Friday, January 13, 2012

திரும்பிப் பார்க்கிறேன் 2011.

சிரிப்போட ரொம்பக்காலமாகவே எனக்குப் பிடிச்ச வில்லுப்பாட்டோட தொடங்குவம்.

எல்லாரும் சுகம்தானே...எப்படி இருக்கீங்க.புதுவருஷம் பிறந்தாச்சு.நான் நல்ல சந்தோஷமா சுகமா சுதந்திரமா இருக்கேன்.சில விஷயங்களை மறக்காம இருக்கணும்ன்னு மட்டும் சாமிகிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்.முடிஞ்ச அளவுக்கு எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்.ஆனா கொஞ்சம் ஏமாந்ததனத்தைக் குறைக்கணும்.அனந்து முடிஞ்ச வருஷத்தை திரும்பிப் பார்க்கச் சொல்லியிருந்தார்.ஊருல மழை வெயில் எல்லாம் எப்பிடி.இங்க இப்ப குளிகாலம்.குளிர் இருக்கிற அளவுக்கு ஐஸ் இல்ல.உயரமான இடங்களிலயும் மலைகளிலயும் ஐஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டி விளையாடுதாம்.ஐஸ் நிரம்பியிருக்கிறதும் ஒரு அழகுதான் !

இப்ப அம்மா அப்பா விளையாடின கிட்டிப்புள்,கில்லி,பாண்டி,நொண்டி இது மாதிரி விளையாட்டெல்லாம் போற போக்கில் பழங்கதையாப்போச்சு.
இன்னும் கொஞ்சக் காலத்தில பண்டைகால(?)சிறுவர் விளையாட்டுகள்னு பதிவுகள் எழுதவேண்டி வரும்.அதோட இப்ப பிள்ளைங்களுக்கு நம்ம விளையாட்டுக்களைச் சொன்னா நகைச்சுவையா சிரிப்பா இருக்கு.நாங்கள்லாம் மழையில நனைஞ்சு விளையாடினம்.காலில புண் வந்திச்சுன்னா அருவருப்பா இருக்கு அவங்களுக்கு.பொன்வண்டு,தும்பி,
வண்ணாத்திப்பூச்சி,தட்டாம்பூச்சின்னு கையில பிடிச்சு விளையாடுவோம்.
இப்ப பூச்சின்னா கட்டில் கதிரையில ஏறி நின்னு குய்யோ முறையோன்னு பயந்து அலறுறாங்க.காலத்தின் மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்கவேண்டியிருக்கோ!

சிறுவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கும்போது கூடியளவு புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கப் பழகுவோம்.வாசிப்புப் பழக்கம் தொடரணும்.நம்மைப் பொறுத்தவரை வாசிப்புப் பழக்கம் குறைஞ்சிட்டே வருது.இங்க பாத்தா நடந்திட்டேகூட வசிச்சிட்டு நடக்கிறாங்க!

யப்பா.......

ஒரு கவிதையை எழுதி அழகாக்கி அது உங்களுக்கு விளங்குதோ விளங்கலியோ அதை ரசிச்சு மனசுக்கு திருப்தியா பதிவாக்கிடலாம்.இந்தக் கட்டுரை எழுதறது இருக்கே.கடவுளே ரதி அடிக்கடி எப்பிடித்தான் எழுதறாங்களோ.

சரி...எப்பவும்போல ஒரு குட்டிக் கதை....

ஒரு முறை ஒரு அரசனும் மந்திரியும் பணியாட்களுடன் வேட்டையாடப்
போனாங்களாம்.மந்திரிக்கு ஒரே சாமிபக்தியாம்.எது நடந்தாலும் அவர் எல்லாமே நல்லதுக்குன்னுதானாம் நினைப்பார்.காட்டில வேட்டையாடிட்டிருக்கிறப்போ அரசனுக்கு எதிர்பாராமல் ஒரு விரல் வெட்டுப்பட்டுப்போச்சாம்.அப்போது மந்திரி எது நடந்தாலும் நன்மைக்கேன்னு சொன்னாராம். அரசனுக்குக் கோபமா வந்திச்சாம்.மந்திரியை மண்ணுக்குள்ள தலை தெரியப் புதைக்கச் சொல்லியாச்சாம்.அதன்படியே செய்துட்டு எல்லோரும் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் போயிருப்பாங்களாம் திடீர்னு மலைவாசிகள் வந்து அரசனைப் பிடிச்சுட்டுப் போயிட்டாங்களாம்

சர்வ லட்சணம் பொருந்தியவர் அரசர் என்கிறதால அவரை அவங்களோட தெய்வத்துக்குப் பலி கொடுக்கக் கொண்டு போறாங்களாம்.அரசனுக்கு என்ன செய்றதுன்னு தெரியலையாம். மந்திரி இருந்திருந்தா ஏதாவது புத்திசாலித்தனமா செய்திருப்பாரேன்னு வருத்தப்பட்டிட்டாராம்.
இதோ குருசாமி வந்துட்டார்.பலி கொடுக்கிறதுக்கு முன்னாடி மன்னரைத் தயார்ப்படுத்த எல்லாம் செய்யறாங்க.அப்பத்தான் தெரியுது அவர் விரல் துண்டானது.காலங்காலமா இருந்து வர்ற நம்பிக்கையின் படி அங்கத்தில குறை இருக்கிறவங்களை சாமிக்குப் பலி கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி மன்னரை விடச்சொல்லிடுறாங்க.மன்னர் தப்பினோம் பிழைச்சோம்னு ஓடி வந்துட்டாராம்.மந்திரி சொன்ன மாதிரி தன் விரல் துண்டானது கூட நன்மையா மாறி தன் உயிரைக் காப்பாத்தினதை புரிஞ்சுகிட்டாராம்.மந்திரியோடு சந்தோஷமா நாட்டுக்குத் திரும்பினாராம்.

இது போலவே சாதாரணமா குட்டிக் குட்டிக் கஷ்டங்களும் பெரிசாத் தெரியுது
எங்களுக்கு.ஆனா அது ஏதோ ஒரு பெரிய விஷயத்தில இருந்து எங்களைக் காப்பாத்தறதுக்காக வந்த துன்பமாக் கூட இருக்கலாம்.அதனால"இதுவும் கடந்து போகும்"னு துன்பம் வரும்போது நினைச்சுக்குவோம்.எல்லாமே நல்லதா மாறும்....நடக்கும்.
நம்பிக்கையோடு வாழ்வோம்.எதிர்பார்ப்புக்களைக் குறைத்தால் மனதில் நின்மதியும் சந்தோஷமும் கூடுமோ என்னமோ !

அப்புறம்...

எனக்கு இப்பல்லாம் இணையம் தவிர வாசிப்புப் பழக்கம் குறைஞ்சுபோச்சு.வாசிக்க ஆசையிருந்தாலும் நேரம் மிக மிகக் குறைவு.ஆனால் ஒவ்வொருநாளும் சூப்பர் சிங்கர்,
குற்றம் நடந்தது என்ன,ஞாயிற்றுக்கிழமைகளில் நீயா நானாவும்,ஒரு வார்த்தை ஒரு இலட்சமும் பார்க்கத் தவறமாட்டேன்.

இதைவிட இணையங்களில் பலமொழிப்படங்களையும் விமர்சிக்கிறார்கள்.யூடியூப்ல தேடிக் கிடைத்தால் எந்த மொழிப்படமானாலும் தமிழ்ப்படங்களைவிட விரும்பிப் பார்க்கிறேன்.
மலையாளம்,ஹிந்தி,கொரியா,ஸ்பானிஷ்,ஆபிரிக்கா,சிங்களம்,ஆங்கிலம்,யப்பான்னு எல்லாப் படமும்தான்.கிட்டடியில "மகதீரா"என்கிற படம் பார்த்தேன்.புனர்ஜென்மக் கதை. பிடிச்சிருந்திச்சு.விளங்குதான்னு சின்னப்பிள்ளைத்தனமா கேள்வியெல்லாம் கேப்பீங்க.
நடிப்பு,முக அசைவுகள்,நிகழ்ச்சிகளை வச்சே கதையை புரிஞ்சுக்குவேன்.நான் கெட்டிக்காரியென்று சின்னப்பிள்ளையிலேயே அப்பா சொல்லியிருக்கிறார்.

தமிழ்ப்படம்ன்னா ஏழாம் அறிவு,எங்கேயும் எப்போதும்,வர்ணம் கொஞ்சம் ரசிச்சுப் பாத்தேன்.சிரிக்கிற படம்...தெரில.பாக்கல.பிடிச்ச பாட்டுன்னா ஏழாம் அறிவில முன் அந்திச் சாரல் நீ....அடிக்கடி முணுமுணுக்க வைக்குது.கொலைவெறின்னா உங்களுக்குக் கொலைவெறி வந்திடும்.நானும் சொல்லமாட்டேன்.அந்தப் பாட்டுக்கு அடிச்ச அதிஷ்டம்
எந்த இலக்கியத்துக்கோ,கம்பனுக்கோ,பாரதிக்கோ,கண்ணதாசனுக்கோ கிடைக்கல !

அப்புறம்...

இந்த வருஷம் மடிக்கணணியில இருந்து மேசைக்கணணி வாங்கினேன்.நான் ஒரு மணிக்கூட்டுப் பைத்தியம்.20-25 வச்சிருக்கேன்.அதெல்லாம்ஒரு நாளைக்குப் படமா எடுத்துப் பதிவில போடணும்ன்னு இருக்கேன்.இந்த வருஷம் கொஞ்சம் விலைகூடின றொலக்ஸ்(ROLEX)வாங்கிட்டேன்.

அப்புறம் பாரிஸ்,கனடா/மொன்றியல் போனேன்.அங்கே ஒரு மாதாகோவில்,பழைய மொன்றியல் எனக்கு நல்லாப் பிடிச்ச இடமா இருந்திச்சு.அங்க நிறையக் காலத்துக்குப்பிறகு தியேட்டரில மங்காத்தா படமும் பாத்தேன்.

இதனால என் சம்பளத்துக்கு என்மேல சரியான கோவம்.தன்னை நான் சரியா ஒழுங்காக் கவனிக்காம இருக்கேனாம்.சரி...சரி.இனி பத்திரமா வச்சிருக்கப் பழகிக்றேன்னு சொல்லி வைக்கிறேன்.ஆனாலும் கஸ்டம்.சரி நல்ல விஷயங்களும் செய்றேன்தானே.வாழத்தான் பணம் தேவையே தவிர பணமே வாழ்க்கையில்லை.போதும் போதும்.

நல்ல விஷயம்ன்னு சொல்லத்தான் நான் இப்பல்லாம் 3 மாசத்துக்கு ஒருமுறை இரத்தம் கொடுக்கிறது ஞாபகம் வருது.இதுவரைக்கும் மூணுதரம் கொடுத்திட்டேன்.கொடுத்தப்போ நான் சொன்னேன்."நிறையக்காலம் இந்த விருப்பம் இருந்திச்சு.ஆனா என் நாட்டில நிறையப்பேர் போரினால நோயில தவிச்சிட்டு இருக்காங்க.சுவிஸ் பணக்கார நாடுதானே.நான் கொடுக்கிற இரத்தம் என்போன்ற நாடுகளுக்குப் போகுமான்னு தெரில.அதனால அக்கறைப்படாம இருந்திட்டேன்னு."அதுக்கு அவங்க..."இல்ல தப்பு அப்பிடி நினைக்கக்கூடாது.ஒரு விபத்து நடக்குதுன்னா.அப்போ பணக்கார நாடு ஏழை நாடுன்னு இல்ல.அந்தசமயத்தில உயிர்தான்.
அந்த உயிருக்கு இரத்தம் உடனடியாகத் தேவைப்படும்.இதுதான் இதில முக்கியம்ன்னு சொன்னாங்க."...எனக்கும் சரின்னு படுது.சரிதானே.

அப்புறம் நான் செத்தால் என் முழு உடம்பையுமே வைத்தியக்கல்வி படிக்கிற வைத்தியசாலைக்கு எழுதிக் கொடுத்திட்டேன்.அதைப் பதிவிலயும் வச்சிட்டேன்.அவங்களுக்கு நிறைய சந்தோஷம்.எனக்கு மிகப் பிடித்த விஷயம் செய்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.இனி யாருக்கும் என்னைப் பிடிக்கலன்னா கவலைப்படமாட்டேன்.!

அப்புறம்...

மிகப்பெரிய சந்தோஷம்ன்னு எதைச் சொல்ல.வருத்தம்ன்னு எதைச் சொல்ல.எல்லாமே வருது போகுது.கால்ல அடிபட்டாலும் வருத்தம்ன்னுதான் சொல்றோம்.மனசில அடிச்சாலும் அதேதான் வலி.கடைசியில வடுக்களும் அதே அளவுதான்.பிரயாணங்கள்,சாப்பாடுகள் வந்த சொந்தங்கள்,தொங்கிநிற்கும் உறவுகள்ன்னு எல்லாமே சந்தோஷம்தான்.ஆனால் நான் தொலையிற வரைக்கும் எதையும் தொலைக்கமாட்டேன்.இது உறுதி.அப்பா அடிக்கடி சுகமில்லன்னு சோர்ந்துபோய் படுத்துக்கிறார்.இது கொஞ்சம் கவலை.இதுதான் வாழ்க்கைன்னு மனம் பக்குவப்பட்டாலும் பாசம்தான் ஜெயிக்குது.அப்பாபோல ஒரு உறவை உருவாக்கி வச்சிருக்கேன் கனவில.... மனசில.!

சாதனைன்னு எதுவும் பண்ணினதா இல்ல.அதற்கான சந்தர்ப்பம் இந்த நாட்டில குறைவு.பார்க்கலாம்.நிறையக் கவிதைகள் எனக்குத் திருப்தியா எழுதறேன்.திண்ணை,உயிரோசை,அதீதம் போன்ற தளங்களில்வாற
அளவுக்குச் சந்தோஷம்.உப்புமடச் சந்தியும் நல்லாவே இருக்கு.ஆனா என்
முன்னோர்களைத்தான் சிலர் எதிர்க்கிறார்கள்.கண்டிப்பா அவங்களை விட்டிட்டு இருக்கமாட்டேன்.

இதில ஒண்ணு கண்டிப்பா சொல்லி வைக்கணும்.நான் பதிவுகள் போடத்தொடங்கிய ஒரு வருட காலத்தின் பின்னர் ப்ரியமுடன் வசந்த் அப்பப்போ என் கவிதைப் பக்கங்களுக்கு வந்துபோவார்.அவர்தான் முதன் முதலாக,இளமைவிகடனுக்கு அனுப்பச்சொல்லி ஊக்கம் தந்தார்.அதன்பிறகுதான் நான் வேறுதளங்களுக்கு என் கவிதைகளை அனுப்பத் தொடங்கினேன்.வசந்துக்கு என் மனம் நிறைந்த நன்றி இந்தப் பதிவின்மூலம் சொல்லிக்கொள்கிறேன் !

இதோடு இன்னுமொன்றும்.டி.வி.ஆர் என்று எல்லோராலும் செல்லமாய் அழைக்கப்படும் T.V.ராதாகிருஷ்ணன் ஐயா என்னிடம் மெயில் ஐடி கேட்டிருந்தார்.ஏன் என்று தெரியாமல் அவர்மீதுள்ள மதிப்பால் ஏன் என்றே யோசிக்காமல் மின்னஞ்சல் போட்டிருந்தேன்.திரும்பி வந்த மின்னஞ்சல் நெகிழ்வான அதிசயம் எனக்கு.என் அப்பாவிடமிருந்துகூட அப்படி ஒரு வாழ்த்துக் கிடைக்கவில்லை.என் ஏக்கம் தீரவைத்ததுபோல ஐயாவிடமிருந்து என் எழுத்துக்குண்டான அங்கீகாரத்தோடு நிறைவான வாழ்த்துக் கிடைத்திருந்தது.இந்த நிகழ்வையும் மறக்கவே முடியாது !

இன்னுமொன்றும் இருக்கிறது.02.10.2011 ல் சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ் முரசு என்கிற பத்திரிகையில் நான் தமிழ்மண நட்சத்திரப் பதிவின்போது எழுதிய “கள்ளக்கோழி” என்கிற நகைச்சுவைச் சிறுகதையை அச்சில் வெளியிட்டிருக்கிறார்கள்.எப்படி இந்தக்கதை இவர்கள் கண்ணில் பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை.யாராவது அனுப்பியிருப்பார்களா.இல்லை இவர்களே என் பதிவை வாசித்து எடுத்துக்கொண்டார்களா தெரியவில்லை.பத்திரிகையில் வாசித்த தோழி கலாதான் அதை எனக்குசொல்லி அந்தப் பக்கத்தை அனுப்பியும் வைத்தார்.அந்தப் பத்திரிகைக்கும் என் தோழி கலாவுக்கும் மிக்க நன்றி !

வருத்தமான விஷயங்கள்ன்னா நாட்டுச் செய்தி எனக்கு எப்பவுமே வருத்தம்தான்.ஒரு உறவு கிடைக்கிறது.சில உறவு விலகிப்போகிறது.இதுவும் வாழ்க்கைதான்.ஆனால் மனசில உறையாத இரத்தக் கசிவு !

கடைசியா...

கதையோட கருத்தும் சேர்த்துச் சொல்றது நல்ல விஷயம்.அப்பதான் கொஞ்ச நாளாவது என்னை நினைப்பீங்க.இந்தக் கதையும் அப்படித்தான்..

ஜெர்மன்காரர் ஒருவர் சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த ஒரு கோயிலுக்குப் போனாராம்அங்க ஒரு சிற்பி கடவுள் சிலை வடிச்சிட்டிருந்தாராம்.அவர் பக்கத்தில் அதே மாதிரி இன்னொரு சிலை இருந்துச்சாம்.அவருக்கு ஒரே ஆச்சரியம் !

"ஏன் ஒரேமாதிரி இரண்டு சிலை?"ன்னு.. சிற்பிகிட்ட கேட்டாராம் !

சிற்பி "இல்லை ஒரு சிலைதான் தேவை ஆனால் முதல்ல செய்ததில கடைசி நேரத்தில ஒரு குறை விழுந்திடிச்சு.அதனாலதான் புதுசா செய்திட்டிருக்கேன்."ன்னு சொன்னார்.

ஜெர்மன்காரர் முதல் சிலையை ஆராய்ஞ்சு பார்த்திட்டு....."
உடைஞ்சதா எதுவும் தெரியலயே என்ன குறைன்னு?"..... கேட்டார்.

சிற்பி "மூக்குப் பகுதியில் ஒரு கீறல்." நிமிர்ந்து கூட பார்க்காம பதில் சொல்லிட்டு தன் வேலையில் மூழ்கிட்டார்.

"சிலை எங்க நிறுவப் போறீங்க"

சிற்பி "இருந்தபடியே உயரத் தூண் ஒன்றைக் காட்டினார்"

"அவ்ளோ உயரத்திலிருந்தா இந்தச் சின்னக் கீறல் யாருக்குத் தெரியப் போகுது?"

சிற்பி நிமிர்ந்து பார்த்துச் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.... "எனக்குத் தெரியுமே.."

இணையத்தில படிச்சது.இந்தக் கதை சொல்லும் நீதியெனன்னு சொல்லுங்க.உண்மையாவே எனக்கும் தெரில !

32 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கடைசி கதை அருமை.
ரசித்தேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி
வில்லுப்பாட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்
நாட்டுப்புறக் கலைகளுள் இன்றும் சில பல
மாற்றங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு களை இது.
இந்தக் காலை வேளையில் அருமையான வில்லுப்பாட்டை
கேட்க வைத்தமைக்கு நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்றிருந்த விளையாட்டுக்கள் எல்லாம்
மறைந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.
அன்று விளையாடிய விளையாட்டெல்லாம் மனதின் திரையில்
வண்ணமாக ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்றிருக்கும் குழந்தைகளுக்கு படிக்கும் (புத்தகம் வாசிக்கும்) பழக்கம்
குறைந்து போய்விட்டது என்பது நிதர்சனமான உண்மை சகோதரி.
வாசிப்பின் அருமை தெரிந்தவர்கள் இன்றைய சமுதாயத்தினரை
நன் முறையில் வழி நடத்த வேண்டும்.

மகேந்திரன் said...

அருமையான இருகதைகள் மனதில் நின்றது சகோதரி.

தமிழ் உதயம் said...

சுதந்திரமா சுகமா வாழுறேன்னு சொன்னீங்க. ரெம்ப மகிழ்ச்சி. அருமையான நடை ரசிக்க வைத்தது. எனக்கும் புத்தகம் படிக்கிற ஆசை போயிடுச்சு.

குறையொன்றுமில்லை. said...

அன்றிருந்த விளையாட்டுக்கள் எல்லாம்
மறைந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.
அன்று விளையாடிய விளையாட்டெல்லாம் மனதின் திரையில்
வண்ணமாக ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்ப உள்ள தலை முறைகள் கம்ப்யூட்டர் கேம்சில் தானே விளையாடுராங்க. ஓடி ஆடி விளையாடினா உடல் நலத்துக்கும் நல்லதுன்னு அவங்களுக்கு புரிய வைக்கனும்.

நட்புடன் ஜமால் said...

எனக்கு மிகப் பிடித்த விஷயம் செய்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.இனி யாருக்கும் என்னைப் பிடிக்கலன்னா கவலைப்படமாட்டேன்.!]]

மிக அருமை ஹேமா!!!

[[நான் எனக்கு உண்மையான நண்பனாகிவிட்டால்,

இப்பூவலகில் எல்லோருக்குமே நண்பன் தான்.]] கன நாட்களுக்கு முன் கிறுக்கியது

----------
அப்புறம் கடைசி கதை ...

தன் நெஞ்சரிவது பொய்யற்க - இது தான் ஹேமா ...

பால கணேஷ் said...

முதல்ல கை கொடுங்க ஹேமா... என்ன... வலிக்குதா? அழுத்தமா குலுக்கிட்டனா... விட்டுர்றன். நீங்க உடல் தானம் செஞ்ச விஷயமும், குழந்தைங்களுக்கு புத்தகம் படிக்கற பழக்கத்தை வளர்க்கணும்னு சொன்னதுக்காகவும் தான் இந்த கைகுலுக்கல். எனக்கும் மிகப் பிடித்தவை இந்த விஷயம் என்பதால். சென்ற வருடத்தை நல்லாவே திரும்பிப் பார்த்திருக்கிறயள். இந்த வருஷம் உங்களுக்குத் திருப்தியா அமையட்டும்னு மனசார வாழ்த்தறேன்.

ஸ்ரீராம். said...

இந்தக் காலக் குழந்தைகள் விளையாட ஏது நேரம், இடம்? புத்தகம் பரிசு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நல்ல ஐடியா!பிறமொழிப் படங்கள் பார்க்கிறீர்கள் என்றால் நான் சிலபல படங்கள் சிபாரிசு செய்வேன். சம்பளத்துக்கு உங்க மேல கோபமா....ரசித்தேன். உடல்தானம் பெரிய விஷயம். கதை சொல்லும் நீதி பிரமாதம்.

காட்டான் said...

வணக்கம் சகோதரி!
மிக பெரிய விடயங்களை கூட சர்வசாதாரணமா சொல்லி செல்கிறீர்களே..

உடல் தானத்திற்கு வாழ்த்துக்கள்.!!

ராஜ நடராஜன் said...

//இந்தக் கட்டுரை எழுதறது இருக்கே.கடவுளே ரதி அடிக்கடி எப்பிடித்தான் எழுதறாங்களோ.//

இதுக்குத்தான் சி.பி வேண்டிகிட்டாரு:)

ராஜ நடராஜன் said...

ராஜா மந்திரி குட்டிக்கதை தெனாலிராமன் கதைகளில் ஒன்று போல் தெரிகிறதே!

ராஜ நடராஜன் said...

ரத்த தானம்!உடல் தானம்!

கவிதைகளை விட நினைவில் நிற்கும்.
வாழ்த்துக்கள் ஹேமா!

Unknown said...

தன் நெஞ்சறிவது பொய்யற்க!
என்ற குறள் தங்களின்
கடைசி கேள்விக்கு விடையாகலாம்.
பதிவைப் படித்ததில் தங்களின்
பன்முக வடிவத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
நல்ல நடை, சோகம், வேகம்,
விவேகம் ஆதங்கம், ஆசை என
பலவும் பரவிக்கிடக்கிறது.
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

ராமலக்ஷ்மி said...

சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். ஆம், வாழ்க்கை வாழ்வதற்கே. நல்ல பகிர்வு.

துரைடேனியல் said...

Ovvoru variyum azhagu Sago. Hema! 2 kathaigal arumai. Kavithai eluthuvathai vida katturai eluthuvathu erichalaaththaan irukku Sago. Azhagu Pathivu. Intha varudamum karumpu pola amaiya vaalthukiren.

நிரூபன் said...

வணக்கம் அக்காச்சி,
நல்லா இருக்கிறீங்களா?
எமது பாரம்பரிய விளையாட்டுக்களின் இன்றைய நிலை,
தாங்கள் சுற்றி வந்த நாடுகள், ரசித்த விடயங்கள்,
பிடித்த படங்கள், பிடித்த மணிக்கூடு & மணிக்கூட்டுப் பைத்தியம் அப்புறமா குட்டிக் கதையும் சொல்லி இனிய பதிவினைத் தந்திருக்கிறீங்க. பணத்தினை கெட்டியாகப் பிடிச்சு ஐ மீன் கவனிக்கப் பாருங்க.
பணம் உள்ள வரை தானே வாழ்க்கை என்று சொல்லுறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Priya said...

//எனக்கு மிகப் பிடித்த விஷயம் செய்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.இனி யாருக்கும் என்னைப் பிடிக்கலன்னா கவலைப்படமாட்டேன்.!//.... சூப்ப‌ர் ஹேமா... ந‌ல்ல‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை அழ‌காக‌ ப‌கிர்ந்துள்ளீர்க‌ள்! உங்க‌ளுக்கு இனிய‌ புத்தாண்டு ம‌ற்றும் பொங்க‌ல் வாழ்த்துக்க‌ள் தோழி:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் ஹேமா!

sury siva said...

ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபின்னும்
அன்று நடந்த நிகழ்வுகள்
ஆறாத வடு போல
கண் முன்னே இல்லாவிடினும்
காதுகளிலே ஒலிக்குமென

ஞாலத்துக்குச் சொல்லுமொரு
செய்தியோ ?

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

கீதமஞ்சரி said...

திரும்பிப் பார்த்த நிகழ்வுகள் யாவும் படிப்பதற்கு மிகுந்த நிறைவும் நெகிழ்ச்சியும் தருகின்றன ஹேமா. மண் பயனுற வாழ நினைக்கும் உங்கள் நல்லமனத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நான் உள்ளிட்ட பலருக்கும் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய பாடம் இருக்கிறது. நன்றி ஹேமா.

Anonymous said...

புத்தகம் வாசிக்கும் பழக்கம்
வளர்க்கணும்னு சொன்னது.. பிடித்தது...

நீங்க உடல் தானம் செஞ்ச விஷயம் மிகவும் பிடித்தது சகோதரி...

கதைகள் அருமை...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஹேமா...

அம்பலத்தார் said...

அடேங்கப்பா கவிதை எழுதுவது இலகுவானது கட்டுரைப்பதிவு ரொம்ப கஸ்டமென்று சொல்லிட்டு அசத்தலான ஒரு பதிவு இட்டிருகிறியள்.

Angel said...

.
//இன்னும் கொஞ்சக் காலத்தில பண்டைகால(?)சிறுவர் விளையாட்டுகள்னு பதிவுகள் எழுதவேண்டி வரும்.//

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விளையாட்டுக்கள் எல்லாமே இக்கால பிள்ளைகளுக்கு தெரியாது .மண்ணில் புரண்டு ஆடியபோதுகூட நாம ஹெல்தியாதான் இருந்தோம் .
//மணிக்கூடு//...கைக்கடிகாரமா ??


//எனக்கு மிகப் பிடித்த விஷயம் செய்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.இனி யாருக்கும் என்னைப் பிடிக்கலன்னா கவலைப்படமாட்டேன்.//

இவ்வளவு பெரிய நல்ல விஷயத்தை செய்கிற ஹேமாவை எல்லாருக்குமே பிடிக்கும் .

வாழ்த்துகள் ஹேமா!

ananthu said...

ஹேமா தாமதத்திற்கு மன்னிக்கவும் , புத்தகங்கள் நிறைய சேர்ந்து விட்டதால் படித்து முடித்து விட்டு இணையத்திற்கு வரவேண்டுமென்று நினைத்து வழக்கம் போல தோற்றுப்போனேன் ! நீங்களும் பதிவில் அதைப்பற்றி குறிப்பிட்டதில் சந்தோசம் ... கவிதை மட்டுமல்ல , கட்டுரையையும் உங்களால் சுவாரசியமாக சொல்ல முடியும் என்று நிரூபித்துள்ளீர்கள் ! சிறு பிள்ளை விளையாட்டு,குட்டி கதைகள் எல்லாமே அருமை... உடல்தானம் உங்களை ஒருபடி மேலே வைக்கிறது ...உங்கள் எழுத்துக்களில் எதையும் சரி சமமாக பார்க்கும் பாங்கு தெரிகிறது ... ஐயா அவர்களுக்கு உங்கள் இ மெயில் ஐடியை யோசிக்காமல் கொடுத்ததாக சொன்னீர்கள் , நீங்கள் யோசித்தாலும் பரவாயில்லை , உங்களின் மெயில் ஐடியை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவேன் !என்னுடைய அழைப்பினை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி !

பித்தனின் வாக்கு said...

.//நான் கெட்டிக்காரியென்று சின்னப்பிள்ளையிலேயே அப்பா சொல்லியிருக்கிறார்.//

ushh appaada.. nilla kitta intha unmaiya solliyiranthinga. sirikka pora.

nalla irukku katturai.

anand said...

சகோதரி உங்கள் நல்லமனத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நான் உள்ளிட்ட பலருக்கும் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய பாடம் இருக்கிறது.
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

எல்லாமே சுவாரசியம். சுருளிராஜன் வில்லுப்பாட்டு இது தான் முதல் முறையாப் பார்க்கிறேன். அருமை. சிற்பி கதையின் நீதியை நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

Geetha6 said...

அருமை சகோதரி.

ஹேமா said...

நண்டு வாங்கோ...முதன் முதலாக அன்போடு வந்து ஊக்கமளித்தமைக்கு நன்றி !

மகேந்திரன் வாங்கோ...எனக்கு இந்தச் சுருளிராஜனின் வில்லுப்பாட்டு நிறையக் காலமாகவே விருப்பம்.
அதை ஏதோ ஒரு பதிவில் இணைக்க நினைத்தே இங்கு இணைத்தேன்.
ரசித்தமைக்கு சந்தோஷம்.பதிவை முழுதுமாக ரசித்திருக்கிறீர்கள்.நன்றி !

தமிழ்...எவ்ளோ புத்தகம் படிக்கிற புத்தகங்களுக்குள் ஒளிச்சு வச்சுப் படிச்சுப் பிடிபட்டு இப்பிடியெல்லாம் கூத்து இருக்கு.இப்போ புத்தகம் படிக்கிற விருப்பம் இருந்தாலு படிக்கிறது இல்லாமலே போச்சு.
இணையத்தில் படிப்பதோடு சரி !

லஷ்மி அம்மா...வாங்கோ அம்மா.பிள்ளைங்களுக்கு பழைய விளையாட்டுக்களைச் சொன்னால் சிரிக்கிறார்கள்.அருவருப்படைகிறார்களே.எப்படிப் புரியவைக்கிறது !

ஜமால்...வாங்கோ வாங்கோ.
உண்மையில் அந்தக் கதையின் நீதி இதுவா.தன் நெஞ்சறிவது பொய்யற்க.
உண்மையும்கூட.ஆமாம் முதலில் எங்களை எங்களுக்குப் பிடிக்கவேணும் என்பதில் எனக்கு மிக்க உறுதி !

ஹாய் ஃபிரண்ட் கணேஸ்...
வாங்கோ.கை குடுக்கிறப்போ அழுத்தமாத்தான் குடுக்கணும்.அதில இருந்தே புரிஞ்சுக்கலாம் அவங்க உள்ளார்த்தமான அன்பை.
வலிச்சாலும் சொல்லக்கூடாது.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.அதெப்பிடி யாழ் தமிழில் பார்த்திருக்கிறயள்...!

ஸ்ரீராம்...பிடித்த நல்ல பிறமொழிப் படங்களை எனக்கு மட்டும் தராமல் பதிவாகவே போடுங்கோ.
எல்லாருக்கும் பிடிக்கும்.
தேடிப்பார்க்கலாம்.எங்கே பார்க்கலாம் என்கிற இணைப்பையும் இருந்தால் கொடுத்துவிடுங்கள்.மிகவும் உதவியாயிருக்கும் !

காட்டான் மாமா வாங்கோ.இப்ப அடிக்கடி மறந்தே போறீங்கள் என்னை.சரி சந்தோஷம் !

நடா...வாங்கோ.படம் எப்பிடி ஓடிக்கிட்டு இருக்கு.நான் அடிக்கடி எட்டிப் பாத்துக்கிறேன் உங்க அவஸ்தையை.சிபி சொன்னபடின்னா ஒரு தளத்தை மூடி வைக்கணுமே.
அதெப்பிடி.ஒரு தளம்ன்னா சூப்பரா முன்னுக்கு நிக்க வச்சிடலாம்.மாறி மாறிப் பதிவு போடுறதால இப்போ இரண்டுமே நடுவில நிக்குது.
பரவாயில்ல நடா. மனசுக்குத் திருப்தி.அது போதுமெனக்கு.
கதையில ஒண்ணு தெனாலிராமன் கதையா.தெரில எனக்கு.ஆனா நீதிக்கதை அவ்ளோதான்.வாழ்த்துக்கு நன்றி நடா.ஏதோ என்னால முடிஞ்ச நல்லது.அதுவும் வேற்று நாட்டில இருந்து செய்யக்கூடியது !

புலவர் இராமாநுசம் ஐயா...நன்றி ஐயா உங்கள் மனமுவந்த
கருத்துக்கு !

ராமலஷ்மி அக்கா...
வாங்கோ.வாழ்வதில் ஏதாவது பிரயோசனம் இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.செய்யவும் முயற்சி பண்றேன்.நன்றி அக்கா !

டேனியல் வாங்கோ.நிச்சயம் இந்த வருடமும் கரும்புபோல இனிக்கப் பண்ணணும்.உங்க வாய்ச்சொல் பலிக்கட்டும் !

நிரூ...வாங்கோ அப்பு.சுகம்தானே நீங்கள்.ம்ம்ம்...பணத்தைக் கட்டிப்பிடிச்சு என்ன செய்றதப்பு.
பணம் வேணும்தான்.ஆனால் தேவைக்கு மட்டும் !

ப்ரியா....ரொம்பக் காலம் உங்களைக் கண்டு.கண்டதில் சந்தோஷம் தோழி !

டி.வி.ஆர் ஐயா...சந்தோஷம் உங்கள் வாழ்த்துக்கு.எப்போதும் உங்கள் வாழ்த்து வேணும் !

சுப்பு தாத்தா...வாங்கோ.உங்கள் பதிவிலே அத்தனைபேருக்கும் வாழ்த்துச் சொல்லி உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தந்திருக்கிறீர்கள்.நன்றி சுப்பு தாத்தா !

கீதா...வாங்கோ.உலக அனுபங்கள்தான் நிறையப் பாடம் சொல்லித் தருகிறது.இன்னும் எவ்வளவோ படிக்க இருக்கு கீதா.அன்புக்கு நன்றி சகோதரி !

ரெவரி...வாங்கோ வாங்கோ.
புத்தகங்கள்தான் அறிவை நிறையத் தருகின்றனவாம்.ஆனால் இப்பல்லாம் நேரம்தான் பிரச்சனை.அன்புக்கு நன்றி தம்பி !

ஹேமா said...

அம்பலத்தார்...வாங்கோ.பதிவு அசத்தலோ.நக்கல் இல்லைத்தானே. உண்மையாத்தானே.சந்தோஷம் !

ஏஞ்சல்...வாங்கோ.அதிரா சுகமா இருக்கிறாவா.என்னைச் சிலருக்குப் பிடிக்கலையே அதான் என் ஆதங்கம்.உங்க அன்புக்கு நன்றி !

அனந்து வாங்கோ.பதிவைப் போடச்சொல்லிட்டு கடைசியா வந்து பாத்திட்டு மன்னிப்பு வேறயா. அதெல்லாம் கிடையாது. நன்றி சகோதரா.என் மனதை வெளிப்படுத்தினேன் உங்கள் தொடரால்.உங்களுக்குத்தான் நன்றி நான் சொல்லவேணும் !

சுதாச்சாமியார்...எப்போ குரங்காரா மாறினார்.ஆனாலும் அழகா இருக்கார்.இப்பத்தான் எனக்கு நிறையப் பிடிச்சிருக்கு.சாமியாரே நல்ல வேளை நீங்க நிலாகூட இன்னும் பேசல.இல்லன்னா நான் எழுதுறது எல்லாம் சொல்லிக் குடுத்து மாட்ட வைப்பீங்க போல இருக்கு.அவ இப்பத்தான் தமிழ் எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கா.அப்புறம் நான் அடக்கி வாசிக்கவேண்டியதுதான்.
நன்றி அன்பான உங்க கருத்துக்கு !

ஆனந்த்...வாங்கோ.நன்றி நான் தான் எப்பவும் சொல்லவேணும் உங்களுக்கு.இந்தத் தளம் தொடங்கினதே உங்களால்தான்.
உங்களிடமும் படித்துக்கொண்டேன் மிகையான அன்பை !

அப்பாஜி...வாங்கோ.என்ன இவ்ளோ தாமதம்.பொங்கல் களைப்பா.சிற்பியின் கதைக்கு ஜமாலும்,புலவர் ஐயாவும் சொல்லியிருந்தார்களே.ஓ...இப்பத்தானா சுருளி அவர்களின் வில்லுப்பாட்டுக் கேட்டீங்க.நான் அடிக்கடி ரசிக்கும் வில்லுப்பாட்டு இது !

கீதா6...வாங்கோ சகோதரி.அன்போடு வரவேற்றுக்கொள்கிறேன் உங்களை.அம்பலத்தார் பக்கமாகத்தான் உங்கள் பதிவுகளைக் கண்டேன்.சாதாரண அன்றாட நிகழ்வுகளைத் தருகிறீர்கள்.
பிடித்திருக்கிறது.இனி அடிக்கடி சந்திக்கலாம்.கவிதைப் பக்கமும் வந்து பாருங்கோ !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP