Thursday, September 30, 2010

வெறுத்தலும் வேதனையும்.

நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களுக்கு அது அப்பா அம்மாவாகக்கூட இருக்கலாம்.சங்கடமான கட்டங்கள் வரும்போது நம்மையும் சேர்த்து ஏதேனும் சொல்லிவிடுகிறார்கள்.ஏன் நாம்கூடத்தான் சொல்லிவிடுகிறோம்.நாம் உடனே வேதனைப்படுகிறோம்.அட..சே! எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டார் என்று இந்த ஒரே ஒரு சம்பவத்தை வைத்து முடிவிற்கு வருகிறோம்.

அவர்களும் காலம் முழுதும் அவர்களுக்குக் கீழ்ப்படிவாய் இருந்ததையோ இப்போது தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதையோ உலக அறிவுகளோடு மனம் பக்குவப்பட்டிருப்பதையோ யோசிப்பதில்லை.

மாறாக... மனப்பாதிப்புகளைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
நினைப்பதேயில்லை.மனங்கள் கொஞ்சம் தணிந்து ஆறிய பிறகாவது ஏன்...என்ன ஆயிற்று உங்களுக்கு? இப்படியெல்லாம் கோபப்படவே மாட்டீர்கள்! இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லவே மாட்டீர்களே?’என்று கேட்கும் மனநிலை இருப்பதில்லை எமக்கு.எம் கவலையெல்லாம் நாம் அடைந்த பாதிப்பைப் பற்றி மட்டும்தான்.

இதேநேரம் சின்ன வார்த்தையாய் இருந்தாலும் எங்களால் எங்களைப் பெற்று வளர்த்தவர்கள் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பற்றியும் கவலையேயில்லை.

இப்படி நிலைமை மோசமாயிருக்க மனம் விட்டுக் கதைக்கவோ முன்பைப்போல நெருங்கிப் பழகவோ மனம் இணங்காமல் தள்ளி இருத்தலே நல்லதென மனம் ஒதுங்குவது சரியாகுமா.இத்தனை கால அன்பிற்கும் இது எப்படி ஒரு முடிவாகும்!

இந்த இடத்தில்தான் கவனமாக இருத்தல் நல்லது.உறவுகள் பிளவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.என் அனுபவமும் கூட.எதையும் பெரிதுபடுத்தாமல் அவர்கல் வயதில் பெரியவர்கள்.பேசவோ திட்டவோ உரிமை இருப்பதாய் நினைத்துக்கொண்டு அவர்களை சுகநலம் விசாரித்துப்பாருங்கள்.அழுதேவிடுவார்கள்.

இதில் நன்மைகளும் உண்டு.அவர்களே அவர்கள் தங்கள் பிழையை உணர்ந்து தவிப்பார்கள்.தாங்கள் மனம் நோகப் பேசியும் திரும்பவும் தங்களைத் தேடி வருவதும் தங்கள் மேல் அக்கறைப் படுவதும் இன்னும் இன்னும் அன்பைக் கூட்டும்.மனதை இளக வைக்கும்.

இதைவிட நாங்களும் உன் மனம் நோகப் பேசிவிட்டோம் இனி இப்படி ஏதும் வராது என தங்கள் மனம் விட்டுக் கதைத்து இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டு அன்பை இன்னும் இருமடங்காக்கி நிலைமையை இலேசாக்கிவிடும்.

இப்படியான நல்ல அணுகுமுறைகள் இருக்க நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் வாழ்வில் நிச்சயம் இருக்கும்.பகிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயம் எல்லோருக்குமே பயன்படும் !

37 comments:

எல் கே said...

மனம் விட்டு பேசினால் சண்டை ஏது ??

ராமலக்ஷ்மி said...

//நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!//

அருமையான வாழ்வியல் சிந்தனை.

கவி அழகன் said...

நல்ல ஒரு பண்பானவர்களிடம் இருக்க வேண்டிய குணங்கள்
நமட வேலை பளு பிரச்னை மன அழுத்தங்களால் வார்த்தைகள் மாறுவது தவிர்க்கமுடியாதது .
பிபு மனம் வருந்துவதும் உண்டு
ஈகோ பெரியவன் சின்னவன் போன்ற காரணத்தினால் திருப்பி அதை பற்றி கதைக்க தாயகம் கட்டுகின்றோம்
அதை மாற்றினால் சரி

Anonymous said...

மன்னிக்கிறவன் மனுஷன்..
மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்..
அவசரத்தில் வார்த்தைகள் சிந்தினாலும் உணர்ந்து மனம் விட்டுப் பேசி மன்னிப்புக் கேட்டால் உறவில் பிரிவேது?
நல்ல பதிவு ஹேமா :)

Priya said...

//தாங்கள் மனம் நோகப் பேசியும் திரும்பவும் தங்களைத் தேடி வருவதும் தங்கள் மேல் அக்கறைப் படுவதும் இன்னும் இன்னும் அன்பைக் கூட்டும்.மனதை இளக வைக்கும்.//... மிக சிறந்த அனுகுமுறை இதுவாகத்தான் இருக்கும் தோழி.

ராஜவம்சம் said...

சில நேரங்களில் இந்தத்தவறை நானும் செய்திறுக்கிறேன் இனி திறுந்தவேண்டும்
நன்றி ஹேமா.

நிலாமதி said...

மனம் பக்குவப் பட ஒரு நல்ல பதிவு.............பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். . இரு பகுதியினரும் துன்பப்பட்டு இருப்பார்கள்.
மனம் விட்டுபேசினால் துயரங்கள் விலகும்.

Ashok D said...

என்ன பண்றது... என் வேலை மன்னிக்கறதுதான்... இருந்தாலும் தொடர்ந்து மன்னிக்கறதால நம்மல இளிச்சன்வாயன்னு நினைக்கறதுக்கும் சாத்தியம்தான் ஹேமாஜி

நல்ல குடும்ப படம் சாரி பதிவு :)

Unknown said...

இப்படி நிலைமை மோசமாயிருக்க மனம் விட்டுக் கதைக்கவோ முன்பைப்போல நெருங்கிப் பழகவோ மனம் இணங்காமல் தள்ளி இருத்தலே நல்லதென மனம் ஒதுங்குவது சரியாகுமா.இத்தனை கால அன்பிற்கும் இது எப்படி ஒரு முடிவாகும்!//

உண்மைதான் !!

சத்ரியன் said...

ஆமா ஹேமா, பலருக்கும் இவ்வனுபவம் நிச்சயம் இருக்கு(ம்)...!

தமிழ் உதயம் said...

அழகாக அருமையாக சொல்லி விட்டிர்கள்.ஹேமா,

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு. நிறைய பேரால் முடியாத விஷயமும் கூட. மனதில் போட்டு உழன்று கொண்டே இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். நன்றல்லதை அன்றே மறந்து நெஞ்சத்தகம் நக நட்பு பாராட்டி இனிய உளவாகக் கூறி நன்னயம் செய்தல் நன்றுதான்.

பவள சங்கரி said...

உண்மை ஹேமா, மனம் விட்டுப் பேசினாலே பிரச்சனைகள் எளிதாக தீர்ந்து விடும்.......நிறைய விவாகரத்து வழக்குகள் கூட மனம் விட்டு பேசாததினால் வருவதுதானே.......

Riyas said...

நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவு அக்கா.. மனசின் காயமே அதிக வலியை தரககூடியது.

நிலாமகள் said...

நல்ல படிப்பினை ஊட்டும் பகிர்வு/பதிவு. உங்க ஒப்பனையற்ற உள்முகமும், சுயசிந்தனைத் தெளிவும் ரொம்ப பிடிக்குது தோழி...! இந்த சுய அலசல்தான் சிக்கலின் நுனியை கண்டெடுக்க உதவும்.

ஜெயா said...

மனம் விட்டுப் பேசுவது குறைந்து போனதால் தான் இன்று உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகரித்து அதிகமானவரின் வாழ்க்கை வெறுத்தலும் வேதனையுமாக இருப்பதைக் காண்கிறோம். சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு ஹேமா....

ராஜ நடராஜன் said...

உப்பு மட சந்தியும்,வானம் வெளித்த பின்னும் ரெட்டையா?முதல் முறையாக கவனிக்கிறேன்.

yarl said...

எனக்கும் சில அனுபவங்கள் இருக்கு ஹேமா. நீ பெரிசு நான் பெரிசு. உன்னட்ட நான் வலிய வாறதோ ? எண்டெல்லாம் தேவயில்லாத பிரச்சனைகள் வரும். விட்டுக்குடுதுப்போகேக்கை மனம் விட்டு பேசேக்கை பிரச்சனை கொஞ்சம் குறையும். ஆனால் சில பேருக்கு புரிய வைக்க சரியான கஷ்டமாய் இருக்கு. நல்ல பதிவு ஹேமா. வாழ்த்துக்கள்.
அன்புடன் மங்கை

மாதேவி said...

நல்ல பகிர்தல்.

கண்ணகி said...

நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!

உண்மைதான் ஹேமா...ஆனால் நமக்கு நெருங்கியவர்கள் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்தும்போது அந்த வடு ஆழமாக தைத்துவிடுகிறதே,,,என் செய்வது....

நல்ல பதிவு...

VELU.G said...

நல்ல சிந்தனை

அருமையான பகிர்வு

சுந்தர்ஜி said...

நிலாமகளின் கருத்தும் என் கருத்தும் ஒன்றாவதால் எதுக்கு இன்னொரு பின் ஊட்டம் ஹேமா?

மோகன்ஜி said...

ஹேமா! இந்த இரண்டாவது வலைப்பூவை இன்று தான் கண்ணுற்றேன். அன்பு ஒரு பெயர்ச் சொல் அல்ல, அது ஒரு வினைச்சொல்.
நாமே அன்புமயமாய் ஆகிவிட்டால் போதும்..மகிழ்வொன்றையே பரப்பிக் கொண்டிருப்போம்.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை அல்லவா? வாழ்த்துக்கள்

ஹேமா said...

கார்த்திக்(LK)...இவ்வளவு வேகமா வந்து நல்லதையே சொன்னீங்க.மனம் திறந்து பேசிக்கொண்டாலே நிறையப் பிரச்சனைகள் குறைய வழி.அனுபவ உண்மையும் கூட.


ராமலஷ்மி அக்கா...நன்றி உங்கள் கருத்துக்கு.


யாதவன்...எங்கள் நாட்டுப் பிரச்சனை முற்றி வழிமாறியதுக்கெல்லாம் காரணம்கூட மனம் விட்டுக் கதைக்காததும் இந்த ஈகோவும்தான்.யாதவன் அச்சுப்பிழைகள் நிறைய இருக்கு.
கவனியுங்கோ !


பாலா...செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்பதைத் தரக்குறைவாக நினைத்துக்கொள்பவர்கள் நாங்கள்.
இந்த மனநிலை மாறினாலே நிறைவான அமைதி கிடைக்கும் வாழ்வில்.


ப்ரியா...நான் பட்ட அனுபவம் சொன்னேன்.
அது வாழ்வியலாகிறது தோழி.


ராஜவம்சம்...நன்றி நன்றி சந்தோஷமும்கூட.என் பதிவு உங்களை யோசிக்க வைத்திருக்கிறது என்றால் மிகவும் சந்தோஷம்.
செயல்படுத்திவிட்டும் சொல்லுங்கோ.


நிலாமதி...அதுவும் நெருங்கிய உறவுக்குள் பகையை நீடித்தால் அது பிளவுபடத்தான் உறுதியான சாத்தியம்.எனவே கொஞ்சம் யோசிப்போம்.


அஷோக்...உண்மைதான் இது ஒரு குடும்பப் படம்தான்.நீங்கள் சொல்வதும் சரி.மன்னிக்கும் குணத்தைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார்கள்.


மைந்தன் சிவா...முதல் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி நண்பரே.

ஹேமா said...

சத்ரியா...ஏதோ பூடகமா எனக்குப் புத்தி சொல்லிட்டுப் போறமாதிரி இருக்கு.சரி சரி பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும் !


தமிழ்...இப்படியான பதிவுகள் நீங்கள் நிறையவே தருகிறீர்கள்.என்றாலும் சில அனுபவங்களை சொல்ல நினைக்கிறேன் நான்.


ஸ்ரீராம்...உண்மைதான்.மனதில் வைத்து பிரச்சனைகளுக்குத் தெளிவு கிடைக்காமல் குழம்புவதைவிட பேசிக்கொள்வதால் எவ்வளவு தெளிவும் சந்தோஷமும் இனித் தவறு வராத மனதிருப்தியும் கிடைத்துவிடுகிறது.


நித்திலம்...சரியான உண்மை.
விவாகரத்துக்களுக்கு 90% காரணங்கள் மனம் விட்டுப் பேசிக்கொள்ளாததின் காரணமே.நல்லதோ கெட்டதோ பேசிக்கொள்வதால் இருவருக்குள்ளும் புரிதல் ஏற்படுகிறது.


T.V.ராதாகிருஷ்ணன்...நன்றி ஐயா.எப்போதும் மௌனமாய் வந்து போகிறீர்கள்.நன்றி.
கொஞ்சம் பேசுங்களேன்.


ரியாஸ்...நிச்சயம் இப்படி ஒரு சம்பவமும் வலியும் எல்லோருமே சந்திக்கிறோம்.சிந்திப்போம் அதுபற்றி.


நிலாமகள்...சிக்கலின் நுனியை நான் மட்டும்பிடித்தால் போதாது.
மறுமுனையில் இருப்பவரும் பிடித்தல் வேணும்.அப்போதான் பிரச்சனை வடியும்.மன்னிப்புக் கேட்டலும் கொடுத்தலும்கூடச் சமகாலத்தில் நடக்கவேணுமே !


ஜெயா...அதனால்தான் வெறுத்தலும் வேதனையுமென்று பெயர் வைத்தேன்.நம் வீடுகளிலேயே இடைவெளிகள் பெருகுகின்றன.
காரணம் மனம்விட்டுக் கதைக்க நேரமின்மை !


நடா...இப்போதான் கண்டுபிடிச்சிருக்கீங்க.அங்கே கவிதைகள் மட்டும்.இங்கே மனம் விட்டுக் கதைக்கலாம் வாங்கோ !


மங்கை...அன்பு மங்கை மனம் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள் போல.உண்மைதான்.அதைத்தான் நிலாமகளுக்கும் பதிலாய் சொல்லியிருக்கிறேன்.இருபக்கமும் மனம்விட்டுக் கதைக்க முன்வரவேண்டும்.
அன்பு வரவுக்கு நன்றி தோழி.


மாதேவி...நன்றி தோழி.உங்கள் சமையல்போல எல்லாம் அளவாய் அமையவேண்டும் வாழ்க்கைக்கும் !


கண்ணகி...நீங்கள் சொல்வதும் சரிதான்.சிலசமயங்களில் வேதனைகள் குடைந்தெடுக்க வார்த்தைகள் இடக்குமுடக்காக வந்துவிடுகின்றன.நிச்சயம் நிதானமிழக்காமல் இருத்தல் அவசியம் உறவுகளுக்குள்.


வேலு...எங்கே கவிதைப் பக்கத்தில் காணொமே நிறைய நாள் !


சுந்தர்ஜி...நீங்கள் கவிதைகளாலேயே சொல்லிவிடுகிறீர்களே வாழ்வியல் அத்தனையையும்.எங்கே கவிதைப் பக்கம் வராமல் இங்கே மட்டும் !


மோகன்ஜி...நன்றி மனம் விட்டுக் கதைக்க என்றே இந்தப் பக்கம்.
கதைத்தவைகளையும் பாருங்களேன்.
நகைச்சுவை அனுபவம் என்று கதைத்திருக்கிறோம்.அன்புக்குக்
கட்டுப்பட்டவர்கள் நாங்கள் தமிழர்கள்.
நிச்சயம் பகை நீடிக்காது உறவுகளுக்குள்.

ஜோதிஜி said...

குழந்தை நிலா உள்ளே வந்தால் கொள்ளை கொள்ளும் நிலா வெளிச்சம் போல் ஊர் முற்றம் நினைவுக்கு வருகிறது.

மூதாதையர்கள் படம் பக்காவாட்டில் பக்காவாயிருக்க இந்த சகிப்புத்தன்மையை முழுமையாக உள்வாங்கிய பின் எனக்குத் தோன்றுகிறது என்ன தெரியும் ஹேமா?

கவிதாயினி சொன்ன இன்று ஒரு தகவல்.

'பரிவை' சே.குமார் said...

மனம் விட்டு பேசினால் சண்டை ஏது ஹேமா?

மனம் பக்குவப் பட ஒரு நல்ல பதிவு.

அப்பாதுரை said...

நீண்ட கால அன்பும் நட்பும் கண நேர வார்த்தைகளால் விரிசல் அடையாது...விடலாகாது. உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 'நடந்தது நடந்து விட்டது' என்ற எண்ணம் வாய் திறக்குமுன் வரவேண்டும் என்று என் நண்பரும் ஆசிரியருமான அரசன் அடிக்கடிச் சொல்வார். சங்கடமான நிலை வரும்பொழுது வாய் திறக்குமுன் என் மகள் பத்து வரை எண்ணுகிறாள் - அப்பனுக்குப் பாடம் சொல்லும் பெண்.

thiyaa said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஹேமா

சி.பி.செந்தில்குமார் said...

மனவியல் ரீதியிலான சிறந்த பதிவு,ஏதாகிலும் மனம் விட்டுப்பேசினால் நோ பிராப்ளம்

வாழ்த்துக்கள் ஹேமா

சிங்கக்குட்டி said...

//தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும்//

இதுதான் இன்று வரும் எல்லா குடும்ப பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம்.

ரொம்ப நல்ல பதிவு ஹேமா :-)

லெமூரியன்... said...

எங்க இருக்கீங்க??
வலை பக்கம் வந்து போங்க....
ஆவலுடன் காத்திருக்கோம்ல???
:)

Unknown said...

சண்டை போட்டுக்கிறது அப்புறம் சேந்துக்கிறது என்பது நம் தமிழ் கலாசாரத்தின் மாறாத விதி..

லெமூரியன்... said...

தீபத் திருநாள்னு ஒரு கொண்டாட்டம் இங்க பிரசித்தம்....
இலங்கைல எப்டின்னு எனக்கு தெரியல....
எனக்கு கொண்டாட்டங்கள் மேல நம்பிக்கை இல்ல...ஆனா கொண்டாரவங்களுக்கு
மறக்காம வாழ்த்து சொல்லனும்ல?? :)
உங்க மின்னஜஞ்சல் முகவரி இல்லை என்கிட்டே
அதனால பின்நூட்டதுலையே ஒரு வாழ்த்து :) :)
தீபத் திரு நாள் வாழ்த்துகள் ஹேமா..

Unknown said...

ஏன் அடிக்கடி எழுதுறது இல்லே..?

மே. இசக்கிமுத்து said...

சிந்திக்க வேண்டிய விசயம்.
சிம்பிளாக சொல்லி சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!!

ராஜ நடராஜன் said...

//இப்படியான நல்ல அணுகுமுறைகள் இருக்க நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!//

நானும் எத்தனையோ ஈகோ பார்த்திருக்கேன்.அம்மாவும் மகனும் பேசிக்கொள்ளாத மனோபாவத்தை அனுபவ ரீதியா எங்க அம்மா அண்ணன்கிட்ட மட்டுமே பார்க்கிறேன்:(

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP