என்னால முடிஞ்சது சொல்லிக் குடுத்தேன்.இனி அவர் சமைச்சாரா சாப்பிட்டாரா ,ஏன் தனிய சமைக்கிறார்ன்னு அவர்கிட்டயே கேட்டுக்கோங்க.ரொட்டி நல்லாயிருந்தா மட்டும் என்கிட்ட சொல்லுங்க.
காய்கறி ரொட்டி
*******************
கோதுமை மா(மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையானளவு
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 2 மேசைக்கரண்டி
சூடான நீர் - (1- 2)கப்[கைக்கு இதமான சூடு போதும்]
எண்ணைய் - தேவையானளவு
பெரியவெங்காயம் [சிறிது சிறிதாக வெட்டினது] - 1
பச்சைமிளகாய்[சிறிய வட்டமாக வெட்டினது] - 3 - 6[உறைப்புக்கு மாதிரி]
கருவப்பிலை [சிறிது சிறிதாக வெட்டினது]- சிறிதளவு
லீக்ஸ் [சிறிய மெல்லிய வட்டமாக வெட்டினது]- ஒரு லீக்ஸ் ல் பாதி(25கிராம்)
கரட் (துருவியது) - 1(25கிராம்)
பீன்ஸ் [மெல்லிய வட்டமாக வெட்டினது]- 10 (25 கிராம் )
முட்டைகோஸ்[சிறிது சிறிதாக]- சிறிய துண்டு (15கிராம்)
உருளைகிழங்கு [துருவியது] - 1
[நீர்த்தன்மை இல்லாத காய்கறிகள் எதுவுமே போடலாம்.விரும்பினா காய்கறிகளை ஒரு நொடி மட்டும் வதக்கியும் போடலாம்.]
எப்பிடிச் செய்யிறது
***********************
1)கோதுமை மா [மைதாமா],உப்பு,பால்,பட்டர்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
கருவப்பிலை, லீக்ஸ்,கரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,உருளைகிழங்கு
எல்லாத்தையும் போட்டு கலந்து எடுங்க. விரும்பினா தேங்காப்பூவும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.[ஒரு பிடியளவு]
2)அதுக்குப் பிறகு மெல்லிய சூடான தண்ணீர் விட்டு நல்லா பிசைஞ்சு எடுங்க.நல்லா இறுக்கமாவோ இல்லாட்டித் தளர்வாகவோ பிசைய வேணாம்.தண்ணியை கொஞ்சம் கொஞ்சமா விட்டுப் பிசைஞ்சு எடுங்க.அப்ப சரியா வரும்.
(3)அதுக்குப் பிறகு குழைத்த மாவை சிறு உருண்டைகளா உருட்டி எடுத்து வட்டமாக தட்டி எடுங்க.
(4)அதுக்குப் பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணைய் தடவி ரொட்டியைப் போட்டு வேகவிடுங்க.அடுப்பை மெல்லிய சூட்டில வச்சிருங்க.அப்பதான் இரண்டு பக்கமும் உள்ளுக்கும் சரியா வெந்து வரும்.
காய்கறி ரொட்டி ரெடி.கண்டிப்பா செய்து பாருங்க.நல்லாயிருக்கும்.
சீக்கிரமாய்ச் செய்யக்கூடியதும் ஆரோகியமானதுமான சாப்பாடு.
பி.கு - கடைசில தோசைக்கல் இல்லன்னு சொல்லிட்டார்.அப்புறம் வாங்கிச் சுட்டேன்னும் சொன்னார்.
ஹேமா(சுவிஸ்)
20 comments:
எனக்கும் ஒரு ப்ளேட் காய்கறி ரொட்டி பார்சல்..............
ஆஹா இப்படிதான் ரொட்டி சுடனுமா?
வெற்றி நிச்சயம் ... இது வேத சத்தியம் . நான் இந்த ரொட்டியை சமைத்து காட்டுகிறேன் ..... இது ஒபாமா மேல் சத்தியம்
முதல் சமையல் குறிப்பு இதுதான் போலிருக்கு....
ஆஹா,அருமை.....பேஷ்....பேஷ்...ரொம்ப நன்னாருக்கு......
அப்படின்னு செஞ்சு, சாப்பிட்டுவிட்டு சொல்லுவிடுகிறேன்.
வாழ்த்துக்கள்
அடடடா - ஹேமா இதுவும் துவங்கியாச்சா
நல்லது - நல்லது.
ஹேமா இப்படி ஒரு தலைப்பில் நீங்கள் எழுதுகின்றீர்கள் என்பது எனக்கு இன்னைக்குதான் தெரியும். ரொட்டி நல்லா இருக்கு. டிரை பண்ணறேன். சிங்கையில் நான் சமைப்பது இல்லை. கடையில் தான் உணவு. நான் என் அண்ணா வீட்டிற்கு செல்லும் போது அண்ணியுடன் சேர்ந்து சமைத்துப் பார்க்கின்றேன்.
//கடைசில தோசைக்கல் இல்லன்னு சொல்லிட்டார்.அப்புறம் வாங்கிச் சுட்டேன்னும் சொன்னார்.//
அடிக்கிற வெயிலுக்கு மொட்டை மாடியில் போட்டால் அதுவா சுட்டுக்குமே!
// ஸS.A. நவாஸுதீன் ...
எனக்கும் ஒரு ப்ளேட் காய்கறி ரொட்டி பார்சல்//
நவாஸ் ,நேத்தே அனுப்பிட்டேன்.வந்திச்சா?
********************************
//யோ வாய்ஸ் (யோகா)...
ஆஹா இப்படிதான் ரொட்டி சுடனுமா?//
யோகு,நானே உங்க ஊர்ப்பக்கம்தான் இந்த ரொட்டியைச் சுவையோடு சாப்பிட்டுப் பழகினேன்.
//டம்பி மேவீ ...
வெற்றி நிச்சயம் ... இது வேத சத்தியம் . நான் இந்த ரொட்டியை சமைத்து காட்டுகிறேன் ..... இது ஒபாமா மேல் சத்தியம்.//
டம்பி அப்பிடீனா அண்ணைக்கு தோசைக்கல் வாங்கவும் இல்ல.
ரொட்டி சுடவும் இல்ல.ஒபாமா மேல சத்தியத்தில இனித்தான்.
சரியாப்போச்சு.பாவம் ஒபாமா.
//ஆரூரன் விசுவநாதன் ...
முதல் சமையல் குறிப்பு இதுதான் போலிருக்கு....
ஆஹா,அருமை.....பேஷ்....பேஷ்...ரொம்ப நன்னாருக்கு......
அப்படின்னு செஞ்சு, சாப்பிட்டுவிட்டு சொல்லுவிடுகிறேன்.//
ஆரூரன் செய்து பாருங்க.நல்லாயிருக்கும்.ஒரு நாளைக்கு வீட்டில ஓய்வு குடுத்திட்டு உங்க சமையலா இருக்கட்டுமே !
இதுக்கு முந்தி கொள்ளு ரசம்,
கொள்ளு சூப்ன்னு கலக்கலா குடுத்திருக்கேனே.பாக்கலியா நீங்க.
*********************************
//நட்புடன் ஜமால்...
அடடடா - ஹேமா இதுவும் துவங்கியாச்சா
நல்லது - நல்லது.//
ஜமால்,நான் பட்ட இன்பம் நீங்களும் படவேண்டாமோ !
//பித்தனின் வாக்கு ...
ஹேமா இப்படி ஒரு தலைப்பில் நீங்கள் எழுதுகின்றீர்கள் என்பது எனக்கு இன்னைக்குதான் தெரியும். ரொட்டி நல்லா இருக்கு. டிரை பண்ணறேன். சிங்கையில் நான் சமைப்பது இல்லை. கடையில் தான் உணவு. நான் என் அண்ணா வீட்டிற்கு செல்லும் போது அண்ணியுடன் சேர்ந்து சமைத்துப் பார்க்கின்றேன்.//
என்ன பித்தன்.எப்பிடி ஒவ்வொருநாளும் கடையில சாப்பிடுறீங்க?அதோட அசத்தலாச் சமையல் குறிப்பெல்லாம் தாறீங்க.நான் போன வருடம் சிங்கை வந்திருந்தேன்.மூன்று வாரமாக ஒவ்வொரு இடமாகச் சாப்பிட்டுப் பார்த்தோம்.சரிவரவில்லை.கடைசியாக காரைக்குடின்னு ஒரு உணவகத்தில் பரவாயில்லை மாதிரி இருந்தது.
//வால்பையன் ...
//கடைசில தோசைக்கல் இல்லன்னு சொல்லிட்டார்.அப்புறம் வாங்கிச் சுட்டேன்னும் சொன்னார்.//
அடிக்கிற வெயிலுக்கு மொட்டை மாடியில் போட்டால் அதுவா சுட்டுக்குமே!//
முதல்ல அவர் உண்மையா ரொட்டி சுட்டாரா இல்ல அவர்கூட இருந்தவங்களைச் சுட்டுகிட்டு இருக்காரான்னு துப்புத் துலக்குங்க வாலு.இதில வேற ஒபாமாவையும் கூப்பிடுறார் துணைக்கு !
"ஹேமா said...
//டம்பி மேவீ ...
வெற்றி நிச்சயம் ... இது வேத சத்தியம் . நான் இந்த ரொட்டியை சமைத்து காட்டுகிறேன் ..... இது ஒபாமா மேல் சத்தியம்.//
டம்பி அப்பிடீனா அண்ணைக்கு தோசைக்கல் வாங்கவும் இல்ல.
ரொட்டி சுடவும் இல்ல.ஒபாமா மேல சத்தியத்தில இனித்தான்.
சரியாப்போச்சு.பாவம் ஒபாமா."
ஹேமா .... அன்று தோசைக்கல் கடன் வாங்கி முயற்சித்து பார்த்தோம். தோசைக்கும் ரொட்டிக்கும் இடைய ஒரு வஸ்துயாக தான் வந்தது. அதற்க்கு டொஸ்பதி என்று பெயர் வைத்தோம்.
இனிமேல் தான் தோசைக்கல் சொந்தமாக வாங்க வேண்டும்
எவ்வளவு அருமையான,விதம்விதமான
சாப்பாடெல்லாம் சிங்கையில் கிடைக்கும்
போது .....இப்படி சொல்லலாமோ ஹேமா?
உங்க ரொட்டியை பாத்துப்,பார்த்து சுட்டு
மேவீ எல்லோரும் பல சுத்து பெருத்திருப்பார்கள்
என நினைக்கின்றேன் !
கட்டான கட்டுடலாய் இருக்க நான் ஒரு
குறிப்பு சொல்லட்டுமா?...
அதுதாங்க ,....ச மையல் குறிப்பு
ரெடியா இருங்கள் ..
தொடரும்.....
பால், பட்டர், உருளை, எண்ணை இத்தனை இருக்கே, இது நிஜமாவே ஆரோக்கியமானதுதானா?
மைக்ரோவேவ்ல சீக்கிரமா, ஆயில் கம்மியா சமைக்கிற மாதிரி ஒரு ஹெல்தி டயட் ரெஸிபி சொல்லுங்களேன், ப்ளீஸ்!
//ஜெகநாதன் ...
பால், பட்டர், உருளை, எண்ணை இத்தனை இருக்கே, இது நிஜமாவே ஆரோக்கியமானதுதானா?
மைக்ரோவேவ்ல சீக்கிரமா, ஆயில் கம்மியா சமைக்கிற மாதிரி ஒரு ஹெல்தி டயட் ரெஸிபி சொல்லுங்களேன், ப்ளீஸ்!//
ஜெகன் நீங்க சொன்ன அயிட்டமெல்லாம் தவிர்க்கன்னு நான் சலாட்டும் பாணும்,சோளக்குறுனல் உப்புமா,சூப்ன்னுதான் சாப்பிடுறேன்.
நீங்களும் சாப்பிட்டுப் பாருங்களேன்.
ஆண்கள் அழகாய் இருக்கன்னு ஒரு உணவுப் பதிவு போடத்தான் வேணும்.கலாவும் போடுறேன்ன்னு சொல்லியிருக்காங்க.
ஜெகன் உங்களுக்காக...!
சோயா பொடிமாஸ்.
********************
தே.பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 25
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணேய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு ௧ டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை :
*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் என்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை வதக்கவும்.
*பின் சோயா+கேரட் துறுவலை சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.
பி.கு:இந்த பொடிமாஸ் சத்து நிறைந்தது.டயட்டில் இல்லாதவர்கள் தேங்காய்ப்பூ சேர்க்கலாம்.
ஹேமா!
ரெஸிபிக்கு ரொம்ப நன்றி!
சோயா பொடிமாஸ் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷனா இருக்கும் என்று நம்புகிறேன். செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!
-
சோயா சாப்பிட்டால் அஸிடிட்டி வரும். அது ஒண்ணுதான் பிரச்சினை. நான் இப்போது ஸ்ட்ரிக்ட் டயட் என்ற பெயரில் காரம், உப்பு, எண்ணெய், வெங்காயம் (தாளிதமே செய்வதில்லை) இல்லாம் மைக்ரோவேவ் குக்கிங்கில் சாப்பிடத் துவங்கியிருக்கிறேன்.
-
இன்று காலை நானே என் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவைத் தயார் செய்து அலுவலகம் எடுத்து வந்திருக்கிறேன். என்ன தெரியுமா?
கொஞ்சம் மேகி வித் ஃப்ரோஸன் ஸ்வீட் கார்ன்ஸ் + பீன்ஸ். ஆபிஸில் யாரும் கேட்டா இதுக்கு பேரு Miso saladன்னு பீத்திக்கிறேன் (no oil, no onions)
மதியஉணவு: 2 சப்பாத்தி, தொட்டுக்கு பீன்ஸ், கேரட் மிக்ஸ் க்ரேவி (here also no oil, no onions)
-
வெங்காயம், எண்ணை, கடுகு தாளிதம் இல்லாம என்ன சாப்பாடுன்னு தோணுதா?
பிரச்சினை என்னன்னா... காலையில 4.30 மணிக்கே எந்திரிச்சு ப்ரேக்ஃபாஸ்ட் மற்றும் லஞ்ச் ரெடி பண்ணிட்டு ஆபிஸ் கிளம்பியாகணும். கேஸ் ஸ்டவைவிடமைக்ரோவேவ் என்னை மாதிரி நவீன தமயந்தி புருஷங்களுக்கு லாயக்கு! சப்பாத்திக்கு மட்டும் கேஸ் ஸ்டவ் பயன்படுத்துறேன்.
-
இந்த சோயா பொடிமாஸ்ஸை நீங்க சொன்ன மாதிரி அப்படியே செஞ்சிட்டு, திரும்ப என் ஸ்டைலில் (!?) மைக்ரோவேவுகிறேன்!
-
ஆப்டர்ஆல் நானேதானே சாப்பிட போறேன்!
"சட்டி சுட்டதடா"-
"சட்டி சுட்டதடா"-
Post a Comment