Monday, July 12, 2010

கவிதை எழுதலாம் வாங்கோ.

நிறைய நாளாச்சு கவிதை சொல்லி விளையாடி...
வாங்கோ வாங்கோ.எழுதலாம் !
இந்தப் படம் ஏதோ சொல்லுதுதானே...சொல்லுங்கோ !



விரும்பினா....உங்க கவிதைகளை உங்க தளங்களில் போட்டுக்கோங்க.

[LK]கார்த்திக்
*******************
ஆட்டுவிப்பவரே
இன்று
ஆட்டுவிக்கப்படுகிறார்?
நேற்றைய செய்கையின்
இன்றைய பலனோ இது ??

உலவு.காம்
******************
மக்கள் ஓட்டுபோட்டு
வளர்த்த கொரங்கு
அதிகாரத்த கையில
வச்சிக்கிட்டு மக்களையே
தண்டிக்குது !

(கொரங்கு = அரசியல்வா(ந்)தி.

டம்பி மேவீ
**************

செங்கோல் கை மாறினால்
குரங்கு ராஜா ஆகிவிடுமா ....

தமிழ் மதுரம்
***************
1)
மனிதர்களின்
குரல் வளைகள் நசுக்கப்பட்ட தேசத்தில்
நீதி வேண்டி இப்போது
குரங்குகளும் புறப்பட்டு விட்டன!

2)மனிதர்களிடன் செங்கோல் இருந்து
பயனேதும் இல்லை என்பதால்
இப்போது குரங்கிடன் போய் விட்டது!

ருத்ர வீணை
***************
மனசாட்சியின்
உண்மை உருவம்
கையில் ஒரு கொம்பு
கண்டிப்பாக தண்டனை.

நட்புடன் ஜமால்
*******************
1)
வளர்த்த கடா...!

2)பயிற்றுவிக்கும் பயிர்ச்சியில் ...!

நண்டு @நொரண்டு -ஈரோடு
*********************************

ம் ம் ...
ம் ம் ம் ...
ம் ...

தமிழ் உதயம்
*******************
யானைக்கொரு
காலம் வந்தா ....
குரங்குக்கொரு
காலம் வராதோ....

1)நசரேயன்
*****************
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று
ஓடிக்கொண்டே இருக்கும்.
நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.

குச்சி எடுத்தா தாக்குதல் தாங்காம
ஓடிகொண்டே இருக்கும்
துரத்துவது துரத்திகொண்டே இருக்கும்
இதுதான் ஹேமா கண்டறிந்த நிலைமம்.

என் தாக்கமும் இது வழியே...
எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும்
எண்ணச் சிக்கல்களை எளிமையாக
என் எண்ண நடையில்
சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக

என் ஓட்டமும் இது வழியே
எவரிடமும் அடி வாங்க முடியாத
சொல்லிப் பகிர முடியா கும்மி குமைக்கும்
பிரம்படி சிக்கல்களை எளிமையாக
என் அடி நடையிலே
சேர்த்து கொடுக்கிறேன்
உங்க மன ஆறுதலுக்காக.

2)ஹேமா கடைப்பக்கம் போவியா ..போவியா
இனிமேல போன
அடி பிச்சுடுவேன்...!

கே.ஆர்.பி.செந்தில்
**************************
சிங்கள சிறுபான்மை
குரங்கினது கையில்
பெரும்பான்மை ஆளும்
இந்திய
அதிகாரம் கொடுத்த
கோல் அது
ஆட்டுவிக்கதான்
செய்யும்...

முள்வேலி முகாமிற்குள்
முடக்கிவைத்த இனம்
முப்பது ஆண்டுகளாய்
எதிரிகளை புற
முதுகோட வைத்தததை
மறந்து விட்ட உலகம்

படம் காட்டி
அடிமைப் பட்ட
தமிழகத் தமிழனாய்
பிணம் காட்டி
பணிய வைக்க முயற்சிக்கும்
உலகு..

காலம் அந்தக் கூட்டமதை
நாம் தரும்
உணவிற்காய் வீதிகளில்
நிறுத்தும்..

வாழ்வே மரணத்திற்கான
பயணம்தான் !

-இரவீ -
*****************

1)உன்னால எனக்கு சோறு,
என்னால உனக்கு சோறு,
யாருக்கு தெரியும்
எனக்கு உன் மனமும்,
உனக்கு என் மனமுமென்று .

2)உனக்கு போட்டேன் கரணம்
உம்மட இடத்தில்.
இப்ப போடு தோப்புகரணம்
உப்புமடசந்தியில்.

3)தமிழே என்னை என்ன பாடு படுத்தினாய்
இப்போ நீ என்னிடம்.
(என் எழுத்தை திட்டின
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதை சமர்பிக்கிறேன்).
- இரவி-

4)குச்சியையும் கொடுத்து
கூத்தாட சொல்கிறாயே,
வருடங்களோடு வளர்ந்துவிட்டதோ
உந்தன் நம்பிக்கை.

அதிகாரம் கைபிடிக்க
கால் ஒருதிசை
தலை ஒருதிசையாய் ... நான்.
விட்டுவிடு ....
என்னை அப்படியே இருக்கவிடு !

ராஜவம்சம்
*******************
கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல்வாதியை விட,
மரம் விட்டு மரம் தாவும் நாங்கள் மேல்.

ஒழுக்கம் கெட்ட மனிதனை விட
ஐந்தறிவு குரங்காய்ப்பிறந்தது மேல்.

காதலிலும் ஜாதிப்பார்த்து
கலவியிலும் வர்ணம் பார்க்கும்
உங்கள் இனத்தைவிட
எங்கள் இனம் மேல்.

ஏற்றத்தாழ்வு எங்களுக்கில்லை
உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரும் இல்லை.

சுதந்திரமாய் வாழ்வதால்,
சுதந்திரம் வேண்டி அழுததில்ல.

ஒழுக்கம் கெட்ட மனிதனை விட
ஐந்தறிவு குரங்காய்ப்பிறந்தது மேல்.

சி. கருணாகரசு
********************
பரிணாமத்தின் வளர்ச்சி கேள்விக்குறி!
பயமில்லா புரட்சியிடம் வெற்றிக்கொடி!!

நேசமித்ரன்
*******************

நேற்றின் பிரம்புக்கு
ஆடிகொண்டிருக்கிறது
இன்றின் பெண்டுலம்.

சிறுமுள் நகர்வு
தீர்மானிக்கும் நாளையை.

திசைகளைக் கூட்டி விடியும்
ஒரு பகலில் கூவும் பறவையின் அலகில்
வெட்சிப்பூ பூத்திருக்கும் !

[நேற்றைய வாழ்வின் நினைவுகளில் தான் இன்றைய நாளின் கடிகாரம் நகர்கிறது.அதாவது ஈழம் - இந்தப் படத்தில் மனிதனின் நேற்று குரங்கு - சிறு முள் சுருங்கிய போராட்டம்-படத்தில் சிறுவடிவம் 5 அறிவு- நாளை வெல்வோம் திசைகளைப்போல் பிரிந்திருக்கும் தமிழர் ஒன்று சேர்ந்து.வெட்சிப் பூ போரில் வென்ற பிறகு சூடும் மலர்.]

ஹேமா
**************

நானாகியிருந்து வந்த நீ...
எனக்கிருக்கும் அறிவின் ஒரு ....!

சாதியென்கிறாய்
மதமென்கிறாய்
வாளெடுக்கிறாய்
இரத்தம் குடிக்கும்
அட்டையாகிறாய்
பிறகு நானே
சாமி என்கிறாய்
மஞ்சள் துணி போர்த்தியபடியே
அரசியலும் பேசுகிறாய்
பிணங்கள் மலிந்த ஈழத்தில்
புத்தனாய்
மிளகு கொண்டு வா
பிறகு பார்க்கலாம் என்கிறாய்
சீ...த்தூ துப்பினாலும்
அழகாய் துடைத்துவிட்டு
மனிதமும் மண்ணாங்கட்டியும்
ஒன்றென்கிறாய்.
மல்லாந்து படுத்தபடி
பொய்க்கு மாரடிக்கிறாய்.

போ...போ
புத்தி பேதலித்த பொய்யனே
உபதேசிக்க
அப்பனுக்கு மந்திரம் சொன்ன
முருகன் வரான்.

மீண்டுமொருமுறை ஆரம்பமெடு
என் உருவில்!!!

மதுமிதா
**************
ஆசிரியரே
நீங்களும்
இந்தக் கோல்
மாதிரிதான்.
உங்கள்
உந்துதலால்
உயரம்
தொடுவேன்.
நன்றி
ஆசானே.

ஜெய்லானி
******************
எத்தனை முறை
என்னை ஆட்டி வைத்திருப்பாய்
நீயும் போட்டு பார்
ஒரு முறை
குட்டிக்கரனம்
வாழ்வின் வலி
தெரியும்.

அண்ணாமலை
************************

கண்ணாடியில்
தெரிகிறது..
இருவரின்
எதிர்காலமும்!

சுப்பு தாத்தா
*******************
நானும் ஆடறேன். நீயும் ஆடறே !!
ஆடுவதுனக்குத் தெரியாது. நீ

ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம்
எங்கே என்னும் தெரியாது.

பாடிய சந்தமும் ஓடிய பந்தமும்
நாடியே திரும்பவும் வாராதோ !

வாடிய உறவும் வாசமும் கொண்டு
தேடியே என்னை வாராதோ !

அறியாயோ நீ ! ஆண்டவனருகில் !!
நெறிகள் யாவும் மறந்தனையோ !!

அமரும் அரியணை அசையும் ஒரு நாள்
தமரும் தொலைந்தே போய்விடுவார்.


அருமை எனவே வாங்கிய யாவும்
அங்கங்கே தான் நின்று விடும்.
எருமைவாகனன் அழையும்போதுன்
உருவும் உடனே மறைந்துவிடும்.

கருமம் ஒன்றே துணை நிற்கும் அந்த‌
தருமக் குரலினைக் கேட்டிடுவாய்.

[பின் குறிப்பு: இன்னும் சற்று நேரத்தில் இது என்னுடைய
வலைப்பதிவில் கேட்கலாம். காணலாம்.
http://vazhvuneri.blogspot.com]

கலா
*********

பார்வையற்றுப் பரிதவிக்கின்றாயா?

கண்டும் காணாமல் போக
என்
மனவளம் இன்னும் குன்றவில்லை
குள்ளமென்று பயப்படாதே
என்
உள்ளம் உயரம்

எனக்குப்
பாரமென்று நினைக்காமல்
நீட்டுகிறேன் பற்றிக்கொள்
உன்னை
வழி நடத்தி விழியாய்
நானிருப்பேன் வா

உன் மனதுக்கு
என்னை உவமை சொல்லும்
மனிதனிடம்...
மனிதம்
இனிமேலும் என்னைக் குறைத்து
மதிப்பிடும் வழக்கத்தை
மாற்றட்டும்

உனக்கு நான் எனக்கு நீ
வித்தை காட்டி
விதியை வென்று
வீறு நடைபோட
எழுந்து வா என்
அன்புத் தோழா!!

அக்பர்
**********

ஆட்டுவிப்பவர்

நெறி தவறின்

ஆடுபவர் ஆட்டுவிப்பர்.

அம்பிகா
***************

நேற்று நான்;
இன்று நீ ....
அட்ரா ராமா..., அட்ரா ராமா...,

ராஜ நடராஜன்
*******************

இந்த ஆட்டத்துக்கு நான் வரல!

ஜோதிஜி
*************
இந்த ஆட்டத்துக்கு நான் வரல!

பொன்சிவா
*****************

'மனசாட்சி உறங்கும் வேளையிலேதான்
மனக்குரங்கு ஊர் சுற்ற புறப்பட்டுவிடும் ' -- கலைஞர் கருணாநிதி

என் மனக்குரங்கு ஊர் சுற்ற புறப்படுகையிலே
நிஜக்குரங்கு குச்சி கட்டி மறைத்தால் ..
என்ன செய்ய நான்...?

அஹமது இர்ஷாத்
****************************

நேற்று நான்,

இன்று நீ,

நாளை...?

குடந்தை அன்புமணி
*************************

மானாட மயிலாட
எல்லாம் வந்தாச்சு...
இங்கே-
குரங்காட்டத்திற்கு
மதிப்பில்லாமல் போயாச்சு...
நீயும் நானும்
வேறெங்கே போவது
வேறுவழி தெரியாமல்
நம் வயிறு நோவுது...!

ஜெயா
************
நேற்றைய நான்
இன்றைய நீ
நாளைய யார்????

ஸ்ரீராம்.
***************

1)நடக்காத நாடகத்துக்கு
இருவருமே
பார்வையாளராக இருந்தால்...
ஒரு
மாறுதலுக்கு
நீ
ஆடு...
குச்சி என் கையில் !

2)"ஆட்றா ராமா"
சொல்வதை நிறுத்தி விட்டு
யோசனையில் ஆழ்ந்த மனிதனிடம்
குரங்கும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு
காரணம் கேட்டது...

கவலைகள் சூழ்ந்த
மனிதன் சொன்னான்
"மறுபடி பழைய பரிணாமத்தை
அடைய வழியுண்டா
என்று யோசிக்கிறேன்..."

வேலு.G
*************
காலம் ஆடும் விளையாட்டு
மனிதன் குரங்கானபின்
குரங்கு மனிதனாகிறது !

ரியாஸ்
************
எதை எழுதலாம்
என்ற நினைப்பிலேயே
நேரம் கடந்துவிட்டது
எதைத்தான்
சொல்வேனோ
இந்த மனிதனை
இந்த குரங்கினை
நோக்கி...

கார்த்திக் சிதம்பரம்
*************************
குரங்குகள் தேசத்தில்
அரங்குகள் நிறைத்து மனிதர்கள்
இருந்தாலும்
இது தான்
கதி
தனியாய் மாட்டிகொண்டால்
சொல்லவே வேண்டாம்!

46 comments:

எல் கே said...

ஆட்டுவிப்பவரே
இன்று
ஆட்டுவிக்கப்படுகிறார்?
நேற்றைய செய்கையின்
இன்றைய பலனோ இது ??

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மக்கள் ஓட்டுபோட்டு
வளர்த்த கொரங்கு
அதிகாரத்த கையில
வச்சிக்கிட்டு மக்களையே
தண்டிக்குது !


(கொரங்கு = அரசியல்வா(ந்)தி)

மேவி... said...

செங்கோல் கை மாறினால்

குரங்கு ராஜா ஆகிவிடுமா ....

(இல்லாட்டி மேவி கைல பதிவுலகம்ன்னு கூட சொல்லலாம்)

தமிழ் மதுரம் said...

மனிதர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்ட தேசத்தில்
நீதி வேண்டி இப்போது
குரங்குகளும் புறப்பட்டு விட்டன!

ருத்ர வீணை® said...

மனசாட்சியின்
உண்மை உருவம்
கையில் ஒரு கொம்பு
கண்டிப்பாக தண்டனை

தமிழ் மதுரம் said...

மனிதர்களிடன் செங்கோல் இருந்து
பயனேதும் இல்லை என்பதால்
இப்போது குரங்கிடன் போய் விட்டது:)))

நட்புடன் ஜமால் said...

வளர்த்த கடா ...

நட்புடன் ஜமால் said...

பயிற்றுவிக்கும் பயிர்ச்சியில் ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ம் ...
ம் ம் ம் ...
ம் ...

தமிழ் உதயம் said...

யானைக்கொரு
காலம் வந்தா ....
குரங்குக்கொரு
காலம் வராதோ....

நசரேயன் said...

புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.
நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.

குச்சி எடுத்தா தாக்குதல் தாங்காம ஓடிகொண்டே இருக்கும்
துரத்துவது துரத்திகொண்டே இருக்கும்
இதுதான் ஹேமா கண்டறிந்த நிலைமம்.


என் தாக்கமும் இது வழியே...
எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும்
எண்ணச் சிக்கல்களை எளிமையாக
என் எண்ண நடையில்
சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக

என் ஓட்டமும் இது வழியே
எவரிடமும் அடி வாங்க முடியாத
சொல்லிப் பகிர முடியா கும்மி குமைக்கும்
பிரம்படி சிக்கல்களை எளிமையாக
என் அடி நடையிலே
சேர்த்து கொடுக்கிறேன் உங்க மன ஆறுதலுக்காக

நசரேயன் said...

ஹேமா பரிசை விரைவில் அனுப்பி வைக்கவும்

Unknown said...

சிங்கள சிறுபான்மை
குரங்கினது கையில்
பெரும்பான்மை ஆளும்
இந்திய
அதிகாரம் கொடுத்த
கோல் அது
ஆட்டுவிக்கதான்
செய்யும்...

முள்வேலி முகாமிற்குள்
முடக்கிவைத்த இனம்
முப்பது ஆண்டுகளாய்
எதிரிகளை புற
முதுகோட வைத்தததை
மறந்து விட்ட உலகம்

படம் காட்டி
அடிமைப் பட்ட
தமிழகத் தமிழனாய்
பிணம் காட்டி
பணிய வைக்க முயற்சிக்கும்
உலகு..

காலம் அந்தக் கூட்டமதை
நாம் தரும்
உணவிற்காய் வீதிகளில்
நிறுத்தும்..

வாழ்வே மரணத்திற்கான
பயணம்தான்..

- இரவீ - said...

உன்னால எனக்கு சோறு,
என்னால உனக்கு சோறு,
யாருக்கு தெரியும்
எனக்கு உன்மனமும்,
உனக்கு என்மனமுமென்று .

- இரவீ - said...

உனக்கு போட்டேன் கரணம்
உம்மட இடத்தில்.
இப்ப போடு தோப்புகரணம்
உப்புமடசந்தியில்.
(யாரும் இருக்கும் இடத்தில இருந்தா தான் மதிப்பு )....

- இரவீ - said...

தமிழே என்னை என்ன பாடு படுத்தினாய்
இப்போ நீ என்னிடம் .
(என் எழுத்தை திட்டின அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதை சமர்பிக்கிறேன்).
- இரவி.

- இரவீ - said...
This comment has been removed by the author.
thamizhparavai said...

கவிதை படிக்க வேண்டி பின்னூட்டம்... :-)

ராஜவம்சம் said...

கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல்வாதியை விட,
மரம் விட்டு மரம் தாவும் நாங்கள் மேல்.

ஒழுக்கம் கெட்ட மனிதனை விட
ஐந்தறிவு குரங்காய்ப்பிறந்தது மேல்.

காதலிலும் ஜாதிப்பார்த்து கலவியிலும் வர்ணம் பார்க்கும் உங்கள் இனத்தைவிட
எங்கள் இனம் மேல்.

ஏற்றத்தாழ்வு எங்களுக்கில்லை
உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரும் இல்லை.

சுதந்திரமாய் வாழ்வதால்,
சுதந்திரம் வேண்டி அழுததில்ல.

ஒழுக்கம் கெட்ட மனிதனை விட
ஐந்தறிவு குரங்காய்ப்பிறந்தது மேல்.

அன்புடன் நான் said...

பரிணாமத்தின் வளர்ச்சி கேள்விக்குறி!
பயமில்லா புரட்சியிடம் வெற்றிக்கொடி!!

நேசமித்ரன் said...

நேற்றின் பிரம்புக்கு ஆடிகொண்டிருக்கிறது இன்றின் பெண்டுலம்

சிறுமுள் நகர்வு தீர்மானிக்கும் நாளையை

திசைகளைக் கூட்டி விடியும் ஒரு பகலில் கூவும் பறவையின் அலகில்
வெட்சிப்பூ பூத்திருக்கும்

Unknown said...

நல்கவிதைகள் பல தந்தமைக்கு நன்றிகள் பல....

Madumitha said...

ஆசிரியரே
நீங்களும்
இந்தக் கோல்
மாதிரிதான்.
உங்கள்
உந்துதலால்
உயரம்
தொடுவேன்.
நன்றி
ஆசானே.

லெமூரியன்... said...

கவிதை மழை....!
நல்லா இருக்கு ஹேமா எல்லா கவிதையும்..!

ஜெய்லானி said...

எத்தனை முறை
என்னை ஆட்டி வைத்திருப்பாய்
நீயும் போட்டு பார்
ஒரு முறை
குட்டிக்கரனம்
வாழ்வின் வலி
தெரியும்.

அண்ணாமலை..!! said...

கண்ணாடியில்
தெரிகிறது..
இருவரின்
எதிர்காலமும்!
:)

sury siva said...

நானும் ஆடறேன். நீயும் ஆடறே !!
ஆடுவதுனக்குத் தெரியாது. நீ

ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம்
எங்கே என்னும் தெரியாது.

பாடிய சந்தமும் ஓடிய பந்தமும்
நாடியே திரும்பவும் வாராதோ !

வாடிய உறவும் வாசமும் கொண்டு
தேடியே என்னை வாராதோ !

அறியாயோ நீ ! ஆண்டவனருகில் !!
நெறிகள் யாவும் மறந்தனையோ !!

அமரும் அரியணை அசையும் ஒரு நாள்
தமரும் தொலைந்தே போய்விடுவார்.


அருமை எனவே வாங்கிய யாவும்
அங்கங்கே தான் நின்று விடும்.
எருமைவாகனன் அழையும்போதுன்
உருவும் உடனே மறைந்துவிடும்.

கருமம் ஒன்றே துணை நிற்கும் அந்த‌
தருமக் குரலினைக் கேட்டிடுவாய்.

சுப்பு தாத்தா
பின் குறிப்பு: இன்னும் சற்று நேரத்தில் இது என்னுடைய வலைப்பதிவில் கேட்கலாம். காணலாம்.
http://vazhvuneri.blogspot.com




.

கலா said...

பார்வையற்றுப் பரிதவிக்கின்றாயா?

கண்டும் காணாமல் போக
என்
மனவளம் இன்னும் குன்றவில்லை
குள்ளமென்று பயப்படாதே
என்
உள்ளம் உயரம்

எனக்குப்
பாரமென்று நினைக்காமல்
நீட்டுகிறேன் பற்றிக்கொள்
உன்னை
வழி நடத்தி விழியாய்
நானிருப்பேன் வா

உன் மனதுக்கு
என்னை உவமை சொல்லும்
மனிதனிடம்...
மனிதம்
இனிமேலும் என்னைக் குறைத்து
மதிப்பிடும் வழக்கத்தை
மாற்றட்டும்

உனக்கு நான் எனக்கு நீ
வித்தை காட்டி
விதியை வென்று
வீறு நடைபோட
எழுந்து வா என்
அன்புத் தோழா!!

சிநேகிதன் அக்பர் said...

ஆட்டுவிப்பவர்

நெறி தவறின்

ஆடுபவர் ஆட்டுவிப்பர்.

அம்பிகா said...

நேற்று நான்;
இன்று நீ ....
அட்ரா ராமா..., அட்ரா ராமா...,

ராஜ நடராஜன் said...

இந்த ஆட்டத்துக்கு நான் வரல!

இது எப்படியிருக்கு:)

ஜோதிஜி said...

இந்த ஆட்டத்துக்கு நான் வரல!

இது எப்படி?

Ahamed irshad said...

நேற்று நான்,

இன்று நீ,

நாளை...?

குடந்தை அன்புமணி said...

மானாட மயிலாட
எல்லாம் வந்தாச்சு...
இங்கே-
குரங்காட்டத்திற்கு
மதிப்பில்லாமல் போயாச்சு...
நீயும் நானும்
வேறெங்கே போவது
வேறுவழி தெரியாமல்
நம் வயிறு நோவுது...!

ஜெயா said...

நேற்றைய நான்
இன்றைய நீ
நாளைய யார்????

இந்த ஆட்டத்துக்கு நானும் வரேல்லை....

ponsiva said...

'மனசாட்சி உறங்கும் வேளையிலேதான்
மனக்குரங்கு ஊர் சுற்ற புறப்பட்டுவிடும் ' -- கலைஞர் கருணாநிதி

என் மனக்குரங்கு ஊர் சுற்ற புறப்படுகையிலே
நிஜக்குரங்கு குச்சி கட்டி மறைத்தால் ..
என்ன செய்ய நான்...?

kala said...

தமிழே என்னை என்ன பாடு படுத்தினாய்
இப்போ நீ என்னிடம் .
(என் எழுத்தை திட்டின
அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
இதை சமர்பிக்கிறேன்).\\\\\\\\

இரவி: எவ்வளவு பிழை {முன்னால்}
விட்டேனோ அவ்வளவுக்கும்
வாங்கின.....வாங்கிக் கட்டிகிட்ட
அத்தனையும் கழித்து விட்டு
இக் கவிதையைப் பாருங்கள்

தமிழ்: சூரியனாய் நீ இருந்து
என்னைப் பல முறை சுட்டதால்...
குற்றம் குற்றமே!
நீ எக் கவிதை தீட்டினாலும்..
அக் குற்றம் குற்றமே!!

நிட்சயமாக...
சத்தியமாக....
தமிழ்ப் புலமை மீது ஆணையாக....

மன்னிப்போம்! மறப்போம்!!
ஆஹஆஹஹாஆஆ......




-

நசரேயன் said...

ஹேமா கடைப்பக்கம் போவியா ..போவியா
இனிமேல போன
அடி பிச்சுடுவேன்

ஸ்ரீராம். said...

நடக்காத நாடகத்துக்கு இருவருமே பார்வையாளர்கள்தானா? ஓ.. கவிதைன்னா ஒண்ணு கீழ ஒண்ணு வரணுமா...?
நடக்காத நாடகத்துக்கு
இருவருமே
பார்வையாளராக இருந்தால்...
ஒரு
மாறுதலுக்கு
நீ
ஆடு...
குச்சி என் கையில்.

இவ்வளவுதான் எனக்கு எழுத வருது!

- இரவீ - said...

//தமிழ்: சூரியனாய் நீ இருந்து
என்னைப் பல முறை சுட்டதால்...
குற்றம் குற்றமே!
நீ எக் கவிதை தீட்டினாலும்..
அக் குற்றம் குற்றமே!!

நிட்சயமாக...
சத்தியமாக....
தமிழ்ப் புலமை மீது ஆணையாக....

மன்னிப்போம்! மறப்போம்!!
ஆஹஆஹஹாஆஆ.....//

தமிழே, நான் உன்னை மறந்தாலும்
நீ என்ன மறக்கவும் வேணாம் மன்னிக்கவும் வேணாம் ...
உரிமையோடு பகிடி மட்டும் செய்ய விடு.

- இரவீ - said...

குச்சியையும் கொடுத்து
கூத்தாட சொல்கிறாயே,
வருடங்களோடு வளர்ந்துவிட்டதோ
உந்தன் நம்பிக்கை.

அதிகாரம் கைபிடிக்க
கால் ஒருதிசை
தலை ஒருதிசையாய் ... நான்.
விட்டுவிடு ....
என்னை அப்படியே இருக்கவிடு.

ஸ்ரீராம். said...

இன்னும் ஒன்று ஹேமா... தேவைப் பட்டால் நடுவுல 'மானே, தேனே' எல்லாம் போட்டு படியுங்க...கவிதை மாதிரி இருக்கும்... நான் இதையும் ஒன்றின் கீழ் ஒன்றாகத்தான் எழுதி உள்ளேன்!!

"ஆட்றா ராமா" சொல்வதை நிறுத்தி விட்டு
யோசனையில் ஆழ்ந்த மனிதனிடம்
குரங்கும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு
காரணம் கேட்டது...
கவலைகள் சூழ்ந்த
மனிதன் சொன்னான்
"மறுபடி பழைய பரிணாமத்தை
அடைய
வழியுண்டா என்று யோசிக்கிறேன்..."

கலா said...

கால் ஒருதிசை
தலை ஒருதிசையாய் ... நான்\\\\\

ஜய்யய்யோ...ஹேமா,
முண்டமாகத் திரிகின்றார் போலும்
ஒரு மருத்துவரை அனுப்பி
உயிர் எத் திசையில் என அறிந்து
எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து
வை ஹேமா புண்ணியம் கிடைக்கும்

VELU.G said...

நான் லேட் இருந்தாலும் ஆட்டத்தில் சேத்திக்கோங்க ஹேமா.

காலம் ஆடும் விளையாட்டு
மனிதன் குரங்கானபின்
குரங்கு மனிதனாகிறது

Riyas said...

எதை எழுதலாம்
என்ற நினைப்பிலேயே
நேரம் கடந்துவிட்டது
எதைத்தான்
சொல்வேனோ
இந்த மனிதனை
இந்த குரங்கினை
நோக்கி..

Karthick Chidambaram said...

குரங்குகள் தேசத்தில்
அரங்குகள் நிறைத்து மனிதர்கள்
இருந்தாலும்
இது தான்
கதி
தனியாய் மாட்டிகொண்டால் சொல்லவே வேண்டாம்!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP