Saturday, October 03, 2009

தந்தியோ தந்தி.

ன்றைய காலத்தில் இல்லாத ஒன்றாகப் போய்விட்டது தந்தி என்கிற அந்தச் சொல் கூட.இன்று SMS ,Mail போல் அன்றைய காலகட்டங்களில் தபால் கந்தோர்களில் மட்டும் அவசர செய்திகளைப் பரிமாறிக்கொள்ள இந்தத் தந்தி உதவிக்கொண்டிருந்தது என்கிறார்கள்.படித்துச் சுவைத்த ஒரு தந்தி தருகிறேன்.உங்களின் அனுபவங்களையோ கேட்ட அனுபவங்களையோ தாங்களேன் கொஞ்சம் சிரிக்க.

தபால் கந்தோரில் தந்திப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவருக்கு வேலை போய்விட்டதாம்.பின்ன...தந்தியைக் கீழ்க்கண்டபடி ஒருவரின் தந்தியை இன்னொருவருக்கு மாற்றி மாற்றி அடித்து அனுப்பினால் எப்படி...?நீங்களே தந்தியைச் சரி செய்து கொள்ளுங்கள்.

1) தந்தி - செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.இனிக் கடவுள்தான் உங்களைக் காப்பாற்றவேண்டும்.

பெற்றுக்கொள்பவர் - புதுமணத்தம்பதிகள்.

2) தந்தி - பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

பெற்றுக்கொள்பவர் - கல்லூரி மாணவன்.

3) தந்தி - பிரயாணத்தை ரத்துச் செய்யவும்.

பெற்றுக்கொள்பவர் - சாகக் கிடக்கும் ஒருவரைக் காப்பாற்றச் செல்லும் ஒரு வைத்தியர்.

4) தந்தி - வாழ்த்துக்கள்.இன்றுபோல் என்றும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பெற்றுக்கொள்பவர் - வியாபாரத்தில் நொடித்துக்கொண்டிருக்கும் ஒருவர்.

5) தந்தி - இனி எந்தவித ஒரு சதம் கூட என்னிடமிருந்து கிடைக்காது.உடனே கிளம்பி ஊருக்கு வரவும்.

பெற்றுக்கொள்பவர் - நடிகையை ஒப்பந்தம் செய்யப் போயிருக்கும் பிரபல பட இயக்குனரின் காரியதரிசி.


ன்னொரு செய்தியையும் இதோடு இணக்கிறேன்.அதுவும் படித்துச் சுவைத்தது.அந்தக் காலத்தில் பட்டிணத்தடிகள் தஞ்சை ஜில்லா ,திருவாரூரில் ஒரு இளைஞனுக்குத் திருமணம் நடந்தபோது தந்தி மூலமாக வாழ்த்துரை வழங்கியதைப் பாருங்கள்.

"நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலவனெல் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்.
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மறத்துணையிற் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கினைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே !"

பட்டிணத்தாருடைய வாழ்த்து எவ்வளவு பொருள் சுவையும் நகைச்சுவையும் அடங்கியிருக்கிறது.பாருங்களேன்.

ஹேமா(சுவிஸ்)

25 comments:

புழுதிப்புயல் said...

நல்ல நகைச்சுவை பதிவு. நன்றாக இருத்து.

கவிக்கிழவன் said...

சிரிகிறேன் சிரிகிறேன் சிரிகிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

kikikiki

thamizhparavai said...

நல்ல பதிவு ஹேமா...
தந்தியை யார் மறந்தது...? இன்னும் தமிழினத் தலைவர்(?) கலைஞர், ஈழத் தமிழர்களுக்கு பிரச்சினைன்னா தந்திதான் அடிக்கச் சொல்றாரு...

thamizhparavai said...

இன்னுமொரு விசயம் ‘பெரியார்’ படத்தில் பார்த்தது...
அண்ணா தந்தி கொடுக்கப் போவார். பெரியார் அழைத்து படித்துப் பார்ப்பார்...
அதில் “already told" என்றிருக்கும்.அதனைப் படித்த பெரியார் அண்ணாவைக் கடிந்து கொள்வார்,”ஏன் இரண்டு வார்த்தைகள் அனுப்பி காசை வீணாக்குகிறீர்கள். “tolded" என ஒரு வார்த்தையில் அனுப்பிவிடலாமெ” என்பார்...

ஆரூரன் விசுவநாதன் said...

பட்டினத்தார் பாடல்கள் தொகுப்பிலிருந்த இந்த பாடலை எப்படி திருமண வாழ்த்து தந்தியாக்கினீர்கள்...?

ஹேமா said...

வாங்க சுதர்ஷன்.கிரிக்கெட் கலக்கிறீங்க.எனக்கு கிரிக்கெட் பற்றி பெரிசா ஒன்றும் தெரியாது அதால பேசாம வந்திட்டேன்.ஏன் குழந்தைநிலாக்கு வாறதில்ல.
வாங்கோ ஒருக்கா.

***********************************

வாங்கோ யாதவன்.யாழில் இருந்து இப்போ நிறையப்பேர் இணையத்தில் உலவுகிறார்கள்.சந்தோஷமாயிருக்கு.
நீங்க சிரிச்சது எனக்கும் கேட்டது.

*********************************

வசந்த்,உங்க சிரிப்பு பத்தாது.உங்க நகச்சுவைக்கு இது ஒரு தூசு.அதான் மெல்லமா சிரிச்சிட்டுப் போயிட்டீங்க.
பரவாயில்ல.எனக்கு இது போதும்.

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா,சரியாச் சொல்லிட்டீங்க.நான் மறந்தே போனேன்.சேர்த்திருக்கலாம் எங்களை ஏமாத்துற அவரது ஒரு தந்தியையும்.

நீங்க தந்த அண்ணா-பெரியார் தந்தி அனுபவமும் ரசித்தேன்.இப்படிப் பல எதிர்பார்த்தேன்.உப்புமடச் சந்தியை யாரும் கண்டு கொள்வதில்லை !

ஹேமா said...

வாங்க ஆரூரன்.பல விஷயங்களை அறிந்த நீங்கள் ஒரு தந்தி அனுபவம் தந்திருக்கலமே !

என்னிடம் இருந்த ஒரு புத்தகத்தில் பட்டினத்தார் இப்படி ஒரு தந்தி கொடுத்திருந்தார்ன்னுதான் இருக்கு.நானாக ஆக்கவில்லை.

ஸ்ரீராம். said...

சர்வர் சுந்தரம் நாகேஷ் போல எல்லோரையும் ஒரு இடத்தில் நிறுத்தி அவரவர் தந்தியை அவரவரிடத்தில் தந்து விட்டால் வேளை திரும்பக் கிடைத்திருக்குமே...சொல்லிப் பாருங்களேன்!!

- இரவீ - said...

தந்தின்னு சொல்லக்கூடாது பொறுமையா வந்துட்டேன் ...

- இரவீ - said...

தந்தின்னு சொன்னா ஏன் எதுக்குன்னு கேக்காம அழற ஆளுங்களை நான் நேரில் பாத்திருக்கேன்.

தந்தி பத்தி இன்னும் நிறைய சொல்லி இருக்கலாம்.

- இரவீ - said...

சரி சந்தோசமா எழுதி இருக்கீங்க ... கொஞ்சம் என்னால முடிஞ்சத செய்றேன் ....

- இரவீ - said...

//இன்றைய காலத்தில் இல்லாத ஒன்றாகப் போய்விட்டது தந்தி என்கிற அந்தச் சொல் கூட.//

யாரு சொன்ன நாங்க தன்மானத்துக்கே தந்தி அடிச்சவங்க .

- இரவீ - said...

//இன்று SMS ,Mail போல் அன்றைய காலகட்டங்களில் தபால் கந்தோர்களில் மட்டும் அவசர செய்திகளைப் பரிமாறிக்கொள்ள இந்தத் தந்தி உதவிக்கொண்டிருந்தது என்கிறார்கள்.//

ஏன் நீங்க பாத்ததே கிடையாதா ...
என்னமோ பல ஜென்மத்துக்கு முன்னாடி உபயோகிச்சு - இப்போ புழக்கத்தில் இல்லைங்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க ??
இதெல்லாம் ஓவரு சொல்லிட்டேன்.

- இரவீ - said...

//படித்துச் சுவைத்த ஒரு தந்தி தருகிறேன்.//
படிச்சு சுவைச்சீங்களா ??? அப்போ காகிதம் தின்கிற பழக்கம் உண்டா ?

- இரவீ - said...

//உங்களின் அனுபவங்களையோ கேட்ட அனுபவங்களையோ தாங்களேன் கொஞ்சம் சிரிக்க. //
நீங்க நிறைய சிருச்சுடுவீங்க அதான் தரள.

- இரவீ - said...

இதுக்கு முன் தபால் கந்தோரில் தந்திப் பிரிவில் வேலை செய்தத சொல்லவே இல்ல. இப்பவாவது சொன்னீங்களே.

- இரவீ - said...

//1) தந்தி - செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.இனிக் கடவுள்தான் உங்களைக் காப்பாற்றவேண்டும்.

பெற்றுக்கொள்பவர் - புதுமணத்தம்பதிகள்.//
மிக சரியான தந்தி தானே. இதில் என்ன தவறு ?

- இரவீ - said...

//அந்தக் காலத்தில் பட்டிணத்தடிகள் தஞ்சை ஜில்லா ,திருவாரூரில் ஒரு இளைஞனுக்குத் திருமணம் நடந்தபோது தந்தி மூலமாக வாழ்த்துரை வழங்கியதைப் பாருங்கள்.//
உங்கள யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க ... எங்க ஊற வேற சொல்லி எமாத்துரான்களே ??? சரி இன்னமயாவது கொஞ்சம் சூதனமா இருங்க.

- இரவீ - said...

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கினைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே !"

ஆ.ஞானசேகரன் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது.... பாராட்டுகள் ஹேமா

ஹேமா said...

ஸ்ரீராம்....
சர்வர் சுந்தரம் நாகேஷ் போல எல்லோரையும் ஒரு இடத்தில் நிறுத்தி அவரவர் தந்தியை அவரவரிடத்தில் தந்து விட்டால் வேளை திரும்பக் கிடைத்திருக்குமே...சொல்லிப் பாருங்களேன்!!

அட ஸ்ரீராம்,நல்ல யோசனைதான்.ஆனா யார் அவர்ன்னு தெரியாதே !
********************************

- இரவீ - ...
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கினைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே !"

கும்மி....கும்மி.நல்ல வேளை "வேண்டாத ஞாயிறு" தப்பிச்சுது.ரவி...அது சொல்லி இது சொல்லி கடைசில என்னைக் குரங்குன்னே சொல்லியாச்சா !எனக்கும் ஒரு வேளை வராமலா போகும்.

உங்க ஒரு பதிவில "வாவ்" சொல்லித்தான் அப்புறம் நான் மன்னிப்பும் கேட்டேன்.ஞாபகமிருக்கா !

*********************************

நன்றி ஞானம்.தந்தி பற்றிய செய்திகள் நிறையக் கிடைக்கும்ன்னு எதிர்பார்த்திருந்தேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கலைஞருக்கு அவசர தேவைகளுக்கும் இந்த தந்தி பயன்படுகிறது.

Nathanjagk said...

2) தந்தி - பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

இதை ​பெற்றுக்​கொள்ள ​பொருத்தமானவர்: திரு. தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள்

* * *

தந்தி - பிரயாணத்தை ரத்துச் செய்யவும்.

பெற்றுக்கொள்பவர் - ராக்கெட்டில் ​சென்று ​கொண்டிருக்கும் விண்வெளி வீரர் (ராக்கெட்டுக்கு ​எப்படி தந்தி ​கொடுக்கிறது???)

* * *

4) தந்தி - வாழ்த்துக்கள்.இன்றுபோல் என்றும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பெற்றுக்கொள்பவர் - கும்மிப் பதிவில் சிக்கி சின்னாபின்னாமான வலைபதிவர்!

* * *

"ஆப்பசைத்த குரங்கு" பற்றிய பட்டினத்தார் பாடல் அருமை! நாங்கெல்லாம்.. ஆப்படிக்கிற குரங்குக!

* * *

இந்த பின்னூவை தந்தியாக பாவித்து பதில் தந்தி அனுப்பவும்

* * *

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP