
1) உடம்பைப் பார்த்துக்கோங்க..சுவர் இருந்தாத்தான் சித்திரம்.
சித்திரம் வரையிறதாச் சொல்லிட்டு கேலிச்சித்திரம் கீறிட்டா என்ன பண்றதாம் !
2) உடனடிச் சந்தோஷத்துக்காக ஆசைப்படாம அதன் பின் விளைவுகளை யோசிச்சு மனசைக் கட்டுப்படுத்திக்கணும் !
ஒரு பியர் போத்தல் கண்முன்னால இருக்கு.குடிச்சாத்தான் சந்தோஷம்ன்னு மனசு சொல்லிட்டே இருக்கு.வீட்ல போய் உலக்கையால அடி வாங்கிறதப் பத்தி அந்த நேரம் நினைக்க வருமாக்கும் !
3)உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாருக்கும் நம்பிக்கையா விசுவாசமாய் இருங்கள் !
சரி...உண்மைதான்.நாங்க விசுவாசமா இருக்கிறோம்.ஆனா கண்ணு முழிச்சிட்டு இருக்கிறப்பவே இளிச்சவாய்ன்னு நெத்தியில முத்திரை குத்துறாங்கப்பா.அப்புறம் விசுவாசம்...!
4) உங்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள் !
இது ரொம்பவே சந்தோஷம்.ஆனா இவங்ககூடவும் ரொம்ப கவனமா இருக்கணும்பா.இடக்குமுடக்கா கேள்வியெல்லாம் கேக்குறாங்க.அவங்க முன்னால நாங்கதான் பொடிப்பசங்க!
5) பெற்றோரை மதியுங்கள்.அவர்கள் தேவைகளைக் கவனியுங்கள் !
இந்த விஷயத்தில கண்ணும் கருத்துமா இருக்கணும்.நம்ம பிள்ளைங்க பாத்திட்டே இருக்காங்க.தாத்தாக்குக் குடுத்த சாப்பாட்டுத் தட்டைக்கூட தாத்தா ஞாபகம்ன்னு எடுத்து வச்சிட்டு அப்புறமா பெத்தவங்களுக்கே தராங்களாம் !
6)அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பேன் என்று உறுதி சொல்லிக்கொள்ளுங்கள் !
எந்த விஷயத்தில முன்னுதாரணம்ன்னும் சொல்லியிருக்கலாம் !
7) உண்மை கசப்பாய்த்தான் இருக்கும்.பரவாயில்லை.ஏத்துக்கணும் !
அப்பிடியே அரிச்சந்திரன்(சந்திரி)ன்னு பட்டம் தந்திடுவாங்களாக்கும் !
8) என்ன லாபம் வந்தாலும் சரி.சட்டவிரோதமா எதையும் செய்யக்கூடாது !
சட்டவிரோதம்ன்னு எதைச் சொல்றாங்க.அப்பிடின்னு ஒண்ணு இருக்கா.நம்ம பிறந்த நாட்டில எப்பவும் எல்லாரும் எல்லாமே பண்ணலாம்.பண்றாங்க !
9) சமூகத்தில ஏத்த இறக்கம் இல்லாம எல்லாரும் சமமா இருக்க என்னால் என்ன செய்ய முடியும்ன்னு யோசிக்கணும் !
இது பெரிய விஷயமா.கலப்புத் திருமணம் செய்திட்டாப் போச்சு.இல்லன்னா கள்ளுக்கடையில எல்லாரும் சமமாயிடலாம்ன்னு எங்க தாத்தா சொல்லுவார் !
10) ஒருத்தர் நல்லது செய்யப்போக எதையாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுக்கக்கூடாது !
அப்பா...இது பெரிய விஷயம்.நல்லது செய்றவங்களைவிடக் கூட இருக்கிறவங்கதான் தூங்காம யோசிச்சிட்டு இருப்பாங்க.எப்பிடிடா கவுத்துப்போட்டு ஏறி நிக்கலாம்ன்னு.காதைச் சுத்தி மப்ளர் போட்டுக்கோங்க.யார் என்ன சொன்னாலும் ஆமா போடுங்க.உங்களுக்கு என்ன சரின்னு இருக்கோ அதுவழி போங்கப்பா !
11) நம்ம சுற்றுச் சூழலை பாதுகாப்போட வச்சிருக்கணும் !
இவ்ளோ நாட்டுப் பற்று இருந்தா நம்ம வீட்டு அடுப்பில பூனைதான் படுத்திருக்கும்."எரியாத அடுப்பிங்கே பசிக்கிங்கே உணவில்லைன்னு" அதுகூட ஓடிப்போய்டும் !
12) களவெடுக்கக்கூடாது !
ஆனா அம்மா அடுப்படி சீரக டப்பாவுக்குள்ள வச்சிருக்கிற சில்லரை எடுக்கலாமாம் !
13) சொன்ன சொல் மாறக்கூடாது !
யாரும் மாத்தமாட்டாங்கப்பா."அ" வை "ஆ" வன்னான்னு யாராச்சும் சொல்லுவாங்களா !
14) சும்மா இருக்கிறது சுகம்ன்னு யாராச்சும் சொன்னா கேட்டுக்கக்கூடாது !
வடிவேலு சும்மா இருக்கிறதே கஸ்டம்ன்னு சொல்லியிருக்கார்.எல்லாரும் கேட்டிருப்பீங்க !
15)கல்விக்கு எல்லையே இல்லை.எப்பவும் படிச்சுக்கிட்டே மாணவனாய் வாழணும் !
கடைசி வரைக்கும் மாணவனா இருந்தா நாங்க ஆசிரியராகிற இலட்சியம்...!
16) அடுத்த மதத்தை மதிக்கப் பழகிக்கணும் !
எங்க வீட்ல எல்லாச் சாமியும் ஆசாமியும் இருக்கு.நம்புங்க !
17)மத்தவங்க எங்களுக்கு என்னல்லாம் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அதை நாங்க மத்தவங்களுக்க்குச் செய்யக்கூடாது !
நினைக்கலாமே தவிர செய்யாமல்லாம் இருக்கமுடியாது.இது ரொம்ப ரொம்பக் கஸ்டம் !
18) அதேபோலவே அவங்க எப்பிடியெல்லாம் மதிக்கணும்ன்னு நினைக்கிறோமோ அதேபோலவே நாங்களும் மத்தவங்களை (உணர்வுக்கும்) மதிக்கணும் !
பொய்யாய்ச் சிரிச்சு பசப்பிப் பேசி அதெல்லாம் மதிப்புத் தரோம்ன்னு கலக்கிடலாம் !
19) உலகின் வளங்களை அள்ளியெடுத்துக்கொண்டு வாழ்வோடு முன்னேறுங்கள் !
அதுசரி...இருந்தாத்தானே அள்ள.எந்த இயற்கையை விஞ்ஞானம்ங்கிற பேரில விட்டு வச்சிருக்காங்க.மரங்கள் அழிப்பு.வானத்தில பூமியில....ஏன் கடலுக்கு நடுவிலகூட ஓட்டை.முன்னேறி மூச்சடைச்சு முக்கால் வயசிலயே போய்ச்சேர்ந்திடவேண்டியதுதான் !
20) யாரையும் கொல்லாதீங்க.வார்த்தைகளால்கூட !
வார்த்தைகளால் அடிச்சவங்க மறந்திடுவாங்க.அடிவாங்கினவங்களுக்குத்தான் காயம் வலிச்சிட்டே இருக்கும்.அப்புறம் அது வடுவா சாகிற வரைக்கும் மறையாது.இதைவிடக் கொல்றது நல்லதுன்னே நான் சொல்றேன் !
என் மூளையைக் கசக்கிப் பிழிஞ்சு வயிறு குலுங்கச் சிரிக்க இல்லாட்டியும் கொஞ்சம் புன்சிரிப்போடயாவது வாசிக்க வச்சிருக்கேனா.பதிவுக்கேத்தமாதிரி பாத்துக் கீத்துப் போடுங்கோ !

எனக்குப் பிடித்த விஷயங்கள் 7 சொல்லி இந்த விருதைப் பகிரவேணுமாம் !
எனக்கு என்ன பிடிக்கும்......யோசிக்கிறேன் !
தனிமை பிடிக்கும் !
உலக அதிசயங்கள் கலாசாரங்கள்,இயற்கை மிருகங்களின் வாழ்வியல் பார்க்கப் பிடிக்கும் !
இசை இசை இசை கேட்டுக்கொண்டே........யிருக்கப் பிடிக்கும் !
பகிர்ந்துகொடுக்க மூவர் மட்டுமே !
தனிமரம் http://www.thanimaram.org/
தனசேகரன் http://sekar-thamil.blogspot.com/
துரைடானியல் http://duraidaniel.blogspot.com/
அன்போடு ஏற்றுக்கொண்டு இன்னும் நிறைவாக எழுதக் கேட்டு வாழ்த்திக்கொள்கிறேன் !

31 comments:
Nanri Sago. Naanum appadiye seikiren!
என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹேமா
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
புதிய ஆத்திசூடி 2 உருவாக்கிவிட்டீர்கள் சகோதரி...
கூடவே உங்கள் நச் வர்ணனைகளும்...
சிரமப்பட்டு அழகாய் எழுதியதுக்கு நன்றி ஹேமா...
வாழ்த்துக்கள் உங்கள் விருதுக்கு...
பாரெங்கும் நேசம்...Bar என்று வாசிக்காதீர்கள் -:) Be nice...Cheers...
//இது ரொம்பவே சந்தோஷம்.ஆனா இவங்ககூடவும் ரொம்ப கவனமா இருக்கணும்பா.இடக்குமுடக்கா கேள்வியெல்லாம் கேக்குறாங்க.அவங்க முன்னால நாங்கதான் பொடிப்பசங்க!//
இது ரொம்ப கஷ்டம் தான் தோழி..
தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
பகிர்ந்த சிந்தனைகள் இருபதும் முத்துக்கள்!
தாங்கள் விருது பெற்றமைக்கும்
அருமையான பதிவுக்கும்
விருது பெற்றவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
தகுதியானவர்களுக்கு விருது வழங்கிய உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! அதென்ன... கள்ளுக்கடையில எல்லாரும் சமமாயிடலாமா? அவ்வ்வ்வ்...
ஆஹா அந்த இருபது தீர்மானங்களும் நக்கல் நையாண்டி கல கல..
சரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு அருமைங்க .
உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
சிரிக்கவும் சிரித்துக்கொண்டே சிந்திக்கவும் செய்யும் வண்ணம் பதிவு செய்து இருக்கின்றீர்கள்.
7 பிடிக்கும் என்பதில் இசைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் ரசனையைச் சொல்லுது ஹேமா.
ஹேமா கருத்துரைகள் தந்து ஊக்கிவிப்பதுடன் விருதும் கொடுத்திருப்பது இன்னும் அதிகம் எழுதனும் என்ற ஆவலைத்தூண்டுது.
நன்றி விருதுக்கும் ,விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும்.
20 சந்தோஷங்களும் அதற்குண்டான உங்கள் கமெண்ட்களும் உண்மையிலேயே நகைச்சுவையை தந்தது. ஏழு ஆசைகளும் நன்று. சிபி மாதிரி நீங்களும் எழுதிப் பார்க்கலாமே? (ஹி....ஹி).
விருதுக்கு நன்றி. நானும் கொடுக்கிறேன். அப்புறம் ஓட்டு போட முடியலியே?!!!.... கவனிக்கவும்.
தீர்மானங்களும், அதற்குரிய கமெண்ட்டுகளும் ரசிக்க வைத்தன. உங்களுக்கு உண்மையிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு.
சிரிக்க வைக்கும் கருத்துகளாக இல்லாமல் சிந்திக்க வைக்கும் கருத்துகளாகவும் இருக்கு.4, 5, 17, 18.....இப்படி இன்னும் சொல்லலாம். பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். உங்களிடமிருந்து பகிர்ந்து கொள்பவர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.
தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
வணக்கம் அக்கா,
புத்தாண்டுத் தீர்மானங்களை ரொம்பவே காமெடியா எழுதியிருக்கீறீங்க.
பியர் போத்தலை வைச்சிட்டு பார்த்திட்டு இருக்கிறாவாம்!
அவ்வ்வ்வ்
விருதினைப் பெற்றுக் கொண்ட உங்களுக்கும்,
உங்களிடமிருந்து விருதினைப் பெறும் நண்பர்களுக்கும்
நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
பலநாள் உங்கள் பதிவுக்கு வராமைக்கு ஸாரி ஹேமா! விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! உங்களுக்குப் பிடித்தவற்றில், தனிமையைத் தவிர மிகுதி எல்லாமும் எனக்குப் பிடிக்கும்!
மூவருக்கு விருது கொடுத்திருக்கிறீர்கள்! மிகவும் பொருத்தமானவர்கள்! உங்களிடம் இருந்து விருதுபெர்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!
அப்புறம் பதிவு செம கலக்கல்! சிரிச்சு சிரிச்சு படிச்சேன் ஹேமா! வாழ்த்துக்கள்!
வணக்கம் சகோதரி நலமா ?
எனக்கு உங்கள் பிளாக்கிலேயே உப்பு மட சந்தித்தான் பிடித்திருக்கிறது. ஹி ஹி என்ற அறிவு அவ்வளவும்தானோ?
உங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..
கலக்கல்!
ஹேமாவின் பார்வையின் சிறப்பே இதுதான். ரொம்ப அழகா கமெண்ட் கொடுத்திருக்கீங்க. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. விருது பெற்றதற்கும் அதை ஏற்றவர்களுக்கு வழங்கியதற்கும் பாராட்டுகள் ஹேமா.
ஹேமா தங்களின் கருத்துக்காக
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_13.html
வாழ்த்துகள் ஹேமா! பெறுவதும் தருவதும் தான் எத்துணை இன்பமயமாய் இருக்கிறது!!
வணக்கம் ஹேமா!காலம் கடந்த வருகை.எனினும்,அருமையான வியாக்கியானங்களைக் கண்டு உவகை.சில சிரிக்க வைத்து,சிந்திக்கத் தூண்டின!வாழ்த்துக்கள்!!!!!
விருதுகளுக்கு வாழ்த்துகள்..
அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html
Your Site Very Helpfully Information Site .
Like This
Thanks for Information
Thanks,Thanks,Thanks
»------------1.» 2014 koyell mollik New Sex video Collections
»------------1.» 2014 New xnxx Collections
»------------1.» 2014 New xnxx movie Collections
»------------1.» 2014 New indian Sex Collections
»------------1.» 2014 New tamil Sex Collections
»------------1.» 2013 New bangla Sex Collections
»------------1.» 2014 Newkristina akheeva Sex Collections
»------------1.» 2014 New katrina kaif Sex Collections
»------------1.» 2014 New GAY UA Sex Collections
»------------1.» 2014 New PORN TUB Sex Collections
»------------1.» 2014 New Gay Sex Collections
Post a Comment