Friday, November 04, 2011

என் கேள்விக்கென்ன பதில்.

உலக சனத்தொகை இப்போ ஏழு பில்லியனானது.உலகிலேயே ஏழு பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது.மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம்.இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளைக் கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும்.இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும்.ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது.

இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும்.தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடுங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரக் காத்திருக்கும்.அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும்.புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடுங்கிப்போட்டுவிடும்.ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்குத் திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது.பழைய நினைவுகள்,பழைய பழக்கவழக்கங்கள்,பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது.பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான ஆயுள் உண்டு.புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது.குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தைப் பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன.கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராணக் கதைகளில் இருக்கிறது.

ஆனாலும் ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதைப் பார்த்தால் ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்கிறது.இந்த 120 ஆண்டுகள் ஒரு மனிதன் உயிர் வாழ முடியும்.அதுவரையில் அவனுடைய ஜாதகப்படி வருகிற தசை – புத்திகள் கணிக்கப்படுகிறது.இப்படி 120 ஆண்டுகள் ஒரு நபர் உயிருடன் இருப்பது என்பது இன்றைய காலத்தில் அதிசயமான விஷயமாக இருக்கிறது.

விஞ்ஞான வளர்ச்சி பல முன்னேற்றங்களை தந்திருந்தாலும் எண்ணற்ற பாதக நிலைகளையும் தந்திருக்கின்றது – தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் – கனிகளில் கூட மருந்துகள் கலங்கப்பட்டு அது மனித உடலுக்குள் சென்றவுடன் விஷத் தன்மையாக மாறி மனிதர்களின் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது.இன்று 30 – 40 வயதுக்குள்ளாகவே பல உடல் கோளாறுகளை மனிதன் தன் உடலில் வரவேற்கிறான்.காரணம் ஆரோக்கியமான உணவு இங்கே யாருக்கும் இல்லை.ஒரு இளநீரை எடுத்துக் கொண்டாலும் அது இயற்கையாக இளநீர் காயாக இருந்து குடிப்பதுதான் ஆரோக்கியம்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது?

அந்த இளநீர் கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதுவும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுச் சந்தைக்கு வருகிறது.அந்த இளநீர் கெடாமல் இருப்பதற்காக அதில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது ஒரு விஷயத்தை நாம் என்றுமே நினைவில் நிறுத்த வேண்டும்.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் பழங்கள் இப்படி எந்த உணவாக இருந்தாலும் அதனை இயற்கை விதித்த குறிப்பிட்ட காலத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.அந்தக் குறிப்பிட்ட காலம் சென்ற உடன் இயற்கையே அந்த பொருட்களை மனிதனுக்கு ஏற்றவை அல்ல என்பதை தீர்மானித்து அழித்துவிடுகிறது.அதாவது கெட்டுப்போகிறது.

நமக்குத் தாயாக இருக்கக் கூடிய இயற்கை நமது உடலுக்கு எது ஏற்றது என்பதை தீர்மானித்துப் படைக்கிறது.பிறகு அந்தப் படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த இயற்கையே அழித்தும் விடுகிறது.காரணம் அந்தப் பொருள் இனி மனிதர்களுக்கு உதவாது என இயற்கை அன்னைக்குத் தெரிகிறது.இவையெல்லாம் இப்படியிருக்க விஞ்ஞானிகள் மனிதன் 150 வருடங்கள் வரை வாழக்கூடிய விதியைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அல்லது பிடிக்கிறார்களாம்.இது நான் நேற்று வானொலியில் கேட்டது.அதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பாளர் யாருக்கெல்லாம் 150-200 வயது வரை வாழ விருப்பம்,ஏன் என்கிற கேள்விகளை நேயர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.எனக்கும் பிடித்திருந்தது.எனவே அதையே நானும் உங்களிடம் கேட்க நினைக்கிறேன்.சொல்லுங்கள் நண்பர்களே.

நீண்ட வருடங்கள் உங்களுக்கு வாழ விருப்பமா ?

ஏன் ?

சொல்லுங்களேன்.....!


என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.நான் வாழ்ந்து எதுக்கு ......!

உதவி இணையம்.

37 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நலமா ஹேமா?

அற்புதமான கட்டுரை.கழுகைப் பற்றி உங்கள் மூலமாகப் புதிய தகவல் அறிந்துகொண்டேன்.நன்றி.

மார்க்கண்டேயன் தேர்வுதான் சரியெனத் தோன்றுகிறது.இல்லையா ஹேமா?

Unknown said...

//என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்//

ரைட்டு!

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!

சக்தி கல்வி மையம் said...

எத்தனை வருடம் என்பது தேவை இல்லை, இருக்குற வரை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருப்பதே போதும் என்று இருப்பவன் நான்..

அசத்தலான கட்டுரை..

நன்றி சகோ...

ராமலக்ஷ்மி said...

//காரணம் ஆரோக்கியமான உணவு இங்கே யாருக்கும் இல்லை.//

ரொம்பச் சரியாய் சொன்னீங்க ஹேமா. நல்ல பகிர்வு.

Katz said...

gud post. I dont want to live long

தமிழ் உதயம் said...

கழுகின் கதை அறியாத தகவல். நிச்சயம் மனிதர்களுக்கு - ஏதோ ஒரு விதத்தில் வாழும் சூட்சுமத்தை சொல்கிறது.

ஆமினா said...

நான் வாழ்ந்து எதுக்கு ......!//

என்ன அப்படி சொல்லிட்டீங்க :-(

அருமையான கட்டுரை ஹேமா... கழுகு பற்றி சொன்னதாகட்டும், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் இயற்கையே புறக்கணிக்கும் விஷயங்களை மக்கள் செய்வதாகட்டும் எல்லாமே அற்புதம்!

வாழ்த்துக்கள்

ஷைலஜா said...

//கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது.மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம்.இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை /////


அதென்னவோ கழுகுகள்பற்றி தெரிந்துகொள்ள ஆரவ்மே இல்லாமல் இருந்தது ஹேமா..உங்கள் பதிவைப்படிச்சதும் அடேயப்பா என்று வியந்தேன் ரொம்ப விவரங்கள் த்ந்திருக்கீங்க நன்றி

Anonymous said...

முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்...//

என்நிலையும் அதே...

ஆனால் நீங்கள் பல்லாண்டு எல்லா சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

னல்லபதிவு கழுகுகள் வாழ்க்கை பற்றி தெரிந்துகொண்டேன் பாவன் முதுமை வருமுன்னே சாவைத்தான் நானும் விரும்பினேன் விரும்பியது கிடைக்கலியே? என்னசெய்ய. வாழ்ந்துதான் ஆகனும்.

தனிமரம் said...

கழுகைப் பற்றி அருமையான தகவல் ஹேமா!

தனிமரம் said...

தனியாள் என்றால் இளமையில் மரணம் வரணும் குடும்பத்தவர் என்றாள் முதுமையில் வரனும் கூற்றவன் அவனை/அவளை நம்பி பல ஜீவன்கள் இருக்கும் அல்லவா! அது தான் என் விருப்பம்! இங்கே இப்போது எல்லாம் விரைவில் டிக்கட் வாங்கிறாங்கள் ஹாட் அட்டக் என்று  என்ன செய்வது இயற்கையை தொலைத்து விட்டோம்!

Unknown said...

நலமா ஹேமா!
நான் சற்று நலமடைந் துள்ளேன்!

ஆகா கழுகுகளைப் பற்றி இவ்வளவு
செய்திகளா...
வியப்படைந்தேன்!
எதுவரை வாழ்வது, எப்படி வாழ்வது
என்பதல்ல
வாழ்வாங்கு வாழ்வது
பிறருக்கு தொல்லை தராதவரை
இருப்பது என்பதே என்நிலை!

புலவர் சா இராமாநுசம்

கூடல் பாலா said...

150 வருடமா ...தாங்குமா உலகம் ...

உலக சினிமா ரசிகன் said...

கழுகை பற்றி புதிய செய்தி அறிந்து கொண்டேன்.

எத்தனை ஆண்டுகள் என்பது
எனக்கு முக்கியமில்லை.என் மனைவி இருக்கும் வரை இருக்க விருப்பம்.

நிலாமதி said...

என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.நான் வாழ்ந்து எதுக்கு ......

அற்புதமான கட்டுரை.கழுகைப் பற்றி உங்கள் மூலமாகப் புதிய தகவல் அறிந்துகொண்டேன்.நன்றி.!

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
நலமா?

நீண்ட வருடங்கள் வாழ்ந்து பிறருக்கு பாரமாக இருப்பதை விட இப்போதே போய்ச் சேர்ந்திட வேண்டும் எனும் எண்ணம் தான் எனக்குள் இருக்கு.

Bibiliobibuli said...

ம்ம்ம்ம்.... ஹேமா, இருக்கட்டும் ஒரு எண்பது வயதில் யோசிச்சு பதில் சொல்லுறன், இன்னும் எவ்வளவு காலம் உயிர்வாழ ஆசைப்படுறன் எண்டு :)))

இங்கயும் சில நேரம் இப்பிடித்தான் தமிழ் வானொலியில ஏதாவது கூகிள்ல தேடிட்டு சொல்றமாதிரி அல்லது ஒரு study இப்பத்தான் ஒரு ஆரம்ப நிலையிலோ அல்லது அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றவுடனேயே சொல்றது. அதன் நடைமுறை சாத்தியக் கூறுகள் பற்றி study செயதவரே சொல்வாரா தெரியாது. ஆனா, இவையள் ஏதாவது சொல்லுவினம்.

இது பற்றி ஒரு பதிவு எழுதி அரைகுறையாய் இருக்கு, நேரமில்லா கொடுமையில. பாக்கலாம் முடிக்க முடியுதா என்று. :)

நம்பிக்கைபாண்டியன் said...

கழுகு பற்றிய தகவல் புதுமை! முதுமையாக இருந்தாலும் ஆரோக்கியம் கெடாதவரை வாழலாம்.

சத்ரியன் said...

கழுகு பற்றிய தகவல் பெரும்பாலனவர்களுக்கு போல் எனக்கும் புதுமை தான்.

வானொலியில் கேட்டதை அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ள ஒரு அருமையான பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள்.

உங்க கேள்விக்கு இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கழித்து பதில் சொல்லப்போறேன். என் பதிலை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் ... ஹேமா என்ன செய்ய வேண்டும்-னு சொல்லுங்க பாப்போம்!?

காட்டான் said...

வணக்கம் சகோதரி
கழுகைப்பற்றி அழகாக கூறியிருக்கிறீங்க..
என்னைப்பொறுத்தவரை எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம். எல்லாவற்றையும் விட ஆரோக்கியமாக நடமாடிக்கொண்டிருக்கும்போது ஒரு நித்திரையில் மற்றவர்களுக்கு சிரமம் வைக்காது மரணிக்கவேண்டும் என்பதே என் ஆசை..!!)

ஸ்ரீராம். said...

கழுகு பற்றிய தகவல்கள் இணையத்தில் படித்திருக்கிறேன். உடலுக்கல்ல, மனதுக்கு வயதாகும் வரை வாழலாம். மனதைப் பொறுத்தது வாழ்க்கை. வாழ விருப்பம் இல்லையெனினும் மரணத்தில் ஒரு தயக்கம் இருக்கும் எல்லோரிடமும்! மறைந்தால் சொர்க்கம் வேண்டும். ஆனால் மரணம் வேண்டாம் மனநிலை.

Anonymous said...

நீண்ட வருடங்கள் சந்தோசமாக வாழ்ந்தால் வரவேற்க தக்கது தான்... அதே நீண்ட வருடம் கவலையுடனோ, நிம்மதியற்று வாழ்வதை விட.. 50 வருடங்கள் வாழ்ந்தாலும் ஆரோக்கியத்துடன் நிம்மதியுடன் வாழ்ந்து போய் சேர்வது சிறப்பு... நீங்கள் சொல்வது போல் இயற்கை உரங்களை கையாண்டு பூச்சுகொல்லி மருந்துகள் உபயோகிக்காமல் வரும் உணவு இனி வரும் என்று எதிர்பார்ப்பது பெருமூச்சு விடுவதற்கே... கெமிக்கலும், வஞ்சகமும், பொறாமைகளும், ஒருவன் அழுதுகொண்டும் அதைப்பார்த்து மற்றவன் சிரித்துக்கொண்டும் திரியும் ஏற்றம் இறக்கம் உள்ள இவ்வுலகில் 150 வருடங்கள் வாழ்வதென்பது மிகப்பெரிய தண்டனை தான்... பகிர்வுக்கு நன்றிகள்

சாந்தி மாரியப்பன் said...

கழுகைப்பற்றிய புதுத் தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி ஹேமா..

உபயோகம் இல்லாம எந்தவொரு உயிரையும் ஆண்டவன் படைக்கிறதில்லையே.. இல்லையா ஹேமா :-))))

விச்சு said...

கழுகைப் பற்றிய அருமையான தகவல்கள்- நன்றி ஹேமா.

Asiya Omar said...

கழுகைப்பற்றிய அறிய தகவல்,நன்றி ஹேமா,நம் வேலைகளை நாமே இறுதி வரை செய்ய வேண்டும்,நாம் பிறருக்கு பாரமாக இல்லாமல் நம் வாழ்க்கை முடிந்து விட வேண்டும்,இதுவே என் பதில்..

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

ஜெயா said...

முதுமை வரும் முன்னமே சாக வேண்டும்.... என் விருப்பமும் இதுவே.

இராஜராஜேஸ்வரி said...

என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.நான் வாழ்ந்து எதுக்கு ......!

.....!
என் கேள்விக்கென்ன பதில்."

நான் வாழ்ந்து எதுக்கு ......!

Learn said...

அருமையான கட்டுரை, பகிர்வுக்கு நன்றீங்க

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ஹேமா said...

வணக்கம் உறவுகளே.உங்கள் எல்லோரது பின்னூட்டங்கள் பார்த்ததில் எவருக்குமே நீண்ட காலங்கள் வாழ்ப்பிடிக்கவில்லை.உண்மைதான் எதற்கும் ஒரு அளவு வேண்டும்தானே.எனக்கும் அதுதான் பிடிக்கிறது.

கழுகு சரித்திரம் நான் எப்போதோ வானொலியில் கேட்டிருக்கிறேன்.பிறகு இணையப் பக்கங்களிலும் வாசித்திருக்கிறேன்.

சத்ரியா....உங்க கேள்விக்கு...நீங்க இன்னும் 100 வருஷம் வாழ்ந்தா தாங்குமா உலகம்.உங்களுக்காக நானும் 100 வருசம் வாழணுமோ.அதெல்லாம் நடக்காது !

அப்பாதுரை said...

அருமையான கட்டுரை. கழுகின் பழக்கம் வியக்க வைத்தது. இதுவரை அறியாத தகவல், நன்றி.

எனக்கு இருநூறு முடிந்தால் முன்நூறும் வாழ விருப்பம். என் வழியில் என் விருப்பத்தோடு என் முயற்சியில் வாழ முடிந்தால். எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது இங்கே. இதைவிட்டுப் போக மனம் வருமா? இன்னும் ஐம்பது வருடங்களில் மதம் ஒழிந்து சட்டவிரோதமாகும் நாளைப் பார்க்க ஆசை. நிரந்தரப் பசுமைக்கான வழிகளைக் கண்டு பிடித்தவர்களை வாழ்த்த ஆசை. இன்னும் நூறு வருடங்களில் போர் ஒழிந்துப் பார்க்க ஆசை. நிலாவில் குடியிருப்பு பரவலாகி ஒரு முறை போய் அங்கே தமிழ்க் கவிதை படித்து வர ஆசை. இன்னும் நூற்றைம்பது வருடங்களில் சைனாவுக்கு தெற்கான கிழக்கத்திய எல்லைகள் எல்லாம் சேர்ந்து ஒரே குடையின் கீழ் வரும் நாளைக் காண ஆசை. அரை மானுடம் அரை எந்திரம் என உருவான முதல் செமர்களைக் காண ஆசை. இன்னும் இருநூறு வருடங்களில் மறுபடி இது போல் எழுத ஆசை.

நிலாமகள் said...

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது.பழைய நினைவுகள்,பழைய பழக்கவழக்கங்கள்,பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது.பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.//
இது யோசிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்தான். எழுப‌து வ‌ருட‌ ஆயுளுக்கு அக் க‌ழுகு த‌ரும் விலையான‌ 150 நாட்க‌ள் ம‌ற்றும் அத‌ற்கான‌ வ‌லிதாண்டி வாழ்த‌லின் மீதான‌ வெறி த‌ந்த‌ த‌ன்ன‌ம்பிக்கை எல்லாமே க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும். வேள்வியில் த‌ன்னைத் தானே ஆகுதியாக்கிக் கொள்ளும் துணிவு!சுக‌மாயிருக்க‌ ம‌ட்டுமே நாமெல்லாம் ஆசைப்ப‌டுவ‌தால்தானோ துன்ப‌த்துட‌ன் வாழ‌ அஞ்சி ம‌ர‌ண‌த்தை வ‌ர‌வேற்ப‌து...!

பின்னூட்ட‌த்தில் அப்பாதுரை த‌விர்த்த‌ அனைவ‌ரும் ஒரு த‌ட்டிலும் அவ‌ர் ஒரு த‌ட்டிலும் இருக்க‌ த‌ராசு ந‌டுநிலை காட்டுவ‌து விய‌ப்பாயிருக்கிற‌து. ந‌ல்லெண்ண‌ங்க‌ளின் வ‌லிமையோடு ப‌ல‌நூறாண்டு வாழ்த‌லும் த‌வ‌றில்லையோ...யார் க‌ண்டார்க‌ள்? அவ‌ர‌து எதிர்பார்ப்புக‌ள் நிறைவேற‌வும் ஒரு கால‌ம் வ‌ர‌லாம்!

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

ஆகா! நிலாமகள்! நன்றி.
(ஆசை யாரை விட்டது சொல்லுங்கள்.. காலம் வரட்டும் :):) கிடைக்காததையும் தேவையில்லாததையும் எண்ணி ஏங்குவதை விட கிடைத்திருப்பதை அனுபவிக்கும் பக்குவம் இருந்தால் வாழ்நாள் ஓடுவது தெரியாது என்று நினைக்கிறேன். அதைத் தெரிந்து கொள்ள (அரைகுறைதான்) இத்தனை நாளாயிற்று!

(அவசரத்தில் சொல்ல வந்த செய்தியை முதலில் நேர்மாறாகச் சொல்லிவிட்டேன்:)

முருகேசன் பொன்னுச்சாமி said...

கழுகைப்பற்றிய தங்களின் கருத்து மிகவும் அருமை .
எனக்கெல்லாம் 100-200 ஆண்டுகள் வாழ ஆசையில்லை . இந்த பூகோள பந்தில் வாழும் உயிரினங்களில் , மனித வாழ்க்கை மிகவும் சிக்கல் நிறைந்தது என்பது என்னுடைய அவதானிப்பு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP