Friday, January 09, 2009

வீட்டுக்கு...ஒரு ரோபோ மரம்.

முதன் முதலிலேயே நல்ல ரிசல்ட்!இந்தியாவில் இதுவரை ரோபோ
மரங்கள் தொடர்பான் ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்படவே இல்லை.காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.இயற்கையான் மரங்களைப் போலவே ரோபோ மரங்களுக்கும் வேர் உண்டு.தண்டு,இலை எல்லாம் உண்டு.

மரத்தைப் போலவே உயரமான பிளாஸ்டிக் கம்பங்களை நிறுவி அதன் மேல் பகுதியில் இடைவெளிகளுடன் கூடிய சூரியத் தகடுகள்(சோலார் ப்ளேட்ஸ்)பொருத்தப்படும்.இப்பகுதி மர இலைகளைப் போலச்
செயல்படும்.தண்டுப் பகுதியின் பக்கவாட்டில் துளைகள் மற்றும் சிறுகுழாய்கள் இருக்கும்.இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைட் கலந்த வெளிக்காற்று உறிஞ்சப்படும்.தண்டின் உள் பகுதியில் கல்சியம் ஹைட்ராக்ஸைட் கரைசல் இருக்கும்.இந்தக் கரைசலில் அசுத்தமான கார்பன் டை ஆக்ஸைட் கரைக்கப்படும்.அதே சமயம் மேலேயுள்ள சூரியத் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தண்டில் உள்ள கரைசலில் பாய்ச்சப்படும்.அது வேதி வினைகளைத் தூண்டி கார்பன் டை ஆக்ஸைட்டை கார்பன் ஆக்ஸிஜன் என்று தனித்தனியாகப் பிரிக்கும்.ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் மற்றும் நீராவி ஆகியவை ஆகியவை வாயுவாக ரோபோ மரத்தில் இருந்து வெளியேறிவிடும்.மீதி இருக்கும் கார்பன் நீருடன் கலந்து கார்பானிக் அமிலமாக மாறியிருக்கும்.அந்த கார்பானிக் அமிலம் பூமிக்குள் செலுத்தப்பட்டுவிடும்.இந்த கார்பானிக் அமிலம் இயற்கை உரத்திற்கு ஈடானது.மண்ணுக்குக் கெடுதல் எதுவும் விளைவிக்காது.ஒரே நேரத்தில் மண்ணையும் காற்றையும் காப்பாற்றலாம்.


ஒரு ரோபோ மரம் ஒரு இயற்கை மரம் உறிஞ்சுவதைவிட ஆயிரம் மடங்கு அதிக கார்பன் டை ஆக்ஸைட்டை உறிஞ்சும் திறன் கொண்டது.அதாவது ஒரு ரோபோ மரம் ஆயிரம் இயற்கை மரங்களுக்குச் சமமானது.ஒரு ரோபோ மரம் ஒரு ஆண்டுக்கு 90,000 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி சுத்தப்படுத்தும்.இது ஒரு ஆண்டில் 15,000கார்கள் வெளியிடக்கூடிய கார்பன்டை ஆக்ஸைடின் அளவாகும்.


உலகம் முழுவதிலும் இருந்து ஓராண்டில் வெளியேறும் மொத்தக் கரியமில வாயுவையும் உறிஞ்சி சுத்தப்படுத்த இரண்டரை ரோபோ மரங்களே போதும்.இயற்கையாக ஒரு மரம் பல ஆண்டுகள் வளர்ந்து
முழு வளர்ச்சி அடையும்போதுதான் அதிகம் கார்பன் டை ஆக்ஸைட்டை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடும்.ஆனால் ரோபோ மரம் நட்ட முதல் நாளில் இருந்தே தனது வேலையைத் தொடங்கிவிடும்.பத்து அடி உயர மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்.220 அடி உயர மரத்திற்கு 5 இலட்சம் வரை செலவு பிடிக்கலாம்.நம் நாட்டின் சுற்றுச் சூழல் தன்மைக்கேற்ப மாடல் ரோபோ மரம் உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறோம் என்கிறார் பேராசிரியர்.

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்"என்பது போய் இனி "வீட்டுக்கு ஒரு ரோபோ மரம் வளர்ப்போமே".
(நன்றி ஆனந்தவிகடன்)


ஹேமா(சுவிஸ்)

19 comments:

Anonymous said...

படம் ரொம்ப அழகு.

ஒரு பெண் கைகளை தூக்கி கொண்டு கால்களை பின்னோக்கி தூக்கியிருப்பது போல் உள்ளது ...

Anonymous said...

\\ஒரு ரோபோ மரம் ஒரு இயற்கை மரம் உறிஞ்சுவதைவிட ஆயிரம் மடங்கு அதிக கார்பன் டை ஆக்ஸைட்டை உறிஞ்சும் திறன் கொண்டது.அதாவது ஒரு ரோபோ மரம் ஆயிரம் இயற்கை மரங்களுக்குச் சமமானது.ஒரு ரோபோ மரம் ஒரு ஆண்டுக்கு 90,000 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி சுத்தப்படுத்தும்.இது ஒரு ஆண்டில் 15,000கார்கள் வெளியிடக்கூடிய கார்பன்டை ஆக்ஸைடின் அளவாகும்.\\

நல்ல செய்தி.

பகிர்தலுக்கு நன்றி ...

Anonymous said...

நல்ல செய்தி. இந்த முயற்சி மேலும் வெற்றி அடைந்தால் கார்பன் டிரேடிங் என்பது மறைந்து விடும். ஆராய்ச்சி வெற்றிகள் தொடரட்டும். நன்றி.

Anonymous said...

நண்பமுடியாமல் இருக்கிறது இது சாத்தியமாகுமா அப்படி நடந்தால் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும்

Anonymous said...

அருமையான பதிவு ஹேமா.

தமிலிஷ் மூலம் தங்கள் மடல் கண்டேன். நன்றி.

நன்றி.

வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya@gmail.com

Anonymous said...

தகவலுக்கு நன்றி

Anonymous said...

நல்ல பயனுள்ள உலக விடயங்கள் தந்துள்ளீர்கள்.... மரங்களிலும் புதுமை செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது...ஆஹா அருமை....

Anonymous said...

Hi hemavathy,
Congrats!
Your story titled 'வீட்டுக்கு...ஒரு ரோபோ மரம்.ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th January 2009 04:42:02 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/25206

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Anonymous said...

நிறைந்த நன்றி ஜமால்.எனக்குமே புதுமையான் விஷயம்தான் இது.அநிந்துகொண்டேன்.

Anonymous said...

வணக்கம் குப்புசாமி ஐயா.வருகைக்கு நன்றி.அவர்களின் முயற்சி வெற்றிக்கு நானும் வாழ்த்துகிறேன்.

Anonymous said...

வாங்க வண்ணத்துப்பூச்சி சூர்யா.
உங்களுக்கு நேராக உங்கள் பதிவுக்குப் பின்னூட்டம் இட முடியாமைக்கு வருந்துகிறேன்.கருத்துக்கு நன்றி.அடிக்கடி இந்தப்பக்கமும்
பறந்து வரவேணும்.பூக்கள்
இரண்டு தளங்களிலும் பூக்கும்.

Anonymous said...

நன்றி வந்தமைக்கு ஜூர்கேன் க்ருகேர்.

Anonymous said...

கமல்,விஞ்ஞானம் எவ்வளவோ தூரத்தில்.எங்கள் தேசம் மட்டும்தான் அல்லது எங்கள் ஈழத்து தமிழ் மக்கள் மட்டும்தான் பின்னடைவு நிலையில்.காத்திருப்போம் காலத்தின் கனிவுக்காக.

Anonymous said...

பச்சை வீட்டு விளைவிற்கு.. bye சொல்லலாம்...

Anonymous said...

கவின்,மனித மனங்களில் பச்சையம் வறண்டதுபோல இயற்கையையும் வறளவிடாமல் முயற்சிக்கிறார்கள்.
வாழ்த்துவோம்.

Anonymous said...

உலகத்தே மலிந்து நிற்கும்
வெறுப்பையும் வன்முறைதனையும்
வம்பையும் வீண் வாதத்தையும்
உறுஞ்சி நீர்க்கச்செய்த உடன்
அன்பும் அமைதியும்
அடக்கமும் அகிம்சையும்
பண்பும் பாசமும்
எவ்விடமும் பரவிடவே
இலேசான வாயுவினை
தருமோர் தரு ( மரம்) இவ்வுலகிற்கு
வருமோ ?

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

Anonymous said...

நன்றி Sury ஐயா.உங்கள் முதல் வருகைக்கும் அருமையான் கருத்துக்கும்.இன்னும் இரண்டு தளங்களை அறிமுகப்படுத்தி
யிருக்கிறீர்கள்.பார்ப்பேன்.நன்றி.இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Very new news to me.Thank u Hema.

Anonymous said...

நன்றி முனியப்பன்.மரங்களாய் நிழல் கொடுப்போம் முடிந்தவரைக்கும் அடுத்தவர்களுக்கு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP