பாட்டுக்காகவே பதிவாக்கின சின்னக் கதை.கதைன்ன "டக்"ன்னு திரும்பனும்ன்னு சொல்லியிருக்காங்கப்பா.
அதுதான் திருப்பிட்டேன் !

மகேந்திரன்...வாங்க.எனக்குப் பிடித்த பாடல்களைத் திணித்த சந்தோஷம் எனக்கு !

நண்டு...நன்றி ஐயா !

பிரேம்குமார்.சி...என்ன நம்ம குரங்காரைக் கிண்டல் பண்றீங்க.நம் முன்னோரை மறக்காத ஆள் நான்.அவங்களை இங்க குந்த வைக்க நான் எத்தனை பேரைக் கெஞ்சிச் சண்டைபோடு அழுதிருப்பேன்.நான் 2008 ல புளொக்கர் தொடங்கின காலத்தில எல்லாரும் கேட்டுக் கேட்டு அலுத்துப்போனாங்க.நீங்க ரொம்ப லேட்.இப்ப நம்மாளுங்ககூட எல்லாரும் சிநேகமாயிட்டாங்க.
நீங்களும் அடிக்கடி வாங்க.அப்பிடியே குழந்தைநிலாவையும் வந்து பாருங்க பிரேம் !

லஷ்மி அம்மா...கதைன்னா அதுவும் காதல் கதைன்னா திருப்பணும்.
அப்பதான் சுவாரஸ்யம் !

டி.வி.ஆர் ஐயா....என்னாச்சு பாட்டுப் பிடிக்கலயா.சரி அடுத்த தரம் பாகவதர் பாட்டுத் தேடிப் போடறேன் !

சத்ரியா...என்ன ஒரு அடக்கமான பின்னூட்டம்.அப்பிடியே சிலிர்க்குதுப்பா !

நிரூ...வேலைக்குப் போய்ட்டு வந்து ஒழுங்கா பதிவைப் போடுங்க சொல்லிப்போட்டன்.பாட்டுப் போடுறது ரசனைதானே.மனசை மறைச்சாலும் சொல்றாங்களப்பா வேறமாதிரி.இந்தப் பெடியளைத் திருத்தவே முடியாது !

தமிழ்...என்னைவிட உங்கள் பாடல் ரசனைகள் வித்தியாசமாயும் இன்னும் அருமையாயும் இருக்குமெண்டு நினைக்கிறேன் !

ஸ்ரீராம்...பாம்புக் கண் உங்களுக்கு.ஆனாலும் பாராட்டவேணும்.முக்கியமான இடத்தில் பெரிய பிழை.கண்டுபிடித்து அதையும் எனக்குச் சொன்னதுக்கு மிக்க மிக்க நன்றி.
ஏனோதானோவென்று எதையோ சொல்லிட்டுப் போகாமல் இப்பிடிச் சொல்றது எனக்குப் பிடிச்சிருக்கு.
அன்புக்கு நன்றி எங்கள் புளொக் !

உலக சினிமா ரசிகன்...உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி !

அனந்து...இன்னும் எவ்வளவோ பாடல்கள் இருக்க குழைச்சுப் போடத்தான் இடமில்லை.அவ்வளவு பிடிக்கும் பாடல்களென்றால் !

துஷிக்குட்டி...நான் நல்ல சுகமப்பு.என்னைத் தாலாட்டி நித்திரையாக்கிறது,எழுப்பிவிடுறது,
தலைதடவி ஆறுதல் சொல்றது எல்லாமே இசைதான்.இப்பகூட "மைனாவே மைனாவே இது என்ன மாயம்..."கேட்டபடிதான்....!

ராஜி...உங்க ரசனையும் என் ரசனையும் ஒண்ணாயிருக்கே.சந்தோஷம் !

டானியல்...கண்ணீர்ப்பூக்களை ஞாபகப் படுத்துகிறீர்கள் என் பக்கத்தில்.அது எங்கே நான் எங்கே !

ரியாஸ்...நன்றி நன்றி...பாட்டை ரசிக்கவாவது வந்தீங்களே !

அப்பாஜி...நீங்க எழுதுற கதைகளுக்குப் பக்கத்தில நிக்கேலுமா.என்னைப் புகழ்றீங்க.சந்தோஷமாவும் இருக்கு அப்பாஜி.நீங்களாகவே ஒரு இசையும் கதையும்போல எழுதுங்க.
காத்திருக்கிறோம் !

என்றும் இனியவன்...உங்களுக்கும் நன்றி !

சுதாச்சாமியார்...உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள் சாமியாரே.ஏன் பாட்டுப் பிடிக்கலபோல !

ஜோதிஜீ...ரொம்பக் காலமா காணவேயில்லை உங்களை என் பக்கத்தில் கருப்பு மாத்தலன்னு கோவமாக்கும் !

விச்சு...வாங்க வாங்க.
ரசிச்சீங்களா.சந்தோஷம் !

கீதா...உங்கட பாராட்டு மனத்துக்குத் தைரியமளிக்கிற சந்தோஷம்.
நன்றி தோழி !

மதுமதி...காதலை எந்த விதத்தில் அழகுபடுத்தினாலும் அழகுதான்.அது சோகமனாலும் கூட !

ஆமினா...கடைசியா வந்திருக்கிறதைப் பாத்தா நான் சரியாச் செய்திருக்கேனான்னு பார்க்க வந்தமாதிரி வந்திருக்கீங்க.அடிக்கடி இந்தப் பக்கம் வந்தாத்தானே ஆமினா.என்றாலும் விருப்பத்தோட நீங்கள் தந்த தொடரைத் தொகுத்தேன் தோழி.நன்றி ஆமினா !

ஜெய்லானி said...

//இதுவும் காதல் //


இல்லை இதுதான் காதல் :-))

ஜெய்லானி said...

கவிதையிலேயே கலக்கும் உங்க கிட்ட கதை மட்டும் சரியில்லாம்ல் இருக்குமா ..? கலக்கிட்டீங்க :-)))

Yoga.S. said...

வணக்கம் மகளே!தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்! இசையும்,கதையும் பிரம்மாதம்!வாழ்த்துக்கள்!(தாமத வருகையின் காரணம்;தமிழ்மணம் ஊடாக நான் உங்கள் தளம் வருவதில்லை!பிறர் பதிவுகளின் பின்னூட்டமூடாக பிரவேசிப்பதால் தான் தாமதம்.)

சுதா SJ said...

ஹாய் அக்காச்சி....
எப்படி இருக்கீங்க???
அக்காச்சி... குறைந்தது ஒரு மாசமாவது ப்ளாக் வரமாட்டேன் :(
அப்பம்மாவை பார்க்க ஜேர்மன் போய் அப்படியே சுவிஸ் போறேன்
இதான் காரணம் அக்காச்சி... :)

உங்க மெயில் ஜடி தெரியாது.
அதான் இங்கே பதில் போடுகிறேன்.
நானும் உங்களிடம் ஒரு சந்தேகம் (பெருசா இல்லை ) கேக்கணும்.
அப்புறம் கேக்குறேன்... :)
my e.mail id- thusyanthan01@gmail.com

பாய் பாய் அக்காச்சி..
பதில் போடுங்கோ....

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமான இலங்கைத்தமிழ் நடையில் இருந்து விலகி வித்தியசமான நடையில் இருக்கு, குட் ஒன்..

வம்பு - எனக்கெல்லாம் பாடல் ரசனை இல்லை என சொல்லாமல் சொன்னதால் வெளி நடப்பு செய்கிறேன் ஹி ஹி

RVS said...

அடேங்கப்பா... சூப்பர்ப். டூயட்டுகளால் பின்னப்பட்ட ஒரு கதை! ரொம்ப நல்லாயிருக்கு. :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ahaa....sema twist at the end...;) nice songs too...

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP