காரணம்,சாமம் என்பது ஒரு கால அளவீடு.அது இரவு நேரத்திற்கு மட்டும் உரியது அன்று.
சாமம் என்பது பகலிலும் உண்டு.இரவிலும் உண்டு.
60 நொடி = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை ( 1 நாழிகை = 24 நிமிடம் )
71/2 நாழிகை = 1 சாமம் .
8 சாமம் = 1 நாள் .
7 நாள் = 1 வாரம் .
15 நாள் = 1 பக்கம் .
2 பக்கம் = 1 மாதம் .
6 மாதம் = 1 அயனம் .
2 அயனம் = 1 ஆண்டு .
இதுவே நம் மக்களின் கால அளவீடு ( கணக்கீடு ).
இதில் 8 சாமங்கள் கொண்டது 1 நாள்.அதாவது பகலில் 4 சாமம் , இரவில் 4 சாமம். அதாவது ஒரு சாமம் என்பது 3 மணி நேரம்.எனவே,சாமம் என்பது வேளையைக் குறிப்பது என்பது தவறு.
ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் என்பது கணக்கு.60 நாழிகைகளை 8 ஆல் வகுத்தால் 7 1/2 கிடைக்கும்.7 1/2 நாழிகை ஒரு சாமம்.நான்கு சாமம் சேர்ந்தது ஒரு பகல்.அதேபோல் நான்கு சாமம் சேர்ந்தது ஓர் இரவு.எனவே சாமம் என்பது இரவு அல்ல.
ஹேமா(சுவிஸ்) [இன்று மெயிலில் கிடைத்தது.]
20 comments:
நாங்களும்
நடு - சாமம் என்று சொல்வோம்
....
நடு சாமம் - என்பது வெறும் இரவாக மட்டும் கொள்வது அல்லவென்றே தோன்றுகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை சாமங்கள் என பிரித்து - அதில் நடுவே வரும் சாமம் என்பதாக நான் நினைத்து கொண்டேன்.
ஜமால் வாங்கோ....வாங்கோ.எங்கன்னு தேடவும் முடியாம கேக்கவும் யாருமில்லாம இருந்தேன்.சாமத்தோட சாமமா வந்தீங்களே சந்தோஷம்.சுகம்தானே ஜமால்?
மிக்க நலம் ஹேமா!
தாங்களும் குழந்தையும் நலம் தானே.
-----------------
கேட்பதற்கா வழியில்லை
மின்மடல் முகவரி இருக்கு
அல்லது வலைப்பூவில் கேட்க்கலாம்
அல்லது ஒரு பதிவு போட்டு
’காணவில்லை’ன்னு போடலாம்
------------------
ஹா ஹா ஹா ஹா ஹா
சும்மா சும்மா
நல்ல தகவல்
சாமம் தொடர்பாக சாமம் சாமமா படிச்சேன்
ஹேமா இந்த நடுச்சாமத்துக்கும் எனக்கும் நிறய தொடர்பு இருக்கு.....
நடு சாமத்தில எழுதுனீங்களா?
சாம - பேத - தண்டம் ... அப்டீங்கரதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா?
இருந்தா என்ன அது ?
இல்லாட்டி ஏன் இல்லை?
ஓ...ஒரு நாளைக்கு அறுபது நாழிகையும் என்று பெரியவர்கள் பேசக் கேட்கும்போது அதை ஒரு மணி நேரத்தோடு தொடர்பு படுத்திக் குழம்பி இருக்கிறேன். பிரம்ம நாழிகையாக இருக்குமோ என்றும் எண்ணியதுண்டு....இதானா அது...ஓ...
நீங்க ,வந்த மெயில் சொன்னதெல்லாம்
சரியென தோணுது ஏன் என்றால் ....
நான் பாடசாலை விட்டு வீடுவரும் போது...
என் பாட்டி அன்பா திட்டுவார்
இப்படி....பகல் சாமத்தில கொழுத்திற வெயிலில
ஒரு குடை கூட பிடிக்காம வாறாளே என்பார்.
இதைப் படித்தவுடன் ஞாபகம் வருகிறது.
வாங்க யாதவன்.எனக்கும் புதுத் தகவல்கள் இவைகள்.எனவேதான் பதிவில் இட்டேன்.
********************************
வசந்த்,என்ன சாமத்திலதான் உங்க பதிவுகள் யோசிச்சு எழுத வசதியாயிருக்குமோ.அதுதான் நகச்சுவை வழிய வழிய வருதோ!இல்லாட்டி யாருக்கிடயும் சாமத்திலதான் நகைச்சுவைக் களவோ !
*********************************
என்ன யோகன் அது பகல் சாமம்.நீங்க பாத்ததுதான் இரவுச் சாமம்.
//- இரவீ - ...
சாம - பேத - தண்டம் ... அப்டீங்கரதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா?
இருந்தா என்ன அது ?
இல்லாட்டி ஏன் இல்லை?//
வாங்க ரவி,கும்மிக்கு இப்போ எல்லாம் நல்ல தவில் சேரமாட்டுதாக்கும்.அதுதான் தனித் தவில்.பாவம் நீங்க !அதுதான் என்னையே கலாய்க்கிறீங்க.எனக்கே தெரில இதுபத்தி.நானும் புதுத்தகவல் ன்னுதான் போட்டேன்.என்கிட்டயே கேக்கிறீங்க.தெரிஞ்சா நீங்களே சொல்லுங்க.எல்லாப் பின்னூட்டத்திலயும் கேள்வியோடதான் போறீங்க !
*********************************
//ஸ்ரீராம்....
ஓ...ஒரு நாளைக்கு அறுபது நாழிகையும் என்று பெரியவர்கள் பேசக் கேட்கும்போது அதை ஒரு மணி நேரத்தோடு தொடர்பு படுத்திக் குழம்பி இருக்கிறேன். பிரம்ம நாழிகையாக இருக்குமோ என்றும் எண்ணியதுண்டு....இதானா அது...ஓ...//
ஸ்ரீராம்,எனக்கும் புதுசாத்தான் இருக்கு.என் தாத்தா சொன்னது சின்னதா ஞாபகம் வருது.சரியா நினைவு படுத்த முடில.
*********************************
//கலா ...
நீங்க ,வந்த மெயில் சொன்னதெல்லாம்
சரியென தோணுது ஏன் என்றால் ....
நான் பாடசாலை விட்டு வீடுவரும் போது...
என் பாட்டி அன்பா திட்டுவார்
இப்படி....பகல் சாமத்தில கொழுத்திற வெயிலில
ஒரு குடை கூட பிடிக்காம வாறாளே என்பார்.//
பாருங்க கலா அவங்க அளவுக்கு எங்களுக்கு ஒண்ணுமே தெரில.நினைக்கவே கஸ்டமா இருக்கு.என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து என்ன கேடுக்கு !
நல்ல ஒரு தேடல். இப்ப யாரக்கா சாமம் ஏமம் எல்லாம் பாக்கிறது. இரவு பகல் வித்தியாசமில்லாத உலகமாப்போச்சு. குழந்தை நிலவை கண்டுபிடிக்க முடியல. லிங்க் ஐ தாங்கோ. வாறகிழமை சந்திக்கிறன்.
சுதர்ஷன்,வாங்கோ.ஏன் இப்பிடி மனம் அலுத்து.சந்தோஷமா தைரியமா இருக்கவேணும்.நீங்க சொல்றதும் சரிதான்.முந்தி ஊர்ல இருக்கேக்க சாமம் எண்டா போகாத வராத குடுக்காத எண்டு
சொல்லுவினம்.இப்ப எஙக்ளுக்கு எல்லா நேரமுமே ஒண்டாத்தான் கிடக்கு.
http://kuzhanthainila.blogspot.com/
இவ்வளவு நாளா உப்புமடச்சந்திக்கு நான் ஏன் வரல்லைன்னு கேக்கமாட்டீங்களா ஹேமா. இப்பதான் எனக்குத் தெரியும்னு சொல்லி இருப்பென்ல. அதுவும் தமிழிஸ் வழியா தெரிந்து கொண்டேன். சாமக்கோழி கூவிதான் எனக்கு பொழுது விடிந்திருக்கிறது.
இதுவரை நானும் நள்ளிரவைத்தான் நடுசாமம்னு நினைத்திருந்தேன்.
நல்ல தகவல்கள் ஹேமா...
:)
present Miss
இப்போதுதான் பதிவைப் பார்த்தேன் ஹேமா. கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் எனது மாணவர் ஒருவர் நாழிகை பற்றிய கேள்வியொன்றை கேட்டார். மிகவும் சிரமப்பட்டுத் தான் தகவல் திரட்டினேன்.
உண்மையில் பயனுள்ள தகவல்.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் வட்டார மொழி வழக்கில் சாமம் என்பது இரவாகத்தான் பொருள் கொள்ளப்படுகிறது!
உதாரணத்துக்கு கிழமை என்றால் வாரம்!
ஆனால் தினம் தினம் அதை பயன்படுத்துகிறோமே!
நவாஸ் இப்போதான் உப்புமடச் சந்தி கண்டு பிடிச்சீங்களா !குழந்தைநிலாவிலயும் காணலியா நீங்க.இப்பவாச்சும் வந்தீங்களே சந்தோஷம்.
****************************
நன்றி ஞானம்.
*****************************
நன்றி நேசன்.
*********************************
நிர்ஷன் உங்களுக்குப் பிரயோசனப்பட்டிருக்கு என்பதை நினைக்கச் சந்தோஷமாயிருக்கு.அதை அனுப்பினவருக்கே நன்றி சொல்வோம்.
**********************************
வாலு,எனக்கும் இது புதுத்தகவல்கள்தான்.இன்னும் இங்கு வரும் பின்னூட்டங்கள் மூலமாகவே இன்னும் அறிந்துகொள்கிறேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment