Thursday, December 16, 2010

தொலைந்துபோவமோ தூரதேசத்தில்.


மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

வேப்பமரக் குயிலே...
குயிலே......என் வீடு இன்னும் இருக்கிறதா
ஏக்கமுடன் நீ பாடும் ஒற்றைக் குரல் ஒலிக்கிறதா
ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா......ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா
நேப்பிள்மர நிழலோரம் மெல்ல விழி மூடுகையில்
கேட்குதடி உன் பாடல்
தேம்புதடி என் இதயம்....

மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

வந்த இடம் ஒட்டவில்லை வாழ்நிலமும் கிட்டவில்லை
சொந்தமும் பக்கமில்லை சொல்லியழ நேரமில்லை
சொல்லியழ நேரமில்லை
சொல்லியழ நேரமில்லை......சொல்லியழ நேரமில்லை
இந்த நிலை மாறி எங்கள் சொந்த மண்ணைச் சேர்வதெப்போ
அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ
அழுது துயர் தீர்வதெப்போ....

மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

தூர தேசத்தில்.....
தூர தேசத்தில்.....
தூர தேசத்தில்.......................!!!!!!

பாடியவர் - சுகல்யா ரகுநாதன்.
வரிகள் - கலைவாணி ராஜகுமாரன்.

14 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

. . . . . . .

Vela said...

படிக்கும்போதே மனசு கலங்குது...

நிலாமதி said...

தாய் நாடு இழந்த ஒவ்வொரு ஈழத்தவரின் சோகமும் பாடல் வரிகளாக. சோகங்கள் என்று தீரும். பகிர்வுக்கு நன்றி .

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனசு கலங்குது...

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. பாடலாகக் கேட்கும் போது இன்னும் உருக்கம் ஹேமா.

தமிழ் உதயம் said...

சொர்க்கமே என்றாலும் சொந்த தேசம் போல் வருமா.
மண்ணின் வாசனை மறந்து போகுமா...

ஜெயா said...

மறந்து போகுமோ மண்ணின் வாசனை
தொலைந்து போவமோ தூரதேசத்தில்?

yarl said...

எப்படி ஹேமா மறக்க முடியும்? எமது தாயை எப்படி மறக்கமுடியும்? இதை எம்முடன் பகிர்ந்து கொண்ட அந்த சகோதரனுக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள்.

Madumitha said...

இத்துயர் மிகு வரிகள்
காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
ஹேமா.
சுகல்யா ரகுநாதனின் குரலும், கலைவாணி ராஜகுமாரனின் வரிகளும்
மனசைத் தொடுகின்றன.

தொலைந்து போவோமோ தூர தேசத்தில்
.... விழியோரம் கசிகிறது. கனக்கிறது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எங்களுக்கெல்லாம் எங்கள் மாநிலத்துக்குள்ளேயே எமது நாட்டுக்குள்ளேயே பழகி நினைவுகளை விட்டுவந்த இடங்களின் நிழல் அறுத்தெடுக்கிறது.

தாய்மண்ணையே விட்டு விலகிப் போகும் தருணம் எத்தனை கொடியது ஹேமா?

”விடை கொடு எங்கள் நாடே” கேட்கும் ஒவ்வொரு தருணமும் கண்கள் கசிந்து பகைவனுக்கும் இந்நிலை வராதிருக்கட்டும் என்று வேண்டுவேன்.

சுகல்யா ரகுநாதனின் குரலும் கலைவாணி ராஜகுமாரனின் வார்த்தைகளும் அதே உணர்வை எழுப்பியது.

வெட்டப்பட்ட மரத்துப் பறவையின் குரலை ஒவ்வொரு முறை உங்கள் தளத்துக்கு வரும்போதும் கேட்கிறேன் ஹேமா.

என்னிடம் வார்த்தைகள் இல்லை.வார்த்தைகளற்ற ப்ரார்த்தனைகள் நிரம்ப உண்டு ஹேமா.

sathishsangkavi.blogspot.com said...

மறந்து போகுமோ மண்ணின் வாசனை
தொலைந்து போவமோ தூரதேசத்தில்?

???????

ஸ்ரீராம். said...

மனத்தைக் கலங்கடித்த பாடல். காணொளி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. சொந்த நாட்டில் சொந்த ஊரைப் பிரிந்த சோகமே எங்களுக்குப் பெரிதாக இருக்கும்போது தூர தேசத்தில் தொலைந்து போவமோ....இது MP3 ஆகக் கிடைக்குமா ஹேமா?

Muruganandan M.K. said...

உறவுகளிலும் நினைவுகளிலும் தோயும்
மனதிருந்தால் தூரதேசத்திலும் சொந்த மண் வாசம் வீசாதா?

ஹேமா said...

சென்ற பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் என் கையோடு இணைந்த அத்தனை என் உறவுகளுக்கும் என் அன்பு நன்றி.இந்த இரண்டு பதிவுமே சேமித்து வைக்கவேண்டிய ஒரு பதிவாகவே நான் நினைத்துப் பதிவிட்டேன்.எப்போதும் அழும் பதிவாக இருந்தாலும் இன்னும் 10 வருடங்களின் பின்னர்கூட இந்தப் பதிவுகள் எம் தலைமுறையினர் பார்க்க நேரிடும்.அவர்களும் அறியட்டுமே !

ஸ்ரீராம்...இந்தப்பாடல் MP3 ஆகக் கிடைக்குமா ஹேமா?என்று கேட்டிருந்தீர்கல்.
எனக்குத் தெரியவில்லை ஸ்ரீராம்.தேடிப் பார்க்கிறேன்.
கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP