மாதவிலக்குச் சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும்.குளித்தால் சளி பிடிக்கும்,காயம் படும்,கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது.பூக்களைத் தொட்டால் கருகிவிடும்.தனித் தட்டில்தான் சாப்பிடவேண்டும்.தலைக்குக் குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக்கூடாது.சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்குப் போட்டால் வயிறு வலிக்கும்.இப்படிப் பல கூடாதுகள்.கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக்கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்புவார்கள்.பேய் அடித்துவிடுமாம்.
இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்குப் பற்றிக் கசப்பான உணர்வைப் பெண்கள் மனதில் பதிய விடுகிறது.இதோடு வலி எரிச்சல் சோர்வு கசகசப்பு எல்லாம் சேர "ஏன்தான் பெண்ணாகப் பிறந்தோம்" என்ற சலிப்புத் தட்டுகிறது.
மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம்.ஆரோக்யம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரியவைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.
அந்த மூன்று நாட்களில் (சிலருக்குக் கூடலாம் குறையலாம்)உண்டாகும் அத்தனை பிரச்சனைகளைப் பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி டாக்டர் தமிழிசை டாக்டர் சுமதி டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு A - Z தெளிவுபடுத்து சுலபமான கேள்வி பதிலாக அவள் விகடனில் 2003 ம் ஆண்டு வந்த பெண்கள் இணைப்பை பிரயோசனம் கருதி நான் பதிவில் இணைக்கிறேன்.
கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக்கூடத் தயங்கும் நாம் எப்படி குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றிப் புரியவைக்கப் போகிறோம். நம் உடல்பற்றி அதன் மாற்றங்கள் இயல்பு பிரச்சனைகள் பற்றி நாம்தான் தயங்காமல் பேசியாக வேண்டும்.
பூப்பெய்தல் என்கிற பருவமடைதல் கட்டம் எப்படிப்பட்டது ?அது எவ்வாறு நிகழ்கிறது ?
பூப்பெய்தல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி.
முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன.10 - 11 வயதில் (இப்போ 9-13)இது தொடங்கும்.ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்புமீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும்.பின்பு உடல்வளர்ச்சியில் வேகம் தென்படும்.அந்த வயதில் ஒரு பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடந்தவளாகத் தெரிவாள்.இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிகமாகும்.பூசினாற்போல் சதைப்பற்று ஏற்படும்.அக்குகளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது.அதன்பின் இந்த மாற்றங்களின்வெளிப்பாடாக மாதவிலக்கு நேரிடுகிறது.
இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள்.உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன ?
பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கல் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை.
மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்துவரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பைமீதும் சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த GNRH ஹார்மோன் தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம்.இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது.முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும்.பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடதிற்கு ஒருமுறை இரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும்.அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறதுஇதனாலேயே முதன் முதாலாக மாத விலக்கு நிகழ்கிறது.
ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள் இடையூறுகள் ஏற்படலாம்.அதனால்தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாகவராது.இந்தக் கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம்.போகப்போகச் சரியாகிவிடும்.
இன்ன வயதிற்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா?
18 வயதில்கூட ஏற்படாவிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும்.நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள்கூட உண்டு.அதெல்லாம் அபூர்வம்.7 முதல் 9 வயதிற்குள் பூப்படைதலை "விரைவி படுத்தப்பட்ட பூப்பெய்தல்"என்கிறோம்.
சிறுவயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சரியான சைக்கிள் எது ?பாதுகாப்பானது எது ?
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம் ?
அதைச் சுழற்சி என்போம்.சைக்கிள் சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி.சிலருக்கு இரண்டு மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக குறிவாக அல்லது கூடுதலாக வரலாம்.அது தப்பில்லை.
இந்தச் சுழற்சிக்குள் என்னென்னெ நடக்கிறது ?அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக்கூடிய உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எப்படி வகைப்படுத்துவது ?
அந்த 28 நாட்களை பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.1-5 மாதவிலக்கு நாட்கள்.5-10 நாட்கள் ஆரம்ப நாட்கள்.அப்போது ஈஸ்ரோஜன் அதிகம் சுரக்கும்.கருமுட்டை வளர ஆரம்பிக்கும்.கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.
10 முதல் 14 நாட்கள் அதே வளர்ச்சி வேகமாகி 14 ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும்.எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.
14 முதல் 28 நாள்வரை பின்பகுதி நாட்கள்.ப்ரொஜெட்ஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.கர்ப்பப்பைய்ன் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாகத் தென்படும்.(ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தைபோல)கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறைந்துவிடும்.
தண்ணீரும் உரமும் போட்டபோது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லையென்றால் கருகுவதுபோல கர்ப்பப்பையில் வளர்ந்திருக்கும் நடுச்சதை (Endometrium)சுருங்கி அந்தச் சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக்காக வெளிவரும்.மறுபடியும் ஐந்து நாட்கள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்.
லிமிட் என்று உண்டா ?
மூன்று முதல் 6 நாட்கள் இருக்கலாம்.3 க்குக் குறைவாக 6 க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.
எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை சாதாரணம் எனலாம் ?
சுமார் 50 ம்ல்லி லிட்டர் என் இந்த அளவும் வேறுபடலாம்.அப்போது தினமும் அரை மி.லி முதல் மி.கி வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது.உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது.
ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்?
அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் எனக் கூறலாம்.
இந்தக் காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது ?
ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 50 குமிழிகள் உருவாக ஆரம்பித்து பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒருகுமிழ் பெரிதாகி அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14 ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்தக் குமிழ் வெடித்துக் கரு வெளிவந்து விந்துவை எதிர்கொள்ளத் தயாராகிறது.
மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ?
மார்பகம் பாரமாகத் தோன்றும்.பெரிதாவது போலத் தெரியும்.வலிக்கும்.இவை 2 அல்லது 4 நாட்களுக்குமுன் ஏற்படும்.இது சகஜம்.சிலருக்கு இந்த அறிகுறிகள் அதிகமாகக் இருக்கலாம்.
14 ம்நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வயிறு வலி இருக்கலாம்.வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம்.
உடல் நீர் கோர்த்தது போல எடை அதிகமானதாய் தோன்றும்.14 ம் நாளில் இருந்து வளவளப்பான திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.
இந்த மாற்றங்கள் pre Menstural Syndrome என்பார்கள்.தலைவலி,கால்வலி, மற்றும் வீக்கம்,அடிவயிற்றில் வலி,அதிக பசி,அலர்ஜிஃசளி ஏற்படுவது பருக்கள்,குடல் உபாதை,முதுகு வலி,படபடப்பு,அரிப்பு,அதிக வியர்வை போன்ற மாற்றங்கள் நேரலாம்.
உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்தானே ?
நிச்சயமாக.கவலை,பதற்றம்,ஆர்வமின்மை,ஈடுபாடின்மை,அசதி,கோபம் டென்சன்,எரிச்சல்,தூக்கமின்மை,குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல்,தற்கொலை எண்ணம்,தனிமை விரும்புதல்,தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள்.
இந்தப் பிரச்சனைகளுக்கு காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம்.பி.6 என்ற விட்டமின் பற்றாக்குறையாக இருக்கலாம்.தைராய்ட் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளின் தாக்கம் Prolaction Prostoulandins போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமுமாகலாம்.அதிகப்படி நீர் சுரப்பதும் சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணமாகலாம்.
[இன்னொரு பாகமும் பேசுவோம்]
ஹேமா(சுவிஸ்)
40 comments:
இது இயற்கையின் நிகழ்வு, ஆரோக்கியமான் விஷயம்,
நல்லப் பதிவு.
பலபேரின் (கேட்க வெட்க்கப்பட்டுகிட்டு இருக்கும்) பல ஐயங்களுக்கு விடை கிடைக்கும். நல்ல ஆரோக்கியமான பகிர்வு ஹேமா.
//மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்துவரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பைமீதும் சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த GNRH ஹார்மோன் தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம்//.....
உண்மைதான்,(GNRH)இந்த ஹார்மோன் நாம்(பெண்கள்) நம் தாயின் கருப்பையில் உருவாகும் போதே எத்தனையோ மில்லியகளாக இருந்து பின் வயதிற்கு வரும்போது இரண்டு மடங்காகுமாம்!
தெரிந்த விஷயங்கள்தான் என்றாலும், தெரியாதவர்களுக்கு நிச்சயம் பயன்படும்... இந்த பதிவு!
ஹேமா.. இது பெண்களுக்கான பதிவு என்று நினைக்கறேன்.. இரண்டு பேராக்கு மேல போகமுடியல.அதலால் me the escape :)
நல்ல ஆரோக்கியமான பதிவு ஹேமா.
வரவேற்க வேண்டிய பதிவு
நல்ல முயற்சி ஹேமா...பாராட்டுக்கள்.
தேவையான இடுகை...
ஆரோக்கியமான் விஷயம்,
நல்லப் பதிவு.
சபாஷ்.. சரியான கருத்துகள்!
பெண் பூப்பெய்தியதற்கு விழா எடுத்துக் கொண்டாடும் சமூகம்... மெனோபாஸ் ஆகிய முதிய பெண்களுக்கு ஏதேனும் கவனம் மேற்கொள்கிறதா எனும் என் கேள்வியை இங்கு இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
மெனோபாஸ் ஒரு வியாதியாக பெண்ணால் உணரப்படும் சமயம் பெண் வாழ்வில் கொடுமையானது. சரியான துணையற்ற சமயத்தில் நிகழும் அச்சம்பவம் பரிதாபகரமானது.
தாயின் மெனாபாஸ் அறியாத குழந்தைகள் அதைவிட பரிதாபகரமானவர்கள்..! தாய்க்கு நல்ல மகவாய் இருப்பது இத்தகு காலங்களில் மட்டுமே வெகு சாத்தியம்.
கருத்தறிய ஆவலாய்..
ஹ்ம்ம்...! எட்டாம் வகுப்பின் போது வாங்கிய ஒரு வெளி நாட்டு செக்ஸ் கல்வி புத்தகத்தில் படித்ததாக நினைவு..!
நல்ல பதிவு ஹேமா..!
அனைவரும் தயங்காமல் படிக்க வேண்டிய பதிவு.நல்லதொரு முயற்சி ஹேமா.
நல்ல பயன் உள்ள பதிவு ஹேமா. கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டிய ஆரோக்கியமான பதிவு. வாழ்த்துக்கள்***
நல்ல முயற்சி
நல்லது ஹேமா!
இதை தெரிந்து கொள்வதால் ’அந்த’ நேரத்தில் பெண் படும் பாடும் புரிகிறது, அவங்க கொள்ளும் எரிச்சலின் காரணமும் விளங்குகிறது - சக உயிருக்கு அன்போடு இருப்போம்.
நல்ல பகிர்வு ஹேமா.
நல்ல ஆரோக்கியமான பதிவு....
வரவேற்க வேண்டிய பதிவு....
ஒரு பெண்ணாகிய நீங்கள் இவ்வளவு தைரியமாக யாரும் கையில் எடுக்காத வாழ்க்கையில் அனைவரும் அறிய வேண்டிய விசயங்களை பதிந்து இருக்களீர்கள்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...
நல்லப் பதிவு
சந்தேகத்திற்கே இடமில்லாத தெளிவான பதிவு.
நல்ல பதிவு...வாழ்த்துக்கள் ஹேமா
நல்லப் பதிவு
ஹேமா.. இது பெண்களுக்கான
பதிவு என்று நினைக்கறேன்..
இரண்டு பேராக்கு மேல போகமுடியல.
அதலால் me the escape :)
திரு.D.R Ashok
நீங்கள் ஒரு மருத்துவரா? அப்படியாயின்...
இதற்கெல்லாம் விளக்கம் நீங்கள் தான்
கொடுக்க வேண்டும்
ஏன்?எவ்வளவு பயத்துடன் ஓடுகிறீர்கள்??
\\\\சபாஷ்.. சரியான கருத்துகள்!
பெண் பூப்பெய்தியதற்கு விழா
எடுத்துக் கொண்டாடும் சமூகம்...
மெனோபாஸ் ஆகிய முதிய
பெண்களுக்கு ஏதேனும் கவனம்
மேற்கொள்கிறதா எனும் என்
கேள்வியை இங்கு இணைத்துக்
கொள்ள விரும்புகிறேன்.\\\\\
நான் ஒரு சபாஷ் போடுகிறேன்
உங்கள் நல்லுணர்வுள்ள மனப்பான்மைக்கு!
நான் படித்தவைகளையெல்லாம் இடுகையிட்டால்
தாங்காது .மெனோபாஸ் பற்றி சமூகம் கவனம்
செலுத்தவில்லையென நினைக்கின்றேன்!!
இதற்கு சம்பந்தப்பட்டவர் மருத்துவர்.
மருத்துவரை
அணுகி ஆலோசனைகள் கேட்டு அதன்படி
நடந்து கொள்ளலாம்!!
அடுத்து குடும்பத்தார் குறிப்பாக கணவர் புரிந்து
நடந்து தேவைகளைக் கேட்டறிந்து,உரியவர்களிடம்
ஆலோசனைகள் கேட்டு அதன்படி மனைவியுடன்
{அந்த நேரத்தில்}அன்புடனும்,பரிவுடனும் நடந்து
கொண்டால் பாதிப் பாதிப்பு குறைந்து விடும் என
நான் நினைக்கின்றேன்.
முக்கியம் _அது ஏற்படும் பெண் சலிப்பு,கோபம்,
தாழ்வுமனப்பான்மை இல்லாமல்..தையிரியமாய்
எதிர் கொள்ளல் வேண்டும் .
தயங்காமல் பேசுவோம்......
என்று!
சிலர் முகம்
சுளிக்கும் சேதியை
தட்டச்சில் தட்டி
பெட்டச்சி இட்டு
சுட்டிடிச்சி..!!
சுவிஸ்ராணி நன்றியும்,பாராட்டும்!!
நன்றி கும்மாச்சி.அடிக்கடி உங்களைக் காண்கிறேன்.சந்தோஷம்.
கருத்துக்கும் நன்றி.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி நவாஸ்.இயற்கையின் உபாதைகளை என்னவோ ஏதோ என்று அதை அசிங்கமாய் நினைப்பது தவறுதானே.புரிந்துகொண்டால் எங்கள் ஆண்கள் பெண்களோடு அந்த நேரங்களின் எரிச்சல்களைக் கணக்கில் எடுக்கமாட்டார்கள்தானே !
::::::::::::::::::::::::::::::::::
பிரியா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.தெரிந்த கருத்தென்றும் சொல்லமுடியாமல் இருக்கிறது.
எத்தனை ஆணகள் அந்த நேர வலியையோ டென்சனையோ புரிந்து நடக்கிறார்கள்.என் வீட்டிலிருந்துதான் நான் இதை ஆரம்பிக்கிறேன்
எம் முன்னோர்கள் சொன்னவைகள் சரியே.அதாவது அந்த நேரங்களிள் ஓய்வு தேவை.தனித்திருத்தல்.
துர்மணம்,அந்தக் காலங்களில் இன்றுபோல வெளியில் தெரியாத பாதுகாப்புக்கள் குறைவு...இல்லை.
எனவே ஓரிடத்தில் ஒளித்து இருத்திவிட்டிருந்தார்கள்.ஆனால் இன்றைய நிலை வேறு.அது ஒரு விஷயமேயில்லை என்பதுபோல.
::::::::::::::::::::::::::::::::::
அஷோக்...நிச்சயமாக பெணகளின் நிலை அல்லது அவர்களது உடலமைப்பின் சுயம் சொல்லி முழுக்க முழுக்க ஆண்களுக்கான பதிவு இது.முழுமையாக வாசித்து பின்னூட்டம் தாங்க.இங்கே கூச்சப்பட எதுவுமில்லையே !
ஹேமாவின் சிறப்பு பதிவு.
ப்ரியா சொன்னது போல் அறிந்த தகவல்கள் தான் என்றாலும், நினைவு படுத்தலும் தேவைதானே.!
“கற்றலின் கேட்டல் நன்று”ன்னு சொல்லியிருக்காங்க.
அதனால, நீங்க தொடந்து பேசுங்க ஹேமா. நான் கேட்டுக்கறேன்.
வாங்க அக்பர்...கருத்துச் சொல்ல ஒண்ணுமில்லியா !
:::::::::::::::::::::::::::::::::::
வாங்க ஸ்ரீராம்....உங்க நொடுக்கு ஒண்ணும் சொல்லாமப் போனா எப்பிடி !
:::::::::::::::::::::::::::::::::
ராகவன்...ரொம்ப நாளாச்சு என் பக்கம் வந்து.பாட்டுப் பெட்டியும் தூக்கியாச்சு.உங்களைத்தான் காணோம்.
::::::::::::::::::::::::::::::::::
வாங்க மேனகா.நீங்கள் பெண்ணாயிருக்கும் பட்சத்தில் எனக்குப் பலம் சேர்த்திருக்கலாம் !என்றாலும் நன்றி.
::::::::::::::::::::::::::::::::::
லெமூரியன் அதில் தப்பொன்றும் இல்லையே.பாருங்கள் அறிந்திருக்கிறீர்கள்.நல்ல விஷயம்தானே !
::::::::::::::::::::::::::::::::
வாங்க ராஜா....இது ஒரு பெண்கள் இணைப்பு அவள் விகடனில்.எனக்கே நிறைய அறிய வாய்ப்பு.பெண்கள் பிரச்சனையானாலும் ஆண்களுக்கான பதிவென்றே நினைக்கிறேன்.
::::::::::::::::::::::::::::::::::
ஜெயா...கொஞ்சம் உங்கள் வீட்டு அனுபவங்களைச் சொல்லலாமே.
இதிலொன்றும் இல்லையே!
ஜே......சுகம்தானே !
உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கு என் தலை சாய்த்த சபாஷ்.
ஜே...உங்களைப்போல உள்ளவங்கதான் முன்னோடியா இருக்கணும்.ஆனாலும் புரிஞ்சுக்காதவங்க இன்னும் நிறையப் பேர்.பெணகளுக்கு இயல்பானாலும் அந்த நேரத்தின் வேதனை யோடுதான் அந்த மூன்று நாடகளும் பல்லைக் கடித்தபடி நகரும்.குடும்பத்தலைவி எனும்போது ஓய்வு எடுப்பதென்பது முடியாத காரியம்.குழந்தைகளுக்குப் புரிய வைப்பது அப்பாவின் கடமையாக இருக்கவேணும்.
கலா என்னைவிட அழகாச் சொல்லிட்டாங்க உங்களுக்கு.
இதில் போன இரண்டு வாரத்துக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு.ஒரு ஆணின் மனநிலை சொல்கிறேன்.
தன் மனைவி (முதல் குழந்தை) கர்ப்பிணியாக இருக்கிறா.அவவின் கஸ்டம் ,பாரம் ,வேதனை,வாந்தி மசக்கை எல்லாம் அனுபவமில்லாத அவர் எனக்குச் சொன்னது"அவ சும்மா சும்மா படுத்திருக்கிறா.
அவவுக்கு ஒண்டுமில்ல.சமைக்கப் பஞ்சிப்படறா.நான் சமைச்சா சாப்பிட்டிட்டு படுக்கிறா.ஏன் எங்கட அம்மாவும் 4 பிள்ளை பெத்தவதானே.அவ இப்பிடி இல்லையே"என்று.
பிறகு குழந்தை பிறந்தது.இங்கு குழந்தை பிறக்கும்போது கணவர் அருகில் அதுவும் குழந்தை பெறும் நேரம் அவவின் கை பிடித்தபடி அருகில் இருக்கலாம்.குழந்தை பெற்ற கஸ்டம் பார்த்த அவர் இப்போ உணர்ந்து அவவுக்கு உதவியாய் ஆதரவாய் இருக்கிறார்.ஏன் சொல்கிறேன் என்றால் எங்கள் ஆண்கள் மிக மிக நல்லவர்கள்.
புரியாததால்தான் கொஞ்சம் உரக்கப் பேசுவார்கள்.
Good post.
This will help nmany to know the process as well as the mental status of a female during that time.
you have mentioned abt the practices in village during that time.
Those practices once started to give rest and peace of mind for ladies knowing their problem. In due ignorant people made it as a kind of law and added too many unwanted rules and regulations.
Now in cities ladies have crossed all these but got locked into another problem which is, intead of taking rest they overwork and as they have taken it by choice people around(even other ladies) don't understand their inner feelings and expect the same kind of work all thru the days irrespective of their physical and mental condition.
As you have mentioned, the time preceding the mensural flow the body undergoes the changes mantioned by you that intiates a highly emotional phychological state and this state increases during those 3 days, but the commitment at home and office cannot be pushed back and the lady struggles between all these. Some ladies even have severe pain in the stomach, leg etc.
As ladies have taken by choice to get out of those 'theettu' they also need to make sure they don't over do and try to explain people around that they have difficulty on those days and take less commitment and keep mind and body cool.
நல்ல பகிர்வு
ஹேமா... உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல்
/*இங்கு குழந்தை பிறக்கும்போது கணவர் அருகில் அதுவும் குழந்தை பெறும் நேரம் அவவின் கை பிடித்தபடி அருகில் இருக்கலாம்.குழந்தை பெற்ற கஸ்டம் பார்த்த அவர் இப்போ உணர்ந்து அவவுக்கு உதவியாய் ஆதரவாய் இருக்கிறார்.ஏன் சொல்கிறேன் என்றால் எங்கள் ஆண்கள் மிக மிக நல்லவர்கள்.
புரியாததால்தான் கொஞ்சம் உரக்கப் பேசுவார்கள்.*/
உண்மை. பலருக்கு பெண்ணின் வேதனைகள் புரிவதில்லை. ஒவ்வொருவருக்கும் இந்த வேதனையும் வலியும் மாறுபடும். புரிந்தால் அனுசரணையாக இருப்பார்கள்
வாங்க தமிழ்.அடுத்த பதிவும் பாருங்க.
:::::::::::::::::::::::::::::::::
வாங்க நசர்...பாவம் கும்மியடிக்க இங்க வசதியில்ல.அடுத்த பதிவில பாக்கலாம்.கும்மியடிச்சாலும் பரவால்ல.பதிவு எப்பிடின்னும் சொல்லிட்டு போகல்லம்ல !
::::::::::::::::::::::::::::::::::
ஜமால்...உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி.வீட்டில் உள்ளவர்கள் அதிஸ்டசாலிகள்.
:::::::::::::::::::::::::::::::::
சங்கவி....ஆண்களும் கூச்ச்ப்படுகிறார்கள் அல்லது எங்களுக்கென்ன அது பெண்கள் பாடு என்கிறார்கள்.பெணகளும் கூச்சப்படுகிறார்கள்.அப்போ யாரோ ஒருவருக்காவது சொல்லவேணும் புரியவைக்கவேணும் என்று தோன்றத்தானே வேணும்.
நன்றி சங்கவி.
::::::::::::::::::::::::::::::::::
இயற்கை உங்கள் வரவுக்கு சந்தோஷம்.
::::::::::::::::::::::::::::::::::
கண்ணகி உங்கள் பதிவும் கிட்டத்தட்ட இப்படியே இருந்தது.நன்றி தோழி.
::::::::::::::::::::::::::::::::::
மிக்க நன்றி ஆரூரன்.தொடரும் பதிவையும் பாருங்களேன்.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி தோழி மகா.எங்கே டம்பி...கிச்சான்?
::::::::::::::::::::::::::::::::::
கலா..என் இனிய சோதரியே ....
உங்களைப் போன்றவர்களின் உற்சாகம்தான் எதையும் எழுத வைக்கிறது.நன்றி தோழி.
ஏன் எங்கள் ஆண்கள் அம்மா, சகோதரிகள் ,பெண் குழந்தைகளுக்குத் தகபானாய் இருப்பவர்கள்தானே.அந்த நேரத்தில் அவர்களின் வேதனையோ சோர்வோ ஏனென்று கூடத் தெரியாமல் இருப்பார்கள்.
தெரிந்திருப்பது நல்லதுதானே.எங்கள் வீட்டில்கூட ஊரில் இருக்கும்போது இதே நிலைமைதான்.படித்த என் அப்பாகூட அந்தச் சம்யத்தில் தன் தேவைகளுக்காக எங்களைவிடக் கோபப்படுவார் !
வாங்க சத்ரியா.....இப்பிடி அடிக்கடி காணாமப் போகலாமோ !எங்கதான் தேடுறது !
அறிந்த தகவல்கள் என்று சொல்லி புத்தகத்துள் மூடி வச்சிச்சிட்டு மூடியிருக்கிற சாப்பாட்டைப் போட்டுச் சாப்பிட மனவி....தான் வேணும்.
அப்போ அறிந்த அறிவெல்லாம் மறந்துபோகும் மகனே !அதுக்குத்தான் திரும்பத் திரும்ப தீட்ட இந்தப் பதிவு.
இனியாச்சும் சமைச்சுக் குடுங்கோ வீட்டில.ஒரு தப்போ பயமோ வெட்கமோ இல்லை.எங்க பாக்கலாம் யார் ஒருத்தர் நான் இண்ணைக்கு மனவிக்குச் சமைச்சுக் கொடுத்தேன்ன்னு அடுத்த பதிவில சொல்றீங்கன்னு.அதுவும் இந்தியா இலங்கை சிங்கப்பூர்ல இருந்து ஒருத்தர் சொல்லணும்.எனக்கு ஆசை.
உண்மையா யாராச்சும் சமைச்சுக் குடுத்கு நிரூபிச்சீங்கன்னா பதிவில என்ன சமையல்ன்னும் போட்டு உங்களை நான் கௌரவிப்பேன்.
எங்க கலா கை குடுங்க.என்னோட கை சேருங்க நீங்களும்.
செய்வோமா !
ஒருத்தர் எனக்கு மெயில்ல சொல்லியிருக்கிறார்.சுடுதண்ணிதான் வைப்பேன் சொன்னவர், ஏன் வீட்ல நான் சமைக்கணும் கேட்டவர் நான் சொன்ன அப்புறம் இப்போ மனைவிக்கு உதவி செய்கிறேன்னு சொன்னார்.சந்தோஷமாயிருந்தது.
::::::::::::::::::::::::::::::::::
வாங்க விருட்சம்.உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க மிக்க நன்றி.நீங்கள் சொன்ன அத்தனையுமே அருமையான கருத்து.எனக்கு என்னெவென்றால் கிராமம் நகரம் என்று விஞ்ஞான மாத்திரைகள் என்று எத்தனை மாற்றங்கள் மாறினாலுமே ,மாறாத பெண்களின் இயல்பு அந்த நேரத்து வேதனைகள் அந்த இயற்கை மாற்றங்களை எங்கள் ஆண்கள் புரிந்து கொண்டு வீட்டில் அனுசரித்துப் போகவேண்டும் என்பதே.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி தோழி அமுதா.ரொம்ப நாளுக்கு அப்புறமா வாறீங்க.வீட்ல இண்ணைக்குக் கொஞ்சம் லீவு விட்டாங்களா !
நான் சிங்கபூரிலிருந்து எழுதுகிறேனுங்க என்னோட பேரு...... கருணாகரசுங்க.
நான் என்னோட மனைவிக்கு சமைத்து போட்டிருக்கேன்..... என்ன சமையல்ன்னா... மீன் வறுவல்.
அப்புறம்.... அப்பப்ப...முருங்கக்காய் சாம்பார்....... அடுத்து எனக்கு தெரிந்த எதாவது.... இதெல்லாம் ஒரு விடயமே இல்லைங்க..... பதிவை முழுமையா படிச்சுட்டு அப்புறம் வரேனுங்க.
சாட்சிக்கு வேனா கலாவை... என்னோட இல்லத்தரசியிடம் கேட்டு பார்க்க சொல்லுங்க.
அற்புதமான புனைவு . அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் .பகிர்வுக்கு நன்றிகள்
நொடுக்கு? அப்படீன்னா?
//திரு.D.R Ashok
நீங்கள் ஒரு மருத்துவரா? அப்படியாயின்...
இதற்கெல்லாம் விளக்கம் நீங்கள் தான்
கொடுக்க வேண்டும்
ஏன்?எவ்வளவு பயத்துடன் ஓடுகிறீர்கள்??//
திருமதி கலா அவர்களே அது D.R.Ashok not Dr.Ashok :))
அப்புறம் இந்த மாதிரி school subjectஎல்லாம் நமக்கு உள்ள போகாதுங்க. அதான் ஒடிட்டேன் :)
//இங்கே கூச்சப்பட எதுவுமில்லையே !//
ஹெல்லோ கூச்சமெல்லாம் இல்லாமா... நமக்கு அலர்ஜி அவ்வளவுதான்
good article girls get more knowledge
gvr
நல்ல பயன் உள்ள பதிவு ஹேமா. கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டிய ஆரோக்கியமான பதிவு. வாழ்த்துக்கள்***
Post a Comment