Thursday, March 31, 2011

வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் திருமணம்.


திருமணம் என்பது இன்று அனைத்து மனித சமூகத்தினரின் வாழ்விலும் மகத்துவம் மிக்க புனிதமானதோர் சடங்காகத் திகழ்கிறது.ஆனால் திருமணச் சடங்கை நிறைவேறும் முறைதான் சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது. சமூகங்களில் நாகரீக வளர்ச்சி தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் " திருமணம் " என்பது தொடர்பான எண்ணக்கருவோ சம்பிரதாயங்களோ காணப்படவில்லை.

வேடுவனாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியின் பிற்பாடு ஓரிடத்தில் நிலையாக தன் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட காலகட்டத்தில்தான் திருமணம் பற்றிய சிந்தனை மனித சமுதாயத்தில் தோற்றமெடுத்தது. அந்த வகையில் தொன்மையான காலத் தமிழர்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற சடங்கே இருந்திருக்கவில்லை."களவு" வாழ்க்கையே நடைமுறையில் இருந்தது.

களவு வாழ்க்கை என்பது அன்பு அறிவு அழகு முதலியவற்றில் ஒத்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு உலகத்தார் அறியாத வண்ணம் மனமொப்பி வாழும் வாழ்க்கையாகும். காலப்போக்கில் இக்களவு வாழ்க்கையில் ஆண் மகன் தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு மற்றாள் ஒருத்தியுடன் வாழ்க்கை நடத்தும் நிலை தோன்றியது.இவ்வாறு களவு வாழ்க்கையில் பொய்யும் பித்தலாட்டமும் தோன்றிவிட்டமையால் அறிவில் சிறந்த பெரியவர்கள் ஒன்றுகூடி திருமணம் என்கிற சடங்கை உருவாக்கினார்கள்.

 பெண்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு உடைமைகள் சொத்துக்கள் சம்பந்தமான பேணுகையை உறுதிப்படுத்தல் குடும்பக் கட்டுக்கோப்பை சீர்குலையாமல் கட்டிக்காத்தல் போன்ற தேவைப்பாடுகள் திருமணம் பற்றிய எண்ணக்கரு தோற்றமிட்டன எனலாம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தல் ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்தல் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான திருமணம் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கிடையேயான திருமணம் சட்டப்படியான திருமணம் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளல் எனப் பல்வேறு வகையான திருமணங்கள் வெவ்வேறு சமூகங்களில் தோற்றமெடுத்தன.இன்றைக்கு சுமார் 2 ,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் தான் இயற்றிய தொல்காப்பியத்தில் எட்டு வகையான திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

* பிரம்மவிவாகம் :> நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம் காத்த ஆண்மகனுக்கு பன்னிரண்டு வயதுடைய கன்னியை ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரித்துக்கொடுப்பது.

 * பிரசாபத்திய விவாகம் :> மைத்துனன் உறவுடையவனுக்கு பெண்ணின் விருப்பத்திற்கமைய புனிதச் சடங்குகள் மூலம் கொடுப்பது.

 * ஆரிட விவாகம் :> தகுதியுடைய ஒருவனுக்கு பொன்னால் பசுவும் காளையும் செய்து அவற்றின் நடுவே பெண்ணையும் நிறுத்தி அணிகலன்கள் அணிவித்து நீங்களும் இவைபோல வளமுடன் ஒற்றுமையாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி நீர் வார்த்துக் கொடுப்பது.

 * தெய்வ விவாகம் :> வேள்வி நிகழ்த்தும் குருவுக்கு வேள்வித் தீயின் முன்வைத்து கன்னிப் பெண்ணைக் குருதட்சணையாகக் கொடுத்தல்.

 * கந்தர்வ விவாகம் :> ஆண்மகனும் கன்னிப்பெண்ணும் யாரும் அறியா வண்ணம் சந்தித்து கணவன் மனைவியாகக் உறவு கொண்டாடுதல்.

 * அசுரா விவாகம் :> மணமகனிடம் ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.

 * இராட்சஸா விவாகம் :> தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக பலவந்தமாகக் கடத்திச் சென்று அடைவது.

 * பைசாக விவாகம் :> தன்னை விடவும் வயதில் மூத்தவளிடமும் உறங்குகிற வளிடமும் கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவளிடமும் கூடி மகிழ்வது.

 தமிழர் வரலாற்றில் திருமணச்சடங்கு உருவாக்கப்பட்ட காலத்தில் அது மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதாய் இருந்தது.பின்னர் அனைவருக்கும் இச்சடங்கு பொருத்தமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கும் உரிய சடங்காக மாறியது. பண்டைய காலம்தொட்டு இன்று வரையிலான காலப் பகுதியை எடுத்து நோக்கினால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரால் கலந்து பேசி ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களே செல்வாக்குச் செலுத்தி வகின்றமையை அவதானிக்க முடியும்.பெரும்பாலான திருமணங்கள் காதல் அடிப்படையிலன்றி பொருளாதாரம் குடும்ப கெளரவம் போன்ற இதர புறக்காரணிகள் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
மேலைத்தேய பாரம்பரிய திருமணங்களிலே திருமண மோதிரம் அணிவது கட்டாயமானதாக உள்ளது.மோதிரத்தின் வட்ட அமைப்பானது திருமணத்தால் ஏற்பட்ட பந்தம் என்றென்றும் முடிவுறாமல் நீடித்து நிலைக்கவேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும் மோதிர விரலிலுள்ள நரம்பு ஒன்று இதயத்துடன் நேரடியாக தொடர்புறுவதால் திருமணமானது இரு இதயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் நம்பிக்கை நிலவுகிறது.


 1500 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் வைபவரீதியாகவோ சாட்சியாளர்களை சாட்சி வைத்தோ நடாத்தப்படவில்லை.1563 ம் ஆண்டுப் பகுதியில் குறைந்தது இரண்டு சாட்சிகளுடன் வைபவரீதியாக திருமணம் நடத்தப்பட வேண்டுமென்பது நடைமுறைக்கு வந்தது. "தம்மி ஸ்பிறோட் என்ற மதபோதகர் திருமணமானது ஆண்களையும் பெண்களையும் பாவங்களிலிருந்து தடுக்கிறது எனக் கூறியுள்ளார்.


 லௌரா ரெனோல்ட்ஸ் என்பவர் 8 - 14 நூற்றாண்டு காலப்பகுதியிலான திருமணம் பற்றி பின்வருமாறு சொல்கிறார். திருமணம் என்பது ஆண் பெண் ஆகிய இருவரையும் இணைத்து வைக்கின்ற புனிதச் சடங்காகும்.ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலாலோ அன்றி வேறேதும் காரணங்காலாலோ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தில் இணையும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இருவரும் தனித்தனியாக பாரியளவிலான திருமணப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாகிறார்கள்.


பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலைமையிலும் இடையிடையே மகிழ்ச்சிகரமான பொழுதுகள் அத்தம்பதிகளுக்கு கிடைக்கவே செய்கின்றன.அவ்வினிய பொழுதுகள் திருமண வாழ்வின் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்ப உதவுவனவாக உள்ளன. திருமணம் என்பது காலங்காலமாக பல்வேறு பரிணாம நிலைகளைத் தொட்டு வளர்ச்சி கண்டபோதும் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள் பாரம்பரியமனவை.ஒவ்வொரு சமூகத்தினது திருமண முறையும் வேறுபட்ட நிலைமையிலும் அத்திருமணச் சடங்குகளில் பொதிந்திருக்கும் உட்கருத்துக்கள் அர்த்தம் நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.




எந்தச் சஞ்சிகையில் வந்தது.எப்போ வந்தது என்றும் தெரியவில்லை.பார்த்தி என்று எழுதியவர் பெயர் மட்டும் இருக்கிறது.இந்தப் பக்கம் மாத்திரம் என்னிடம் எப்போதோ பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது.பகிர்ந்துகொள்கிறேன்.

36 comments:

ஜோதிஜி said...

தலைப்பை பார்த்தவுடன் சந்தோஷ செய்தி போலிருக்கு என்று அவசரமாய் உள்ளே வந்தேன்?

நசரேயன் said...

கல்யாணம் ஆனவங்களுக்கா ஆகாதவங்களுக்கா ?

நசரேயன் said...

//தலைப்பை பார்த்தவுடன் சந்தோஷ செய்தி போலிருக்கு என்று அவசரமாய் உள்ளே வந்தேன்?//

எனக்கு நம்பிக்கை போய் பல வருசமாச்சி

Anonymous said...

பழைய சரக்கை புதிய வெயின் பாட்டிலிலா??? ஹிஹி ! இருந்தாலும் சரக்கு.. ச்சீ பதிவு சூப்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

பெண்ணே நீ என்ற மகளிர் மாத இதழில் வந்த கட்டுரை.. ஹேமாவுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு போல்...ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி.. ஹேமா.. எதுக்கு சுத்தி வளைச்சுட்டு.. மாப்ளை என்ன சொன்னார்?

Unknown said...

//"வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் திருமணம்."//

எனக்கு நம்பிக்கை போய் பல வருசமாச்சி...நசரேயன் said...

Unknown said...

அடடே சரி சரி!

ஹேமா said...

எல்லாரும் தேர்தல் தேர்தல்ன்னு இலவச இணைப்பெல்லாம் குடுத்திட்டு இருக்கீங்கன்னு பதிவு போட்டா கிண்டலா பண்றீங்க !

T.V.R ஐயாவும் குமாரும் பொறுப்பா பதில் சொல்லியிருக்காங்க.

குமார் அவர்களுக்கு நன்றியும் சந்தோஷமும்.அந்தச் சஞ்சிகை
இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கிறதா.எந்த வருடத்தில்.மிகப் பழையதாயிருக்குமோ !

போளூர் தயாநிதி said...

திருமண வாழ்க்கை பொறுத்தவரையில் தமிழர்களின் வாழ்க்கை முறை வேறுபட்டது முதலில் தாய்வழி சமூகமாக இருந்தது இந்த காலங்களில் வரன் முறையில்லாத புணர்ச்சி இருந்து வந்தது.அதாவது தயை மகன் புணர்வதும், தாய்தான். எல்லாவற்றையும் தான் ஆளுமைக்குள் வைத்து இருந்தார்கள். இப்படி தொடங்கிய வாழ்க்கைமுறை. பல அடுக்குகளை கடந்து தொல்காப்பியர் காட்டிய வாழ்க்கை முறை இன்று கடைபிடிக்க படுகிறது இந்த முறையே உலகெங்கும் உள்ள திருமண முறைகளுக்கு முன்னோடியானது மூத்தத்து.நாம் அனைவரும் பின்பற்ற படவேண்டியதும் ஆகிறது

சக்தி கல்வி மையம் said...

உருன்னடியான பதிவு..

http://rajavani.blogspot.com/ said...

அப்புறம் ஹேமா...ம்ம்ம சொல்லுங்க..

மனம் திறந்து... (மதி) said...

1) Before marriage man is said to be incomplete and after marriage he is "Finished"!

2) Married man is like a split AC. He can make a lot of noise outside, but inside the house he is silent. :)))

ராஜ நடராஜன் said...

கந்தர்வமே இயல்பானது.

ஹேமா!பின்னூட்டத்துல எல்லோரும் உங்களை கிண்டல் செய்றாங்களே!வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

பகிர்வுக்கு நன்றி . சமுதாய வளர்ச்சிக்கும் மனித ஒழுக்கத்துக்கும், உணர்வுகளின் வடிகாலுக்கும் திருமணம் அவசியம்.

தமிழ் உதயம் said...

எனக்கு நம்பிக்கை போய் பல வருசமாச்சி..////

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பலாம்.

jothi said...

ப‌கிர்விற்கு ந‌ன்றி. ப‌ண்டைய‌ த‌மிழர்க‌ளின் திரும‌ண முறைக‌ள் வித்தியாச‌மாக‌ இருக்கிற‌து.

என்னுடைய‌ க‌வ‌லை த‌லைப்புதான். திரும‌ண‌ம் ந‌ட‌ந்தால்தான் வாழ்க்கைக்கு அர்த்த‌மா? திரும‌ண‌ம் செய்யாம‌லேயே அப்துல்க‌லாமும், வாஜ்பாயும் த‌ங்க‌ள் பெய‌ரை வ‌ர‌லாற்றில் நிலை நிறுத்தி இருக்கார்க‌ளே. அவ‌ர்க‌ள் சாதிக்காத‌தையா நாங்க‌ள் சாதித்து திரும‌ண‌ம் செய்து வாழ்க்கையை அர்த்த‌மாக்கிவிட்டோம்??

ஸ்ரீராம். said...

எங்கேருந்து எடுத்தீங்கன்னு பார்த்தேன். பழைய சஞ்சிகையா...

நிரூபன் said...

ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தல் ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்தல் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான திருமணம் வெவ்வேறு//

வணக்கம் சகோதரம்,..

மேலே ஒரே வரிகள் இரு தடவை வந்துள்ளன.

நிரூபன் said...

பிரம்மவிவாகம் :> நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம் காத்த ஆண்மகனுக்கு பன்னிரண்டு வயதுடைய கன்னியை ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரித்துக்கொடுப்பது.//

இதனை ஆணாதிக்க வாதம் என்று கூறுவார்கள், எமது சமூகத்தில் 1900 களின் பிற்பகுதி வரை இத்தகைய விவாக முறை இருந்து வந்திருக்கிறது. இன்றும் இந்தியாவின் ஒரு சில பிரதேசங்களில் தாய் மாமனை மருமகளுக்கு கட்டி வைக்கும் முறை இருக்கிறது, (35வயது ஆணுக்கு 18வயது பெண்ணை திருமண் செய்து வைத்தல்)
ஆகவே ஆண்கள் தமது சுய நலன்களின் அடிப்படையில் இத்தகைய திருமண நடை முறைகளை அமைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லைத் தானே?

நிரூபன் said...

தெய்வ விவாகம் :> வேள்வி நிகழ்த்தும் குருவுக்கு வேள்வித் தீயின் முன்வைத்து கன்னிப் பெண்ணைக் குருதட்சணையாகக் கொடுத்தல்.//

இது சமூகத்தில் உயர்ந்தவர்கள் என தமக்குத் தானே வேலி போட்டுக் கொண்ட பிராமணியர்களால் உருவாக்கப்பட்ட சட்டம். அல்லது தம் நலன் சார்ந்த தன்னார்வ திருமணம்.

நிரூபன் said...

கட்டுரையாளர் காலதி காலமாக மரபில் இருந்து வருகின்ற திருமண நடை முறைகளையும், முக்கியத்துவத்தினையும் அலசியிருக்கிறார். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரம்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு ஹேமா.

லெமூரியன்... said...

//தலைப்பை பார்த்தவுடன் சந்தோஷ செய்தி போலிருக்கு என்று அவசரமாய் உள்ளே வந்தேன்?//

:) :) :) ஹேமா அப்போ இன்னும் சின்ன பொண்ணுதானா..!

மாலதி said...

அக்காஅப்படியானால் நீங்களும் திருமணத்திற்கு தயராயிட்டிங்களா ? மேல எல்லோருமே உங்களை காதல் வலையில் விழுந்து விட்ட மாதிரி எழுதி இருக்கிறாங்க ? இங்க (தமிழ் )நாட்டிற்கு வந்திடுகோ . நல்ல செய்தி கிடைக்குமா ? எனக்குமட்டும் சொல்லுங்கோ இடுகைக்கு பாராட்டுகள் .

நிலாமகள் said...

எட்டுக்குள்ள அடங்கியது இன்னைக்கு எத்தனை எட்டாகவோ பெருகிடுச்சு...! பக்குவப் பட்டதை பயனாக்கியது நன்று.

கீதமஞ்சரி said...

இருவர் கூடுவது மட்டுமே திருமணமில்லை. இறுதிவரை ஒருவருக்கொருவர் நட்புடனும் நம்பிக்கையுடனும் இணைபிரியாது வாழ்வதே திருமணத்தின் அர்த்தம்.
பகிர்வுக்கு நன்றி ஹேமா.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கீதா மதிவாணன் said...
இருவர் கூடுவது மட்டுமே திருமணமில்லை. இறுதிவரை ஒருவருக்கொருவர் நட்புடனும் நம்பிக்கையுடனும் இணைபிரியாது வாழ்வதே திருமணத்தின் அர்த்தம்.

ரிப்பிட்டு

பகிர்வுக்கு நன்றி அக்கா

Bibiliobibuli said...

ஹேமா, ம்ம்ம்ம்... திருமணம் பற்றி இவ்வளவு சீரியஸா ஒரு பகிர்வு. அப்புறமா, கலைஞரின் தொல்காப்பிய உரை (தொல்காப்பியப் பூங்கா) எனக்கு பிடித்த இலக்கிய நூல்களில் ஒன்று. அது இலக்கியம் தானே. ஏன் கேட்கிறேன் என்றால் நான் இலக்கிய ஏரியாவில் ரொம்பவே வீக். :)))

கலைஞரை அரசியல்வாதியாய் வெறுக்குமளவிற்கு ஓர் இலக்கியவாதியாய் என்னால் வெறுக்க முடிவதில்லை.

ஜெயா said...

நல்ல பகிர்வு ஹேமா... நன்றி

ஹேமா said...

ஜோதிஜி...எப்படா நாங்க படுற கஸ்டத்தை இவ மட்டும் அனுபவிக்காம இருக்காளேன்னு மாட்டிவிடலாம்ன்னு பாத்திட்டு இருக்கீங்கபோல !

நசர்...இந்தப்பதிவு உங்களுக்குப் பொருந்தாது.உங்க நம்பிக்கைக்குக் காலம் இருக்கு !

இக்பால்...பழைய வைன் தான் மதிப்பு அதிகம்.விலையும் அதிகம் !

T.V.R.ஐயா...நன்றி நன்றி !

குமார்...நீங்களும் கிண்டல் பண்ணியிருக்கீங்க.இப்பத்தானே கவனிச்சேன் !

சிபி...சி..............பி !

செந்தில்...உங்களுக்கு நம்பிக்கை போனது திருமணம் பற்றினதிலதானே !

விக்கி...ம்...சரி சரி !

தயா...இப்போது எவ்வளவோ மாறிவிட்டது நம் திருமண முறைகள்.நாகரீக பொருளாதார வளர்ச்சிதானே காரணம் !

கருன்...உருப்படியான பதிவுன்னு சொல்ல வாறீங்க.சரி !

தவறு...அப்புறம்...இருங்க மறந்துபோச்சு.சொல்றேன் !

மனம்திறந்து மதி...வாழ்க்கைன்னா எல்லாமேதான் இருக்கும்.அதுவும் ஒரு சந்தோஷம்தான்.பயமும்தான் !

நடா...கிண்டல் பண்றாங்களாவா...
பாத்திட்டே என்ன கேள்வி.
எதுக்கு வாழ்த்து !
கந்தர்வத் திருமணத்தில் பெண்ணுக்குப் பாதுகாப்புக் குறைவாயிருக்கே !

ஹேமா said...

நிலாமதி...அக்கா எங்கள் வாழ்க்கை முறைகளை வெளிநாடுக்காரர்கள் மதித்து விரும்பும்போது
நாம் அதை மாற்ற முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் !

தமிழ்...நீங்கதான் என் பக்கம்.நம்பறவங்க நம்பலாம் !

ஜோதி...அவ்ளோ திருமணம் வெறுத்துப்போச்சா.அதுக்காக கல்யாணமே ஒருத்தரும் பண்ணாதீங்கன்னு சொல்றீங்களா !

ஸ்ரீராம்...ம்ம்...அருமையான செய்திகள்தானே !

நிரூபன்...பதிவுகளை அலசி ஆராய்கிறீர்கள்.சந்தோஷமாயிருக்கு !

ராமலஷ்மி...அக்கா நன்றி வருகைக்கு !

லெமூரியன்.......!

மதி...மதி...மதி...தமிழ்நாடு வரப்போ கண்டிப்பா அறிவிப்பேன் எல்லாருக்கும் !

நிலா...எட்டு எட்டாப் பிரிச்ச வாழ்க்கை இங்கயும் !

கீதா...அருமையாகச் சொன்னீர்கள்.நான் நினைப்பதும் அப்படியே.மனங்கள் முதலில் இணையவேண்டும்.திருமணம் அப்போதான் முழுமையடையும் !

பிரஷா...உப்புமடச் சந்திப் பக்கம் வாறது குறைவு நீங்கள்.வந்தது சந்தோஷம் !

ரதி...இலக்கணம் இலக்கியம் நல்லாப் படிச்சவங்க யாராச்சும் சொல்லுவாங்கப்பா.ஆளை விடுங்கோ.கலைஞர் தமிழால்தானே முதலில் எங்களைத் தன்வசப்படுத்தினார்.இப்போதான் மாறியிருக்கிறார் அரசியலால் மட்டும் !

ஜெயா...மறக்காமல் இடையிடை உங்கள் சோர்வான முகம் தெரிகிறது.சந்தோஷாமயிருங்கோ.ஈழத்தவர் எங்களுக்கே உண்டான சில தலைவிதிகளோடு சந்தோஷமாயிருக்க முயற்சிப்போம்.ஏன் வலைப்பதிவில் ஒன்றும் எழுதவில்லை.
தொடருங்களேன் !

குறையொன்றுமில்லை. said...

நாங்கல்லாம் அந்தக்கலத்து மனுஷி.
அதனால திருமண பந்தம் அவசியமான
ஒன்றுன்னுதான் சொல்வோம்.இது ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் இருகுடும்பங்கள் சம்மந்தப்பட்ட விஷயமாக எடுத்துக்கலாம்.

அப்பாதுரை said...

இத்தனை விவரமா!
இன்னும் ஐம்பது ஆண்டுகளில் திருமணம் என்ற சடங்கு தொடருமா? என்ன நினைக்கிறீர்கள்?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல பகிர்வு ஹேமா.Interesting.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP