Tuesday, August 09, 2011

மாய உலகம் தேடவிட்ட மூன்றுக்கள்.

சின்னச் சின்னக் கேள்விகளானாலும் நம் மனதை வெளிப்படுத்தும் கேள்விகள்.வலைத்தளத்திற்குப் புதியவர் மாய உலகம்.அவரின் அன்பு அழைப்பை ஏற்று இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

எனக்கொரு குணம்.எனக்கு அப்பாவென்றால் உயிருக்குள் உயிர்போல.அதனால என்னோடும் பழகும் - பார்க்கும் எவரிடமும் அப்பாவைத் தேடுவேன்.ஒரு ஆள் இன்னொருத்தராக இருக்காது என்று அறிந்தாலும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.

அதுபோல எம்மிடமும் சிலர் தம் உறவுகளைத் தேடலாம்.அவர்கள் நினைவில் அல்லது கனவில் அடிக்கடி வரும் ஒரு முகமாகவோ அல்லது குணம் ஒத்துப்போகிறமாதிரியோ நாம் இருந்தால் அதுகூட ஒரு சந்தோஷம்தான்.ஒருவரது தேடலின் பங்கில் நாமும் இருப்பது மனதிற்கு நிறைவாகவே இருக்கும் !

இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை.தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்.

தேடுதல் கூடக்கூட வேகம்,சுறுசுறுப்பு தானாகவே கூடும்.தேடுவதை அடையும்வரை உடலும் உயிரும் சிந்தாது சிதறாது.இயங்கிக் கொண்டேயிருக்கும்.வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்.

1) எனக்குப் பிடித்த முதல் மூன்று...!
எனக்குப் பிடித்தது எதுவும் நீண்ட காலங்கள் என்னோடு நிலைப்பதில்லை.அதனால் பிடிக்கிறது என்று ஆசையோடு எனக்கே எனக்கென்று உறுதிப்படுத்திக்கொள்வதில்லை.

# அப்பா !
# தொலைத்துவிட்ட ஆனால் என்னோடு கலந்துவிட்ட ஒரு நட்பான காதல் !
# தனிமையில் மெல்லிய இசை !

2 ) விரும்பாத மூன்று !
# பிச்சையெடுப்பவர்களையும் பசியோடு இருப்பவர்களையும் காண்பது !
# நீண்ட நேரக் குழந்தையின் அழுகை !
# தமிழர்கள் தமிழ் ஊடகங்களில்(சினிமா,அரசியல் போன்றவை)
ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பது !

3) என் பார்வையில் மூன்று...!
# ஒழுக்கமான நேர்மையான வாழ்க்கை !
# உண்மையான பேச்சு !
# அளவான உணவு !

4) பிடித்த உணர்வுகள் மூன்று...!
# அன்பு !
# கருணை !
# இரக்கம் !

5) பிடிக்காத மூன்று உணர்வுகள்...!
# பயம் !
# பொய் !
# இரட்டைவேடம் !

6) முணுமுணுக்கும் குளியலறைப் பாடல் மூன்று...!
# வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...
# மாலையில் யாரோ மனதோடு பேச....
# அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

7) பிடித்த தமிழ்ப்படம் மூன்று...!
# சிப்பிக்குள் முத்து!
# காதல் கதை!
# ஊமை விழிகள் !

8) அன்புத் தேவைகள் மூன்று...!
# அப்பாவின் குரல் !
# நிலாக்குட்டியின் பிரெஞ்சுப் பாட்டு !
# இன்னுமொன்று சொல்லமுடியாதது !

9) வலிமையை அழிப்பன மூன்று...!
# அன்பு !
# கோபம் !
# தாழ்வு மனம் !

10) குட்டித்தத்துவம் மூன்று...!
# தேவைகள் இல்லாதபோது துயரங்களும் இருப்பதில்லை !
# அச்சம் இதயத்தின் சிறை !
# அன்பாய் இருந்தாற்கூட அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!

11) பயமுறுத்தும் பயம் மூன்று...!
# அடுத்தவர் மனம் நோகாமல் பேசுகிறேனா என்று பயம் !
# இழந்துவிடுவேனோ என்று ஏற்றுக்கொள்ளப் பயம் !
# மறதிநிலை வந்துவிடுமோ என்று பயம்

12) என்றும் நிலைக்க விரும்பும் ஏக்கம் மூன்று...!
# என் சுயநினைவு !
# என் உடற்சுகம் !
# என் குணம் !

13) கற்றுக்கொள்ள விரும்பும் விஷயம் மூன்று...!
# வேற்றுமொழி கலக்காத தமிழ்ப்பேச்சு !
# கொஞ்சம் சமூக சேவை !
# நினப்பதை எல்லாம் எழுத்தில் பதிப்பது !

14) வெற்றிபெற வேண்டிய மூன்று...!
# இறப்பாவது என் மண்ணில் கிடைத்தால்...அதுவும் மூப்பு வரமுன் !
# இழந்துவிட்ட அன்பு மீண்டும் கிடைத்தால்...அதுவும் அதே அன்போடு !
# மூன்று வேளையும் ஒழுங்காகச் சாப்பிட்டு...நேரத்தோடு என்னைமறந்த தூக்கம் !

15) சோர்வு நீக்க வழி மூன்று...!
# இசைகேட்டால்....
# உடற்பயிற்சி செய்தால்...(நான் செய்வதில்லை)
# நேரத்தோடு நித்திரை விட்டெழுந்தால்...

16) எப்போதும் தயாரா இருக்கவேண்டிய மூன்று...!
# துணிந்த மனமும் உடல்நிலையும் !
# தேவைக்கேற்ற பணம் !
# கூப்பிட்டால் ஓடி வரும் ஒரு உண்மையான நல்ல உதவி !

17) வாழ்வின் முன்னேற்றத்திற்கான மூன்று...!
# ஒற்றுமை !
# சோர்வில்லா முயற்சி !
# முடியாது என்கிற சொல்லை மறத்தல் !

18) வாழ்வின் அவசியங்கள் மூன்று...!
# பெற்றவர்கள் - பெரியவர்களின் ஆசீர்வாதம் !
# நிதானம் !
# அறிவு !

19) மனதில் பதிந்திருக்கும் தத்துவங்கள் மூன்று...!
# இதுவும் கடந்து போகும் !
# உரிமைகள் நாமாக எடுத்துக்கொள்வதே தவிர கேட்டு எவரும் தரப்போவதில்லை !
# குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் தத்துவத்தின் சாவி.

20) புரிந்தும் குழம்பும் குழப்பங்கள் மூன்று...!
# நீ...!
# நான்...!
# நாம்...!

21) வாழ்வில் புரியாதது...!
# கடவுள் !
# மனிதன் !
# மரணம் !

22) எரிச்சல்படுத்தும் நபர்கள் சம்பவங்கள் மூன்று...!
# பெருமிதமாகப் பொய் சொல்பவர்கள் !
# குழந்தைகளுக்கு அர்த்தமில்லாத பெயர்கள் வைக்கும் பெற்றோர்கள் !
# தாய் நாட்டைப் பழித்துப் பேசுபவர்கள் !

23) பிடித்த பாடகர்கள் மூவர்...!
# பி.பி.ஸ்ரீனிவாஸ் - சந்திரபாபு
# S.P.பாலசுப்ரமணியம் - K.J.ஜேசுதாஸ்
# சுசீலாம்மா - ஜானகியம்மா

24) இனிமை மூன்று...!
# குழந்தையின் சிரிப்பும் சிணுங்கிச் செல்ல அழுகையும் !
# எதிர்பாராத நேரத்தில் காதலனின் இனிமையான முத்தம் !
# அப்பா கூப்பிடும் குட்டியா !

25) சாதித்தவர்கள் சந்தித்த இடைஞ்சல்கள் மூன்று...!
# வறுமை !
# கிண்டல் பேச்சுக்கள் !
# குடும்பச் சிக்கல்கள் அதாவது நிச்சயம் பிரிவு !

26) பிடித்த பழமொழிகள் மூன்று...!
# எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம்.இன்னொன்று மெளனம் !

# எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது !

# வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான் !

ஓடிப்போகாதேங்கோ.ஒரு கதை சொல்லி முடிக்கிறன்.ஒரு வெள்ளைக்காரர் ஆப்பிரிக்காவில ஆதிவாசிகளின்ர கிராமங்களுக்கு நடுவால நடந்துகொண்டிருந்தாராம்.அவருக்கு ஏதாவது புதுசு புதுசா செய்யிறது எண்டா நிறையப் பிடிக்குமாம்.அவருக்கு நல்லா நீச்சல் தெரியுமாம்.போற வழியில ஒரு பெரிய ஏரியைக் கண்டாராம். அந்த ஏரியைக் கடந்தால் அடுத்த பக்கக் கிராமத்துக்குப் போய்டலாமாம்.அப்ப அவருக்கு நீந்தியே மற்றப்பக்கம் போகவேணுமெண்டு ஆசை வந்திட்டுதாம்.உடனேயே உடுப்புகளையெல்லாம் கழட்டி வச்சிட்டு நீந்தவும் தொடங்கிட்டாராம்.

அப்ப....பாதித்தூரம் போய்க்கொண்டிருக்கேக்க ஆதிவாசிகள் கை தட்டிச் சத்தம்போட்டு ஏதோ எதோ சொல்லிக் கத்திக்கொண்டு இருந்திச்சினமாம்.அவருக்கு இன்னும் குஷி கூடிப்போச்சு இப்ப.அவர் குத்துக்கரணம்(குட்டிக்கரணம்) போட்டுத் தலைகீழா எல்லாம் நீந்திக் காட்டினாராம்.அப்பிடியே கொஞ்ச நேரத்தில கரைக்கு வந்தாராம்.ஆதிவாசிகள் முதுகில தட்டி உற்சாக பாணம் எல்லாம் கொடுத்துப் பாராட்டிச்சினமாம்."நல்லா நீந்தி விளையாட்டுக் காட்டுறியள்.உங்களுக்குப் பயமேயில்லை....."எண்டு திரும்பத் திரும்பச் சொல்லிச்சினமாம்.

"அட இதென்ன....நான் இன்னும் நிறைய வித்தைகள் தண்ணிக்குள்ள காட்டுவன்.கை கால் அடிக்காம மிதந்துகொண்டுகூடப் போவன்"...எண்டு சொன்னாராம்.

"அட...வெள்ளைக்காரரே எங்களுக்கும் இதெல்லாம் அத்துப்படி.ஆனால் இந்த ஏரிக்குள்ளமட்டும் நீந்தமாட்டம்.நீந்தினதுக்காக உங்களைப் பாராட்டேல்ல.இந்த ஏரிக்குள்ள நிறைய முதலைகள் இருக்கினம்.பயமில்லாம நீந்தி வந்தீங்களே.அதுக்காகத்தான் உங்களைப் பாராட்டினம்"....எண்டு சொல்லிச்சினமாம்.வெள்ளைக்காரருக்கு மூச்சு ஒருக்கா நிண்டு வந்திச்சாம்.பாவம்.எண்டாலும் தலை தப்பிச்ச சந்தோஷமெல்லோ !

64 comments:

Priya said...

தங்களின் தேடல் தொடர்ந்திட என் வாழ்த்துக்கள் தோழி!
இந்த தொடர்பதிவின் மூலம் பகிர்ந்துக்கொண்டவைகள் அருமையாகவும் யதார்த்தமாகவும் உள்ளது...!

இராஜராஜேஸ்வரி said...

இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை.தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்./

அருமையான ப்கிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT...BEST WISHES FOR LONG LIFE AND MORE CREATIONS!

நட்புடன் ஜமால் said...

11#2 எனக்கும் அதிகமுண்டு

உங்களின் சில பதில்களை பற்றி பேசத்தோன்றினாலும், முடியாது என்பது தெரிந்ததே

சில பதில்கள் யாரோ ஒருவருக்கு நீங்கள் சொல்வது போலவும் எனக்கு தோன்றுகிறது

இதுவும் கடந்து போகும்.

Kousalya Raj said...

ஒவ்வொரு மூன்றும் தனித்துவமாக மிக உணர்வுபூர்வமாக இருக்கு ஹேமா.

ரசிக்கும் படியான அருமையான பகிர்வு ! வாழ்த்துக்கள் தோழி.

Anonymous said...

வித்தியாசமான சிந்தனையாளர் தாங்கள். எல்லாத்திலும் ஒரு தனித்துவம் தெரிகிறது.

பயம் தான் மனிதனின் மிகப்பெரிய பலவீனம் என்பதை உணர்த்தும் அந்த குட்டி கதை. கடக்க முன்னமே முதலை இருப்பது அந்த வெள்ளையருக்கு தெரிந்திருந்தால் நீருக்குள் கால் கூட எடுத்து வைத்திருக்க மாட்டார்..)

சௌந்தர் said...

11) பயமுறுத்தும் பயம் மூன்று...!
# அடுத்தவர் மனம் நோகாமல் பேசுகிறேனா என்று பயம் !
# இழந்துவிடுவேனோ என்று ஏற்றுக்கொள்ளப் பயம் !
# மறதிநிலை வந்துவிடுமோ என்று பயம் ///

நல்லதொரு பயமா இருக்கே..!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
8) அன்புத் தேவைகள் மூன்று...!

# இன்னுமொன்று சொல்லமுடியாதது ! /////


அதை நாங்களே புரிஞ்சிப்போம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
10) குட்டித்தத்துவம் மூன்று...!
# தேவைகள் இல்லாதபோது துயரங்களும் இருப்பதில்லை !
/////////

உண்மைதான்..
ஆனால் தேவைகள் இல்லாத மனிதனல்ல உயிரினம் கூட இல்லை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரசிக்கும் பகிர்வு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
21) வாழ்வில் புரியாதது...!
# கடவுள் !
# மனிதன் !
# மரணம் !
////////


இது புரிந்து விட்டால் அவ்வளவுதானே....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அற்புதான இருந்தது தங்களை புரிந்துக் கொள்ள தங்களை உணர்ந்துக் கொள்ள இவைகளே போதும் என்று நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள்...

சௌந்தர் said...

ம்ம இந்த கதையும் நல்லா இருக்கு... உங்கள் பகிர்வும் நல்லா இருக்கு...

சௌந்தர் said...

குத்துக்கரணம்//

தட்டச்சி இருக்கு நினைக்குறேன் மாத்திடுங்க... மன்னிக்கணும் :)

எல் கே said...

முத்துகள் மூன்று

Bibiliobibuli said...

ஹேமா, உணர்வுகள், உறவுகள், தேவைகள், விருப்பங்கள், தேடல்கள் என்று இவைகள் தொடர்பில் பற்றிப் படர்ந்து, சுற்றிச்சுழன்று மனிதர்களை வாழவும், தாழவும் வைக்கும் மூன்றுகள் நல்லாத்தான் இருக்கு.

ம்ம்ம்ம்.... கலக்கிட்டீங்க!!

மாய உலகத்திற்கு, இது எனக்கு மட்டுமா தெரியவில்லை. உங்கள் தளத்தில் ஏகப்பட்ட இணைப்புகள், பட்டைகள் தளம் திறக்கவே சிரமப்படுகிறது.

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு மூன்றும் மிக சிறப்பு. நெகிழ்ச்சியடைய செய்தது சில மூன்றுகள்.

கூடல் பாலா said...

\\\2 ) விரும்பாத மூன்று !
# பிச்சையெடுப்பவர்களையும் பசியோடு இருப்பவர்களையும் காண்பது!
# நீண்ட நேரக் குழந்தையின் அழுகை !
# தமிழர்கள் ஊடகங்களில்(சினிமா,அரசியல் போன்றவை)ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பது! \\\ ஏனோ தெரியல தொலைக்காட்சில பேட்டி குடுக்குறவுங்க பேசுறத கண்டாலே கொலை வெறியாகுது ...

vidivelli said...

ஹேமாஅக்கா!!! முடிச்சுக்களை அவிழ்த்து விட்டு உங்க குணத்தைக் காட்டிவிட்டீங்க..
முதல் உங்களிடமிருந்து புரிந்து கொண்டது..
நீங்கள் ஒரு அப்பாச்செல்லம்,,,,!!

உங்களுக்கு பிடித்ததும்,பிடிக்காததும் சில எனக்கும் இருக்கு...
முடிச்சுக்கள் எல்லாம் அழகாய் சொன்னீங்க

ஈடேற நினைப்பவை அடைந்திட அன்புடன் வாழ்த்துகின்றேன் ..
குட்டிக்கதை அருமை..

ராமலக்ஷ்மி said...

தேடித் தந்த பதில்கள் யாவும் நன்று. பகிர்ந்து கொண்ட கதையும் அருமை:)!

ஜோதிஜி said...

இந்த அளவுக்கா ஹேமாவுக்கு எழுத்து திறமை உள்ளது என்று வியந்து போய் கவிதாயினியை பார்த்து சிரிக்கின்றேன்.,

ரசித்த பதிவு ஹேமா. நன்றி.

Unknown said...

முத்தான முத்துக்களை
மூன்றாக தொடுத்தீகள்!
அருமை
புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

சிறந்த நடிகரின் தீவிர ரசிகன் அவரது படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என வெகு நாட்கள் கண்விழித்து காத்துக்கொண்டிருப்பதைப்போல உங்களது மூன்றுக்கள் எப்பொழுது வரும் என தேடிக்கொண்டிருந்தேன்... நாடியது கிடைத்தது...தேடவிட்ட மூன்றுகள்..தேன்..ஆனந்தம் அடைந்தேன்

மாய உலகம் said...

பிடித்தவை நீண்ட காலம் நிலைப்பதில்லை என சொல்லியுள்ளீர்கள்... இனி நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை நினைக்கிறேன்..

பிடித்த உணர்வுகளிலே உங்கள் உள்ளம் பிரதிபலிக்கிறது..

அன்பு தேவைகளில்... சொல்லமுடியாத ஒன்று அது உங்களுக்கு கிடைத்து நீடித்து நிலைக்கட்டும் என மறுபடியும் இறைவனை நினைக்கிறேன்...

வலிமையை அழிப்பன மூன்று சத்தியமே... தவிர்க்க முடியாமல் தவிக்க முடிகிறது.

பிடித்த பழமொழிகளில் முதன்மையான எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள்- மௌனம் , காலம்
ஆஹா நான் வெறித்தனமாக இந்த பழமொழியை ரசிக்கிறேன்....

இனி உங்கள் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நீங்கள் குட்டியா தான்..... அசத்தலாக நிதானமாக தொகுத்த விதம் அருமை.... நன்றியுடன் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

கதை - புரிகிறது.. புரிகிறது.. புரிகிறது..

நன்றி

ஸ்ரீராம். said...

அருமை. பிடித்த மூன்று பாடகர்கள் மூன்று என்று கேட்டால் இரண்டிரண்டாக மூன்று என ஆறு சொல்லி விட்டீர்களே...இரண்டு மூன்று இடங்களில் வரும் அப்பாவைப் பற்றிய பிரஸ்தாபம் உங்கள் தந்தைப் பாசத்தைக் காட்டுகிறது.

மாய உலகம் said...

Rathi said...
ஹேமா, உணர்வுகள், உறவுகள், தேவைகள், விருப்பங்கள், தேடல்கள் என்று இவைகள் தொடர்பில் பற்றிப் படர்ந்து, சுற்றிச்சுழன்று மனிதர்களை வாழவும், தாழவும் வைக்கும் மூன்றுகள் நல்லாத்தான் இருக்கு.

ம்ம்ம்ம்.... கலக்கிட்டீங்க!!

//மாய உலகத்திற்கு, இது எனக்கு மட்டுமா தெரியவில்லை. உங்கள் தளத்தில் ஏகப்பட்ட இணைப்புகள், பட்டைகள் தளம் திறக்கவே சிரமப்படுகிறது.//

தாங்கள் வருகை தந்த விசயம் மகிழ்ச்சி அளிக்கிறது... விரைவில் சரி செய்து விடுகிறேன்...மனமார்ந்த நன்றிகள்

உலக சினிமா ரசிகன் said...

நவரசங்களையும் கரைத்த தமிழ்விருந்து.

'பரிவை' சே.குமார் said...

ரசிக்கும் படியான அருமையான பகிர்வு.

தேடல் தொடர்ந்திட என் வாழ்த்துக்கள் தோழி.

காட்டான் said...

சகோதரி முதல்ல உங்களிடம் ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. பெண்கள் எப்போதுமே அப்பா செல்லம்தான். இதை நான் என்னுடைய சகோதரிகளுக்கும் எனது அப்பாவிற்கும் இடையிலான உறவின் மூலமே பார்த்திருக்கிறேன்..
அதனால்தான் எனக்கு ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற ஏக்கம் மனதை வாட்டுகிறது..

என்னடா காட்டான் ஒரே கவிதையை எல்லா இடமும் சொல்கிறானே என்று அலுக்காதீர்கள்...
ஆண் பிள்ளைகள் அம்மா தோளை விடாத குரங்கு குட்டிகள் பெண் குழந்தைகளோ,
அப்பா முகம் விரைவில் அறிந்து
ஆனந்த மின்னலோடு
அம்மா மடியிலிருந்து
அப்பா தோளுக்குத் தாவும்
அணில் பிள்ளைகள்!
எவ்வளவு உண்மை பார்தீர்களா உங்கள் விடையத்தில்..??

அடுத்து ஆங்கிலத்தில் பேசுவோர் பற்றி கூறினீர்கள்.. உண்மைதான் காட்டானுக்கும் இது கடுப்பேற்றும் ஒரு விடையம்தான் பின்ன என்ன சகோதரி ஒரு பேட்டியில் என்ர கனவுக்கன்னி நக்குமா இங்கிலீசில அவுட்டு விட்டதை என்ர மணியண்ணை அவங்க காட்டானைப்பற்றிதான் சொல்கிறாங்கன்னு பீலா விட்டு ரெண்டு சோம பாண போத்தல்களை சுட்டுக்கொண்டு போய்விட்டார்...அன்றிலிருந்து இங்கிலீசுல பேசுர இவைய கண்டா காட்டானுக்கு கோவந்தான் காட்டானும் படிச்சிருக்கலாம் எண்டுதான்..

ஆனா சகோதரி நீங்க சொல்லுறதிலேயே எனக்கு பிடிக்காதது அளவான உணவு..காட்டானுக்கு மூக்கு முட்ட சாப்பிடாட்டி நித்திரை வராதே என்ன செய்யலாம்..ஆச்சியிட்ட சொல்லிடுவேன் ஆமா..

நானும் ஆரம்பத்தில நினைச்சேன் என்ர பொடியங்களுக்கு தமிழ் பெயர்தான் வைத்திருக்கேன்னு..அவங்க பேரு ஆதவன்,ஆதித்தியன்.. இப்ப தமிழ் மொழி அறிஞர்கள் சொல்லுறாங்க அது தமிழ் பெயர் இல்லையாம் உண்மையாவா?? இந்த தமிழ் அறிஞர்களோட ஒரே தொல்லையாப்போச்சுடா...

அப்புறமா நீங்க தாய் நாடுன்னு சொல்லுறீங்களே ஆருக்கெண்டு சொல்லியிருந்தா காட்டானுக்கும் கொஞ்சம் புரிந்திருக்குமே..!!??? உங்களுக்குதான் தெரியுமே காட்டானைப்பற்றி..

ஆனால் சகோதரி இந்த பதிவின் மூலம் உங்களை இந்த காட்டான் ஓரளவு புரிந்து கொண்டான்..

அது சரி என் இப்படி நீண்டடடட கருத்து இடுகிறாய் என்று கேட்கிறீர்களா..?? பாரீசில பல பேர் லீவுல போட்டாங்க.. அவங்களுக்கும் சேர்த்து காட்டான் எழுதினான்னு நினைச்சுக்கொள்ளுங்க...


காட்டான் குழ போட்டான்...

நிரூபன் said...

எனக்கொரு குணம்.எனக்கு அப்பாவென்றால் உயிருக்குள் உயிர்போல.அதனால என்னோடும் பழகும் - பார்க்கும் எவரிடமும் அப்பாவைத் தேடுவேன்.ஒரு ஆள் இன்னொருத்தராக இருக்காது என்று அறிந்தாலும் தேடிக்கொண்டேயிருக்கிறேன். //

ம்....எப்பவுமே சோகத்தைச் சொல்லுவதை விடுத்து, இப் பதிவினைக் கொஞ்சம் காமெடியாகச் சொல்லியிருக்கலாமல்லவா.

நிரூபன் said...

தித்திக்கும் தேன் தமிழில், முத்தான மூன்று விடயங்களாக, வெவ்வேறு தலைப்பின் கீழ் உங்கள் மன உணர்வினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நேசமித்ரன் said...

நல்லாருக்கு :)

காட்டான் said...

சகோதரி நீங்க முதல கத சொன்னா.. நானும் முதல பழ மொழி சொல்லுவேங்க.. பிரன்சில ஒரு பழ மொழி சொல்லுவாங்க..

ஆத்துல இறங்க முன் முதலய திட்டாதேன்னு..

அதுதான் அந்த வெள்ளைக்காரன் ஆத்துல இறங்கீட்டான் போல..!!!!!

Unknown said...

உணர்வுப்பூர்வமான பதில்கள்...

கவி அழகன் said...

அருமையான பதிவி

குறையொன்றுமில்லை. said...

இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை.தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்.



உண்மையான மூன்று. நல்ல வெளிப்படையான பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

>>எனக்கொரு குணம்.எனக்கு அப்பாவென்றால் உயிருக்குள் உயிர்போல.அதனால என்னோடும் பழகும் - பார்க்கும் எவரிடமும் அப்பாவைத் தேடுவேன்

ஆண் தன்னிடம் பழகும் பெண்ணிடம் தாய்மையை , தாயின் அன்பை எதிர்பார்க்கிறான். பெண் தந்தையை!

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா, பிடித்த படம் மீண்டும் ஒரு காதல் கதை என நினைக்கிறேன்.நீங்க காதல் கதைன்னு போட்டிருக்கீங்க.. ஒரு வேளை அப்டி ஒரு படம் வேற மொழில வந்திருந்தா ஐ ஜகா

Unknown said...

மிக அருமை! ரசித்தேன்!
உங்கள் தேடல் தொடரட்டும்! :-)

போளூர் தயாநிதி said...

உங்களின் மூன்று தேடல் களை கண்டேன் பாராட்டுகள் ஒருவரை பற்றி நன்குஅறிந்து கொள்ள இதுமாதிரியான இடுகைகள் தேவையே பாராட்டுகள் .

ஹுஸைனம்மா said...

அடடா, ஆத்துல முதலையா? அப்ப எப்படி அக்கரைக்குப் போவார் அவர்? உடுப்பெல்லாம் வேற அங்கையெல்லொ இருக்கு?

//நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்//

அம்மாவின் இடத்தில மனைவி போல, பெண்கள் கணவரிடத்தில் அப்பாவைத் தேடுகிறோம். கண்டடைவது மிகச் சிலரே..

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா...ம்ம்ம்.....மூன்று மூன்றுக்கள் தான் .

ஜெயா said...

உங்களுக்கே உரிய தனித்துவம்.... அருமையான பதில்கள் ஹேமா....

நிலாமகள் said...

ஒரு ஆள் இன்னொருத்தராக இருக்காது என்று அறிந்தாலும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்//

ப‌‌திவு முழுசும் என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்குங்க‌ ஹேமா... என‌க்கும் உங்க‌ தேட‌லில் ஓரிட‌ம் உண்டுதானே...

சத்ரியன் said...

//# வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான் ! //

குட். பயன் தரும் நிறைய நூல்களைப் படிக்கனும்.


அப்பா அப்பாவாகவே இரு(ப்பா)க்கார்.

மாலதி said...

முத்தான மூன்று பாராட்டுகள் சிறப்பான வைகள் கவிதாங்கி /சுழியத்தைதேடி நீவீர் வரலாம் நான் தூய வளியை உள்வாங்கி செரித்துகொண்டு
சிந்தனைகளை வெளிப்படுத்த பெயர்மாறி வரலாகாதா ? அருள் கூர்ந்து புரிந்து கொண்டு கமுக்கம் (இரகசியம் )காப்பீராக

ஆமினா said...

//வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்.//

அழகான ரசித்த வரிகள்........

//சில பதில்கள் யாரோ ஒருவருக்கு நீங்கள் சொல்வது போலவும் எனக்கு தோன்றுகிறது //

Mahi_Granny said...

2 , 3, 4, என வரிசையாக எல்லாமே அருமை. உங்கள் பதில்கள் மூலம் உங்களை தெரிந்து கொண்டது போல் இருக்கு. நான் மிகவும் விரும்பி படிக்கும் தளம் உங்களது.கவிதை ரசிக்கும் அளவுக்கு திறமை இல்லை என்றாலும் உங்கள் இடுகைகளை வாசித்து பிரமித்து போவேன். வாழ்த்துக்கள்
.i love the title

கலா said...

8) அன்புத் தேவைகள் மூன்று...!
# அப்பாவின் குரல் !
# நிலாக்குட்டியின் பிரெஞ்சுப் பாட்டு !


# இன்னுமொன்று சொல்லமுடியாதது !\\\\
இவ்வளவையும் ஒழுங்காகச் சொல்லிவிட்டு...
இதை மறைத்தால் எப்படி?
நான் குறிபார்க்கப் போகிறேன்,,...
அது என்னவென்று?
ம்மம்ம்...தெரிஞ்சுபோச்சுஉஉஉஉஉஉஉஉஉஉஉ
ஸ்ஸ்ஸ்..................

நிலாமதி said...

முத்துக்களை மூன்றுமூன்று ஆக கோர்த்து அழகாய் பயனுள்ளதாய் வாழ்த்துக்களும் பாராடுக்களும்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன் இல்லையா ? ஹேமா நலமா ?

கீதமஞ்சரி said...

ஒவ்வொரு கேள்விக்கும் ஆழ்ந்த அருமையான, அழுத்தமான, அழகான, தெளிவான பதில்கள். பாராட்டுகிறேன் ஹேமா.

அம்பலத்தார் said...

என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்...............
உங்கள்தேடல்கள் என்றும் உங்களை இளமையாக வாழவைக்கும்

இராஜராஜேஸ்வரி said...

குணம் ஒத்துப்போகிறமாதிரியோ நாம் இருந்தால் அதுகூட ஒரு சந்தோஷம்தான்.ஒருவரது தேடலின் பங்கில் நாமும் இருப்பது மனதிற்கு நிறைவாகவே இருக்கும் ! //

தங்களை நிறைவாக உணர்கிறேன் மனதில்.

வாழ்த்துக்கள்.

M.R said...

தங்களின் எண்ணங்களை மதிக்கிறேன் சகோ..

அருமையான பதிவு .

# எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது !

நல்ல வரிகள் ,வரிகள் என்பதை விட உண்மை

இந்தவரிகள் என்றில்லை
பதிவில் உள்ள அனைத்தும் நெஞ்சை தொட்டவை
ஏனென்றால் நானும் அன்பை தேடுபவன் தான் .

காணும் முகங்களில் ,காணாவிட்டாலும் கேள்விப்படும் எண்ணங்களில் நம் குணங்களை காணும்பொழுது நெகிழ்வுடன் ஒரு பாசம் தோன்றுகிறது

அப்பாதுரை said...

சுவாரசியமான பதில்கள். சுவாரசியமான கதை.
தத்துவச்சாவி ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ஒட்டிக்கொள்கிறது.

அம்பாளடியாள் said...

முத்துக்கள் மூன்று ஒவ்வொன்றும் அருமை!....
உங்கள் தொடர்பதிவு தொடர வாழ்த்துக்கள் சகோ .
நன்றி பகிர்வுக்கு .......

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 18

Kanchana Radhakrishnan said...

மிக அருமை

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

Anonymous said...

இனிமை மூன்று...!
# குழந்தையின் சிரிப்பும் சிணுங்கிச் செல்ல அழுகையும் !
# எதிர்பாராத நேரத்தில் காதலனின் இனிமையான முத்தம் !
# அப்பா கூப்பிடும் குட்டியா !

- கதை நல்ல சொல்றிங்க
நெறைய சொல்லுங்க
கேட்கவருவேன்... நன்றி தோழி

இளம்பிறையன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஹேமா,

இளம்பிறையன்.

Muruganandan M.K. said...

தேடல் இல்லாத வாழ்வு சகதியான குளம்போல.
தேடல் நிறைந்ததால்தான் உங்கள் எழுத்துகளில் என்றும் வசந்தம்.
குட்டிக் கதை சுவார்ஸமாயிருந்தது.

மாய உலகம் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP