Tuesday, March 27, 2012

ஒரு காதல் கதை.

பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க,காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அதிகாலை உங்கள் முற்றத்தில் நின்று பாருங்கள்.

மீசையிலும் தாடியிலும்தான் பிரச்சனை முற்றிப் பிரிந்தோம் என்றால் நம்புவீர்களா.சும்மா ஒரு கதைக்குத்தான் ரவியின் மீசையும் தாடியும்।

ரவி என் வாழ்வின் ஒரு பகுதி.அவன் என் வசந்தகாலம். என் கிளையிலிருந்து உதிர்ந்தாலும் வேரோடு ஒட்டிக்கொண்டவன்.ஆனால் எனக்குள் காலமானவன்.அவன் ஒருகாலம்.நேற்றும் இன்றும் இப்போதும் நாளையும் நாற்பது வருடத்தின் பின்னும் என்னவன் அவன்.அவன் தள்ளினானா நானே தள்ளிப்போனேனா.இன்னும் புரியவில்லை.ஆனால் அவன் என்னவன் என்பதே எனக்கு ஆறுதலான ஒரு விஷயம்.

அந்தக் குளிர்ந்த இரவில் மர அட்டைகளோடு இழுத்துப் பறித்து இரத்ததானம் செய்துகொண்டிருந்தபோதே அவனைச் சந்தித்தேன்.

"நான் இண்டைக்குத்தான் இந்தப்பகுதிக்கு வந்திருக்கிறன்.உங்களை இப்பத்தான் பாக்க்கிறன்.உங்கட பெயரோ....தமிழ்.சொன்னவை.ஆனால் ஆர் எண்டு எனக்குத் தெரியேல்ல.அவையள் சொன்ன ஒரு குறிப்பை வச்சுத்தான் சொல்றன்.இனிக் கொஞ்ச நாளைக்கு என்னை இங்கதான் இருக்கச் சொல்லியிருக்கினம்.அநேகமா உங்கட குறூப்பில உங்களோடதான் இருப்பன் எண்டு நினக்கிறன்."

என்றே என்னுடன் பேசத் தொடங்கியிருந்தான் ரவி.பின்னொருநாள் சொல்லியிருந்தான்."அழகான ஆம்பிளை பாரதி"யென்று நினைத்து ரசித்தபடிதானாம் என்னுடன் பேசத்தொடங்கியதாக.

அவன் அறிவு,ஆணழகு எதையுமே அலட்டிக்கொள்ளவில்லை அப்போ.தெய்வீகம் அது இது எதிலும் நம்பி அலட்டிக்கொள்ளாத நேரமது.பொறுப்புகள் என் தலையில் நிறையவே இருந்தது.ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.அந்தந்தக் காலத்தில் துணையைத் தேடுவது பற்றியும் மனசுக்கு ஒத்துவந்தால் கல்யாணம் வரைக்கும் போகலாம்.இடையில் அலட்டல் இல்லாமல் ஆனால் ஒரு நல்ல நண்பர்களாக இருக்கிறதைப் பற்றி மட்டுமே யோசிச்சால் நல்லது.

கூடிய நேரங்களில் என் சந்தேகங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் ரவிதான் பக்கதுணையாய் இருந்தான்.சில நேரங்களில் வேணுமென்றே காணாமல் கொஞ்சம் தளருமளவிற்குத் தவிக்கவிட்ட நேரத்தில் அவன் கண்களில் காதலைப் பார்த்தேன்.ஒருநாளைக்கு அவராய்ச் சொல்லட்டும்.

"பூக்கள் மரங்களில் இருப்பதும் அழகுதான் என்பேன்.....ஏன் இருந்தாப்போல சொல்றீங்கள்"என்பான் குறுகுறு கண்களை அகல விரித்தபடி.

ரவி உங்களோட கதைக்கவேணும்...

ஏன் என்ன விஷயம்.ஏதாலும் செய்தி வந்திருக்கோ.இல்லாட்டி வீட்லயிருந்து கடிதம் வந்திருக்கோ.ஆவலாய்....

நானும் ஒண்டு சொல்லவெண்டுதான் இருக்கிறன்.சரி சரி நீங்களே சொல்லுங்கோ முதல்ல.

இது ஒரு அந்தரங்கம்.பெரிய விஷயம்.பிறகு கதைப்பம்.....

பிறகெண்டால்.....!

பிறகுதான் இரவு சாப்பிட்டு நியூஸ் கேட்டபிறகு...மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைக்கவேணும்.அதுக்கும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

தமிழ்...என்ன விஷயம்.இப்ப சொல்லுங்கோவன்.சொல்லாட்டி எனக்கு நித்திரையும் வராதப்பா.

என் வாயிலிருந்து கிளறி எடுக்க ஆசைப்படுகிறான்.ஆனால் அவனே யாருக்காவோ சொன்னதுதான்."சும்மா...தங்கட அன்பை காதலைச் சும்மா சிநேகிதம் என்கிற பெயரால மறைக்கினம்.நாங்கள் அப்பிடியில்லைத்தானே தமிழ்" என்று சிரித்தபடி என் கண்ணை ஆழப்பார்த்தவன்.

வாங்கோ....அந்தக் கல்லடியில இருப்பம்.சாப்பிட்டீங்கள்தானே....என்றபடி எனக்கும் இடம்விட்டு கல்லில் அமர்ந்தாள்.நேரே என் முகம் பார்த்தாள்.நான் தான் கொஞ்சம் திரும்பிக்கொண்டேன்.நிலவை மறைத்துக்கொண்டிருந்து இரட்டைப்பனைபோல இறப்பர் மரம்.ஆனாலும் அவள் முகத்தில் சந்தோஷ வெளிச்சம் காட்டியது நிலவொளி.

"ரவி...நீங்கள் சொன்ன அதே விஷயம்தான்.தள்ளிப்போட எனக்கு விருப்பமில்லை.நட்புக்குள் காதல் ஒளியவேண்டாம்.இரண்டுமே வேணும் எங்களுக்கு.இப்போதைக்கு வெளில சொல்லவேண்டாம்.எங்களுக்குள்ளேயே இருக்கட்டும்.எனக்கு உங்களை நிறையப் பிடிச்சிருக்கு ரவி.உங்களிட்ட சொல்லிவிடவேணுமெண்டு நினைச்சன்.“டக்”கெண்டு சொல்லிப்போட்டன்.நீங்கள் நடுவில ஏதும் சொல்லாதேங்கோ.நான் சொல்லி முடிக்கிறன்.எனக்கு உங்களில நிறைய விருப்பம்.நான் பெரிசா யாரோடயும் பழகிறதில்ல.அப்பிடியே ஒன்றிரண்டு சிநேகிதம்.அதுவேற இது வேற.உங்கட குணம் நடவடிக்கை என் தாத்தாவை ஞாபகப்படுத்து அடிக்கடி.என்னோட ரவி நீங்க என்கிறதில பெருத்த சந்தோஷம் எனக்கு.நிறையக் கற்பனைகள் சேர்த்திட்டன்.உங்கட ஒவ்வொரு அசைவையும் அறிஞ்சு வச்சிருக்கிறன்.நீங்கள் என்னோட இருந்தால் நான் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாயிருப்பன்.இரண்டு பேரின் இலட்சியங்களும் கலையாது.இதில உங்கட விருப்பமும் இருக்கு.இருக்கும் என்கிற நம்பிக்கையும் எனக்கிருக்கு.என்னைப் பிடிக்காமலும் போகலாம்.ஆறுதலா யோசிச்சுச் சொல்லுங்கோ.ஆனால் சாகிற வரைக்கும் எங்கட நட்பு இப்பிடியே இருக்கவேணும்."முகத்தை அழுத்தமாக அவனுள் புதைத்தபடி சொன்னாள்.நித்திரை இல்லாம ஆக்கினதுக்கும் மன்னிச்சுக்கொள்ளுங்கோ என்றாள் சிரித்தபடியே.

சீ...சீ...இதென்ன தமிழ்.உள்ளுக்குள்ளேயே வளரவிடாமல் மனம் விட்டுச் சொன்னது நல்லதாப்போச்சு.நாங்கள் பழகத் தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதகாலமாகியும் சில விஷயங்களை நான் சொல்லாமல் இருந்தது என் பிழைதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.ஆசைகளை நான் வளர்த்துவிட்டிருக்கிறன்போல.எனக்கு என்ன சொல்றதென்றே தெரியேல்ல.எனக்கு ஏற்கனவே என் மச்சாளைப் கல்யாணம் பேசி வச்சிருக்கினம்.அவளும் காத்திருக்கிறாள்.

தமிழின் கண்ணீர் நிலவில் தெறித்தது.துடைத்துவிடத் துடித்தாலும் உரிமையற்று நின்றிருந்தான் ரவி.

சமாளித்த தமிழ்..."திடீரென்று ஒருமாதிரியாயிட்டன் ரவி.இதில ஏதுமில்ல.கேட்டன் என் விருப்பத்தை.நீங்க சொன்னதில ஒரு பிழையுமில்லை.சரி நான் வாறன்.நாளைக்கு சந்திப்பம்" என்று சொல்லிக்கொண்டே போய்விட்டாள் தமிழ்.நிலவு மழைமேகத்தால் இருட்டடிக்கப்படிருந்தது அப்போ.

அடுத்த நாள் எப்பவும்போல ஒழுங்காகவே இருந்தது.

"நல்லா நித்திரை கொண்டீங்களோ...என்றபடி.நானும் நல்லா நித்திரை கொண்டேன்..."நடு இரவுபோல என்னை எறும்பு கடிச்சிட்டுது"... என்று சிரித்தாள்.மெல்லிய திரை விலகி மனங்கள் சுத்தமானதாக உணர்ந்தேன்."இன்று நாங்கள்தானே சமையல் என்றாள்.மரக்கறிகள் வாங்கவேணும்.சந்தைக்குப் போய்ட்டு வருவம்"...என்றாள் எதுவுமே நடக்காததுபோல.

இப்போவெல்லாம் உங்கட மச்சாள் எப்பிடி என்று கிண்டலடிக்கிறவரை இன்னும் நட்போடு நெருக்கமானோம்.சின்னவிரல் காட்டி ஒல்லியென்பான் ரவி.அப்ப கனக்கச் சாப்பிடச் சொல்லுங்கோ.குழந்தை பிறக்கேக்க கஸ்டம்.உடம்பில தென்பு வேணுமெல்லோ என்று நக்கலடிப்பள் தமிழ்.

போட்டோ வச்சிருக்கிறீங்களே என்பாள் ஆவல் ததும்ப.ஒரு நாளைக்குக் காட்றன் என்பான் ரவி.அதோடு சேர்த்து "உங்களுக்கும் ஒரு மாப்பிள்ளை நான் பாத்துத் தரவோ என்பான்.எனக்குத் தெரிய ஒன்றிரண்டுபேருக்கு உங்களில நல்ல விருப்பம் இருக்கு."...மௌனமாய் சிரித்து அடுத்த கதைக்குத் தாவிவிடுவாள் தமிழ்.

அநேகமான பொழுதுகள் ரவியின் அருகாமையோடே கழிந்தது.பிடித்தும் இருந்தது தமிழுக்கு.உயிருக்குள் ஆழப் புதைந்திருந்தான் அவன்.என் ரவி....என் ரவி...என்கிற ஒரு மந்திரம் சாகும்வரை இருக்கும்போல மன அறைக்குள் அழுத்தி எழுதப்பட்டிருந்தது.அதை எவராலும் அழிக்கமுடியாது.கல்யாணத்துக்கு மட்டும்தான் ரவி வேணும்.காதலிக்க அவன் நினைவுகளும் அருகாமையும் அன்பும் போதுமாயிருந்தது தமிழுக்கு.

சில அத்தியாவசியத் தேவைகள் நேரங்கள் எல்லாமே அவன் துணையாக இருந்தான்.

றோட்டில் நடக்கும்போது மதில் எட்டிப் பூப்பறிக்கவும் ஐஸ்கிறீமுக்குமான செல்ல அடத்துக்கெல்லாம் தாயாய் தாங்கினான் ரவி.

ரவி..."கால் உளையுது தூக்கிக்கொண்டு போங்கோ"...என்பாள்.நான் தூக்கிக்கொண்டு போவன்.நீங்கள் சரியென்றால் என்பான்.ஓம்...தூக்குங்கோ....சரியென்று வேணுமென்றே கிட்டப் போவாள் தமிழ்.

"இவ்வளவு குண்டா இருந்தா நானெல்லோ முறிஞ்சுபோவன்..." என்பான்.அதுக்கும்..."ஓ....உங்களுக்கு ஒல்லி ஆட்களைத்தான் பிடிக்குமென்று..." தன்னையறியாமல் சொல்லிவிட முகம் மாறி மௌனமாகிவிடுவான்.பிறகு எதையோ சொல்லிச் சிரிக்கப்பண்ணி மனதுக்குள் அழுதும் விடுவாள்.

எல்லாம்....எல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறது.அசரீரியாய் ரவியின் குரல் மனதின் மெல்லிய இழைகள்மீது தொடர்ந்த அதிர்வோடு.ஒற்றைக் குடைக்குள் எத்தனை நாட்கள் தெருப்பள்ளத்துள் தேங்கிய மழைநீராய் நினைவுகள்.என் மாதவிலக்கின் நேரம்கூட அவன் காய்ச்சும் கசாயம் மருந்தாய் கசத்தாலும் இனிக்க இனிக்கத் தருவான்.என் வயிற்றுவலியில் பங்கு கேட்பான்.மனதில் பதிந்து காதலனாவன் நட்பென்று தள்ளி நின்றவன்.

காலப்போக்கில் தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தான் ரவி.எனக்கு அழகான மீசை பிடிக்கும்.ஏனோ தாடி பிடிக்காது.மீசைக்குழந்தை என்று நக்கலும் அடிப்பேன்.மீசை வெட்டினா கோவம் வரும்.சொல்லாமல் ரசித்திருக்கிறேன் எத்தனையோ நாட்கள்.மீசை இல்லாவிட்டல் ரவி அழகற்றதுபோலவும் கம்பீரம் குறைந்ததுபோலவும் இருக்கும் எனக்கு.எங்கையப்பா உங்கட மீசைக்குழந்தை என்பேன்.புரிந்துகொள்வான்.

"என்ன இது கோலம்.தாடியும் ஆளுமா.ஏன் ஷேவ் பண்ண நேரமில்லையே.முகத்துக்குள்ள இப்பிடி வேர்த்துக்கிடக்கு என்றேன்".

"இல்ல...கனகாலம் தாடி வளர்த்துப் பார்க்க விருப்பம்.அதுதான்.."என்று இழுத்தான் ரவி.

"வேண்டாம் வேண்டாம் வெட்டிவிடுங்கோ.சிங்கம் அசிங்கமா இருக்கிறார் தாடிக்குள்ள..." தாடிக்காக ஒருபெரிய அலசலே நடந்தது.

"சீ...சீ அரிகண்டம்.(அருவருப்பு) பூச்சாண்டி மாதிரி இருக்கிறீங்கள்.நான் பக்கத்தில படுக்கிறதாயிருந்தால் இரவோட இரவா கத்திரிக்கோல் எடுத்து வெட்டிவிட்டிருவன் என்பாள்."

அடுத்து ஏதோ மெலிதாய் முணுமுணுப்பது மட்டும் கேட்கும்."அதுக்குத்தான் நான் கொடுத்து வைக்கேல்லயே" என்று சொன்னதாய் ஒருநாள் சொல்லியிருந்தாள்.

"ரவி...எங்கட ஊர்ப்பக்கம் ஒரு வேலை இருக்கு.நாளன்றைக்கு நான் போகவேணும்.உந்தத் தாடியை வெட்டிப்போட்டு வெளிக்கிட்டு வாங்கோ என்னோட கட்டாயம்.இல்லாட்டி நான் கதைக்கமாட்டன்..."என்றாள்.

"ஒரு வேளை மச்சாள் ஏமாத்திப்போட்டவோ.அப்பிடியெண்டா எனக்கும் சந்தோஷம்தான்.தாடி ஏன் வளர்க்கிறீங்கள் என்றாள் திடீரென.சரி சரி எது எப்பிடி என்றாலும் முதல்ல தாடியை வெட்டுங்கோ..." என்றாள் உரிமையோடு.

"தமிழ்...உந்த உடுப்பில நல்ல வடிவாயிருக்கிறீங்கள்..." என்றான் ரவி.தமிழின் வயிற்றுக்குள் நெருப்புப் பிசைந்து உருண்டையானது.அவள் சிரித்தபடியே தாடியைப் பார்த்தாள்.

"தமிழ்...ப்ளீஸ் கொஞ்ச நாள் ஆகட்டும் வெட்றன்.இப்ப கிடக்கட்டும்.சத்தியமா வேற ஏதாலும் கேளுங்கோ.கொண்டுவந்து தாறன்.தாடியைப் பற்றிக் கதைக்காதேங்கோ."

அன்று அவள் கிராமம் போய் வந்தோம்.அவள் அம்மாவும் தங்கையும் அழுதது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது.சாப்பாடு குழைச்சு உருட்டி அன்பையும் சேர்த்ததாலோ என்னவோ அந்தச் சாப்பாடும் இன்னும் நினைவின் ஓரத்தில்.அதன் பிறகொருநாள்....4 - 5 பேராச் சேர்ந்துதான் தொடங்கினம் கொஞ்சம் கள்ளுக் குடிச்சால் என்று.அதுக்காக வெறிச்சுக் கூத்தாட இல்லை.ஒரு சின்ன ஆசை அவ்வளவுதான்.அதுவும் யாருக்கும் தெரியாம கந்தன் அண்ணைக்குக் காசு குடுத்து வாங்கினம்.எனக்கு இது இரண்டாம் தரம்.பயமும் இருக்கு.கதை வெளில போனால் தொலைச்சுப்போடுவாங்கள் மற்றப் பெடியள்.போத்தில் திறந்து மணம் வரவே வெறிச்சுது.பிறகு வயித்துக்கை போனபிறகு...பனையடியே படுக்கையானது அன்று.

சரியாய்ப்போச்சு.அடுத்தநாள் முகத்தை ஒருமுழத்திற்கு நீட்டி வைத்திருந்தாள் தமிழ்.யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள்.என்னோடு கதைக்காமலே போய்விட்டாள்.

அடுத்து இரண்டு நாட்களின் பின் தமிழின் முகம் சிரிக்கவில்லை.ஆனால் நீளம் குறைந்திருந்தது.எனக்காகக் காத்திருந்தவள்போல....."ரவி உங்களோட கதைக்கவேணும் கொஞ்சம்.பின்னேரமா கல்லடிக்கு வாங்கோ..." என்றபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள்.அவளைப்போலவே மரங்களும் அசைவற்று நின்றன.ஒருவேளை அவளுக்குப் பயந்து அலுங்காமல் நின்றனவோ !

சந்தோஷமாய் ரசிக்கக்கூடியதாய் எதுவும் சொல்லமாட்டாள்.அது தெரியும் ஆனால் உதை விழாமல் இருந்தால் போதுமென்று நினைத்தபடியே கல்லடிக்குப் போக எனக்கு முன்னமேயே ஒரு பத்தகததை வாசித்தபடி ஆனால் என் காலடிச் சத்தத்திற்குக் காது கொடுத்தபடி உட்கார்ந்திருந்தாள் தமிழ்.

அண்டைக்கு ராத்திரி என்ன நடந்தது....சொல்லுங்கோ.

ஒண்டுமில்லை...யே...என்று நான் இழுக்குமுன்....

ஒண்டுமில்லையோ...தலை ஆட்டினதைப் பார்த்தாலே ஏதோ பெரிசா வெடி இருக்கு என்று மட்டும் விளங்கிக்கொண்டேன்.

"ரவி நல்ல பிள்ளை நல்ல பிள்ளையென்று விட்டுக்கொடுக்காமல் பேசுவீங்கள் நேற்று இரவெல்லோ பாத்திருக்கவேணும்.இனி வாழ்க்கையில அவன் இருக்கிற பக்கம் தலை வச்சுப் படுக்கமாட்டீங்களென்று.... என்னைக் கடுப்பேத்திப் பாக்கிறாங்கள்.எனக்கு பதில் ஏதும் சொல்லவே முடியேல்ல.எனக்கு வெட்கமாயிருக்கு ரவி.முகமெல்லாம் சிவந்து கண்ணீரை விழவிடாமல் கண்ணுக்குள் தேக்கி வைத்திருந்தாள்.இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எல்லாம் போச்சு.போங்கோ.எனகென்று ஒரு உறவு மனமார இருந்தது என்று நினைச்சிருந்தேன்.இனி எல்லாமே போச்சு எனக்கு.குட்பை ரவி...."

என்றபடி வேகமாக அந்த இருட்டுக்குள்ளும் வழி பிசகாமல் நடந்து மறந்துவிட்டாள் தமிழ்.என்னை விட்டு என் உறுப்பில் ஏதோ ஒன்று நான் பார்த்துக்கொண்டிருக்கப் பிய்ந்து போனதாய் ஒரு உணர்வு.எங்களுக்குள் இப்படி எத்தனையோ சண்டை வரும் போகும்.ஆகக்குறைந்தது ஒரு கிழமைக்கு மிஞ்சிக் கதைக்காமல் இருக்கமாட்டாள் தமிழ்.ரவி உங்களோடு கதைக்காவிட்டால் எனக்குக்குள் ஏதோ பாரம்போல என்பாள்.காலைமுதல் இரவுவரை என்ன நடந்தது என்று என்னிடம் குழந்தைபோல ஒப்புவிப்பாள்.சிலசமயம் அதனாலேயே சண்டை வந்துவிடும் எங்களுக்குள்.செய்யக்கூடாதது பேசக்கூடாததெல்லம் சொல்லி என்னிடம் பேச்சும் வாங்குவாள்.ஆனாலும் ஒரு திருப்தி அவளுக்கு அது.

அதைப்போலவே ஒரு கிழமைக்குப்பிறகு என்னைக் கண்டதும் வெடுக்கென்று மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போனவள் அதே வேகத்தோடு திரும்பி வந்து....

"ரவி ஏன் இப்பிடி மாறிட்டீங்கள்.சொல்லச் சொல்ல தாடி வளர்க்கிறிங்கள்.பெடியங்களோட சேர்ந்து தண்ணியடிக்கிறீங்கள்.எனக்கு உங்களில வெறுப்பாய் வருது.அதேநேரம் உங்களைவிட்டுத் தூரமாய்ப் போக விருப்பமுமில்லை.வேணுமெண்டுதான் செய்றீங்கள்போல.நான் தொலைஞ்சுபோறன் ரவி......"

"அதுசரி...ரவி இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணமாயிருப்பனோ...."என்றாள் ஆவல் கண்களுக்குள் ததும்ப.

எனக்கு இப்போ கோபம் வரவில்லை.என்னைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள் என்று நினைத்தபடியே "சீ...ச்...சீ இல்லை..." என்றேன்.

பக்கத்தில் நெருக்கமாய் வந்தவள்..."என்ன கண் கலங்குது இப்ப..."என்று என் கண்ணைப் பார்த்தபடியே கேட்டாள்.

"இல்லை....இல்லை என்றபடியே எனக்கொரு வேலை இருக்கு தமிழ்.பிறகு சந்திக்கிறேன்..." என்றபடியே போய்விட்டேன்.

அடுத்தநாள் சமையலின்போது..."ஏன் இப்ப என்னோட நிறையக் கதைக்க மாட்டீங்கள்..." என்றாள்.

"இது என்ன வம்பு நீங்களே சண்டை பிடிக்கிறீங்கள்.பிறகு நீங்களே கதைக்காமல் விடுறீங்கள்.பிறகு நீங்களே வந்து கேள்வியும் கேட்டு வைக்கிறீங்கள்..."என்றேன்

"சரி...வாற திங்கட்கிழமை எனக்கு ஒரு விஷேசம்.கோயிலுக்குப் போவம் வாறீங்களே என்னோட..."என்றாள்

"இல்ல எனக்கொரு அலுவல் இருக்கு.கட்டாயமாப் போகவேணும்.நான் வரச் சந்தர்ப்பம் இல்லவே இல்லை தமிழ்...."என்றேன்.

"பொய் சொல்லாதேங்கோ.என்னைத் தவிர்க்கிறீங்கள்.உங்களை உங்களுக்குள்ளேயே மறைக்காதேங்கோ ரவி.கட்டாயம் பாத்திருப்பன் நீங்கள் வரவேணும் என்றபடியே..." நம்பிக்கையோடு போய்விட்டாள்.

அதன் பின் வந்த செவ்வாய் பின்னேரம்தான் என்னைக் கண்டவள் கண் கலங்க ..."ஏன் வரேல்லை கோயிலுக்கு.என்ர பிறந்தநாள் நேற்று..."என்றாள்.

"நேரமில்லை நான் முதலேயே சொல்லிட்டுத்தானே போனேன்..."என்றேன் மிக மிக மென்மையாக.

உடைந்துவிட்டாள் தமிழ்."நீங்கள் சும்மாதான் சொல்றீங்களென்று நினைச்சேன்.எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன்...."என்றபடி ஏதோவெல்லாம் சொல்லிச் சொல்லி சத்தமில்லாமல் அழுதுகொண்டு என் முன்னால் நின்றாள்.

எனக்கு என்ன செய்ய முடியும்.சொல்வதற்கும் ஏதுமிருக்கவில்லை.கையாலாகாதவனாய் அழுவதை நேரில் பார்க்க முடியாமல் நிலத்தைப் பார்த்துகொண்டு மௌனமாய் இருந்துவிட்டேன்

இதன்பிறகுதான் எம் விலகலின் தூரம் அதிகமானது.

தமிழ் இப்போதெல்லாம் என்னோடு கதைப்பது மிக மிகக் குறைவு இல்லையென்றே சொல்லலாம்.ஆனால் பார்வையில் வருத்தமும் வலியும்.

கண்ணில் உயிரற்ற ஒரு புன்சிரிப்பு.சுகம்தானே ரவி என்கிற ஒரு பார்வை.ஒரு முறை சொல்லியிருந்தாள் தமிழ்.

"ரவி உங்கள் பெயரை எழுதும்போதும் சொல்லும்போதும் ஒரு சுகம் எனக்கு என்பாள்.அதேபோல உங்களோடு கோபப்பட்டு மனம் வலித்த நேரங்களில் உங்கள் பெயரைச் சொல்வது உயிரைப் பிய்ப்பதுபோல ஒரு வேதனை..." என்பாள்.அதுபோலவே என் பெயர் சொல்லி சுகம் கேட்பதைத் தவிர்த்துக்கொண்டாள்.

பிறகொருநாள் தாடி எடுத்துவிட்டிருந்தேன்.கண்கள் விரியப் பார்த்தவள்

"இப்பத்தான் நீங்கள் நல்ல வடிவு...."என்றாள்.உயிரற்ற சிரிப்பில் ஒரு அளவு தெரிந்தது.

"ம்..." என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

இப்போதெல்லாம் தமிழைக் காணும் நேரம் எனக்குள் குழப்பமோ சலனமோ இல்லை.எம் உறவு உடைந்துவிட்டது மட்டும் நிச்சயமாய் உணர்ந்தேன்.மனம் வலித்தாலும் அழவில்லை.

காரணம்தான் என்ன என்பதைத் தேடிக்கொண்டிருந்தேன்.

தாடி வளர்த்து அவள் சொன்னபோது வெட்டாமல் போனதா...!

தண்ணியடித்ததா....!

கோயிலுக்குப் போகாததா....!

இல்லை...இல்லை வேறு ஏதாவதா.....!

இந்த ஏதோ ஒன்றுதான் பிரிவின் விதையாய் இருந்த்திருக்கிறது.அது பின் ஆழப் புதைந்து முளையாய் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

வருடங்கள் தொலைத்த தருணத்தில் இப்போ நினைத்துக்கொண்டிருக்கிறேன் தமிழை.மனதின் இழைகளில் மெல்லிய அதிர்வு !

தமிழின் மனதில் என்னுடையவன் ரவி என்கிற மந்திரம் உணர்வோடு சுவையோடு ஒன்றிவிட்டிருந்தது.காதலோடு இப்போதும் அதே தமிழ் தமிழாக..... !

பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க, காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அதிகாலை உங்கள் முற்றத்தில் நின்று பாருங்கள்.

பனிவளரும் நாடொன்றில் பனி ரசித்தபடி மனம் வேர்க்கும் தமிழைக் காண்பீர்கள் !

58 comments:

Anonymous said...

aaaaaaaaaaaaaaaa

Anonymous said...

avvvvvvvvvvvvvvvvv ...
வடை ...ஆயா வடை ..எனக்கே எனக்கா அதுவும் முதல் வடை எனக்கே எனக்கா

Anonymous said...

ஒருக் காதல் கதையா ...
மை காட் ஹேமா அக்கா பெரியவங்க விடயம் லாம் பேசுறாங்களே ....அவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ் ..

சாந்தி மாரியப்பன் said...

கதை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு ஹேமா..

ஹேமா said...

கருவாச்சி....வடை சுட்டுத்தான் தரவேணும்.இப்பத்தான் உழுந்து ஊறுது.எப்பிடி வாசம் வந்திச்சோ !

ஒழுங்கா கதை படிச்சு சோதனைக்கு எழுதவேணும்.இல்லாட்டி பின்வாங்கில ஒற்றைக்காலில நிக்கவேணும்.சொல்லிப்போட்டன் இப்பவே !

காதல் கதையப்பா.வாசிச்சு நான் கெடுத்துப்போட்டன் எண்டு அண்டாட்டிக்கா போனவ வந்து கேட்டால்....எனக்குத் தெரியாது.மணி காப்பாத்துங்கோ !

Anonymous said...

அக்கா ரொம்ப சுப்பரா டச்சிங்கா இருக்கு ...

சான்ஸ் எ இல்லை ,,,எம்புட்டு அழாக எழுதுறிங்க ...

Anonymous said...

அக்கா எனக்கு முடிவு விளங்க வில்லை ....

Anonymous said...

ரவியும் காதலிக்க ஆரம்பித்து விட்டாங்க தானே ///

ரெண்டு பெரும் பிரிஞ்சி போயட்டங்கல்லோ ...

அக்கா பிரிய வைக்கதிங்கோ ....

இராஜராஜேஸ்வரி said...

இப்போதெல்லாம் தமிழைக் காணும் நேரம் எனக்குள் குழப்பமோ சலனமோ இல்லை.எம் உறவு உடைந்துவிட்டது மட்டும் நிச்சயமாய் உணர்ந்தேன்.மனம் வலித்தாலும் அழவில்லை.

கனக்கும் கதை!

Anonymous said...

காதல் கதையப்பா.வாசிச்சு நான் கெடுத்துப்போட்டன் எண்டு அண்டாட்டிக்கா போனவ வந்து கேட்டால்....எனக்குத் தெரியாது.மணி காப்பாத்துங்கோ !///////////////////////////////////

அக்கா அரைமணி நேரமா உங்கட எழுத்தில் மயங்கி கதையை தான் படித்துக் கொண்டு இருந்தினம் ...

என்ர குரு எனக்கு சொல்லிக்கி கொடுத்து இருப்பவை காதல் கதையை படிச்சிப் போட்டு இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடனும் எண்டு ..

நான் ரொம்ப சமத்துப் பொன்னாக்கும் ..காதல் கதையெல்லாம் இதயத்துக்கு எடுத்துட்டுப் போயி நூல் கட்டி கையில வைத்து இதயத்தை தொங்க விட்டு விளையாட மாட்டினம் ..

ஹேமா said...

//காதல் கதையெல்லாம் இதயத்துக்கு எடுத்துட்டுப் போயி நூல் கட்டி கையில வைத்து இதயத்தை தொங்க விட்டு விளையாட மாட்டினம் ..//

இங்க பார்டா....எனக்கே !

காட்டான் said...

வணக்கம் ஹேமா!
என்ன உப்புமட சந்தி வர வர வித்தியாசமா இருக்கு..!!

காட்டான் said...

எனக்கென்னமோ ரவியும் தமிழும் புரியாத புதிர்.. இது வானம் வெளுத்த பின்னும்தான் வந்திருக்கணும்.. ;-))

Yaathoramani.blogspot.com said...

கதையும் கவிதைபோல...
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஞா கலையரசி said...

அழகான யாழ்ப்பாணத் தமிழில் மனதைக் கனக்க வைக்கும் ஒரு காதல் கதை! பாராட்டுக்கள் ஹேமா!

Anonymous said...

கதையை காட்டிலும் உணர்வுகளே மிஞ்சி எஞ்சி நின்றது இறுதியில் ஹேமா...

தொடர் கதை எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

குறையொன்றுமில்லை. said...

அழகான யாழ்ப்பாணத் தமிழில் மனதைக் கனக்க வைக்கும் ஒரு காதல் கதை! பாராட்டுக்கள் ஹேமா!

தமிழ் உதயம் said...

ஹேமா, உங்கள் தமிழில் அழகிய நடையில் ஒரு காதல் கதை, என்னை கவர்ந்தது.

ஹாலிவுட்ரசிகன் said...

ஒரு அழகான காதல் கதை ... வாசித்துக் கொண்டு போவதே தெரியாமலிருக்கும் ஒரு அழகான நடை. ஆரம்பத்தில் அவன்-அவளின் மனதின் ஓட்டங்கள், மாறி மாறி அவர்கள் பார்வையில் நகரும் கதை குழம்பினாலும் பின்னர் சரியாகிவிட்டது.

Yoga.S. said...

மாலை வணக்கம் ஹேமா!நன்றாக இருந்தது.கண்ணில் நீரையும்,மனதில் பாரத்தையும் கொடுத்தது.பெருமூச்சை அனல் மூச்சாய்..................................... சொறி.(SORRY)

Yoga.S. said...

கலை said...

avvvvvvvvvvvvvvvvv ...
வடை ...ஆயா வடை ..எனக்கே எனக்கா அதுவும் முதல் வடை எனக்கே எனக்கா?/////வடை வேண்டுமென்றால் நாங்கள் சுட்டுத் தருகிறோம்!பரீட்சையில் கோட்டைவிட்டு "முட்டை"வாங்கி வரவேண்டாம்,சொல்லிவிட்டேன்!

துரைடேனியல் said...

உறவுகள் உடைந்து போக பெரிய விஷயங்கள் அல்ல ஹேமா. சிறிய காரணங்கள் போதும். கண்ணாடியில் ஏற்படும் சிறிய கீறலை கண்டுக்காம விட்டால் அதுவே அப்பாத்திரம் உடைந்து போகும் நிலை வரலாம். இருவருக்குமே சின்னப் பிள்ளைத்தனமான ஒரு ஈகோ. அதுவும் தமிழுக்கு அதிகம். நம்மவன் என்று ஆழமாய் பதிந்து போன ஒரு நல்ல கேரக்டரில் ஒரு சிறு கருப்புப் புள்ளிகூட விழக்கூடாதென்பது அவள் எண்ணம். கரும்புள்ளிக் சில விழுந்ததும் அவள் பாழும் மனது உடைந்து போகிறது. அதுதான் காரணம் என்று கருதுகிறேன். ஆனாலும் இந்தக் காதலில் நிகழும் விஷயங்களை ஞானிகளும் புரிந்துகொள்ள முடியாது. அற்புதமான உணர்வுளைக் கீறி எழுப்பும் கதை. இன்னும் என்னென்ன திறமைகள் உங்களிடம் உள்ளதோ தெரியவில்லை? அசத்துங்க தொடர்ந்து. வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

உறவின் இக்கட்டான் நிலையில் இருக்கும் மனிதர்களின் மனதைப் புரியவைக்கும் கதை! தமிழ்= ரவி உறவு எனக்குக் குழப்பமும் தெளிவும் இல்லை !!!

தமிழ் தாத்தா said...

அழவைத்தமைக்கு நன்றி !!!

Seeni said...

unmaiyil naan padikka thodangumpothu-
siru kathai entru padithen-
aanaal ezhuthin azhaku ennai izhuthu konde poi vittThu!

ean udainthathu kannaadiyaana-
kaathal !
raviyudan naanum kavalaiyil-
tamizhai thedi...

மகேந்திரன் said...

உணர்வுகள் குவியலாய்க் கொட்டிக்கிடக்கிறது
கதையில்..
அருமையான கதை சகோதரி.

பால கணேஷ் said...

நீங்கள் கதைத்திருக்கிற இயல்பான அழகிய ரசிக்கவைத்த ஈழத் தமிழில் உணர்வுகள் மனதை அசைத்தன ஃப்ரெண்ட்! காதலென்டால் என்னவென்டு அனுபவிச்சறியாத எனக்கு இதுதான்டா ‌காதலென்டு அழுத்தமாகச் சொல்லிட்டிங்க! படிச்சு முடிச்சதும் ஏனோ லேசாய் கண் கலங்கியிருந்தது. தொடர்ந்து அசத்தறீங்களே...

விச்சு said...

நிறைய உணர்ச்சிகள் கொட்டியிருக்கின்றன. //அடுத்த நாள் எப்போதும்போல் ஒழுங்காக இருந்தது// போன்ற வரிகள் ரசிக்க வைத்தன. ஒரு தாடிக்குள் இவ்வளவு விசயமா!!!

K said...

அழகான ஒரு சிறுகதையைப் படைத்தமைக்கு முதலில் நன்றியும் வாழ்த்துக்களும் ஹேமா! அழகிய உணர்ச்சிகளின் தொகுப்பாக இந்த சிறுகதை வந்திருக்கு! அத்தனையும் செயற்கையாக இல்லாமல், இயற்கையாகவே உள்ளன! மீண்டும் வாழ்த்துக்கள்!!

K said...

இந்தக் கதையின் ஹைலைட்டே,

“ பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க, காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அதிகாலை உங்கள் முற்றத்தில் நின்று பாருங்கள்.”

இந்த வாக்கியத்தை கதையின் தொடக்கத்திலும் முடிவிலும் போட்டதுதான்!

தடுமாற்றம் இல்லாத ஒரு கதாசிரியரின் நிலையினை இது எடுத்துக்காட்டுகிறது! அதாவது, இந்தச் சிறுகதை, படிப்பவர்களுக்கு எத்தகைய உணர்வினைத் தோற்றுவிக்கும் என்பதை முன்னரேயே ஊகித்து வைத்துக்கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல், ஒரு வாக்கியத்தை தொடக்கத்திலேயே போட்டுவிட்டு, பின்னர் இறுதியாக அதே வாக்கியத்தைப் போட்டது, உங்கள் எழுத்தில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது! இது நன்று!!

K said...

."இன்று நாங்கள்தானே சமையல் என்றாள்.மரக்கறிகள் வாங்கவேணும்.சந்தைக்குப் போய்ட்டு வருவம்"...என்றாள் எதுவுமே நடக்காததுபோல. ///////////

ஹா ஹா ஹா இதுதான் பெண்களின் குணம்! இடியே விழுந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்! ஆனால் மனசுக்குள் வெதும்புவார்கள்!

இதுவே பெண்களின் பலமும் பலவீனமுமாகும்!

K said...

தாடி வளர்த்து அவள் சொன்னபோது வெட்டாமல் போனதா...!

தண்ணியடித்ததா....!

கோயிலுக்குப் போகாததா....!

இல்லை...இல்லை வேறு ஏதாவதா.....!

இந்த ஏதோ ஒன்றுதான் பிரிவின் விதையாய் இருந்த்திருக்கிறது.அது பின் ஆழப் புதைந்து முளையாய் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. ////////////

ரவி, தமிழின் பிரிவுக்கு காரணம் மேலே சொல்லப்பட்டவை போல தோன்றவில்லை ஹேமா!

அதாவது ரவி, வேண்டுமென்றே தமிழுக்குப் பிடிக்காததைச் செய்திருக்கவேண்டும்! காரணம் ரவிக்கு ஏற்கனவே அவனின் மச்சாள் வெயிட் பண்ணுவதால்! எதுக்கு வீணாக தமிழின் மனசில் ஆசையை வளர்க்கணும்னு ரவி நினைச்சிருக்கலாம்!

ம்.............! மேலே அனைவரும் சொன்னது போல வலி நிறைந்த கதைதான்!!!

ஸ்ரீராம். said...

"தளளி' வந்தாலும் என்னவன்"... நல்ல வார்த்தை. இனிமையான காதல்/ஊடல் கதை. சில இடங்களில் தன்னிலை விளக்கத்தில் பேசுவது ரவியா தமிழா என்ற குழப்பம் வந்தது.

சசிகலா said...

ஏதோ ஒன்றுதான் பிரிவின் விதையாய் இருந்த்திருக்கிறது.அது பின் ஆழப் புதைந்து முளையாய் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.// வலி மிகும் வரிகள் அருமை .

சத்ரியன் said...

கதை நல்லாயிருக்கு ஹேமா.

//சில இடங்களில் தன்னிலை விளக்கத்தில் பேசுவது ரவியா தமிழா என்ற குழப்பம் வந்தது.//

இதுவும் உண்மையே. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கவி அழகன் said...

Supper kathai 2 naal eduthuchchu vaasikka

ராமலக்ஷ்மி said...

கதையும், நடையும், தொடங்கி முடித்த விதமும் மிக அருமை ஹேமா.

Anonymous said...

கணேஷ் said...
படிச்சு முடிச்சதும் ஏனோ லேசாய் கண் கலங்கியிருந்தது..//////////////

ஆல் மீ அண்ணாஸ் அண்ட் அக்காஸ் ,

அப்புடி எண்டால் கணேஷ் அண்ணா பின்னாடி ஒருக் கதை இருக்கெண்டு கண்டுபிடித்துவிட்டினம் ....அவ்வவ்

கொழுத்திப் போடுறா கலைமா திரியை ...

ஹேமா அக்கா கலை கிட்னி ஓவர் திங்கிங்ங் ங் ங் ங் ங் ங் ங் ங் ங் ங் ங் .அவ்வ் வ் வ் வ் வ் வ் வ் வ்

Anonymous said...

Yoga.S.FR said...

வடை வேண்டுமென்றால் நாங்கள் சுட்டுத் தருகிறோம்!பரீட்சையில் கோட்டைவிட்டு "முட்டை"வாங்கி வரவேண்டாம்,சொல்லிவிட்டேன்!//////

எதுக்கு மாமா பப்ளிக் இல் என்ற மார்க்கை சொல்லி என்னை பெருமைப் படுத்துறேல் ...எனக்கு ஒரே ஷய் ஷியா வருதெல்லோ ....அவ்வவ் ...

யோகா மாமா கருக்கு மட்டை யோடு என்ட ரேசுல்ட்க்காக காத்துக் கொண்டு இருக்கினம் ஹேமா அக்கா avvvvvvvvvvvvvvvv ..

இந்நேரம் பார்த்து என்ற குருவும் அண்டார்டிக்க சென்று விட்டினம் ...ஹேமா அக்கா மாமாவின் கருக்கு மட்டையில்ருந்து நீங்கோ தான் என்னைக் காப்பாட்ட்ரோனும்

பால கணேஷ் said...

Blogger கலை said...
அப்புடி எண்டால் கணேஷ் அண்ணா பின்னாடி ஒருக் கதை இருக்கெண்டு கண்டுபிடித்துவிட்டினம் ....அவ்வவ்

-வெரிகுட் கலை! ஒரு பெண் என்னைக் காதலிக்கிறதாய்ச் சொல்லி ஏமாத்தினாள். அதனாலதான் எனக்கு லவ் அலர்ஜி! சரியாக் கண்டுபிடிச்ச உனக்கு இந்தா சாக்லெட்ஸ்!

SELECTED ME said...

அப்படி என்னதான் காரணம்???? தலையே வெடிச்சிடும் போலிருக்கு??? (இப்படித்தேன் நானும் காரணம் தேடிக்கிட்டுருக்கேன்!)

அம்பலத்தார் said...

ஒரு சில நாட்களாக செல்லம்மா உடல் நலம் இல்லாமல் இருந்ததால இணையத்தில் உலா வரமுடியவில்லை அதற்குள் எல்லாரும் நிறைய பதிவுகள் போட்டிருக்கிறியள். ஓடி ஓடி படிக்கவேண்டி இருக்கு

அம்பலத்தார் said...

மனித உணர்வுகளை அழகாக படம்பிடித்துக்காட்டி இருக்கும் கதை.

அம்பலத்தார் said...

கலை வடையை பறிச்சிட்டாவே? எனக்கு ஒரு பிளேன்ரீயாவது கிடைக்குமோ ஹேமா

ஹேமா said...

அம்பலம் ஐயா வாங்கோ.செல்லம்மா மாமிக்கு என்ன.இப்ப சுகம்தானே.முதல்ல அவவுக்கு கண்ணூறு சுத்திப் போடுங்கோ.சில நேரம் காலநில மாற்றம்தான் காரணம்.பாத்துக்கொள்ளுங்கோ.யோகா அப்பாவும் நீங்களும் சோர்ந்துபோனால் எங்களுக்கு யார் ஆறுதல் !

ஹேமா said...

கருவாச்சின்ர அட்டகாசம் தாங்கேலாமக் கிடக்கு டீச்சரு விட்டிட்டு அண்டாட்டிக்கா போய்ட்டா.கருவாச்சியை கட்டிப்போட யோகா அப்பாதான் சரி.கருக்கு மட்டைக்குப் பயத்தில என்னைக் காவல் காக்கட்டாம்.என்ர குரங்காரையெல்லாம் நாடு கடத்தச் சொல்லியிருக்கிறா மணியத்தாரிட்ட.எப்பிடி !

உங்களுக்கு இல்லாத பிளேன் டீயோ.பிடியுங்கோ.சுகமா சந்தோஷமா இருங்கோ !

அம்பலத்தார் said...

ஹேமா said...

அம்பலம் ஐயா வாங்கோ.செல்லம்மா மாமிக்கு என்ன.இப்ப சுகம்தானே.முதல்ல அவவுக்கு கண்ணூறு சுத்திப் போடுங்கோ.சில நேரம் காலநில மாற்றம்தான் காரணம்.பாத்துக்கொள்ளுங்கோ.யோகா அப்பாவும் நீங்களும் சோர்ந்துபோனால் எங்களுக்கு யார் ஆறுதல் !//
செல்லம்மாவிற்கு முதுகுத்தண்டிலிருந்து கையிற்கு செல்லும் முக்கிய நரம்பொன்றில் பாதிப்பு ஏற்பட்டதால நோ வேதனையில் கஸ்டப்பட்டவ இன்றுதான் கொஞ்சம் பரவாயில்லை குறையத்தொடங்கியுள்ளது. உங்கள் அன்பான வார்த்தையை படித்து அவவுக்கும் மகிழ்ச்சி ஹேமா. எமது அடுத்த சந்ததி எம்மைவிட சிறப்பாகவும், கெட்டித்தனமானவர்களாகவும் வளர்வதுகண்டு யோகா, நான் செல்லம்மா போன்றவர்கள் ரசித்து, சந்தோசப்பட்டு, எப்பொழுதும் வாழ்த்திக்கொண்டு இருப்போம்

ஹேமா said...

அம்பலம் ஐயா....உந்த உளைவு,நோ,வலி இந்தக் குளிர்நாடுகளில் எங்களைக் கூடுதலாவே பாதிக்குது.எனக்கும் முழங்கை நோ.நான் அக்குப்பஞ்சர் செய்றன்.பக்குவாமாப் பாத்துக்கொள்ளுங்கோ.சுகமாகி உங்களுக்கு விதம் விதமா சமைச்சுத் தரவேணுமெல்லே.அதுவரைக்கும் நீங்கள் சமைச்சுச் குடுங்கோ.செல்லம்மா மாமிக்காக மனதால பிரார்த்தனை செய்துகொள்றன் !

Unknown said...

நல்ல அழகான கதை

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

எஸ் சக்திவேல் said...

வணக்கம் சகோதரி. ஒரு சின்ன diversion. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். தவில் கலைஞர்கள் பாவிக்கும் மேளம் அடிக்கும் தடிக்கு புறம்பான சொல் உண்டா? நாங்கள் வெறுமனே 'மேளம் அடிக்கிற தடி' என்போம்.

எனது தனி மடல் sakthis23@yahoo.com

(தவில் கலைஞர்களைப் பற்றி ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு)

இதைப் பிரசுரிக்க வேண்டாம்.

ஜெயா said...

கதை அருமை...

ஆனால் சில இடங்களில் பேசுவது தமிழா ரவியா என்ற குழப்பம் எனக்கும் இருந்தது.

அழகான காதல் கதை. பாராட்டுக்கள் ஹேமா.....

ராஜி said...

காதல் கதை அருமை. ஆனால், ஏனோ பாத்திரப் படைப்புகளில் சிறு குழப்பம் இருக்குற மாதிரி தெரியுது

everestdurai said...

கதை நல்லாயிருக்கு ஹேமா.

ஹேமா said...

கலை...கருவாச்சிக் காக்கா ஓடிவாங்கோ.காதல் கதையெல்லாம் வாசிக்காதேங்கோ குட்டி.உங்கட குரு வந்து தேம்ஸ்க்க தள்ளிப்போடுவா.பயமாக்கிடக்கு.கலை இந்தக் கதைக்கு நான் முடிவெண்டு ஒண்டு வைக்க விரும்பேல்ல.அது காதல்.முடியாது.ரவியின் மனசிலயும் தமிழின்ர மனசிலயும் தொடரும் வாழ்நாள் முழுக்கவுமே.இரண்டுபேரும் பிரியேல்ல கலை.பிரியவும் மாட்டினம்.கல்யாணத்துக்குத்தான் ரவி தேவை தமிழுக்கு.காதலுக்கு நினைவு மட்டுமே போதும் !

சாரல்...சந்தோஷம் உங்கட கருத்துக்கு !

இராஜராஜேஸ்வரி...ஆன்மீகத் தோழிக்கு என் அன்பான நன்றி.என் கதையைக்கொஞ்சம் கேட்டதுக்கு !

காட்டான்...மாமா வாங்கோ.காதல் கதையெண்டபடியா வானம் வெளித்தபின்னும் பக்கத்தில வந்தா நல்லாயிருக்குமெண்டு சொல்றீங்கள்போல.இதையொட்டின கவிதைகள் அங்க நிறைய இருக்கு.நீங்க கவனிக்கேல்லப்போல !

ரமணி...உப்புமடச்சந்திப்பக்கமும் உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா !

கலையரசி...நன்றி கதை எழுதுவதில் கத்துக்குட்டி நான்.உற்சாகம் தரும் உங்கல் கருத்துக்கு நன்றி தோழி !

ரெவரி...சின்னச் சின்னக் கதைகள் மனதில் படும் உணர்வுகளை எழுதியிருக்கிறேன்.எழுத முயற்சிக்கிறேன்.ஊக்கம் தரிம் உங்களுக்கு நன்றி சகோதரா !

லஷ்மி...அம்மா உங்கள் எழுத்துக்கு ஈடில்லை இது.இது சும்மா...!

தமிழ்...உங்கட கருத்துக்குச் சந்தோஷம் ஆனாலும் கோவம் உங்களோட.சிறுகதை எழுதுவதில் வல்லுனர் நீங்கள்.சரி பிழைகளைச் சொன்னால் நல்லதுதானே.ஸ்ரீராம் சொன்னபிறகுதான் சரியாக அந்தக் கதையின் பிழையை உணரமுடிகிறது.உங்களைப் போன்றவர்கள்தானே வழி காட்டவேணும் !

ஹாலிவுட்ரசிகன்...நன்றி உங்களுக்கு.ரசித்து வாசித்திருக்கிறீங்கள் என்று புரிகிறது !

யோகா....அப்பா சிறுகதை முயற்சியிலும் சின்னதாய் தொட்டிருக்கிறேனோ.சந்தோஷமாயிருக்கு உணர்ந்து வாசித்த உங்கள் கருத்துக்கு.கருவாச்சி எங்கள் எல்லாருக்கும் செல்லமாயிட்டா
இப்ப !

துரைடானியல்...அழகான கதையை நனைத்தெடுத்த கருத்து.எழுதிய நானே யோசிக்கிறேன்.ரவி-தமிழ் மனதில் ஈகோ இருந்திருக்குமா !

தனிமரம்...நேசன் இப்போவெல்லாம் என் எழுத்துக்களைக் கவிதைப்பக்கத்திலும்கூட சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள்.நன்றி உங்கள் அன்புக்கு !

ஹேமா said...

தமிழ்தாத்தா....தமிழின் தாத்தாவுக்கு வணக்கம்.என் தாத்தா இருந்தால் உங்களைப்போலத்தான்.சில உணர்வுகளுக்குத் தடம் தேவையில்லை தாத்தா.உண்மையாவே நீங்கள் அழவெண்டு எழுதேல்ல இந்தக் கதையை நான்.ஒரு பதிவு மனசிலயிருந்து எழுத்தில வச்சிட்டேன்.காத்திருக்கும் காதலுக்கு அழுகை வாறதில்லை.மனதோடு மட்டும் எப்போவாவது விசும்பும் அது ஒரு தாயின் அணைப்புக்கேங்கும் குழந்தைபோல.தாயுமில்லை அணைப்புமில்லை இப்பவெல்லாம் !

பனி பெய்த ஓர் இரவும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும்
வாயிருந்தால்
பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில்
உன்னையும் இழந்திருந்தேன்
உள்ளுக்குள்
எங்கிலும் புகைகிறது
பிதுக்கி இழுக்க நார்போல
வந்து விடுமா
வெதும்பிய துயரம்!!!

ஹேமா said...

சீனி...வாங்கோ.உப்புமடசந்தியோடும் இணைந்திருக்கிருக்கிறீர்கள்.நன்றி.காதல் வாழும் எப்பவும்.சந்தர்ப்பம்தான் கல்யாணம் !

மகி...உங்களைப்போல் தமிழின் உச்சம் கண்டவர்களின் வாழ்த்து மனதை உற்சாகப்படுத்துகிறது !

கணேஸ்...ஃப்ரெண்ட் என் எழுத்துக்கு உங்களிடமிருந்து இத்தனை பாராட்டா.மகிழ்ச்சியில் பறக்கிறமாதிரிக் கிடக்கு.ஏன் கண் கலங்கினது.அடிமனசில ஏதோ இருக்கு.அதுதான் கலை கிண்டியெடுத்திட்டா.என்னதான் சிரிச்சபடி வாழ்கையை ஓட்டினாலும் சிலசமயம் நினைவுகள் தடுமாறி ஒரு கணம் நிறுத்தி தன்னைக்கவனிக்க வைக்குதுதானே !

விச்சு...வாங்கோ.தாடி ஒரு கதைக்குச் சாட்டு.காதலுக்குத் தெரியும் ஏன் எதுக்கென்று !

மணி...உங்கட பெரிய கருத்துக்குச் சந்தோஷம்.உண்மையில் இருவருக்குள்ளுமே காதல்.விட்டுக்கொடுக்கமுடியாத சில வறட்டு கௌரவங்கள்,குடும்பச் சூழ்நிலைக்கு இவர்களது காதல் பலி.ஆனால் வாழ்வு முழுதுமே நின்மதியாக வாழமுடியுமா இவர்களால்.பொய்யான வாழ்வோடு போராடி பொய்ச்சிரிப்புமாய் கழியும் இப்படியானவர்களின் வாழ்வு !

ஸ்ரீராம்...எப்போதும் உங்கள் வழிநடத்தலுக்கு நன்றி.கவிதைப்பக்கத்திலும் சரி இங்கும் சரி என் பிழைகளை உடனேயே எடுத்துச் சொல்லிவிடுகிறீர்கள்.நன்றி.நீங்கள் சொல்லுமுன்னமே எனக்கு அந்தப்பிழை புரிந்தது.சரிப்படுத்த சரியான நேரமும் ஏதோ ஒரு குழப்பமும் தவிர்த்தது.இப்போதும் நினைக்கிறேன்.ச்ச...அப்பிடியே இருக்கட்டுமெண்டு விடுறன்.இருக்கட்டும்.முடிஞ்சா திருத்திவிடுறன் !

சசி...உங்கள் சமூக எண்ணங்களுக்குள் காதல் கவிதைக்கும் ஒரு பின்னூட்டம் தந்த எண்ணத்திற்கு மகிழ்ச்சி சகோதரி !

சத்ரியன்...சும்மா கண்,மைன்னு எழுதிட்டு இருக்கிற நேரம் எனக்கும் சொல்லித் தரலாம்ல.சரி சரி அடுத்த கதையை சரியா எழுதப் பாக்கிறன் !

யாதவன்...என்ன 2 நாளாச்சா...அதுவும் ஒரு காதல் கதை வாசிக்க.....!

ராமலஷ்மி....அக்கா உங்கள் உற்சாகம் தரும் வார்த்தைகள் அடுத்த கதையெழுத யோசிக்க வைக்கும்.நன்றி !

நிலவன்பன்...இந்தக் கதைக்கு முடிவு கொடுக்க விரும்பவில்லை நான்.இது காதல்.எப்பவும் வாழும் காதல்.மனதால் வாழும் காதல்.உயிருக்குள் வாழும் காதல் !

சதீஸ்...நன்றி உங்கள் வரவுக்கு !

சக்திவேல்...அண்ணா உங்களுக்கு பதில் அனுப்பிவிட்டேன்.உங்கள் நினைவோடு இந்தப் பின்னூட்டம் இருக்கட்டும் என்று விட்டுவைக்கிறேன் !

ஜெயா...சுகம்தானே.உங்களைக் காணும்போது ஒரு சந்தோஷம்.எப்போதாவது வந்தாலும் அன்பாய்க் கருத்துச் சொல்லும் உங்களுக்கு என் அன்பு நன்றி தோழி !

ராஜி...ம் குழப்பம்தான்.ஆனாலும் விளங்குதுதானே.முடிந்தால் சரிப்பண்ணப் பார்க்கிறேன் தோழி !

எவரெஸ்ட்துரை...நன்றி வரவுக்கும் கருத்துக்கும் !

Anonymous said...

கதையை படித்ததும் மனது அதிலேயே ஆழ்ந்து விட்டது. மிக மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். கவிதையை போல் காதல் கதைகளிலும் உங்கள் எழுத்தை மிகவும் ரசிக்கிறேன் ஹேமா! வாழ்த்துக்கள்!

COME TO SEX WORLD said...

Your Site Very Helpfully Information Site .
Like This
Thanks for Information
Thanks,Thanks,Thanks


»------------1.» 2014 koyell mollik New Sex video Collections

»------------1.» 2014 New xnxx Collections

»------------1.» 2014 New xnxx movie Collections

»------------1.» 2014 New indian Sex Collections

»------------1.» 2014 New tamil Sex Collections

»------------1.» 2013 New bangla Sex Collections

»------------1.» 2014 Newkristina akheeva Sex Collections

»------------1.» 2014 New katrina kaif Sex Collections

»------------1.» 2014 New GAY UA Sex Collections

»------------1.» 2014 New PORN TUB Sex Collections


»------------1.» 2014 New Gay Sex Collections





  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP