Tuesday, November 30, 2010

என்னைப்போல யாராவது இருந்தால் !

என்னை நான் வெறுத்துத் தள்ளி நிற்கும் சமயத்தில் மனம் சோர்ந்து எதிலும் இல்லாமல் விரக்தி தோழமைக் கை கொடுக்க சாப்பாடு நித்திரை தவிர்த்து எதிலும் மனம் ஒட்டாமல் குந்திவிடுவேன்.ஆனால் ஏதோ ஒரு இசை மாத்திரம் என்னைத் தனிமையாக்காமல் சூழ்ந்து நிற்கும்.

ஆழ யோசித்தால் .... நான் ஏன் இப்படி.இன்பமும்,துன்பமும்,இழப்புக்களும் எனக்கு மட்டும்தானா.என்னைவிட இயலாதவர்கள்...இழப்பையே வாழ்வாக வாழும் எத்தனை பேர் உலகில்.

இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன்.நான்தான் இந்த வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்.என்னைப்போல யாரும் இல்லை.என் வாழ்க்கையை யாரும் வாழமுடியாது.விரும்பியோ விரும்பாமலோ பிறந்த வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டியிருக்கிறது.

வாழ்வு தளம்புவதும்,உறவுகள் பிரிவதும்,இல்லாமையும்,வறுமையும் இவற்றால் வரும் கஸ்டங்களும் இயல்பானதே.ஏன் பெரும்பணம் படத்தவர்களுக்கும்,உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமென்ன சந்தோஷமாகவா வாழ்வார்கள்.நான் மட்டும்தான் வேதனையோடும் விரக்தியோடும் வாழ்கிறேன் என்பது கொஞ்சம் என் அறிவீனத்தைச் சொல்லாமல் சொல்கிறது.இவையில்லாவிட்டால் வாழ்வின் சுவையும் குறைந்துவிடுமோ என்பதாயும் இருக்கிறது.

எத்தனையோ இழப்புக்கள் வேதனைகள் பிரிவுகளைத் தாங்கியபோதும் சில பிரிவுகள் சில இழப்புக்கள் மனதோடு கலந்துகிடப்பவை.காயங்கள் மாறினாலும் அவை வடுக்களாக அப்பப்போ கைகளுக்கு தட்டுப்பட்ட்டு ஞாபகங்களை கிளறிப் புதைத்து,எரித்து,பின் அணையாத தனலாகத் தகித்துக்கொண்டிருப்பவை.

இப்போதெல்லாம் இன்னும்...இன்னும் வலிகளை வேதனைகளைத் தாங்கக்கூடிய பக்குவத்தையடைய முயல்கிறேன்.என்னால் உணரமுடிகிறது.என் தலை நிறைந்த பாரங்களாய் என் வேதனைகள்தான்.சந்தோஷமான நேரங்களில் உடம்பின் உற்சாகம் கூடிநிற்பதும் கவலையான சமயங்களின் உடம்பின் சக்தியே குறைந்து கூடாய்க்கிடப்பதையும் உணர்கிறேன்.கவலைகள் மறக்கவும் வெறுக்கவும் தொடங்குகிறேன்.தூரவே இருக்கும்படியாகக் கட்டளையிடுகிறேன்.

இன்னும்...இன்னும் வாசிப்பதையும் கேட்பதையும் அதிகமாக்குகிறேன்.
தேவையான தேடுதலில் கவனம் செலுத்துகிறேன்.ஒருவேளை நான் கூடுதலாகப் பேசுகிறேனோ என்கூட நினைக்கிறேன்.அர்த்தமற்ற ஆசைகளுக்குள் அழுந்திக்கிடக்கிறேனோ.எல்லா வேதனைகளுக்கும் காரணம் நானேதானோ.ஒரு வரையறையின்றி பறந்து திரியாமல் எனக்கென்ற சில கட்டுப்பாடுகள், கோடுகள் போட்டு அதற்குள் என் எண்ணங்களை ஆசைகளை அடுக்கி வைத்திருக்கிறேனோ.

விரிந்து பரவிக் கிடக்கும் உலகில் நான் தனித்தில்லை.எனதென்று எதையும் சொந்தம் கொண்டாடுவதில் அர்த்தமேயில்லை.உலகம் தாண்டிப் போனால் பிரபஞ்சம்.அதையும் கடந்து போனால்...சிந்தனைகள் குறைந்ததாலேயே தாமதங்கள் வாழ்வில்.என் எண்ணங்கள் செயலற்றுக் கிடந்ததுக்கு நானேதான் பொறுப்பு.சிரிப்பைத் தொலத்ததற்கும் நானேதான் பொறுப்பு.

அன்பைக்கூட அளவோடு பெற்றும்...கொடுத்தம் இருந்திருக்கவேண்டும்.
இன்று ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுவது நான்தானே.சாப்பிடும் சாப்பாட்டுக்கு அளவும் கலோரியும் நினைக்கும் நான்...ஏன் உணர்வுகளுக்கு மாத்திரம் அளவை அதிகப்படுத்தி வைத்திருக்கிறேன்.

என்றுமே நான் அடுத்தவர்கள் புகழவேண்டும் என்பதற்காக வாழ்ந்ததில்லை.ஆனால் என் மனதிற்கு பிடித்தமான மாதிரி வாழ ஆசைப்பட்டிருக்கிறேன்.அதேசமயம் என்னால் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழவும், மனதுக்கு ஒப்பாத,மனச்சாட்சி தவறியும் வாழ நினைத்ததில்லை.

வாழ்வு அற்புதமாய் அழகாய் இருக்கிறது இப்போதெல்லாம்.
எண்ணிக்கையோடு வாழ்வதைவிட எண்ணிக் கை நிறையக் கொடுத்து உதவி வாழ்வதில் எத்தனை சந்தோஷம்.உயிர் இருப்பதாய் இருந்ததற்கும்....உயிர் வாழ்வதற்கும் நிறையவே வித்தியாசம்.

மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.
இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை.

ஹேமா(சுவிஸ்)

42 comments:

ஜோதிஜி said...

இது போன்ற முத்தான் வார்த்தைகளை படித்து விட்டு முதல் விமர்சனமாக என் விமர்சனம் வருவதை பெருமையாக கருதுகிறேன்.

நசரேயன் said...

//இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை//

பேருந்து, ரயிலுக்குகாவது காத்திருப்பீங்களா ?

நசரேயன் said...

//விரும்பியோ விரும்பாமலோ பிறந்த வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டியிருக்கிறது.//

தத்துவம் 931

நசரேயன் said...

//விரக்தி தோழமைக் கை கொடுக்க சாப்பாடு நித்திரை தவிர்த்து எதிலும்
மனம் ஒட்டாமல் குந்திவிடுவேன்//

கவுஜ எழுத ?

நசரேயன் said...

//இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன்.நான்தான் இந்த வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்//

இதுக்கெல்லாம் சம்பளத்துக்கு ஆள் வைக்க முடியாது

நசரேயன் said...

//ஏன் பெரும்பணம் படத்தவர்களுக்கும்,உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமென்ன சந்தோஷமாகவா வாழ்வார்கள்//

வசதிக்கு ஏத்த மாதிரி கஷ்டம் இருக்கும்

நசரேயன் said...

//இன்று ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுவது நான்தானே.//

சுக்கு காப்பி போட்டு குடிங்க ..நல்லா ஜீரணம் ஆகும்

நசரேயன் said...

//என் எண்ணங்கள் செயலற்றுக் கிடந்ததுக்கு நானேதான் பொறுப்பு.சிரிப்பைத் தொலத்ததற்கும் நானேதான் பொறுப்பு.//

ரெம்ப பொறுப்பா சொல்லி இருக்குகீங்க

நசரேயன் said...

சொன்னதெல்லாம் சரி.. சொன்ன மாதிரி கடை பிடிக்கணும்

ஸ்ரீராம். said...

ஏதோ சேதி சொல்வது போலவும், தேற்றிக் கொள்வது போலவும்...சுய அலசலா ஹேமா?

நிலாமதி said...

கலங்கி.......... குழம்பி ..........தெளிந்த பதிவு...........எல்லாம் அவன் செயல் .
இது தான் மனித மனம் (எனக்கும் இப்படி இருப்பது உண்டு) .

குறிப்பு : ஏன் உங்கள் சொற்களுக்கு இடையில் நீண்ட இடைவெளி வருகிறது .

தமிழ் உதயம் said...

அற்புதமாக எழுதி உள்ளீர்கள் ஹேமா.

LK said...

ஹேமா, நீங்கள் எழுதிய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இதுதான்... ரொம்ப ஆழ்ந்து யோசித்து இருக்கிறீர்கள்...

Sriakila said...

//வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்//

வலிகள் நமக்குப் பக்குவத்தைக் கொடுக்கும்.

பிரபு . எம் said...

வார்த்தைகள் இல்லாத வாழ்க்கை மொழியை அழகுத் தமிழாம் என் தாய்மொழியில் படித்த உணர்வு அக்கா!!
வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்வதே அரிது... வாழ்க்கையை வார்த்தையாய் வாழ்ந்த சில நிமிட சுகானுபவம் தந்த ஹேமா அக்காவுக்கு என் வணக்கங்கள்....
அற்புதம் அக்கா... மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்...

அன்புடன்,

பிரபு எம்

Rathi said...

ஹேமாவுக்கு என்னாச்சு என்று படித்துக்கொண்டே வந்து கடைசி பந்தியின் வரிகளைப் படித்தபின் தான் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

நிலாமகள் said...

இப்படியான சுய அலசல்கள் நம்மை நாமே புடமிட்டுக்கொள்ள ஏதுவாய் ... சுமைகளைத் தரும் இறையே சுமந்து கடப்பதற்கான வலிமையையும் தரட்டும்! எல்லாம் பாலத்தின் கீழ் நீரோட்டம் போல துரித மாறுதலுக்கு உட்பட்டதுதான் என்ற நம்பிக்கையில் நகர்ந்து கொண்டிருப்போம் தோழி...

Balaji saravana said...

//இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை//
ஆழ்ந்த யோசனையின் தெளிவு!

முனைவர்.இரா.குணசீலன் said...

இன்றைய வாழ்வை ரசிக்கிறேன்

முனைவர்.இரா.குணசீலன் said...

எனக்கும் கீழே வாழ்பவர் கோடி என நினைத்துப்பார்த்து நிம்மதி நாடுகிறேன்!!!!!!!!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.
இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை.


நான் கூட உங்கள மாதிரிதானுங்க!!!!!!!!!!

VELU.G said...

உங்கள் எழுத்துக்கள் இப்போது ஒரு நல்ல கட்டத்தை எட்டியுள்ளதாக நிணைக்கிறேன்.

இதுவரை வந்த உங்கள் பதிவுகளில் இதையே சிறந்ததாக தேர்ந்தெடுக்கிறேன்.

என்னுடைய வாழ்த்துக்கள்

இந்த எழுத்துக்களில் உட்புகுந்து எந்த விமர்சனமும் செய்யாமல் அப்படியே ஒப்புக்கொண்டு மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துகிறேன்

ராஜ நடராஜன் said...

இதுவும் கூட கவிதை நடையே ஹேமா!

சங்கரியின் செய்திகள்.. said...

super Hema Thats the spirit.

நசரேயன் பின்னூட்டத்துலக் கூட போட்டுத் தாக்குறீங்களே அப்பு.....

ஹேமா நம்ம நசரேயனோட அறிவுரைகளை தவறாம கடைப்பிடிங்க........விளங்கிடும்.....ஹ...ஹா...

கே.ஆர்.பி.செந்தில் said...

எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள் .. ஆனால் இன்றைய நாம் வாழ்வு புதிய எண்ணங்களை தோற்றுவிக்கிறது ..

ஜெயா said...

இந்த உலகில் நான் பிறந்து விட்டேன். நான் தான் இந்த வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்.என்னைப்போல யாரும் இல்லை. என் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது.விரும்பியோ விரும்பாமலோ பிறந்த வாழ்வை வாழ்ந்தே ஆக வேண்டி இருக்கிறது...

இது தான் நியதி ஹேமா.......

ஜெயந்தி said...

மனதை இழுத்துகொண்டு வந்து நிறுத்தியிருக்கும் (கடைசி பாரா) இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது.

சுந்தர்ஜி said...

கல்யாணம் முடிந்து சாபாட்டுக்கு வந்த மாதிரி நான் ரொம்ப லேட் ஹேமா.உங்கள் எழுத்திலும் சிந்தனையிலும் அசாத்தியமான தெளிவு சிற்றோடையின் சலசலப்போடு ஓடுவதை அவதானிக்க முடிகிறது.

நல்ல விருந்துக்குப் பின் சாப்பிட்ட கையின் மணம் போல நல்ல எழுத்தின் மணம் இந்தப் பக்கங்களில்.

கலாநேசன் said...

//உயிர் இருப்பதாய் இருந்ததற்கும்....உயிர் வாழ்வதற்கும் நிறையவே வித்தியாசம்.//

ஆமாங்க, உயிரோடு இருப்பதற்கும் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

தமிழ் அமுதன் said...

///மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.///

நல்லது...! தொடருங்கள்..!;)

சத்ரியன் said...

வலி இல்லாத வாழ்வுிதுவரை யாருக்கும் வாய்த்ததில்லை ஹேமா.

நண்பர் நசரைப் பாருங்க இதிலும் கூட எத்தனை நகைச்சுவைக் கண்டிருக்கிறார்!

அதுதான் வாழ்வின் மகிழ்ச்சி மந்திரம்!

சௌந்தர் said...

எப்போதும் நமக்கு கஷ்டம் வரும் போது நம்மளை விட மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள் அவர்களை போல் நாம் இல்லை என்று நினைத்த கொள்ளவேண்டிதான்...அவர்களுக்கு நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று

ஆ.ஞானசேகரன் said...

//இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை.
//

நல்லதுங்க ஹேமா

sury said...

// விரிந்து பரவிக் கிடக்கும் உலகில் நான் தனித்தில்லை.//

எத்துணை உண்மை.
உள் மனம் புரிந்துகொண்டால்,
அதுவே துணை.

சுப்பு ரத்தினம்.

ராஜவம்சம் said...

வாழ்க்கை வாழ்வதர்க்கே
இருதி வரியில் உருதியுடன் இருங்கள்.

Prasanna said...

//மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.//

இது போதும் :)

சிங்கக்குட்டி said...

ரொம்ப அருமை ஹேமா.

ஆனா, வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான், அதில் பார்த்தல், அனைவருக்குமே இதே எண்ணம்தான்.

நடப்பவை பிடிக்காது, ஆனால் முடிந்தவை பிடிக்கும், அப்படி பார்த்தல் நாளை இதுவும் பிடிக்கும்.

ஆம், இதுவும் கடந்து போகும்.

லெமூரியன்... said...

என்னாச்சு??? மனசு சரி இல்லையா என்ன??
:(

விந்தைமனிதன் said...

//மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்//

நல்லாருக்குங்க... நானும் முயற்சி பண்ணி பாக்குறேன்

சே.குமார் said...

தெளிந்த பதிவு.

அற்புதமாக எழுதி உள்ளீர்கள் ஹேமா.

ஹேமா said...

ஜோதிஜி...நீங்க முதல் வந்து சொல்லிப் போனதுக்கு நான்தான் நன்றி சொல்லணும் !


நசர்...எப்பிடித்தான் உங்களை வீட்ல சமாளிக்கிறாங்களோ !


ஸ்ரீராம்...ம்ம்...சுய அலசல்ன்னும் சொல்லலாம்!


நிலாமதி...எப்படித்தான் தெளிந்தாலும் அப்பப்போ குழம்பித்தான் தவிக்கவேண்டியிருக்கிறது.நீங்கள் கேட்பது சரி.ஏனோ இயல்பாகவே இடைவெளி தருகிறது தளத்தில் !


தமிழ்...உங்கள் எழுத்தைவிட இது பெரிதல்ல.இது ஒரு புலம்பல் மட்டுமே.என்றாலும் அன்புக்கு நன்றி !


கார்த்திக்...என் புலம்பலாக இருந்தாலும் உணர்வோடு வெளிப்பட்டதால் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ !


ஸ்ரீஅகிலா...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !


பிரபு...உங்கள் தமிழின் அன்புக்கு மிக்க மிக்க நன்றி !


ரதி...அடிக்கடி ஹேமாவுக்கு இப்பிடி ஆனபடியே இருக்கு.தெளிவாய் சந்தோஷமாய் இருக்கிறது குறைஞ்சுபோச்சுப்பா !


நிலாமகள்...அன்புக்கும் ஆறுதலுக்கும் நன்றி தோழி.
கண்டுகாதீங்க.இப்பிடித்தான் வரும் போகும் !


பாலா...நன்றி நண்பா !


குணா...உங்கள் வருகை கருத்து அதிசயம்.நன்றி !


வேலு...உங்கள் பாராட்டுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைக்கும் சந்தோஷம்.நன்றி !


நடா...எழுதுறப்போ அப்பிடி வருதோ.எனக்குத் தெரில.மாத்தணும் !


சங்கரி...நசர் கும்மியும் இல்லாட்டி இங்கே எல்லாரும் அழுதிடுவாங்களோ நானும்தான்.ஆனாலும் அவர் அன்பும் ஆறுதல்தான்.உங்க வரவுக்கும் நன்றி.அடிக்கடி கவிதைப் பக்கமும் வரலாமே !

ஹேமா said...

செந்தில்...எண்ணங்களே வாழ்வானாலும் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காதோ !


ஜெயா...எங்கே அடிக்கடி காணக் கிடைப்பதில்லை உங்களை இப்பவெல்லாம்.என்ன தோழி !


ஜெயந்தி...இருந்திருந்து என் பக்கம் உங்களைக் காண்கிறேன்.நன்றியம்மா !


சுந்தர்ஜி...உங்கள் பாராட்டே ஒரு விருந்துபோல எனக்கும் !


லாநேசன்...இருத்தலையும் வாழ்தலையும் புரிந்துகொண்டாலே நல்லது செய்யலாம் !


ஜீவன் அமுதன்...புரிந்துகொண்டு ஏதோ சொல்வதுபோலத் தெரிகிறது.நன்றி சகோதரா !


சத்ரியா...நன்றி நன்றி.நசருக்கு எப்போதும் என் நன்றிகள்.சில பொக்கிஷங்கள் காலம்தவறியே கைகளில் கிடைக்கும்போது !


சௌந்தர்...எங்கே அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள் இபோவெல்லாம்.உண்மைதான் நீங்கள் சொன்ன தத்துவம்.
என்றாலும் மனப்பேய்
உருவெடுக்கும் சிலசமயங்களில் !


ஞானம்... சுகம்தானே.ஏன் வேலைப்பளுவா?பதிவுகள் குறைவாகிவிட்டது உங்கள் பக்கத்தில் !


சுப்பு ஐயா...உங்கள் ஆசீர்வாதம் என்றும் தேடும் நான் !


ராஜவம்சம்...என்றும் தொடர்ந்திருங்கள் என்னோடு !பிரசன்னா...இப்போவெல்லாம் கவிதை விளங்கிக் கொள்கிறது உங்களுக்கு.எப்படி !


சிங்கா...ம்ம்ம்...இதுவும் கடந்து போகிறது.ஆனால் வரும்போகும் !


லெமூரியன்...அப்பப்போ இப்பிடித்தான்.கண்டுக்காதீங்க.
நீங்க சுகம்தானே !


விந்தையாரே...முயற்சி பண்ணிட்டு எனக்கும் சொல்லுங்க.முடியுதான்னு !


குமார்...
அன்பான கருத்துக்கு மிக்க நன்றி !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP