Tuesday, April 17, 2012

கவிதை தந்த விருது.அன்புடன் ஹேமா!



டும்……டும்…..டும்….டும்…

நந்தன வருஷம் நல்லமாதிரிப் பிறந்திருக்குது!!

நல்ல சந்தோஷமாப் பிறந்திருக்குது!!

உப்புமடச்சந்தியில கவிதை எழுதின எல்லாருக்கும் விருது கொடுக்கப்போறேன்.எனக்கு நிறையப் பேர் தந்திருக்கிறார்கள்.நான் யாருக்கும் கொடுத்ததில்லை.கொடுப்பதிலும் எத்தனை சந்தோஷம்.அனுபவிக்கிறேன் இப்போ!

டும்……டும்…..டும்….டும்…

என் தாத்தா சாப்பிடும்போது கவனித்திருக்கிறேன்.வாழை இலையில் சின்னக் கிழிசல்,வாடல்,முற்றல் இருந்தாலும் இலையை மாத்தித் தாங்கோ என்பார்.தண்ணி அளவாக விட்டுத் துடைத்து இடப்பக்கத்தில் உப்பு வைத்தபிறகே சாப்பிடத் தொடங்குவார்.கசப்பு இனிப்பு என்று அடுக்காகச் சாப்பிடுவார்.அதுபோலவே பல்சுவைக் கவிதைகள்.அடுக்கிச் சாப்பிடுவது வாசிப்பவர்களின் ரசனையைப் பொறுத்தது.

உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது.கவிதை எழுதிய அத்தனை பேருக்குமே என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.எத்தனையோ தலைகீழ் விகிதங்களாக எதிர்பாராத கற்பனைகள்.அத்தனையும் நெஞ்சிலிருந்து வந்த உணர்வுள்ள இயல்பான படைப்புக்கள்.

கவிதைகள் எழுதிய எல்லோருக்கும் இந்த விருதைக் கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நண்பர்களே.அன்று கவிதைக்கான படங்களைத் தேர்ந்தெடுக்க 3-4 மணித்தியாலங்கள் எடுத்தது.இன்று அதன் சந்தோஷத்தை அனுபவிக்கிறேன்.ஆர்வத்தோடு எழுதிய உங்களுக்கு அன்பான என் நன்றி !

கணேஸ்...(எழுதவராது எண்டு சொல்லி முதலாவதா வந்து கலக்கினவர்)

வஜீர் அலி...

துபாய் ராஜா...

மகேந்திரன்...

ஹசீம் ஹாஃபி...

தனிமரம் நேசன்....(கலக்கிட்டார்ல)

ஐடியாமணி...(நகைச்சுவையை எதிர்பார்த்தேன்.அப்பாவுக்கு மரியாதை கொடுத்து விட்டுக்கொடுத்தாராம்)

ஹேமா...(அட...நானும்)

இராஜராஜேஸ்வரி...

அம்பலத்தார்...

யோகா அப்பா...(வித்தியாசமான கற்பனையோடு சிரிக்க வைத்த அப்பா)

கலை-கருவாச்சி...

நேசனும் கருவாச்சியும்...(பிச்சு எடுத்துக்கொள்ளுவீங்களோ?)

அருணா செல்வம்...

விச்சு...

அப்பாதுரை...

T.V. ராதாகிருஷ்ணன்...

ஸ்ரீராம்...

துரைடேனியல்...

வேர்கள்...

கலா...

கௌதம்...

சீனி...

ரெவரி...

புலவர் இராமாநுசம்...

கீதா...

செய்தாலி...

பாஹே...

சத்ரியன்...

மோ.சி.பாலன்...(அம்மாவினதும்,அப்பாவினதும் முதற்பெயரை மோ.சி என வைத்துக்கொண்டது பேரழகு)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து...


இப்போதும் கவிதைகளையோ நகைச்சுவையையோ இணைக்க விரும்பும் யாராவது இதற்கு முந்தைய ”கவிதை எழுதலாம் வாங்கோ”பதிவில் இணைத்துவிடுங்களேன்.இணைத்தால் இன்னும் சந்தோஷப்படுவேன் !

ஒரு குட்டித் தத்துவம்...

சில நேரங்களில மனம் என்னவென்று அறயாமலேயே சோர்ந்து போகிறது. மிகச் சில நேரங்களில் மட்டும்தான் இதற்குக் காரணம் புரிகிறது.பல நேரங்களில் புரியாமலே போய்விடுகிறது.

“என்னவென்றே தெரியவில்லை.மனசு ஒரு மாதிரியா இருக்கு.எதுவுமே செய்ய வரவில்லை.எதிலயுமே ஆர்வம் இல்லை.விழுந்து விழுந்து படுக்கத்தான் மனம் வருது.”என்று உதடுகள் அலுக்க உள்ளம் எமக்கே செய்தி தெரிவிக்கிறது.

காலையில் எழும்பினவுடன் உடம்பில் ஒரு இடத்தில் மெல்ல வலிக்கிறதுபோல இருக்கும்.என்னது இது? ஏன் இப்படி வலிக்கிறது? என்று நம் நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டினால்...... ஓ! நேற்று இந்த இடத்தில் இடித்துக்கொண்டோமே!அதுதான் காரணம் என்று நம் நினைவாற்றல் எடுத்துக் கொடுக்கும் சில நேரங்களில் இதுவும் சாத்தியமற்றுப் போகிறது. காரணம் நாம் உணராதபடி அடிபட்டதுதான்.

இப்படித்தான் மனக்காயமும் நம்மையறியாமல் நாம் நேற்றைய செய்தி ஒன்றால்,அல்லது செய்திகள் சிலவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும்.அல்லது நம் மனத்தில் நம்மை வெகுநாளாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற ஒரு நிரந்தரக் கவலைகள் திடீரென நம் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்.அல்லது புதிதாக ஒரு கற்பனைப் பயம் ஏற்பட்டிருக்கலாம்.

ஏன் இந்த ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் உள்ளம் துவண்டிருக்கலாம்.இதன் காரணத்தை நாங்களே அறிவோம்.இல்லையேல் ஆராய்ந்து பார்த்தே ஆகவேண்டும்.

ஆனால் அப்படியும் உணர முடியாத இனம் புரியாத கவலைகளால் தாக்குண்டு மரவட்டையாய்ச் சுருங்கிக் கிடப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தி விட முடியும்?நோய் இதுதான் என்று கண்டறியாமல் ஒரு மருத்துவரால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பது போலத்தான் இதுவும்.ஊசி முனையால் தொட்டுச் சுட்டிக்காட்டுகிற நிலைக்கு உள்ளம் துவண்டதன் காரணங்களை அறியுங்கள்.

இயலவில்லையா?இது காரணமற்ற துவளல்.உடனேயே மனத்திற்குப்பிடித்த உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

அதுவும் உடனே!
காரணம் துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?


(விருது தயாரிக்க உதவி-மாத்தியோசி மணி,நிகழ்வுகள் கந்தசாமி !)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது மேல்....!

91 comments:

செய்தாலி said...

ஒரு
சித்திரத்தைக் காட்டி

சிந்தையில்
உயிர்த்தெழும் எண்ணத்தை
வரிகளாய் தீட்டெனச் சொல்லி

ஒ எத்தனை
பொருளென்றும் அழகென்றும்
உள்மனதால் தோள்தட்டல் பாராட்டு

ம்ம்ம்
முடிந்திடவில்லை இன்னுமிருக்கு
அன்பின் பரிசாய்
விருது மகுடச் சூடல்

செய்தாலி said...

குட்டித் தத்துவம் அருமை

சத்ரியன் said...

ஹேமா,

தத்துவம் ரொம்ப பிடிச்சிருக்கு.

விருதுக்கு நன்றி. இனிமேல் வளர்ந்த பிள்ளையைப் போல் கவிதை எழுத முயற்சிக்கிறேன்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரி...
விருது தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
அன்று நீங்கள் கொடுத்த நிழற்படம் ..
பல விதமான கதைகள் சொல்லியது..
அருமையான ஒரு தருணத்தை
ஏற்படுத்திக் கொடுத்து அதற்கு விருதும்
கொடுத்தமை தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது..

நன்றிகள் பல சகோதரி..

பவள சங்கரி said...

ஹேமா... இது எப்போ நடந்தது... அடடா எனக்குத் தெரியாம போயிட்டுதே... சரி அடுத்த முறை பார்த்துக்கறேன்... இப்ப விருது வாங்கினவங்களுக்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. வாழ்த்துகள் நண்பர்களே!

அன்புடன்

பவள சங்கரி.

காட்டான் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

விருதுக்கு நன்றி + வாழ்த்துகள் (நீங்களும் வாங்கி இருக்கீங்கள்லே...) ஹேமா...

Yoga.S. said...

பகல் வணக்கம் மகளே!எனக்கென்றால் நான் எழுதியது ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகிறது.விருது வாங்கிய வாங்கிய கவிப் பெருந்தகைகளுள்.......என்னுடையது ............ஒன்றுமே இல்லை!வெறும் .................!விருது பெற்ற அத்தனை பேருக்கும்,வாழ்த்துக்கள்!ஹேமாவின் வேண்டுதலுக்கு செவிசாய்த் தோருக்கும் வணக்கங்களும்,நன்றிகளும்!

ராஜ நடராஜன் said...

ஒற்றை விரலை விட பத்து விரல்கள் கண்ணீர் துடைப்பதுவே சிறப்பு என்பேன்.

என்னையும் ஆட்டத்துல சேர்த்தியிருக்கலாமே:)

விச்சு said...

அய்....

பால கணேஷ் said...

‌இப்படி படத்தை ரசிச்சு எல்லாரும் கவிதை எழுதினதும், நான் (கவிதை மாதிரி) எழுத ட்ரை பண்ணினதும் மனசுக்கு ரொம்பவே புத்துணர்ச்சி தந்தது ஹேமா! அதற்குப் பரிசும் தர்றீங்க... ஃப்ரெண்டின் அன்போடு சேர்ந்து வர்ற பரிசு இன்னும் மகிழ்ச்சி தருது. என் இதய நன்றி! இந்த கவிதை ஊர்வலத்துல நான் எதிர்பாராத ரெண்டு பேர் கவிதை எழுதினதைப் பாத்து வியந்துபோனேன்: ஸ்ரீராம், நேசன்! அவங்களுக்கும் வாழ்த்துக்கள்!

பவள சங்கரி said...

அன்பின் ஹேமா,

அன்புத் தோழியின் கட்டளையின்படி இதோ என் கவிதை. தரமிருப்பின் ஏற்றுக் கொள்ளுங்கள் .

http://coralsri.blogspot.com/2012/04/blog-post_17.html

அன்புடன்

பவள சங்கரி.

அம்பலத்தார் said...

வணக்கம் ஹேமா உங்கள் வேண்டுதலை ஏற்று எழுதிய அனைவருக்கும் மதிப்புக்கொடுத்து கேடயம் வழங்கியதற்கு நன்றி

அம்பலத்தார் said...

ஹேமா, சிறப்பாக எழுதியவங்களை கௌரவிக்கிறது நியாயமான விடயம். ஆனால் கிறுக்குத்தனமாக கிறுக்கின இந்தக்கிறுக்குப்பிடித்த கிழவன் எனக்கும் கேடயம் கொடுத்தது கொஞ்சம் toomuch.

பவள சங்கரி said...

இதோ என் கவிதை!


பாதை

பாதை தெளிவாகத்தான் இருக்கிறது.
பயணம்தான் கையகப்படவில்லை!

பாதையும் பயணமும் நேர்ப்பட்டாலும்
கோழையாய் மனம் மறுதலிக்கிறது.

வெறுமையாய் கிடக்கும் பாதையாயினும்
பொறுமையாய் காத்துக்கிடக்கிறது காலம்.

வெறுமையும் பொறுமையும் இருந்தாலும்
வறுமையும் சோகமுமாய் கழியுதுகாலம்.

முள்ளாய் கிடக்கும் மரமும் பூத்துக்குலுங்கும்
கல்லாய் கிடக்கும் பாதையும் பூவாய்நிறையும்

முள்ளும் கல்லும் பக்குவமாய் ஆக்கினாலும்
சுயமும் கனமும் இழந்தே கழியுதுகாலம்

நம்பிக்கை ஒளிவீசும் வான்மேகம்
தம்கைநம்பி வாழும் குதூகலம்

பாதையும் பாதையும் இணையும் காலம்
வான்மேகமாய் பொழியும் ஆனந்தகீதம்.

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். சிறப்பாக இத்தனை கவிதைகள் மலரக் காரணமாக இருந்த தங்களுக்கும் வாழ்த்துகள்.

பதிவின் இறுதி வரிகள் சிறப்பு.

Yoga.S. said...

படலையைத் திறந்து விட்டிட்டு எங்கையோ விண்ணாணம் பறையப் போட்டா போல,ஹி!ஹி!ஹி!!!!

அம்பலத்தார் said...

இயலவில்லையா?இது காரணமற்ற துவளல்.உடனேயே மனத்திற்குப்பிடித்த உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

அதுவும் உடனே!
காரணம் துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?//
நல்ல ஒரு உளவியல்கருத்தைக் கூறியிருக்கிறியள். பலர் சோகங்களில் இருந்தும் கவலைகளிலிருந்தும் மீளமுடியாது மிகுந்த மனஅழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்பது உண்மை.

Anonymous said...

அனைவருக்கும் விருது வழங்கிய கவிதாயினிக்கு அனைவரின் சார்பாக நன்றி நன்றி நன்றி !!!

ஹேமா said...

//ரொம்ப ரொம்ப சுப்பரா அழகா அருமையா கவிதை எழுதிய கலைக்குசிறப்பு வாழ்த்துக்கள்..//

ஆரப்பா இது.தனக்குத்தானே வாழ்த்துச் சொல்லிக்கொள்றது !

Anonymous said...

விருது பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

ரொம்ப ரொம்ப சுப்பரா அருமையா அழகா கவிதை எழுதிய
கலைக்கு ரீ ரீ அண்ணாக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

Anonymous said...

யோகா மாமா ,அம்பலத்தார் அங்கிள் சுப்பரா எழுதி இருக்கீங்க ..நீங்களே கேடயம் வாங்க தயணினால் நான் லாம் என்ன செய்வினம் ...

ஹேமா said...

//ரொம்ப ரொம்ப சுப்பரா அருமையா அழகா கவிதை எழுதிய
கலைக்கு ரீ ரீ அண்ணாக்கு சிறப்பு வாழ்த்துக்கள்...//

இங்க பார்டா...காக்கா...ஆரும் பாத்துச் சிரிக்கப்போயினம் !

Anonymous said...

ஹைஏஎ ஹைஏஎ ஹெமாஆஆஆஅ அக்கா ஆஆஆஆஆஆ வாங்கோ ...ஜாலி ஜாலி ....

நீங்க வரமாட்டினம் எண்டு நினைத்திணன் இந்த நேரத்தில் ...வந்து போட்டிங்க ஜாலி ஜாலி ஜாலி

Asiya Omar said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தெரியாமல் போய்விட்டதே ஹேமா கையால் விருது வாங்கியிருப்பேனே!பாராட்டுக்கள்.

ஹேமா said...

கருவாச்சிக்குட்டி எப்பிடி...சுகம்தானே.எப்பிடி விருது வடிவாயிருக்கோ?சந்தோஷமோ ?

அப்பா....வருவார் சிலநேரம் !

Anonymous said...

இங்க பார்டா...காக்கா...ஆரும் பாத்துச் சிரிக்கப்போயினம் !///

அக்கா இதுல சிரிக்கிறதுக்கு என்ன வேண்டி இருக்கு ....உண்மை அது வல்லோ ...
ஆரும் சிரித்தாலும் அழுதாலும் உண்மை ஒறுபொதும் அழியாது ...மூடி இட்டு மறைத்தாலும் மறையாது ....
யோகா maamaa .கலை ,ரீ ரீ annaa அவர்களின் திறமையை உலகம் அறிய வேண்டிய naal நெருங்கி விட்டது ....

Anonymous said...

அது என்ன குட்டி தத்துவம் அக்கா ...ரொம்ப நல்ல இருக்கு ...கவலையோடு இருந்திணன் ஜாலி யா ஆக்கிடீங்க

ஹேமா said...

நேசன்,கலை உலகப் புகழ் பெற்றவர்களேண்டு முதலேயே தெரியுமே... !

குட்டிக்கதை எனக்காக உங்களுக்காக அப்பாவுக்காக நேசனுக்காக இப்பிடி எல்லாருக்குமே பொருந்தும்.அநேகமாக வெளிநாடுகளில் எல்லாரும் இப்பிடி மனநிலையிலதான் வாழ்றம் !

Anonymous said...

அக்கா நான் சுப்பரா irukkiranan ...neeng நல்லா sugam thaane ....

விருது ரொம்ப ரொம்ப வடிவா சுப்பரா இருக்கு அக்கா ....சுப்பரா பணிப் போறீங்க ...நான் நினைக்கவே இல்லை ..விருது கொடுப்பீங்க எண்டு ...சுப்பரா இருக்கு அக்கா ..கலக்கிப் போட்டீங்க போங்க ....

ஹேமா said...

கலை...உண்மைதான் புளொக்கர் திறந்ததுக்கு இதுதான் முதல் தரம் நான் மத்தவங்களுக்கு விருது குடுக்கிறது.அவ்வளவு நிறையச் சந்தோஷம் எனக்கும்.இன்னும் நிறையப்பேர் வரேல்லையே எண்டு கவலை.ஆனாலும் 30 பேர் கலந்துகொண்டிருக்கினம்.

விருது...ஐடியா மணிதான் கந்தசாமிட்ட குடுத்துச் செய்து தந்தவர்.அவர்களுக்குத்தான் நன்றி !

Anonymous said...

லேயே தெரியுமே... !

குட்டிக்கதை எனக்காக உங்களுக்காக அப்பாவுக்காக நேசனுக்காக இப்பிடி எல்லாருக்குமே பொருந்தும்.அநேகமாக வெளிநாடுகளில் எல்லாரும் இப்பிடி மனநிலையிலதான் வாழ்றம் !//////


அக்கா நேற்றிளிருதே இண்டைக்கு முழுவதும் நான் அப்புடித்தான் இருந்திணன் ...
எனக்கே போட்டப் பதிவு maari தான் இருந்தது ....உங்கட ப்லோகிர்க்கு வந்த வுடன் தான் மனசு லேசாப் போச்சி ...

Anonymous said...

மாமா ரீ ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள் ரே ரீ அன்ன anaivarum நலம் தானே அக்கா ..

ஹேமா said...

அம்பலம் ஐயா,செல்லம்மா மாமி,அப்பா,நேசன்,மணி,காட்டான் மாமா எல்லோருமே சுகம்.எல்லாரும் முகப்புத்த்கத்திலதான் இருப்பினம்.

இண்டைக்கு நேசன் பதிவு போடவெண்டு சொன்னவர்.

அம்பலம் ஐயா பதிவு போட்டிருக்கிறார்.இப்ப 2 தரம் புரட்சிப்பதிவு.பதில் சொல்லக் கொஞ்சம் கஸ்டமும் தயக்கமும் !

Anonymous said...

இல்லை அக்கா niraiyaa per எழுதி irukkiraangale அக்கா ....athuvum puthusaa கவிதை ezuthuravanga சுப்பரா எல்லாம் ezuthip pottaanga ...ungalukku தான் எங்களை எழுத vaiththa பெருமை சேரும் ....

Yoga.S. said...

இரவு வணக்கம் கலை&ஹேமா!சந்தோஷமா இருக்கு!ரெண்டு பேரும் மாறி,மாறி ................................கண் படாமல் இருக்க வேண்டும்,இறைவனை வேண்டுகிறேன்.வருஷம் பிறந்ததுக்கு அப்புறம் சந்திப்பதில் மகிழ்ச்சி!கொஞ்சம் மனதும் லேசாகி இருக்கிறது!ஹேமா கோவில் போய் வந்தபின் சந்தோஷமாக இருப்பதாக சொன்னது வயிற்றில் பால் வார்த்தது போல்!

ஹேமா said...

அப்பா....வாங்கோ.கலை வந்திட்டுப் போய்ட்டாபோல.

தனக்கும் உங்களுக்கும் ரீரீ அண்ணாவுக்கும் தானே வாழ்த்துச் சொல்லியிருக்கிறா.தனக்குத் தானே வாழ்த்துச் சொல்ற ஆள் இவ ஒரு ஆள்தான் !

Yoga.S. said...

நல்ல வேளை,வாழ்த்து சொல்வதோடு நிறுத்தி விட்ட!பலர் "டாக்டர்" பட்டமே சூட்டிக் கொ(ல்)ள்கிறார்களே?

ஹேமா said...

கருவாச்சி...என்ன பிரச்சனை.ஒண்டுமில்லையே !

அப்பா இந்த வருஷப்பிறப்பு அவ்வளவு சந்தோஷம்.அன்பின் வலிமையை கோயிலுக்குள் நின்றபோது உணர்ந்தேன்.இதுதான் கடவுள்.முகம் அறியா அந்த அன்புதான் கடவுள் !

Anonymous said...

வணக்கம் யோகா மாமா ...நான் நினைச்சதை சொல்லி விட்டிங்க மாமா ...எனக்கும் பயம் வந்துப் போய்ச்சி கண்ணு வருமோ எண்டு ....
நல்லா இருக்கோணும் ellaarum இப்போது போலவே எப்போதும்

Yoga.S. said...

கலை said...

இல்லை அக்கா நிறைய பேர் எழுதி இருக்கிறாங்களே அக்கா ....அதுவும் புதுசா கவிதை எழுதுறவங்க சுப்பரா எல்லாம் எழுதிப் போட்டாங்க...உங்களுக்கு தான் எங்களை எழுத வைத்த பெருமை சேரும் ....////உண்மைதான்,கலை!ஆனாலும் அக்காவுக்கு வாழ்த்தும்,பட்டமும் கொடுத்திருக்கலாமே?

Anonymous said...

அக்கா இஞ்ச தான் இருக்கிரணன் ...எங்கயும் போகலா ....

Yoga.S. said...

கலை said...

வணக்கம் யோகா மாமா ...நான் நினைச்சதை சொல்லி விட்டிங்க மாமா ...எனக்கும் பயம் வந்துப் போய்ச்சி கண்ணு வருமோ எண்டு ....
நல்லா இருக்கோணும் ellaarum இப்போது போலவே எப்போதும்.///கடவுள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.அக்கா பக்கத்து நாட்டில் தான் இருக்கிறா.ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன்..........

Anonymous said...

அப்பா இந்த வருஷப்பிறப்பு அவ்வளவு சந்தோஷம்.அன்பின் வலிமையை கோயிலுக்குள் நின்றபோது உணர்ந்தேன்.இதுதான் கடவுள்.முகம் அறியா அந்த அன்புதான் கடவுள் !/////
உண்மைதானுங்க அக்கா ...ரொம்ப sariyaach

sonneenga ...நானும் kastamaa irunthinaan ippothaan pazhayaa maari வந்தினான்

தனிமரம் said...

வணக்கம் ஹேமா முதலில் குட்டித் தத்துவம் சொல்லி மனதிற்குபுத்துணர்ச்சி சொன்னதுக்கு நன்றி! எப்படி இப்படி எல்லாம் உங்களுக்கு தோன்றுகின்றது.??

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா இந்த வருஷப்பிறப்பு அவ்வளவு சந்தோஷம்.அன்பின் வலிமையை கோயிலுக்குள் நின்றபோது உணர்ந்தேன்.இதுதான் கடவுள்.முகம் அறியா அந்த அன்புதான் கடவுள் !////அவனின்றி அணுவும் அசையாது.அந்த "அவன்" எவனாகவும் இருந்து விட்டுப் போகட்டும்!தாய் காட்டியது,தந்தையும்,கடவுளும்!

ஹேமா said...

நேசன் ரீரீ அண்ணா பதிவு போட்டாச்சுசுச்ச்ச்ச்சுச்சுசுசு !

Anonymous said...

அக்காவுக்கு நன்றி சொல்லிப் போட்டேன் மாமா ....அக்கா கவிதாயினி ஆகிட்டாங்க ...அக்காக்கு என்னப் பட்டம் கொடுக்குறது எண்டு எனக்குத் தெரியல நீங்களே சொல்லுங்கோ மாமா ..

Yoga.S. said...

தனிமரம் said...

வணக்கம் ஹேமா முதலில் குட்டித் தத்துவம் சொல்லி மனதிற்குபுத்துணர்ச்சி சொன்னதுக்கு நன்றி! எப்படி இப்படி எல்லாம் உங்களுக்கு தோன்றுகின்றது.??///இரவு வணக்கம்,நேசரே!அது கலைக் குடும்பம் இல்லையா,அது தான்!

Anonymous said...

ஹோஒ சூப்பர் மாமா கலக்குறிங்க ...கண்டிப்பாய் எல்லாரும் ஒருநாள் சந்திக்கோணும் ...

நீங்கள் அக்கா கூடிய சிக்கிரம் சந்தீப்பெர்கள் அல்லோ என்னை மட்டும் விட்டுட்டு...

ஹேமா said...

நேசன் வாங்கோ கோப்பியோ,தேத்தண்ணியோ வைக்க.எல்லாரும் இருக்கிறம் இங்க இப்ப !

வாழ்க்கை அனுபவங்கள்தானே எழுதவே வைக்கிறது.அநேகமாக என் எழுத்துக்கள் எல்லாமே அனுபவ உணர்வுகள்தான்.அதுதான் குட்டித்தத்துவம் !

ஹேமா said...

கட்டாயம் ஒருநாளைக்கு எல்லாரும் சந்திப்பம்.கலைக்குட்டி இப்ப உலகம் கைக்குள்ள.உங்களைக் காணவெண்டா உடனே வந்திடலாம்.ஏன் கவலை !

கலைக்குடும்பம் சொல்லி சந்தோஷப்படுத்துறீங்கள் அப்பா.ஆனலும் திக்கொருவராய் கலைகளைத் தொலைத்து இழந்து பிரிந்தே கிடக்கிறோம்.சில உறவுகளின் முகங்களே தெரியவில்லை !

Anonymous said...

உண்மைதான் அக்கா கலைக் குடும்பம் ஆகிட்டோம் தான் எல்லாரும் ..
பார்த்து பழga முடியாவில எண்டாலும் அன்பான vaarththaigal எப்போதும் நம்மளை ஒன்றாய் இணைக்கும் அக்கா

Yoga.S. said...

ஹேமா said...
கலைக்குடும்பம் சொல்லி சந்தோஷப்படுத்துறீங்கள் அப்பா.ஆனலும் திக்கொருவராய் கலைகளைத் தொலைத்து இழந்து பிரிந்தே கிடக்கிறோம்.சில உறவுகளின் முகங்களே தெரியவில்லை.///// என்னம்மா செய்ய?விதி வலியது,இல்லையா?பல ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்த உறவுகள் பற்றி செய்திகள் அறிகிறோம்,இல்லையா?காலம் கை கொடுத்தால் எதுவும் நடக்கும்,பார்க்கலாம்!

Yoga.S. said...

கலை said...

உண்மைதான் அக்கா கலைக் குடும்பம் ஆகிட்டோம் தான் எல்லாரும் ..
பார்த்து பழga முடியாவில எண்டாலும் அன்பான vaarththaigal எப்போதும் நம்மளை ஒன்றாய் இணைக்கும் அக்கா.////நம்புவோம்!

Yoga.S. said...

விடை பெறுகிறேன்,இரவு வணக்கம் எல்லோருக்கும்,நல்லிரவாக அமையட்டும்!!!

Anonymous said...

இரவு வணக்கம் மாமா
நல்லிரவாக அமையட்டும்!!!

ஹேமா said...

போய்ட்டு வாங்கோ அப்பா.இரவின் காற்று இதமாக வரட்டும் !

அம்பலத்தார் said...

வணக்கம் யோகா, ஹேமா, நேசன், கலை எல்லாருக்கும் அன்பான இனிய மாலை வணக்கங்கள்

ஹேமா said...

வாங்கோ அம்பலம் ஐயா.செல்லம்மா மாமியும் இருக்கிறாவோ கூட.சுகம்தானே !

நாங்கள் எல்லாரும் நேசன் பதிவில இருக்கிறம் !

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

விடை பெறுகிறேன்,இரவு வணக்கம் எல்லோருக்கும்,நல்லிரவாக அமையட்டும்!!!//
ஓகோ யோகா விடைபெற்றிட்டிங்களா? "அதுசரி வாறது பேய் பிசாசுகள் நடமாடுற சாமப்பொழுதில இந்தத்திறத்தில விடைபெற்றிட்டியளோ என்று கேள்விவேற" என்று யோகா முணுமுணுக்கிறது இங்க ஜேர்மனிவரைகேட்கிறது.
இன்றைய இரவு உங்களுக்கு நல்ல நிம்மதியான தூக்கத்தை தரட்டும். மற்றுமொருநாளில் சந்திப்போம் யோகா

அம்பலத்தார் said...

ஹேமா said...

அம்பலம் ஐயா,செல்லம்மா மாமி,அப்பா,நேசன்,மணி,காட்டான் மாமா எல்லோருமே சுகம்.எல்லாரும் முகப்புத்த்கத்திலதான் இருப்பினம்.

இண்டைக்கு நேசன் பதிவு போடவெண்டு சொன்னவர்.

அம்பலம் ஐயா பதிவு போட்டிருக்கிறார்.இப்ப 2 தரம் புரட்சிப்பதிவு.பதில் சொல்லக் கொஞ்சம் கஸ்டமும் தயக்கமும் !//
ஏனம்மா ஹேமா தயக்கம். எமது சமூகத்தில் இருக்கும் குறைநிறைகளை நாங்கள்தானே கலந்துபேசி விவாதித்து முன்னேற்றம்காணவேண்டும். நீங்கள் மிக ஆணித்தரமாக துணிந்து உங்கள் கருத்துக்களை சிறப்பாகத்தானே முன்வைத்திருக்கிறியள். மீண்டும் அதற்கு எனது பாரட்டுக்கள்.

ஹேமா said...

அம்பலம் ஐயா...உண்மையைச் சொன்னாலும் பெண் ஒருத்தி சொன்னால் அசிங்கமாக நினைக்கிற உலகம் இது.ஆனாலும் ஓரளவு சொல்லச் சுதந்திரம் தந்திருக்கிறீங்கள்.உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லுவன்.என் கருத்தை வெளிப்படுத்தவும் சரி பிழை தெரிஞ்சுகொள்ளவும் தளம் தந்தீர்கள்.நன்றி !

இப்போ நேசன் பதிவில் ரெவரியும் உங்கள் பதிவில் சொன்ன கருத்துக்கு எதிர்பாராத பின்னூட்டமென்று சந்தோஷமாய்ச் சொன்னார் !

Anonymous said...

இப்போ நேசன் பதிவில் ரெவரியும் உங்கள் பதிவில் சொன்ன கருத்துக்கு எதிர்பாராத பின்னூட்டமென்று சந்தோஷமாய்ச் சொன்னார் !///

அக்கா எனக்கு என்ன சொல்லுவதண்டெத் தெரியல ...ஆருm திட்டுரான்களா பாரட்டுரான்களா எண்டு கூடப் புரியல ...அவ்வ்வ்வ்

ரே வெ ரீ அண்ணா உங்களை எதிர்த்து பின்னோட்டம் போட்டினம் எண்டு தான் நினைத்ஹிணன் ...

உண்மையா உங்களை பாராட்டனும் அக்கா சுப்பரா கவிதை எழுதுறிங்க நல்லா பேசுறிங்க ....

ஹேமா said...

கலை..இன்னும் நித்திரை வரேல்லையோ?

அம்பலம் ஐயான்ர பதிவு கொஞ்சம் கவனமாகச் சொல்லவேண்டிய பதிவு இண்டைக்கு.நான் என்ர மனசில பட்டதைச் சொன்னேன்.அதுதான்....ஆனால் என்ர கருத்தை அப்பா,அம்பலம் ஐயா,ரெவரி எல்லாரும் சரி சொல்லிட்டினம்.சந்தோஷம்தான் !

அம்பலத்தார் said...

ஹேமா said...

கலை..இன்னும் நித்திரை வரேல்லையோ?

அம்பலம் ஐயான்ர பதிவு கொஞ்சம் கவனமாகச் சொல்லவேண்டிய பதிவு இண்டைக்கு.நான் என்ர மனசில பட்டதைச் சொன்னேன்.அதுதான்....ஆனால் என்ர கருத்தை அப்பா,அம்பலம் ஐயா,ரெவரி எல்லாரும் சரி சொல்லிட்டினம்.சந்தோஷம்தான் !//
அப்பா மூத்தமகளின் கருத்துத்தான் தனது கருத்து என குறிப்பிட்டிருந்தாரே அதைவிடப்பெரிய கௌரவம் வேறில்லை ஹேமா

Seeni said...

ஹேமா!
இது தகுமா?

படங்களையும்-
தந்தீர்!

எழுதிடவும்-
சொன்னீர்!

விருதையும்-
தாரீர்!

உங்களுக்கு எனது-
உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

விருதுக்கு நன்றி ஹேமா... விருது பெற்ற சக பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கணேஷுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!
மனம் கனத்துப் போகும் சமயங்கள் பற்றி சொன்னீர்கள். எனக்கும் அந்த அனுபவங்கள் உண்டு. இசையும் புத்தகங்களும் என்னை அந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டெடுக்கும்.

ஸ்ரீராம். said...

நித்திலம் - பவளசங்கரி கவிதை அருமை.

இராஜராஜேஸ்வரி said...

விருதுக்கு நன்றி தோழி..

விருது பெற்ற தங்களுக்கும் , அனைத்துவிருது பெற்றவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...

இராஜராஜேஸ்வரி said...

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது மேல்....

aஅருமையான வரிகள்..

இராஜராஜேஸ்வரி said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

முத்தாய் ஒளிவீசும் அருமையான கவிதை.. பாராட்டுக்கள்..

Unknown said...

விருதுக்கு நன்றி சகோதரி!

சா இராமாநுசம்

தனிமரம் said...

மனதில் தோன்றியதை கிறுக்கினேன் அதையும் பாராட்டி விருந்து தந்ததுக்கு நன்றி ஹேமா!விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

‌இப்படி படத்தை ரசிச்சு எல்லாரும் கவிதை எழுதினதும், நான் (கவிதை மாதிரி) எழுத ட்ரை பண்ணினதும் மனசுக்கு ரொம்பவே புத்துணர்ச்சி தந்தது ஹேமா! அதற்குப் பரிசும் தர்றீங்க... ஃப்ரெண்டின் அன்போடு சேர்ந்து வர்ற பரிசு இன்னும் மகிழ்ச்சி தருது. என் இதய நன்றி! இந்த கவிதை ஊர்வலத்துல நான் எதிர்பாராத ரெண்டு பேர் கவிதை எழுதினதைப் பாத்து வியந்துபோனேன்: ஸ்ரீராம், நேசன்! அவங்களுக்கும் வாழ்த்துக்கள்!//
நன்றி கணேஸ் அண்ணா உங்கள் பாராட்டுக்கு மூத்தவர் உங்களின் மனம்திறந்த பாராட்டுக்கு நான் தகுதியானவனா தெரியாது ?கவிஞர்கள்,புலவர்கள் கவிதாயினிகள் இருக்கும் மேடையில் ஏதோ நானும் முயன்றேன். சில மூடிவைத்த நாட்களை மீட்டுப்பார்க்கும் படமாகிவிட்டது அந்தப் படம் கணேஸ் அண்ணா!

தனிமரம் said...

நேசன் வாங்கோ கோப்பியோ,தேத்தண்ணியோ வைக்க.எல்லாரும் இருக்கிறம் இங்க இப்ப !

வாழ்க்கை அனுபவங்கள்தானே எழுதவே வைக்கிறது.அநேகமாக என் எழுத்துக்கள் எல்லாமே அனுபவ உணர்வுகள்தான்.அதுதான் குட்டித்தத்துவம் !

17 April, 2012 20:29
//பால்க்கோப்பி தாங்கோ நான் தேத்தண்ணி குடிப்பது இல்லை .ஹீ //ம்ம்ம் அனுபவம் தான் அதிகம் சிந்திக்கவும் தூண்டுகின்றது.

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா !இன்று எங்கள் தாயாரின் நினைவு நாள்(ஆண்டுத் திவசம்)

சிந்தையின் சிதறல்கள் said...

எண்ணங்களை உதித்திடச்செய்து அதற்கென வழியமைத்து அதன்பால் அனைவரையும் ஈர்த்து சந்தோசக்கடலில் மூழ்கிட வழிசெய்த உங்களுக்கும் நன்றிகளும் விருதுகளின் சமர்ப்பணமே நன்றி உங்களின் விருதுக்கும் வாழ்த்துக்கும்

K said...

அட, எனக்கும் விருதா? அப்புடி நா என்ன எழுதிட்டேன்! என்னத்தையோ கிறுக்கிவிட்டு, அதற்குக் கவிதை என்று பேர் வைத்தேன்!

இருந்தாலும் ஒரு பிரபல பதிவரிடம் இருந்து ( ஹேமாவைத்தான் சொல்றேன் ) விருது வாங்குவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கு! நன்றி ஹேமா!!

Anonymous said...

'கவிதை எழுதலாம் வாங்கோ' பதிவுல நான் எழுதின கமெண்ட் காணவே இல்லை ஹேமா. பதிவு முழுதும் படிச்சேன். ரொம்ப ரொம்ப அருமையா இருந்துது. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி அதுல எல்லோரையும் அழகா கவிதை எழுத வெச்சது ரொம்பவே பாராட்ட பட வேண்டிய விஷயம் ஹேமா. குறிப்பா ஸ்ரீராம் என்ற பிரமாதமான கவிஞர் இந்த பதிவு மூலம் வலை உலகுக்கு கிடைச்சிருக்காரே. :)
உங்க குட்டி தத்துவம் பிரமாதம். பல நேரங்களில மனசு ரொம்பவே துவண்டுதான் போறது. ஸ்ரீராம் சொன்ன மாதிரி இசையும், சில எழுத்துக்களும் தான் மனதுக்கு ஆறுதல்.

நித்திலம் பவள சங்கரி கவிதை மிகவும் அருமை!

துரைடேனியல் said...

அலுவலகத்திலிருந்து இப்போதுதான் வந்தேன். அங்கு இணையம் வேலை செய்யவில்லை. இல்லையென்றால் காலையிலேயே வந்திருப்பேன்.

நன்றி ஹேமா உங்கள் விருதுக்கு. இதைப் போல அடிக்கடி செய்யுங்கள். அதாவது கவிதை எழுத வையுங்கள். விருது வேண்டாம். விட்ஜெட் வச்சே ப்ளாக் பழுத்துரும். (ஹி....ஹி)

Anonymous said...

akkaaaaaaaaaaaaaaaaaaa ,maamaaa ,annaa vanakkam

மோ.சி. பாலன் said...

கவிதை எழுதவும் வைத்து விருதும் தந்தமைக்கு மிக்க நன்றி ஹேமா.

அம்பலத்தார் said...

ஹேமா நீங்கள் தந்த விருதை மகிழ்வுடனும், நன்றியுடனும் எடுத்திட்டுப்போய் எனது வலைப்பூவில் வைத்துவிட்டேன்.

கௌதமன் said...

நான் எழுதியதும் கவிதை என்று ஹேமா (மட்டும்தான்) கூறியுள்ளார். இதற்கெல்லாம் விருது வாங்கிக் கொண்டு அதை வலையிலும் போட்டுக் கொண்டேன் என்றால், வீட்டுக்குப் போலீஸ் வந்து, விருதை எங்கிருந்தோ லவட்டிக் கொண்டு வந்துவிட்டேன் என்று சொல்லி, என்னை அரெஸ்ட் செய்து உள்ளே தள்ளி விடுவார்கள். அதனால 'எஸ்கேப்பு'. விருது பெற்ற மற்ற உண்மைக் கவிஞர்களுக்கு என் வாழ்த்துகள்!

S Murugan said...

இன்று தான் உங்கள் வளைத்தளத்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது . விருதெல்லாம் கொடுக்கிறீர்கள் என்றால் நானும் போட்டியில் கலந்திருப்பேன். விருது பெற்றவருக்கெல்லாம் என் வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

விருதுன்னதும் ஓடியாந்தேன்.. இந்தாங்க ஒரு கப் சாராய நீர் மோர்.. டோஸ்ட்.

தாத்தாவின் சாப்பாட்டு வழக்கம் சில நினைவுகளைக் கிளறியது.
தத்துவங்கள் முத்து.

வேர்கள் said...

விருதா....
யாருக்கு....
எனக்கா.......
எங்க.. எங்க...
ஒ...
thanks hemaaaa .. :-)
//கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது மேல்....!//
super ...
நம் கண்ணீர் துடைக்க ஒற்றை விரல்கூட இல்லையே ஹேமா இந்த சர்வேதேச சமூகத்தில்....

Anonymous said...

அக்கா வணக்கம் ...நேற்றும் லேட் ஆ வந்தீங்க ..இனதும் லேட் தான ..கோவிலுக்கு போனீங்களா ...

நல்லச் சாப்பிடுங்கோ அக்க்க ..நாளை சந்திப்பம்

Anonymous said...

அக்கா எப்புடி இருக்கீங்க ...


சுகமா ... எப்போது வருவஈங்க

கீதமஞ்சரி said...

கவிதை தந்த விருதுக்கு என் அன்பும் நன்றியும் ஹேமா. பாசத்துக்கான கவிதையை இப்போது இணைத்திருக்கிறேன். பாருங்கள். அது இல்லாமல் விருது பெற மனம் உறுத்தியது. பங்குபெற்ற அனைத்துக் கவிதைகளும் மனம் நிறைத்தன. எத்தனை விதமான பார்வைகள், எண்ணங்கள், கவிச்சிந்தனைகள்! அத்தனையையும் வெளிக்கொணர்ந்து ஊக்குவித்த உங்கள் பண்புக்கு மிகவும் நன்றி.

சோர்ந்திருக்கும் மனங்களைத் தூக்கி நிறுத்துவதைச் சோர்வடையாமல் செய்வதற்காகவே உங்களைப் பாராட்டவேண்டும். பாராட்டுகள் ஹேமா.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP