Tuesday, January 13, 2009

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.

ரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகப் பிரகடனப்படுத்துவோம் என்று சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தலைமை செயலகம் சுவிஸ் பேர்ண் 10.ஜனவரி.2008


தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே (ஜனவரி 14) தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்.


தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!


ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி,தனது பண்பாடு,தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது.


அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலை பெறும் தமிழ் மொழி,தமிழர் இனம்,தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக்கோடு இலங்கை என்கின்ற தேசத்தை நடுவணாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலகப் பந்தில் ஓரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது.


குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர் கோண்டிரடோஸ்,
எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ்,எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.


இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்கணிப்பீடுகளை தொடக்ககமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் என கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறுபேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள்.


ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் அன்றே பகுத்து வைத்தார்கள். வைகறை,காலை,நண்பகல்,ஏற்பாடு மாலை,சாமம் என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள்.அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள்.அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று பண்டைக் காலத்தில் கணக்கிட்ட தமிழர்கள்,ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.எனவும் நிறுவித் தமக்குரிய ஆண்டை அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி – ஆனி தங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)


காலத்தை அறுபது நாழிகைகைளாகவும்,ஆறு சிறு பொழுதுகளாகவும்,ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டுத் தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு,தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகி (போக்கி) என்று அழைத்தார்கள்.போகி என்பது போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல்.இது தொழிற் பெயர்.புத்தொளி பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.


தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது.சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.


ஒரு இனத்தின் அடையாளம் இன்னோர் இனத்தின் அபார வளர்ச்சியினால் அழிக்கப்படும் என்ற தத்துவக் கோட்பாட்டுக்கு அமைவாகவோ என்னவோ பின்னாளில் வந்த இனங்களின் நாகரீக ஆளுகைக்கு அடிமையாகிய தமிழர் இனம் தனது வாய்வின் கணீப்பீட்டு நாளை புறம் தள்ளி மாற்றார் கணிப்பீடுகளை தனது அடையாளமாக மாற்றிக் கொண்டதன் விளைவாக
தமிழர் புத்தாண்டு புறம் தள்ளப்பட்டது.


எனினும் காலச்சுழற்சியின் வேகத்துக்குள் தன்னினக் கருவைச் சுமக்கும் இனம் தனக்கான தாயகத்தை உருவாக்கியுள்ள சூழலில் தனது தொன்மை மிக்க அடையாளங்களையும் நிலை நாட்ட முற்படுதல் அவசியமாகின்றது.
தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள்.அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டம் வரையறை செய்கின்றது.


இதைக் கவனத்திலெடுத்த ஈழத்தமிழர்கள் ஆண்டின் தைப்பொங்கல் தினமான ஜனவரி மாதம் 14 ம் திகதியை தமது புத்தாண்டுத் தினமாகவும், இருளகன்று இழந்த நிலப்பரப்புக்கள் மீட்கப்பட்டு எமது இனம் நிமிர்வு பெறுவதற்கான விடுதலை ஆண்டாய் மலரவேண்டும் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்ள உறுதி பூண்டுள்ளனர்.இப் புனிதநாளில் நல்லளிப்பு என்ற கைவிசேட நடைமுறையைத் தொடங்கி உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் உயரிய பணியையும் உயிர் மெய்யாக்கியுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே! தமிழ் நாடு அரசும் ‘தை முதல் நாள்தான் தமிழரின் புத்தாண்டுத் தினம் என்பதற்கு இந்த ஆண்டு(2008) சட்ட வடிவம் கொடுத்துள்ளது." எனவே தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்.


"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது தமிழர் நம்பிக்கை.புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும்.மகிழ்ச்சி பொங்கட்டும்.


தைப் புத்தாண்டில் தமிழீழ மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கி துன்பங்கள் தொலைந்து கோடி இன்பங்கள் குவிந்து இளங்காலை பூத்தெழும் கீழ்வானத்தே தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்.அமைதி நிறைந்து புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் தமிழீழ மண்ணின் பொங்கற்பால் பொங்கட்டும்.


தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருநாளில் உலகெலாம் சிதறிய தமிழரெலாம் தமிழீழ மண்ணை மீட்பதற்காய ஒன்றாய் இணைந்திடுவோம்.தமிழர் நாம் விரிந்து கிடக்கும் பூமியில் பரந்து கிடந்தாலும்,தாய் மொழியாம் தமிழைக் காத்து வளர்த்தெடுத்து தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்ந்து தமிழனாய் தரணியெங்கும் தலைநிமிர்ந்து வாழ எங்கள் சுதந்திர பொங்கல் திருநாளை வரவோற்போம்.


சுவிஸ் வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து அனைத்து பொது அமைப்புகளிற்கும் தாய் அமைப்பாய் விளங்கும் தமிழர் பேரவை இத்தைத் திருநாளில் தாயக தமிழக மற்றும் உலகத் தமிழர்களை நோக்கித் தனது உரிமைக் கரங்களை நீட்டுகின்றது.


தமிழர்களே! உலகெலாம் பரந்து கிடக்கும் நாம் பலமாய் இருக்கின்றோம்.எமது பலங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒன்று பட்ட சக்தியாய் உருவெடுக்கும் போது உலகமே எதிர்த்து நின்றாலும் எமது தனிப் பலத்தில் தமிழீழத்தை மீட்டெடுப்போம் என வீட்டுக்கு ஒருவராய் நாட்டுக்காய் எழுவோம்.


ஏழ் கடலைத் தாண்டி எட்டுத்திசை எங்கும் கோலோச்சி வாழ்ந்த இனம் வேரறுந்து வாழும் நிலை மாற்றுவோம்.வீரியத்தின் விழுதுகளை கோலோச்ச அரியணையில் ஏற்றி நிற்கும் அமெரிக்கத் தமிழர்களும்,ஜரோப்பியக் கண்டத்தில் அயராது உழைக்கின்ற உறவுகளும்,உலகத்தின் மூலையில் ஒதுங்கிக் கொண்டாலும் அலைகடலை ஆரத்தழுவும் அவுஸ்ரேலியத் தமிழர்களும்,
ஆர்ப்பரித்து உறவுக்காய் ஆதரவுக்கரம் தரும் ஆபிரிக்கக் கண்டத் தமிழர்களும், ஆசியநாட்டின் பெரும் தமிழர் பரம்பரையும் அவனியில் தமிழருக்கு அங்கீகாரம் தமிழீழம் ஒன்றே என்ற முடிவோடு எமது விடுதலையை நாமே வென்றெடுப்போம் என்ற உணர்வோடு விடுதலைத் தீ மூட்டுவோம்.


எமது தொப்புள்கொடியாம் தமிழக உறவுகளே!


நீங்கள் ஆற்றும் தமிழீழ அங்கீகாரத்திற்கான பணியும் தார்மீக ஆதரவும் உதவிகளும் எங்களுக்கு நம்பிக்கை உணர்வுகளைத் தந்து நிற்கின்றது. இத்தருணத்தில் தமிழீழ மக்கள் சார்பில் உளமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். உங்கள் பணி மேலும் வளர்ந்து உலகத் தமிழர் சக்தியாய் உருவெடுத்து தமிழர்களுக்கான தேசம் மீட்கத் தடைகளைத் தாண்டி கரம் கொடுக்க வேண்டுமென உரிமையுடன் கோரி நிற்கின்றோம்.


தாய் மொழியாம் தமிழை காப்பதற்கும் தமிழர்களின் தாயகத்தை மீட்பதற்கும் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து உணர்வோடும் உறுதியோடும் பணி செய்து பாரினில் தமிழரெலாம் தலை நிமிர்ந்து வாழ வழி சமைப்போம்.


"எங்கள் சமுதாயம் ஏழாயிரமாண்டு திங்கள்போல் வாழ்ந்து செங்கதிர்போல் ஒளிவீசும் மங்காத போர்க்களத்தும் மாளாத வீரர்படை கங்குல் அகமென்றும் காலைப் புறமென்றும் பொங்கி விளையாடிப் புகழேட்டிற் குடியேறித் தங்கி நிலைத்துத் தழைத்திருக்கும் காட்சிதனைக் கண்காண வந்த கலைவடிவே நித்திலமே! பொங்கற்பால் பொங்கிப் பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!""


நன்றி தமிழர் பேரவை சுவிஸ் 11.01.2009
ஹேமா(சுவிஸ்)

17 comments:

Anonymous said...

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை தவிர வேறு யாரும் தமிழ் புத்தாண்டு அறிவிப்பை ஏற்க வில்லை. அவரது மகள் நடத்தும் சங்கமம் நிகழ்ச்சியின் விளம்பரம் இந்த அறிவிப்பு.

சித்திரை(April) மாதம் புது விதை விதைக்க படும் . எனவேபட்ட அது புத்தாண்டு. பின் அறுவடை செய்வதை கொண்டு கொண்டாடுவது பொங்கல். அந்த அடிப்படை கூட தெரியவில்லை இந்த சுயநல தமிழின தலைவருக்கு. முன்னோர்கள் (தமிழர்கள்) முட்டாள்கள் இல்லை.

Anonymous said...

அப்படி என்றால் இந்த ஆண்டுக்கு பெயர் என்ன? கருணா ஆண்டு, அழகிரி ஆண்டு , ஸ்டாலின் ஆண்டு, கனிமொழி ஆண்டு ...?? நாளை திருக்குறளையும் பெயர் மாற்றுவார் அதற்கு பெயர் " கருணா குறள் " ?????

Anonymous said...

உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துக்கள்.. இந்த புது ஆண்டில் நிச்சயம் ஈழத்தில் அமைதி திரும்பும் , உங்கள் வாழ்வு செழிக்கும் என்ற நம்பிக்கையுடன்.
///////////////////////////////

விஜயன் ஸ்பீக்கிங்,

இவ்ளோ தெளிவா விளக்கம் கொடுத்தும் ஏன் எல்லா எடத்துலயும் எடுத்த வாந்திய இங்கயும் எடுக்கற?


இப்படி லூசுத்தனமா யோசிக்க விஜயன் ஸ்பீக்கிங்கால் மட்டுமே முடியும்.. இந்த கோரிக்கை எப்போது வந்தது , யாரால் வந்தது , ஏன் வந்தது என்று தெரியுமா ? சும்மா வந்து உளரிட்டு போகக்கூடாது..
நீங்க என்ன தான் வயத்தெரிச்சல்ல பேசினாலும்,, முதலில் சென்னை என்பதை ஏற்க மறுத்து , சில வருடங்ககள் கழித்து இப்பொது மெட்ராஸ் என்பது எப்படி மறந்து முழுவதும் சென்னை ஆனதோ அதே போல்,, சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது மறந்து தை 1 தமிழ்ப்புத்தாண்டு என்பது முழுமைபெறும்.. கொஞ்சம் பொறுக்கவும் விஜயன்

Anonymous said...

சித்திரை ஒன்று தான் உண்மையான தமிழ் புத்தாண்டு நாள். பெரும்பான்மையான (99.99) தமிழர்கள் அன்று தான் கொண்டாடுகிறார்கள். தை முதல் நாள் பொங்கல் பண்டிகை.

Anonymous said...

//கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை தவிர வேறு யாரும் தமிழ் புத்தாண்டு அறிவிப்பை ஏற்க வில்லை.//
இது உண்மையில்லை.

Anonymous said...

பூபாளம் பாடும் நேரம்.......புதுவிடியல் ஈழத்தில் விரைவில் தோன்றிடும் காலம்.....இது!
இந்தப் பொங்கலிலாவது எம் உறவுகளுக்குப் புது விடியல் கிடைக்கட்டும்.... என்று பிரார்திப்போமாக.....

Anonymous said...

இங்கு உளறி கொட்டியிருக்கும் வாக்காளன் போன்ற அரை லூசு அரை கிருக்கன்களுக்கு வேண்டுமானால் தை முதல் நாள் புத்தாண்டாக இருக்கலாம்.

Anonymous said...

Makkal manathil anbu pookkattum!

Karunanidhi onrum Thaan thaonrith Thanamaaga puththaandai arivikka villai.

Ithu tamil arinjar kuluvin palveru kaalakattathil edukkappatta mudivin satta nirnayam!

TAMIL DO NOT HAVE CASTE!
LET ALL OF US REMOVE THIS FROM OUR HEART!

Anonymous said...

//தரணி ஆண்ட தமிழன்//

நல்ல தமாசு

Anonymous said...

Happy Thai Pongal.

All the best for Tamil people in Sri Lanka. Nalla vidial pirkattum.

But i do not agree about Pongal as the new year. It is not only me, but majority of the tamilians. If necessary, do conduct a survey.

Anonymous said...

வருகின்ற அனைவருமே உங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.நான் எதுவும் தெரிவிக்கப் போவதில்லை.

Anonymous said...

தை மாதம் தமிழர் புத்தாண்டு எனும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஹேமா மேலதிக விபரங்கள்:http://kalamm.blogspot.com/2009/01/blog-post_13.html

மேலும் உங்களின் வார்த்தைகள் பலிக்க எனது வாழ்த்துக்கள்.
//"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது தமிழர் நம்பிக்கை.புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும்.மகிழ்ச்சி பொங்கட்டும்"//

Anonymous said...

சித்திரையில் விதைப்பார்களா? அப்புறம்...
சித்திரை வெயிலில் புல் பூண்டும் கருகும்.

Anonymous said...

பயன்மிக்க பதிவு.

இதே விடயம் குறித்து
நானும் எழுதியுள்ளேன், பார்க்கவும்.

Anonymous said...

தமிழைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை வரைந்திருக்கின்றீர்கள். டாக்டர் ஜோர்ஜ் கார்ட் ( அமெரிக்கர்) சமஸ்கிரதம் கற்கச் சென்று தமிழின் தொன்மை அறிந்து தமிழில் முனைவர் பட்டம் பெற்று தமிழிச்சியையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டவர். அவர் இப்போது கலிபோனியா பேர்க்லி பல்கலைக் கழக தமிழ் பீடாதிபதியாக இருக்கின்றார். தமிழுக்கு இவர்களும் சேவை செய்கிறார்கள்.

Anonymous said...

Thai piranthachchu,ini thamizhzrgal vazhvil pookkal malarattum.

Anonymous said...

பொங்கல் திருநாளில் வாழ்த்திய ,
திட்டிய,கருத்தில் முரண்பட்ட,
கருத்தோடு ஒன்றிய அத்தனை பேருக்குமே என் இனிய வாழ்த்துக்களும் நன்றியும்.என்றாலும் இன்னும் தெளிவில்லை புத்தாண்டு எப்போ...பொங்கல் எப்போ என்று!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP