Friday, May 25, 2012

தமிழர் வாழ்ந்தமைக்கு ஆதாரமான Old Tamil Scriptions/ Inscriptions!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது.அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.....!

’தாமிரபரணி' ஆற்றின் கரையில் 'ஆதிச்சநல்லூர்' என்ற ஊர் உள்ளது.இது ஓர் இடுகாடு.இறந்தவர்களைப் புதைத்த இடம்.இதன் பரப்பளவு 114 ஏக்கர்.இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர்.தாழி என்றால் பானை என்பது பொருள்.இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை 'முதுமக்கள் தாழி' என்றும் ’ஈமத்தாழி’ என்றும் கூறுவர்.
தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு.ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும்.அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை.இந்த இடுகாடு[?].கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது.இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன.நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.
தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ’டாக்டர்...ஜாகர்’ என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம்.அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்.அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த ’லூயி வேப்பிக்கியூ’ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார்.அப்போது மண்வெட்டி,கொழு முதலியன கிடைத்தன.ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் 'அலெக்சாந்தர் ரீயா' அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி,ஆபரணங்கள்,எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்."மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்....அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்.அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்.அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு,வார்ப்பு இரும்பு,எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர்.பயிர்த்தொழில்,சட்டிப்பானை வனையும் தொழில்,நெசவுத் தொழில்,கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன.திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது.சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து,ஆப்பிரிக்கா,சுமேரியா,கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் ’அறிஞர் ஹீத்’ என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும்,ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து 'சாத்தன்,கண்ணன்' என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவிப் பணி செய்ததாக கல்வெட்டு 'அறிஞர் ஐராவதம் மகாதேவன்' குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து ’சகர்மேன் என்ற அறிஞர்’ ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும்,ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது.அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம்.ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் 'பூமராங்.'

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி,கொழு,நெல்,உமி,பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல்,பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு.தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை 'டாக்டர் கால்டுவெல்' வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது.அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி,செம்பு,தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன.ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்."எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது.அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும்.இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது.2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது.வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு,செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.செய்வார்களா....முடியுமா....!

சிவச்சந்திரன் பாரதி....முகப்புத்தகத்திலிருந்து.....மே 2- 2012 ல் !நன்றி....!

118 comments:

K said...

வணக்கம் ஹேமா அக்கா ( நிரூபனின் முறையில் ) நலமா இருக்கிறீங்களோ? சாப்பிட்டாச்சோ? இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-)))

கலா said...

ஹாய்...நான்தான் முதல் ஹேமா,
அந்த நாத்தனார் கொஞ்சம் புளுங்கட்டும்......

கலா said...

அடா..மணி முதல் அடிச்சிட்டாகளா?
பரவாயில்லை... ஆண்களுக்கு முதலிடம் ...ரொம்பப் பெருந்தன்மையாக......

K said...

இஞ்ச பாருங்கோ ஃபேஸ்புக்குல இருந்து எடுத்துப் போட்டிருக்கிறா! :-)))

ஹேமா, உங்களை ஃபேஸ்புக் பக்கம் போக வேண்டாம் எண்டு ஒருத்தரும் தடை போடேலையோ? குடுத்து வைச்ச ஆளப்பா நீங்கள்! :-)))

கடவுள் என்னைய மட்டும் ஏன் இப்படி விட்டு விட்டு சோதிக்கிறார்??? ஹி ஹி ஹி ஹி :-)))

குறிப்பு - ச்சீச்சீ நான் மனசார திருந்திட்டேன்! சும்மா ஒரு பகிடிச் சொன்னான்! :-))

K said...

அடா..மணி முதல் அடிச்சிட்டாகளா?
பரவாயில்லை... ஆண்களுக்கு முதலிடம் ...ரொம்பப் பெருந்தன்மையாக...... ///////

ஹா ஹா ஹா ஜஸ்ட் எ ஃபியூ செக்கனில நான் முந்திட்டன்! அது சரி ஹேமா முதலாவதாக வாற ஆக்களுக்கு கோப்பி / டீ / யூஸ் ஒண்டும் இல்லையோ?

ஏதாவது கடிக்க கிடிக்க தந்தா தானே, பொறுமையா இருந்து படிச்சு, பம்பல் அடிச்சுட்டுப் போகலாம்! :-))

ஹேமா said...

வணக்கம் கும்பிடுறேனுங்க.சரி சரி வெள்ளிகிழமை வணக்கமுங்கோ மணி....கலா...வாங்கோ சந்தியில இண்டைக்குப் பாயாசம் வடை.ஏன் மணியத்தார் நாங்கள்தான் பழமையான பரம்பரையெண்டு பதிவு போட்டிருக்கிறன்.மணியம்கஃபேல்ல இருந்து ஏதாச்சும் புதுச்சாப்பாடு கொண்டு வந்திருக்கலாமெல்லோ.

அதுசரி....பூசனிக்காய்,தேசிக்காய் எல்லாம் எடுத்தாச்சே.இன்னும் ஃபேஸ்புக்கில செய்வினை இருக்கே.

ஊசிச் செய்தி...உங்களிண்ட புளோக்கருக்கும் கிட்டடியில தேசிக்காய் எறியப்படுமாம்....!

K said...

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு'மூடிமறைப்புதாமிரபரணி'ஆற்றின் கரையில்'ஆதிச்சநல்லூர்'என்ற ஊர் உள்ளது ////////

இந்தப் பந்தி விளங்கேலை! இதில ஏதோ மிஸ்ஸிங் இருக்கு! நான் நினைக்கிறன் சில வார்த்தைகளோ, ஃபுல்ஸ்டொப்போ, கமாவோ விடுபட்டிருக்கு!

ஒருக்கா சரி பாருங்கோ ஹேமா!

அப்புறம் டியூசன் ஃபீஸை வெஸ்டேர்ன் யூனியனுக்குள்ளால அனுப்பி விடுங்கோ :-)))

பால கணேஷ் said...

தமிழர்களின் நாகரீகம் காலத்தினால் முந்தையது என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது. அரிய விஷயத்தை. அனைவரும் அறிய வேண்டிய விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி ஃப்ரெண்ட்!

K said...

ஏன் மணியத்தார் நாங்கள்தான் பழமையான பரம்பரையெண்டு பதிவு போட்டிருக்கிறன்.மணியம்கஃபேல்ல இருந்து ஏதாச்சும் புதுச்சாப்பாடு கொண்டு வந்திருக்கலாமெல்லோ. ///////

என்னது மணியம் கஃபேல இருந்து “ புது” சாப்பாடோ? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இந்தாங்கோ பிடியுங்கோ ஹேமா சிக்கன் கொத்து பாசல்! இண்டைக்கு வெள்ளிக்கிழமை எண்டும் பார்க்காமல் போய்ச் சாப்பிட்டு ஓடிவாங்கோ :-))

K said...

ஊசிச் செய்தி...உங்களிண்ட புளோக்கருக்கும் கிட்டடியில தேசிக்காய் எறியப்படுமாம்....! ////////

என்னது என்ர ப்ளாக்குக்கும் செய்வினையா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இது யாரோட சதி?

ச்சீச்சீ..... இது “ அவையளா” இருக்காது! :-)))))

கலா said...

."எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.\\\\\\\\
.

உண்மைதான்!


அட நான் நினைத்தேன் எவ்வளவு
கஷ்ரப்பட்டு ஆராட்சி செய்து
தேடிப்பொறக்கிப் போட்டிருபீருகளென!
ஆனால்...ரொம்ப எளிமையாக...
வேலையை முடித்து விட்டீர்களே
இருந்தாலும்...அறியமுடிந்தது
நன்றிஹேமா.

ஹேமா said...

ஒரு முற்றுப்புள்ளிதான் மிஸ்ஸிங்க் மணி.இப்ப சரியோ.ஃபீஸோ.....அதெல்லாம் கிடையாது பாருங்கோ மணியத்தார்.உங்களுக்காக நல்லமனுசன் எண்டு எல்லாரிட்டயும் வாதாடி பொம்பிளை தேடித் தாறம்.நாளைக்கு முகப்புத்தில தேடுறதா இருக்கிறன்...ஹிஹிஹி.

வெள்ளிக்கிழமை.யோகா அப்பா வந்தா திட்டுவார்.சிக்கன் கொத்து.அது நாளைக்கு லீவு எனக்கு ஃப்ரிஜ் ல வச்சிட்டு வாறன்.மரக்கறிச் சாப்பாடு ஒரு பார்சல் தாங்கோ.வேலைக்குப் போகவேணும் நான் !

K said...

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார்.அப்போது மண்வெட்டி,கொழு முதலியன கிடைத்தன.ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். :////////

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! உண்மையாவோ? இங்கு பாரீஸில் ஆசிய நாடுகளுக்கென ஒரு சிறப்பு மியூஸியம் இருக்கு! அங்க உவர் கொண்டு வந்த எல்லாப் பொருட்களும் இருக்கும் எண்டு நினைக்கிறன்!

அந்த மியூஸியத்துக்குப் போய் நான் நிறைய படங்கள் எடுத்திருக்கிறன்!

இந்த லிங்கில பாருங்கோ :-)))

http://sorgathinvasalpadi.blogspot.fr/2011/11/blog-post_10.html

கலா said...

வணக்கம் ஹேமா,மணி
இன்று வெளளிக் கிழமை நான் விரதம்
எனக்கு ஒன்றும் வேண்டாமப்பா....
மிக்க நன்றி
ஏதாவது கடிக்க கிடிக்க தந்தா தானே, பொறுமையா இருந்து படிச்சு, பம்பல் அடிச்சுட்டுப் போகலாம்! :-))\\\\\\
ஹேமா,
பாம்பு,தவளை,பூச்சி,கணக்கன்புழு எல்லாம் இருக்கு ..கடிக்கக் கிடிக்க நன்றாக இருக்கும் அனுப்பி வைக்கடுங்களா?

ஹேமா said...

வாங்கோ கணேஸ்.எனக்கும் இது நல்ல விஷயமாகத் தெரிஞ்சுது.அதுதான் கொப்பி பண்ணிக்கொண்டு வந்தன்.வருங்காலச் சந்ததிகளும் அறியவேணும்.விஜய் தொலைக்காட்சியிலும் ’நடந்தது என்ன’ நிகழ்ச்சியில் இதுபற்றின செய்திகள் பார்த்திருந்தேன்.இந்தச் செய்தி எழுத்தில் கிடைத்ததும் சந்தோஷம்.சிவச்சந்திரன் பாரதிக்கும் நன்றி சொல்வோம் ஃப்ரெண்ட் !

K said...

ஃபீஸோ.....அதெல்லாம் கிடையாது பாருங்கோ மணியத்தார்.உங்களுக்காக நல்லமனுசன் எண்டு எல்லாரிட்டயும் வாதாடி பொம்பிளை தேடித் தாறம்.நாளைக்கு முகப்புத்தில தேடுறதா இருக்கிறன்...ஹிஹிஹி. ////////

ஹா ஹா ஹா அதென்ன வாதாடி??? அப்ப பேசிக்கா நான் நல்ல மனுஷன் இல்லையோ? :-))

சரி அது ஒருபக்கம் கிடக்கட்டும்! நீங்கள் ஃபேஸ்புக்குல எனக்கு பொம்பிளை பார்க்கிறது நல்ல விஷயம் தான்! ஆனா ஃபேஸ்புக்குல நிறைய பொம்பிளை பேரில, மீசை வைச்ச ஆக்கள் தான் இருக்கினம்! எதுக்கும் அலேர்ட்டா பொம்பிளை பாருங்கோ! ஓகே??

நான் சொன்னது நினைவிருக்குத்தானே - ஸ்லிம்மா இருக்கோணும்! என்னைவிட மண்டைக்காயா இருக்கோணும்! ஹி ஹி ஹி !!

ஹேமா said...

கலா..இருங்கோ உங்கட நாத்தனார் இப்ப வேலையால வந்திருப்பா.அக்காஆஆஆஆஆஆ எண்டு சொல்லிக்கொண்டு வருவா.பாம்பு,தவளை,பூச்சி,கணக்கன்புழு எல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ.நான் இல்லப்பா.நான் இப்பவே வேலைக்குப் போறன் !

அப்பாவும் வருவார்.நேசனும் வரக்கூடும் ஆனால் லேட்டாத்தான் !

K said...

வெள்ளிக்கிழமை.யோகா அப்பா வந்தா திட்டுவார்.சிக்கன் கொத்து.அது நாளைக்கு லீவு எனக்கு ஃப்ரிஜ் ல வச்சிட்டு வாறன். ////////

அச்சோ, உங்கட அப்பாவோ? அவரின்ர பேரைச் சொன்னவுடன எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது! அவர அண்டைக்கு வில்பந்த் எண்ட இடத்தில கண்டுட்டு, பக்கத்தில போன ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர சோலிக்கிட்ஸ்சின்ர சோலை வாங்கி என்ர முகத்தை மூடிக்கொண்டு மற்றப்பக்கம் திரும்பி நிண்டனான்! :-)))

ஹி ஹி ஹி ஹி சும்மாவே வெள்ளிக்கிழமையில மச்சம் சாப்பிட்டா திட்டுவார்! அதிலையும் நான் தந்தது எண்டு தெரிஞ்சா அவ்வளவுதான் :-)))

K said...

அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு'மூடிமறைப்புதாமிரபரணி'ஆற்றின் கரையில்'ஆதிச்சநல்லூர்'என்ற ஊர் உள்ளது. ///////

இல்லை ஹேமா, இப்பவும் வசனத்தில பிழை இருக்கு! திரும்ப வடிவா படிச்சுப் பாருங்கோ :-)))

ஹேமா said...

அந்த ஊசிச்செய்தி......பாருங்கோவன்.கடைசியில தேசிக்காய் எறியிறது ஆரெண்டு.அது ஆர் ’அவையள்’? !

அப்பாவும் நீங்களும் சந்தோஷமாயிருக்கவேணும்.என்ன அப்பாவோட முறைப்பு.வயதுக்கு மூத்தவை ஏதும் நல்லதுதான் சொல்லுவினம்.இப்ப என்னைப் பாத்து முறைக்காதேங்கோ.கருப்புக் கண்ணாடிக்குள்ளால தெரியுது.

என்ன ஸ்லிம்மா பொம்பிளையோ.....அப்ப ஷக்கீலாவை நம்பிக்கொண்டு இருக்கிறம்.....காலமையில எழும்பி வீட்டைச் சுத்தி ஓட வச்சா ஓக்கேயாயிடுவா.ஒருவேளை பிறகு குண்டா வந்தா என்ன செய்வீங்கள்.கலைச்சுப்போடுவீங்களோ.இப்பவே சொல்லி வையுங்கோ.தெரிஞ்சு வைக்கிறது நல்லதெல்லோ !

கலா said...

வேலைக்குப் போறீகளோ? ம்ம்ம,,..பத்திரமாய் {கண்,இதயம்}
பத்திரம் யாரிடமும் பறிகொடுக்காமல் வந்து சேருங்கோ பை..பை.ஹேமா
வரட்டும் அந்த நாத்தனாரு.. நானும் காத்திருக்கிறேன்

K said...

அந்த ஊசிச்செய்தி......பாருங்கோவன்.கடைசியில தேசிக்காய் எறியிறது ஆரெண்டு.அது ஆர் ’அவையள்’? ! //////////

அவையள் எண்டா, அவையள் தான்! - அது அவையளுக்கு மட்டும் தான் ஹேமா விளங்கும் :-)))


அப்பாவும் நீங்களும் சந்தோஷமாயிருக்கவேணும்.என்ன அப்பாவோட முறைப்பு.வயதுக்கு மூத்தவை ஏதும் நல்லதுதான் சொல்லுவினம். /////////

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! அது ஒரு துன்பியல் சம்பவம் ஹேமா ! கிட்டடியில கூட அம்பலத்தார் ப்ளாக்கில...... சரி அதை விடுவம்!

ஊசிக்குறிப்பு - இப்ப அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சுக்கொண்டிருக்கிறன் ஹேமா! பார்ப்பம் படிச்சு முடிய ஏதும் நல்லது நடக்குதோ எண்டு?? :-))

MARI The Great said...

தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது, தமிழக அரசும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

விரைவில் நல்லது நடக்கும் சகோ ..!

K said...

வேலைக்குப் போறீகளோ? ம்ம்ம,,..பத்திரமாய் {கண்,இதயம்}
பத்திரம் யாரிடமும் பறிகொடுக்காமல் வந்து சேருங்கோ ///////

வணக்கம் கலா! ( தனிய கலா எண்டு சொல்லுறதோ? இல்லை கலா அக்காவோ? )

ஹா ஹா ஹா ஹேமாவாவது கண், இதயத்தைப் பறிகுடுக்கிறதாவது! ஆரும் கிட்ட நெருங்கினா, செருப்பால தானாம் அடிப்பா :-))

இது நான் சொல்லேலை! வேற சுவிஸ் ஆக்கள் சொன்னவை :-)))

உண்மையாவோ ஹேமா??

கலா said...

அப்பாவும் வருவார்.நேசனும் வரக்கூடும் ஆனால் லேட்டாத்தான் !\\\
உங்கப்பா வந்தாலும் என்னை நலமா என்றுகூடக் கேட்கமாட்டார் எப்போதும் மகளும்,மருமகளுந்தான் அவருக்கு வேண்டும்...இருந்தாலும்... யோகன்ஐயா..வணக்கம்

கலா said...

வணக்கம் கலா! ( தனிய கலா எண்டு சொல்லுறதோ? இல்லை கலா அக்காவோ? ) \\\\\

தாத்தா...நீங்கள என்னை கலா என்றே கூப்பிடலாம்...மரியாதை மனதில் இருந்தால் போதும் என்னா!70 வயது தான்!எனக்கு அது அவ்வளவு வயதுபோனமாதிரித் தோணல்ல...

ஹேமா said...

//ஹா ஹா ஹா ஹேமாவாவது கண், இதயத்தைப் பறிகுடுக்கிறதாவது! ஆரும் கிட்ட நெருங்கினா, செருப்பால தானாம் அடிப்பா :-))

இது நான் சொல்லேலை! வேற சுவிஸ் ஆக்கள் சொன்னவை :-)))

உண்மையாவோ ஹேமா??//

டிங் டிங்.....புது ஸ்டைல்.தேசிக்காய் பூசனிக்காய் எறியிறது.கண்ணைத் தோண்டிக் காக்காவுக்குப் போடுறது !

கலா said...

ஹா ஹா ஹா ஹேமாவாவது கண், இதயத்தைப் பறிகுடுக்கிறதாவது! ஆரும் கிட்ட நெருங்கினா, செருப்பால தானாம் அடிப்பா :-))\\\\\
சேச்சே... அவ அப்படியெல்லாம் செய்யமாட்டா பயந்தாங்கோழி..
அடுத்தநாள வானம்வெளித்ததில்....
கவிதையாகப் போட்டுவிடுவார்

ஹேமா said...

ஓகே.....போய்ட்டு வாறன் மணி,கலா...நேசன்,
கருவாச்சி,அதிரா,ரெவரி,கணேஸ்,விச்சு,மகி....எல்லாருக்கும் !

அப்பா வரேக்க நல்ல சுத்தமா என்ன வேணுமெண்டு கேட்டுக் குடுங்கோ மணி.அப்பா கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ.போய்ட்டு வாறன் !

கலா உங்கட நாத்தனார் இண்டைக்கு நல்லா மாட்டினா.என்னைப் போட்டு என்னவா பாடு படுத்திறவ.இனி வருவா...அநேகமா.காக்காஆஆஆஆஆஆஆ இண்டைக்கு வந்து பாக்கிறன் 9.45 க்கு !

கலா said...

கண்ணைத் தோண்டிக் காக்காவுக்குப் போடுறது !\\\\
நோண்டி எடுக்கிறமாதிரியா !அந்தக் கண் இருக்கு? கர்ணனோட கவசம்மாதிரி..அந்தக் கண்ணில் கவசந்தான் எப்போதுமே இருக்கிறதே

ஹேமா பெண்களைப் பார்க்கப் பயம் போலும் மணிக்கு அதனால் ஒளிந்திருந்து பார்பது.

கலா said...

சரி ஹேமா நன்றி
காக்காவோட.சிறகு இரண்டையும் இன்னைக்கு வெட்டி எடுத்திரமாட்டேனா? வரட்டும்!

ஹேமா said...

மணி.....சொர்க்கத்தின் வாசல்படி.உங்கட இன்னொரு தளம்.உண்மையாவே நான் ஒன்றிரண்டு தரங்கள்தான் வந்திருக்கிறன்.இவ்வளவு அழகான போட்டோக்கள்.அதுவும் இராணுவ மியூசியப் படங்கள்.....உங்களுக்குள்ள புகைப்படக்கலையும் இருக்கு.அவ்வளவு அழகா வந்திருக்கு.ஊர் சுத்தினாலும் பிரயோசனம்தான்.பாராட்டும் நன்றியும் மணி !

VijiParthiban said...

நல்ல அருமையான தகவல் முதுமக்கள் தாழி பற்றியது.

கலா said...

ம்ம்ம..நானும் பார்த்து ரசித்தேன் மணி, மிக அருமை நன்றி
எங்காவது ஒரு மூலையில் "அந்தக்"
கறுப்புக் கண்ணாடி தெரிகிறதா? என நோட்டம் விட்டேன்...ம்ம்ம்ம... தென்படவே இல்லை..பார்க்கலாம்.....

கலா said...

ஹேமா,யாரும் வரவில்லை...எனக்கு இரவு மணி
10தாகப் போகிறது ...அதனால் இனிமேல் காத்திருக்க முடியாது..
மன்னிக்கவும்..நன்றி இரவு வணங்கமும்...அனைவருக்கும்..

K said...

தாத்தா...நீங்கள என்னை கலா என்றே கூப்பிடலாம்...மரியாதை மனதில் இருந்தால் போதும் என்னா!70 வயது தான்!எனக்கு அது அவ்வளவு வயதுபோனமாதிரித் தோணல்ல..é/////

என்னது 70 வயசோ? அச்சோ, உங்கட வயச ரெண்டால பிரிச்சு, வாற விடையில சில வருஷங்களைக் கழிச்சாத்தான் என்ர வயசு வரும் :-))

சரி அது பிரச்சனை இல்லை! நான் கலா எண்டே கூப்புடுறன்! :-))

அதோட இண்டெர்நெட்டில பழகிற ஆக்களோட வயசைப் பற்றிக் கதைக்க கூடாது எண்டு, கனடாவில இருக்கிற பெரியம்மா சொன்னவா! :-))

சரி கலா, எல்லோருக்கும் ப்ரொஃபைல் படம் எண்ட ஒண்டு இருக்கு! அது ஏன் உங்களுக்கு இல்லை?? :-))

கலா said...

சரி கலா, எல்லோருக்கும் ப்ரொஃபைல் படம் எண்ட ஒண்டு இருக்கு! அது ஏன் உங்களுக்கு இல்லை?? :-))\\

நான் படம் போட்டுக்காட்டுவதில்லைஐயா,
படம் பார்ப்பது மட்டுந்தான!
ஹரிச்சந்திரனுக்கு மட்டுந்தான் என்
படம் பார்க்கமுடியும் {தெரியும்} ஹா..ஹாஆஆஆ

K said...

ஹேமா பெண்களைப் பார்க்கப் பயம் போலும் மணிக்கு அதனால் ஒளிந்திருந்து பார்பது. ://///////

என்னது பயமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

நாங்கள்ளாம் யாரு? புறாவுக்கே பெல் அடிச்சவர்கள் ஆச்சே :-))

K said...

நான் படம் போட்டுக்காட்டுவதில்லைஐயா,://////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !


படம் பார்ப்பது மட்டுந்தான!
ஹரிச்சந்திரனுக்கு மட்டுந்தான் என்
படம் பார்க்கமுடியும் {தெரியும்} ஹா..ஹாஆஆஆ //////

ஹரிச்சந்திரனா? அவரு யாரு? நடிகர் ரவிச்சந்திரனோட பிரதரா? :-))

கலா said...

நாங்கள்ளாம் யாரு? புறாவுக்கே பெல் அடிச்சவர்கள் ஆச்சே :-))\\
புறாவுக்குத்தானே!
பொண்ணுக்கு உங்களாலே முடியவில்லையே? அதற்குளள ஒரு
வீரப் பேச்சு....புறாவிடம் வேண்டாம் பாவம்!

ராஜ நடராஜன் said...

நான் கூட கவிதையெல்லாம் விட்டுப்புட்டு ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்களோன்னு நினைச்சேன்:)

தாழிக்கலாச்சாரம் பல இடங்களிலும் தோன்றுகிறது.எது முதல் எது அடுத்து என்பதை எப்படி தீர்மானிக்கிறார்கள்.ம்னித மண்டையோட்டையும் கூட காலம் கணிக்கும் ஆய்வு ஒருகாலத்தில் சக்கை போட்டு போட்டுள்ளது.இதனை எப்படி கணிக்கிறார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா:)

கலா said...

ஹரிச்சந்திரனா? அவரு யாரு? நடிகர் ரவிச்சந்திரனோட பிரதரா? :-))\\
மகனே! நீங்க எதையும் "தளளாத"
வயசு நானோ தளளாடும் வயசு அதனால்...இதெல்லாம் உங்களுக்கு புரியாமலே இருக்கட்டும்

Anonymous said...

நான் ஏற்கனவே வாசித்தது கவிதாயினி...

அடிக்கடி நம்மையே நம் பழமை..பெருமை...கலாசாரம்..பாரம்பரியம்..பண்பாடு பற்றியெல்லாம்..நினைவு படுத்த தேவை இருக்கிறது...

விச்சு said...

அருமையான கட்டுரை. நம் தமிழ்நாட்டில் இவ்வளவு சிறப்புமிக்க இடம். மத்திய அரசு கண்டுகொள்ளாவிட்டாலும் தமிழக அரசாவது இதன் சிறப்பினை வெளியிடலாம். ஒரு ஆவணப்படமாவது எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.நல்லதொரு கட்டுரையை பதிவாக வெளியிட்ட ஹேமாவுக்கு கைநிறைய சாக்லெட் பரிசு.

முற்றும் அறிந்த அதிரா said...

மீ வந்துட்டேன்ன்ன்ன் ஆரெல்லாம் நிக்கிறீங்களோ தெரியேல்லை, கையைத் தூக்குங்கோ... நிற்கிறாக்கள் ஆரென அறிய ஆவல்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

என்ன நடந்தது ஹேமா.. பார்த்தீங்களோ வதனப்புத்தகத்துக்குப் போய் ஒரு கிழமை ஆகவில்லை, ஆனா ஹேமாவுக்கு என்னமோ ஆகிப்போச்சு:))).. உதாலதான் போகாதீங்கோ என்றால் ஆர் என் பேச்சைக் கேக்கினம்:)))

கண்ணாடி போட்டாக்கள் இப்பவும் அங்கின வந்து கதைக்கிறவையோ ஹேமா?:)).. தான் திருந்திட்டன்:))).. நான் திருந்திட்டன் என நுனி நாக்கால சொல்லுப்படுதே தவிர... ஐ டோண்ட் திங் சோ:)))

முற்றும் அறிந்த அதிரா said...

மாத்தியோசி - மணி said...
அடா..மணி முதல் அடிச்சிட்டாகளா?
பரவாயில்லை... ஆண்களுக்கு முதலிடம் ...ரொம்பப் பெருந்தன்மையாக...... ///////

ஹா ஹா ஹா ஜஸ்ட் எ ஃபியூ செக்கனில நான் முந்திட்டன்! அது சரி ஹேமா முதலாவதாக வாற ஆக்களுக்கு கோப்பி / டீ / யூஸ் ஒண்டும் இல்லையோ?

ஏதாவது கடிக்க கிடிக்க தந்தா தானே, பொறுமையா இருந்து படிச்சு, பம்பல் அடிச்சுட்டுப் போகலாம்! :-)//

ஏதோ தான் மட்டும் ரீயோடு கடிக்க குடுக்கிறவர் மாதிரி:))).. ஹேமா... கடிக்க கிடிக்கவாம்ம். ... ஏதும் கதிரை மேசை அப்பூடி இருந்தால் குடுங்கோவன்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

//நான் சொன்னது நினைவிருக்குத்தானே - ஸ்லிம்மா இருக்கோணும்! என்னைவிட மண்டைக்காயா இருக்கோணும்! ஹி ஹி ஹி !!//

ஏன் ஹேமா டூயட் பாடப்போறாராமோ?:)) சே..சே... நான் நினைக்கிறன் குண்டெனில்.. அடிச்சுக்கிடிச்சாலும் அக்கம் பக்கம் தெரியவரும், இது ஸ்லிம் எனில் அடிவாங்கிட்டும் வாங்காத மாதிரி இருந்திடலாம் என வருமுன் காப்போன் யோஒசனை:))

முற்றும் அறிந்த அதிரா said...

//
மாத்தியோசி - மணி said...
அந்த ஊசிச்செய்தி......பாருங்கோவன்.கடைசியில தேசிக்காய் எறியிறது ஆரெண்டு.அது ஆர் ’அவையள்’? ! //////////

அவையள் எண்டா, அவையள் தான்! - அது அவையளுக்கு மட்டும் தான் ஹேமா விளங்கும் :-))//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

//ஊசிக்குறிப்பு - இப்ப அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சுக்கொண்டிருக்கிறன் ஹேமா! பார்ப்பம் படிச்சு முடிய ஏதும் நல்லது நடக்குதோ எண்டு?? :-))////

ஹா..ஹா..ஹா... சுகம் வரும், ஆள் தப்பாது:))).. எப்பூடிப் படிக்கிறீங்க? புத்தகம் கிடைச்சதோ?

முற்றும் அறிந்த அதிரா said...

ஹேமா... நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க, உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்திருக்கிறீங்க... நல்ல விஷயமே...

நல்ல விஷயத்தைக் கடசியில் சொல்லிட்டுப் போகலாம் என்றுதான் இப்போ சொன்னேன்..
ஆரும் இல்லைப்போல நான் போயிட்டு வாறேன்.

K said...

நான் இருக்கிறன்! ஆனா கோபம் எண்டு சொல்லிச்சினம்! அதான் ஒரு ஓரமா மேசைக்கு கீழ பதுங்கி இருக்கிறன்!

ஹா ஹா ஹா ஹவ் இஸ் இட்?

K said...

//ஊசிக்குறிப்பு - இப்ப அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சுக்கொண்டிருக்கிறன் ஹேமா! பார்ப்பம் படிச்சு முடிய ஏதும் நல்லது நடக்குதோ எண்டு?? :-))////

ஹா..ஹா..ஹா... சுகம் வரும், ஆள் தப்பாது:))).. எப்பூடிப் படிக்கிறீங்க? புத்தகம் கிடைச்சதோ? ///////

ஹா ஹா ஹா தட்ஸ் மணி :-))

நீங்கள் படியுங்கோ எண்டு சொல்லிக்கொண்டு இருக்கேக்குள்ளேயே, பக்கத்தில இன்னொரு விண்டோவ திறந்து கூகுளில் சேர்ச் பண்ணினேன்! எப்படியாவது பி டி எஃப் ஆகவோ, ஈ புக்காகவோ இருக்கும் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்!

முந்தநாள் இரவில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்!

ஊர் என்பதில் ஆரம்பித்து, உறவுகள் பற்றியும், பின்னர் இன்ப துன்பம், ஆசைகள் என்று கண்ணதாசன் வெளுத்து வாங்குகிறார்! :-))

ஹா ஹா ஹா நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ள மணிக்கு ஒரு செக்கன் போதும் :-)))

K said...

இந்த லிங்கில் கிளிக்கினால் நீங்களும் படிக்கலாம் அர்த்தமுள்ள இந்து மதம் :-))

http://thirumurai.yolasite.com/resources/Arththamulla%20Indu%20Matham.pdf

Yoga.S. said...

மாலை வணக்கம்,மகளே!படித்தேன்.எந்த அரசுகள் தான் எங்கள் பாரம்பரியத்தை அங்கீகரிக்கவோ,ஒப்புக் கொள்ளவோ செய்கின்றன?இப்படியாக,எங்களுக்குள் பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.

முற்றும் அறிந்த அதிரா said...

//மாத்தியோசி - மணி said...
நான் இருக்கிறன்! ஆனா கோபம் எண்டு சொல்லிச்சினம்! அதான் ஒரு ஓரமா மேசைக்கு கீழ பதுங்கி இருக்கிறன்!

ஹா ஹா ஹா ஹவ் இஸ் இட்?////

ஹா...ஹா..ஹா.. இடைக்கிடை உப்பூடி எல்லோரையும் வெருட்டுவதுதான் என் வேலையே..

2,3 நாட்களுகு முன், கொபியூட்டரை ஓன் பண்ணினேன் அது டக்கென சட்டவுன் ஆகிட்டுது, பக்கத்தில சின்னவர் இருந்தவர்..

என்ன எனக் கேட்டார், உடனே நான் வாயைத் திறக்காமல் கையால செய்கை காட்டிக் கதைக்கத் தொடங்கிட்டேன், இடையிடை தைலையிலயும் தொட்டுக் கதைத்தேன்... அவர் கேட்டார் ஏன் டோக் பண்ணுறீங்கள் இல்லை என..

நான் அதுக்கும்.. கொபியூட்டரையும் என் தலையையும் தொட்டுக் காட்டினேன்...

பாவம் அவர் சரியாப் பயந்திட்டார்.. கண் எல்லாம் கலங்கி.. அவர் நினைச்சிட்டார் எனக்கு என்னமோ ஆகிவிட்டதென:))(எட்டு வயதுதான் ஆகுது ஆளுக்கு:)).

எங்கட வீட்டில எல்லோரும் உப்பூடித்தான்:)) இருந்தால்போல கணவரைக் கூப்பிட்டால் ஆள் இருக்க மாட்டார்:)).. எல்லோருமாத் தேடி, எங்கேயும் கபேட்டில்:) கண்டு பிடிப்போம்:)))..(ஒளிச்சிருப்பார்:)) உப்பூடிப் புறுணங்கள் பல:))

உலக சினிமா ரசிகன் said...

சகோ... இக்கட்டுரை எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் ஜூனியர் விகடனில் எழுதப்பட்டது.

உங்கள் பதிவை திருத்தி... அவருக்கு...உரிய மரியாதை செய்து விடுங்கள்.

Yoga.S. said...

உலக சினிமா ரசிகன் said...

சகோ... இக்கட்டுரை எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் ஜூனியர் விகடனில் எழுதப்பட்டது.

உங்கள் பதிவை திருத்தி... அவருக்கு...உரிய மரியாதை செய்து விடுங்கள்.////////பதிவின் முடிவில் ----------சிவச்சந்திரன் பாரதி....முகப்புத்தகத்திலிருந்து.....மே 2- 2012 ல். நன்றி....!////ஆனந்த விகடனில் வந்ததா/கட்டுரையாளர் யார் என்று தெரியாததால் முகப்புத்தகத்தில்(பேஸ்புக்)பகிர்ந்தவர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

Yoga.S. said...

கலா said...

அப்பாவும் வருவார்.நேசனும் வரக்கூடும் ஆனால் லேட்டாத்தான் !\\\
உங்கப்பா வந்தாலும் என்னை நலமா என்று கூடக் கேட்கமாட்டார் எப்போதும் மகளும்,மருமகளுந்தான் அவருக்கு வேண்டும்...இருந்தாலும்... யோகா ஐயா..வணக்கம்.///வணக்கம்,வணக்கம் பாட்டிம்மா!நல்லா இருக்கிறிகளா?ரொம்ப நாளா டச்சு விட்டுப் போச்சு!எக்கிசுக் கியூசு மி!!!!!தூக்கத்தில இருப்பீங்க,காலையில பேசுவோம்!

தனிமரம் said...

இப்படி பல வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டும் கிடப்பில் போடட்டும் விடுவதால் தான் நம் ஆய்வுகள் வெளியில் தெரியாமல் நம் இனம் சுரண்டப்படுகின்றது!

தனிமரம் said...

பூமரங்க  என்பது சகோதர மொழியிலும் அதிகம் பயன்படும் பேச்சு உண்மையில் இதுவும் தமிழர் கண்டு பிடிப்பா ?ஆபூர்வ தகவல்கள் !

Anonymous said...

அக்கா நான் இப்போத் தான் படிக்கிரணன் ....ஜூப்பர் ஆ இருக்கு ....

Anonymous said...

ஹாய்...நான்தான் முதல் ஹேமா,
அந்த நாத்தனார் கொஞ்சம் புளுங்கட்டும்......///


ச ச சா எனதருமை அண்ணி முதலில் வந்தால் எனக்கு சந்தோசம் தான் ....


என் தங்க அண்ணி யே உடலும் உள்ளமும் நலம் தானே

Yoga.S. said...

கலைஐஐஐஐஐஐஐஐஐ அண்ணா பதிவூஊஊஊஊஊ....................!

Anonymous said...

கலா said...
வேலைக்குப் போறீகளோ? ம்ம்ம,,..பத்திரமாய் {கண்,இதயம்}
பத்திரம் யாரிடமும் பறிகொடுக்காமல் வந்து சேருங்கோ பை..பை.ஹேமா
வரட்டும் அந்த நாத்தனாரு.. நானும் காத்திருக்கிறேன்//


என்ன அண்ணி எனக்காக காத்து கிடந்தேள் போல...மாமா வந்து சொன்னாங்கள் ,,,இப்போ தான் பார்த்திணன் அண்ணி ...

தங்க நாத்தனார் எண்டால் கண நேரம் காத்திருப்பதில் தவறில்லை தானே அண்ணி ...

சரி விடயத்தை சொல்லுங்கோ அண்ணி ....என்னாச்சி ...ஏதும் அண்ணன் பிரச்சனை பன்னுராங்களா ....

Anonymous said...

கலைஐஐஐஐஐஐஐஐஐ அண்ணா பதிவூஊஊஊஊஊ....................///


இதோ வாறன் மாமா

ஹேமா said...

//"அந்தக்"
கறுப்புக் கண்ணாடி தெரிகிறதா? என நோட்டம் விட்டேன்...ம்ம்ம்ம... தென்படவே இல்லை..பார்க்கலாம்.....//

கலா உங்களுக்குப் பைத்தியம்.உங்களுக்கும் அந்தக் கருப்புக்ம் கண்ணாடிலயே கண்.சரியாப்போச்சு.சிஙக்ப்பூர்ல ஃபேமசான ஆறு,கடல் இருக்கோ.....தேம்ஸ் சென்னி யெண்டு சிலநேரம் உந்தக் கருப்பக் கண்ணாடி மிதக்கும்.இனிச் சிங்கப்பூரிலயுமோ ....ஹாஹாஹா !

உதுக்கேல்லாம் தப்பத்தான் அதிரா அர்த்தமுள்ள இந்துமதம் படிக்கச்சொல்லி வீட்டுப்ப்பாடம் குடுத்திருக்கிறா.அதுதான் நான் நல்லபிள்ளையாம் படிக்கிறாராம்.சொல்லிக் காட்டியிருக்கிறார்.அதிராவுக்குத் தெரியேல்ல வதனப்புத்தகத்துள்ளதான் கிடக்கிறார் எண்டு.அதிரா......கிர்ர்ர்ர்ர்ர் !

ஹேமா said...

//நாங்கள்ளாம் யாரு? புறாவுக்கே பெல் அடிச்சவர்கள் ஆச்சே :-))//

புறாவுக்கு பெல் அடிச்சவர்.ஆனா புறாதான் பறக்கேல்ல.புறா திருப்பி பெல்லை அடிக்க வந்திருக்கும்.....அதான் துஷிக்குட்டி ..... வெக்கப்படுறாரம் கருப்புக்கண்ணாடி.எனக்கே ஒருமாதிரியாப்போச்சு ....எப்பூடி....!

கலா....வீரன்....எண்டெல்லாம் சும்மா கிண்டக்கூடாது மணியை.நாங்கள் மாத்தியோசிக்கிற வீரனெண்டுதான் பொய்யெல்லாம் சொல்லி பொம்பிளை தேடுறம்.பிறகு உண்மையாவே வீரம் காட்டினால்...எனக்குத் தெரியாதப்பா..நான் ஓடிப்போய்டுவன்.கட்டிலுக்குக் கீழயும் ஒளியத்தான் கஸ்டம்....அதுதான் இப்பவே யோசிக்கிறன் !

முற்றும் அறிந்த அதிரா said...

//அதிராவுக்குத் தெரியேல்ல வதனப்புத்தகத்துள்ளதான் கிடக்கிறார் எண்டு.அதிரா......கிர்ர்ர்ர்ர்ர் !///

நிஜமாத்தான் சொல்றீங்களோ ஹேமா?:).. தான் மணியம் கஃபே ல சரியான பிஸி என அடிக்கடி சொல்லும்போதே எனக்கு சந்தேகமாத்தான் இருந்துது....

கொஞ்சம் பொறுங்கோ.. மொறிஷன் சூப்பர்மார்கட்டில நல்ல பெரிய தேசிக்காய் வந்திருக்காம்ம்.. இப்பவே புறப்படுறேன்ன்.. எங்கிட்டயேவா:))

ஹேமா said...

அதிரா.....வாங்கோ வாங்கோ பூஸாரும் வந்தவரோ.வாங்கோ பூஸார்.உதில இருங்கோ.பால் தாறன்.அதிராவுக்கு பெல் பாயாசம் தந்தவரே.குடுக்கச்சொல்லிட்டுத்தான் வேலைக்குப் போனனான் !

அதிரா இப்ப கையத் துக்கிக்கொண்டுதான் நிக்கிறன்.ஆனால் ஆரையும் காணேல்ல.அதிரா....என்ன வதனப்புத்தகத்துக்கெல்லாம் போனபடியால்தான்.....கவிதை எழுதிறதை விட்டுப்போட்டு அகழ்வாராய்ச்சி செய்றனெண்டு பயப்படுறீங்களே.இல்லையப்பா.....எல்லாம் காரணம் இருக்கு.காதைக் கொண்டு வாங்கோ சொல்றன்....அங்கனேக்கயும் வேற நாட்டுக்கார வெள்ளைக்காரிகள் வருவினம்.எங்கட மணிக்குப் பொருத்தமாப் பாக்கலாமெல்லோ.மணிக்கு நல்லா இங்கிலீசும் தெரியும்.சமாளிச்சிடுவார்.என்ன சீதனம்தான் தரமாட்டினம்.எங்களுக்கும் பங்கு கிடைக்காது.எண்டாலும் உவருக்கு வெள்ளைப் பொம்பிளை அதுவும் ஸ்லிம்மாவெல்லோ கேக்கிறார்....அதுதான்.அதுக்குப்போய் எனக்கென்னமோ ஆச்செண்டு போட்டீங்கள்.எனக்கும் இப்ப கிட்னி கொஞ்சம் வேலை செய்யுது எண்டு அண்டைக்கு சிட்டுக்குருவி பதிவில சொன்னீங்கள.மறந்திட்டீங்களே......சரியாச் சொல்லிட்டனோ...மூச்சு வாங்குதப்பா !

கருப்புக்கண்ண்ணாடி...வதனப்புத்தக்கதில இப்ப நான்தானே உங்கட பூஸார்போல அவருக்குக் காவல்.அதுக்குத்தானே நான் போனனான்.நம்புங்கோ அதிரா.அவர் இப்ப குழப்படி குறைவு.சும்மா பொழுது போகாட்டி கொஞ்சம் உலவி வருவார்.வேற ஒண்டுமே இல்லை.அப்பிடி இருந்தால் நான் கட்டாயம் சொல்லாமல் இருப்பனோ....அவர் உண்மையாவே திருந்திட்டார்.ஆனால் இவர் இல்லாமல் அங்க கொஞ்சப்பேரும் சும்மாதான் இலையான் கலைக்கினம்.இவர்தான் இவ்வளவு நாளும் லீடரா அட்டகாசம் பண்ணியிருக்கிறார்.இப்பவும்வந்து கூபபிட்டுப் பாப்பினம்.பெல் அசையாது.....எங்கட அம்பலம் ஐயாதான் இப்ப அட்டகாசம் !

ஹேமா said...

அதிரா...வாங்கோ....என்னமோ நினைச்சு நினைச்சு டைப் அடிக்கிறன் உங்களை மாதிரி வரேல்ல.அதுக்கெல்லாம் கிட்னி பத்தாது.மணியைக் கண்டீங்களோ.இப்பத்தான் வதனப்புத்தகம் மூடினவர்......(நல்லா அண்டிக்குடுப்பம்)!

ஹேமா said...

கருவாச்சி....நான் நினைச்சன் இண்டைக்கு நாத்தனார் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சியெண்டு...ச்ச...இல்லாமப் போச்சே.....சரி இன்னொரு நாளைக்குக் கிடைக்காமலா போகும்.

ஹேமா said...

மணி....அர்த்தமுள்ள இந்துமதம் நான் வாசிச்சிருக்கிறன்.ஆனாலும் வாசிக்கலாம்.நிறையவே மனசில பதிய வைக்கிறமாதிரியான எழுத்து.இன்னொருமுறையும் படிக்கலாம்.நானும் படிக்கிறன்.

மணி ஒழுங்காப் படியுங்கோ.நினைச்சாப்போல அதிரா கேள்வியெல்லாம் கேப்பா.சொல்லவேணும்.பிறகு பெயிலெண்டா வதனப்புத்தகம் முழுதுமா மூடுப்பட்டிடும்.கவனம் !

லிங்க் தந்ததுக்கு நன்றி நன்றி.சந்தோஷம் !

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!

சசிகலா said...

அறிய தகவல்களை சிறப்பாய் பகிர்ந்த சகோவிற்கு நன்றி .

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரி..
குமரிக்கு தெற்கே லெமூரியா கண்டம் இருந்த
காலம்தொட்டு தமிழ் வளர்ந்த மாபெரும் புகழ்மிகுந்த பூமி இது...

ஆதிச்ச நல்லூரில் 4000 வருடங்களுக்கு முன்னர் கிடைத்த
தாழி ஒன்றினை நான் நேரில் கண்டிருக்கிறேன்...
அறையாயுட்கால முறைப்படி அதன் வயதைக் கண்டறிந்தார்கள்..

தமிழன் பெருமை எப்போதுமே மறக்கடிக்கப்பட்டும்
மறுக்கப்பட்டுமே வருகிறது..
நாமும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு போவதும்
இயல்பாகவே நடந்து வருகிறது...

தமிழின் தொன்மைக்கு இணை என்பது
இந்த அவனியில் வேறு ஏதும் இல்லை என்பது
என் தாழ்மையான கருத்து...

ஜெய்லானி said...

எதுக்கும் குமரி கண்டம் இருப்பதா சொன்ன இடத்துல ஒரு ரோபோவை இறக்கினா இன்னும் பல சான்றுகள் கிடைக்கும்தானே :-)

ஸ்ரீராம். said...

அருமையான பகிர்வு ஹேமா. முகப் புத்தகத்திலிருந்து பகிர்ந்ததா...இது எந்தப் புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டது என்ற விவரம் எதாவது இருக்கிறதா?

Anonymous said...

எனதருமை அண்ணி யை காணுமே

ஹேமா said...

வரலாற்றுச் சுவடுகள்....உங்களுக்குத் தெரியாத வரலாறா.தமிழர் வாழ்வு ஆதாரம் என்றவுடன் ஒரு ஆவலில் பதிவாக்கிவிட்டேன்.வருங்காலத்திலும் வாசிக்கலாமே என்றுதான்.வாசிப்பதும் தெரிந்துகொள்வதும் மட்டுமே நடக்கிறது தமிழன் வாழ்வில் !

வலைஞன்...உங்களுக்கும் நன்றி !

விஜிபார்த்திபன்...வருகைக்கு நன்றி தோழி.உங்கள் பக்கம் வந்தேன்.ஒரே சமையல் வாசனை.அசத்துறீங்க சமையலில் !

//ராஜ நடராஜன்....நான் கூட கவிதையெல்லாம் விட்டுப்புட்டு ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்களோன்னு நினைச்சேன்:)

தாழிக்கலாச்சாரம் பல இடங்களிலும் தோன்றுகிறது.எது முதல் எது அடுத்து என்பதை எப்படி தீர்மானிக்கிறார்கள்.ம்னித மண்டையோட்டையும் கூட காலம் கணிக்கும் ஆய்வு ஒருகாலத்தில் சக்கை போட்டு போட்டுள்ளது.இதனை எப்படி கணிக்கிறார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா:)//

நடா...என்னைக் கலாய்க்கிறீங்க.இப்பிடியெல்லாம் என்னட்ட கேள்வி கேட்டால்....நான் உண்மை சொல்லிட்டனெல்லோ முகப்புத்தகத்தில எடுத்துக்கொண்டு வந்திருக்கிறனெண்டு !

ரெவெரி...நான் ஏற்கனவே வாசித்தது கவிதாயினி...

அடிக்கடி நம்மையே நம் பழமை..பெருமை...கலாசாரம்..பாரம்பரியம்..பண்பாடு பற்றியெல்லாம்..நினைவு படுத்த தேவை இருக்கிறது...//

என்ன செய்யலாம் ரெவரி.நினைவு படுத்தமட்டுமே முடிகிறது.வல்லமை உள்ளவர்கள் எல்லாம் குடும்ப அரசியல் செய்கிறார்களே !

விச்சு...எனக்கே சொக்லேட்டா...சரி அன்பாத் தாறீங்கள் தாங்கோ.நிச்சயம்ம் ஆவனப்படம் எடுக்க யாராவது முயற்சி செய்வார்கள்.விஜய் தொலைக்காட்சியில் நடந்தது என்ன நிகழ்வின் நான் இதைப் பற்றிய செய்தியைப் பார்த்தேனே !

Anonymous said...

ஹேமா அக்கா லீவ் ஆ ,..எனக்கு வேலை ....அம்மடிஈஈஈஈ நாளை எனக்கு லீவ்..


நாளை நீங்களும் இருத்தல் கும்மி அடிக்கலாம்

ஹேமா said...

கருவாச்சி...சுகமோ.சாப்பிட்டு கும்மி அடிக்கத் தொடங்கியாச்சோ.அண்ணி காலேல கண்டன்.அவ சனி,ஞாயிறு எண்டால் ஒரே பிஸி.கூட்டம்,கவிதை அரங்கம்,புத்தக வெளியீடு,கோவில் எண்டு ஊர் சுத்தப் போய்டுவா.சொல்லிக் கில்லி கட்டி வைக்கிறேல்லையே வீட்ல !

அதுசரி நாங்கள் ரெண்டு பேரும் நாளைக்கு எங்காலும் களவெடுக்கப் போவமே.ரெண்டு பேருக்கும் லீவுதானே.அப்பாவை,நேசனை,மணியை,அதிராவை,விச்சுவைக் கூட்டுச் சேர்க்க வேண்டாம்.சரியோ.ஓம் எண்டால் ரெடியாவம் ஹிஹிஹிஹிஹி !

Anonymous said...

அக்கா நான் இன்னும் வேலையில் தான் நிக்கிரணன் ...

போவம் அக்கா ..எங்க போகலாம் எண்டு சொல்லுங்கோ .....நீங்களும் நானும் ஒப்போசிட் ஆ இறுந்து சண்டைப் போட்டால் தான் சுகமா இருக்கு ....கூட்டுக் களவானி யா இருந்தால் சண்டை போட முடியாதே ....


அக்கா இன்னடைக்கு என்னோமோ மாறி இருக்கு ...வாங்கள் ஆறாவது ஏமாந்த வர்கள் மாட்டினால் அவவின் தலைல பச்ச மிளகாய் அறைச்சிட்டு வருவம் ....

Anonymous said...

அக்கா ரீ ரீ அண்ணா பதிவு போட்டு இருக்காங்கள் வாங்கோ

ஹேமா said...

யோகா...அப்பா//மாலை வணக்கம்,மகளே!படித்தேன்.எந்த அரசுகள் தான் எங்கள் பாரம்பரியத்தை அங்கீகரிக்கவோ,ஒப்புக் கொள்ளவோ செய்கின்றன?இப்படியாக,எங்களுக்குள் பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்//

உண்மைதான் ஒரு ஆதங்கத்தில் புலம்புகிறோம்.செய்பவர்கள் சுநலவாதிகளாய்த்தான் குடும்ப அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்.உலக சினிமா ரசிகனுக்கு என் சார்பில் உடனடியாக பதில் கொடுத்திருக்கீங்க அப்பா.நன்றி !

உலக சினிமா ரசிகன்...அப்பா உங்களுக்கு உடனடியான பதில் தந்திருக்கிறார்.நான் முகப்புத்த்கத்தில் எடுத்த இடத்தில் எங்கிருந்து எடுத்தார்களென்ற மூலம் தரவில்லை.தந்திருந்தால் நிச்சயம் இணைத்திருப்பேன்.நன்றி உங்கள் கவனிப்புக்கு !


தனிமரம்...நேசன்//இப்படி பல வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டும் கிடப்பில் போடட்டும் விடுவதால் தான் நம் ஆய்வுகள் வெளியில் தெரியாமல் நம் இனம் சுரண்டப்படுகின்றது!//நீங்களே சரியாகச் சொல்லிட்டீங்களே.‘பூமராங்’ எண்டால் சகோதர மொழியில் என்ன ?

கருவாச்சி....என்ன சூப்பரா இருக்கு.நான் என்ன கருவாட்டுக் குழம்போட சாப்பாடு தந்தமாதிரி...காக்காஆஆஆஆஆஆ !

சசிகலா...வாங்கோ..அறிஞ்சு வைப்பம் அதோட சரி !

மகேந்திரன்...//ஆதிச்ச நல்லூரில் 4000 வருடங்களுக்கு முன்னர் கிடைத்த
தாழி ஒன்றினை நான் நேரில் கண்டிருக்கிறேன்...
அறையாயுட்கால முறைப்படி அதன் வயதைக் கண்டறிந்தார்கள்..//

ஓ...இவ்வளவு அதிஷ்டசாலியா நீங்கள் மகி !

ஜெய்லானி...எதுக்கும் குமரி கண்டம் இருப்பதா சொன்ன இடத்துல ஒரு ரோபோவை இறக்கினா இன்னும் பல சான்றுகள் கிடைக்கும்தானே :-)//

அதானே ஜெய்.....பைத்தியக்காரங்க இவங்கள்லாம்.நானும் நீங்களும்தான் புத்திசாலி.எங்களைக் கேக்காம இருக்காங்களே !

Yoga.S. said...

ஹேமா said...
நாங்கள் ரெண்டு பேரும் நாளைக்கு எங்காலும் களவெடுக்கப் போவமே.ரெண்டு பேருக்கும் லீவுதானே????////அக்காவும்,தங்கைச்சியும் ரூம் போட்டு யோசிச்சு நாளைக்கு எங்கையோ களவுக்குப் போகப் போகீனமாம்!நல்ல வேளை எங்கள் ஒருத்தருக்கும் தெரியாமத்தான் போகீனம்!பொலீஸ்,கிலீஸ் எண்டு பிரச்சினை பெரிசாகினா,இந்த ஆதாரத்தைக் காட்டி எஸ்கேப் ஆயிடலாம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

Angel said...

பயனுள்ள பகிர்வு ஹேமா .பகிர்ந்தமைக்கு நன்றி .

//athira said...
மீ வந்துட்டேன்ன்ன்ன் ஆரெல்லாம் நிக்கிறீங்களோ தெரியேல்லை, கையைத் தூக்குங்கோ... நிற்கிறாக்கள் ஆரென அறிய ஆவல்:)))//

அந்த பூஸாரை ரெண்டு கண்களையும் திறந்து பார்க்க சொல்லுங்க ஹேமா

ஹேமா said...

அப்பா......பாத்திட்டீங்களோ.நீங்களே காட்டிக்குடுத்துப்போடுவீங்கள்.நேசனுக்குச் சொல்லதேங்கோ.ரகசியமா களவெக்கப் போறம் நானும் வாத்துக்காரியும் !

ஹேமா said...

வாங்கோ ஏஞ்சல்.அதிரா ராத்திரி வந்திட்டு ஓடிப்போய்ட்டா மணிட்ட ஞாயம் கேக்க.ஏனெண்டா அவர் முகப்புத்தகத்தில முழுகிக் கிடக்கிறாராம்.நானும் கூப்பிட்டன்.போய்ட்டா.

அவவும் பதிவு போட்டு நயாகரா காட்டியிருக்கிறாபோல.போகவேணும் !

முற்றும் அறிந்த அதிரா said...

//0:30
ஹேமா said...
அதிரா...வாங்கோ....என்னமோ நினைச்சு நினைச்சு டைப் அடிக்கிறன் உங்களை மாதிரி வரேல்ல.அதுக்கெல்லாம் கிட்னி பத்தாது.மணியைக் கண்டீங்களோ.இப்பத்தான் வதனப்புத்தகம் மூடினவர்......(நல்லா அண்டிக்குடுப்பம்)!///

அவர் இப்ப உண்மையாகவே திருந்திட்டாராம்ம்ம்ம்.. எக்ஸ்சாமுக்குப் படிக்கிறவை மாதிரி கையில எந்த நேரமும் அர்த்தமுள்ள இந்துமதமாம்.. அது நான் ஹோம் வேர்க் குடுத்தனானெல்லோ:))

வதனப்புத்தகத்தில இனியும் ஆரோடயும் மல்லுக்கட்டிக்கொண்டு சண்டைக்குப் போவதைக் கண்டால் எனக்கொரு பூஸ் எம் எஸ்:))... அட எஸ் எம் எஸ் அனுப்புங்கோ ஹேமா..

அதுசரி இண்டைக்குக் காலையில எனக்கொரு மெசேஜ்.. ஹேம இப்போ வதனப்புத்தகத்தில நிக்கிறா, பிஒடிப்பதென்றால் ஓடுங்கோ என:))

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒருமாதிரி மணியம் கஃபே ஓனரைக் காப்பாத்திக்கொண்டு வர ஹேமா போட்டா:)).. இப்போ உப்புமடச் சந்தியிலயேஎ பதில் போட அவவுக்கு நேரமில்லை:))

இனி கையைக் காலைப் பிடிச்சு என் சிஷ்யையையும் கூட்டிப்போகப் பார்ப்பா.. விடமாட்டனில்ல:))).. சமயபுர மாரியம்மா என் சிஷ்யையை நீங்கதான் காப்பாத்தோணும்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

/// angelin said...
பயனுள்ள பகிர்வு ஹேமா .பகிர்ந்தமைக்கு நன்றி .

//athira said...
மீ வந்துட்டேன்ன்ன்ன் ஆரெல்லாம் நிக்கிறீங்களோ தெரியேல்லை, கையைத் தூக்குங்கோ... நிற்கிறாக்கள் ஆரென அறிய ஆவல்:)))//

அந்த பூஸாரை ரெண்டு கண்களையும் திறந்து பார்க்க சொல்லுங்க ஹேமா////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்லவேளை மாலைக்கண் மட்டரை ஓப்பின் ஆக்காமல் போயிட்டா அஞ்சு:)) தப்பிட்டேன் சாமீஈஈஈ.... சமயபுரத்து மாரியம்மனுக்கு கொழுத்தின கற்பூரம் வீணாகேல்லை:))

ஹேமா said...

அதிரா.............கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் வதனப்புத்த்கத்துக்குள்ளயோ...ஆர சொன்னது,மணியம் கஃபே ஓனரோ.இருங்கோ பிடிச்சுக்கொண்டு வாறன்.நயாகரா பதிவு போட்டனீங்களாம்.எங்க வந்தால் தள்ளி விழுத்தினாலும் விழுத்தி வழியனுப்பிவிட்டுப் போடுவீங்களெண்டுதான் பயத்தில இன்னும் வரேல்ல நான்.பெல்தான் சொன்னவர் .போகாதேங்கோவெண்டு.......உண்மையா வதனப்புத்தகத்தில சத்தியம் பண்ணவோ அதிரா...!

ஹேமா said...

ச்ச....ஆருக்காக வதனப்புத்த்கம் போனன்னா.பெல்லுக்காகத்தனே.கட்டாயம் கருவாச்சியைக் கூப்பிடமாட்டன்.அதோட யோகா அப்பா காவல் தெரியுமோ.கேட்டுப் பாருங்கோ அவரிட்ட.நான் குழப்படி செய்யமாட்டன்.அப்பாபோல நானும் நல்ல பிள்ளை தெரியுமோ.பெல்லும் உண்மையா குழப்படி இல்ல.அப்பிடியெண்டா கட்டாயம் அறிவிப்பன்.கொப்பி பேஸ்ட் எல்லாம் தருவன்.நம்புங்கோ !

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்!உங்கள் வாய்க்கு சொக்லேட் கொட்ட வேண்டும்,மகிஷா ஷவர் வாங்கி விடடா!!

Anonymous said...

ச்ச....ஆருக்காக வதனப்புத்த்கம் போனன்னா.பெல்லுக்காகத்தனே.கட்டாயம் கருவாச்சியைக் கூப்பிடமாட்டன்.அதோட யோகா அப்பா காவல் தெரியுமோ.கேட்டுப் பாருங்கோ அவரிட்ட.நான் குழப்படி செய்யமாட்டன்.அப்பாபோல நானும் நல்ல பிள்ளை தெரியுமோ.பெல்லும் உண்மையா குழப்படி இல்ல.அப்பிடியெண்டா கட்டாயம் அறிவிப்பன்.கொப்பி பேஸ்ட் எல்லாம் தருவன்.நம்புங்கோ !///



ஹ ஹ ஹா நல்லைப் பிள்ளையாம் ...அதான் நேற்று பிள்ளை கலவெடுக ஆள் செர்த்தன்கலம்....


நல்லா வேலை மீ குரு வந்து ஞான கண்ணை திருந்து வைத்து விட்டங்கள் ...அய்ய்யூ இல்லை எண்டால் மீ யும் கலவாணி ஆகி இருபெப்னே

Yoga.S. said...

ஆத்தாடி இன்னா வாயி?குரு கண்ண,அதுவும் ஞானக் கண்ண தொறந்து விட்டுட்டாங்களாம்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!

Yoga.S. said...

நேத்திக்கு நல்ல புள்ளயாட்டம்,ஆமாக்கா பொழுதே போக மாட்டேங்குது,எங்கயாச்சும் திருடப் போகலாம்னு என்னோட அடக்கமான,அழகான,ஒண்ணுமே தெரியாத, என்னோட அப்பாவி மூத்த பொண்ணை உசுப்பேத்தியதே இவ தான்!இப்போ பேச்சப்பாரு ,அடிங்!!!!!!!!!!!!!!!!

ஹேமா said...

அப்பா....பிடியுங்கோ கை நிறையச் சொக்லேட்.காலைப்பகல் வணக்கம்.இரவே சொல்லவெண்டு நினைச்சிட்டு நல்லா நேரம் போயிருந்தது.சொக்லேட்டை விட்டுப்போட்டு நேரத்தைப் பார்த்தால் திட்டுவீங்களெண்டு பயத்தில சொல்லாம விட்டனான்.உண்மையான எங்கள் குழந்தை என்கிற ஒரு உணர்வு.கடைசி 10 க்குள்ளாவது வரவேணும் மகிஷா.ஒரு தள்ளல் நிலை அங்கும் இருப்பதாகவே உணர்கிறேன்.உடைக்கும்போது...அதுதான் அந்தச் சந்தோஷம் !

ஹேமா said...

//ஆத்தாடி இன்னா வாயி?குரு கண்ண,அதுவும் ஞானக் கண்ண தொறந்து விட்டுட்டாங்களாம்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!//

விளங்கினாச் சரி.தன்னைக் களவாணியாக்க நான் பாத்திருந்தனாம்.ஆனா நேற்று இரவு குரலே வராம முக்கிப்போய் இருக்கேக்க மட்டும் குழந்தையாயிடுவா......வரட்டும் வாத்துக்காரி !

Yoga.S. said...

அதில வந்து,சின்னக்குயில் சித்திராம்மா சொன்னத கவனிச்சிருப்பியள்.நிச்சயமா,அந்தக் குட்டி மகிஷா,பத்துக்குள்ள வருவா!!!!!!!!!

Yoga.S. said...

சமையல் முடிஞ்சுதோ?போன கிழமையான் இன்னும் மிச்சம் இருக்கோ?

ஹேமா said...

என்னமோ...தூக்கம் குறைவு.2-3 மணித்தியாலங்கள் கூட முடியவில்லை 4 நாட்களாக.மனதைக் குடையும் ஒரு உணர்வு கவிதையாக்குகிறேன் குழந்தைநிலாவுக்காக.15 ந்மிடத்தில் பாரம் குறைப்பேன்.

மகிஷாவுக்காக உங்கள் வார்த்தை பலிக்கவேணும் அப்பா.

இல்லை.....சின்னச் சமையல் செய்யவேணும்.பழசெல்லாம் முடிஞ்சுபோச்சு.இனி 2 நாளைக்கு 6 மணி வேலை.4 மணிக்கு வந்திடலாம். !

Yoga.S. said...

என்ன சொல்ல?கவிதையைப் பிரசுரித்து விட்டு,கொஞ்சம் வெளியே சென்று வாருங்கள்,பாரம் கொஞ்சம் குறையும்.

Anonymous said...

ஹேமா அக்கா எனக்கும் அப்புடிதான் நேற்று ...ஆனால் உங்களிடம் பேசினப்புரம் மீ ஜாலி ஆகிட்டணன் ...


உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்கள் அக்கா ...மனம் கொஞ்சம் நார்மல் ஆகும் ....


அக்கா என்ன சாபிட்டேங்கள் ,

மாமா நீங்க சாப்டீங்களா ,..என்ன சாப்டீங்க மாமா ...


நான் மீன் பிரியாணி செய்தேன் ...நல்லாவே இல்லை ...அவ்வ்வ்வ்

ஹேமா said...

கலயம்மா.....நான் சுகம்.இனித்தான் ஏதாவது சின்னச் சமையல் செய்யப்போறன்.பசியில்லை.ஏதோ சில நினைவுகள் உளட்டுது மனசில.ஆனால் இதுவும் கடந்து போகும்ன்னு போய் போய் திரும்பி திரும்பி வரும் சில நினைவுகள்.மற்றும்படி நான் நல்ல சுகமே.சந்தோஷமாவும் இருக்கிறன்.

அதுசரி....எங்க களவெடுக்கப் போறம்.இல்லாட்டி திருந்திப்போட்டினமோ.....நாங்கள்.அப்பாதான் ஓடித் திரியிறார்.....ஆளைப் பிடியுங்கோ.நேசனும் பாவம் !

Anonymous said...

அக்கா ஆஆ எல்லாருக்கும் கஷ்டம ஒன்று கண்டிப்பாய் இல்லாமல் இருக்காது அக்கா ....
அக்கா சிரித்து பேசுற எல்லாரும் சந்தோசம் இல்லை அக்கா ...இருநதாலும் அதை எல்லாம் தாண்டி சந்தோசமாய் இருக்க கொஞ்சம் முயற்சிக்கணும் .....அக்கா அதிகப் பிரசங்கி நினைக்கதிங்கோ ...நீங்கள் எப்போதும் சந்தோசமாய் இருக்கணும் அக்கா ...கடந்து போன சோகங்கள் நிகழ காலத்தில் உங்களை வருத்தக் கூடாது அக்கா....



போய் சாப்பாடு செய்யுங்கள் அக்கா ....பசிக்கவில்லை என்டுல்லாம் சொள்ளதின்ன்கோ ....தயவு செய்து கொஞ்சம் ஏதானும் செய்து சாப்பிட்டு விட்டு வாங்களேன் ...


களவேடுத்து ஒரு பெரியக் கம்பெனி மணி அண்ணா மாறி ஆகணுமெண்டு ஆசை தான் ....குருவிருக்கு தான் கொஞ்சம் பயப்படுவேன் ...

அக்கா மீ திங்கிங் கலவாடுரவுக வீட்டிலே போய் கலவாண்டால் தான் நிறைய களவாடலம் ...

நீங்கள் சாப்பிட்டு விட்டு வாங்கோ தெம்பா போய் கலவேடுப்பம் ....

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி.
தமிழனின் பெருமை பேசும் பகிர்வு.

Yoga.S. said...

உங்கள் வீட்டில் போலி கெளரவத்துக்காக என்ன பொருள் வாங்கி(சும்மா)வைத்திருக்கிறீர்கள்?????(என் வீட்டில் எதுவும் இல்லை!)

ஹேமா said...

அப்பா....நித்திரைகொள்ளேல்லையோ.....என்னட்டையும் எதுவுமில்ல. ஊரில இருந்து இங்க வரேக்க கொண்டு வந்த உடுப்பு இப்பவும் போடுறன்.உங்களைப்போலத்தான் நான் என்கிறதைச் சொல்றதில நல்ல சந்தோஷம் !

சத்ரியன் said...

சிறந்ததொரு வரலாற்று கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி ஹேமா.

தற்காலத்தில் தான் நம்மினத்தவர்களுக்கு ‘வரலாறு’ படிப்பதென்றாலும், படைப்பதென்றாலும் பாகற்காயாய் போய் விட்டதை நினைத்தால் தான் வருத்தம் மிகுகிறது.

Unknown said...

இன்று தண்ணீரில் மூழ்கி காணப்படும் குமரி கண்டமு் தமிழர் கண்டம்தான் என்று அகழ்வாய்வுகள் கூறுகின்றன அக்கா. ஒரு கண்டத்தையே Mண்ட தமிழன் அன்று நாடு இல்லாமல் தவிப்பதேனோ......

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!இன்றைய பொழுது நன்றாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!

இராஜராஜேஸ்வரி said...

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது

சிறப்பான ஆராய்ச்சித் தகவல்கள்.. தமிழ்ரின் பெருமை பறைசாற்றுகிறது..

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!

Anonymous said...

ஹேமா அக்கா எப்படி சுகம் ,,,,சாபிட்டேன்களா .....வேலைக்கு போய் இருஈன்களா

நேற்று கொஞ்சம் தூங்கிட்டேன் அக்கா ....


நீங்க நல்லா சாப்பிட்டு நிறைய சாப்பிட்டு தெம்பா வாங்கோ .....இண்டைக்கு கதைக்கணும் ...நீங்களும் ஐத்தானும் பாடிய பாட்டு கண்டு பிடிச்சி போட்டேன் அக்கா ....நைட் சொல்லுறேன் அக்கா ,,,,

K said...

காலை வணக்கம் ஹேமா! இனிய வியாழக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

அடுத்த பதிவு எப்ப போடுறீங்க?

இண்டைக்கு உப்புமடச் சந்தியில் ஒரு கலகலப்பான பதிவை எதிர்பார்க்கிறோம்! இன்று பதிவு போடாவிட்டால், லா சப்பல் சந்தியில் உண்ணாவிரதம் இருப்போம்!

அதாவது என் சார்பாக தனிமரம் நேசன் அண்ணா, உ.வி. இருப்பார்! :-))))

நான் உண்ணும் விரதம் இருப்பேன் :-)))

unknown said...

வணக்கம்
உண்மைதானே , மூத்தகுடி நாம் தானே

தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Unknown said...

இப்படியான பதிவுகளை தொடர்சியாக வழங்க வாழ்த்துக்கள்

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP