Sunday, October 25, 2009

பகலொளி சேமிப்பு நேரம்.


██ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படும் பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் முன்னர் கடைப்பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படாத நிலப்பகுதிகள்.

கலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும்.இது பொதுவாக ஒரு மணி நேரமாகும்.இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது."சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இம்முறை பின்பற்றப்படாவிட்டால் காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.

பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில் பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

அரசுகள் சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால் இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன.ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது.இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை).மிகுதி மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை).இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.

வரலாறு

பாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1907 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.
பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது.உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1 க்கும் இடையில் பயன்படுத்தியது.

[இன்று நேரம் மாற்றப்படுகிறது.அக்டோபர் மாதக் கடைசி வாரத்திலும் ஏப்ரம் மாதக் கடைசி வாரத்திலும் மாற்றப்படும்.]

நன்றி இணையம்.

17 comments:

ஸ்ரீராம். said...

இதைப் படிக்கும்போது எங்கள் ஊர் எல்லாம் வெப்ப நகரமாகி, ஐப்பசி ஆகியும் மழை பெய்யவில்லையே என்று வருத்தம் தோன்றுகிறது.

பா.ராஜாராம் said...

விபரங்கள் அடங்கிய பகிர்வு ஹேமா..சித்தப்பா உங்களை விசாரித்தார்டா ஹேமா.

துளசி கோபால் said...

நான் வருசா வருசம் புலம்பும் சமாச்சாரம் இது.

போன வருசத்துப் புலம்பல் இங்கே இருக்கு.

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_29.html

ஹேமா said...

//ஸ்ரீராம். ...
இதைப் படிக்கும்போது எங்கள் ஊர் எல்லாம் வெப்ப நகரமாகி, ஐப்பசி ஆகியும் மழை பெய்யவில்லையே என்று வருத்தம் தோன்றுகிறது.//

அதனால்தான் இந்த நாட்டை சுவர்க்க பூமி என்கிறார்களோ !அந்தந்தக் காலத்தில் மக்களுக்கு எந்தவித கஸ்டமும் இல்லாமல் இயற்கை கூட ஒத்துழைக்கிறது.எப்போதும் வளத்தோடும் இருக்கிறது.

ஹேமா said...

//பா.ராஜாராம் ...
விபரங்கள் அடங்கிய பகிர்வு ஹேமா..சித்தப்பா உங்களை விசாரித்தார்டா ஹேமா.//

அண்ணா எங்கே காணோம் உங்களை.சித்தப்பா நல்ல சுகம்தானே.
பதிவு ஏதாவது போட்டாரா ?பாக்கணும்.அன்பாய் நானும் கேட்டேன் சொல்லுங்க.

ஹேமா said...

//துளசி கோபால் ...
நான் வருசா வருசம் புலம்பும் சமாச்சாரம் இது.

போன வருசத்துப் புலம்பல் இங்கே இருக்கு.//

வாங்க துளசி.உங்க புலம்பல் பாத்தேன்.சிரிப்பா வருது.நேரம் மாத்தி ஒரு வாரத்துக்கு படுற பாட்டை அப்பிடியே கொட்டியிருக்கீங்க.எத்தினை வருஷமா இருந்தாலும் பழக்கத்துக்கு வரவே மாட்டேங்குது.அதோட ஒவ்வொரு வருஷமும் ஒரு மணித்தியாலம் முன்னுக்கா பின்னுக்கான்னு குழப்பம்.வேலைக்குப் போனா சரியாய்த்தான் வந்திருக்கோமா
ன்னு உறுதிப்படுத்தல் வேற.
இண்ணைக்கும் நான் அப்பிடித்தான் வேலைக்குப் போய்ட்டு வந்தேன்.
ராத்திரி முழுக்கத் தூக்கம் வரல.
முன்னுக்கா பின்னுக்கா !

Nathanjagk said...

​ஹேமா,
Daylight Save Time பற்றி அருமையான தமிழ் பதிவு! என் நன்றிகள்! என் அலுவலகத்தில் இது ஒரு முக்கியமான குழப்பவாதியாக இருந்தது (அ​மெரிக்க குழுவுடன் ​​பேட்டி சமயங்களில்) ஆனால் பக​லொளி ​சே.​நே. என்பது உங்கள் ​சொந்த ​மொழி​பெயர்ப்பா? நன்றாகயிருக்கிறது!

பித்தனின் வாக்கு said...

எனக்கு இது சரியாக புரியவில்லை. கடிகாரத்தை முன்னோக்கி நகர்த்தாமல், நம் வேலை நேரம் மற்றும் பழக்கத்தை மாற்றினால் போததா. எனக்குப் குழப்பமாக உள்ளது. ஆனாலும் எதாது காரணத்துடன் தான் செய்து இருப்பார்கள் எனத் தோன்றுகின்றது. தகவலுக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

இதற்கு முன் தெரிந்தாலும்,.. விரிவான விளக்கம் அதியமாக இருக்கு தோழி. நல்ல பகிர்வு வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு ஹேமா.

வால்பையன் said...

இதுவரை 11 மணிக்கு முடிந்த அமெரிக்க சந்தை இனிமேல் 12 மணிக்கு முடிவடையும்!

- மலைநாடான said...

பொருத்தமான தலைப்பு

4Tamilmedia said...

உங்களுடைய இந்தப் பதிவினை எங்கள் தளத்தில் வலைப்பார்வை பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

ஹேமா said...

ஜெகா வாங்க.இப்போ எல்லாம் அடிக்கடி காணக்கூடியதா இருக்கு.சந்தோஷம்.இந்த நேரமாற்றம் எப்பவுமே என்னைத் தடுமாற வைக்கிற ஒன்று ஒவ்வொரு வருஷமும்.எப்பிடித்தான் நினைச்சாலும் குழப்பமதான்.ஆமாம் ஜெகன் இணையத்திலிருந்துதான் மொழிபெயர்த்துச் சுருக்கி எடுத்தேன் இந்த விளக்கங்களை.

தந்தியோ தந்தியிலும் உங்கள் பின்னூட்டம் நகைச்சுவையாக இருக்கிறது.அதை உங்கள் பதிவில் தொடருங்களேன்.உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு இன்னும் கூடுதலாகவே எழுதமுடியும்.

ஹேமா said...

//பித்தனின் வாக்கு ...
எனக்கு இது சரியாக புரியவில்லை. கடிகாரத்தை முன்னோக்கி நகர்த்தாமல், நம் வேலை நேரம் மற்றும் பழக்கத்தை மாற்றினால் போததா. எனக்குப் குழப்பமாக உள்ளது. ஆனாலும் எதாது காரணத்துடன் தான் செய்து இருப்பார்கள் எனத் தோன்றுகின்றது. தகவலுக்கு நன்றி.//

நேரம் மாற்றுவது, மின்சாரச் சேமிப்புத்தான் அதன் முக்கிய நோக்கம்.

தங்க முகுந்தன் said...

நான் கொஞ்சம் முந்திப் பதிவிட்டுவிட்டேன் போலும்!

நன்றி! Dr. Murugaiyan அவர்களின் கருத்துரையில் என்னையும் பெயர் குறிப்பிட்டமைக்கு!

Nathanjagk said...

ஹேமா மேடம்...
//ஜெகா வாங்க.இப்போ எல்லாம் அடிக்கடி காணக்கூடியதா இருக்கு.சந்தோஷம்//
அற்புதமான டயட்களை ​சொல்லி என் ஆவலை கூட்டீட்டிங்க..!
நாக்குக்கு ருசியாவும் ரெஸிபி தர்றீங்க..
ஸ்லிம் ஃபிட்டுக்கும் டயட் ​சொல்றீங்க..
இந்த அற்புத டயட்டீஷியனை எப்படி இழக்க முடியும்?

//தந்தியோ தந்தியிலும் உங்கள் பின்னூட்டம் நகைச்சுவையாக இருக்கிறது.அதை உங்கள் பதிவில் தொடருங்களேன்//

இந்த கமெண்டை தந்தி போல் பாவித்து ஒரு இடுகை தந்திடுகிறேன்!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP