கவிதை என்கிற பெயரில் கிறுக்கிற அளவுக்கு தொடராக என் எண்ணங்களை எழுதமுடிவதில்லை.என்றாலும் மனதின் சில வேதனைகளை நான் எப்படி நினைக்கிறேனோ அப்படியே எழுதி வைக்கிறேன் என் ஊரின் பெயர்கொண்ட உப்புமடச் சந்தியில்.அப்பா அம்மா சொன்ன விஷயங்களும் நினைவோடு கலந்திருக்கும்.அதன் நினைவுச் சாயலே இந்த வெற்றிக்குப் பதிவான "யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு".
குழந்தைநிலாவில் ஈழம் பதிவில் "உயிர்த்தளம்"கவிதை வெற்றிபெறும் என்று நினைத்திருந்தேன்.அது என் உள்ளத்து ஓலம்.அத்தனை பிடிக்கும் என் தேசத்தை.என் மக்களை.
இப்போதுகூட மழை வெள்ளத்தால் அவதிப்படும் என் உறவுகளைச் சொந்தங்களை நினைத்து கொஞ்சம்கூட சந்தோஷமில்லாத மனநிலையிலேயே செத்தபிணமாகக் கடமையே என நாளையும் நொடியையும் போகச்செய்தபடி இருக்கிறேன்.நேற்றைய பொங்கல்கூட வானொலியில் கேட்டே அறிந்துகொண்டேன்.அதன்பிறகுகூட குளித்துச் சாமிகும்பிடக்கூட மனமற்று என்ன பொங்கலும் பூசையும் என்று மனவேதனையுடனேயே பொங்கல் பொங்காமல் போனது.
போரினாலும் அடிக்கடி இயற்கையாலும் அரசியலாலும் அவர்களின் வாழ்நாட்காலம் முழுதுமே அவலம்...அவலம்.கொடுத்தே கை தேயந்த தமிழன் இன்று உதவி...உதவி என்ற ஓலத்தோடு வேறு வழியேயில்லாமால் கை நீட்டி ஒல்கிக் குறுகியபடி,கிடைத்ததைச் சாப்பிட்டு,கிடைத்த இடத்தில சரிந்து,தூக்கம் நிம்மதி கெட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
தராசின் நிலையானது வாழ்வு.ஒருப்பக்கம் தாள மறுபக்கம் கொஞ்சம் எழும்பிவருவதாய் தமிழ்மணத்தின் அறிவிப்பு.அங்குகூட என் ஈழம்.மனம் அழுகிறது.ஈழத்தாய்....என் தேசத்தாய்... இப்போதெல்லாம் பேசுபொருளாகிவிட்டாள்.அவளின் கஸ்டங்கள் வேதனைகளே ஒரு சினிமாவில்,மேடைப்பேச்சுக்களில்,எழுத்துக்களில் எல்லாம் வியாபாரமாய் பேர் புகழ் தேடிக்கொடுக்கும் பொருளாய் ஆகிவிட்டது.
என் தாய் தேசம் தந்த பரிசாகவும் மனநெகிழ்வோடு கண்ணீரோடு இந்தப் பரிசை கையேந்திக்கொள்கிறேன்.நன்றி நன்றி !
அன்போடு நட்போடு ஹேமா.
36 comments:
விருதுக்கு வாழ்த்துகள் ஹேமா.
விருதுக்கு வாழ்த்துகள் ஹேமா.
உலக தேசத்தின் சார்பில் உங்களுக்கு..... வாழ்த்துக்கள்... மிக்க பெருமையாய் இருக்குங்க ஹேமா...
மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இது நல்ல அங்கீகாரம்.... பெருமையாய் உணர்கிறேன்.
வாழ்த்துக்கள்.
விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா. தங்கள் தாய் மண்ணில் மக்களின் துயர் தீரவும் இந்தப் பதக்கம் ஒரு பிரார்த்தனையாய் அனைவர் மனதிலும் நிற்கும்.
விருதுக்கு வாழ்த்துகள்.
விருதுக்கு வாழ்த்துகள் ஹேமா..
வாழ்த்துக்கள் அக்கா... :)
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா!!!
விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கவலை வேண்டாம் அக்கா நாம் தமிழர் தமிழர் என்றால் அழிவு என்று எழுதப்படுவிட்டது அழிவி இருந்து எழும்பும் நெருப்பு தான் தமிழனின் குணம்
காலம்வர எல்லாம் கை கூடும்
அருமையாக எழுதியிருந்தீர்கள்; அங்கீகாரம் கிடைத்தது பெருமை தான்.
பாராட்டுக்கள்.
ஹேமா.. வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஹேமா.
வாழ்த்துக்கள்...
மிக்க பெருமையாய் இருக்கு ஹேமா.
விருதுக்கு வாழ்த்துக்கள் ஹேமா.
உங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நெஞ்சை பிழிவதாக இருக்கிறதுபா...உங்கள் தேசத்தின் மீதான காதல் நெகிழ்ச்சியாக இருக்கிறது...அதே நேரம் அந்த காதல் தான் உங்களை அதிகமாக கலங்க வைக்கிறது என்று என்னும்போது வேதனையாக இருக்கிறது.
நிறைய எழுதுங்கள் ஹேமா...இந்த விருது உங்களை இன்னும் எழுதவைக்கும் தோழி.
மீண்டும் வாழ்த்துக்கள் ஹேமா.
விருதுக்கு நல் வாழ்த்துகள்
விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
வாழ்வு மாறும்.....!
Vazhthugal Hema :)
(No tamil fonts)
வாழ்த்துக்கள் ஹேமா.
//கவிதை என்கிற பெயரில் கிறுக்கிற//
கவுஜ
வாழ்த்துகள் ஹேமா!
Congrats Hema!
வாழ்த்துக்கள் ஹேமா
எனது வாழ்த்தும், பாராட்டும் ....
வாழ்த்துக்கள் ஹேமா....
தகுதியான நபருக்கு தகுதியான விருது அளிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஹேமா
வாழ்த்துக்கள், கவலைகளும், கண்ணீரும் மட்டும் தீர்வு அல்ல ஹேமா, போராட்டம் என்ற ஒன்றுதான் நம் வாழ்க்கையின் நியதி. நான் சொல்வது வாழ்க்கைப் போராட்டம், வர்க்கப் போராட்டம் அல்ல. ஒரு நாள் நல்ல தீர்வு வரும். அதுவரை பொறுத்திருப்பதுதான் நம் கடமை.
பாராட்ட வந்தால் ஆளை அழ வைத்து விடுவீங்க போலிருக்கே?
மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் ஹேமா.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா
விருதுக்கு வாழ்த்துகள்
உங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நெஞ்சை பிழிவதாக இருக்கிறது.மீண்டும் வாழ்த்துக்கள்
be lated wishs for tamilmanam award hema. congrats.
கவிதைக்கு பதில் சொல்ல வந்தேன்.அப்படியே விருதுக்கான வாழ்த்துக்களும் ஹேமா!
நம்மை உயிர்ப்பித்தல் அவசியம்.தொடருங்கள்.
மகிழ்வாய் உணர்கிறேன் தோழி... மனம் குளிர்ந்த வாழ்த்துகள்!!
hai HEMA.. Y NO NEW POST?
Post a Comment