Monday, March 05, 2012

ஐடியா மணிக்குப் பொன்னாடை போர்த்துறோம்ல !

பாரிசில் வாழும் மாத்தியோசி புளொக்கின் தலைவர் முன்னாடி ஓட்டை வடை நாரயணன்,நிரூபனின் அல்லக்கை,ரஜீவன் என்கிற பெயரில் பின்னாடி இப்போ ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW (பாருங்கோ மக்களே எங்கயெல்லாம் படிச்சு எத்தனை டிப்ளோமா எண்டு) என்கிற பெயரில் கறுப்புக் கண்ணாடியோடு லாச்சப்பலில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க யோசிச்சிருக்கிறோம்.ஏனென்றால் மிகவும் பயனுள்ள பெண்களுக்கான வீட்டுக்குரிப்புகளை அல்லி வழங்கிருயிருக்கிறார்.

அந்தப் பதிவைப் படிச்ச சந்தோஷத்தில உடம்பு முழுக்க மூளையென்று நினைச்சு தெரியாமல் சொல்லிட்டேன் பொன்னாடை போத்துறன் எண்டு.அதுக்குப்பிறகுதான் தெரியுது அதிராவின் பூனைக்குட்டியாரின்ர 5 பவுண் தங்கச்சங்கிலிக்கு அவர்மேல வழக்கு நடக்குது என்று.ஆனால் அவர்தான் எடுத்தாரென்று ஓரளவு பிடிபட்டும் கிட்டக் கிட்ட வந்தும்.... பிறகு பிடிபடாமல் போறார்.இதில அப்பா யோகா,அம்பலத்தார் ஐயா,காட்டான் மாமா,நிரூ,கந்து,தனிமரம் நேசன் எல்லாரும் சம்பந்தப்பட்டிருபார்கள் என்றே சந்தேகிக்கப்படுகிறார்கள்.அதால அவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் இணையப் பதிவர் நீதிமன்றம் தடுமாறுகிறது.
இதுதான் அந்தச் சங்கிலியாம்.ஆனா இது 5 பவுணைவிடக் கூடவாயிருக்குமே !

இவர் சங்கிலி எடுத்தவர் என்று நிரூபிச்சிட்டால் நிரூ முள்ளுக்காவடி எடுக்கிறதாய் அதிரா சொல்ல,முள்ளுக் காவடி எடுக்கும் சம நேரத்தில அக்காச்சி அதிராவும் அக்காச்சி ஹேமாவும் அலகு குத்தி பாற் செம்பு எடுப்பீனம் என்று வள்ளி தெய்வானை மேல சத்தியம் செய்து சொல்றேன் என்று நிரூவும் (என்னைக் கேட்காமலேயே ) நேர்திக்கடனை முருகனுக்கு அள்ளிக் குடுக்கிறார்கள்.இப்பிடியெல்லாம் நேர்த்திக்கடன் கடனாக் கிடக்கு.எப்பிடியும் முருகனுக்கு ஆப்புத்தான்.ஏமாந்துதான் போகப்போறார்.அதோட வள்ளிக்கும் தெய்வானைக்கும் சங்கிலி,சேலை என்று பொய்யான லஞ்சம் எல்லாம் ஒருபக்கமும் கிடக்கு.
கருப்புக் கண்ணாடி(கறுப்பு கண்ணாடி சமாதான காலத்தில புதூர் நாகதம்பிரான் கோயில் திருவிழாவில வாங்கின எட்டு வருசம் பழைய கண்ணாடி என்றும்...நப்பி! நீயி...உந்த இடப் பெயர்வுக்கையும் கண்ணாடியை கைவிட மனமில்லாம பொக்கற்றுக்குள் கொண்டு வந்தது எனக்கெல்லோ தெரியும்!என்றும் நிரூ சொல்கிறார்.) இரகசியம் என்னடாவெண்டா காதலிச்சுக் காதலியின் கரைச்சல் தாங்காம ஓடி ஒளிஞ்சு பரிஸ் - லாச்சப்பல் பக்கம் ஒளிஞ்சு இருக்கிறாராம்.இது நான் கேள்விப்பட்டது.ஐடியா http://www.tamilaathi.com/2012/03/blog-post_03.html மணியத்தாரின் இந்தப் பதிவும் சொல்லுது பாருங்கோ.

இனிமே யாருமே காதலிக்காதேங்கோ.காதலிச்சா இதையெல்லாம் மெயிண்டேன் பண்ணவேணும்.இல்லாட்டி காதலி உங்களை மதிக்கமாட்டாளென்று.ஆனா இவரை காதல் செக்சனில இண்டர்போல் போலீஸ் தேடுதாம்.அதுக்குத்தான் கருப்புக்கண்ணாடி.இதெல்லாம் பழைய சிவாஜி,எம்.ஜி.ஆர் படங்களில ஆள் அடையாளம் தெரியாம இருக்க கன்னத்தில ஒரு மச்சம் ஒட்டிவிட்டா ஆள் அடையாளம் மாறும் என்கிறமாதிரித்தான் இந்தக் கருப்புக் கண்ணாடி.

1) ஒட்டுசுட்டாணில ஒண்டிப்புலி சின்ராசு மகள் மேல கை வைச்சு வாங்கி கட்டினது...

2) வட்டக்கச்சி விதானையாரின் பொட்டையை ஏமாத்தினது...

3) கனககுஜலாம்பாள் அப்டீங்கற பொண்ணை லவ் பண்ணும் போது அந்தப் பொண்ணை நிரூ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆயிரம் தேங்காய் உடைக்குறதாகூட வேண்டிக்கிட்டது....

4) ஒருவாட்டி குஞ்சுப் பரந்தனுக்கு போயி தேங்காய் கட்டிக் கொண்டு வாடா என்று ரெண்டு சாக்கு கொடுத்து இவனோட அம்மா அனுப்பி வைச்சா.இந்த நரி...தொதல் கிண்ட தேங்காய் வாங்கி வர கொடுத்தனுப்பிய காசில திருவருட் பிள்ளையார் படமாடத்தில போயி கோணாவில் கவிதாவின் போட்டோவை பிரேம் பண்ணிக் கொண்டு வந்ததோட தேங்காய் வாங்க கொடுத்து அனுப்பிய காசையும் செலவளிச்சுப் போட்டு வந்திட்டுது! இந்த லட்சணத்தில நேர்த்தி வைச்சு இவன் தேங்காய் உடைக்கிறதாவது!

இப்பிடி இப்பிடியே இவரது பிரதாபங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.பிரான்ஸ் பிகருகள் பற்றி துஷி சொல்றதாச் சொல்லிட்டு நட்புப் பாலத்தை இறுக்கிப் பிடிச்சு வைச்சிருக்கிறதுக்காக்கப் பிறகு சொல்லாம விட்டிட்டார் !

இவற்றோடு....இன்னும் இந்தப் பன்னாடையை பர்சனலா அறிந்தவன் என்ற ரீதியில் சொல்றேன்....என்று நிரூ இவரைப் பற்றிச் சொல்வதாவது.....

இவன் ஒரு வசதியான திருடன்! இவன் லோக்கல் திருடன் இல்லை!
கோப்பை கழுவுறான் என்று நீதிபதிகிட்டயே பொய் சொல்லிட்டானே இந்த நாதாரி !

மக்களே இவன் பிரான்ஸில ஒரு மொழி பெயர்ப்பாளரா ஒரு கூலான அறைக்குள் இருந்து ஒர்க் பண்றான்! இவனுக்கு இங்கிபீசு பிரெஞ்சு அத்துப்படி! அதோட இந்த நாயி ஒரு பகுதி நேர ஆங்கில நா(வா)த்தி & எக்கவுண்டன்!

பிரான்ஸில வசதியா இருந்திட்டு,தன் திருட்டை நியாயப்படுத்தக் கோப்பை கழுவுறதா பொய் சொல்றான்!

இதெல்லாம் இவரது காதல் சாகசங்களும் இன்னும் பிறவும்...(இதெல்லாம் சொன்னவர் நாற்றுப் பதிவளர் நிரூ.ஆட்டோ அனுப்பிறதென்றால் அவர் பக்கம் அனுப்பவும்.)

இவ்வளவு பிராதுகள் இவர் பக்கம் இருந்தாலும்....எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளைய அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளாரென்றும் அறியக் கிடைத்துள்ளது.

எனவே இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் இணைய உறுப்பினருமான முன்னாடி ஓட்டைவடை நாரயணன் பின்னாடி ஐடியா மணி அவர்களுக்குச் சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே அவருக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்.இந்த இடத்தில் மன்னிப்போடு ஒன்றும் சொல்லிக்கொள்கிறோம்.அவர் இலண்டனிலதான் வச்சுத்தான் பொன்னாடை போர்த்தச் சொல்லிக் கேட்டவர்.(இதிலயும் நிரூ சொன்னதாவது பன்னாடைக்குப் பொன்னாடையோ என்று.)ஆனா அதிரா தேம்ஸ் நதிக்கரையில டெண்ட் அடிச்சுப் பூனையாரோடு காத்திருப்பதாகப் பிந்திய செய்திகள் கிடைச்சிருக்கு.அது அவ தீக்குளிக்கிறதுக்கோ (தீ அணைக்கிற லாரிக்கும் அறிவிச்சிருக்கிறாவம்)இல்லாட்டி மணியத்தாரைப் பிடிச்சுத் தண்ணிக்குள்ள தள்ளவோ எண்டு இன்னும் சரியாக அறியப்படவில்லை.

எது எப்பிடியானாலும் இவரது எல்லாச் சேவைகளையும் பாராட்டி இன்று அண்ணன் சிந்தனை பொறித்த பொன்னாடையை தமிழீழ தமிழகத்து உணர்வாளர்கள் நாங்கள் போர்த்திக் கௌரவிக்கிறோம்.(மணியத்தாருக்கே இப்ப இனித்தான் அறிவிக்கப்போறோம்.)அத்தனை இணையத் தமிழ் உறவுகளின் வாழ்த்தை அவருக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

நிரூ,ஹேமாவின் ஒருங்கிசைவில் பொ(ப)ன்னாடையோடு காத்திருக்கும் உலக இணையத் தமிழர் ஒருங்கிணைப்புச் சங்கம் !

122 comments:

காட்டான் said...

வணக்கம் ஹேமா!
இதென்ன புதுக்கத? வேலை முடிஞ்சாப்பிறகு வாறன் கும்மியடிக்க.. ;-))

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அச்சச்சோ...... மானம் போய்ச்சே.....! இருந்தாலும் பொன்னாடை போர்த்திட்டாங்க! மணி கெளம்புடா.....!

தனிமரம் said...

ஐயோ அக்காள் பொன்னாடை ஒரு பன்னாடைக்கா இல்லை பன்னாடை ஒரு இலக்கிய சிற்பிக்கா கொஞ்சம் நேரம் கொடுங்கோ கோப்பை கழுவி முடிய ஓடிவாரன் அந்தச் சங்கிலியில் அடையான் கையடியாளம் இருக்கா என்று பொலிஸிற்கு சொல்லி விசாரிக்கச் சொல்லுங்கோ என்ற சங்கிலியையும் யாரோ நேற்று எடுத்துப்போட்டாங்க அது அடைவு வங்கியா தெரியாது?

தனிமரம் said...

அது என்ன ரவிசங்கர் போட்டோ ?? சமாதனம் பேச ராஜபக்ஸ கேட்டால் தலைவருடன் கதைப்பன் என்ற பன்னாடை பொன்னாடை போர்ப்பதா?? இதுவே ஒரு அல்லக்கை கொஞ்சம் பொறுங்கோ தனிமரம் பொங்கி வரும்.ஸ் மணியத்தார் மணியடிக்கட்டும் தனிமரம்  மதவாதி எப்படி இவருக்கு சாணி அடிக்கலாம் என்று அது பிறகு சொல்லுறன் அதிரா கேட்ட ஆட்டுக்கறி அடுப்பில் ஓடுறேன்000000

ஹேமா said...

வாங்கோ வாங்கோ நானும் கொஞ்ச நேரம் வீட்ல இருக்கிறன்.ஓஓ....இலக்கியச் சிற்பி.பதிவில இணைக்க மறந்திட்டேனே.நன்றி நேசன்.பிரான்சில எல்லாருக்கும் ஒருக்காச் சொல்லிவிடுங்கோ !

நீங்கள் என்னதான் அடையாளம் காட்டினாலும் மணியத்தாரைப் பிடிக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்களோ.அதிராவாலேயே முடியேல்ல.கடசியில பூஸாரையும் களவெடுத்ததா நடந்துகொண்டிருக்கு கதை !

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

ஹேமா... கடும் பிசியா நிக்குறேன்! கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரேன்!

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Anonymous said...

இப்படி பதிவு எழுதச்சொல்லி ஜடியாமணிதான் ஜடியா சொன்னானா மானம் கெட்ட மணி

Yoga.S.FR said...

நிரூ,ஹேமாவின் ஒருங்கிசைவில் பன்னாடையோடு காத்திருக்கும் உலக இணையத் தமிழர் ஒருங்கிணைப்புச் சங்கம் !hi!hi!hi!!!!

ஹேமா said...

பெயரில்லாம ஆரப்பா நீங்கள்.எதோ நான் எப்பவும் அழுகிற பதிவு எழுதுறன் எண்டு இப்பிடியாவது கொஞ்சம் சிரிக்கலாமெண்டு நானே எழுதப்போக சண்டைக்கு வாறீங்கள்.முதல்ல பேர் சொல்லிச் சண்டைக்கு வாங்கோ !

கணேஷ் said...

சிரிக்க வெக்கிறதுன்னாலும் உங்களால ஏலும் என்டு நிரூபிச்சிருக்கிறயள் ஃப்ரெண்ட்! ரசிச்சுப் படிச்சேன்!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

பாரிசில் வாழும் மாத்தியோசி புளொக்கின் தலைவர் முன்னாடி ஓட்டை வடை நாரயணன்,நிரூபனின் அல்லக்கை,ரஜீவன் என்கிற பெயரில் பின்னாடி இப்போ ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW (பாருங்கோ மக்களே எங்கயெல்லாம் படிச்சு எத்தனை டிப்ளோமா எண்டு).//////////

ஸப்பா...... எனக்கே இப்புடி கண்ணைக் கட்டுதே? அப்போ மத்தவங்க பாடு?

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

ஏனென்றால் மிகவும் பயனுள்ள பெண்களுக்கான வீட்டுக்குரிப்புகளை அல்லி வழங்கிருயிருக்கிறார்.///////

ஹா ஹா ஹா ஹா அந்த ஒரு பதிவுக்கே பொன்னாடையா? இதுமாதிரி இன்னும் நிறைய பதிவுகள் போடப் போறேன்! அப்போ, வைர ஆடையா? ஹா ஹா ஹா!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அந்தப் பதிவைப் படிச்ச சந்தோஷத்தில உடம்பு முழுக்க மூளையென்று நினைச்சு தெரியாமல் சொல்லிட்டேன் பொன்னாடை போத்துறன் எண்டு.////////

ஹா ஹா ஹா தவறுதலா சொன்னாலும் சொன்னது சொன்னதுதான்! அதுசரி பொன்னாடை போர்த்தும் போது, கூடவே ஒரு என்வலப்புக்குள் வைச்சு காசும் கொடுப்பினமே? எனக்கு அதுவும் கெடைக்குமா?

ஹேமா said...

ஓஓ...அப்பிடியே பொன்னாடை போத்தேக்கா காசும் குடுக்கவேணுமே.எனக்குத் தெரியாது உண்மையா.இதுக்குத்தான் நிரூ வேணுமெங்கிறது.அப்பிடியெண்டா ஒரு என்வலப் படம் ஒண்டு போட்டுவிடலாமோ.எப்பிடி என்ர ஐடியா !

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அதுக்குப்பிறகுதான் தெரியுது அதிராவின் பூனைக்குட்டியாரின்ர 5 பவுண் தங்கச்சங்கிலிக்கு அவர்மேல வழக்கு நடக்குது என்று.ஆனால் அவர்தான் எடுத்தாரென்று ஓரளவு பிடிபட்டும் கிட்டக் கிட்ட வந்தும்.... பிறகு பிடிபடாமல் போறார்.////////

சீசீசீ அது நான் எடுக்கேலை! சத்தியமா! நீங்க தந்த பொன்னாடை மேல சத்தியமா......!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அதுக்குப்பிறகுதான் தெரியுது அதிராவின் பூனைக்குட்டியாரின்ர 5 பவுண் தங்கச்சங்கிலிக்கு அவர்மேல வழக்கு நடக்குது என்று.ஆனால் அவர்தான் எடுத்தாரென்று ஓரளவு பிடிபட்டும் கிட்டக் கிட்ட வந்தும்.... பிறகு பிடிபடாமல் போறார்.////////

சீசீசீ அது நான் எடுக்கேலை! சத்தியமா! நீங்க தந்த பொன்னாடை மேல சத்தியமா......!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

முள்ளுக் காவடி எடுக்கும் சம நேரத்தில அக்காச்சி அதிராவும் அக்காச்சி ஹேமாவும் அலகு குத்தி பாற் செம்பு எடுப்பீனம் என்று வள்ளி தெய்வானை மேல சத்தியம் செய்து சொல்றேன் என்று நிரூவும் (என்னைக் கேட்காமலேயே ) நேர்திக்கடனை முருகனுக்கு அள்ளிக் குடுக்கிறார்கள் //////

ஹா ஹா ஹா ஹா மாட்டிக்கிட்டீங்களா? சரி எப்ப அலகு குத்துறீங்க?

ஹேமா said...

அதிரா பாவம் 5 பவுண் சங்கிலி அவ்வளவும்தான்.ஒருக்கா ஆசைக்காகவாசும் சொல்லுங்கோவம் நான் தான் அந்தச் சங்கிலையை அமபலம் ஐயாட்ட ஜேர்மனியில ஒளிச்சு வச்சிருக்கிறன் எண்டு.பாவமெல்லோ நாங்கள் எல்லாரும்.எவ்வளவு கஸ்டப்படுறம் உங்கட வாயைக் கிளற.நேசன் ஆட்டுக்கறி வச்சுத்தருவரெல்லோ உங்களுக்கு !

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

இவ்வளவு பிராதுகள் இவர் பக்கம் இருந்தாலும்....எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளைய அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளாரென்றும் அறியக் கிடைத்துள்ளது./////////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு! ஏன்னா நிறைய இடங்கள் சுத்திப் பார்க்கலாம்! அடுத்தவர் பணத்தில்....!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

நிரூ,ஹேமாவின் ஒருங்கிசைவில் பொ(ப)ன்னாடையோடு காத்திருக்கும் உலக இணையத் தமிழர் ஒருங்கிணைப்புச் சங்கம் ! ///////

ஹா ஹா ஹா அந்தப் பொன்னாடையில் பாதியைக் கிழிச்சு நல்ல விலைக்கு வித்தாலும் விற்பான் நிரூ! எதுக்கும் கவனமா இருங்கோ! மேடையில வைச்சு குடுங்கோ அவனிடம்! முற்கூட்டியே கொடுக்கவேண்டாம்! ஹா ஹா ஹா!!

ஹேமா said...

நான் அண்டைக்கே சொல்லிப்போடான் ஊசி எண்டா அலர்ஜி.அழுதிடுவன் எண்டு.வேணுமெண்டா கொஞ்சம் வேப்பிலைக் கலர்ல சீலை கட்டிக்கொண்டு பாற்செம்பு எடுக்கிரன்.ஆனா ஒண்டு அவையள் என்னைக்கேட்டோ நேர்த்தி வச்சவையள்.அதெப்பிடி நீங்க களவெடுத்ததுக்கு நான் நேர்த்தி செய்யவேணும்.அதுக்கு முதல்ல பதில் வேணும் !

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அதிரா பாவம் 5 பவுண் சங்கிலி அவ்வளவும்தான்.ஒருக்கா ஆசைக்காகவாசும் சொல்லுங்கோவம் நான் தான் அந்தச் சங்கிலையை அமபலம் ஐயாட்ட ஜேர்மனியில ஒளிச்சு வச்சிருக்கிறன் எண்டு.பாவமெல்லோ நாங்கள் எல்லாரும்.எவ்வளவு கஸ்டப்படுறம் உங்கட வாயைக் கிளற.நேசன் ஆட்டுக்கறி வச்சுத்தருவரெல்லோ உங்களுக்கு !////////

ஹா ஹா ஹா ஹா ஒத்துக்கொள்ளலாம் தான்! 15 ம் தேதி வழக்கு இருக்கு! இந்த முறை வக்கீல் வண்டு முருகன் வரமாட்டாரம்! ஆரோ வெள்ளைக்கார லோயரோட வரப்போறாவாம்!

பார்ப்பம் அந்த வெள்ளைக்காரன் என்ன கதைக்கிறான் என்று!

ஹேமா said...

வெள்ளைக்கார லோயரோ....எங்களையே இந்த உலுப்பு உலுப்பி வக்கிறீங்கள்.வெள்ளைக்காரத்துரை உங்களுக்கு ஒரு ஜூஜூபி.நான் இருக்கிறன் சாட்சி சொல்ல.பொய்ச்சாட்சியோ உண்மைச்சாட்சியோ எண்டு கேக்கப்படாது !

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

நான் அண்டைக்கே சொல்லிப்போடான் ஊசி எண்டா அலர்ஜி.அழுதிடுவன் எண்டு.வேணுமெண்டா கொஞ்சம் வேப்பிலைக் கலர்ல சீலை கட்டிக்கொண்டு பாற்செம்பு எடுக்கிரன்.ஆனா ஒண்டு அவையள் என்னைக்கேட்டோ நேர்த்தி வச்சவையள்.அதெப்பிடி நீங்க களவெடுத்ததுக்கு நான் நேர்த்தி செய்யவேணும்.அதுக்கு முதல்ல பதில் வேணும் ! //////

ஐயையோ, இப்புடி திடுதிப்பெண்டு கேட்டா நா என்ன பதில் சொல்றது? எதுக்கும் பால் சொம்பு எடுங்கோ, பிறகு பதில் சொல்றன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! தப்பியாச்சு!!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

வெள்ளைக்கார லோயரோ....எங்களையே இந்த உலுப்பு உலுப்பி வக்கிறீங்கள்.வெள்ளைக்காரத்துரை உங்களுக்கு ஒரு ஜூஜூபி.நான் இருக்கிறன் சாட்சி சொல்ல.பொய்ச்சாட்சியோ உண்மைச்சாட்சியோ எண்டு கேக்கப்படாது !////////

ஹா ஹா ஹா நீங்க சாட்சி சொல்லுவிங்கள் எண்டு தெரியும் ஹேமா! ஆனா எனக்கு சார்பா சொல்லுவீங்களோ எண்டதுதான் குழப்பமா இருக்கு! வரட்டும் வெள்ளைக்கார லோயர் - ஒரு கை பார்க்கிறன்!

ஹேமா said...

என்னட்டைதான் தப்பியாச்சு எண்டு சொல்லுவீங்கள்.அதிராட்ட அசையேலாது.வேணுமெண்டா அதிராட்ட மாட்டாம இப்பிடியே பொய் சொல்லிக்கொண்டே இருங்கோ.ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நான் நேர்த்தி செய்றன்.அது என்னண்டா காதில இன்னொரு ஒட்டை போட்டு தோடு போடுறன்.ஆனா நீங்கள்தான் வாங்கித் தரவேணும்.ஓகேயா !

தனிமரம் said...

எங்க ஆத்தாவை ஹேமா அல்கு குத்தி பால் குடம் எடுக்கிறன் ஏன்று எப்படி பகிடி பண்ண முடியும் இது மதக்குற்றம் நிரூ சொன்ன ஜோசனைக்கு முதலில் கழுவில் ஏற்றணூம்

ஹேமா said...

அதானே என்னைக் கேக்காமலே எப்பிடி நேர்த்தி வைக்கலாம்.கேழுங்கோ நேசன் !

ஹேமா said...

அதுசரி...நீங்க இப்ப மணிக்கு பொன்னாடை போர்த்தவோ வந்திருக்கிறியள்.எங்க ஒருத்தரையும் காணேல்ல.எல்லாரும் சேர்ந்தெல்லோ பரிசெல்லாம் குடுக்கவேணும்.நீங்கள் என்ன குடுக்கப்போறீங்கள் ?

தனிமரம் said...

அடிக்கடி மதத்தை கேள்வி கேட்கும் மணீக்கு மதநல்லினத்தை பேனும் ரவிசங்கர் பொன்னாடை போர்த்தினால் நானும் என் தோழ்ர்கலும் தீ குழிப்போம்

athira said...

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. இன்று பார்த்து வீட்டில நிற்க முடியாமல் போச்சு:))....

ஹேமா... பொன்னாடையை நான் தைச்சுத் தாறன்:)) அந்த வேலையை என்னிடம் விடுங்க:)) எனக்கு காசும் வாணாம்:))..

ஊ.கு:
என் சங்கிலியை எடுத்ததும் இல்லாமல் அவருக்குப் பொன்னில ஆடை கேட்குதோ:)).. கொஞ்சம் நில்லுங்க வாறேன், நேற்றுத்தான் கண்டனான்... தேம்ஸ் பக்கத்தில இருக்கிற பத்தையில, அந்த சுணைக்கிற கொடி(பெயர் மறந்திட்டன்:)) நல்ல வடிவாப் படர்ந்திருக்கு:)).. அதையே உள்ளே வச்சுத் தச்சு... பெரியாஆஆஅ பொன்னாடை செய்திடுறேன்.. எங்கிட்டயேவா:))

தனிமரம் said...

மணீக்கு பரிசு கொடுக்கும் அளவுக்கு இந்த அகதியிடம் பொன்னும் பொருளூம் இல்லை.ஆனால் உன் ஆண்டால் பாசுரத்தை அழகு தமிழில் இந்த தனிமரத்தை குளீர்வித்தால் ஏதோ ஒரு சிறப்புபாடல் போடுறன் நாராயனுக்கு

ஹேமா said...

அதிராராராராரா.....வாங்கோ.முதல்ல உப்புமடச்சந்திக்கு வந்ததுக்கு நல்ல சந்தோஷம்.

அந்தக் கொடிக்குப் பேர் காஞ்சூண்டி.அதிலையோ பொன்னாடை.பாவமெல்லோ.கொஞ்சம் இரக்கம் காட்டுங்கோவன்.அவர் சொல்லுவார் தான் தான் சங்கிலி வச்சிருக்கிறன் எண்டு.ஆனால் டைன்ம் வேணும்.அதான் !

athira said...

// ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
அச்சச்சோ...... மானம் போய்ச்சே.....! இருந்தாலும் பொன்னாடை போர்த்திட்டாங்க! மணி கெளம்புடா.....!///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்படிப் போர்த்துறது, ஆர் பிடிச்சுப் போர்த்துறது(ஐ மீன் பொன்னாடையை:)), கொஞ்சம் பாரமெல்லோ, இது ஸ்பெஷலா அதிரா செய்கிறன் :)) எண்டெல்லாம் இப்பத்தானே டிஷ்கஸ் பண்ணுறம், அதுக்குள்ள என்ன அவசரம், இருந்து மெதுவா.... இந்த லெமன் ஜூசையும் குடிச்சிட்டுப் போகலாமே:)) பயப்பூடாதீங்க இதுவும் நான் தான் போட்ட ஜூஸ்ஸ், ஆயா போடேல்லை:))

தனிமரம் said...

ஐயோ பூனைக்குட்டி வந்திட்டா நான் வேலைக்கு போறன் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஹேமா said...

இப்பிடிச் சொல்லிட்டு போகேலாது நேசன்.ஏதாவது குடுக்கவேணும்.மரியாதையில்ல உங்களுக்கு.இல்லாட்டி நேரிலேயே பரிசில வச்சுக் குடுக்கப்போறீங்களோ !

athira said...

ஹேமா.. இது கொஞ்சம்கூட நல்லாவே இல்லை, சும்மாவே அந்தக் கண்ணாடி போட்ட:)) படத்தை நான் பார்க்காமல்தான் பின்னூட்டம் போடுறனான்:)))..

நீங்க என்னடாவென்றால், அதைத்தூக்கி பெரிசாக்கிப் போட்டிருக்கிறீங்களே இது ஞாயமோ? என்னால இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கேலாது எமனைக் கூப்பிடுங்கோ.. எமனைக் கூப்பிடுங்கோ:))

athira said...

// தனிமரம் said...
ஐயோ பூனைக்குட்டி வந்திட்டா நான் வேலைக்கு போறன் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

ஹா..ஹா..ஹா.. நில்லுங்க தனிமரம்:)) உங்களுக்கும் ஒரு பொன்னாடை போர்த்தலாம் என யோஓஓஓஒசிக்கிறம்:)))

ஹேமா said...

பாத்தீங்களே அதிரா உங்கட ரசனையை.நான் காலேல கண்ணாடியழகர் எண்டு பட்டமுமெல்லோ குடுத்திருக்கிறன்.எப்பிடி வடிவாயிருக்கெல்லோ !

ஹேமா said...

நீங்கள் வர மணியத்தார் ஒளிச்சிட்டார்போல.ஆளுக்குப் பயம் கிடக்குத்தான் கொஞ்சம் !

athira said...

// ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
அதுசரி பொன்னாடை போர்த்தும் போது, கூடவே ஒரு என்வலப்புக்குள் வைச்சு காசும் கொடுப்பினமே? எனக்கு அதுவும் கெடைக்குமா//

என்னாதூஊஊஊஊஊஊஉ.. என்வலப்பில வச்சுக் காசும் கேட்டுதாமோ? முடியல்ல சாமீஈஈஈஈஈ ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ ஹேமா.. நான் தீக்குளிக்கப் போறேன் தேம்ஸ் கரையில:))

என்ர வெள்ளை நண்பி விஷப்பம்புக் குட்டிகள் வளர்க்கிறா:)) அதில ஒண்டை வாங்கி வாறன் ஹேமா... என்வலப்பில வச்சு, ஐடியாமணியின் பொக்கட்டில வச்சுவிடுவம்.. okay?:)

தனிமரம் said...

ஐயோ தாய்மார்களே இன்றூ தனிமரம் முருக்னுக்கும் ஈழத்து சிதம்பரத்துக்கும் காவடி எடுக்குறன் திருமதி அதிரா உப்புமடச்சந்தியில் எங்களூடன் கோப்பாய் கோப்பி குடிக்கின்றா. கோவிந்தா

ஹேமா said...

எனக்கு விளங்கேல்ல.தீக்குளிக்க ஏன் ஃபய்ர் எஞ்சின்னுக்கு போன் பண்ணவேணும் அதிரா !

என்வலப் கேக்கிறார்.என்ன செய்யலாமெண்டு யோசிச்சுக்கொண்டு இருந்தன்.நல்ல ஐடியாதான்.ஆனால் பாம்பு கடிக்காதுதானே அதிரா !

athira said...

// ஹேமா said...
நீங்கள் வர மணியத்தார் ஒளிச்சிட்டார்போல.ஆளுக்குப் பயம் கிடக்குத்தான் கொஞ்சம் !//

உரலுக்குள் தலையைக் கொடுத்திட்டுப் பயந்து என்ன செய்யப்போறார்:)))..

ஆனா ஒரு கண்டிஷன் ஹேமா.. பொன்னாடை போர்த்தும்போது சங்கிலிப் புகழ்..ஐடியாமணி அவர்கள், அரைக்கை ரீ ஷேட்டும், சோட்சும் மட்டும்தான் போட்டிருக்கவேணும் சொல்லிட்டேன்:)).

பிறகு கை கால் எல்லாம் மூடி வந்தால், கஸ்டப்பட்டுத் தச்ச பொன்னாடையைப் போர்த்த விடமாட்டேன் சொல்லிட்டேன்:))

athira said...

// தனிமரம் said...
ஐயோ தாய்மார்களே இன்றூ தனிமரம் முருக்னுக்கும் ஈழத்து சிதம்பரத்துக்கும் காவடி எடுக்குறன் திருமதி அதிரா உப்புமடச்சந்தியில் எங்களூடன் கோப்பாய் கோப்பி குடிக்கின்றா. கோவிந்தா//

ஹா...ஹா..ஹா..
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்குக் கோப்பாய்க் கோப்பி எல்லாம் வாணாம்.. இந்த பொன்னாடையைப் போர்த்தி முடியுமட்டும் ஒரு சொட்டுத் தண்ணி குடிக்க மாட்டேன் சொல்லிட்டேன்:))..

தனிமரம் said...

ஐயோ பங்கஜம் பாட்டி இல்லையே இந்த நேரம் வராதவங்க் எல்லாம் வாரராங்க் பேரனுக்கு பொன்னாடை போக்குறதைப் பார்க்க இந்த மச்சாள் வேற உலக்கையோட நிற்கிறாள் வேலைக்கு கிழக்கே போகும் ர
யில் நேரமாச்சு மச்சான்ன்ன்ன்ன்ன்

ஹேமா said...

உடுப்புப் போடுறதும் போடாம விடுறதும் உங்களுக்கும் அவருக்குமான டீல்.அப்போ காஞ்சூண்டி இலையிலதான் உடுப்போ.மணியத்தார் சொறிஞ்சுகொண்டு லாச்சப்பலில திரியிறதை கற்பனை பண்ணிப் பாக்கிரன்.அட...அட....அட...!

athira said...

//ஹேமா said...
எனக்கு விளங்கேல்ல.தீக்குளிக்க ஏன் ஃபய்ர் எஞ்சின்னுக்கு போன் பண்ணவேணும் அதிரா !///

உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா ஹேமா:)) மெதுவாக் கதையுங்கோ.. உப்பூடியெல்லாம் பப்ளிக்கில கேட்டு என் இமேஜை டமேஜ் ஆக்கிடப்பூடா okay?:)

தனிமரம் said...

athira said...
// தனிமரம் said...
ஐயோ தாய்மார்களே இன்றூ தனிமரம் முருக்னுக்கும் ஈழத்து சிதம்பரத்துக்கும் காவடி எடுக்குறன் திருமதி அதிரா உப்புமடச்சந்தியில் எங்களூடன் கோப்பாய் கோப்பி குடிக்கின்றா. கோவிந்தா//

ஹா...ஹா..ஹா..
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்குக் கோப்பாய்க் கோப்பி எல்லாம் வாணாம்.. இந்த பொன்னாடையைப் போர்த்தி முடியுமட்டும்
// அப்ப ஒரு சக்கரைத்தண்னி/ மோர்

athira said...

/// ஹேமா said...
உடுப்புப் போடுறதும் போடாம விடுறதும் உங்களுக்கும் அவருக்குமான டீல்.அப்போ காஞ்சூண்டி இலையிலதான் உடுப்போ.மணியத்தார் சொறிஞ்சுகொண்டு லாச்சப்பலில திரியிறதை கற்பனை பண்ணிப் பாக்கிரன்.அட...அட....அட...///

ஹாக்க்க்க்க்ஹாக்க்க்ஹாஆஆஆஆஆஅ இனிமேல் ஒரு பின்னூட்டம்கூடப் போடமுடியாமல் “சொறியத்தான்” நேரம் சரியா இருக்கும்:)))... அவ்வ்வ்வ்வ் எங்கிட்டயேவா? என் சங்கிலி கைக்குக் கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:))

ஹேமா said...

காஞ்சூண்டி உடுப்புக்கும் கருப்புக் கண்ணாடிக்கும் என்ன அழகாயிருப்பார்.சிரிப்பு அடக்கமுடியேல்ல அதிரா !

நீங்க தீக்குளிக்கிற விஷயம் பதிவிலயே போட்டுக்கிடக்கு.பிறகென்ன இதைவிடப் பப்ளிக் !

athira said...

ஹா...ஹா...ஹா.. தனிமரத்தின் (அன்பு)தொல்லை தாங்க முடியல்லப்பா:))... வீரவாகுதேவர்மாதிரி:)) அங்கும் இங்கும் ஓடி ஓடி.. என்ன ஒரு உபசரிப்பு கோப்பி கொடுக்கிறார், சக்கரைத்தண்ணி கொடுக்கிறார், மோர் கொடுக்கிறார்... நான் புல்லாஆஆஆஆஆஆ அரிச்சுப்போனன்.. அவரின் சேவை பார்த்து:)))

athira said...

பொன்னாடை தைத்துத்து முடியட்டும் ஹேமா , நான், சங்கிலிப் புகழ்:) ஐடியா மணியாரின் வீட்டை எட்டிப் பார்த்திட்டு வாறன்:)).. இண்டைக்கு அங்கின போக நேரம் கிடைக்கேல்ல:))

தனிமரம் said...

என் உயிர்த்தோழனில் தண்ணீருக்குப் பதிலா பெற்றோல் வைத்தது போல் எனக்கு வேலை நேரம் இன்றூ இரவு மனிக்குரல் விளம்பரத்தை பார்க்கவும் முக்கியமாக காட்டான் இது ஒரு கட்டண விளம்பரசேவை

ஹேமா said...

தனிமரம் நேசனைப் பகிடி பண்ணாதேங்கோ அதிரா.அவரின்ர பதிவுக்கு முதலாவதா போனீங்க எண்டா பால் கோப்பிதான்.அதுவும் அப்பா யோகாவுக்கு நான் குடிச்சிட்டன் எண்டா பொறாமை.நேசன் நல்லவர்,வல்லவர்.என்ன...எழுத்துப்பிழைதான் அவரைப் பாடாப் படுத்துது !

ஹேமா said...

சரி நானும் வேலைக்குப் போய்ட்டு வாறன்.இனி இரவு 9.45 க்குத்தான்.வாற்ன் போய்ட்டு !

தனிமரம் said...

அக்காளூக்கு சேலை எடுத்து தாரன் ஆனால் அம்மன் கல்ரில் இல்ல ஏன்னா நாங்க புட்வைக்கடையில் வேலை செய்த மச்சான் என்ற ஐராங்கனிக்கும் நான் தான் கலியாணாசாரி செலட்க் செய்த மச்சான்

தனிமரம் said...

அதிரா.அவரின்ர பதிவுக்கு முதலாவதா போனீங்க எண்டா பால் கோப்பிதான்.அதுவும் அப்பா யோகாவுக்கு நான் குடிச்சிட்டன் எண்டா பொறாமை.நேசன் நல்லவர்,வல்லவர்.என்ன...எழுத்துப்பிழைதான் அவரைப் பாடாப் படுத்துது //ஐயோ நான் என்ன செய்ய ஐபோனில் எழுதிறன் பிழை பார்க்க நேரம் இல்லை .வேலை போ/வர 20 மநிட்தியாலம்
வெளீயில். இடையில் ம்ச்சாள் கூட் டூயட். வந்து படுதால் யாழ்தேவி அழைக்கும்

Avani Shiva said...

மணி மணியான செய்திகள் --- ஆனாலும் எல்லா பட்டங்களுக்கும் செய்தி தரும் இந்த ஐடியா மணி பதிவிற்கு ஒரு ஜே சீ ஜெ அல்லது க அல்லது ...................

தனிமரம் said...

அதிரா இந்த மணிசார் எனக்கும் உள்குத்துப்போட்ட பன்னாடை சீச்சீ பொன்னாடை எழுதுப்பிழை விடுறன் என்று கிழித்த நேரம் நான் சென்னையில் அதைப்பதிவில் சொல்லுறன் ஆனாலும் விடமாட்டன் ஐராங்கனி என் தோழி' இவருக்கு விதானையார் மோள் மாதிரி!ஹிஹீ!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

வந்திட்டேன்! வந்திட்டேன்! இருங்கோ ஒவ்வொண்ணா படிக்கிறேன்

துரைடேனியல் said...

என்னது இது? புதுசா ஒரு தமிழ் நடை. ஒரு மாதிரி. ஆனாலும் உங்க கை பட்டா எழுத்துக்கும் ஒரு துள்ளல் நடை வந்துவிடுகிறது. என்னமோ பொன்னாடைங்கறீங்க. ஓ.கே. ஓ.கே. போர்த்துங்க. போர்த்துங்க.

துரைடேனியல் said...

என்னாச்சு? தமிழ்மணத்துல ஓட்டுப் போட முடியல்லயே. ஏன்? சீக்கிரம் சரி பண்ணுங்க சகோ.

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நான் நேர்த்தி செய்றன்.அது என்னண்டா காதில இன்னொரு ஒட்டை போட்டு தோடு போடுறன்.ஆனா நீங்கள்தான் வாங்கித் தரவேணும்.ஓகேயா !///////

தோடு வாங்கித் தாறது பற்றி பற்றி எனக்குப் பிரச்சனை இல்லை ஹேமா! நீங்கள் பவுணில கேட்கவில்லைத்தானே! ஒரு சோடி என்ன 10 சோடி வாங்கித் தாறன்! ஹி ஹி ஹி ஹி ப்ளாஸ்டிக்கில்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

தமிழ் உதயம் said...

பெயரில்லாம ஆரப்பா நீங்கள்.எதோ நான் எப்பவும் அழுகிற பதிவு எழுதுறன் எண்டு இப்பிடியாவது கொஞ்சம் சிரிக்கலாமெண்டு நானே எழுதப்போக சண்டைக்கு வாறீங்கள்.,/////

ஓ அப்படியா?

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. இன்று பார்த்து வீட்டில நிற்க முடியாமல் போச்சு:))....

ஹேமா... பொன்னாடையை நான் தைச்சுத் தாறன்:)) அந்த வேலையை என்னிடம் விடுங்க:)) எனக்கு காசும் வாணாம்:))..//////

ஹா ஹா ஹா அதுல என்ன இருக்கு தைக்கிறதுக்கு? நல்லா தைச்சுதானே வரும்? ஒருவேளை இது புதுவிதமான பொன்னாடையோ?

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

என் சங்கிலியை எடுத்ததும் இல்லாமல் அவருக்குப் பொன்னில ஆடை கேட்குதோ:)).. கொஞ்சம் நில்லுங்க வாறேன், நேற்றுத்தான் கண்டனான்... தேம்ஸ் பக்கத்தில இருக்கிற பத்தையில, அந்த சுணைக்கிற கொடி(பெயர் மறந்திட்டன்:)) நல்ல வடிவாப் படர்ந்திருக்கு:)).. அதையே உள்ளே வச்சுத் தச்சு... பெரியாஆஆஅ பொன்னாடை செய்திடுறேன்.. எங்கிட்டயேவா:))/////////

ஹி ஹி ஹி ஹி ஹி உதுக்கெல்லாம் நான் பயப்பிட மாட்டன்! பேர் அண்ட் லவ்லி, ஒலீவ் என்ணை, வஸ்லீன் கிரீம், தலைக்கு வைக்குற ஜெல், நல்லெண்ணை, தேங்காய் என்ணை, ஆமணக்கு எண்ணை எல்லாத்தையும் ஒண்டாய் மிக்ஸ் பண்ணி கைக்கால் எல்லாம் பூசிக்கொண்டு வருவேன்! சுணைக்காது! ஹி ஹி ஹி ஹி எப்புடீ ஐடியா?

ஆமினா said...

ஙே...?

ஆமினா said...

நா வரதுக்குள்ள இங்கே கச்சேரியை ஆரம்பிச்சாச்சா??

கோபமா கெளம்புறேன்

ஆமினா said...

@அதிரா
@ ஹேமா

இந்த மணியை சும்மா விடாதீங்கோ

பேஸ்புக் நாற்று குழுமத்துக்கு நொந்து நூடுல்ஸாகி அனுப்பிவிடுங்கோ! ரொம்ப ஓவரா என்னிடம் அங்கட வம்பிழுக்குறார்.

ஆமினா said...

http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html#

இந்த முறைப்படி உங்கள் ப்ளாக்கில் மாற்றம் கொண்டு வாங்க ஹேமா....

அதன் பின் எப்பிரச்சனையும் வராது

ஆமினா said...

Anonymous said...

இப்படி பதிவு எழுதச்சொல்லி ஜடியாமணிதான் ஜடியா சொன்னானா மானம் கெட்ட மணி//

ஹா...ஹா...ஹா...ஹா...

இதுக்கு ரூம் போட்டு சிரிக்க போறேன்...

ஹா...ஹா...ஹா...

@மணி
உங்க ப்ளாக்கில் தானே பட்டப்பேரு கேட்டீங்க.. இங்கே பார்ட் 2 ஆ??? அவ்வ்வ்வ்வ்

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அதுக்குள்ள என்ன அவசரம், இருந்து மெதுவா.... இந்த லெமன் ஜூசையும் குடிச்சிட்டுப் போகலாமே:)) பயப்பூடாதீங்க இதுவும் நான் தான் போட்ட ஜூஸ்ஸ், ஆயா போடேல்லை:))//////

ஸப்பா..... இப்பயாச்சும் ஏதாவது குடுக்கணும் எண்டு தோணிச்சுதே! கொண்டு வாங்கோ.... கொண்டு வாங்கோ!!! முட்டையப்பம் கேட்டு 4 நாள் ஆகப்போகுது, இன்னும் வந்த பாடில்லை! ஒரு வேளை முட்டை எல்லாத்தையும், அடைவு வைச்சிட்டீங்களோ? - அதாவது குஞ்சு பொரிக்குறதுக்கு அடகு வைச்சிட்டீங்களோ?

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அந்தக் கொடிக்குப் பேர் காஞ்சூண்டி.அதிலையோ பொன்னாடை.பாவமெல்லோ.கொஞ்சம் இரக்கம் காட்டுங்கோவன்.அவர் சொல்லுவார் தான் தான் சங்கிலி வச்சிருக்கிறன் எண்டு.ஆனால் டைன்ம் வேணும்.அதான் ! ///////

நல்ல இரக்கமுள்ள மனசப்பா உங்களுக்கு! இப்புடி அடிக்கடி ச்ஃப்போர்ட் பண்ணுங்கோ, தோட்டை தங்கத்திலேயே வாங்கித்தாறன்! :-)

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

நீங்கள் வர மணியத்தார் ஒளிச்சிட்டார்போல.ஆளுக்குப் பயம் கிடக்குத்தான் கொஞ்சம் !//////

என்னது பயமோ? எனக்கோ? சிச்சீ நான் தேம்ஸ்க்குல்ளால நீந்திப் போய் இருட்டுக்குல்ள பதுங்கிப் பதுக்கிப் போய், பிரித்தானிய போலீசுக்கே தெரியாமல்... பூஸாரின் கழுத்தில் கிடந்த சங்கிலியை..... சரி வேணாம்! விடுவம்!

ஹி ஹி ஹி மேல நான் சொன்னது விக்கிரமாதிதன் கதையில வாற ஒரு கட்டமே தவிர சொந்தக் கதை இல்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

ஆனா ஒரு கண்டிஷன் ஹேமா.. பொன்னாடை போர்த்தும்போது சங்கிலிப் புகழ்..ஐடியாமணி அவர்கள், அரைக்கை ரீ ஷேட்டும், சோட்சும் மட்டும்தான் போட்டிருக்கவேணும் சொல்லிட்டேன்:))./////

ஹா ஹா ஹா அதான் சொன்ன்னே சுணைக்காத எண்ணை புசிக்கொண்டு வருவன் எண்டு....!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

ஹாக்க்க்க்க்ஹாக்க்க்ஹாஆஆஆஆஆஅ இனிமேல் ஒரு பின்னூட்டம்கூடப் போடமுடியாமல் “சொறியத்தான்” நேரம் சரியா இருக்கும்:)))... அவ்வ்வ்வ்வ் எங்கிட்டயேவா? என் சங்கிலி கைக்குக் கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:))////

என்னதான் கடிச்சாலும் சொறிஞ்சாலும் சம்பளத்துக்கு ஆள் வைச்செண்டாலும் பின்னூட்டம் போடுவேன்!

ஹா ஹா ஹா என்னட்டத்தானே சம்பளம் கொடுக்குறதுக்கு ஒரு சொத்து இருக்கு! அதை அடைவு வைச்சாவது கொடுப்பேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்! ( ஒரு பவுண் 150 யூரோவுக்கு வைக்கலாம் ஆகவே 750 யூரோ தேறும்! )

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

பயங்கர பிசி...! கொஞ்ச நேரத்தால வாறன்!

தனிமரம் said...

இந்த விழாவுக்கு உண்டியம் குழுக்க நான் தயாரா இருக்கின்றேன் நிதி வசூல் பண்ணிணாத்தானே நண்பர்/அண்பர்/சகபதிவாளர் /மூத்தவர் /அல்லக்கையின் நண்பர்/மதவாதிகளின் லொல்லர் /இன்னும் இன்னும் /முக்கியமாக எரிக்சொல்கையின் தோழர் என பண்முகப் பார்வை கொண்ட வருக்கு பட்டுப்போர்த்த தங்கப் பொன்னாடை போர்கலாம்.

தனிமரம் said...

இலக்கிய சிற்பிக்கு பொன்னாடையும் பொற்கிழியும் தான் வழங்குவோம் இடையில் என்வலப்பில் காசு வைக்கும் நடைமுறை என்பது(கலியாணவீட்டிலும்/சாமத்தியவீட்டிலும் /பிறந்தநாள் வீட்டிலும்/) அன்பளிப்பு கொடுப்பது போல நடைமுறையில் புதிய நடைமுறையைக்கொண்டு வந்தால் நான் எல்லாம் ஒத்துக்கொள்(ல்) மாட்டன்  நான் எல்லாம் பழைய பஞ்சாங்கம்.

தனிமரம் said...

இன்று உப்புமடச்சந்திக்கு உப்பும் செத்தல் மிளகாயும் கடுகும் சேர்த்து சுற்றிப்போடனும் ஆமினா வேற வந்திருக்கிறா ஹேமா! இவங்களுக்கு ஹேமா ஒரு பதிவாளினி என்று இன்று தான் தெரியும்போல (கோர்த்துவிட ஒராள் வந்தாச்சு ஹீ ஹீ தனிமரம் அவக்கு தெரியாது இல்ல)

தனிமரம் said...

பொன்னாடை போர்த்துக்கெளரவிக்கும் நிகழ்வுக்கு வந்திருக்கும் அன்பர்களே/சபையோரே/எல்லாருக்கும் பாரிஸின் பதிவாளர்களில் ஒருவராக வணக்கம் வைக்கின்றேன் முதலில் இந்தமணிசாருடன்  தனிமரம்/நேசன் எப்போதும் சண்டை போடுவம் இது இலக்கிய உலகில் புலவர்களின் தமிழ் போல ஆனாலும் நாங்க அன்புள்ளம் கொண்டவர்கள் அவர் மீது பொறாமை கொண்டவர் இல்லை அதனால் அவருக்கு போர்க்கும் பொன்னாடையில் ஒரு காவிக்கழரில் தங்கமுலாம் பூசி  தங்கப் பொன்னாடை போர்க்கும் விழாக் குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்(பேசிக்கொண்டே இருக்கும் போது யாரப்பா மைக்க புடுங்குவது நிரூபனா??)

தனிமரம் said...

ஹா ஹா ஹா என்னட்டத்தானே சம்பளம் கொடுக்குறதுக்கு ஒரு சொத்து இருக்கு! அதை அடைவு வைச்சாவது கொடுப்பேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்! ( ஒரு பவுண் 150 யூரோவுக்கு வைக்கலாம் ஆகவே 750 யூரோ தேறும்! )//யோ என்னிடம் தாய்யா இன்று பவுன் விலை 354 ஈரோ ஒரு பவுன் நீ பின்னூட்டம் போடுவது போல நான்  போட்டால்  (1020) ஒரு மாத சம்பளம் கோப்பை கழுவினாலும் கிடைக்காது இன்றே அல்லக்கையா வாரன் மணசார் காசு வேண்டாம் பவுன்சங்கிலி வேனும் ஊருக்குள் மைனர் வேசம் போடலாம். ஹீ ஹீ

காட்டான் said...

Blogger ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அச்சச்சோ...... மானம் போய்ச்சே.....! இருந்தாலும் பொன்னாடை போர்த்திட்டாங்க! மணி கெளம்புடா.....!//

மணி இதென்ன புதுக்கதை? உன்னிடம் இருந்து ஒண்ணுமே போகாது. இருப்பவர்களிடம் இருந்துதானே போகுமய்யா.!! )

athira said...

//மணி இதென்ன புதுக்கதை? உன்னிடம் இருந்து ஒண்ணுமே போகாது. இருப்பவர்களிடம் இருந்துதானே போகுமய்யா.!! )///

ஹா..ஹா..ஹா.. காட்டான் அண்ணன், புராதன ஆடையில இருந்தாலும், கிட்னி மட்டும் லேட்டஸ்ஸாவே வேர்க் பண்ணுது:))))...

கேட்டீங்கள் ஒரு கேள்வி.. இதுக்கு உங்களுக்கு 5 பவுணில ஒரு சங்கிலி போடலாம்:)).

சங்கிலியை எடுத்ததுமில்லாமல்:), அதை அங்கின இங்கின வாய் மாறிச் சொல்வதுமில்லாமல்:)... கொஞ்சமாவது கூச்சப் படுறாரோ பாருங்கோ(இது வேற கூச்சம்:).. கூலிங் கிளாசும் அடிச்சுக்கொண்டு... வெளிநாடுக்காரர்:) மாதிரி எல்லே திரிகிறார்:))..

உஸ்ஸ்ஸ்ஸ்.. வழி விடுங்கோ வழி விடுங்கோ.. நான் கெதியாப் போகவேணும் எனக்கு வேலை இருக்கூஊஊஊஊ:)))

athira said...

// தனிமரம் said...
/// அதனால் அவருக்கு போர்க்கும் பொன்னாடையில் ஒரு காவிக்கழரில் தங்கமுலாம் பூசி தங்கப் பொன்னாடை போர்க்கும் விழாக் குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்(பேசிக்கொண்டே இருக்கும் போது யாரப்பா மைக்க புடுங்குவது நிரூபனா??)////

இல்லையில்லை... அது ஹேமாவின் பக்கத்தில இருக்கும் உந்த மங்கிப்பிள்ளை:))..

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பின்ன... நானே சங்கிலி களவுபோனதை நினைச்சு நொந்து.. இடியப்பமாகிப்போயிருக்கிறன்:))..

சங்கிலியின் முடிவென்ன என, அதட்டிக் கேளாமல், அவருக்கு பொன்னாடைக்கு.. தங்க முலாம் பூசப்போறாராம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

அது பொறுக்க முடியாமல் மங்கியார் பொயிங்கிப் பொயிங்கி எழும்புறார்:)))

தனிமரம் said...

அதிரா/ஆமினா வந்த பிறகு என்னால் இங்கு கும்ம முடியாது நாளை வாரன் மிச்சத்துக்கு

அம்பலத்தார் said...

என்ன இது ஹேமா வீட்டில இப்படி ஒரு மாபெரும் கும்மியும், கச்சேரியும் நடந்திருக்கு நான் என்ரை பெட்டிக்கடையில ஈயோட்டிட்டு இருந்ததில கவனிக்காமல் விட்டிட்டனே

தனிமரம் said...

இந்த குரங்கு பேசாதே அதிரா 5 பவுன் சங்கிலி தந்தா நாளைக்கு கயூனா பீச்சில் குளீப்பன்

தனிமரம் said...

வாங்கோ அம்பலத்தார் இன்றூ முருகனுக்கு பால் காவடி ஹீ தனிமரம் பால்/மோர் ஊத்து வந்துள்ளது எப்படி சுகம் ஒரு கை கொடுங்க காட்ச் விளையாடி கனகாலம் கம்மாஸ் எனக்குத்தான்

ஹேமா said...

வந்திட்டேன் வந்திட்டேன்.யாரப்பா சத்தம்போடாம இருக்கிறது.இப்ப கண்டு பிடிச்சிட்டன் 5 பவுண் எங்க இருக்கெண்டு.பொன்னாடை போத்த வெளிக்கிட்டு வேறயெல்லாம் வெளில வருது !

தனிமரம் said...

வாங்கோ ஹேமா முதலில் ஒரு பால்கோப்பி குடிதுவிட்டு வாங்கோ0000

தனிமரம் said...

அம்பலத்தார் /காட்டான் ஒழிஞ்சு நிற்கினம் என நினைக்கின்றேண்.

ஹேமா said...

ஹய்யா....நேசன் எனக்குச் சீலை வாங்கித் தாறனெண்டு சொல்லியிருக்கிறார்.மணியத்தார் தோடு அதுவும் பவுணில வாங்கித் தாறனெண்டிருக்கிறார்.அடிக்கடி யாருக்காச்சும் பொன்னாடை போத்தலாமோ எண்டு ஒரு யோசனை வருது !

ஹேமா said...

காட்டான் மாமாவும் அம்பலம் ஐயா யோகா அப்பா நிரூ எல்லாரும் கூட்டுக் கள்ளரெல்லோ.ஒளிஞ்சுதான் இருப்பினம்.பாருங்கோ அதிராட்ட இவையளின்ர குடும்பி ஆப்பிடும்.பாவம் காட்டான் மாமா ஸ்டைலா சின்ன உடுப்புத்தான் போட்டிருக்கிறார்.அதுவும் போச்செண்டா.....!

தனிமரம் said...

பூனைக்குட்டியார் ஓடிவிட்டார் பயத்தில் கோப்பாய் சுருட்டு ருசி தெரியாமல் ராகுலா சிங்கன் விடமாட்டான்.

ஹேமா said...

என்ர மங்கியார் எல்லாரும் நல்லவை.அவைக்கே கோவம் வாற அளவுக்கு பூனையார் சங்கிலி சங்கிலி எண்டு சத்தம் போட்டிருக்கிறார்போல.என்க்கெண்டா மணியத்தார் எடுத்திருப்பார் மாதிரியும் இல்லைமாதிரியும் இருக்கு.ஆனால் அதிரா அவரைப் போட்டு பொன்னாடைகூட போத்தவிடாம மிரட்டிக்கொண்டிருக்கு.ஆமினாவும் சேர்ந்துகொண்டு....!

தனிமரம் said...

இவன் மணீ கல்லுவத்தை சீலை என்றூ ஏம்ப்யார் சேலையைத்த்து ஏமாத்துவான் பன்னாடை விதானையார் மோள் ஏமாத்தின் மாதிரி ஐராங்க்னி மோதிர்த்துடன் போனால் விதானையார் மோள் போன தை என் வாயால் சொல்ல மாட்டன் ஆபாஸ்ச.. ம்

ஹேமா said...

நேசன்....நீங்கள் சொல்றதைப் பாத்தால் இன்னும் கனபேரின்ர பேரைப் பதிவில சேர்த்திருக்கலாம்போல இருக்கு.ச்ச.....முதலேயே சொல்லியிருக்கலாமே.துஷியும் மணியத்தார் ப்ரான்ஸ்ல பின்னுக்குச் சுத்தின பிகருகளின்ர பேர் தாறன் எண்டு சொல்லிப்போட்டுத் தரேல்ல !

தனிமரம் said...

நண்பர்களே கோப்பாய் புகையிலை /நாதஸ்வ்ர்ம் எப்படி என்றூ தெரியா வேண்டுமா படியுங்கோ மலையகத்தில் முகம் தொலைந்தவன் தொடர் இது மனிக்குரல் விளம்பர நேரம் 10.31 இரவின் மடியில்

தனிமரம் said...

இந்த அம்பலத்தார் எனக்கு பெல்வில் பகுதியை காட்டடிய ஆசான் சமருக்கு வரும்போது செல்லம்மா மாமியிடம் போட்டுக் குடுப்ப்ன் என் வீட்டுக்கு வராமல் போனால் இந்த காட்டானிடம் அவர் மச்சான் என்றூ ஓடுவது எனக்கு பிடிக்காது. நாங்க் அம்பஜாலுவோ .

தனிமரம் said...

ரத்ததின் ரத்தங்களே உங்களூடன் தொடந்து இணைய முடியவில்லை கடமை அழைக்கிறது. இனிய ஓய்வு கண்களூக்கு நல்ல இசை காதோரம் தழுவட்டும் விடியும் பொழுது அனைவருக்கும் ந்ல்ல் பொழுதாக் அமைய சேவிக்கின்றேன்

ஹேமா said...

நன்றி நேசன்.இனிமையான இரவுப்பொழுதாக அமையட்டும் உங்களுக்கு.சந்திப்போம் !

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//வாங்கோ அம்பலத்தார் இன்று முருகனுக்கு பால் காவடி ஹீ தனிமரம் பால்/மோர் ஊத்து வந்துள்ளது எப்படி சுகம் ஒரு கை கொடுங்க காட்ச் விளையாடி கனகாலம் கம்மாஸ் எனக்குத்தான்//
என்ரை பெட்டிக்கடைலதான் மணி சங்கிலியை அடவு வச்சதென்று ஒரு புரளி கிளம்பி நான் பயத்திலை வெலவெலத்துப்போய் இருக்கிறன். நான் இந்த வழக்கிலை இருந்துதப்பவேணும் என்றதுக்காகவும் சேர்த்து முருகனுக்கு வேண்டுங்கோ நேசன்.

அம்பலத்தார் said...

தனிமரம் சைட்...

//அம்பலத்தார் /காட்டான் ஒழிஞ்சு நிற்கினம் என நினைக்கின்றேண்.//
சங்கிலி திருட்டில கூட இருந்த ஹேமா பிறகு பங்கு பிரிக்கிறதிலை கூடக்கேட்டு சண்டைபிடிச்சுகொண்டு அப்புரூவராக மாறி அதிராவுக்காக சாட்சி சொல்லுது. என்ரை பேரையும் சொன்னதாலை நான் ஒரு நல்ல வெள்ளைக்கார குட்டியோட - குட்டி என்ற உடனை செல்லம்மாவிட்டை போட்டு குடுத்திடாதையுங்கோ. நான் நல்லவடிவான ஒரு இளம்பெட்டையைத்தான் வச்சிருக்கிறன்......
வக்கீலா ஏனென்றால் அவள் எனக்காக வாதாடினாளோ இல்லையோ அவளின்ரை கவர்ச்சியை பார்த்து எங்கட ஜடஜ் ஐயா கவுந்திடுவார். நானும் மணியும் மச்சானும் ஹேமாவோட அப்பாவும் தப்பிவிடுவம். கோர்ட்டுக்கு வந்து ஜாமீன் எடுக்கிறவரை ஐயா பதுங்கத்தானே வேணும்.

அம்பலத்தார் said...

மணி ஒண்டுக்கும் பயப்படாதையடா தம்பி நான் வெள்ளைக்காரியோட கோர்ட்டு தவணைக்கு வாறன். அவளை வச்சு உந்த ஜுஜிபி கேசை வென்றிடலாம். அதுவரை கண்டபடி உளறி பிடி கொடுத்திடாமல் ஜாக்கிரதையாக இருந்தால் சரி.

அம்பலத்தார் said...

மணி இப்பவே சொல்லிப்போட்டன் ஹேமா போர்த்துற பொன்னாடையை வச்சுக்கொண்டு தாற பணமுடிப்பை என்னிடம் தந்திடவேணும் அதை வச்சுத்தான் வக்கீலை சமாளிக்கவேணும்

அம்பலத்தார் said...

ஹேமா said...
//காட்டான் மாமாவும் அம்பலம் ஐயா யோகா அப்பா நிரூ எல்லாரும் கூட்டுக் கள்ளரெல்லோ.ஒளிஞ்சுதான்....//
ஹேமா உங்களுக்கு நான் பதில் சொல்லமாட்டன் என்ரை வக்கீல் குட்டி வருவா அவவோடை கதைச்சுக்கொள்ளுங்கோ.
Hallo Jeny come soon. I need your help.

Yoga.S.FR said...

வணக்கம் ஹேமா!ஒளிச்சு நிண்டு பாத்தன்,என்ன நடக்குதெண்டு!அமளியாத்தான் போகுது!பத்தாததுக்கு,நான் ஏன் வயது போன நேரத்தில"வெண்கலக் கடையில பூந்த யான" போல எண்டு யோசிச்சுப் போட்டு விட்டிட்டன்!சங்கிலிக்கும்(பூசாற்ற)எனக்கும் சம்பந்தமில்ல!அந்தப்பெட்டை வேற அடிக்கடி தேம்சுக்கை குதிக்கிறன்,குதிக்கிறன் எண்டு..................!இப்புடி அடிக்கடி சொல்லப்பிடாதெண்டு அவவுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோ!ஏதோ வருகுது,வருகுது எண்டு சும்மா சொல்லிச் சொல்லி ஆக்களை ஏமாத்தப் போய்,கடைசியா வரைக்குள்ள காப்பாத்த ஆளில்லாம போனமாதிரி ஆகீடும்!என்னை வம்புக்கிழுத்த அத்தன பேருக்கும் தாங்க்ஸ்,ஹி!ஹி!ஹி!!!!!!!!!

ஜெய்லானி said...

'குரு’ படத்துல வர கமல் மாதிரி அந்த 5 பவுன் மாலையை சுட்டுட வேண்டியதுதான் :-)).இதை தேடியே வயசாகுது அவ்வ்வ்வ் :-))

ஹேமா said...

அம்பலம் ஐயா....மணியைக் காப்பாத்துறதோ அதிராவைக் காப்பாத்துறதோ எண்டு தெரியா நித்திரைகூட வருதில்லை.நீங்க என்ண்டாவெண்டா ....குட்டியோ பொறுங்கோ பொறுங்கோ செல்லம்மா மாமின்ர போன் நம்பர் உங்கட கூட்டுக்கள்ளர் தராமயோ போவினம் !

ஹேமா said...

யோகா அப்பா...காட்டான் மாமாதான் நீங்களுமெண்டு சொன்னவர்.வரட்டும் கேட்டுக்கொள்றன்.அதிராவைப் பற்றிக் கவலையே வேண்டாம்.லண்டன் எப்பிடிக் கட்டியவுக்குது இவவை எண்டு நான் வியந்துபோயிருக்கிறன்.தீக்குளிக்கிறாவாம்.ஆனா ஃபயர் எஞ்சினுக்குப் போன் பண்ணிட்டு.எனக்குப் பயம் என்னெண்டா மணி கட்டாயம் உளறி வைக்கப்போறார்.அவரைத்தான் தேம்ஸ்க்குள்ள தள்ளப்போறா.அவரைக் காப்பாத்துங்கோ பொய்ச் சாட்சி சொல்லியாச்சும் !

ஹேமா said...

ஜெய்...நானும் இருக்கிறது தெரிஞ்சிருக்காக்கும்.சரி சரி !

ஹேமா said...

கணேஸ்....தமிழ் இந்தக் ஜோதியோடு கலந்துகொண்டதுக்கு நன்றி !

தனிமரம் said...

//வாங்கோ அம்பலத்தார் இன்று முருகனுக்கு பால் காவடி ஹீ தனிமரம் பால்/மோர் ஊத்து வந்துள்ளது எப்படி சுகம் ஒரு கை கொடுங்க காட்ச் விளையாடி கனகாலம் கம்மாஸ் எனக்குத்தான்//
என்ரை பெட்டிக்கடைலதான் மணி சங்கிலியை அடவு வச்சதென்று ஒரு புரளி கிளம்பி நான் பயத்திலை வெலவெலத்துப்போய் இருக்கிறன். நான் இந்த வழக்கிலை இருந்துதப்பவேணும் என்றதுக்காகவும் சேர்த்து முருகனுக்கு வேண்டுங்கோ நேசன்.

// அம்பலத்தார் வெலவெலப்பில் நான் ஐராங்கனிக்கு ஐஸ்வாங்கிக் கொடுக்க காசு இல்லாமல் அடைவு வைத்த 5பவுண் சங்கிலியை மறக்கக்கூடாது விரைவில் டுபாயில் இருந்து வருவளுக்கு முன் மைனராக போய் நிற்கனும். ஹீ ஹீ

ஹேமா said...

பாருடா...பகிடிக் கதையை.அதிரா மணியப் போட்டுப் பிச்சுப் பிடுங்க சங்கிலி ஆர் ஆருக்காக ஆரிட்ட அடைவு வச்சிருக்கினமெண்டு.அதிரா பாத்தால் துலைஞ்சீங்கள் நேசன் !

KANA VARO said...

அக்காச்சி, நீங்க மாறி மாறி ரெண்டு ப்ளாக்லையும் கலக்கினா நான் எங்க போறது. கொஞ்சம் சொல்லிப்புட்டு செஞ்சிருக்க கூடாதா?

ஸ்ரீராம். said...

அட, இதென்ன கலாட்டா....!

:)))))

அமைதிச்சாரல் said...

செம கலாட்டா.. அருமையாய் நகைச்சுவை வருது உங்களுக்கு :-))

தியாவின் பேனா said...

அருமை..

mst rupa said...

Your Site Very Helpfully Information Site .
Like This
Thanks for Information
Thanks,Thanks,Thanks


»------------1.» 2014 koyell mollik New Sex video Collections

»------------1.» 2014 New xnxx Collections

»------------1.» 2014 New xnxx movie Collections

»------------1.» 2014 New indian Sex Collections

»------------1.» 2014 New tamil Sex Collections

»------------1.» 2013 New bangla Sex Collections

»------------1.» 2014 Newkristina akheeva Sex Collections

»------------1.» 2014 New katrina kaif Sex Collections

»------------1.» 2014 New GAY UA Sex Collections

»------------1.» 2014 New PORN TUB Sex Collections


»------------1.» 2014 New Gay Sex Collections

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP